ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தும் அரசு – #P2P இயக்கம் கண்டனம் 32 Views சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதையும் கைது செய்வதையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என பொத்துவில் தொடக்கம் பொலி கண்டி வரை மக்கள் பேரெழிச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (23.05.2021) மனித உரிமைகள் சிவில் சமூக செயற்பாட்டாளரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவருமான திரு.சபாரட்ணம் சிவயோகநாதன் (சீலன்) அவர்களின் திராய்மடு மட்டக்களப்பில…
-
- 0 replies
- 266 views
-
-
யாழ்ப்பாணத்தில்... இடம்பெற்ற, விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு யாழ்ப்பாணம்- ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இராணுவ சிப்பாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவதத்தில் வெலிமடையைச் சேர்ந்த குணசேகர (வயது 33) என்ற இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார். யாழ்பாணத்தில் பணிப்புரிந்து வந்த அவர், கடந்த 19 ஆம் திகதி விடுமுறையில் பேருந்து ஊடாக தனது வீட்டை நோக்கி பயணித்தபோது, உரும்பிராய் பகுதியில் திடீரென வீதியின் குறுக்கே ஓடிய நாயினை அவதானித்த பேருந்து சாரதி உடனடியாக பிரேக் அடித்துள்ளார். இதன்போது பேருந்தில் இருந்த சிப்பாய், நிலைதடுமாறி வீதியில் விழுந்து படுகாயமடைந்த…
-
- 1 reply
- 335 views
-
-
வடகிழக்கில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் – பாலநாதன் சதீஸ் 97 Views வாழ்விடங்களையும், வழிபாட்டிடங்களையும் இழந்து தமிழ் மக்கள் மீண்டும் நிர்கதியாய் நிற்கவேண்டிய நிலை இலங்கையில் அதிக தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்டபடி இலங்கை அரசு, பல்வேறு அணுகுமுறைகளை கையாண்டு, தமிழ் மக்களின் காணிகளையும், வழிபாட்டு தலங்களையும் அபகரித்து வருகின்றது. யுத்தம் முடிவடைந்து பன்னிரு ஆண்டுகளை கடந்த நிலையிலும், இன்றும் இலங்கை நாட்டில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாதவாறு வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்களின் சொந்த நிலங்களையும், வழிபாட்டுத் தலங்களையும்…
-
- 1 reply
- 532 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் பேச்சு – தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் அறிக்கை 21 Views தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பில் கட்சி, கொள்கை பேதம் கடந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத் தரப்புடன் பேசியுள்ளமை எமக்கு ஒரு சிற்றாறுதலைத் தருகின்றது என தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் அயலுறவுத்துறை அமைச்சரும் சிரேஸ்ட அரசியல் வாதியுமான தின…
-
- 0 replies
- 513 views
-
-
சிவில் சமூக செயற்பாட்டாளர்களை குறிவைத்துள்ள அரசு 20 Views பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத்தலைவர் சிவயோகநாதனிடம் (சீலன்) பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று 3 மணி நேர தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர். சிவில் சமூக செயற்பாட்டாளரான இவரிடம் புலிகள் மீளுருவாக்கம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்ததை அவரின் குடும்பத்தினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 11 மணியளவில் அவரது வீட்டுக்கு, தம்மை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் என அடையாளப்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அவரது வரலாறு முழுவது கேட்டறிந்த அவர்கள் புலிகள் மீளுருவாக்கம் தொடர்பாக க…
-
- 0 replies
- 360 views
-
-
இலங்கையின்... புதிய சட்டமா அதிபராக தமிழர்! இலங்கையின் புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினத்தை நியமிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் முன்மொழிவை ஏற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்த ஒப்புதலை அளித்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019, மே 10இல் சட்டமா அதிபராகப் பொறுப்பேற்ற ஜெனரல் தப்புல டி லிவேராவின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், பதில் மன்றாடியார் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் சட்டமா அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சோசலிசக் குடியரசாக அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் இலங்கையின் சட்டமா அதிபரா…
-
- 21 replies
- 2.1k views
- 1 follower
-
-
