ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143618 topics in this forum
-
புலம் பெயர்ந்தவர்கள் பிரச்சனை வேற, இந்தாளுடைய பிரச்சனை வேற...☹️ மூலம்; ahalnews.com மன்னார் ஆயர் இல்லத்தை விசாரணை செய்க – மறவன்புலவு சச்சி September 22, 2021 7:21 pm No Comments Share on facebook Share on twitter Share on linkedin Share on whatsapp [9:12 a.m., 2021-09-22] : யாழ்ப்பாணம், செப்.22 மன்னார் மாவட்டத்தில் போருக்குப் பின்னர் இலக்கு வைத்து நடாத்தப்படும் ஆயர் இல்ல அராஜகங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கர்தின…
-
- 1 reply
- 734 views
-
-
வன்முறைச் செயல்கள்... இலங்கையில் மீண்டும் நடக்காது, என்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது – ஜனாதிபதி! வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தொற்றுப் பரவலின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களைப் பறிமாறிக்கொள்ளவும் சிறந்த முறையில் நாடுகளை மீளக் கட்டியெழுப்பவும், பிராந்திய தகவல் மையமொன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்பு, உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு வழங்க, இலங்கை எதிர்பார்க்கின்றது. வைரஸ் தொற்றுக்கு எதிரான தட…
-
- 4 replies
- 649 views
- 1 follower
-
-
இனப்படுகொலையாளி கோட்டா’ அதிர்ந்தது நியூயோர்க் அமெரிக்காவில் இனப்படுகொலையாளி கோட்டாபய ராஜபக்ச என தெரிவித்து அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களே நியூயோர்க் நகரில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றியிருந்தார். இந்த நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டறியுமாறும், அரசியல் எதிரிகளை அடக்குவதை உடனடியாக நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டகார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …
-
- 0 replies
- 495 views
-
-
மின் உற்பத்தி நிலையத்தின்... ஒரு பகுதியை, அமெரிக்காவிற்கு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் – விசேட சந்திப்பு இன்று! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 4.30 மணியளவில் இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. கெரவலப்பிட்டி மின்நிலையத்தில் எரிவாயு குழாய் அமைப்பு மற்றும் களஞ்சியத்தொகுதி நிர்மாணம் என்பன அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய கருத்துக்களை மையப்படுத்தி இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. எவ்வாறிருப்பினும் கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய…
-
- 0 replies
- 428 views
-
-
காணாமற் போனவர்கள் தொடர்பாக... எதனையும் மறைப்பதற்கில்லை – அரசாங்கம் காணாமற்போனவர்கள் தொடர்பாக எதனையும் மறைப்பதற்கில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிணைந்த செயற்பாடுகளே அவசியம் என்றும் இலங்கையர் என்ற ரீதியில் இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே இறுதியான பதிலாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது, மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனவர்களுக்கு விரைவாக மரணச்சான்றிதல் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்த…
-
- 0 replies
- 331 views
-
-
100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகக் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி! சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து தடுப்பூசிகளைப் பெறுவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகக் கடனை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த மேலதிக நிதியிடல் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொவிட் – 19 மூலோபாய தயார்படுத்தல்கள் மற்றும் பதிலளிப்புகள் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் கொவிட் 19 அவசர பதிலளிப்புக்கள் மற்றும் சுகாதாரத்துறையை தயார்படுத்தல் கருத்திட்டத்திற்காக இந்தக் கடனைப் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மேலதிக தொகை, 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வத…
-
- 0 replies
- 220 views
-
-
ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன – உண்மையினை வெளிப்படுத்தினார் சாணக்கியன்! ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு முக்கி தகவல்களை வெளியிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் பார்த்தோம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப…
-
- 0 replies
- 592 views
-
-
நுகர்வோர்... பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஓகஸ்ட் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதற்கமைய, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு உணவை விற்பனை செய்வார்களாயின், அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒ…
-
- 0 replies
- 234 views
-
-
