ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
வடக்கு மாகாண தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நாளை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த விசேட கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் ,போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மாவட்ட அரச அதிபர்கள் ,சுகாதாரப் பிரிவினர் , முப்படையினர் கலந்துகொள்ளவுள்ளார்கள் நாளைய கூட்டத்தில் வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் சில தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு கொரோனா நிலைமை தொடர்பில் ஆராய அவசர கூட்டம் | Virakesari.lk
-
- 0 replies
- 221 views
-
-
மட்டக்களப்பில் சுகாதார நடைமுறைகளைப் பேணாதவர்களுக்கு பரிசோதனை 15 Views மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளைப் பேணாதவர்களை அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு நகருக்குள் வருவோரும் செல்வோரும் சுகாதார நடை முறைகளைப் பேணும் வகையில் இறுக்கமான கட்டளைகளை சுகாதார பிரிவினர் வழங்கிவரும் நிலையில் அவற்றினை உதாசீனம் செய்யும் செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இதனை கருத்திக்கொண்டு முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் முககவசங்களை சரியான முறையாக அணியாதவர்கள் இன்று அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர். இன்றைய தினம் மட்டக்களப்பு நகரில் உள…
-
- 0 replies
- 238 views
-
-
நயினாதீவு விகாரையில் சித்திரை பௌர்ணமி விசேட பூஜை April 27, 2021 நயினாதீவு நாக விகாரையில் சித்திரை பௌர்ணமி விசேட பூஜையும் , மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. மத வழிபாட்டு இடங்களில் 50க்கும் குறைவானவர்களே அனுமதிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தென்னிலங்கையில் இருந்து வந்தவர்களும் குறித்த சித்திரை பௌர்ணமி விசேட பூஜை நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை கடந்த 24ஆம் திகதி நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட வித்தியாயத்திற்கு இரண்டு மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் அ .பத்திநாதன் , வடமாகாண கல்வி அமைச்சின் செய…
-
- 1 reply
- 434 views
-
-
ரிஷாத், ரியாஜ்ஜின் மனைவிமார் மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானது என குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடப்பட்டுள்ளது. ரிஷாத் பதியுதீனின் மனைவி, சிஹாப்தீன் ஆய்ஷா, ரியாஜ் பதியுதீனின் மனைவி பாத்திமா இஷ்ரத் ஆகியோர் சட்டத்தரணி ஆர்ணல்ட் பிரியந்தன் ஊடாக இந்த முறைப்பாட்டை நேற்று செவ்வாய்க்கிழமை முன்வைத்துள்ளனர். கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டில் வைத்து தனது கணவரான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி …
-
- 0 replies
- 232 views
-
-
சுமந்திரன் விலக வேண்டும்!! மணிவண்ணன் களமிறங்க வேண்டும் மணிவண்ணன் மேயராக வருவதற்கு தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய ஒருவர் முழுமையான ஆதரவு வழங்கியிருந்தமை அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, எம்.ஏ.சுமந்திரன் மணிவண்ணனை சந்தித்து மேயர் பதவிக்கு நிற்பதற்கு ஆலோசனை வழங்கியிருந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “களம்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். செவ்வியின் முழுமையான விடயம் காணொளியில், https://www.meenagam.com/சுமந்திரன்-…
-
- 0 replies
- 628 views
-
-
நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட குழு இன்று ஆராய்வு அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், இன்று பிற்பகல் 3 மணியளவில், விசேட குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டு சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இந்த கூட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுவில் இராஜாங்க அமைச்சர் சுசில் …
-
- 0 replies
- 260 views
-
-
