ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142898 topics in this forum
-
(இராஜதுரை ஹஷான்) லாப் சமையல் எரிவாயு விநியோக நிறுவனம் 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலையை கட்டம் கட்டமாக 4000ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க முயற்சிக்கிறது. கொழும்பில் உள்ளவர்கள் மரவள்ளி கிழங்கை கூட அவித்து சாப்பிட முடியாத நிலை தோற்றம் பெறும். அத்தியாசிய பொருட்களின் விலை நியாயமற்ற வகையில் அதகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்க்கட்சியும் பொறுப்பு கூற வேண்டும் ஏனெனில் நாட்டில் தற்போது பலமான எதிர்க்கட்சியொன்று கிடையாது என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் காரியாலத்தில் வியாழக்கிழமை (4 )இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற…
-
- 2 replies
- 267 views
- 1 follower
-
-
வடக்கை மையமாகக் கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு ‘விசித்திரமானது-மனோ November 3, 2021 வடக்கை மையமாக கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு “விசித்திரமானது” என நேற்று மீண்டும் ஒருமுறை அறிந்து சிலிர்த்துக்கொண்டேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். அவரது முக நுார் பக்கத்தில் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், “13ம் திருத்தம்” பற்றி வாயை திறந்தாலேயே, “இந்திய-மேற்குலக கைக்கூலி” என ஒரு கும்பல் தயவு தாட்சண்யமில்லாமல் கூறுகிறது. நான் என்னை நம்பும் மக்களுக்கு தான் “கைக்கூலி”..! இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா? 13 என்பது முழுமையான தீர்வென்றோ, அது…
-
- 9 replies
- 706 views
-
-
“ஒரு நாடு ஒரு சட்டம்” வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டும்- ஆயர்கள் பேரவை கோரிக்கை November 3, 2021 ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் செயலணியொன்றை நேற்று முன்தினம் உருவாக்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே அதற்குத் தலைவராக சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்துள்ளமை பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. இலங்கையினுள் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாகக் கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றைத் தயாரித்தல் மற்றும் நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்த…
-
- 10 replies
- 605 views
-
-
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கம்! அத்தியாவசியசீனி, பருப்பு, கோழி இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய சீனி, பருப்பு, கோழி இறைச்சி, செமன், சோளம், பெரிய வெங்காயம், கோதுமை மா, உருளைக்கிழங்கு மற்றும் பால்மா மற்றும் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வௌியிடப்பட்ட 7 வர்த்தமானி அறிவித்தல்கள் இந்த விஷேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 185 views
-
-
துன்பங்கள் நீங்கி... இன்பங்களை, அடைந்து கொள்வதே... தீபாவளியின் நோக்கம் – ஜனாதிபதி அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞான ஒளியேற்றலையே தீபாவளித் திருநாள் குறிக்கின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தீபாவளியினை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த வாழ்த்துச் செய்தியில், ‘உலகலாவிய இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்புமிக்கதொன்றாக தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது. இந்துக்களின் ஆன்மீக வழிபாடாகவும் பாரம்பரிய கலாசாரப் பெருவிழாவாகவும் காணப்படும் தீபாவளித் திருநாள் மூலம், வாழ்வின் துன்பங்கள் நீங்கி இன்பங்களை அடைந்துகொள்வதே நோக…
-
- 1 reply
- 204 views
-
-
மத்திய வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. உலக வங்கியின் தெற்காசியாவுக்கான உப தலைவர் ஹார்ட்விக் ஷாப்பர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இன்று இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இலங்கையின் விவசாய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமப்புற சமூகங்களில் வாழும் சுமார் 16 மில்லியன் மக்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2021/1248153
-
- 1 reply
- 153 views
- 1 follower
-
-
தமிழ் தேச மக்களின் இருப்பையும் தேசியத்தின் அடையாளங்களையும் அழிக்க திட்டமிடுகின்றனர்-அருட்தந்தை மா.சத்திவேல் October 31, 2021 தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக நின்ற சக்திகள் தமது தேவைக்காக புதிய கையாட்களை உருவாக்கி அவர்கள் மூலமாக தமிழ் தேச மக்களின் இருப்பையும் தேசியத்தின் அடையாளங்களையும் முழுமையாக அழிக்க திட்டமிடுகின்றனர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் தமிழ் பேசும் மக்கள் கட்சிகள் என்று தம்மை அடையாளப்படுத்தி கொண்டோர்…
-
- 0 replies
- 189 views
-
-
மிகக் குறுகிய காலத்தினுள் மக்களின் எதிர்பைச் சம்பாதித்த அரசென்று சொன்னால் அது இதுவாகத் தான் இருக்கும் - சாணக்கியன்! November 4, 2021 நாங்கள் முப்படையை வைத்துக் கொண்டிருந்த காலம் போய் இன்று பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டே பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றோம். அவ்வாறு இருக்கையில் எமது பலம், பலவீனம் என்ன என்பதையும் நான் அறிந்திருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நேற்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,இந்த நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் வரலாறு காணாத…
-
- 0 replies
- 187 views
-
-
பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி! மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த அனைத்து வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக, ஒளி நிறைந்த வளர்ச்சிப் பாதை நோக்கி, பல தடைகளைத் தாண்டி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் நம் தேசம் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே எம் அனைவரினதும் பெருவிருப்பாகும். இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து …
-
- 0 replies
- 163 views
-
-
இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திகள் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம்! நச்சுத் தன்மையற்ற இயற்கைவழியில் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திகள் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) மதியம் 1.30 மணிக்கு பலாலியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் சேதன பசளை உற்பத்திகள்,கூட்டெருக்கள்,இலைக் கரைசல்கள் என்பன சம்பிரதாயபூர்வமாக விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இலங்கையின் விவசாயத்திலே முழுமையாக சேதனப் பசளையினை உபயோகப்படுத்த வேண்டுமென்ற ஐனாதிபதியின் நோக்கத்திற்கமைவாக இராணுவத்தினரின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட உற்பத்திகள…
-
- 0 replies
- 114 views
-
-
முகமாலையில் 316 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு November 3, 2021 கிளிநொச்சி – முகமாலை பகுதியில், கண்ணிவெடி அகற்றப்பட்ட 316 ஏக்கர் காணி, இன்று (03) உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூட்டுறவுச் சங்கங்களின் இரண்டு தேங்காய் எண்ணெய் ஆலைகள், ஒரு தும்புத் தொழிற்சாலை, வெதுப்பகம் மற்றும் சேதனப் பசளை உற்பத்தி மையம் ஆகியனவும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டடவாக்க இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, குறித்த காணிகளை கையளித்துள்ளனர். யுத்த காலத்…
-
- 1 reply
- 238 views
-
-
வடமாகாண பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை! வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை அவர் இன்று வழங்கியுள்ளார். நாளை (வியாழக்கிழமை) இந்துக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்ற நிலையில், பொது விடுமுறை நாளாகும். அதனால் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளைமறுதினம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதனால் பதில் நாளாக வரும் நவம்பர் 13ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறும் என்று மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். https://athavannews.com/2021/1248157
-
- 0 replies
- 153 views
-
-
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் சமையல் எரிவாயு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தலைநகர் கொழும்பில் மக்கள் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. (படப்பிடிப்பு ஜே.சுஜீவ குமார்) கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் மக்கள் | Virakesari.lk சமையல் எரிவாயுவிற்கு மீண்டும் தட்டுப்பாடு ? (எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்…
-
- 16 replies
- 864 views
- 1 follower
-
-
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர். புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் வியாபாரம் களைகட்டியது. அட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், பொகவந்தலாவை, புசல்லாவை, நுவரெலியா, கம்பளை மற்றும் இதர மலையக நகர பகுதிகளில் இன்று இந்நிலைமையே காணப்பட்டது. சில பகுதிகளில் மழைக்கு மத்தியிலும் வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தது. பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளதால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே தாம் பண்டிகையை கொண்டாடுவதாக மக்கள் வெளியிடும் கருத்துகள…
-
- 1 reply
- 316 views
-
-
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை காரணமாக அதிருப்தியடைந்த நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நாட்டுக்குத் திரும்பியதன் பின்னர், தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்க தயாராகி வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே ஓரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் தம்மை கலந்தாலோசிக்காமல் செயலணியை நியமித்ததில் அதிருப்தி அடைவதாகவும் அண்மையில் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கியிருந்த செவ்வியில் அமைச…
-
- 1 reply
- 230 views
-
-
(இராஜதரை ஹஷான்) தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் விலை நிலையாக பேணும் வரைக்கும் மட்டுப்படுத்தாத அளவிற்கு அரிசி இறக்குமதி செய்யப்படும். டொலர் உள்நாட்டில் அச்சிடப்பிடவில்லை. ஆகவே இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடைந்துள்ளன என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நுகர்வோர் லங்கா சதொச விற்பனை நிலையத்தில் அரிசி,சீனி ஆகிய பொருட்களை மாத்திரம் பெற முடியாது.தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களுடன் மாத்திரம் அரிசி,சீனி விற்பனை செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார். வர்த்தகத்துறை அமைச்சில் புதன்கிழமை (3) இடம…
-
- 0 replies
- 297 views
-
-
