ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை- சரத் வீரசேகரவின் கருத்து குறித்து ஆசிரிய தொழிற்சங்கள் கடும் சீற்றம் – இராணுவமயப்படுத்தும் முயற்சி என குற்றச்சாட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளமை குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன. அமைச்சரின் கருத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான எங்கள் உரிமைக்கான அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள ஆசிரிய தொழிற்சங்கங்கள் இராணுவமயப்படுத்தல் குறித்த ஆர்வத்தை அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளன. அமைச்சரின் அறிக்…
-
- 0 replies
- 230 views
-
-
அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்ப வேண்டாம் – நாக விகாரையின் விகாராதிபதி தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்பி அரசியல் லாபங்களுக்காக மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டைநிறுத்துங்கள் என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரியகுள பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் ஆரிய குள அபிவிருத்தி சம்பந்தமாகவும் அதில் புத்த விகாரை அமைக்க முயற்சி என்…
-
- 1 reply
- 278 views
-
-
கிளிநொச்சி, இரணைமடுகுளத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான கால போக நெற் செய்கையான முற்றுமுழுதாக சேதனை பசளையை மட்டும் பயன்படுத்தி 20,882 ஏக்கர் பரளப்பளவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று (01) இரணைமடு குளத்தின் கீழான பயிர்ச் செய்கை கூட்டம் மெய்நிகர் செயலி ஊடாக இடம்பெற்றது இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இம் முறை புதிதாக 500 ஏக்கர் பரப்பளவு நெற் பயிர்ச் செய்கைக்கு உள் வாங்கப்பட்டுள்ளது. அத்தோடு அரசின் கொள்கைக்கு அமைவாக சேதனை பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. கால போக பயிர்ச் செய்கை ஆரம்ப திகதியாக 06.10.2021 …
-
- 0 replies
- 261 views
-
-
டக்ளஸ் தேவானந்தா அதிரடி அறிவிப்பு யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும் சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் சமுர்த்திப் பணிப்பாளருடன் இன்று(02 ) இடம்பெற்ற மெய்நிகர் வழியினூடான கலந்துரையாடலின் போதே, யாழ் மாவட்டத்தின் மூத்த பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில், சமுர்த்தி திட்டத்தின் ஊடாக 2 இலட்சம் குடும்பங்களை வலுப்படுத்தும் வேலைத் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்ற நிலையில், யாழ். மாவட்டத…
-
- 0 replies
- 346 views
-
-
(எம்.மனோசித்ரா) இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா நாளை சனிக்கிழமை நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பிற்கமைய அவரின் விஜயம் அமைந்துள்ளது. நாளையிலிருந்து எதிர்வரும் 5 ஆம் திகதி செவ்வாய்கிழமை வரை அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரச தலைவர்களுடனான முக்கிய சந்திப்பிலும் ஈடுபடவுள்ளார். நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவுச் செயலாளர் | Virakesari.lk
-
- 2 replies
- 411 views
-
-
அரசாங்கமொன்று சட்டத்தின் ஆட்சியை மதிக்காததாக காணப்படும்போது பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியமானது – அம்பிகா சற்குணநாதன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் அவ்வாறான நடவடிக்கையை எடுக்காவிட்டால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையிலும் இதனை தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்திருந்தார்.பொலிஸ் அமைச்சர் என்ற அடிப்படையில் இந்த சதிகாரர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சரத்வீரசேகர மேலும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக…
-
- 0 replies
- 170 views
-
-
பலிக்கடாக்களாக பூஜித், ஹேமசிறி! குற்றப்பத்திரிகை கையளிப்பு! October 2, 2021 போதிய சாட்சியங்கள் இருந்த போதும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கடமைகளை அலட்சியம் செய்தமை மற்றும் கொலைக்கு காரணமானமை தொடர்பில் முன்னாள் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கைகளை கையளித்துள்ளது. மேற்படி வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று (01.10.21) அழைக்கப்பட்டது. இதன்போது, அவ்விருவரும் நீதிமன்றில் முன்னிலையாகி இயிருந்தனர். அதன்போது அவர்களிடம் குற்றப்பத்திரிக்கைகள் கையளிக்கப்ப…
-
- 0 replies
- 369 views
-
-
இலங்கையில் இடம்பெறுகின்ற பழிவாங்கும் குற்றச்சாட்டுகளை ஐ.நா பொதுச்செயலாளர் ஆவணப்படுத்தியுள்ளார் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இலங்கை உட்பட 45 நாடுகளிலுள்ள சுமார் 240 சிவில் சமூக உறுப்பினர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான பழிவாங்கும் செயற்பாடுகள் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை ஆவணப்படுத்தியுள்ளார். இந்த சம்பவங்களை ஆவணப்படுத்தும் அறிக்கை, ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையில் ஐ.நா. மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் ஐல்ஸ் பிராண்ட்ஸ் கெஹ்ரிஸால் நேற்று வழங்கப்பட்டது. இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர், தனது பெப்ரவரி 9, 2021 இல் மனித உரிமைகள் சபைக்கு அளித்த அறிக்கையில், “சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாப்பாளர…
-
- 4 replies
- 432 views
-
-
(எம்.நியூட்டன்) வடமராட்சி கிழக்கில் பாரம்பரிய மீன்பிடி தொழில்களான கரவலை மற்றும் சிறு தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம்பெற இருக்கின்ற கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப் பாரிய அளவிலான போராட்டங்களும் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றிருந்தன.நடைபெற்ற போராட்டங்களில் வடமராட்சி கிழக்கு மக்கள் முழுமையாக பங்கெடுத்திருந்தார்கள்…
