Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிரூபமா ராஜபக்ஷவையும், விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை! பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் சென்றுள்ள அவர் விசாரணைக்கு வருகை தராவிட்டால் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டோரா பேப்பரஸ் வெளியிட்ட தகவலுக்கு அமைய, சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ள பிரபலங்களின் பட்டியலில், முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் இவரது கணவரின் பெயரும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிரூபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நட…

  2. கென்யாவுக்கு... சிறப்பு விமானத்தில் பயணமா? – நாமல் விளக்கம் கென்யாவுக்கு சிறப்பு விமானத்தில் பயணித்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய தகவலை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். அந்தவகையில், கென்யா தலைநகருக்கு திட்டமிட்ட விமானத்தில் பயணம் செய்ததாகவும், சிறப்பு விமானத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கென்யாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்திற்கு ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானமொன்றை முழுமையாக முன்பதிவு செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் குறித்த விவகாரத்தை அவர் மறுத்து, தனது பயணம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அத்துடன் கென்யாவுக்கான விஜயத்தின் போது அவர் விளையாட்டு, சுற்று…

  3. வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக... ஜீவன் தியாகராஜா பதவியேற்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்றுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராக இருந்த அவர் கடந்த வாரம் அந்த பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார். மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்று பணிப்பாளராகவும் ஜீவன் தியாகராஜா கடமையாற்றியுள்ளார். இதுவரை காலமும் வட மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம். சார்ள்ஸ் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1244295

  4. எந்த வொரு அரசியல்வாதிகளும்... எமது எல்லைக்குள், உட்பிரவேசிக்க வேண்டாம் – பருத்தித்துறை கடற்தொழிலாளர்கள் அறிவிப்பு! இந்தியன் இழுவைபடகையும், தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களையும் உடனடியாக நிறுத்தும் வரை எந்த வொரு அரசியல் கட்சிகளும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பருத்தித்துறை, முனை கடற்தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். முனை கடற்தொழிலாளர்கள் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தின் போதே இவ்வாறான அறிவித்தல்களை விடுத்திருந்தனர். அத்தோடு அரசியல் கட்சிகள் மீறி தமது இடத்திற்கு வரும் பட்ச்சத்தில் மக்களால் அடித்து விரட்டப்படுவார்கள் என்பதனையும் தாம் உறுதியாக, மனவருத்தத்துடன் அறியத்தருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அது மாத்திரமின்றி த…

  5. இந்திய துணைத்தூதர்... ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்தார் எம்.ஏ.சுமந்திரன்! யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றுள்து. சந்திப்பின் போது வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார். சந்திப்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தனும் கலந்துகொண்டிருந்…

  6. மீன்பிடி அமைச்சர் அதிகாரத்தை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் இருக்கிறார் – எம் .ஏ. சுமந்திரன் ஆயுதத்தை மீன்பிடி அமைச்சிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்துமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அவர் சந்தித்த பின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து எங்களுடைய மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்களை பாதிக்கச் செய்த பல விடயங்கள் அண்மைக்காலமாக நடந்திருக்கின்றன.அவர்களுடைய லட்சக்கணக்…

  7. புலம்பெயர் தமிழர்களை... மீளவும் நாட்டுக்கு, அழைப்பதே இலக்கு – ஜனாதிபதி! இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார். இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 1971இல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்று, அப்போதைய பி…

  8. ’கடற்றொழில் அமைச்சராக சிங்களவர் வேண்டும்’ -எஸ்.றொசேரியன் லெம்பேட் இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில், கடற்றொழில் அமைச்சரும் அரசாங்கமும் மௌனம் காத்து வருவதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், இதற்கு பிரதான காரணம், இந்தியாவுக்கு பயந்துகொண்டு, அவர்கள் முடிவுகளை எடுக்க தயங்குகிறார்கள் எனவும் கூறினார். மேலும், இவ்விடயத்தில் மௌனமாக இருப்பதை விட, டக்ளஸ் தேவானந்தா தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்பதுடன், சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவர் கூறினார்.. மன்னாரில் உள்ள அலுவலகத்தில், இன்று (11) நடைபெ…

    • 2 replies
    • 495 views
  9. தமிழர்களின் மரபுரிமைகளை பாதுகாப்பதில் அமைச்சர் டக்ளஸின் பங்கு நிகரற்றது – பேராசிரியர் புஸ்பரட்ணம் எடுத்துரைப்பு தமிழ் மக்களின் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கையினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று வரலாற்றுத் துறை பேராசிரியர் புஸ்பரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறியை தொடருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே வரலாற்றுத் துறை பேராசிரியரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக் கழகத்தின் கலாச…

