Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது! October 23, 2021 இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த , வீ.நிமலதாஸ் மற்றும் த. கஜீபன் ஆகிய இரு மீனவர்களையும் நேற்றைய தினம் இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். இரு மீனவர்களும் கடந்த 21ஆம் திகதி மீன் பிடிப்பதற்காக வல்வெட்டித்துறையில் இருந்து சென்ற நிலையில் , இந்திய கோடியக்கரைக்கு கிழக்கே 16.5 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தாம் கைது செய்ததாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.…

  2. Published by T Yuwaraj on 2021-10-22 17:23:14 கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் 7 ஆம் ஒழுங்கை கடந்த வருடம் ஏழாம் மாதம் தார் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டு ஒரு வருடத்திற்குள் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது. நிறைந்த கிராமம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலகததினால் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையின் தொழிநுட்ப மேற்பார்வையில் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. வீதி புனரமைப்புக்கான ஒப்பந்தத்தை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் பெற்றிருந்தாலும் வீதி ப…

    • 5 replies
    • 532 views
  3. சிங்கள பெரும்பான்மை மக்களை குடியேற்ற முன்னெடுக்கும் செயற்பாட்டிற்கு எதிராக காராமுனை மக்கள் ஆர்ப்பாட்டம்! மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காராமுனை பகுதியில் சிங்கள பெரும்பான்மை மக்களை குடியேற்ற முன்னெடுக்கும் செயற்பாட்டிற்கு எதிராக அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (21) ஈடுபட்டனர். வாகரை பிரதேசத்தின் மாங்கேணி காராமுனை பகுதியில் 1982 ஆம் ஆண்டிற்கு முன்பாக சிங்கள மக்கள் குடியிருந்ததாக கூறி இன்று வியாழக்கிழமை (21) அவர்களுக்கான காணி தொடர்பான நடமாடும் சேவையொன்று புனாணையில் உள்ள வன இலகா திணைக்களத்தில் நடைபெற்றது. இந்த நடமாடும் சேவையினை மத்திய காணி ஆணையாளர் ஜீ.கீர்த்திகமகே மற்றும் கிழக்கு மாக…

  4. நாட்டில் நீதித்துறையினால் நீதி நிலைநாட்டப்படுவதில் பாரிய பின்னடைவு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் நாட்டில் நீதித்துறையினால் நீதி நிலைநாட்டப்படுவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான செயற்பாடுகளில் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டுள்ளமை இதற்கு நல்ல உதாரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இளந்தவறாளர்கள் (பயிற்சிப்பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தண்டனைச்சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் இதனை கூறினார். அவர்…

  5. பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணரின் நியமனத்தை திட்டமிட்டு தடுக்கும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (எம்.மனோசித்ரா) வட மாகாணத்திற்கு தற்போது ஒரேயொரு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் மாத்திரமே காணப்படுகிறார். அவர் விடுமுறையில் செல்லும்போது அங்கு சேவை குறைபாடு ஏற்படும். எனவே இதற்கான இரண்டாவது நியமனம் வழங்கப்படுவதை யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திட்டமிட்டு தடுக்கின்றார். இந்த நியமனம் விரைவில் வழங்கப்படாவிட்டால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பாரிய தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் என்று அதன் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் த…

  6. நடேசன் எனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்- சமிந்த விஜேசிறி பண்டோரா பேப்பர் சர்ச்சை குறித்து வெளியான வெளிப்பாடு குறித்து பாராளு மன்றத்தில் கருத்து தெரிவித்த பின்னர் திருக்குமார் நடேசன் என்ற நபர் தொலைபேசியில் தன்னை மிரட்டியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். குறித்த அழைப்பு உயிருக்கு ஆபத்து என உணர்ந்ததால் தான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், குறித்த முறைப்பாடு தொடர்பாக இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை என்றாலும், பிரதமரின் செயலாளர் மட்டுமே விசாரணை நடத்தியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார். திரு.நடேசன் என அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் தனக்கு எடுத்த சந்தேகத்திற்குர…

  7. வடமாகாண கலாசாரத் திணைக்களம் 2021ஆம் ஆண்டுக்கான விருது பெறுவோர் வட மாகாண கலாசாரத் திணைக்களம் துறை ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான கலைஞர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இளங்கலைஞர் விருது, கலைக்குரிசில் விருது மற்றும் சிறந்த நூல் பரிசு ஆகிய பிரிவுகளில் வெற்றியாளர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/144879

  8. ஜனாதிபதியே அனைத்தையும் தீர்மானிக்கிறார் – நீதித்துறை மோசமாகி உள்ளது! October 22, 2021 புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடாவும் எம்.பியுமான லக்ஷமன் கிரியெல்ல, ஜனாதிபதியின் தனிப்பட்ட சட்டத்தரணிகளே புதிய அரசமைப்பை உருவாக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் நேற்றைய (21.10.21) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், 19ஆவது திருத்தச் சட்டத்தால் நாட்டுக்குக் கிடைத்த ஒவ்வொன்றையும் தற்போதைய ஜனாதிபதியால் இல்லாது செய்யப்படுவதாக ஐரோப்பிய ஒன்றி தூதுகுழுவினர் எதிர்க்கட்சியிடம் தெரிவித்ததாகவும் கூறினார். குறிப்பாக சுயாத…