-
- 0 replies
- 275 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையில் ஒரு மணித்தியாலத்திற்கு 4 புதிய மார்பகப் புற்று நோயாளர்கள் இனங்காணப்படுவதோடு, இரு மார்பக புற்று நோயாளர்கள் உயிரிழக்கின்றனர். மார்பக் புற்று நோயை முன்னரே இனங்காண்பதன் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்று புற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதான பத்திரண தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , வருடாந்தம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை மார்பகப் புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வூட்டும் காலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இம்முறை , ' முன்னரே அறிந்து உயிரை பாதுகாப்போம்.' என்ற தொனிப்பொரு…
-
- 0 replies
- 220 views
-
-
மன்னார் பிரதேச சபை ஆட்சியைக் கைப்பற்றியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்! மன்னார் பிரதேச சபை ஆட்சியைக் கைப்பற்றியது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீன் ஒரு வாக்கு வித்தியாசத்தால் மன்னார் பிரதேச சபை தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனினும், குறித்த தெரிவு, வர்த்தமானியில் வெளியிடுவதைத் தடுத்துநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அந்தப…
-
- 1 reply
- 453 views
-
-
வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் இடம்பெற்ற படுகொலை- உயிரிழந்தவரின் தாயார் விடுத்துள்ள வேண்டுகோள்! மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் வீட்டின் முன்னால் அவரது மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் படுகொலைக்கு நீதிவேண்டும் என அவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளளார். கடந்த மாதம் 21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். ற…
-
- 2 replies
- 562 views
-
-
ரிஷாத்துக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு 16 வயதுடைய சிறுமி உயிரிழப்பு தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனுக்கான விளக்கமறியல் உத்தரவு ஒக்டேபர் 14 வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய இன்று காலை இந்த உத்தரவை பிறப்பித்தார். முந்தைய விசாரணையில் பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் பிணையில் விடுவிக்கப்பட்டனர், அதே நேரத்தில் இருவருக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டது. கொழும்பு, பெளத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் வீட்டுப் பணிக்காக பயணியளராக அமர்த்தப்பட்ட 16 வயதுடைய சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தமை தொடர்பில…
-
- 0 replies
- 334 views
-
-
கிளிநொச்சி - கௌதாரிமுனை மக்களுக்கு வயல் காணி பகிர்ந்தளிப்பு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைப் பொறுப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்ற ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று (01-10-2021) பூநகரி கௌதாரிமுனை மக்களுக்கு வயல் காணிகள் வழங்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரின் இணைப்பாளர் வை.தவநாதன் தலைமையில், பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர் இராசலிங்கம், கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் பகீரதன், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர் இணைந்து சீட்டிழுப்பு முறையில் சுமார் 100 ஏக்கர் காணியை பயனாளிகளுக்கு பகிர்ந்தளித்தனர். க…
-
- 0 replies
- 321 views
-
-
ஆரியகுளத்தின் மத்தியில் இந்து- பௌத்த மண்டபம்?நாக விகாரையின் விகாராதிபதி முயற்சி புனரமைக்கப்படும் யாழ்ப்பாணம் ஆரியகுளத்தின் நடு மத்தியில் ‘இந்து – பெளத்த மண்டபம்’ என்ற பெயரில் பெளத்த சின்னங்களையும் உட்புகுத்தி, ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி நடவடிக்கையை எடுத்து வருகின்றார். இதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் அனுசரணையையும் அவர் கோரியுள்ளார். என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், இந்தவெளிப்படையாக செயற்படவில்லைஎன குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன அவர் வேண்டும் என்றே ஒளிப்பதால், அவரது ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த ஆரியகுளம் புனரமைப்புத் திட்டத்தின் கடைசிக் கட்டத்தில் இந்த மண்டப அமைப்பும் இடம் பெறலாம…
-
- 0 replies
- 312 views
-
-
இலங்கையுடன்... முக்கிய உடன்படிக்கையில், இந்திய நிறுவனம் கைச்சாத்து! கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கை ஒன்றில் இந்தியாவின் அதானி குழுமம் அதன் உள்ளூர் வர்த்தக பங்காளியான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக ஆணையகம் ஆகியவற்றுடன் இன்று (வியாழக்கிழமை) கையெழுத்திட்டுள்ளது. குறித்த உடன்படிக்கை 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டிய முதலீடாகும் என கூறப்படுகின்றது. மேலும், மேற்கு முனையம் 35 வருட கட்டுமானம் மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அதானி குழுமத்தின் அறிக்கையின்படி, மேற்கு துறைமுக முனையம் ஆயிரத்து 400 மீற்றர் நீளம் மற்றும் 20 மீற்றர் ஆழம் கொண்டதா…
-
- 2 replies
- 362 views
-
-
“இன்று சிறுவர்கள் தினம் இல்லை கறுப்பு தினம்” October 1, 2021 சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகரின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் காலை 9.15 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது இதன்போது அண்மையில் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கடும் எதிர்ப்புதெரிவிக்கப்பட்டதுடன், அதற்கெதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. இன்று சிறுவர்கள் தினம் இல்லை கறுப்பு தினம். அதிகமான சிறுவர்கள் காணாமல் போயுள்ள நிலையிலே இன்றைய சிறுவர் தினத்தினை நாங்கள் கறுப்பு நாளாகவே கொண்டாடுகின்றோமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இணைப்பாளர் …