தொற்றுநோயியல் பிரிவில்... முடிவெடுப்பது, மூன்று வைத்தியர்கள் மட்டுமே! கொரோனா தொற்று பரவல் குறித்து சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவுக்கு உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்ட 10 வைத்தியர்களின் மூவர் மட்டுமே முடிவுகளை எடுத்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் கொரோனா தொற்று தொடர்பான உத்தியோகப்பூர்வ தரவுகளை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட வேண்டும் என்றும் ஆனால் அவர்கள் இப்போது வரை தங்கள் வேலையைச் செய்வதாகத் தெரியவில்லை என்றும் அச்சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார். கொரோனா தொற்று தொடர்பான அனைத்து முடிவுகளும் அவர்களால் எடுக்கப்பட வேண்டும் என அந்த மூன்று வைத்தியர்களிடமும் ஒரு அணுகுமுறை காணப்படுவதாகவும் அவர்கள் மற்ற மரு…
-
- 0 replies
- 392 views
-
-
துறைமுகநகர வாக்கெடுப்பில் சந்தேகம் – பொதுஜன பெரமுனவின் முறைப்பாடு குறித்து ஆராய்வு! கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு குறித்து முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்களை கணக்கிடும் இலத்திரனியல் அமைப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரிகளால் நேற்றைய தினம் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்ற…
-
- 0 replies
- 300 views
-
-
கொரோனா வைத்தியசாலைக்கு சென்று உணவின் தரம் குறித்து ஆராய்ந்த சாணக்கியன்! மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) திடீர் விஜயம் செய்திருந்தார். கொரோனா வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களின் பிரச்சனை தொடர்பாகவும் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் அவர் இதன்போது ஆராய்ந்துள்ளார். குறித்த வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பலரும், இரா.சாணக்கியனின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். இந்தநிலையில் குறித்த வைத்தியசாலைக்கு உணவினை விநியோ…
-
- 0 replies
- 302 views
-
-
இரண்டு வாரங்களாவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் – பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் கோரிக்கை இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் கட்டுப்படுத்த குறைந்த பட்சம் இரண்டு வாரங்களாவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திய போதும் தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த அது போதாது என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண ஊடகங்களிடம் தெரிவித்தார். நாம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அனைவரும் சிந்தித்துச் செயற்படுவதுடன், நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யும்படியும் அவர…
-
- 0 replies
- 253 views
-
-
சுகாதார செயலாளரின் முன்னெச்சரிக்கை கடிதம் – சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் 8 Views சுகாதாரத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்குச் சுகாதார செயலாளரினால் வெளியிடப்பட்ட முன்னெச்சரிக்கை கடிதமானது தொற்றுநோய் தொடர்பான உண்மைத் தகவல்களை மறைக்கும் முயற்சியாகும் என சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெகுசன ஊடகங்களின் செய்தி வெளியிடுதல் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு தாக்கத்தை விளைவிக்கும் ஸ்தாபன விதிக் கோவைகளை மேற்கோள் காட்டி, அவற்றை புறக்கணிக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரியப்படுத்தும் சுகாதாரத் துறை செயலாளரினால் ஒப்…
-
- 0 replies
- 334 views
-
-
கொரோனா தடுப்பு மருந்து – தமிழர் தாயகப் பகுதிகள் அரசாங்கத்தால் புறக்கணிப்பு 7 Views இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் தடுப்பு மருந்துகள் வழங்கல் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இலங்கையில் இது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161,242 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,133ஆக உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக இலங்கையில் கொரோனாவுக்கான தடுப்பு ஊசி ஏற்றும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வடகிழக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கான எந்த…
-
- 0 replies
- 422 views
-
-
மரண சடங்கில் கலந்துகொண்டவருக்கு கொரோனா- குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தலில்! யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொண்ட ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் பருத்தித்துறையில் நடைபெற்ற மரண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர்,அவருடன் தொடர்பினை பேணியவர்களை இனங்கண்ட சுகாதார பிரிவினர், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினர். அதாவது மரணமானவரின் குடும்ப அங்கத்தினர், மரண சடங்கு கிரிகைகள் செய்த குருக்கள், அவருடைய உதவியாளர் உள்ளிட்ட 8 பேரை தனிமைப்படுத்தலுக்க…
