Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (இராஜதுரை ஹஷான்) பண வீக்கம் அதிகரித்து வரும் நிலையில் 10 ஆயிரம் நாணய தாளை அச்சிட தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் நாணயம் அச்சிடுவது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை, நிதியமைச்சும் அவ்வாறு ஆலோசனை வழங்கவுமில்லை. வெளிநாட்டு கையிறுப்பினை அதிகரித்துக் கொள்வதற்காக உரிய திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன. இம்மாதத்திற்குள் வெளிநாட்டு கையிருப்பினை 3 மில்லியன் டொலர்களினால் அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. டொலர் நெருக்கடி காரணமாக துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க உரிய…

  2. 43 ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளுடன் கைது! December 19, 2021 யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் 43 மீனவர்களை கைது செய்துள்ள அதே வேளை 6 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்கள் பயணித்த படகுகளும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2021/170654

  3. கடலட்டை பண்ணைகள் – டக்ளஸின் கருத்தில் முழு உண்மை இல்லை: சுமந்திரன் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன இது தொட‌ர்பாக இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தின்போது, சம்பந்தப்பட்ட சட்ட பிரதியை காண்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதில் கூறப்பட்டிருந்த சட்ட ஏற்பாடுகளை தெளிவுபடுத்துமாறு என்னி…

  4. வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவின் ஆதிக்கத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் – இரா.துரைரெட்ணம் வடக்கு மற்றும் கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முன்னெடுக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என பாத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார். வடகிழக்கு தமிழர்கள் இந்தியா மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை குழப்புவதற்காகவே சீனாவின் இந்த செயற்பாடு அமைவதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “குறிப்பிட்ட காலம…

  5. யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக பணிபுரியத் தன்னார்வம் கொண்ட தொண்டர்கள் தேவை http://www.samakalam.com/wp-content/uploads/2021/02/Yamunanantha-1-300x185.jpg யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவையில் மேலும் ஓர் படி செல்வதற்கு தற்போதைய சூழலில் தன்னார்வம் கொண்டவர்களின் சேவை இன்றியமையாததாக உள்ளது என்று யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் போதனா வைத்தியசாலை சூழலுக்கு 5 k.m இற்கு உள்ளே வதியும் இளையோர் இச்சேவையை செய்வதற்கு முன்வரல் நல்லது. க…

  6. 13 ஆவது திருத்தத்தை அடியோடு அகற்ற முயற்சிக்கிறது ராஜபக்ஷ அரசாங்கம் - சம்பந்தன் (ஆர்.ராம்) பதவியில் உள்ள ராஜபக்ஷக்களின் அரசாங்கமானது அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை புதிய அரசியலமைப்பின் பேரில் அடியோடு அகற்றுவதற்குரிய முயற்சிகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அதிகாரப்பகிர்வின் முதற்படியாகவுள்ள 13ஐ பாதுகாத்து தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் அர்த்தபுஷ்டியான தீர்வினை நோக்கி நகர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துவதை அடிப்படையாகக் கொண்டு …

  7. சீனாவிடமிருந்து இலங்கையை தம்வசம் வைத்திருக்க இந்தியாவும் மேற்கு நாடுகளும் முயச்சி-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் December 19, 2021 தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கி, சீனாவிடமிருந்து இலங்கையை தம்வசம் வைத்திருக்க இந்தியாவும் மேற்கு நாடுகளும் முயல்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எந்த ஜனநாயக நாட்டிலாவது அரசமைப்பை நடைமுறைப்படுத்துமாறு கேட் கிறார்களா? அரசமைப்பு என்றால் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி நடைமுறைப்படுத்தப்படாவிடின் அதன் பெறுமதி பூச்சியம்…

  8. இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் கொங் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை இன்று (17) கண்காணித்தார். மூன்று நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட இலங்கைக்கான சீன தூதுவர் மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை இன்று முற்பகல் சென்றடைந்தார். அங்கிருந்து தமது தூதரக பிரதிநிதிகளுடன் கடற்படை படகுகளில் இராமர் பாலத்தை நோக்கி புறப்பட்டார். இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் தூதுவருடன் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர். …

  9. பிரித்தாளும் தந்திரமும் புவிசார் அரசியலும் திம்புக் கோரிக்கைகளைப் புறந்தள்ளி தமிழ்த் தேசியத்தை நீர்த்துப்போகச் செய்ய நீலன் திருச்செல்வம் வகுத்த வழியில் சுமந்திரன் 1985 மற்றும் 2001 மகிமையில் இருந்து ரெலோ, புளொட், ஈ.பி.ஆ.ர்.எல்.எவ் தாழ்வு பதிப்பு: 2021 டிச. 19 13:47 புலம்: கிளிநொச்சி, ஈழம் புதுப்பிப்பு: டிச. 19 19:12 1 2 3 4 5 6 7 8 நிருபர் திருத்தியது ஆசிரியர் திருத்தியது …