கொழும்பு துறைமுக நகரத்திற்கு பிரபாகரனை விட அதிக அதிகாரங்கள் இருக்கும் – ரணில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கின் சில பகுதிகளை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒரு நாடு ஒரு சட்டம் என்ற நிலை மாற்றப்பட்டு இப்போது ஒரு நாட்டிற்கு இரண்டு சட்டங்கள் காணப்படுவதாகவும் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டினார். தற்போது சீன காலனியாக கொழும்பு துறைமுக நகரம் மாறினால் அது போரின் போது பிரப…
-
- 9 replies
- 721 views
-
-
Makkal Nanban Ansar -- இந்தியா செய்திகள் விநோதம் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வெகு வேகமாகப் பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, மருந்துகள், மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடுகளையடுத்து இந்தியாவில் வசிக்கும் பணக்கார குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தனி ஜெட்டில் பயணிப்பது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் அன்றாட கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் சற்றே குறைந்து ஆறுதல் அளித்திருக்கிறது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக அன்றாட கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தைத் தாண்டியிருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,23,144 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அன்றாட பாதிப்பு 3.5 லட்சத்திலிருந்து 3.25…
-
- 3 replies
- 533 views
-
-
சகல பாடசாலைகள், தனியார் வகுப்புகளுக்கு பூட்டு நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் மேல் மற்றும் வடமேல் மாகாண பாடசாலைகளை மாத்திரம் தற்காலிகமாக மூடுவதற்கு கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில், இன்று சகல பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, சகல தனியார் வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. Tamilmirror Online || சகல பாடசாலைகள், தனியார் வகுப்புகளுக்கு பூட்டு
-
- 2 replies
- 397 views
-
-
ஒரு நாடு, ஒரு சட்டம் என்றவர்கள் இப்போது இரு சட்டங்களுக்கு இணங்கியுள்ளனர்’ – ரணில் விக்கிரமசிங்க 20 Views கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், வட பகுதியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோது கொண்டிருந்த அதிகாரத்தைவிட அதிகளவு அதிகாரத்தை கொழும்பு துறைமுக நகரம் கொண்டிருக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, ஒரு நாடு ஒரு சட்டம் எனப் பேசிய அதே ஆட்கள் இப்போது ஒரு நாடு இரண்டு சட்டங்கள் என்பதற்கு இணங்கிவந்திருப்பதையிட்டு தான் ஆச்சரியமடைவதாகவும் …
-
- 0 replies
- 320 views
-
-
யாழ்.நகர் – புறநகர் பகுதிகளில் இராணுவத்தினர் கடமையில்! April 27, 2021 யாழ்.நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பிரதான சந்திகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். அதேவேளை கொக்குவில் சந்தியில் தகர கொட்டகை முகாம் ஒன்றினையும் அமைந்துள்ளனர். பிரதான சந்திகளில் நிற்கும் இராணுவத்தினர் முக கவசங்கங்களை உரிய முறையில் அணியாதவர்களை எச்சரித்து அவற்றை உரிய முறையில் அணிந்து செல்ல பணித்து வருகின்றனர். பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதனை உறுதிப்படுத்தும் முகமாகவும் மக்களின் பாதுகாப்புக்காகவுமே இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2021/160053/
-
- 1 reply
- 318 views
-
-
யாழ்ப்பாணத்தில் மக்களின் காணிகளை மீண்டும் கையகப்படுத்தும் முயற்சியில் இராணுவம் யாழ்ப்பாணம்- வலி.வடக்கிலுள்ள 10 குடும்பங்களின் காணிகளை, மீண்டும் கையகப்படுத்துவதற்கு இராணுவம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமான ச.சஜீவன் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ச.சஜீவன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 27 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை மத்தி கிராம சேவையாளர் பிரிவு, கடந்த 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது. இதன்போது விடுவிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை மீண்டும் கையகப்படுத்த இராணுவம் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதாவது காணிகளின் உரிமையாளர்கள், தங்களின் காணிகளை துப்ப…
