Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடு முதலாம் திகதி திறக்கப்படுகின்றது? – சுகாதார வழிகாட்டல் விரைவில்! நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவரும் சூழ்நிலையில், கடுமையான சில சுகாதார கட்டுப்பாடுகளுடனேயே நாடு திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான சுகாதார வழிகாட்டல்கள், கட்டுப்பாடுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், பொது போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டாலும், அதில் 25 வீதமானோரே பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. சிலவேளை இந்த எண்ணிக்கை 50 வீதமாக அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளாக தெரிவிக்கப்படுகின்றது. …

  2. இலங்கையுடன்... கைகோர்கின்றது, ஐரோப்பிய ஒன்றியம்! இலங்கையில் சேதனப் பசளையை பயன்படுத்தி முன்னெடுக்கும் விவசாயத்திற்கு தேவையான அனைத்துவித உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் பிரதிநிதி ஜெனி கொரியா நியுனஸ் தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்வதாகவும், இலங்கை அதை நோக்கி செல்வது ஒரு நல்ல விடயமாகக கருதுவதாகவும், இந்த செயல்முறையை வெற்றிகரமாக செய்ய உதவ தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வின் போது பேசிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு தயாராகும் இச்சந்த…

  3. திலீபனின்... நினைவேந்தலுக்கு, யாழ். நீதிமன்றம் தடை! திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் இன்று (வியாழக்கிழமை) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையுத்தரவு விதிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர். இந்த நிலையில் பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்திற்கு அமைய இந்த நிகழ்வுக்கு தடை விதிக்குமாறு பொலிஸார்…

  4. பொத்தான்... ஒன்றை அழுத்தி, முழு இலங்கையையும் இருளில் மூழ்கடிக்க அமெரிக்காவினால் முடியும் – விஜித்த ஹேரத் கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். நள்ளிரவு 12.06 மணியளவில் இரகசியமான முறையில் அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திற்கு யுகதனவி மின் உற்பத்தி நிலையம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன்காரணமாக, பொத்தான் ஒன்றை அழுத்தி முழு இலங்கையையும் இருளில் மூழ்கடிக்க அமெரிக்காவினால் முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது நாட்டின் ப…

  5. நல்லூரில் அமைந்துள்ள... திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார்! நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உயர் மட்டத்திலிருந்து பணிக்கப்பட்டுள்ளது என அறிய முடிகிறது. அதற்கு அமைய யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூவர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைக…

  6. அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம், இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு தமது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்குவதாக நேற்று பிரித்தானியா அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே, பிரித்தானியர்கள் இலங்கைக்கு அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் பயணிக்குமாறு பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொது நலவாயச் செயலகம் அறிவுறுத்தியுள்ளது. குறுகிய அறிவிப்பின் பேரில் இலங்கையில் பயணத்தடைகள், ஊரடங்கு சட்டம் என்பன ஏற்படுத்தப்படும் என்பதோடு, விமானப் பயணங்களிலும் மாற்றம் ஏற்படக்கூடும் எனவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது. https://athavannews.com/…

  7. எம்.மனோசித்ரா வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லும் போது வேறு எந்த வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் நலன் கருதி இனப்பிரச்சினைகளுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமானதும் நீதியானதுமான தீர்வுகள் அவசியம் என்பதை இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் பக்க அம்சமாக இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்…

  8. ”அனுராதபுர சிறைச்சாலை சம்பவம் அவமானகரமானது – மன்னிப்பு கோருகிறேன்” September 23, 2021 அனுராதபுர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோரியுள்ளதோடு, இச்சம்பவம் அவமானமான ஒன்று எனவும் இதனை தான் கண்டிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் மேலும் இச்சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தாமாக முன்வந்து விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்த அவர், இச்சம்பவம் தொடர்பில் மேல்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மேற்கொள்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் நேற்றைய (22.09.21) அமர்வில் கலந்துகொண்ட, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் கேட்கப்பட்ட …

