ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
வெளிநாடுகளிலிருந்து செல்பவா்களுக்கு புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் August 19, 2021 வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்பவா்களுக்காக அமுல்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது இன்று (19) முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய விதிமுறைகளுக்கமைய வௌிநாடுகளிலிருந்து செல்லும் அனைவரும் விமான நிலையத்தில் பிசிஆா் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கும் வரை அவர்களை தனிமைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட விடுதிகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட ஒருவருக்கான ப…
-
- 0 replies
- 250 views
-
-
ரணிலின்... கோரிக்கை குறித்து, அவதானம் செலுத்தியுள்ள ஜனாதிபதி நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை குறித்து, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார். வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு சர்வகட்சி சம்மேளனத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அண்மையில் ஜனாதிபதியை நேரில் சந்தித்த ரணில் விக்ரமசிங்க கோரிக்கை ஒன்றினை முன்வைத்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஜனாதிபதி, சர்வகட்சி சம்மேளனத்தை நடத்துவது தொடர்பாக பிரதமர், சபாநாயகர் உள்ளிட்ட அனைத்து …
-
- 0 replies
- 287 views
-
-
வீட்டில் இருந்து, ஒருவர் மட்டுமே... வௌியில் செல்ல முடியும் – இராணுவத் தளபதி புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இன்றைய தினம் வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். எவ்வாறாயினும் தொழிலுக்கு செல்பவர்கள் வழமைப் போல வெளியில் செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்டது. அதற்கமைய, வணிக வளாகங்களுக்கு அதன் மொத்த வாடிக்கையாளர் திறனில் 25 சதவீதத்திற்கு மட்டுமே அனுமதி பல்பொருள் அங்காடியினுள் ஒரே நேரத்தில் அதன் மொத்த திறனில் 25 …
-
- 0 replies
- 239 views
-
-
பாகிஸ்தானில் இருந்து... 6 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி! பாகிஸ்தானில் இருந்து 6 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. https://athavannews.com/2021/1235031
-
- 0 replies
- 136 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. பாணந்துறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் மரணிப்போரின் சடலங்களை அப்புறுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பிணவறைகள் நிரம்பிவழிகின்றன. “ஆகையால், சலங்களை ஓரிடத்தில் வைத்து டயர்களைப் போட்டு எரியூட்டுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என பாணந்துறை நகர சபையின் தவிசாளர் நந்தன குணத்திலக்க தெரிவித்தார். Tamilmirror Online || பிணவறைகள் நிரம்பின: டயர்களை போட்டு எரிக்க முடிவு
-
- 5 replies
- 488 views
-
-
நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணத்தினால் இணையத்தள விற்பனை நிறுவனங்கள் ஒன்லைனில் விறகு மற்றும் விறகு அடுப்புக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு வர்த்தகத்தை முன்னெடுக்கும் இலங்கையின் பிரபல்ய நிறுவனமொன்றில் 5 கிலோ கிராம் விறகுகள் 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு மண் அடுப்பும் 5 கிலோ கிராம் விறகுகளும் 390 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாத இணையத்தளத்தின் தலைவர் தனது முகநூல் பக்கத்தில், "நாங்கள் விறகுகளை ஒன்லைனில் விற்பனை செய்வோம் என்று கற்பனை கூட செய்யவில்லை. இது உண்மையில் வெற்றியளித்துள்ளதாக கூறியுள்ளார். எரிபொருள் தட்டுப்பாட…
-
- 5 replies
- 492 views
-
-
காத்தான்குடி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக காத்தான்குடியில் இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல்வரை பிரதேசத்திலுள்ள 90 பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள் மூடப்படவேண்டும் என காத்தான்குடி நகருக்கான கொவிட்-19 தடுப்புச் செயலணி அறிவித்ததையடுத்து புதன்கிழமை காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா நிலமை தொடர்பிலும் நாட்டில் வேகமாகப் பரவிவரும் 'டெல்டா' திரிபு தொடர்பிலும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய அவசரக் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் அறிவித்துள்ளார். மாவட்டக்களப்பு மாவட்டத…
