ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசியல் பிரதிநிதிகளும் இதில் மௌனமாக இருக்காது, துணிந்து பொது இடங்களிலும் ஆலயங்களிலும் அஞ்சலியை செய்ய முன்வர வேண்டும்-சிவாஜிலிங்கம் குறித்த நேரத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறுகையில், “மாவீரர் நாளை அனுஷ…
-
- 0 replies
- 178 views
-
-
இலங்கையின் பொருளாதாரம் குறித்து கவலை வெளியிட்டுள்ள உலக வங்கி கொரோனா வைரஸ் தொற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த இணையவழி மூலமான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே, தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம பொருளாதார விசேட ஆய்வாளர் ஹான்ஸ் ரிமர் (uans Timmer) இவ்வாறு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால், பல பிரச்சினைகளை இலங்கை எதிர்கொண்டுள்ளதென்றும் அரசாங்கத்தால் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உண்டெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இலங்கையின் முக்கிய பிரச்சினை, மொத்த உற்பத்திக்கு அமைவாக நடைமுறையில் உள்ள கடன் அதிகமாக இருப்பதேயாகும் எனவும் அவர் சுட்…
-
- 3 replies
- 333 views
-
-
நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த குழு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்! ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நௌபர் மௌலவி இந்த ஆண்டு நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும் தலைமைத்துவத்தின் காரணமாக திட்டமிட்டபடி நடக்க முடியாமல் போனமை விசாரணைகளில் தெரியவந்ததாக தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் குணரத்ன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார் மேலும் நௌபர் தற்போது காவலில் உள்ளார் என்றும் விரைவில் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 2021இல் திட்டமிடப்பட்ட தாக்குதல…
-
- 0 replies
- 394 views
-
-
கொரோனாவுக்கு எதிரான மாத்திரையை இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு! கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான முதல் வாய்வழி வைரஸ் எதிர்ப்பு மாத்திரையான மோல்னுபிராவிரை (Molnupiravir) இறக்குமதி செய்ய தனியார் துறையின் ஆர்வத்தை வெளிப்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. பிரித்தானியாவின் மெர்க் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா வைரஸுக்கு எதிரான மோல்னுபிராவிர் மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கான அனுமதியை கொரோனா தொழில்நுட்பக் குழு நவம்பர் 15ஆம் திகதி வழங்கியது. இந்த நிலையில், கொரோனா நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக சில தனியார் நிறுவனங்கள் அந்த மாத்திரையை இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே விர…
-
- 0 replies
- 162 views
-
-
கோப்பாய் துயிலும் இல்லம் முன் குழப்பம்- பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு யாழ்ப்பாணம்- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது. கோப்பாய் துயிலும் இல்லத்தை இராணுவத்தினர் இடித்தழித்து அப்பகுதியில் பாரிய இராணுவ முகாமை அமைத்து, நிலைகொண்டுள்ளனர். ஆகையினால் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில், மாவீரர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபடுவது வழமையாகும். இந்நிலையில் தற்போது மாவீரர் வாரம் ஆரம்பமாகி உள்ளமையினால், அக்காணியின் முன்பக்கமாக வீதியின் இருமருங்கினையும் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது,…
-
- 0 replies
- 143 views
-
-
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க... 20 ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு! காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 20 ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு தமிழில் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கான விண்ணப்பம், காணாமல் போனவரின் தேசிய அடையாள அட்டை, வாகனச்சாரதி அனுமதிப்பத்திரம், பிறப்பு அத்தாட்சி பத்திரம் உட்பட 20 ஆவணங்களை காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் கோரியுள்ளது. காணாமல்போனவர்கள் குறித்த முறைப்பாடு கிடைத்துள்ளதை உறுதிசெய்வத…
-
- 5 replies
- 437 views
-
-
வடக்கு கிழக்கில், ”மாவீரர் வாரக் காச்சலால்” படையினர் அவதி! November 22, 2021 மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், முல்லைத்தீவில் மாவட்டத்தில் முப்படைகளாலும் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிச் சோதனை நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மாவீரர் துயிலுமில்ல வளாகங்களை சூழவும் இராணுவம் மற்றும் காவற்துறையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து போராடிய வீரர்கள் நினைவாக வருடம் தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் உலகமெங்கும் வாழும் தமிழ் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது கார்த்திகை 21…
-
- 2 replies
- 296 views
-
-
நினைவேந்துவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது! - சஜித் பிரேமதாச ராஜபக்ச அரசின் கடும்போக்குக்கு, சஜித் பிரேமதாச கடும் கண்டனம்! இலங்கையில் போரின்போதும் வன்முறைகளின்போதும் உயிரிழந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை , அவர்களின் உறவுகள் நினைவேந்தும் உரிமையை எவரும் தடுக்கவே முடியாது. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படுவதற்கு நீதிமன்றங்கள் ஊடான தடையுத்தரவைப் பொலிஸார் பெற்று வருகின்றனர். தற்போதைய அரசு திட்டமிட்டு தமிழ் மக்களின் உரிமைகளைப் பறிக்கின்றது என்று என்று தமிழ் அரசியல்வாதிகள் விசனம் தெரிவித்துள்ளனர். நல்லாட்சி அரசின் காலத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டிரு…