  9. புலம் பெயர்ந்தவர்கள் பிரச்சனை வேற, இந்தாளுடைய பிரச்சனை வேற...☹️ மூலம்; ahalnews.com மன்னார் ஆயர் இல்லத்தை விசாரணை செய்க – மறவன்புலவு சச்சி September 22, 2021 7:21 pm No Comments Share on facebook Share on twitter Share on linkedin Share on whatsapp [9:12 a.m., 2021-09-22] : யாழ்ப்பாணம், செப்.22 மன்னார் மாவட்டத்தில் போருக்குப் பின்னர் இலக்கு வைத்து நடாத்தப்படும் ஆயர் இல்ல அராஜகங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கர்தின…

  10. வன்முறைச் செயல்கள்... இலங்கையில் மீண்டும் நடக்காது, என்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது – ஜனாதிபதி! வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தொற்றுப் பரவலின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களைப் பறிமாறிக்கொள்ளவும் சிறந்த முறையில் நாடுகளை மீளக் கட்டியெழுப்பவும், பிராந்திய தகவல் மையமொன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்பு, உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு வழங்க, இலங்கை எதிர்பார்க்கின்றது. வைரஸ் தொற்றுக்கு எதிரான தட…

  11. இனப்படுகொலையாளி கோட்டா’ அதிர்ந்தது நியூயோர்க் அமெரிக்காவில் இனப்படுகொலையாளி கோட்டாபய ராஜபக்ச என தெரிவித்து அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களே நியூயோர்க் நகரில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றியிருந்தார். இந்த நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டறியுமாறும், அரசியல் எதிரிகளை அடக்குவதை உடனடியாக நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டகார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

  12. மின் உற்பத்தி நிலையத்தின்... ஒரு பகுதியை, அமெரிக்காவிற்கு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் – விசேட சந்திப்பு இன்று! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 4.30 மணியளவில் இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. கெரவலப்பிட்டி மின்நிலையத்தில் எரிவாயு குழாய் அமைப்பு மற்றும் களஞ்சியத்தொகுதி நிர்மாணம் என்பன அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய கருத்துக்களை மையப்படுத்தி இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. எவ்வாறிருப்பினும் கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய…

  13. காணாமற் போனவர்கள் தொடர்பாக... எதனையும் மறைப்பதற்கில்லை – அரசாங்கம் காணாமற்போனவர்கள் தொடர்பாக எதனையும் மறைப்பதற்கில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிணைந்த செயற்பாடுகளே அவசியம் என்றும் இலங்கையர் என்ற ரீதியில் இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே இறுதியான பதிலாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது, மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனவர்களுக்கு விரைவாக மரணச்சான்றிதல் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்த…

  14. 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகக் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி! சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து தடுப்பூசிகளைப் பெறுவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகக் கடனை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த மேலதிக நிதியிடல் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொவிட் – 19 மூலோபாய தயார்படுத்தல்கள் மற்றும் பதிலளிப்புகள் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் கொவிட் 19 அவசர பதிலளிப்புக்கள் மற்றும் சுகாதாரத்துறையை தயார்படுத்தல் கருத்திட்டத்திற்காக இந்தக் கடனைப் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மேலதிக தொகை, 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வத…

  15. ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன – உண்மையினை வெளிப்படுத்தினார் சாணக்கியன்! ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு முக்கி தகவல்களை வெளியிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் பார்த்தோம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப…

  16. நுகர்வோர்... பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஓகஸ்ட் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதற்கமைய, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு உணவை விற்பனை செய்வார்களாயின், அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒ…

  17. "டெல்டா" உச்சம் குறைந்துள்ள போதிலும், மற்றொரு உச்சம் ஏற்பட 60 வீத வாய்ப்பு – சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸின் டெல்டா பிறழ்வின் உச்சம் இப்போது இலங்கையில் முடிந்துவிட்டபோதும் எதிர்வரும் வாரங்களில் மற்றொரு உச்சம் ஏற்பட இன்னும் 60 வீத வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, மற்றொரு பெரிய உச்சத்தைத் தடுக்க, மக்கள் எப்போதும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டுமென சமூக மருத்துவப் பேராசிரியர், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனத் அகம்பொடி ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொது நடமாட்டம் கடுமையாக குறைந்துள்ளதால், நாட்டில் இறப்புகள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து…