-
- 1 reply
- 447 views
-
-
தேசியத்தலைவரையே ஏமாற்றியவருக்கு 30ஆயிரம் தமிழ்மக்களை ஏமாற்றுவதென்பது ஒருவிடயமேயல்ல ! கடந்த பொது தேர்தலில், எமது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் சுமார் 31000 வாக்குகளை பெற்று கொண்ட நபர் எமது மக்களை ஏமாற்றி விட்டார். அவர் தேசியத் தலைவரையே ஏமாற்றியவர். அந்தமாபெரும் தலைவரையே ஏமாற்றிய அவருக்கு, மக்களை ஏமாற்றுவது ஒன்றும் ஒரு விடயமே அல்ல. இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற கிரிக்கட் விளையாட்டுவிழாவில் உரையாற்றிய காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார். தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டுடன் இணைந்ததாக காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் இன நல்லிணக்கத்தை முன்னிறுத்தி சிநேகபூர்வ கடின பந்து கிறிக்கட் விளையாட்டு போட்டியை நேற்று ஞாயிற்றுக்கிழமை காரை…
-
- 1 reply
- 1.1k views
-
-
வடமராட்சியில்... சீன, மொழியிலான எழுத்துக்களுடன் புதிய கட்டடம். வடமராட்சியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் கட்டடமொன்று அமைக்கப்பட்டு வருகின்றமை மக்களிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி- வத்ராஜன் பகுதியிலுள்ள தனிநபரொருவரது சொந்த காணியில், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த மைதானத்தை அமைப்பதற்கான செலவு, தனிநபர் ஒருவரின் நிதியின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த மைதானத்தின் முன்பகுதியில், சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன் சீன தேசிய கொடியில் காணப்படுகின்ற ராகன் சின்னமும் பதிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை தற்போது மக்களிடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை …
-
- 0 replies
- 398 views
-
-
யாழ்ப்பாணத்தில், தாதியர் உள்ளிட்ட 13பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அதாவது யாழ்ப்பாணத்தில் 13 பேருக்கும் மன்னாரில் இருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யதப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “நேற்று (திங்கட்கிழமை), யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 249 பேரின் மாதிரிகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. குறித்த பரிசோதனை முடிவுகளிலேயே 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட…
-
- 0 replies
- 447 views
-
-
ரிஷாட் மற்றும் ரியாத்தை... 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் அகில ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கொழும்பு –பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இ…
-
- 0 replies
- 370 views
-
-
அரச ஊழியர்களை... இன்று முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த முடிவு அரச ஊழியர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரச நிறுவனங்களுக்கு கடமைக்கு வர வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கு அதிகாரம் குறித்த நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2021/1212655
-
- 0 replies
- 276 views
-
-
சீன ஆதிக்கம் அதிகரிப்பதால் தமிழர் விடயம் பேசப்படலாம்- ஈ.சரவணபவன் தெரிவிப்பு 7 Views இலங்கையில் இப்போது சீன ஈழம் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற ஈ.சரவணபவன், தமிழ் மக்கள் தனியான அலகு கேட்டபோது பொங்கியெழுந்தவர்கள் சீனாவுக்கு நாட்டைத் அடகு வைக்கும்போது அடக்கி வாசிக்கின்றனர். சீனாவின் ஆதிக்கத்தால் தமிழர்களின் பிரச்சினை மீண்டும் சர்வதேசத்தால் கையில் எடுக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன” என்றார். சங்கானையில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “80…
-
- 2 replies
- 491 views
-
-