-
- 3 replies
- 390 views
-
-
ஏ.பி.எம்.அஸ்ஹர். ஆப்காணிய மக்கள் தம்மை தாமே பார்த்துக்கொள்ள விடுங்கள். தலிபான்களின் ஆட்சி அம்மக்களுக்கு பிடிக்காவிட்டால் அவர்களே தலிபான்களை விரட்டியடிப்பார்கள் என உலமாக்கட்சியின் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் இது பற்றி மேலும் கருத்துத்தெரிவிக்கையில் தலிபான் பெண்களை ஒடுக்குபவர்களாக இருந்திருந்தால் அவர்களை பெற்ற தாய்மாரும், சகோதரிகளும் அவர்களுக்கு விசம் வைத்து கொன்றிருப்பர். பெண்களை அடக்கி வைக்கிறார்கள் என்றால் பெண்களுக்கு விலங்கு போட்டு வைத்துள்ளார்களா 12 வயதுக்கு மேல் பெண்கள் படிக்க தேவையில்லை என்றால் நிர்வாகத்துக்கு பெண்கள் தேவையில்லை என்பது அவர்…
-
- 9 replies
- 627 views
-
-
பெருமைக்குரிய தமிழர்கள் உலகெங்கும் தமது குடும்பங்களிலும், சமூகங்களிலும் அளப்பரிய மாற்றங்களை ஏற்படுத்தும் சிறு தொழில் முகவர்களை இனம் கண்டு அவர்களைக் கெளரவித்து ஊக்குவிக்கும் வகையில் ‘பியர் ஸேர்வன்ட்ஸ்’ (PEER Servants) அமைப்பு வருடாந்த ‘லிடியா’ விருதை வழங்குகிறது. இணையவழி வாக்களிப்பில் மூலம் இந்த வருட (2021) தேர்வின் இறுதிச் சுற்ருக்குத் தெரிவாகியிருக்கும் மூவரில் இலங்கையைச சேர்ந்த அற்புதசீலி அம்மாவும் இடம்பெறுகிறார். செம்படம்பர் 15, புதன் கிழமை, பொஸ்டன் (அமெரிக்கா) நேரம் நள்ளிரவு வரை வாக்குகளை அளிக்க முடியும். இவ் வாக்குகளில் 10% மும் மீதி 90%, 30 ஆவது லிடியா நினைவு வருடாந்த நிகழ்வில் கலந்துகொள்வோர் அளிக்கும் வாக்குகளிலுமிருந்தும் பெறப்பட…
-
- 0 replies
- 274 views
-
-
(இராஜதுரை ஹஷான்) கொவிட் தாக்கத்தினால் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் கொழும்பில் இருந்துக் கொண்டு அரச வரபிரசாதங்களை அனுபவிக்காமல் தமக்குரிய பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய வேண்டும். மக்கள் மாத்திரமல்ல அரசியல்வாதிகளும் பொறுப்புடனும், விட்டுக் கொடுப்புடனும் செயற்பட வேண்டும். அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது. ஆலோசனை வழங்கி இனி பயனில்லை. வசதி படைத்தோர் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என எல்லேகுணவங்ச தேரர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் -19 வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சிக்கிறார்கள். தவறுகளை திருத்தி…
-
- 0 replies
- 237 views
-
-
நாட்டின் கொவிட்-19 வைரஸ் தொடர்பான எந்த தரவையும் மறைக்கவில்லை என்று சுகாதார அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொவிட்-19 தொடர்பான இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்து வெளியிடப்பட்ட தரவுகளின் துல்லியம் குறித்து கவலையடையத் தேவையில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். எனினும் பல ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெறுவதால் தினசரி எண்களைப் அறிக்கையிடுவதில் தாமதங்கள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார். சிக்கலான தரவு சேகரிப்பு மாதிரி மூலம் சரி செய்யப்பட்டவுடன் இது தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தடைசெய்யப்படும். தரவை மறைப்பதன் மூலம் தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க முடியாது. எனவே நாட்டில் கொரோனா வைர…
-
- 0 replies
- 326 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கொரோனாப் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நடவடிக்கை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) 20.08.2021 தொடக்கம் 28.08.2021 வரை கிளிநொச்சி வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை கிளிநொச்சி சேவைச் சந்தையும் இன்று முதல் கரைச்சி பிரதேச சபையினால் மூடப்பட்ட நிலையில் வர்த்தக நடவடிக்கைகள் பொது இடங்களில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகப் பின்பற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தன. நாட்டில் நேற்று வரையில் 35 நகரங்களின் வர்த்தக நடவடி…
-
- 0 replies
- 245 views
-
-
முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் உடன் கைது! August 14, 2021 முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்று முதல் கடுமையாக அமல்படுத்த காவற்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதற்கமைய எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவற்துறை ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை கேட்டுக்கொண்டார். 2020, அக்டோபர் 17ஆம் திகதி தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, பொது இடத்தில் முகக்கவசம் அணியாத நபர் தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம். அத்தகைய குற்றத்தை செய்யும் ஒருவரை பிடிஆணை உத்த…
-
- 13 replies
- 811 views
- 1 follower
-
-
தனது நியாயத்தை தெரிவிக்கும்போது சபையில் ரிஷாத் பதியுதீனுக்கு இடையூறு - சபாநாயகரும் மறுப்பு (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தனக்கெதிராக மேற்கொண்டுவரும் விசாரணை தொடர்பாக சபையில் தெரிவிக்க முற்பட்ட ரிஷாத் பதியுதீனுக்கு சபையில் ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சபாநாயகரும் ஆளும் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ரிஷாத் பதியுதீன், எந்த குற்றச்சாட்டு இல்லாமல் நான் கடந்த 116 நாட்களாக தடுத்துவைக்கப்பட்ட…
-
- 0 replies
- 402 views
-
-
நாட்டை முழுமையாக முடக்காது... பயணக் கட்டுப்பாடுகளை, கடுமையாக்க ஜனாதிபதி தீர்மானம்? நாட்டை முழுமையாக முடக்காது, பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு முடக்கப்பட்டால், பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியாது என்றும், அன்றாடம் வாழ்க்கை நடத்துபவர்கள் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். …
-
- 1 reply
- 234 views
-
-
ரணிலும் கோட்டாவும் – 21 யோசனைகளும் – வேலைக்கு ஆகுமா? August 18, 2021 கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது, தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு அவசரமாக சிகிச்சையளித்தல், ஒட்சிசன் வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி, 21 யோசனைகளை அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ளது. சுகாதார மற்றும் பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையிலேயே இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நேற்றையதினம் இடம்பெற்ற 45 நிமிட சந்திப்பின் போதும், இந்த 21 யோசனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டத…
-
- 0 replies
- 257 views
-
-
நாட்டை முடக்குவது குறித்து... நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே, தீர்மானிக்கப்படும் – கெஹலிய நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே அரசாங்கம் தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாடு பல மாதங்கள் மூடப்பட்டதன் பின்னரே திறக்கப்பட்டது. சுமார் 15 இலட்சம் அரச ஊழியர்கள் கடைமையாற்றுகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. எனினும் சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு நாளாந்த வருமானத்தை பெறுவோர் தொடர்பில் எவரும் வாய் திறப்பதில்ல…
-
- 0 replies
- 252 views
-
-
தொழிற்சங்கங்கள் ஊடாக... நாட்டை முடக்குவதற்கு, நடவடிக்கை! தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மையம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கான தீர்மானத்தை எடுக்காவிட்டால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுமென அந்த மையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரச மற்றும் தனியார்த்துறை பிரிவுகளை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மக்களின் பாதுகாப்பு தொடர்பாக சிந்திக்காது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றதெனவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார். எனவே அனைத்து தொழிற்ச…
-
- 0 replies
- 181 views
-
-
நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கும் சீரற்ற வானிலை இன்னும் சில நாள்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் ஊவா மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும், மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யும். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டிலும், வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களின் மேற்கு சரிவிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை …
-
- 61 replies
- 5.3k views
- 2 followers
-
-
நாட்டில்... நடைமுறையிலுள்ள, ஊரடங்குச் சட்டம்.. வெளவால்களுக்கானது- இலங்கை தாதியர் சங்கம் நள்ளிரவில் விதிக்கப்பட்ட ஊரடங்கு மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்காது என இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத் துறையினர் வீதிக்கு இறங்கி போராடி, நாடு முழுவதையும் முடக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தும் என அச்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாடளாவிய பொதுமுடக்கத்துக்கு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளது. தற்போது அரசாங்கம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இரவில் பொதுமக்கள் நட…
-
- 2 replies
- 327 views
-
-
கஜேந்திரகுமார் எம்.பிக்கும் குடும்பத்தினருக்கும் கொரோனா தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தனக்கும், தனது மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், தன்னுடன் அண்மை காலங்களில் மிகவும் நெருங்கி பழகியவர்கள் தனிமையில் இருந்து, பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அவர் அப்பதிவின் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/எம-பககம-கடமபததனரககம-கரன/175-278…
-
- 1 reply
- 383 views
-
-
சீனாவிடமிருந்து... 61.5 பில்லியன் கடன் ஒப்பந்தத்தில், இலங்கை கைச்சாத்து சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கை, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இலங்கை ரூபாய் மதிப்பில் இது 61.5 பில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1234835
-
- 8 replies
- 565 views
-
-
ஒரு எதிரியோடு போரிடுவது போல வைரசோடு சண்டை போட்டு சுட்டுவீழ்த்த முடியாது – எம்.ஏ சுமந்திரன் எங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்பு செய்பவர்கள் பொதுசுகாதார பரிசோதகர்கள் அவர்கள் இதுவரை காலம் வரையில் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காகவும் தடுப்பூசி செலுத்துவதிலும் அனுபவம் மிக்கவர்களாக காணப்படுகின்றனர். அப்படியானவர்களின் கருத்துக்கள் அவர்களின் ஆலோசனைகளை செவிமடுக்காமல் இராணுவத்தினரை வைத்துவைரஸ்பரவலை தடுக்கலாம் என அரசாங்கமும் ஜனாதிபதியும்நினைத்தது பெருந்தவறு. ஒரு எதிரியோடு போரிடுவது போல வைரசோடு சண்டை போட்டு சுட்டுவீழ்த்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.நாட்டின் தற்போதைய நிலைமை குறித…
-
- 13 replies
- 1.1k views
-
-
ஏ.பி.எம்.அஸ்ஹர்: தாலிபான்களுடைய வெற்றி ஆபத்தானது... எனவே இலங்கை முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார் அவர் விடுத்துள்ள குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தாம் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றி யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்துவிட்டதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இது ஒரு நல்ல சமிக்ஞையாக பார்க்க முடியவில்லை. அபசகுணமாகவே தோன்றுகிறது. உலக அதிகார சமநிலையில் மேற்கத்திய விளையாட்டின் ஒரு பகுதியாக இதனை பார்க்க முடிகிறது. இப்படித்தான் அல்கைதா இயக்கத்தை உருவாக்கினார்கள். இப்படித்தான் அரபு வச…
-
- 14 replies
- 957 views
-
-
சுகாதார அமைச்சு கைமாறுகிறது? கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சு, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இருந்து கைமாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுகாதார அமைச்சர் என்ற ரீதியில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு தீர்வு காண, சுகாதார அமைச்சு உட்பட சுகாதாரத் துறையை வழிநடத்த பவித்ரா வன்னியாராச்சி தவறியுள்ளார் என அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மிக விரைவில் சுகாதார அமைச்சர் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக தற்போதைய அமைச்சரவையில் இருந்து தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், இதன்படி, புதிய சுகாதார அமை…
-
- 12 replies
- 986 views
-