"டெல்டா" உச்சம் குறைந்துள்ள போதிலும், மற்றொரு உச்சம் ஏற்பட 60 வீத வாய்ப்பு – சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸின் டெல்டா பிறழ்வின் உச்சம் இப்போது இலங்கையில் முடிந்துவிட்டபோதும் எதிர்வரும் வாரங்களில் மற்றொரு உச்சம் ஏற்பட இன்னும் 60 வீத வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, மற்றொரு பெரிய உச்சத்தைத் தடுக்க, மக்கள் எப்போதும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டுமென சமூக மருத்துவப் பேராசிரியர், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனத் அகம்பொடி ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொது நடமாட்டம் கடுமையாக குறைந்துள்ளதால், நாட்டில் இறப்புகள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து…
-
- 0 replies
- 211 views
-
-
நான் வஹாப்வாதி அல்ல. இஸ்லாமில் வஹாப் வாதம் இல்லை. முஸ்லிம் மதத் தலைவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கும் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என வினவிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நபி அவர்கள் எனக் கூறியமையால் உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம்களின் மனம் புண்பட்டுள்ளது என்றார். நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்தப்போகும் குழுவும் தனக்குத் தெரியும் எனவும், எந்தநேரத்திலும் தாக்குதலை மேற்கொள்ள …
-
- 3 replies
- 510 views
-
-
கோவிட் -19 வைரசால் பாதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ராஜா வைத்தியர் எலியந்த வைட் சிறிது நேரத்திற்கு முன்பு காலமானார். சில வாரங்களுக்கு முன்பு வைரஸால் பாதிக்கப்பட்டதால், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைட் சிகிச்சை பெற்று வந்தார். அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மருத்துவர் ஆவர் . மறைந்த ஒயிட், சமீபத்தில் இலங்கையில் இருந்து கோவிட் -19 ஐ ஒழிக்கும் சடங்கின் ஒரு பகுதியாக, ஆறுகளில் கலவை நிரப்பப்பட்ட பானைகளை எறிந்தார், இவரை பின்பற்றி முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் சடங்கின் ஒரு பகுதியாக இதைச் செய்தனர். - Dailymirror.lk
-
- 1 reply
- 408 views
-
-
கொவிட் தொற்றினால் நாடு மாத்திரமல்ல எமது பொருளாதாரமும் முடங்கிப்போயுள்ளது. சர்வதேச ஒத்துழைப்புகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற வேண்டும் என ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் ஆற்றிய உரையின் வடிவம் வருமாறு, தலைவர் அவர்களே, செயலாளர் நாயகம் அவர்களே, அரச தலைவர்களே, கௌரவத்துக்குரிய உறுப்பினர்களே, அனைவருக்கும் வணக்கம்..! இன்று நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளக் கிடைத்தமையிட்டு, நான் பெருமையடைகிறேன். 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு…
-
- 0 replies
- 344 views
-
-
(இராஜதுரை ஹஷான்) மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடும் கருத்துக்கள் வெறுக்கத்தக்கவை என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். எம்பிலிபிட்டிய பகுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மதுபான பாவனைக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய அநகாரிக தர்மபாலவை அவமதிக்கும் வகையில் அவரது பிறந்த நாளன்று மதுபான சாலைகளை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டு மக்கள் கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் பெரும் பாதிப்பை எதிர்க் கொண்டுள்ள நிலையில், மதுபானசாலைகளை அரசாங்கம் திறக்க தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறான செ…
-
- 1 reply
- 319 views
-
-
சந்திரகாந்தன் எம்.பி ( பிள்ளையான் ) குழுவினரால் கொலை அச்சுறுத்தல் ! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் முகநூல் குழுவினர் ஊடாக தமக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது குறித்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமது தொழிற்சங்கத்திற்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன் முகநூல் ஊடாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில…
-
- 0 replies
- 334 views
-
-
அரசாங்கத்தின் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன் ரூபாய்களால் அதிகரிக்க தீர்மானம்! அரசாங்கத்தின் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன் ரூபாய்களால் அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாய்களாக திருத்துவதற்கும், அதற்காக குறித்த ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காகவும் நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது 2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்கான கடன் எல்லையாக 2,997 பில்லியன் ரூபாய்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொவிட் 19 பெருந்தொற்று க…
-
- 0 replies
- 295 views
-
-
தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகள் கேவலமான முறையில் சோதனை செய்யப்பட்டன! September 22, 2021 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு 540 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 12 தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகள் மிகவும் கேவலமான முறையில் சோதனை செய்யப்பட்டதாகவும், இதுவொரு பாலியல் சித்திரவதை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21.09.21) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அனுராதபுர சிறைச்சாலைக்குள் சென்று தமிழ் அரசியல் கைதிகளிடம் வெறியாட்டம் ஒன்றை ஆ…
-
- 0 replies
- 810 views
-
-
