Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லெண்ண விஜயமாக இந்திய இராணுவப் படைகளின் பிரதானி இலங்கை வந்தடைந்தார் ஐந்து நாட்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவப் படைகளின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இலங்கைக்கு வந்துள்ளார். இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் ஐந்து பேர் கொண்ட குழு இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை வந்துள்ளது. ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோரை சந்திக்க உள்ளார். அத்துடன், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, கடற்படை மற்றும் வான் படைத் தளபதிகளையும் இந்திய இராணுவப் ப…

  2. அலரி மாளிகையில் நவராத்திரி விழா பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது .கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நவராத்திரி நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினர் கௌரவ சுப்பிரமணியம் சுவாமி கலந்துக் கொண்டார்.(15) http://www.samakalam.com/பிரதமர்-மஹிந்த-ராஜபக்ஷ-அ/

  3. மகிந்தவின் கோரிக்கைகளை நிராகாித்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் October 13, 2021 தங்களுடைய சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைக்குத் தீர்வாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ முன்வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர். பிரதமருடனான நேற்றைய கலந்துரையாடல் தொடர்பில், இன்றையதினம் தீர்மானிப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில், இன்று 31 தொழிற்சங்கங்கள் கலந்துக்கொண்டு இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2021/167194

  4. எரிபொருள் விலையை... அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் – அமைச்சர் கம்மன்பில நிதி அமைச்சினால் நிவாரணம் வழங்கப்படாவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒரு லீட்டர் பெட்ரோலின் விலையை 15 ரூபாயாகவும் ஒரு லீட்டர் டீசலின் விலையை 25 ரூபாயாகவும் அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் உதய கம்மன்பில இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். https://athavannews.com/2021/1244623

  5. அடுத்த வருடம் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிடும் – ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை அரசாங்கத்துக்கு முறையான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினாலேயே நாடு பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். விவசாயிகளுக்கான இரசாயண உரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்கு எந்த தீர்வையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை என வஜிர அபேவர்த்தன குற்றம் சாட்டினார். நாட்டை கொண்டு நடத்துவதற்கு அரசாங்கத்திடம் தூரநோக்கு சிந்தனையோ முறையான வேலைத்திட்டமோ இல்…

  6. விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு... நீதி கோரி போராட்டம்- எம்.ஏ. சுமந்திரன் அறிவிப்பு! எதிர்வரும் 17 மற்றும் 18 திகதிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் உரத்தினை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளார்கள் குறிப்பாக தென் பகுதியிலும் இந்த பிரச்சனையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்…

  7. யாழ்.போதனா வைத்தியசாலைக்கு, கனடா உயர்ஸ்தானிகர் விஜயம்! இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் யாழில் பல்வேறு தரப்பினரை நேரில் சந்தித்தார். அந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு விஜயம் மேற்கொண்டு வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தியை சந்தித்தார். அதன் போது , வைத்திய சேவைகள் மற்றும் கொரோனா நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் , யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள அருகாட்சியாக கட்டட தொகுதியையும் பார்வையிட்டார். https://athavannews.com/20…

  8. ஆண்டு இறுதிக்குள்... புதிய அரசியல் அமைப்பு, உருவாக்கப்பட வேண்டும் – இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்திக்கொள்கின்ற வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்கக் கூடிய வகையில், தமது ஜனநாயக உரிமைகளுக்கு முறையான அங்கீகாரம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழர்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே எந்தவித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை விரைவாக உருவாக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கை என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மக்களுக்கு உறுதியளித்தமை பிரகார…

  9. தொல்பொருள் திணைக்களத்தின்... அத்துமீறல்கள் குறித்து, உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்தினார் சாணக்கியன்! இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் Trine Jøranli Eskedal மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் Tanja Gonggrijp ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து பேசியுள்ளார். மட்டக்களப்பில் இன்று(செவ்வாய்கிழமை) நண்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தை எதிர்காலத்தில் முன்னேற்றும் செயல்பாடுகளில் முதன்மையான தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இயற்கை அழகுடன் காணப்படும் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலா துறையை மேம்படுத்தும் பல திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன…

  10. தனியார் துறை ஊழியர்களுக்கான... ஓய்வூதிய வயது, 60 ஆக உயர்த்தப்படும் – அரசாங்கம் தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது 60 ஆக உயர்த்தப்படும் என அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் அமைச்சரவை பேச்சாளர் இதனைத் தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிக்க கடந்த 23.03.2021ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான வணிகத் துறையைப் பாதிக்கும் கொள்கை அல்லது சட்ட விடயங்கள் குறித்த ஆய்வுக் குழுவில் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் பங்கேற்…

