ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம் வடமேல் மாகாண சபைக்கான புதிய ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த குமார ஜயதேவ கரன்னாகொட நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (09) வழங்கி வைக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த வடமேல் மாகாண சபையின் ஆளுநர் ராஜா கொலுரே மரணமடைந்ததை அடுத்த ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார். Tamilmirror Online || வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம்
-
- 9 replies
- 537 views
-
-
முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்(காணொளி) Posted on December 10, 2021 by நிலையவள் 37 0 முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யுத்தம் முடிவடைந்த நாள் முதல் இன்று வரை 12 வருடங்களாக தமது …
-
- 0 replies
- 330 views
-
-
யாழ் கடற்கரைகளில் 6 சடலங்கள் - பொலிஸ், கடற்படை மீது அச்சம்! யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் சடலங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரமேசந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட கரையோரங்களில் கடந்த வாரம் ஆறு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இது தொடர்பில் எந்த விதமான தகவல்களும் வெளிவரவில்லை. அதனால் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில் இந்த சடலங்கள் க…
-
- 7 replies
- 847 views
-
-
நா.தனுஜா உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் மட்டக்களப்பு வாழ் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மீது நீண்டகால அடிப்படையில் மிகமோசமான தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள 11 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தமது மதவழிபாடுகளை அச்சமின்றி முன்னெடுப்பதில் கிறிஸ்தவ சமூகம் முகங்கொடுத்துள்ள சவால்கள், கிறிஸ்தவ சமூகத்தின் மீது ஏனைய வடிவங்களில் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த ஆண்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார நெருக்கடிகள் உள்ளடங்கலாக இவ்விரு சமூகங்களும் பல்வேறு வழிகளிலும் ஒடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 246 views
-
-
எமக்கான நீதியினை இறப்பதற்கு முன் வழங்குங்கள்- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் December 10, 2021 எமது உறவுகளுடன் வாழத்துடிக்கும் எமக்கான நீதியை நாம் இறப்பதற்கு முன் பெற வழி செய்யுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. வவுனியாவில் இன்று போராட்டம் மேற்கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் ஐ.நா மனித உரிமையாளர் ஆணையாளருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசின் படைகளாலும், துணை ஆயுதக்குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடும் தொடர் போராட்டம் இன்று 1750 வது நாளாக நடைபெற்றுக் கொண்டிரு…
-
- 0 replies
- 239 views
-
-
கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட உங்கள் இனத்தவர்கள் வெளியே குற்றமற்ற தமிழ் இளைஞர்கள் உள்ளே; கஜேந்திரகுமார் December 10, 2021 “கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட உங்கள் இனத்தவர்கள் வெளியே குற்றமற்ற தமிழ் இளைஞர்கள் உள்ளே” என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டினார். நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீதி அமைச்சு மீதான வரவு செலவுதிட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது: “திருகோணமலையில் சிங்களவர்களுக்காக தனிச் சிங்களத்தில் வழக்கு நடாத்துவதற்காக தனியான நீதவான் நீதிமன…
-
- 0 replies
- 255 views
-
-
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கை யாப்பு உருவாக்கத்திற்கு முரணானது; சுமந்திரன் எம்.பி. December 10, 2021 மாகாண சபை முறைமையின் ஊடாக அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்வோம், மாகாணங்களுக்கு ஏற்ற சட்டங்களை அவர்களே உருவாக்கும் அதிகாரத்தை வழங்குவோம் என சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கிவிட்டு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையை வகுப்பது நியாயமானதல்ல. இது தற்போதைய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு முரணானது அத்துடன் சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறும் செயல் எனத்தெரிவித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் .இந்த ஒரேநாடு ஒரே சட்டம் செயலணியில் சுய மரியாதையை கொண்டுள்ள எந்த தமிழரும் அங்கம் பெற முடியாது எனவும் கூறினார். …
-
- 0 replies
- 205 views
-
-
மட்டக்களப்பில் இறந்தவர்களை நினைவுகூர்ந்த 10 பேரும் பிணையில் விடுவிப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தில், உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்தமைக்காக கைதுசெய்யப்பட்ட 10 பேரும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றால் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். கடந்த மே மாதம் 18ஆம் திகதி உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்தனர் என்றுகுற்றம்சாட்டி மட்டக்களப்பைச் சேர்ந்த 10 பேரை போலிஸார் கைதுசெய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தனர். உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்வதை எந்தச் சட்டத்தாலும் தடுக்க முடியாது என அவர்கள் சார்பில் மன்றில் முற்பட்ட சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்தநிலையில், மன்று அவர்களை பிணையில் செல்வ…
-
- 1 reply
- 317 views
-
-
