ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர்-ஜெனிவா உட்பட பல விடயங்கள் ஆராய்வு 160 Views இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், சாரா ஹல்டன் (Sarah Hulton) அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று, இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு பற்றி கருத்துத் தெரிவித்தார். வணிகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்துவரும் முயற்சிக்கு, பிரித்தானிய அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாகவும்…
-
- 0 replies
- 331 views
-
-
பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் இன்று (04) சிலர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் குறித்த பகுதி பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த 14 பேரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அவர்களில் சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். -எம்.றொசாந்த் Tamilmirror Online || யாழில் தொழுகையில் ஈடுபட்டவர்க…
-
- 0 replies
- 316 views
-
-
கடலில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க, தீ விபத்துக்கு உள்ளான கப்பலின் உரிமையாளர்கள் இணக்கம் கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர்கள் நாட்டின் கடலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் கப்பலில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு பெற தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என வணிகக் கப்பல் செயலகத்தின் இயக்குநர் ஜெனரல் அஜித் செனவிரத்ன தெரிவித்தார். இலங்கை அதிகாரிகள் தீயை அணைக்க இடைவிடாமல் போராடினர் என்றும் அவர் குறிப்பிட்டார். மொத்த இழப்பீடு பெற சட்டமா அதிபர் மூலம் கோரிக்கைகள் வைக்கப்படும் என்று…
-
- 3 replies
- 415 views
-
-
யாழில்... தொழுகையில் ஈடுபட்ட 14 பேர், தனிமைப்படுத்தலில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது, வீதியில் பயணிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் 14 பேர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த விடயம் குறித்து அறிந்த யாழ்ப்பாண பொலிசார் மற்றும் குறித்த பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள், தொழுகையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர். அதன்படி, சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும…
-
- 0 replies
- 248 views
-
-
யாழில்... தொழுகையில் ஈடுபட்ட 14 பேர், தனிமைப்படுத்தலில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது, வீதியில் பயணிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் 14 பேர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த விடயம் குறித்து அறிந்த யாழ்ப்பாண பொலிசார் மற்றும் குறித்த பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள், தொழுகையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர். அதன்படி, சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும…
-
- 0 replies
- 203 views
-
-
பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இலங்கை June 4, 2021 கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது. எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட் – டொபாகோ ஆகிய 07 நாடுகளே இவ்வாறு சிவப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் பிரித்தானியப் பிரஜைகள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2021/161886/
-
- 0 replies
- 253 views
-
-
இலங்கை உள்ளிட்ட... சில நாடுகளுடன், 25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ள அமெரிக்கா திட்டம் 25 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இலங்கையையும் தெரிவு செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளுக்கான கோரிக்கைகளை அமெரிக்கா பெற்றுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அமெரிக்கா தனது நன்கொடை தடுப்பூசி அளவுகளில் கால் பகுதியை நேரடியாக தேவைப்படும் நாடுகள், அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்காவிடம் உதவியைக் கோரிய ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளது. அதற்கமைய இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைதீவு, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்…
-
- 0 replies
- 168 views
-
-
அரசாங்கத்தின் ஆதரவாளர்களை பாதுகாத்துக்கொண்டிருக்காது, சுகாதார துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை இன்று முன்னெடுத்த நிலையில், அரச தாதியர் சங்கம் உட்பட ஆறு சுகாதார அமைப்புகள் இணைந்து, மட்டக்களப்புக் களுவாஞ்சிகுடியிலும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் போராட்டத்துக்கு ஆதரவை வழங்கியதோடு,“ சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் தங்களது பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளினை முன்வைத்தே பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.“ என்றார். இவர்களின் இந்த கோரிக்கைகளுக்கு அ…
-
- 0 replies
- 304 views
-
-
-விஜயரத்தினம் சரவணன், சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள இந்தக் காலப்பகுதியில் பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி வளச்சுறண்டல்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய வருகை என்பன இடம்பெறுவதாக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இவ்வாறு பயணக்காட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும,; அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், தற்போதுள்ள கொவிட் -19 அசாதாரண நிலைகாரணமாக நாட்டின் சகல பகுதிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றார். 'இந்நிலையில் இந்தப் பயணக் கட்டுப்பாடுகள…