  9. தமிழ் அரசியல் கைதிகள் சிலர், சிறை மாறுகிறார்கள்! October 22, 2021 சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வருகைதந்த போது அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பொலிஸ்மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் நேற்று (21.10.21) கட்டளையிட்டது. அதேபோல அந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்த கைதிகள் எண்மரையும் வேறு சிறைக்கு உடனடியாக மாற்றுமாறும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு, உயர்நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சரான லொஹ…

  10. இறுதி யுத்தத்தில்... சரணடைந்த, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது – சிறீதரன் கேள்வி இறுதி யுத்தத்தின் முடிவில் தங்கள் குடும்பங்களோடு சரணடைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் போரின் இறுதிக் கணங்களில், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பல சிறுவர்கள் அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் முதல்நிலை உறுப்பினர்களின் பலரது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். …

  11. கைதிகள் அச்சுறுத்தல் – லொஹானின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு! அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவத்தில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனையில் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 15 ஆம் திகதி, கைதிகளை முழந்தாழிட செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தனது அமைச்சுப் பதவியை இராஜி…

  12. இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக... யாழ் போதனா வைத்தியசாலையில் நினைவுத்தூபி அமைக்க நடவடிக்கை! இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது இந்த நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இந்திய ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் உறவுகளால் உயிரிழந்தோரின் நினைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் ஒரு தூபி அமைப்பதற்கு தமக்கு இடம்…

  13. அரசாங்கத்தினால் பதில் வழங்க முடியாமல்போன, 50 வினாக்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் விசேட நாடாளுமன்ற தினமாக எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தினால் பதில் வழங்க முடியாமல்போன 50 வினாக்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்குவதற்காக இந்த விசேட நாடாளுமன்ற தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1246118

  14. (நா.தனுஜா) அண்மைக்காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான கடவுச்சீட்டைப் பெறுவதற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை நூற்றுக்கு ஐம்பது சதவீதம் என்ற அளவில் சடுதியாக அதிகரித்திருக்கின்றது. பெருமளவான இளைஞர், யுவதிகள் நாட்டைவிட்டுச் செல்வதற்கு விரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அடுத்த தலைமுறையினர் நாட்டைவிட்டு வெளியேறும்பட்சத்தில் நாட்டின் எதிர்காலம் என்னவாகும்? என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். இரசாயன உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் உரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசாங்கம் இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வைப்பெற்றுக…

    • 2 replies
    • 404 views
  15. நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் அமெரிக்காவும் இலங்கையுடம் வலுவான பங்காளிகளாக விளங்கவேண்டும்- புதிய அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சங் நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் அமெரிக்காவும் இலங்கையுடம் வலுவான பங்காளிகளாக விளங்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலிசங் தெரிவித்துள்ளார். இலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும் என இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சங் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட்டின் வெளிவிவகார குழுவின்முன் கருத்துவெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை இந்துசமுத்திரத்தின் இதயத்தில் மூலோபாய ரீதி…

  16. ஒற்றையாட்சியைத் தமிழ்க் கட்சிகள் விரும்பாததேன்?-க.வி.விக்னேஸ்வரன் பதில் ஒற்றையாட்சியைத் தமிழ்க் கட்சிகள் விரும்பாததேன்? என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், “ஒற்றையாட்சித் தலைமைத்துவம் பெரும்பான்மையினக் கட்சிகள் வசம் இருக்கும் போது சிறுபான்மையினர் பாகுபாட்டுக்கு உள்ளாவார்கள் என்பதால்” எனக் கூறியுள்ளார். மேலும் ஊடகவியலாளர் கேள்விகளுக்கு தொடர்ந்து அவர் பதில் அளிக்கையில், கேள்வி:- பெரும்பான்மையினக் கட்சிகளில் சிறுபான்மையினர் போதிய அளவு இடம் வகித்தால் இந்த நிலைமை எழாதல்லவா? பதில்:- எழும். இலங்கை போன்ற நாடுகளில் எழும். இலங்கையில் பெரும்பான்மையினத் தலைவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு உட்பட்ட…

