Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டனர் - கஜேந்திரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அமெரிக்காவுக்கு சென்று அங்கு தனது பேரப்பிள்ளையை கொஞ்சி தூக்கி மகிழ்ந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருக்கும்போதே இறுதி யுத்தக் காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெறுமதி சேர் வரி திருத்த சட்ட மூலத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்…

  2. அரசாங்கம் எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது – சபையில் சாணக்கியன் அரசாங்கமானது அவர்களது ஆளுகைக்கு உட்படாத பிரதேசங்களிலுள்ள எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இன்றைய தினம் பாராளுமன்றத்தில். 13வது சட்டத் திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வினை பற்றி நாம் கதைத்துக் கொண்டிருக்கும் அதேவேளை அரசாங்கமானது அவர்களது ஆளுகைக்கு உட்படாத பிரதேசங்கள…

  3. காணாமல் போனவர்களுக்கு நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கலாம். ஆனால், உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? பாராளுமன்ற உறுப்பினர் - கோ.கருணாகரம் ஜனா ShanaOctober 5, 2021 (துதிமோகன்) காணாமல் போனவர்களுக்கு நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கலாம். ஆனால், உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? உங்களிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும் நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகின்றீர்கள் என்றால் நீங்கள் அவர்களைக் கொன்றுவிட்டீர்கள், நீங்கள் கொலைக் குற்றவாளிகள், நீங்கள் தண்டனை பெற வேண்டியவர்கள் என்பதை நீங்களே ஏற்றுக் கொள்கின்றீர்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஐநா உரை …

  4. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் சிறுவர்களுக்கு உள்ள உயிர்வாழும் உரிமைக்கூட இலங்கையில் பறிக்கப்படுகின்றது இறுதி யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டனர். பிரபாகரனின் இளைய மகன் என்கிற ஒற்றைக் காரணத்தினாலேயே 12 வயதுடைய பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் குற்றம்சாட்டிய நிலையில் அரச தரப்பினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சபையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பாராளுமன்றத்தின் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெறுமதி சேர் வரி திருத்த சட்ட மூல விவாதத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் பேசியபோது, இம்மாதம் முதலாம் திகதி சிறுவர் தி…

  5. ”சீனாவுடனான தொடர்புகள் தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டாம்”: இந்தியாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு! சீனாவுடனான தொடர்புகள் பற்றி எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமென்று, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பான பிரச்சினையை, இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும், ஜனாதிபதி கூறியுள்ளார். இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் இன்று (05) முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்ப…

  6. யாழ். பல்கலைக்கழக நிகழ்நிலைப் பட்டமளிப்பு வியாழன்று October 5, 2021 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன என்று யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இம்மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் நிலவும் கொரோனாப் பெருந்தொற்று நிலைமைகள் காரணமாக பட்டமளிப்பு விழாவில் பெருமளவானோர் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அதனை நிகழ் நிலையில் நடாத்துவதற்குத் தடை ஏதுமில்லை என்றும் சுகாதார சேவைகள் ப…

  7. இந்தியா - இலங்கை இருதரப்பு கூட்டுப்பயிற்சி ஆரம்பமாகியுள்ளது. மித்ர சக்தி என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெறும் இந்த இராணுவ பயிற்சியானது 8 ஆவது தடவையாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. நேற்று 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த இரு தரப்பு பயிற்சியானது எதிர்வரும் 15 ஆம் திகதி அம்பாறை இராணுவ பயிற்சி முகாமில் நடைப்பெறுகின்றது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 120 பேர் குழுவுடன் இலங்கை பாதுகாப்பு படைகள் கூட்டுபயிற்சி நடவடிக்கைகளில் ஈடுப்பட உள்ளனர். இரு நாடுகளின் படைகளுக்கிடையேயான நெருங்கிய உறவை மேம்படுத்துவதோடு, கிளர்ச்சி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் சிறந்த செயல்பாடுகளைப் பகிர்வதையும் மேம்படுத்துவதையும் இந்தப் பயிற்சியின் நோக்க என பாதுகாப்பு…

  8. (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பலவீனமான அரசதலைவர் என்று குறிப்பிட்டால் மக்கள் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள். அரசாங்கம் நாட்டை பாதுகாக்க வந்துள்ளதா, அழிக்க வந்துள்ளதா என்று எண்ண தோன்றுகிறது. கொவிட் வைரஸ் தாக்கம் இல்லாமலிருந்தால் நாட்டு மக்கள் வீதிக்கிறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராடுவார்கள். நாட்டை பாதுகாக்க சர்வ மத தலைவர்களையும் ஒன்றினைத்து சம்மேளனத்தை நடத்த தீர்மானித்துள்ளோம் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின தலைவரும்,அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் க…

  9. தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில்... இந்தியா, உறுதியாக இருக்க வேண்டும் – கூட்டமைப்பு எடுத்துரைப்பு 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதனூடாக முழுமையாக அதிகார பகிர்வை வழங்குவதன் மூலமாகவே தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என இந்தியாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் நேற்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டிருந்தார். தமிழ் மக்களின் நீண்ட…