(எம்.நியூட்டன்) யாழ். ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு பணிகள் இன்று புதன்கிழமை யாழ். மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய நகரம்" திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் மறவன்குளம் துரித அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. காலை 10 மணியளவில் யாழ். மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்குளத்தின் மாதிரி திட்ட வரைபும் மக்கள் பார்வைக்காக வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், மாநகர பிரதி முதல்வர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் து.ஈசன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் அடிக்கல் நாட்டி வைத்த…
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை! எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலை (MV X-PRESS PEARL) இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்காக, ஒரு கப்பல் இலங்கை கடற்பரப்பை சென்றடையும் என்று கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த கப்பல் 2022 ஜனவரி 19 அல்லது 20ஆம் திகதிகளில் சென்றடையுமென அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கடந்த ஜுன் மாதம் தீ விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1255707
-
- 0 replies
- 183 views
-
-
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுத்திருந்தனர். மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச் சந்திரா தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அருட்தந்தையர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், மன்னார் நகர சபையின் தலைவர், உப தல…
-
- 0 replies
- 306 views
-
-
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த பஸ் விபத்து கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸொன்று விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு யாழ்ப்பாணம் நோக்கி குறித்த பஸ் புறப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரம் மதவாச்சி பகுதியில் வீதியை விட்டு விலகி வயலொன்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளனதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தில் 74 வயதுடைய ஒருவர் உயிரிழந்துடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். …
-
- 0 replies
- 217 views
-
-
கடந்த இரு மாதங்களுக்குள் 40 தொடக்கம் 45 வரையான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் கடந்த இரு மாதங்க ளுக்குள் 40 தொடக்கம் 45 வரையான தமிழ் இளைஞர்கள் ‘புலிகளின் மீள் எழுச்சி’ என்ற பெயரில் செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத் தின் கீழே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் 20 வயது, 22 வயது இளைஞர்களாவர். இவர்கள் விடயத்தில் சட்டமாஅதிபர் திணைக்களம் கவனம் செலுத்தி அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுகக் வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட எம்.பி.யுமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். 2009 ஆம் ஆண்டில் இவர்கள் 10 வயதைக் கொண்டவர்களாகவே இருந்திருப்பார்கள். இன்று…
-
- 0 replies
- 194 views
-
-
2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான விருதினை யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர் பெற்றுக் கொண்டார் 2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Crystal Pen விருதினை யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர் இ.இரமணன் பெற்றுக் கொண்டுள்ளார். உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளிலுமிருந்து ஒவ்வொரு பிராந்தியங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பத்து வெற்றியளர்களில் யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர் இ.இரமணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவ்விருதின் பிரகாரம் யாழ் இந்துக் கல்லூரிக்கு 5000 யூரோ பணமும் (ரூ. 1,150,000.00) 1000 அமெரிக்கடொலர் பெறுமதியான பொருட்களும் நன்கொடையாக வழங்கப்பட இருக்கின்றது. இதேவேளை இடர் கா…
-
- 0 replies
- 408 views
-
-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் விடுதலை செய்யப்படுவர்! December 10, 2021 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சபைக்கு அறிவித்ததோடு, அதற்காக சில சட்ட முறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. அதனை நீதி அமைச்சர் அலி சப்ரி செய்து வருகிறார் எனவும் கூறினார்.வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் உரைக்குக் குறுக்கிட்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், உங்களது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களுக்கு ஒருபோ…
-
- 0 replies
- 176 views
-
-
அந்நியச் செலாவணியை ஈட்டும் முக்கிய துறையாக ஆயுர்வேதம் அடையாளம் Posted on December 9, 2021 by தென்னவள் 15 0 தற்காலத்தில் சுதேச மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைமைக்கு அதிகபட்ச கேள்வி நிலவுவதால், அந்தியச் செலாவணியை ஈட்டும் பிரதான துறையாக அவை அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்த ஆயுர்வேத ஆணையாளர் கலாநிதி எம்.டீ.ஜே.அபேகுணவர்தன, அதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். “சர்வதேசத்தை நோக்கி சுதேச மருத்துவம்” என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதி ஊடக மையத்தினால் இன்று (09) நடத்தப்பட்ட வீடியோ தொழில்நுட்பத்தினூடான ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சுதேச மர…
-
- 0 replies
- 213 views
-
-