-
- 0 replies
- 431 views
-
-
யாழ். மக்களுக்கான இரு பெரும் குடிநீர் திட்டங்கள் : பிரதமர் மஹிந்த ஆரம்பித்து வைக்கிறார் யாழ்ப்பாணம் மற்றும் பளை பகுதிகளில் 60,000 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 24000 கன மீற்றர் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் இரண்டு பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட உள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி, மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக இந்த தொடக்க நிகழ்வு (Virtual inauguration) இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் தாளையடியில் நிர்மாணிக்கப்படும் SWRO கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் வேலைத்திட்டம் தொடக்கி வைக்கப்பட உள்ளதுடன், நயினாதீவில் முழுமையாக நிறைவுசெய்யப்பட்ட நீர் விநியோக திட்டம் …
-
- 26 replies
- 2.3k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின், கைது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை! நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்மை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தில் கடந்த 23.09.2021 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் அவர்களது கைதுக்குரிய காரணம், கைது செய்ய…
-
- 0 replies
- 278 views
-
-
லொகான் ரத்வத்தைக்கு எதிராக, அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல்! இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் அநுராதபுர சிறை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் SCFR 297/2021 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரனும் சட்டத்தரணி கேசவன் சயந்தனும் ஆஜாரராகவுள்ளனர். https://athavannews.com/2021/1242070
-
- 0 replies
- 297 views
-
-
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கம் – கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்! நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் நாட்டில் அமுலாக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், கட்டம் கட்டமாக நீடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 41 நாட்களுக்குப் பின்னர் கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை நீக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெ…
-
- 0 replies
- 213 views
-
-
உற்சவங்கள் மற்றும் விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை- இரவு நேர ஊரடங்கு அமுல் : விசேட அறிவிப்பு வெளியானது! நாடு, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்பட்டாலும் இரவு நேர ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை முதல் 15ஆம் திகதி வரை பதிவுத் திருமணங்களில் 10 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியுமெனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உற்சவங்கள், கேளிக்கை நிகழ்வுகள் மற்றும் விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது போக்குவரத்து சேவைகளின்போது ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்றி…
-
- 0 replies
- 205 views
-
-
யாழ். வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் பற்றைக்குள் 217 கிலோ கிராம் மஞ்சளை பதுக்கிவைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட மஞ்சள், தீருவிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவற்றைக் கடத்தி வந்த குற்றச்சாட்டில் 26,28 மற்றும் 46 வயதுகளையுடைய மூவர் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் சிறப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்ற நடவடிக்கைக்காக சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று கூறினர். நாட்டில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்…
-
- 3 replies
- 511 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கம்பஹா மாவட்டம் - அத்தனகல்ல பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் வைத்து கூரிய கத்திகளுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் யாழ். ' ஆவா ' குழுவுடன் தொடர்பில் இருந்த சந்தேக நபர்கள் என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். அத்துடன் அந்த ஐந்து பேரில் இருவர், தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்களாக இருந்து புனர்வாழ்வு பெற்று சமூக மயப்படுத்தப்பட்டவர்கள் எனவும் சி.சி.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று (29)…
-
- 2 replies
- 466 views
-
-
(நா.தனுஜா) அரசாங்கம் கடந்த 20 மாதகாலத்திற்குள் 1,25,747 கோடி ரூபா பணத்தை அச்சடித்திருக்கின்றது. இவ்வாறு எவ்வித மட்டுப்பாடுகளுமின்றி பணத்தை அச்சிடுவதானது வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத வகையிலான மிகப்பாரிய நிதிநெருக்கடியை நோக்கி இலங்கை தள்ளப்படுவதற்கு வழிவகுத்திருப்பதாக ஊவா, மத்திய மற்றும் தென்மாகாணங்களுக்கான முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் போன்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்புக்களிடமிருந்து உதவிகளைப் பெறுவதனைவிடுத்து, நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனைசெய்தல், தமக்கு நெருக்கமானவர்களுக்கு நன்மைகளை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டு திறைசேரியை வெற்றிடமாக்கல் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் நாட்…
-
- 2 replies
- 400 views
-