-
- 1 reply
- 493 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கைது செய்யப்பட்ட 10 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு 12 Views மட்டக்களப்பு கல்குடா காவல்துறை பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு கடந்த 18 ம் திகதி சுடர் ஏற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 18 ம் திகதி நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா காவல்துறை பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்திய அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த 10 பேரை பயங்கரவாத …
-
- 0 replies
- 437 views
-
-
மட்டக்களப்பு தொழிலதிபர்களின் மனிதாபிமானத்தின் வெளிப்பாட்டில் 2 மில்லின் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைப்பு! By கிருசாயிதன் (சிவம்)மனிதாபிமானப் பணியை வெளிப்படுத்தும் நோக்கோடு கொவிட்-19 தாக்கத்தைக் கண்டறிவதற்கான மருத்துவ உபகரணங்கள் மட்டக்களப்பு தொழிலதிபர்களினால் போதனா வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் (21) மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.கொரோனா வைரசின் 3 ஆவது அலை வீரியம் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் மிகவும் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக தொற்றுக்குள்ளாவர்கள் மற்றும் மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் தாக்கத்திற்குள்ளானவர்களைக் கண்டறிந்து சிகிட்சையளிப்பதற்காக சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்க…
-
- 0 replies
- 255 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை அடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.நேற்று ஜலனி பிரேமதாஸவின் தொற்று உறுதியாகியதாகவும், தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, தாமும் பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்டபோதே, தனக்கும் தொற்று உறுதியானதாக சற்றுமுன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.இதேவேளை இந்த நெருக்கடியான தருணத்தில் பொதுமக்களி…
-
- 0 replies
- 282 views
-
-
அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்க தயாரில்லை – சஜித்! நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்கும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நாம் இந்த நாட்டுக்கான அழிவின் பாதையாகவே நாம் பார்க்கிறோம். துறைமுக நகரத்திட்டமானது, எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சக்தி என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். எவ்வாறாயினும், …
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழை தவிர்த்து, சீனர் மொழி: சட்டத்தை மீறுகிறார்கள்- மனோ கணேசன் 14 Views தமிழை தவிர்த்து, சீனர் மொழி,சட்டத்தை மீறுகிறார்கள். சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்து சீன மொழி மட்டுமுள்ள பெயர் பலகைகளும் இலங்கையில் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் பல இடங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டு சீன மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயல் நடைபெற்று வருகின்றது. மேலும் சில பெயர் பலகைகளில் சிங்கள மொழியும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதை பல அரசியல் தலைவர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் எதிர்த்தும் வருகின்றனர். ஆனாலும் இந்த நிலை தொட…
-
- 1 reply
- 588 views
-
-
கொரோனா அதிகரிப்பு -முற்றாக முடங்கியது மட்டக்களப்பு 15 Views கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட பயணத்தடை காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளும் முடங்கியுள்ளன. பயணத்தடை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் இன்று காலை முதல் முழுமையாக முடங்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மருந்து விற்பனை நிலையங்களை தவிர அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் அரச தனியார் போக்குவரத்துகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகருதிய செயற்பாடுகள் மட்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுதுடன் ஏனைய அனைத்து சேவைகளும் முடங்கிய நிலையில் உள்ளன. க…