பெண்கள் அமைப்பு கவனயீர்ப்பு பேரணி Posted on December 9, 2021 by தென்னவள் 17 0 ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கிழக்கு மாகாண பெண்களால் ஒன்றிணைக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கவனயீர்ப்புப் பேரணி, இன்று (09) காலை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு – கல்லடி பாலத்திலிருந்து கல்லடி பாலத்திலிருந்து பறை, மேளம் முழங்களுடன் ஆரம்பமான இப்பேரணி, மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் வரையில் வருகைதந்ததுடன், அங்கு தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் அரசாங்கத்துக்கான மகஜர் வாசிக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் ஆயுதமாகவுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் கட்டாயமாக நீக்கப்படுவதுடன், அச்சட்டம்…
-
- 0 replies
- 360 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலையத்தில் உள்ள அடையாளங்கள் தமிழர்களின் அடையாளங்கள் என்பதை சிங்கள தரப்பினர் ஏற்றுக்கொண்டு இன ரீதியான செயற்பாடுகளை அனுமதிக்காது, தொடர்ச்சியாக இந்துக்கள் இங்கு வழிபட அனுமதிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, வாய்மூல வினாக்களுக்கான விடைகள் நேரத்தில் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், இலங்கையில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதை முதலில் சிங்கள தரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிங்கள இதிகாசங்களில் தமிழர்கள்…
-
- 0 replies
- 332 views
-
-
லியோ நிரோஷ தர்ஷன்) பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மூழ்கின்ற கப்பலில் ஏறும் அளவிற்கு மனநலம் பாதிக்கப்படவில்லை என்றும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை விரைவில் முழுமையடைய செய்யுமாறும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சி உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் , ஏடுகளில் எழுதப்பட்ட கணக்கு விபரங்களில் எவ்விதமான பலனும் இல்லை. மக்களிடம் பணம் இல்லை என்பதே யதார்த்தமான உண்மை. மக்கள் மயப்பட்ட பொருளாதாரத்தை நோக்கிய விரைவாக செல்ல வேண்டும். நல்லாட்சி காலத்தில் அதிகமான கடன் தொகை செலுத்தியமையால் அபிவிருத்தி வேகம் மட்டுப்பட்டது. ஆனால் மூன்று வேளையும் உணவை மக்க…
-
- 0 replies
- 357 views
-
-
தமிழ் பிரதேச சபை அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை புத்தளம், உடப்பு பிரதேசத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து புதிய பிரதேச சபை ஒன்றினை உருவாக்கித் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக் கட்டு பிதேச சபைத் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் உடப்பு பிரதேச சமூக பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று (08) சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினர். இதன்போது, உடப்பை சூழவுள்ள பிரதேசத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், தமிழ் பிர…
-
- 0 replies
- 244 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - 63 பேருக்கும் விளக்கமறியல் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 63 பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக இன்று (09) திகதி உத்தரவிட்டார். கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் ஸஹ்றான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த 65 பேரை கைது செய்தனர். அதேவேளை ஸார…
-
- 0 replies
- 396 views
-
-
யாழ். மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் – முதல்வர் நம்பிக்கை வரவு செலவுத்திட்டம் யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றதென யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் நாயன்மார்கட்டு குளப்புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”வரவு செலவுத் திட்ட தயாரிப்பின் போது அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி அவர்களுடைய கோரிக்கைகளையும் உள்…
-
- 0 replies
- 298 views
-
-
‘நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றோம்”- முன்னாள் போராளி December 6, 2021 நடந்த மாதம் நடைபெற்ற மாவீரர் நாளில் விளக்கேற்றியது குறித்து நேற்று முன்தினம் மூன்றரை மணிநேரம் பயங்கரவாத பிரிவினரால் விசாரணைகளுக்குட்படுத்தப் பட்டுள்ளதாக முன்னாள் போராளி செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், வாழை மரத்தில் ஏன் விளக்கு ஏற்றுகின்றீர்கள் என்று தொடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு, அது எமது பாரம்பரிய கலாசார முறை என்றும் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே நாங்கள் போரில் உயிரிழந்தவர்…
-
- 4 replies
- 615 views
-
-
நில ஆக்கிரமிப்பை கண்டித்து கடற்படைக்கு எதிராக போராடியதனால் கஞ்சா குற்றச்சாட்டா ? உரிமையை கேட்டது குற்றமா? மாதகல் மக்கள் கவனயீர்ப்பு நில ஆக்கிரமிப்பை கண்டித்து கடற்படைக்கு எதிராக போராடியதனால் கஞ்சா குற்றச்சாட்டா ? உரிமையை கேட்டது குற்றமா? மாதகல் மக்கள் கவனயீர்ப்பு http://www.mathagal.com/userfiles/mathagal-kanja-arrest-fb.jpg கஞ்சா கடத்திய சந்தேகத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,குறித்த இருவரும் …
-
- 0 replies
- 185 views
-
-
வடமாராட்சியில் கரையொதுங்கிய சடலங்களில் ஒன்றை சிம்பன்சி குரங்கு என புதைப்பு? December 8, 2021 வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நவம்பர் 16ஆம் திகதி மீட்கப்பட்ட சடலம் சிம்பன்சி குரங்கின் உடையது எனத் தெரிவித்து விசாரணைகள் எவையுமின்றி காவற்துறையினர் புதைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமராட்சி கடற்பரப்பில் 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறைத் திணைக்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவனையில் 5 சடலங்களே ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக கரை ஒதுங்கிய சடலத்தை காவற்துறையினர் புதைத்துள்ளனரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த சடலம் சிம்பன்சி குரங்கின் சடலம் என அந்தச் சடலம் புதைக்…
-
- 4 replies
- 514 views
-