  10. அரவிந்தா திஸாரா ரதுவிதான பிபிசி 'ஒரு நாள் நான் பேருந்து தரிப்பிடத்தில் பகல் வேளையில் நின்று கொண்டிருந்த போது, போலீஸார் என்னை அழைத்து சென்றனர். எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இன்றியே என்னை அழைத்து சென்றார்கள். இரவு 11 மணி வரை போலீஸ் நிலையத்தில் எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்து வைத்திருந்தார்கள். இரவு 11 மணிக்கே வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டார்கள். பிறகு வீதியில் அலைந்து திரிந்ததாக குற்றம்சாட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்கள்." வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள ஏன் இரவு வரை காக்க வைத்தார்கள் என்பதை பின்னரே நான் அறிந்துக்கொண்டேன். "இரவு வேளையிலேயே இவரை நாம் கைது செய்தோம் என நீதிமன்றத்தில் அப்போது தானே உரக்கக் கூற முடியும். போலீஸாரு…

  11. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நிலவிய குளிரூட்டல் வசதியைக் கொண்ட பிணவறை பற்றாக்குறையைடுத்து, 20 அடிநீளமான இரும்பு கொள்கலன் ஒன்று கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பகுதி படை வீரர்களால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்காரணமாக தேங்கும் உடலங்களை பேணுவதற்கான குளிரூட்டல் வசதியை மேற்கொள்வதற்காக கொள்கலன் ஒன்றை மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் கடந்த செப்டம்பர் மாத ஆரம்பத்தில் ஏற்பாடு செய்து வழங்கியிருந்தார். மாவட்ட கொவிட்-19 நிலைமைகள் தொடர்பாக நடைபெற்ற மெய்நிகர் வழி கலந்துரையாடலின்போது மாவட்டச…

  12. இந்திய நலன்களுக்கு வடக்கு கிழக்கை பயன்படுத்த இடமளியோம்- இந்தியத் துணைத்தூதுவரிடம் கஜேந்திரகுமார் தெரிவிப்பு October 4, 2021 இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்துகின்ற வகையிலே, வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பினை பயன்படுத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எக்காரணம் கொண்டும் ஒத்துழைக்காது என்பதுடன், அத்தகைய விடயங்களை எதிர்ப்போம் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனிடம் தான் தெரிவித்துள்ளதாக, தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்…

    • 9 replies
    • 870 views
  13. வடக்கில்... காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள், இடம் பெறவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களம் ஈடுபடவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். வன சரணாலயப் பகுதிகளில் தனியார் காணிகள், விவசாய நிலங்கள் மற்றும் பாரம்பரிய விவசாய நிலங்கள் இருந்தால் அவை கையகப்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது வன்னி மாவட்ட உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் முல்லைத்தீவில் நாயாறு மற்றும் நந்திக்கடல் ஆகியன வர்த்தமானியில் 2017 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்…

    • 1 reply
    • 251 views
  14. அரசியல் அழுத்தம் காரணமாக... உண்மையை மறைக்கும், நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் குற்றச்சாட்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வழிமுறை இன்று இல்லாமல் போயுள்ளது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அரசியல் அழுத்தம், அரசியல் இலாபம் உள்ளிட்ட காரணிகளினால் தாக்குதலின் உண்மையை மறைக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தற்போது இடம்பெறுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொதுப் பிரச்சினை தொடர்பாகவும் அரசாங்கம் அக்கறைகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். 70 வருடகாலமாக ஊழல் நிறைந்த ஆட்சிமுறைமையே தொடர்ந்தது என்…

  15. நாட்டின் வளங்களை விற்க... ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமை உள்ளது – சோபித தேரர் நாட்டின் வளங்களை விற்க ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமைகள் உள்ளன என ஒமல்பே சோபித தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் செயற்பாடு குறித்து பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுவரும் நிலையில் சோபித தேரரும் இதனை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை ஒரு பாரதூரமான குற்றம் என குறிப்பிட்ட அவர் தேசிய வளங்களை தன்னிச்சையாக விற்பனை செய்வதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தாங்கள் ஆட்சியில் நீடிக்கப்போவதில்லை என்ற எண்ணத்தில் நாட்டை ஆட்சி செய்கிறார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்…

  16. இந்திய நிறுவனத்துடனான உன்படிக்கையை... புதுப்பிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை இந்திய எண்ணெய் நிறுவனத்துடனான உன்படிக்கையை நீடிப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள இந்திய வௌியுறவு செயலாளர் நேற்று திருகோணமலையில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் நிறுவனம் பயன்படுத்தும் சுமார் 20 எண்ணெய் குதங்களை நேரில் சென்று பார்வையிட்டார். ஏற்கனவே கைச்சாத்திடப்பட்ட இந்திய எண்ணெய் நிறுவனத்துடனான உன்படிக்கை 2024 ஆம் ஆண்டளவில் முடிவிற்கு வரவுள்ளது. எனவே குறித்த ஒப்பந்தத்தை நீடிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் …