-
- 3 replies
- 381 views
-
-
தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பூஜித் கூறிய பதில்! உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் கடமையைத் செய்யத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை பிரதிவாதி முன்னிலையில் வாசிக்கப்பட்டது. இதன்போது, குறித…
-
- 1 reply
- 276 views
-
-
ஒரு நாடு ஒருசட்டம் செயலணி அமைத்து அரசாங்கம் ஒரு சமூகத்தை முற்றாக புறக்கணித்துள்ளது - சஜித் Published by T. Saranya on 2021-11-22 16:26:52 (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) ஒரு நாடு ஒரு சட்டத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்குவந்த அரசாங்கம் புதிய செயலணி அமைத்து ஒரு சமூகத்தை முற்றாக புறக்கணித்திருக்கின்றது. இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு நாட்டுக்கு முன்னுக்கு செல்ல முடியாது. அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக செயற்படும் அருட்தந்தை சிறில் காமினி அடிகளாரை வாக்குமூலம் என்ற போர்வையில் அழைக்கழிப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். …
-
- 0 replies
- 201 views
-
-
புலிகளின் தயாரிப்பான அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் தெரிவித்துள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலணை அம்பிகா நகர் பகுதியில் நேற்று (21) மாலை 4 மணியளவில் இந்தக் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தள சிறப்புப் பிரிவினரினால் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான ‘கொல்பவன் வெல்வான்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் …
-
- 1 reply
- 319 views
-
-
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த விதுஷனின் உடலில் 31 வகையான காயங்கள் - வெளியானது அதிர்ச்சித் தகவல் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்வதாக மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாள் காலை விதுசன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். விதுஷனின் மர்மமான உயிரிழப்பு தொடர்பாக குடும்ப உறவினர்களினால் பல சந்தேகங்கள் இருப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில் விதுசனின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு நிபுணத்துவம் வாய்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் முன்பாக இரண்டாவது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கடந்த ஜூன் 21 நீதிமன்ற உத்தரவின் கீழ் தோண்டி எடுக்கப்பட்டு விசாரனைகள் ஆரம்பமானது. குறித்த வழக்கு …
-
- 1 reply
- 606 views
-
-
மக்களின் நினைவுக்கூறும் உரிமையை அரசாங்கத்தினால் தடுக்க முடியாது- ஸ்ரீநேசன் https://youtu.be/PH2uUQVtbP4 யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமையை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தற்போதைய அரசாங்கத்தை பொறுத்தமட்டில் பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம். தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் என்றதன் அடிப்படையில் செயற்படுவதாக ஸ்ரீநேசன் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், மாவீரர் தினத்தை ஜே.வி.பி.யினர் அனுஷ்ட…
-
- 0 replies
- 279 views
-
-
நாம் ஒன்றுபடுவதை அரசியல்வாதிகள் விரும்பவில்லை – ஞானசார தேரர் நாம் ஒன்றுபடுவதை எந்த அரசியல்வாதிகளும் விரும்பவில்லை ஆகவே ஒரே நாடு ஒரே சட்டத்தையும் அவர்கள் விரும்பவில்லை என ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”நாம் ஒன்றுபட எந்த அரசியல்வாதிகளும் விரும்பவில்லை ஆகவே ஒரே நாடு ஒரே சட்டத்தையும் அவர்கள் விரும்பவில்லை. போதைப் பொருளால் ஆயிரக்கணக்கானவர்கள் …
-
- 0 replies
- 176 views
-
-
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர் – வர்த்தமானி வெளியீடு! நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆயுதம் தாங்கிய படையினரை அமைதியை பேண அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார். ஒ…
-
- 0 replies
- 365 views
-
-
வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று! 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இம்மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதனைத்தொடர்ந்து, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி, ஏழு நாட்களாக நடைபெற்ற நிலையில், இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், இன்று மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இதனையடுத்து நாளை 23ஆம் திக…
-
- 0 replies
- 128 views
-
-
பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை வாசிப்பு! முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப்பத்திரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றில் வாசிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட 855 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டப்பட்டவர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் குறித்து போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்ச…
-
- 0 replies
- 177 views
-
-