    • 7 replies
    • 655 views
  10. எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு! எரி­பொ­ருள் கொள்­வ­ன­வுக்கு கடன் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பி­லும், எரி­பொ­ ரு­ளைக் கட­னா­கப் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பி­லும் இந்­தியா மற்­றும் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­து­டன் இலங்கை அரசு பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ளது. இதன்­படி இந்­திய அர­சி­ட­மி­ருந்து 500 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் கடன் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பில் இலங்கை அரசு பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ளது என ஜனா­தி­பதியின் செய­லா­ளர் பி.பி.ஜய­சுந்­தர தெரி­வித்­துள்­ளார் என்று ‘எக­னமி நெக்ஸ்ட்’ செய்தி வெளி­யிட்­டுள்­ளது. நிலு­வை­யில் உள்ள எரி­பொ­ருள் கொள்­வ­ன­வுக்­கான தொகை­யைச் செலுத்­து­வ­தற்­கும் புதி­தாக எரி­பொ­ருள் கொள்­வ­னவு செய்­வ­தற…

  11. அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தினை வழங்ககூட அரசாங்கம் திண்டாடுகின்றது- கு.திலீபன் கொரோனா அச்சுறுத்தலினால் ஏற்பட்ட வீழ்ச்சியினால், அரசாங்க ஊழியர்களுக்கு கூட சம்பளத்தினை வழங்கமுடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியா- ஆச்சிபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் கு.திலீபன் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய திட்டங்களை வர இருக்கின்ற வரவு செலவுத்திட்டத்தில் பார்த்து அறிந்துகொள்ளலாம். அதில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட கிராமங்களுக்கே முன…

    • 0 replies
    • 234 views
  12. நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அச்சங்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது – இரா.சாணக்கியன் நாடாளுமன்ற உரை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையுள்ளதனால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு அச்சங்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊ…

    • 0 replies
    • 242 views
  13. மக்கள் திண்டாட்டம் ! அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை அதிரடியாக உயர்வு - முழு விபரம் இதோ ! (இராஜதுரை ஹஷான்) இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதனால் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும்,அமைச்சரவை அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். பால்மா, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் தற்போதும் சந்தையில் இப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமை அவதானிக்க முடிகிறது…

  14. மட்டக்களப்பு மாநகர சபையை குழப்புவதும் அதன் மூலம் அபிவிருத்திகளை தடுப்பதுமாக ஆணையாளர் செயற்படுகிறார் By Battinews தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் மட்டக்களப்பு மாநகர சபையினை குழப்புவதும் அதன் மூலமாக அபிவிருத்திகளை தடுப்பதற்குமான நோக்குடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி. சரவணபவன் தெரிவித்தார். நேற்று (10) மாலை மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாநகர சபையில் 150 க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் உள்ளனர். இவர்களது நியமனங்களை புதுப்பிக்கும் போது எந்த நியமனமும் எதிர்வரும் காலங்களில் …

  15. அடுத்த வருடத்துக்குள் புதிய அரசியலமைப்பு; தேர்தல் முறையும் மாற்றம் என்கிறார் ஜனாதிபதி October 11, 2021 “நான் உறுதியளித்தவாறு, புதிய அரசியலமைப்பு ஒன்றை வழங்குவதற்கு, அடுத்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன். மக்களின் எதிர்பார்ப்புக்கமைய, புதிய தேர்தல் முறைமை ஒன்றையும் அடுத்த வருடத்துக்குள் உருவாக்குவேன்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். 72ஆவது இராணுவ தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதனைத் தெரிவித்தார். அநுராதபுரம் – சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது: “இலங்கை வரலாற்றின் முதல் தடவையாக, அரசியல்வாதி அல்லாத ஒருவர், நாட்ட…

  16. மட்டக்களப்பு: கடந்த 2020ஆம் ஆண்டு 150பேர் தற்கொலை -கே.கருணாகரன் தகவல் October 10, 2021 மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு 150பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார். சர்வதேச உளநல தினம் இன்றாகும்.சர்வதேச உள நல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு உள நல உதவி நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு நிகழ்வுவொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடந்த குறித்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு 150பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் https://www.ilakku.org/in-202…