-
- 0 replies
- 274 views
-
-
கடலுணவு உண்பது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் ஏதும் இன்றி, உண்மையைப் பொய்யாகவும் - பொய்யை உண்மையாகவும் புரட்டி புரட்டி போடுகின்ற தொழில் திறனின் அடிப்படையில் பொறுப்பற்ற கருத்தினை சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் "கடலுணவுகளை உட்கொள்தற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை" என்ற கடற்றொழில் அமைச்சரின் கருத்து பொறுப்பற்றது" என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனினால் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக இன்று (03.06.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறித்தவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கப்பல…
-
- 0 replies
- 184 views
-
-
இராஜாங்க அமைச்சராக நாமல் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், அவர் இன்று (வியாழக்கிழமை ) பதவியேற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் நாமல் ராஜபக்ஷ அமைச்சரவை அந்தஸ்துள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இராஜாங்க அமைச்சராக நாமல் – Athavan News
-
- 1 reply
- 391 views
-
-
மட்டக்களப்பு- யாழில் சுகாதார ஊழியர்கள் புறக்கணிப்பு போராட்டம் 13 Views மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்று சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று(வியாழக்கிழமை) வைத்தியசாலைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து நாடளாவிய ரீதியில் இந்த பணிபுறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று காலை 7 மணி தொடக்கம் 12 மணிவரை தமது கடமைகளில் இருந்து வெளியேறி 15 அம்ச கோரிக்கையினை முன்வைத்து வைத்தியசாலை நிர்வாக பணிமனைக்கு முன்னால் ஒன்ற…
-
- 0 replies
- 250 views
-
-
கொழும்பிற்குள் நுழைய இன்றும் வாகனங்கள் நீண்ட வரிசைகளாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இன்றைய தினத்திலும் கொழும்பு நகரிற்குள் நுழைவதற்கு வாகனங்கள் நீண்ட வரிசைகளாக இருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொட பகுதியில் இன்று காலை நீண்ட வரிசையாக வாகனங்கள் இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். நீர்கொழும்பு - கொழும்பு வீதியில் இருந்த நீண்ட வரிசைகளை வான்வழி காட்சிகள் ஊடாக அவதானிக்க கூடியதாக இருந்தது. வத்தளையில் இருந்து பேலியகொட வரையில் இவ்வாறு நீண்ட வரிசை இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பிற்குள் நுழைய இன்றும் வாகனங்கள் நீண்ட வரிசைகளாக (adaderana.lk)
-
- 0 replies
- 290 views
-
-
அமெரிக்க காங்கிரஸில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உள்ளனர் – இலங்கை வெளிவிவகார அமைச்சு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அமெரிக்க காங்கிரஸ் சபையில் உள்ளதாக இலங்கை குற்றம்சாட்டியுள்ளது.அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டெபோரா கே.ரோஸ் உள்ளிட்ட நான்கு உறுப்பினர்கள் அடங்களாக அந்த நாட்டு காங்கிரஸ் சபையில் கடந்த 18ஆம் திகதி இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள H.RES.413 யோசனைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.மே 18 ம் திகதி சபையின் வெளிவிவகார குழுவின் பரிசீலனைக்கு அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தீர்மானத்தில் ஆதாரமற்ற அப்பட்டமான பொய்களை அடிப்பட…
-
- 1 reply
- 284 views
-
-
முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளர் கைது! முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளரான முன்னாள் போராளி ஒருவரை இன்று பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். கட்சியின் பொருளாளராக செயற்பட்டு வந்த நாகலிங்கம் பிரதீபன் என்பவரை மட்பாண்ட வீதி போரதீவு பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். குறித்த நபரை தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிசார் இதில் கை…
-
- 2 replies
- 429 views
-
-
ஐம்பதாயிரம் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா? June 3, 2021 வடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கோவிட் தடுப்பூசிகளும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வன்னி மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது எதற்காக? என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (3) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,, ஐம்பதாயிரம் கோவிட் தடுப்பூசிகளும் அரசாங்கத்தின் அறிவிப்பு ஆரம்பத்தில் வட மாகாண மக்களுக்கென தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு செலுத்தி முடிக்கப்பட்டது. யாழ் மாவட்ட மக்களிடம் கொவிட் தொற்…
-
- 1 reply
- 248 views
-
-
அஸ்ட்ராசெனிகா என்ற பெயரில் போலியான தடுப்பூசிகள் வழங்கப்படலாம்..!: விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க (ஆர்.யசி) ஓக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளாது, வியாபாரிகளிடம் அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். வியாபாரிகளிடம் பெற்றுக்கொள்ளும் தடுப்பூசிகளில் போலியான தடுப்பூசிகளை கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தொற்றுநோய்கள் குறித்த நிபுணரும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்னாள் ஆலோசகருமான விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார். நாட்டில் ஆறு இலட்சம் பேருக்கு ஓக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்க முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ளதையடுத்து, தடுப்பூசிகளை…