மீண்டும் கறுப்பு பட்டியலுக்குள் இலங்கை இணைக்கப்படலாம் – ரணில் எச்சரிக்கை தற்போதைய வடிவத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை மீண்டும் கறுப்பு பட்டியலில் இணையும் ஆபத்து இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 2011ஆம் ஆண்டு சர்வதேச பண சுத்திகரிப்பு சமந்தமான விடயத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்ட நிலையில் நல்லாட்சி அரசாங்கமே அந்த நிலைமையில் இருந்து மீட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக முன்மொழியப்பட்ட துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்ட…
-
- 1 reply
- 288 views
-
-
சில்லறை... சலுகைகளுக்கு, அடிபணியாமல் இலக்கை நோக்கி பயணிப்போம்- இரா.சம்பந்தன் நாம் சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கியே தொடர்ந்து பயணிப்போமென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44 ஆவது நினைவேந்தல் திருகோணமலையிலும் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் பாரிய ஆட்சி மாற்றமொன்று ஏற்பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் இன, மத பேதமின்றி சகல விதமான சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே தந்தை செல்வா 1949ஆம…
-
- 1 reply
- 332 views
-
-
இலங்கையில் கைது மேகங்கள் சூழ்கின்றன – மனோ 16 Views மேலும் பலர் கைது செய்யப்படலாம், இலங்கையில் கைது மேகங்கள் சூழ்கின்றன, ரிசாத் கைது, ஹரின், மனுஷா மீது அச்சுறுத்தல் ஆகியவற்றை நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நண்பர் ரிஷாத் பதுர்டீன், மீதான பொதுவான சமூக வலைத்தள குற்றச்சாட்டுகளை நானறிவேன். அவரது கட்சியினர் 20ம் திருத்தம் தொடர்பில் அரசுக்கு ஆதரவளித்த “அரசியல் சூழல்” தொடர்பிலும் எனக்கு மனவேதனை இருக்கின்றது. ஆனால், இவற்றை காரணமாக இன்று கூறி, அவரது கைதை நியாயப்படுத்தவோ, அரசி…
-
- 0 replies
- 350 views
-
-
நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் பிணையில்; குற்றமே புரியாத தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் அருட்தந்தை மா.சத்திவேல் 34 Views நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் ஒரிரு மாதங்களில் பிணையில் வெளியே செல்கின்றார்கள். ஆனால் குற்றமே புரியாத தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே பத்து வருடங்களுக்கு மேலாக சிறைப்பிடிக்கபட்டிருக்கின்றார்கள் இது தான் இலங்கை அரசின் தர்மமா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்…
-
- 0 replies
- 243 views
-
-
தந்தை செல்வாவின் 44ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு (சி.எல்.சிசில்) யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44 ஆவது நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரெட்ணம் அடிகளார், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன…
-
- 1 reply
- 477 views
-
-
யாரை திருப்திப்படுத்த ரிஷாட்டை கைது செய்தீர் மகேஸ்வரி விஜயனந்தன் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது அநாகரீகமானது, அருவருக்கத்தக்கதென்றும் சாடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரான அமீர் அலி, யாரை திருப்திப்படுத்துவதற்கு ரிஷாட் கைதுசெய்யப்பட்டார் என வினவினார். வௌ்ளவத்தை சுப்புன் வர்த்தகக் கட்டடத்தில், நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இது யாரை திருப்திப்படுத்துவதற்காக செய்யப்பட்டது என்ற வினா எழும்புகின்றது என்றும் அதாவது இத்தாக்குதல் குறித்து 22ஆம் திகதி முக்கிய அறிவிப்பை விடுக்கவுள்ளதாக பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்த போது, அவர் முக்…
-
- 0 replies
- 679 views
-
-
ஒரே வருடத்தில் சொன்னதை எல்லாம் செய்துள்ளேன் நான் வந்து ஒரு வருட காலம் தான் சொன்னதை எல்லாம் செய்துள்ளேன். எனது தேர்தல் விஞ்ஞாபனம் இன்னமும் உங்கள் வீட்டில் இருக்கும் நீங்கள் போய் எடுத்து பாருங்கள். ஆயிரம் ரூபா எடுத்து தருவதாக சொன்னேன் அதனையும் முடித்து காட்டியுள்ளேன் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12 தனி வீடுகளை கட்டி அமைக்க நேற்று (25) அடிக்கல் நாட்டப்பட்டது. தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும்…
-
- 0 replies
- 343 views
-