  11. அரசாங்கத்திற்கான எதிர்ப்புக்கள் கூடிக் கொண்டே போகின்றது – சித்தார்த்தன் October 12, 2021 ‘வினைத் திறனோடு செயற்படுவோமென ஐனாதிபதி கூறுகின்றார் ஆனால் அவ்வாறு நடக்கும் என நான் நம்பவில்லை. அரசாங்கத்திற்கான எதிர்ப்புக்கள் கூடிக்கொண்டே போகின்றது. இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமென நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். அரசாங்கத்தின் தற்போதைய போக்குகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இன்றைய நிலையிலேயே இந்த அரசாங்கம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இழந்து வருகின்றது. காரணம் விலைவாசி உயர்வு, சரி…

  12. சீன நிறுவனத்திடம் இருந்து... உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை, இராஜதந்திர பிரச்சினை அல்ல – அரசாங்கம் சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல என்று அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சீன நிறுவனத்திடமிருந்து கரிம உரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்யும் முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியுமென தெரிவித்தார். எந்த நிறுவனமும் மேன்முறையீடு செய்யலாம் என்றும் அதுதான் ஜனநாயகம் என்றும் அவர் கூறினார். எவ்வாறாயினும், இந்த விடயம் இலங்கையர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உள்ளடக்கியது என்றும் இராஜதந்திர பிரச்சினையாக …

  13. கனடா... தமிழ் மக்களுக்காக, தொடர்த்தும் குரல் கொடுக்க வேண்டும் – யாழ். முதல்வர் வேண்டுகோள் தமிழ் மக்களுக்காக கனடா அரசு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணம் விஜயம் செய்த இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்னனை யாழ். மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர் அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். தமிழ் மக்கள் யுத்தத்தினால் நீண்டகால பாதிப்புகளை உணர்ந்த நிலையில் அவர்களின் எதிர்காலத்துக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளை கனடா தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பு தொடர்பான விசா…

  14. ஆயுதத்தை மீன்பிடி அமைச்சிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளைஏற்படுத்துகின்றது – சுமந்திரன் Digital News Team 2021-07-28T08:20:47 ஆயுதத்தை மீன்பிடி அமைச்சிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்துமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அவர் சந்தித்த பின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து எங்களுடைய மீனவர்க…

    • 2 replies
    • 372 views
  15. ஹபரணை - ஹிரிவடுன்ன இந்திகஸ்வெவ பிரதேசத்தில் புதுவகையான வெள்ளை நிற கம்பளி பூச்சிகள் இரவு நேரத்தில் படையெடுத்து வருவதால், அந்த பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் சிறியளவில் பிரதான வீதி மற்றும் முற்றங்களில் காணப்பட்ட இந்த கம்பளி பூச்சிகள், தற்போது லட்சக்கணக்கில் பெருகியுள்ளன. அவை வீடுகள் உட்பட அனைத்து இடங்களிலும் காணப்படுவதாக பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக சிலர், தமது பிள்ளைகள் மற்றும் பெண்களை அழைத்துக்கொண்டு வெளியிடங்களில் இருக்கும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்போது இந்த கம்பளி பூச்சிகள் பிரதேசத்தில் உள்ள கிணறுகள், பயிர் நிலங்களில் அதிகளவில் காணப்படுகின்றன. வீடுகளில் காயப்போடப்…

  16. மாளிகைக்காடு நிருபர் தமிழ் பேசும் மாநிலங்களான வடக்கும் கிழக்கும் இணைந்ததான தீர்வொன்றினைத் தவிர வேறு எதனையும் ஏற்கமாட்டோம் என சம்பந்தன் அந்நேரத்தில் கூறியதும் இப்போது பாசம்காட்டி வேசமிட்டு கழுத்தறுக்க புதிய தமிழ் தலைமைகள் நினைப்பதும் அவர்கள் இன்னமும் பாசிசப் புலிகளின் சித்தார்ந்தத்தில் இருந்து விடுபடவில்லை என்பதனை தெளிவாகக் காட்டுகிறது. தமிழ் பேசினாலும், நாங்கள் முஸ்லிம்கள் என்பதனை முதலில் தமிழ் தலைமைகள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், முஸ்லிங்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு மொழி, கலாச்சாரம் என்பன தமிழ் கலாச்சாரத்திலிருந்து வேறானதொன்றாகும் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவி…