  17. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: 24 பிரதிவாதிகளுக்கு குற்றப்பத்திரம் சமர்ப்பிப்பு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை கொழும்பு விசேட மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேவாலயங்கள் மற்றும் ஹொட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, வழக்கின் 24 பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்க அண்மையில் உத்தரவிடப்பட்டது. அதற்கமைய, இன்று நீதிமன்றில் பிரதிவாதிகள் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. …

  18. இந்திய உதவியில் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் கையளிப்பு இலங்கை இந்திய நட்புறவு திட்டதின் கீழ் வவுனியாவில் நிர்மானிக்கப்பட்ட வீடுகள் இன்று (திங்கட்கிழமை) பயனாளர்களிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை இந்திய நிதி உதவி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கீழ் வவுனியா மாவட்டத்தில் 100வீடுகள் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது அந்தவகையில் வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் அருனோதயாநகரில் பூர்த்திசெய்யப்பட்ட 24 வீடுகள் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பயனாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கலந்துகொண்ட வீடமைப்பு மற்றும் கட்டட நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த, இந்திய துணை தூதுவர்; ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோர் வீடுகளை தி…

  19. கதிர்காமத்தில்... ரிமேற் ரிமோட் கொன்ரோலுடன், மட்டக்களப்பை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது! கதிர்காமத்தில் தொலைக்காட்சியின் ரிமேற் கொன்ரோலுடன் மட்டக்களப்பை சேர்ந்த இரு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஞானசூரியம் சதுக்கத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள் தாம் கொக்கட்டிச்சோலை கோவிலுக்கு மோட்டர் சைக்கிளில் சென்று வருவதாக தெரிவித்து நேற்றைய தினம் வீட்டை விட்டு வெளியேறி கதிர்காமத்துக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கதிர்காமத்து பொலிஸ் சோதனைச் சாவடியில் சம்பவதினமான நேற்று இரவு இராணுவத்தினர் வீதிச் சோதனையில் இவர்களை நிறுத்தி சோதனையிட்டபோது இவர்களின் பையில் றி…

  20. திருகோணமலையில்... உள்ள 100 எண்ணெய் தாங்கிகள், ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை துறைமுகத்தை ஒட்டியுள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுடன் ஒப்படைக்க முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்காக இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 1987 மற்றும் 2003 ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் குறித்த எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன இந்நிலையில் அவற்றினை மீண்டும் கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்…

  21. இலங்கையில்... சடுதியாகக் குறைந்தது கொரோனா பாதிப்பு இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 21 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 4 இலட்சத்து 77 ஆயிரத்து 374 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 30 ஆயிரத்து 742 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 102 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://…

  22. பண்டோரா ஆவணம் குறித்து சுயாதீன விசாரணை வேண்டும் – ட்ரான்ஸ்பரன்சி பண்டோரா பேப்பர்ஸில் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணையை விரைவாக முன்னெடுக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த நிதி கொடுக்கல் வாங்கலின்போது இலங்கையின் பொது உடைமைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதன் மூலம் ஈட்டப்பட்ட பணமா என்பது குறித்து விரிவான உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. உலகத் தலைவர்கள் மற்றும் பொது அதிகாரிகளின் இரகசிய நிதி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக மீண்டும் உலகிற்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் நீர் வடிகாலமைப்பு பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் கட…

  23. தமிழ் மக்களாட்சிச் செயற்குழுவின் கடந்த எட்டு நாட் செயற்பாட்டு அடைவுகள், மற்றும் பொதுத்தொடர்புச் சட்டத்தரணிகள் குழு நியமனம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தொருமித்து ஈழத்தமிழர் கூட்டுரிமைகளை உலக அரங்குக்கு முன்னெடுக்கத் தகுந்த அணுகுமுறையொன்றை, ஆராய்ந்து வகுக்கும் பணிக்கு, பரந்துபட்ட வரவேற்பும் பங்கேற்பும், செயற்பாட்டு முயற்சி அறிவிக்கப்பட்ட எட்டு நாட்களுக்குள் கிடைத்திருப்பது, வடக்கு-கிழக்கில் உள்ள வரலாற்றுத் தேவையை மட்டுமல்ல, மக்களின் ஆதங்கத்தையும் வேணவாவையும் வெளிப்படுத்துகின்றது. முதலாவதாக, இந்த முயற்சியின் பிரதான இலக்கு, ஈழத்தமிழர்களின் தேசிய அரசியற் கூட்டுரிமைகளையும் கூட்டுக்கோரிக்கைகளையும் மக்கள் தமது நாடாளுமன…

  24. (ஆர்.யசி) 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் அதனூடாக முழுமையாக அதிகார பகிர்வை நோக்கி செல்வதும், நாட்டில் தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்ற இதன் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதையும் அரசாங்கத்திடம் தான் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகள், அரசியல் தீர்வு விடயங்களில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இந்திய வலியுறுத்திய அதே நிலைப்பாட்டில் நாமும் உள்ளோம் என்பதையும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதுடன், டெல்லியில் விரைவில் பேச்சுவார்த்தைகளை நடத்தவும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.