Jump to content

தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணம் தயார் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணம் தயார் !

தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணத்தைத் தயாரிக்கும் முயற்சியில் புதிய நகல் ஒன்று இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஆவணம் தமிழ்த் தரப்புக் கட்சித் தலைவர்களின் பரிசீலனைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) புதிய நகல் ஆவணம் தயாரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஆவண நகல் தயாரிப்புக்காக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அனுப்பிவைத்த குறிப்பும் இதன்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த ஆவணத்தில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு அப்பாலும் செல்வோம் என 1987 முல் இலங்கை – இந்தியத் தலைவர்கள் வழங்கிய உறுதிமொழிகள் நினைவூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முயற்சியில் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ரெலோவின் பேச்சாளரும் இந்த முயற்சியின் இணைப்பாளருமான சுரேந்திரன் குருசாமி ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://athavannews.com/2022/1259521

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 2 கிழமையாய் ஆவணம் தயார் ஆவணம் தயார் என்ற செய்திகள்தான் வருகுதே ஒழிய யாரும் கையெழுத்துப் போட்டதாகவோ ஆவணத்தின் விபரமோ மக்களுக்குத் தெரியப்படுத்தவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு ஒவ்வொருவிடயத்தைப் பேசுகிறார்களே ஒழிய, அப்படி என்னதான் இந்த ஆவணத்தில் இருக்கிறது என்பதை ஒருவருமே தெளிவாக சொல்கிறார்கள் இல்லை.

அதைவிட, இந்திய நலன்களுக்கு ஆதரவாக, அதன் நலன்களை ஏற்றுக்கொண்டு, அது விரும்பும் தெரிவு என்று கூறுவது இதுபற்றிய சந்தேகங்களையும் எழுப்புகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

, . விட்டிருப்பினம் .. அதற்கு நாலு முறுக்கி திரிவினம். இன்னும் ஒருதரம் வடிவா செக் பண்ணுங்கப்பூ ..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டு ஆவணம் கைச்சாத்திடப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை – சம்பந்தன்

 

இந்தியாவுக்கு அனுப்பவுள்ள கூட்டு ஆவணம் கைச்சாத்திடப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அந்த ஆவணம் தொடர்பான செயற்பாடுகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவடையும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதனால் அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் போது இந்த விடயத்தில் அதிக கரிசனை செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு தமிழ்ப் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமைப்பட்ட நிலைப்பாட்டை எடுக்கவும், ஒன்றுபட்டு செயற்படவும் தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

 

 

https://athavannews.com/2022/1259634

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

தமிழ்ப் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமைப்பட்ட நிலைப்பாட்டை எடுக்கவும், ஒன்றுபட்டு செயற்படவும் தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

ஐயாவுக்கு இப்பதான் ஞானம் பிறந்திருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே குழப்பமாக இருக்கின்றதே👇🏾

 

தமிழரசுக்கட்சியை தவிர்த்து கூட்டு ஆவணத்தை அனுப்புவதா இல்லையா ? - மீண்டும் தமிழ் பேசும் தலைவர்கள் கூடிப்பேசுவர்

(ஆர்.ராம்)

இலங்கை தமிழரசுக்கட்சி மீள் திருத்தப்பட்ட வரைவினை முழுமையாக நிராகரித்துள்ள நிலையில் அக்கட்சியை தவிர்த்து விட்டு ஏனைய தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு கூட்டு ஆவணத்தினை அனுப்புவதா இல்லையா என்பது தொடர்பில் கட்சிகளின் தலைவர்கள் கூடிப்பேசவுள்ளனர்.

இந்தக் கூட்டம் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் இச்செய்தி அச்சுக்குச் செல்லும் வரையில் தீர்மானிக்கப்படவில்லை. 

தமிழ் பேசும் கட்சிகளின் ஒருங்கிணைவுப் பணியை முன்னெடுத்த ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சொந்தக் காரணங்களின் காரணமாக அவசரமாக நேற்று முன்தினம் மன்னாருக்குத் திரும்பியுள்ள நிலையில் பெரும்பாலும் இன்றையதினத்திற்குள் அவர் மீண்டும் கொழும்பு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்னிலங்கையில் ஒன்று கூடிய தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்கள்! -  ஐபிசி தமிழ்

இந்நிலையில் அவர் கொழும்பு திரும்பியதும் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களை மீண்டும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதன்போது தமிழரசுக்கட்சியின் தீர்மானம் தொடர்பில் பரிசீலனை செய்யப்படவுள்ளதோடு அக்கட்சியை தவிர்த்து விட்டுச் செல்வதா இல்லையா என்பது குறித்தும் இறுதியான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. 

இதேநேரம், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் மீண்டும் சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோருடன் சந்திப்புக்களைச் செய்யவுள்ளதோடு மனோகணேசன், ஹக்கீம் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாகப் போகும் வரைவு எது?

இதேவேளை, தமிழரசுக்கட்சியை தவிர்த்து விட்டு பிரதமர் மோடிக்கு கூட்டு ஆவணத்தினை அனுப்புவதாக இருந்தால் எந்த வரைவினை இறுதி செய்வது என்பது தொடர்பில் கேள்விகள் உள்ளன.

அதாவது, ஏற்கனவே ரெலோவினால் தயாரிக்கப்பட்ட ஆரம்ப வரைவில் கையொப்பமிடுவதாக இல்லை. நேற்று முன்தினம் சுமந்திரனின் இல்லத்தில் ஹக்கீம் தரப்பின் பங்கேற்புடன் இறுதி செய்யப்பட்ட ‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கான ஆட்சி அதிகாரப் பகிர்வு’ என்ற வரைவினை இறுதி செய்வதா என்பது தொடர்பிலும் கட்சித்தலைவர்கள் அவதானம் செலுத்தவுள்ளனர்.

அதேநேரம், சம்பந்தனையும், தமிழரசுக்கட்சியையும் உள்ளீர்த்து பிரதமர் மோடிக்கு அனுப்பு கூட்டு ஆவணத்தை இறுதி செய்வதாக இருந்தால் கட்சித்தலைவர்கள் அனைவராலும் கடந்த 21ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட 7 பக்கங்களைக் கொண்ட ‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ என்ற வரைவினை இறுதி செய்வதாக இருந்தால் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றுக்கு காணப்படுகின்ற கரிசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/120121

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.