  18. நான் வஹாப்வாதி அல்ல. இஸ்லாமில் வஹாப் வாதம் இல்லை. முஸ்லிம் மதத் தலைவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கும் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என வினவிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நபி அவர்கள் எனக் கூறியமையால் உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம்களின் மனம் புண்பட்டுள்ளது என்றார். நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்தப்போகும் குழுவும் தனக்குத் தெரியும் எனவும், எந்தநேரத்திலும் தாக்குதலை மேற்கொள்ள …

    • 3 replies
    • 505 views
  19. கோவிட் -19 வைரசால் பாதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ராஜா வைத்தியர் எலியந்த வைட் சிறிது நேரத்திற்கு முன்பு காலமானார். சில வாரங்களுக்கு முன்பு வைரஸால் பாதிக்கப்பட்டதால், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைட் சிகிச்சை பெற்று வந்தார். அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மருத்துவர் ஆவர் . மறைந்த ஒயிட், சமீபத்தில் இலங்கையில் இருந்து கோவிட் -19 ஐ ஒழிக்கும் சடங்கின் ஒரு பகுதியாக, ஆறுகளில் கலவை நிரப்பப்பட்ட பானைகளை எறிந்தார், இவரை பின்பற்றி முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் சடங்கின் ஒரு பகுதியாக இதைச் செய்தனர். - Dailymirror.lk

  20. கொவிட் தொற்றினால் நாடு மாத்திரமல்ல எமது பொருளாதாரமும் முடங்கிப்போயுள்ளது. சர்வதேச ஒத்துழைப்புகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற வேண்டும் என ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் ஆற்றிய உரையின் வடிவம் வருமாறு, தலைவர் அவர்களே, செயலாளர் நாயகம் அவர்களே, அரச தலைவர்களே, கௌரவத்துக்குரிய உறுப்பினர்களே, அனைவருக்கும் வணக்கம்..! இன்று நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளக் கிடைத்தமையிட்டு, நான் பெருமையடைகிறேன். 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு…

  21. (இராஜதுரை ஹஷான்) மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடும் கருத்துக்கள் வெறுக்கத்தக்கவை என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். எம்பிலிபிட்டிய பகுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மதுபான பாவனைக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய அநகாரிக தர்மபாலவை அவமதிக்கும் வகையில் அவரது பிறந்த நாளன்று மதுபான சாலைகளை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டு மக்கள் கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் பெரும் பாதிப்பை எதிர்க் கொண்டுள்ள நிலையில், மதுபானசாலைகளை அரசாங்கம் திறக்க தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறான செ…

  22. சந்திரகாந்தன் எம்.பி ( பிள்ளையான் ) குழுவினரால் கொலை அச்சுறுத்தல் ! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் முகநூல் குழுவினர் ஊடாக தமக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது குறித்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமது தொழிற்சங்கத்திற்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன் முகநூல் ஊடாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில…

  23. அரசாங்கத்தின் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன் ரூபாய்களால் அதிகரிக்க தீர்மானம்! அரசாங்கத்தின் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன் ரூபாய்களால் அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாய்களாக திருத்துவதற்கும், அதற்காக குறித்த ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காகவும் நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது 2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்கான கடன் எல்லையாக 2,997 பில்லியன் ரூபாய்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொவிட் 19 பெருந்தொற்று க…

  24. தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகள் கேவலமான முறையில் சோதனை செய்யப்பட்டன! September 22, 2021 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு 540 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 12 தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகள் மிகவும் கேவலமான முறையில் சோதனை செய்யப்பட்டதாகவும், இதுவொரு பாலியல் சித்திரவதை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21.09.21) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அனுராதபுர சிறைச்சாலைக்குள் சென்று தமிழ் அரசியல் கைதிகளிடம் வெறியாட்டம் ஒன்றை ஆ…

  25. கூட்டமைப்பு வல்வெட்டித்துறை நகரசபை ஆட்சியை இழந்தது : September 22, 2021 வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா ஒரு மேலதிக வாக்கினால் அவர் வெற்றிபெற்றார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் சதீஸ் 8 வாக்குகளையும் சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா 9 வாக்குகளையும் பெற்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பான உப தவிசாளர், சுயேட்சைக் குழுவுக்கு சார்பாக வாக்களித்தார். வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் ஆரம்பம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.