  10. நாளை கூடுகிறது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு (ஆர்.ராம்) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நாளை திங்கட்கிழமை முற்பகல் 10மணிக்கு நடைபெறவுள்ளது. ரெலோவின் முன்னெடுப்பில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் கோருவதற்கான எழுத்துமூலமான வரைவினை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாட்டில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டினை எடுப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த 12ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்தின் போது 13ஐ வலியுறுத்தி எழுத்துமூலமாக கோரிக்கையை முன்வைப்பதற்கு இணக்கப்பாடுகள் எடுக…

  11. கிளிநொச்சியில் இருந்து கதிர்காமம் சென்ற பஸ் விபத்து: 17 பேர் காயம்! கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சுற்றுலா சென்ற பேருந்து இன்று (19) அதிகாலை பதியத்தலாவை பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் பேருந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு நேற்று சனிக்கிழமை இரவு கதிர்காமத்தை நோக்கி குறித்த பேருந்து பயணித்தது. இதன் போது இன்று அதிகாலை பதியத்தலாவை கல்லோடை பாலத்துக்கு அருகில் சாரதிக்கு நித்திரை தூக்கத்தை அடுத்து பேருந்…

  12. தமிழ் தேசிய கூட்டமைப்பு இனியும் பதிவு செய்யப்படாத கட்சியாக இருக்க முடியாது – கருணாகரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனியும் பதிவுசெய்யப்படாமல் இருக்க முடியாது என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரைக்கும் 20 வருடங்களையும் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் பதியப்படாத நிலையிலுள்ள ஒரு அரசியல் கூட்டாகவே இருக்கின்றது.…

  13. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்த பிரதேசங்கள் : அது எங்களின் நிலம் - இரா. சாணக்கியன் By Shana (நூருல் ஹுதா உமர்) காணியதிகாரம் வேண்டும். இதனைத்தான் நாங்கள் அரசியல் உரிமை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். காணியதிகாரம் எங்களிடமிருந்தால் மயிலத்தமடு மாதவனையில் குடியேறியுள்ளவர்களை நாங்களே அதிகாரிகளிடம் கூறி வெளியேற்றியிருப்போம். அது நடக்காது போகியிருந்தால் எங்களிடமிருக்கும் பொலிஸ் அதிகாரங்களை கொண்டு செயற்படுத்தியிருப்போம். இன்று நாங்கள் எதையும் செய்ய முடியாது உள்ளோம். எங்களிடம் எந்த அதிகாரமுமில்லை. இப்படி பயணித்தால் வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். வடக்கு கிழக்கு என்…

  14. (ஆர்.ராம்) இலங்கைக்கான சீன மக்கள் குடியரசன் தூதுவர் கீ சென்ஹொங் இருநாள் விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயம் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிமைகளில் நடைபெறவுள்ளதாக சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த விஜயத்தின் போது, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதோடு, கடற்றொழிலாளர்களுக்கான ஒருதொகுதி உபகரணங்களை வழங்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. வடக்கிற்கு செல்கிறார் சீன தூதுவர் | Virakesari.lk

  15. செய்திப்பிரிவு தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமிழர் தரப்புக்களிடம் ஒருமித்த கருத்து நிலவுவது முக்கியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் மார்டின் ரி ஹீலி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் திங்கட்கிழமை (13) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கேட்டறிந்த அமெரிக்க பதில் தூதுவர், தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமிழர் தரப்புக்…

    • 9 replies
    • 738 views
  16. வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம்: வாசுதேவ வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியதாகவும் இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் என நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிமாவோ பண்டார நாயக்கா காலப்பகுதியில் இருந்து இலங்கையானது சீனாவுடனும் இந்தியாவுடனும் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது. அவருடைய காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டபோது எமது நாடு நடுநிலையாக …