  17. நிரூபமா ராஜபக்‌ஷ மற்றும் அவரது கணவர் நடேசனின் வெளிப்படுத்தப்படாத செல்வம் பெண்டோரா பத்திரிகையில் இருந்ததால் இலங்கையில் உள்ள மக்கள் ஏன் இவ்வளவு ஆச்சரியப்படுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இந்த வெளிப்பாடுகளில் எமது நாட்டைச் சேர்ந்த நிரூபமா ராஜபக்‌ஷ மற்றும் நடேசனின் பெயர்கள் மட்டும் தானா இருந்தது வேறு பெயர்கள் இல்லையா அல்லது பெண்டோரா பத்திரைகைக்கும் புலப்படாத விதத்தில் ஏனையோர் கலவாடிய செல்வங்களை அவர்கள் மறைத்து வைத்துள்ளனரா என்பதுதான் எனக்கு இதில் உள்ள ஆச்சரியமான கேள்வி? இலங்கையைச் சேர்ந்த 93 பேர் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரும் இந்த பெண்டொரா பத்திரிகையில் உள்ளனர் என்பதும் வெளியிடப்பட்டுள்ளது. நிரூபமா ராஜபக்ஷவும், நடேசனும் வெளிப்படு…

    • 0 replies
    • 273 views
  18. நீதிமன்றினால்... நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு, தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர், மொனராகலை நீதவான் நீதிமன்றினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அம்பாறை- அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த கதிரவேலு கபிலன் (வயது 29) என்பவரே இவ்வாறு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு- புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், பீ.சி.ஆர் பரிசோதனைகளை அடுத்து நேற்று மதியம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, உறவுகளுடன் இணைந்துள்ளதாக குடும்பத்தினர் குரலற்றவர்களின் குரல் அமைப்…

  19. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு... தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி வர்த்தக நிபுணர்களின் ஆலோசனை அன்றி, அரசியல்வாதிகளின் தேவைக்கேற்க சர்வதேச வர்த்தகங்களை மேற்கொண்டதன் விளைவாகவே, நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியான, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் பிரதமரான மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் நினைவு நாளை முன்னிட்டு, இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இன்று விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. …

  20. மக்கள் எதிர்பார்த்ததைப் போன்று... அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று தாமும் தமது அரசாங்கமும் செயற்படவில்லை என்பது குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளமையை தாம் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் வாக்குறுதி அளித்தபடி புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறை மாற்றம் என்பன கொண்டுவரப்படும் என அவர் உறுதியளித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற 72ஆவது இராணுவ வருட பூர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கையூட்டல் மற்றும் மோசடி ஆகியவற்றுக்கு இடமளிக்காது சகல அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டார். …

  21. பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்தம் செய்வது குறித்து, பிரித்தானியாவுடன் பேச்சு பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது குறித்து பிரித்தானியாவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹல்டன் ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது பொதுவான பிரச்சினைகள் குறித்தும் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு, சட்ட அமுலாக்க நிறுவ…

  22. 20 வது திருத்தம் தோல்வியடைந்ததை... அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தோல்வியடைந்ததை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்ட அவர், அமைச்சர்களுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி தனக்கு மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் அனுபவம் இருப்பதை ஒப்புக்கொண்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 20 வது திருத்ததின் ஊடாக அமைச்சரவை ஆட்சி முறை இரத்து செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் கீழ் அரசாங்கத்தை கொண்டு செல்ல வேண்டும் என கூறினார். எனவே, பிரதமர் முன்வந்து அனுபவம் உள்ள மற்ற அனைத்து அமைச்சர்க…

  23. 3 ஆயிரத்தை அண்மிக்கும்... சமையல் எரிவாயுவின் புதிய விலைகள்! சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 257 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 12.5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 2 ஆயிரத்து 750 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 503 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை ஆயிரத்து 101 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2.5 கிலோ எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாயினாலும் அதிகரிக்…

  24. வடமாகாணத்தின்... புதிய ஆளுநராக, ஜீவன் தியாகராஜா நியமனம்? வடமாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராகவும் ஜீவன் தியாகராஜா பணியாற்றி வருகின்ற நிலையில் ஜனாதிபதியினால் குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய அவர் தற்போது வகிக்கும் பதவியை இராஜினாமா செய்து வட மாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1243607

    • 4 replies
    • 976 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.