மீண்டும் சி.ஐ.டியில் முன்னிலையானார் சிறில் காமினி பெர்ணான்டோ அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மூன்றாவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினிக்கு தெரிந்த விடயங்களை வாக்குமூலமாக பெற்றுக்கொள்வதற்கே இதற்கு முன்னரும் 2 தடவைகள் குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரை அழைத்திருந்தது. இந்நிலையில் இன்றும் சிறில் காமினி பெர்ணான்டோ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2021/1251506
-
- 0 replies
- 148 views
-
-
நாளையிலிருந்து மீண்டும் மழை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டிற்கு அண்மையாக கீழ் வளிமண்டலத்தில் விருத்தியடையும் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழை நிலைமை நாளையிலிருந்து (23ஆம் திகதி) அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால்…
-
- 0 replies
- 126 views
-
-
“இராணுவத்தின் முக்கிய புள்ளி” என தன்னைக் குறிப்பிடும் அருண் சித்தார்த்தன் கைது. November 20, 2021 இராணுவத்தன் எடுபிடி என்று அழைக்கப்படுபவரும், சர்ச்சைகளின் சொந்தக்காரருமான அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் காவற்துறையினர் இன்று இவரை கைது செய்துள்ளனர். பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட அருண் சித்தார்த்தன் ஊடகவியலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.. அதேவேளை, கைது செய்ய சென்ற யாழ்ப்பாணம் காவற்துறையினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன், காவற்துறையினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாகவும், இராணுவத்தின் முக்கிய புள்…
-
- 2 replies
- 373 views
-
-
பொலிஸ் காவலில் சித்திரவதைகளும் மரணங்களும் தொடரும் - காரணத்தை கூறுகிறார் அம்பிகா சற்குணநாதன் (நா.தனுஜா) பொலிஸ்காவலின் கீழான சித்திரவதைகள் மற்றும் மரணங்கள் எமது கட்டமைப்பில் மிக ஆழமாக வேரூன்றியிருக்கும் பல தசாப்தகாலப் பிரச்சினையாகும். சட்டம் ஓர் சமூகத்திற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்வரையில் இத்தகைய சம்பவங்களை முழுமையாக முடிவிற்குக்கொண்டுவரமுடியாது. அதுமாத்திரமன்றி பொலிஸாருக்குப் பயிற்சிகள் மற்றும் தண்டனைகளை மாத்திரம் வழங்குவதன் ஊடாகவும் இவற்றை நிறுத்தமுடியாது. மாறாக சமுதாய ரீதியிலும் கட்டமைப்பு ரீதியிலும் மாற்றத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இதற்கான தீர்வாக அமையும் என்று சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீ…
-
- 2 replies
- 279 views
-
-
உரிமைகளை பாதுகாக்கவே அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கிறோம் : அரசிற்கு ஆதரவளிக்கும் மு.கா. உறுப்பினர்களின் காரணம் ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம் இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றாலும் கூட, அவற்றை பேச்சுவார்த்தைகள் மூலமாக இராஜதந்திர ரீதியில் தீர்வு காணவே முயற்சிக்கின்றோம். கடந்த கால பிரச்சினைகளை தீர்ப்பதில் வெற்றியும் கண்டுள்ளோம். வெறுமனே அரசாங்கத்தை வெளியில் இருந்து விமர்சிப்பதால் மட்டும் சமூகத்தை பாதுகாத்துவிட முடியாது என அரசாங்கத்துக்கு தெரிவித்துவரும் ஆதரவுக்கான காரணத்தை சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நியாயப்படுத்தியதுடன், தாம் அரசாங்கத்தை ஆதரிக்க ஐந்து சதமேனும் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறினர். …
-
- 3 replies
- 254 views
-
-
சுமந்திரன் தலைமையில் சட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கில் சட்ட வல்லுனர்கள் குழுவொன்று அமெரிக்காவிற்கு செல்லவுள்ளது.இந்த விஜயத்தின் போது சட்ட நிபுணர்கள் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும் சட்ட நிபுணர் திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரும் வருகை தருவார்கள் என்றும் சுமந்திரன் தெரிவித்தார். இந்த கலந்துரையாடல் அமெரிக்க இராஜாங்க அமைச்சுடனும், அமைச்சின் சட்ட நிபுணர்கள் குழுவுடனும் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மேலும் சர்வதேச நகர்வுகள் மூலமாகவே எமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த மு…
-
- 119 replies
- 7.5k views
- 1 follower
-
-
சீனாவின் பிரவேசத்தை தமிழர்கள் விரும்பவில்லை : அமெரிக்க சந்திப்புக்களில் எடுத்துரைத்தது தமிழ்த்தரப்பு (ஆர்.ராம்) பொறுப்புக்கூறலும் அரசியல் தீர்வும் சமாந்தரமாக நகர்த்தப்பட வேண்டும் தமிழர்களின் அபிலஷைகளைப் பெற வெளிச்சக்தியின் அழுத்தம் தேவை அனைத்து விடயத்திலும் எதிர்மறையான செல்கிறது ராஜபக்ஷ அரசாங்கம் சீனாவின் ஆதிக்கமோ, பிரவேசமோ, தமது பகுதிகளுக்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக என்பதை அமெரிக்காவின் இராஜாங்க, வெள்ளைமாளிகை பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது சுமந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத்தமிழர் பேரவைத் தரப்பினரால் ஆணித்தரமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு வி…
-
- 1 reply
- 282 views
-
-
ஆயுதப் போராட்டம் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளினால் தமிழ் மக்களை ஈடுவைத்து விட்டு அழிந்து விட்டது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக சமர்த்தி உத்தியோகத்தர்களுடன் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளினால் தமிழ் மக்களை ஈடுவைத்து விட்டு அழிந்து விட்டதாகவும், அதிலிருந்து மக்களை மீட்க வேண்டி இருப்பதால் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானங்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு நில…
-
- 8 replies
- 560 views
-