  17. யோசனைகள் சிங்கள மக்களை சீண்டுவதாகவோ, மிரட்டுவதாகவோ அமையக் கூடாது – வரதராஜப்பெருமாள் தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்வு யோசனைகள் சிங்கள மக்களை சீண்டுவதாகவோ, மிரட்டுவதாகவோ அமையக் கூடாது என இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தைகள் வரவேற்கத்தக்க மிக முக்கியமான அரசியல் முன்னெடுப்பு என்றாலும் மிகவும் கவனமாக விடயங்கள் கையாளப்பட வேண்டும் என தெரிவித்தார். தமிழ் பேசும் கட்சிகளால் எட்டப்படும் ஒருமித்த யோசனைகள், இலங்கைக்கும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கும் கையளிக்கப்படவுள்ளன. எனவே பிரிவினை, தீவிரவாதம் ஆகியவற்றை தூண்டாத வகையில் எட்டப்படும் இத்தீர்வு யோசனைகள் குறித்து சிங்கள மக்களுக்கு த…

    • 5 replies
    • 466 views
  18. இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என அறிவிப்பு 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RISHAD BATHIUDEEN இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்படுவதற்கான போதுமான சாட்சியம் இதுவரை இல்லை என நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்ட விரோதமான கைது தொடர்பாக, நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் (IPU) ஏகமானதாக எடுத்துள்ள தீர்மானத்தில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. உலகின் 179 தேசிய நாடாளுமன்றங்கள் மற்…

  19. அரசியல் நோக்கத்திற்கு அப்பால் மக்களின் நன்மை கருதி செயற்படுமாறு இரா.சம்பந்தன் கோரிக்கை உள்ளூராட்சி, நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் நன்மை கருதி செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டால் எதனையும் நிறைவேற்ற முடியாமலும், அமுல்படுத்த முடியாமலும், முன்னேற்றத்தை அடைய முடியாமலும் போய்விடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த புதன்கிழமை சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், அதற்கு எதிராக கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். எனினும் வரவு செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் நிற…

    • 4 replies
    • 394 views
  20. தமிழீழ விடுதலைப் புலிகள்,பொது பல சேனா,சிங்ஹலே பதிவுகளுக்கு முகநுால் தடை December 17, 2021 தமிழீழ விடுதலைப் புலிகள்,பொதுபல சேனா, அந்த அமைப்பைச் சேர்ந்த கலகொட அந்தே ஞானசால தேரர் மற்றும் சிங்ஹலே அமைப்பு தொடர்பில் எந்தவொரு பதிவையும் இடுவதற்கு முகநுால் தடை விதித்துள்ளது. முகநுாலில் இடம்பெறும் வகைப்படுத்தல்கள் மற்றும் அது தொடர்பான ஒழுங்குபடுத்தல்கள் ஊடாக, உலகில் உள்ள பல்வேறு அமைப்புக்கள் விளம்பரங்களை மேற்கொள்வதற்கும், அமைப்பு சார்பாக பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகநுாலில் வருடத்துக்கு ஒரு முறை இந்த அமைப்புக்கள் தொடர்பான பட்டியல் புதுப்பிக்கப்படும். இந்த நிலையில், இலங்கையில் மூன்று அமைப்புக்களுக்கு இவ்வாறு பிரசாரங்க…

  21. சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத தடைச் சட்டம், மாற்றப்பட வேண்டும்! December 18, 2021 மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான சிறந்த தருணம் வந்துள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்தும் மீறப்படுவதை தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு GSP வரிச் சலுகையை மீள வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்ற நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. …

  22. யாழ்ப்பாணத்தில் தொடரும் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.கடந்த ஒரு வாரத்துக்குள் இரண்டு துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் அண்மையில் மாணவன் ஒருவரைத் தாக்கிய சம்பவம் பொலிஸாரின் தலையீட்டினால் இணக்கத்துடன் முடித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வடமராட்சி புற்றளை மகா வித்தியாலயத்தில் தரம் …

  23. எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்பில் சிறிலங்கா தொடர்பில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல, "சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பின்றி சிறிலங்கா போன்ற நாடுகளால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது. உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு, அப்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் நான் முக்கியமானதொரு விடயத்தை சுட்டிக்காட்டிருந்தேன். அதாவது மண்டேலாவின் வழி, முகாபேயின் வழியென இரண்டு வழிகள் உள்ளன. மண்டேலாவின் வழியை தெரிவுசெய்யுமாறு கோரின…

  24. தனிநபரால் 500 ஏக்கர் காணி ஆக்கிரமிப்பு – பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் வவுனியா பறண்நட்டகல் பகுதியில் தனி நபர் ஒருவர் 500 ஏக்கர் அரச காணியினை அத்துமீறி அபகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஏ9 வீதியில் பறண்நட்டகல் சந்தியில் மழையினையும் பொருட்படுத்தாமல் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் “எமது கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான 500 ஏக்கர் காணியினை தனிநபர் ஒருவர் அபகரிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றார். பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருக்கு தெரியப்படுத்தியும் எமக்கு எந்தவிதமான தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.