Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை: விலைவாசி உயர்வால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு - களநிலவரம் என்ன? அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ், கொழும்பு 8 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, விறகில் சமைக்கும் நிலுகா தில்ருக்சி "சமையல் எரிவாயுவின் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துவிட்டது, இதற்கு மேலும் எங்களால் சிலிண்டரை வாங்க முடியாது" என்கிறார் நிலுகா தில்ருக்சி. 31 வயதான நான்கு குழந்தைகளுக்குத் தாயான நிலுகா, தன் குடும்பத்தினருக்கு எப்போதும் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்திதான் சமைத்து வந்தார், ஆனால் தற்போது விறகு மட்டுமே ஒரே வழி என்கிறார். "என் குழந்தைகளுக்கு நான் த…

  2. வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை: முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மரண தண்டனை January 12, 2022 வெலிக்கடை சிறைச்சாலையில், 8 கைதிகள் துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பு கடந்த 6ஆம் திகதி அறிவிக்கப்பட இருந்த நிலையில், தீர்ப்பு அறிவிப்பை இன்று வரை பிற்போட கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றம் குறித்த தினத்தில் தீர்மானித்திருந்தது. இந்த வழக்கு, நீதியரசர்களான கிஹான் க…

    • 26 replies
    • 2.2k views
  3. இளைஞர்கள் அரசியல் பணக்காரர்களாக வர வேண்டும் என நினைக்கிறார்கள் – விக்னேஸ்வரன்! தற்போதைய இளைஞர்கள் எடுத்த எடுப்பில் அரசியல் தலைவர்களாக வரவேண்டும் என நினைக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போதைய இளைஞர்கள் எடுத்த எடுப்பில் அரசியல் தலைவர்களாக வரவேண்டும் என நினைக்கிறார்கள். அரசியல் பணக்காரர்களாக வர நினைக்கிறார்கள். என்னுடைய வாழ்காலம் என்பது இன்னும் சிறிது காலம் என்பது அனைவருக்கும் தெரியும். 80 வயதுக்கும் மேல் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி நாடாளுமன்ற அங்க…

  4. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை யாழில் போராட்டம்! உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடவுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இரத்தக்கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் நாளை காலை 10 மணிக்கு முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வா…

  5. யாழிலுள்ள பிரபல வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை தவறினால் பெண் உயிரிழப்பு! யாழிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கற்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (வயது-60) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “பெண்ணுக்கு கற்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அதனை அகற்றுவதற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டத…

  6. நாட்டின் தலையெழுத்தை மாற்ற ரணிலால் மட்டுமே முடியும் – ஐ.தே.க. நாட்டின் தலையெழுத்தை மாற்ற முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வறுமையில் வாடும் குடும்பங்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாமல் தவிப்பதால் எதிர்காலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முன்னைய ஆட்சிக்காலத்தில் …

  7. கடுமையான நிதி நெருக்கடி- இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி கடன் கோரும் இலங்கை! கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை கோர திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், சரக்கு இறக்குமதி செய்ய இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொலர் கடன் உதவி பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1261692

  8. Published by T Yuwaraj on 2022-01-12 16:51:47 யாழில் தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர். நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட யுவதி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், தெரியவருவதாவது, தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக …

  9. Published by J Anojan on 2022-01-12 18:37:43 துறைமுகங்களை நிர்மாணித்து இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தெற்காசியாவின் கடல்சார் கேந்திர நிலையமான கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் இன்று (12) முற்பகல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதனை குறிக்கும் வகையிலான நினைவு பலகை திறந்து வைக்கப்பட்டதுடன், நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வை…

    • 7 replies
    • 663 views
  10. திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்திற்கு எதிராக மற்றுமொரு FR மனு தாக்கல் திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்திக்காக இந்திய நிறுவனத்திற்கு மாற்றும் அமைச்சரவை தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வண.எல்லே குணவன்ச மற்றும் வண.பெங்கமுவே நாலக தேரர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சரவை உறுப்பினர்கள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அதன் தலைவர், ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் பிரைவேட் லிமிடெட். பாதுகாப்பு செயலாளர் உட்பட 47 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். திருகோணமலை…

  11. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிங்கள வாக்குமூலத்தில் கையெழுத்திட மனோ மறுப்பு – விசாரணை இடை நிறுத்தம் January 12, 2022 விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழிக்கும் உரை பெயர்ப்பு செய்யப்பட்டாலும், இறுதியில் தான் கையெழுத்திடுவதாயின், அந்த ஆவணம் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என ஆணைக்குழு விசாரணையாளர்களுக்கு அறிவித்ததால், விசாரணை இடை நடுவில் நிறுத்தப்பட்டு, பிறிதொரு உசிதமான தினத்தில் நடத்த முடிவாகியது. “கடந்த அரசுக்கு முந்தைய அரசின் அமை…

  12. தமிழ் கைதிகள் ஐவர் விடுதலை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் கைதிகள் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குறித்த நபர்களை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். பளை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1261557

  13. அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கிடையிலான விரிசல் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தொடர்ந்தும் சிறுமைப்படுத்தினால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து நீக்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலம் வாய்ந்த தலைவர்கள் சிலரும் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ம…