கூட்டமைப்பு வல்வெட்டித்துறை நகரசபை ஆட்சியை இழந்தது : September 22, 2021 வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா ஒரு மேலதிக வாக்கினால் அவர் வெற்றிபெற்றார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் சதீஸ் 8 வாக்குகளையும் சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா 9 வாக்குகளையும் பெற்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பான உப தவிசாளர், சுயேட்சைக் குழுவுக்கு சார்பாக வாக்களித்தார். வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் ஆரம்பம…
-
- 0 replies
- 383 views
-
-
புலிகள் இயக்கத்தினரை மாத்திரம் தேடிச் சென்று அழிப்பதை விட்டு தமிழர்களை கொல்ல, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இடமளித்ததாக தேவாலஹிந்த அஜித தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 13 இராணுவ வீரர்களை கொலை செய்தார்கள். ஆனால் இராணுவ வீரர்களை கொலை செய்த அந்த இயக்கத்தினரை மாத்திரம் தேடிச் சென்று அழிப்பதை விட்டு அன்று அனைத்து பொலிஸாருக்கும் விடுமுறை கொடுத்து வேலை செய்ய விடாமல் ஜே.ஆர்.ஜெயவர்தன தடுத்தார். பின்னர் அனைத்து தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் உடைத்து அவர்களின் பொருட்களை திருடி, அவர்களுடைய அனைத்து சொத்துக்களுக்கும் தீ வைத்து கொளுத்தி, தமிழர்களை கொல்ல இடமளித்தார். இது மிக…
-
- 3 replies
- 337 views
-
-
மன்னாரின் மூத்த ஊடகவியலாளர்... பீ.ஏ.அந்தோனி மார்க், கொரோனா தொற்றால் காலமானார்! மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது 80ஆவது வயதில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் இரவு உயிரிழந்தார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூத்த ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். குரலற்ற மக்களின் குரலாகவும் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கவும், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்ததோடு…
-
- 3 replies
- 343 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில்... ஜனாதிபதி இன்று உரை! ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைவமையில் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமானது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்டு குறித்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் இடம்பெறுகின்றது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில், இலங்கை நாட்டையும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் உ…
-
- 0 replies
- 189 views
-
-
அரசியல் கைதிகளுக்கு... கொலை அச்சுறுத்தல், விடுத்த சம்பவம் – நாடாளுமன்றில் விசேட பிரேரணை அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சரால் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக விசேட பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) முன்வைக்கவுள்ளார். கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இரண்டு கைதிகளை மண்டியிடச் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1240551
-
- 0 replies
- 199 views
-
-
நாடளாவிய ரீதியில்... ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு! நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம் இன்று (புதன்கிழமை) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது. ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் தெம்பிட்டியே சுதகானந்த தேரர் தெரிவித்துள்ளார். கொரோனா விசேட கொடுப்பனவான 7 ஆயிரத்து 500 ரூபாயை மீள வழங்க வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2021/1240560
-
- 0 replies
- 183 views
-
-
ரோம் சாசனம்- சுமந்திரனிடம் தமிழர் தாயக சங்கம் முக்கிய கோரிக்கை காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர OMP இடத்தில் அல்ல என்று வவுனியாவில் கடந்த 1678 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இதன்போது அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழர்களையும் விசாரிக்க விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். நீதி பெறுவதற்கான சிறந்த வழி அவர்கள் அனைவரையும் விசாரிப்பது என்றும் கூறுகிறார். அனைத்து தரப்பினரையும் விசாரணைக்…
-
- 0 replies
- 159 views
-
-
நள்ளிரவில் கைச்சாத்தான ஒப்பந்தம்: உடனடியாக பிரதமர், ஜனாதிபதியை சந்திக்க விமல், வாசு உள்ளிட்டவர்கள் திட்டம் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர்கள் தயாசிறி ஜெயசேகர, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் நேற்று (திங்கட்கிழமை)நடத்திய சந்திப்பில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். குறித்த கூட்டத்தின்போது கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சித் தலைவர்கள் என்…
-
- 0 replies
- 259 views
-
-
இலங்கை மக்களுக்கு... பைசரை, மூன்றாவது தடுப்பூசியாக வழங்க நடவடிக்கை! இலங்கை மக்களுக்கான மூன்றாவது தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை முற்பதிவு செய்துள்ளதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் அல்லது நவம்பர் மாத ஆரம்பத்திலிருந்து நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2021/1240428
-
- 0 replies
- 225 views
-