-
- 0 replies
- 496 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்பு – ஆவணப்படுத்துமாறு ஐ.நா. விடம் தமிழ்க் கட்சிகள் கோரிக்கை May 22, 2021 முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட சம்பவத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐநா மனித உரிமை ஆணையாளரிடம் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளார்கள். இது குறித்த கோரிக்கையை உள்ளடக்கிய கடிதம் ஒன்று 13 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் திகதி முள்ளிவாய்;க்கால் நினைவுத் தூபி உடைத்து சேதமாக்கப்பட்டது. இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த தூபி உடைக்கப்பட்டதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டனத்தை வெளியிட்டனர். இந்த நிலையில்,…
-
- 0 replies
- 312 views
-
-
தமிழினம் கலங்கி நிற்க, தென்னிலங்கையில் விழா கொண்டாடியதை இன்றும் மறக்க முடியவில்லை – பா.அரியநேத்திரன் May 22, 2021 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் தாயகத்திலும் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் நாதியற்று கலங்கி நின்ற போது, தென்னிலங்கையும், அதன் ஆதரவு சக்திகளும் பல பத்தாயிரம் மக்களை படுகொலை செய்து நிறைவுக்கு கொண்டு வந்த போரின் மூலம் ஒரு இனத்தை அடிமைப்படுத்தியதை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
-
- 0 replies
- 197 views
-
-
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணி வெளியிடும் தகவல்களே உத்தியோகபூர்வமான முடிவுகள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணி வெளியிடும் தகவல்களே அரசின் இறுதியானதும் உத்தியோகபூர்வமானதும் முடிவுகளாகும் என்று தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.நாள்தோறும் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்படும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் இறுதி முடிவை இரவு வேளைகளில் நாம் வெளியிடுகின்றோம். அந்த எண்ணிக்கையில் முரண்பாடு எதுவும் இல்லை. அதேவேளை, கொரோனாத் தடுப்புச் செயலணி மாவட்டம் தோறும் சேகரிக்கும் தரவுக…
-
- 0 replies
- 287 views
-
-
இலங்கையில்... பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் – அமெரிக்கா, கனடா வலியுறுத்து இலங்கையில் நீதிவழங்கலுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என அமெரிக்கா மற்றும் கனடா ஆகியன தனித்தனியாக வலியுறுத்தியுள்ளன. யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளமையை குறிக்கும் வகையில் ஐக்கிய அமெரிக்காவின் வெளிவிவகார குழு தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. அப்பதிவில், யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோரை நினைவு கூருவதுடன், அர்த்தமுள்ள நீதியும், பொறுப்புக்கூறலும் அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளன. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சட்டங்களில் இருந்து தப்பிக் கொள்கின்ற நிலைமை தொடர்கின்றமையானது, நல்லிணக்க முயற்சிகளை பெரிதும் பாதித்துள்ளது…
-
- 0 replies
- 399 views
-
-
இலங்கையை பொறுப்புக்கூறவைக்க சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தல் அமெரிக்க காங்கிரசில் கட்சிசார்பற்றமுறையில் தீர்மான மொன் று ச மர்ப்பிப்பு * ஐ. நா . வின் 3 பிரதான அமைப்புகளுடன் செயற்படுமாறு வாஷிங்டனிடம் கோரிக்கை —————- இலங்கையில் யுத்தம் முடிவுக்குகொண்டுவரப்பட்ட 12 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இலங்கையில் ‘பொறு ப்பு கூறலுக்கான செயற்பாட்டுத்திறன்வாய்ந்த சர்வதேசப்பொறிமுறை” மற்றும் ”நிரந்தரமான அரசியல் தீர்வு ”ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கும் கட்சிசார்பற்ற தீர் மானமொன்றை அமெரிக்க காங்கிரசில் பெண் உறுப்பினரான டெபோரா ரோஸ்அறிமுகப்படுத்தியுள்ளார். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்த முள்ளிவாய்க்…
-
- 1 reply
- 373 views
-
-
பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவதை காண முடிகின்றது பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் சற்று அதிகரித்து செல்லும் நிலையை காணப்படுகிறது. பொதுவாக வடமாகாணத்தில் அதிகரித்து செல்லும் போக்கு காணப்படுகிறது. ஆகவே நாம் அனைவரும் இச் சந்தர்ப்பத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். பொதுமக்களை இக்கொடிய தொற்றிலிருந்து பாதுகாக்கவே இவ் பயண கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் பொதுமக்கள் அலட்சியம…
-
- 1 reply
- 397 views
-