  14. திடீரென இந்தியாவுக்கு அழைக்கப்பட்ட பாக்லே – தமிழ் தரப்புடனான கலந்துரையாடல் இறுதி நேரத்தில் இரத்து!! இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு இறுதி நிமிடத்தில் இரத்தாகியுள்ளது. நேற்று நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் கோபால் பாக்லே திடீரென இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் இறுதி நிமிடத்தில் இரத்துச் செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் திட்டமிடப்பட்ட சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அவர் நாடு திரும்பியதும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள…

  15. யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில் மாநகர சபை வரவேற்பு பதாகை அமைப்பு! யாழ். மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில், யாழ். மாநகர எல்லை ஆரம்பிக்கும் பகுதியில் வரவேற்பு பதாகை அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணனால் யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதியினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில் யாழ்ப்பாண மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது என்னும் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வரவேற்பு பதாதை யாழ் மாநகரசபையில் இலட்சனையுடன் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த ப…

  16. தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டதா ? – பெஃப்ரல் அமைப்பு கேள்வி உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றைக் காரணம் காட்டி தேர்தலை அரசாங்கம் பிற்போடுவதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குற்றம் சாட்டினார். கொரோனா தொற்றின் முதல் அலைக்கு மத்தியில் கூட நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றமையை சுட்டிக்காட்டிய அவர் இதனை தெரிவித்தார். இருப்பினும் இவ்வாறானதொரு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சருக்கு உள்ள உரிமை மற்றும் அதிகாரத்தை பெஃப்ரல் அமைப்பு கேள்விக்குட்படுத்தவில்லை என கூறினார். எ…

  17. நாட்டினை பஞ்சத்திலிருந்து மீட்க கூட்டமைப்பு தயார் – இதற்கான நிபந்தனையை முன்வைத்தார் சாணக்கியன்! நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சத்தில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாம், மக்களை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில திட்டங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – களுதாவளை அன்பின் வீடு மற்றும் குறித்த இல்லத்தில் உள்ள விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு உதவி திட்டங்களை வழங்கி வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “உண்மையிலேயே இந்த நாட்டில் விசேட தேவையுடையவர்கள் மாத்திரமல்ல இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்…

  18. யாழ்.ஆயருடன் எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு! வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என யாழ் மறை மாவட்ட ஆயர் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வடக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் (புதன்கிழமை) தன்னுடைய பிறந்ததினத்தினை முன்னிட்டு, யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரீன் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றதுடன் , ஆயருடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டு இருந்தார். அதேவேளை ஆயர் இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட ஆசீர்வாத பூசை ம…

  19. அங்கொட லொக்காவுடன் புலிகள் அமைப்பின் முன்னாள் உளவுப் பிரிவு உறுப்பினருக்கு தொடர்பு!! சென்னையில் கைது செய்யப்பட்ட 47 வயதுடைய சத்குணம் என்கிற சபேசன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என தமிழக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சபேசன் கைது செய்யப்பட்டிருந்தார். கோவையில் மாறுவேடத்தில் இருந்த அங்கொட லொக்காவின் மரணம் மற்றும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்திவரும் சி.பி.சி.ஐ.டி. சமீபத்தில் சபேசன் உள்ளிட்ட மூவரை கைது …

  20. கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் 510 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது. அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் 300 மில்லியன் டொலர் கடன் தொகையும் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாண பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. …

  21. சஜித் பிரேமதாச நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு! எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று (புதன்கிழமை) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பிறந்த தினமான இன்று காலை காலை 10 மணியளவில் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வருகையால் நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavan…

  22. ராஜபக்ச பிரபல்யம் வீழ்ச்சியை எதிர்கொள்கிறது, ஆனால் இது தற்காலிகமானதே’- நாமல் ராஜபக்ச January 11, 2022 ராஜபக்ச பிரபல்யம் வீழ்ச்சி: இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் ராஜபக்ச ஆட்சியின் புகழ் வீழ்ச்சி அடைந்துள்ளதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச, இது இது தற்காலிகமானதே என்றும் கூறியுள்ளார். தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவித்த அவர், இது தற்காலிகமானது என்றும் இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். “இரசாயன உரப் பாவனையைத் தடை செய்வதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானம் ஒரு வலுவான ம…

  23. ’சீனாவுடன் செய்தது சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அல்ல’ சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தமானது, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அல்ல எனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரண, அது இருதரப்பு ஒப்பந்தம் மாத்திரமே என்று குறிப்பிட்டார். “சீன வெளிவிவகார அமைச்சருடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமானது, கடந்த நல்லாட்சியில் கையெழுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுள் ஒன்றா?“ என, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், சுதந்திர நாடு என்ற ரீதியில் இ…

  24. அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி 10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதிய 2187/27 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் கீழ் இருந்த மத்திய கலாசார நிதியம், புத்தசாசன நிதியம் மற்றும் மத்திய கலாசார நிதிச் சட்டம் ஆகியவை புத்த சாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலை மறுவாழ்வுக்கான இராஜாங்க அமைச்சு அகற்றப்பட்டு, அதன் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்க…

  25. சனசமூக, ஆலய நிர்வாகங்களில் பெண்களை இணைக்க கோரி நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் January 11, 2022 சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 46ஆவது மாதாந்த சபை அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது சபை உறுப்பினர் சி.கௌசலா , ” சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும்” என சபையில் பிரேரணையை முன் வைத்தார். அதனை சபை உறுப்பினர்கள் ஆதரித்ததை அடுத்து சபையில் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.