-
- 0 replies
- 166 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னாள் போராளி உயிரிழப்பு! AdminJune 1, 2021 கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினரும் முன்னாள் போராளியுமான ஜெயக்காந்தன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னாள் போராளியான ஜெயக்காந்தன் போரின் போது முள்ளந் தண்டுவடம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார். இருந்தபோதிலும் சமூகச் செயற்பாட்டாளராக தீவிரமாக செயற்பட்டுவந்திருந்தார். தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உயிரிழை என்ற அமைப்பின் முன்னாள் தலைவராகவும் அவர் செயற்பட்டுவந்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பிரதேச சபை உறுப்பினராகவும் அவர் …
-
- 3 replies
- 1k views
-
-
தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன தீக்கிரையான எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் இருந்து 22 மைல் தொலைவில் இக்கப்பலின் பின் பகுதி மோதியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். UPDATE – மூழ்கும் நிலையில் தீக்கிரையான கப்பல்..! எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலில் நேற்று முதல் நீர் கசிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் கப்பல் இதுவரையில் 50 சதவீதம் கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் ச…
-
- 7 replies
- 863 views
-
-
புதுக்குடியிருப்பில் குண்டு வெடிப்பு; படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் 3 Views முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் 41 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:- தனது காணியில் இருக்கின்ற பனை மரத்துக்கு அருகாமையில் குப்பைகளைக் கூட்டி வைத்து நெருப்பு பற்றவைத்த வேளையில் பாரிய சத்தத்துடன் குண்டொன்று வெடித்தது. இதன்போது குறித்த பெண் படுகாயமடைந்தார். அவர் உடனே புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட…
-
- 0 replies
- 160 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் அரசியல் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சூழ்ச்சி என முன்னாள் சட்டமாதிபர் தப்புல டி லிவேரா குறிப்பிட்ட கருத்தின் உண்மை தன்மையினை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றவாளிகள் என பெயர் குறிப்பிடப்பட்டவர்களை அரசாங்கம் அரசியல் நோக்கிற்காக பாதுகாக்கிறது. நல்லாட்சி, சுபீடசமான எதிர்காலம் ஆகியவற்றினால் ஏமாற்றமடைந்தது மாத்திரமே மிகுதயாகியுள்ளது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணையினை துரிதப்படுத்தி குற்றவாளிகளை சட்டத்தின…
-
- 1 reply
- 321 views
-
-
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடானது, தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமென இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை இப்பயணக்கட்டுபாடு நீடிக்கப்பட்டுள்ளதென, கொரோனா ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Tamilmirror Online || பயணக் கட்டுபாடு திடீரென நீடிப்பு
-
- 0 replies
- 238 views
-
-
யாழ் மாவட்ட பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதலாம் கட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்தார் அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் எனவே ஏற்கனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளைய தினம் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த பகுதி மக்களுக்கான தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட தடுப்பூசி வந்தவுடன் குறித்த நிகழ்ச்சி நிரலின் படி தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். எனவே பொதுமக்கள் இது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை அடுத்தகட…
-
- 0 replies
- 279 views
-
-
(ஆர்.யசி) கிழக்கு மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகளை பங்கிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிழக்கு மாகாணத்தில் ஒரு தடுப்பூசியேனும் ஏற்றுவதற்கான நடவடிக்கை இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சுகாதார தரப்பினர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசிகளை பங்கிடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார். கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடளாவிய ரீதியில் தடுப்பூசிகள் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் பாரிய ப…
-
- 0 replies
- 181 views
-
-
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக நிருவாக அலகிற்குட்பட்ட வாழைச்சேனை பிரிவின் இறப்பு, பிறப்பு மற்றும் ஏறாவூர் கோறளைப்பற்று விவாக (பொது) பதிவாளர் பிரிவில் பதிவு செய்வதற்கு பதிவாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யும் வகையில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாழைச்சேனை பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற பதிவு செய்யும் நடவடிக்கையில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்ஜித், மேலதிக மாவட்ட பதிவாளர் இ.சசிகு…
-
- 0 replies
- 441 views
-