கிராமத்தை நோக்கிய பொலிஸ் சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்! கிராமத்தை நோக்கிய பொலிஸ் சேவை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று( செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்டது. கிராமத்துக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமித்து பொதுமக்களுக்கான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் இருவரும் அந்தக் கிராம சேவையாளர் பிரிவில் வாரத்தில் மூன்று நாள்கள் சேவையில் ஈடுபடவேண்டும். கிராமத்தில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிதல் பிணக்குகளைத் தீர்த்துவைத்தல் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை அந்தக் கிர…
-
- 1 reply
- 206 views
-
-
பிரபாகரனின் அரசியல், அவரது இராணுவ புத்திசாலித்தனத்துடன் ஒத்துப் போகவில்லை. November 3, 2021 ‘தமிழர்களின் போராட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும்’. இலங்கை செய்திருந்தது போர்க் குற்றமாகத்தகுதி பெறக்கூடும்! ————— இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போர் 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்அழிக்கப் பட்டதன் மூலம் முடிவுக்கு வந்தது. தசாப்தத்திற்கு மேலாகியும், ராஜபக்ச குடும்பம் தலைமையிலான இலங்கை அரசாங்கம், போரின் இறுதி நாட்களில் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன், போராடிக் கொண்டிருக்கிறது. பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவரது இறுதி நாட்கள்…
-
- 5 replies
- 409 views
-
-
வடமாகாண ஆளுநரை சந்தித்த இந்தியத் துணை தூதுவர் November 3, 2021 இந்தியத் துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அதன் போது , இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி , திட்டங்கள் , ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடினார்கள். குறிப்பாக கல்வி , சுற்றுலாத்துறை தகவல் தொழிநுட்பம் , விவசாய உற்பத்திகள், சுகாதாரம் மற்றும் வீட்டுத்துறை தொடர்பில் கலந்துரையாடினார். https://globaltamilnews.net/2021/168105
-
- 0 replies
- 162 views
-
-
தமிழர்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் உணரப்பட்டு இருக்கின்றது – ஹக்கீம் தமிழ்தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் (செவ்வாய்க்கிழமை) தமிழ் பேசும் கட்சிகளின் கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”இன்றைய சந்திப்பு ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் என்னிடமும் மனோ கணேசனிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. …
-
- 2 replies
- 173 views
-
-
எனக்கு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவே... ஞானசாரரை நியமித்தேன் – ஜனாதிபதி ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை அமைந்தமை தனக்கு ஆலோசனைகளை வழங்கட்டுவதற்காக மட்டுமே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் குறித்த செயலணிக்கு ஞானசாரதேரரை நியமித்தமை நாட்டுக்கு நீதியை வழங்குவதற்காக அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது குறித்த செயலணி தொடர்பாக அதிருப்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தன்னால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு கட்சித்தலைவர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் தனது நண்பர் ஒருவரை நியமிப்பதற்கும் அனுமதி கோரவேண்டிய நிலை ஏற்படும் என கூறிய…
-
- 12 replies
- 749 views
-
-
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி! மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அவலநிலையை எதிர்காலத்தில் அமையும் தனது அரசாங்கத்தின் கீழ் மீளவும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார். விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் உலகில் எந்த நாடும் 100 சதவீதம் இயற்கை விவசாயத்தை பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார். கு…
-
- 0 replies
- 150 views
-
-
கீரிமலையில் கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை முறியடிப்பு! யாழ். கீரிமலை பகுதியில் கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் முறியடிக்கப்பட்டது. காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை நகுலேஷ்வரம், ஜே/226 கிராம சேவகர் பிரிவில் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் ஒன்று நில அளவை திணைக்களத்தினால் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் அங்கு ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு செல்வதாக கூறிவிட்டு நில அளவைத் திணைக்களம் அவ்விடத்தில் இருந்து சென்றது. https:/…
-
- 0 replies
- 182 views
-
-
மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் போராட்டம்! இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்தப் போராட்டம் இன்று மதியம் 12 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டில் உள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களும் கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் நாட்டு மக்களுக்கு மின்சாரம் இருக்கின்ற நிலையில்தான், தாங்கள் கொழும்புக்கு வருவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் இணைப்பாளர் ர…
-
- 0 replies
- 136 views
-
-
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி தலைவரை மகாநாயக்கர்கள் பரிந்துரைக்க வேண்டும் – பொன்சேகா ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணிக்கு மகாநாயக்க தேரரால் பரிந்துரைக்கப்பட்ட பிக்கு ஒருவரை நியமித்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், குறித்த செயலணிக்கு தலைமை தாங்கும் நபர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். எனவே இவ்வாறான நியமனங்கள் தொடர்பாக அரசாங்கம் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த நியமனமானது தமது சித்தாந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் …
-
- 0 replies
- 130 views
-