  17. -விஜயரத்தினம் சரவணன் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடருமானால், நிச்சயமாக எமது மீனவர்கள் அனைவரும் திரண்டு, இந்திய மீனவர்கள் மீது மிகவிரைவில் தாக்குதல் நடத்துவோம் என, முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்கள், ஒக்டோபர் 10ஆம் திகதியன்று, ஏறக்குறைய 30 இந்தியன் இழுவைப்படகுகள் வருகைதந்து, அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த முல்லைத்தீவு மீனவர்களின் 15க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகள் சேதமாக்கியதாகவும் தெரிவித்தனர். 'கடந்த வருடம் இந்தியன் இழுவைப் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளைக…

  18. -என்.ராஜ் யுத்தம் முடிந்தப் பின்னர், தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களான அப்பன், தெய்வீகன் ஆகியோரை காட்டிக்கொடுத்தோர் யார் என்பது மக்களுக்கு தெரியும் என, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 'தெய்வீகன், அப்பன் போன்றோர் நேரடியாக காட்டிக்கொடுக்கப்பட்டு, கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களை யார் காட்டிக்கொடுத்தார்கள் என்பது தொடர்பில் நான் தற்போது கூற விரும்பவில்லை' எனவும், அவர் கூறினார். யாழில், இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் தான் உள்ளிட்டவர்கள், இனப்படுகொலை தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என ப…

  19. மாகாணசபைத் தேர்தலை நடத்த இரண்டு முறைகள் உள்ளன- ஜி.எல். பீரிஸ் மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த இரண்டு வழிமுறைகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த வாரம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது, அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டது. இதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் இணங்கியதைத் தொடர்ந்து, அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பாக ஆராய நிபுணர் குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக் குழுவின்…

  20. 13ஆம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று அரசாங்கம் சொன்னால் அதனை செய்து காட்ட வேண்டும் – எம் .ஏ. சுமந்திரன் ஆயுதத்தை மீன்பிடி அமைச்சிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்துமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அவர் சந்தித்த பின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு இழுவை மடி தொழிலை தடுக்க வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அது சட்டமாக்கப்பட்டாலும் மீன்பிடி அமைச்சு அந்த சட்டத்தை அமுல்படுத…

  21. மீண்டும் கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு இடையில் விமான சேவை கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தின் பின்னர் விமான சேவைகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முடக்கப்படுவதற்கு முன்பு இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பலாலி விமான நிலையத்திற்கு விமானங்கள் வாரத்திற்கு இரண்டு முறை இயக்கப்பட்டன. எனவே கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆராயுமாறு விமான நிறுவனங்களுக்…

  22. மாகாணசபைகள் அழிந்துபோய் இருப்பதற்கு... கூட்டமைப்புத்தான் காரணம் – பிள்ளையான் மாகாணசபைகள் இன்று மூன்றரை வருடங்களாக அழிந்துபோய் இருப்பதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் என்னும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிக்கு கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் …

  23. அத்தியாவசியப் பொருட்களின்... விலை உயர்வுக்கு, தீர்வு காணுமாறு ஜனாதிபதி உத்தரவு! அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு தீர்வு காணுமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். அத்தோடு, குடிமக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குமாறும் அவர் வலியுறுத்தினார். நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அடிப்படை பொருட்களின் விலையேற்றம் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போதே, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்குறிப்பிட்டவாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் அதிக வாழ்க்கைச் செலவைச் சுமப்பதால் அனைத்து மாநிலச் செலவுகளையும் குறைக்குமாறு ஜ…

  24. இலங்கை திறந்திருக்கிறதா... இல்லையா? என்பதை உலகிற்கு சொல்லுங்கள் – திரும்பிச்சென்ற சுற்றுலாப் பயணி இலங்கைக்கு வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் சிரமத்திற்குள்ளாகி திரும்பிச் சென்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார். சுமார் 7 முதல் 8 நாட்கள் சுற்றுலாவாக இலங்கைக்கு வந்த அவர், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படாததால் 5 மணி நேரத்திற்குள் திரும்பிச் சென்றதாக கூறியிருந்தார். போக்குவரத்து அல்லது ஹோட்டல் வசதிகள் இல்லாததால் அவர் கடுமையான சிரமத்திற்கு ஆளானதாகவும் தன்னால் அவரது பயண நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும…

  25. கொத்து, ஃப்ரைட் ரைஸ், தேநீரை அடுத்து பாணின் விலையும் அதிகரிப்பு ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுலாகும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கொத்து, ஃப்ரைட் ரைஸ், பால் தேநீர் மற்றும் உணவுப்பொதி என்பவற்றின் விலைகளை 10 ரூபாயினால் அதிகரிக்க உணவக உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1244274

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.