    • 11 replies
    • 677 views
  17. இலங்கை அரசு தமிழ்நாடு மீனவர்களையும், இலங்கை தமிழ் மீனவர்களையும் மோதவிடும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது. கவிஞர் காசி ஆனந்தன் சாடல்! . இந்திய அரசுக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையில் உள்ள நட்புறவைச் சிதைத்தழிக்கும் நோக்கோடு தமிழ்நாடு மீனவர்களையும், இலங்கை தமிழ் மீனவர்களையும் மோதவிடும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது சிறிலங்கா அரசு என ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார். மீனுக்கு அல்ல இலங்கையில் வாழும் மீனவர்களுக்குத் தூண்டில் போடப்படுகிறது. ஏன் அவர்கள் தூண்டில் போடுகிறார்கள் என்பதை மறந்து சிங்கள சிறிலங்கா அரசுக்குத் துணை போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் இ…

  18. வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் திடீரென ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக அதனை பெற்றுக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்ளவிருந்த வசதி ஒக்டோபர் மாதம் வரை முழுமை அடைந்துள்ளது. இதன் காரணமாக முன்கூட்டியே நேரம் ஒதுக்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் எதிர்வரும் நவம்பர் மாதத்திலேயே உள்ளதென குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. முற்கூட்டியே நேரம் அல்லது திகதியை ஒதுக்கிக் கொள்வதற்கான வசதிகளின் கீழ் நாள் ஒன்றுக்கு 1000 கடவுச்சீட்டுகள் வெளியிடப்படுவதாக திணைக்களத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரி எச்.பீ.சந்திரலால் தெரிவித்துள்ளார். கடந்த 18ஆம் திகதி மாத்திரம் ஒரு நாள் மற்றும் பொது சேவையின் கீழ் 4700 விண்ணப்பங்களை ஏ…

  19. இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனாவில் படுகொலை செய்யப்பட்டோரின் 34 வது நினைவு தினம் October 21, 2021 1987 ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால்அங்கு கடமையில் இருந்த 21பேர் இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்ததன் 34 ம் ஆண்டு நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்றது இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது சுகாதார நடைமுறைகளை பேணி மட்டுப்படுத்தப்பட்ட இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யா…

  20. இலங்கையில் 87 சதவீதமானவர்களுக்கு... தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும், செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு இலங்கையில் 87 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதேநேரம், இருபது வயதைக் கடந்த சகலருக்கும் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில் 70 சதவீதமானவர்களுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இளைஞர் சமூகத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://ath…

  21. சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் மீள ஆரம்பம் நாடளாவிய ரீதியில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் இன்று (வியாழக்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த பாடசாலைகளே சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் பெற்றோரின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்டதாகவும் பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் உயர்ந்தபட்ச நடவடி…

  22. கிண்ணியாவில் ஒய்வு பெற்ற இராணுவ பொறியலாளர் ஒருவர் கைக்குண்டுடன் கைது! திருகோணமலை கிண்ணியாவில் வெளிநாட்டுத் தயாரிப்பு கைகுண்டடன் ஒய்வு பெற்ற இராணுவ பொறியலாளர் ஒருவரை நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள பூவரசாந்தீவு, ஆர்.டி.எஸ் தெருவில் வசிக்கும் 29 வயதுடைய இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற இராணுவ பொறியியலாளரை சம்பவதினமான நேற்று இரவு கைது செய்ததுடன் கைக்குண்டு ஒன்றையும் மீட்டனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிசார் மேற்கொண்டுவருவதுடன் கைது செய்யப்பட்வரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2021/1245871

  23. சிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான, திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை சமர்ப்பிப்பு! சிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார். இதன்மூலம் இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக முதலில் வகுக்கப்பட்டிருந்த 18 என்ற வயதெல்லை 18-22 எனத் திருத்தப்படுகிறது. பாலியல் நடுநிலையைப் பேணுவதும் இச்சட்டத்திருத்தத்தின் நோக்கமாகும். மேலும் தண்டனைச் சட்டக்கோவையில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தின் ஊடாக பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கெதிராக மரண தண்டனை வழங்குவதற்குப் பதிலாக தடுத்து வைத்த…

  24. 215ஆவது ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேச நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய சகல பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேசத் தொடரின் 215ஆவது தர்ம உபதேச நிகழ்வு (இன்று) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. புத்தபெருமானுக்கு மலர் பூஜை நிகழ்த்தியதை தொடர்ந்து தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்த பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கொழும்பு கோட்டை ஸ்ரீ சம்புத்தாலோக விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய இத்ததெமலியே சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ சந்திரஜோதி இந்தசர தேரரை பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் வரவேற்றார். பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் மன அமைதியை உலக மக்கள் அனைவரு…

  25. யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம.ஏ சுமந்திரன் குற்றச்சாட்டியுள்ளார். இன்றைய தினம் பருத்தித்துறை மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நீண்ட நாட்களாக சட்டவிரோதமான மணல் கொள்ளை இந்த பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக நான் ஒரு முறை எனது வாகனத்தில் வரும் போது கடத்தல்காரர்கள் என்னை கண்டதும் தமது வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றதை நான் நேரடியாக கண்டேன். அதேபோல் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.