ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் காரணம்- உலமா கட்சி குற்றச்சாட்டு! கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணமென உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அத்தோடு, முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சஹ்ரானின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்துவிட்டு தற்போது, சமூகத்தின் மீது பழிபோடுவதை ஏற்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு …
-
- 1 reply
- 491 views
-
-
நாளை பிறக்கின்ற பிலவ வருடம் அனைவருக்கும் அமைதியைக் கொடுக்கட்டும் -க.வி.விக்னேஸ்வரன் 14 Views நாளை பிறக்கின்ற பிலவ வருடம் அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும் அமை தியையும் நல்க வேண்டும் என நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக க.வி.விக்னேஸ்வரன் விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “எமது முன்னோர்கள் தைத் திருநாள், சித்திரை வருடப் பிறப்பு, தீபாவளித் திருநாள் மற்றும் விசேட தினங்கள் அனைத்திலும் காலை எழுந்து ஸ்நானம் செய்து தூய ஆடை அணிந்து ஆலயங்களுக்குச் சென…
-
- 1 reply
- 505 views
-
-
ஒரு சர்வாதிகாரி போன்று செயற்படுவார் என எதிர்பார்த்தே மக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களித்தனர் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஆனால் இன்று அவரது அரசாங்கத்தின் செயற்பாடின்மைக்காக மக்கள் அவரை குற்றம்சாட்டுகின்றனர் என இராஜங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால் எவரும் குறைகூறமாட்டார்கள் குற்றம்சாட்டமாட்டர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அவ்வாறு செயற்படவிரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை மாறாவிட்டால் அது ஜனாதிபதி ஹிட்லராக மாறும் நிலையை உருவாக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹிட்லர் இலங்கைக்கு நன்மை ப…
-
- 1 reply
- 711 views
-
-
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தொடர்பில் ஐம்பது பக்க ஆவணம்: பிரிட்டனிடம் சர்வதேச அமைப்பொன்று கையளித்தது இலங்கை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தொடர்பில் ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பினால் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டம் தொடர்பில் எங்களிடம் பெருமளவு ஆதாரங்கள் உள்ளன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். மிகவும் நுணுக்கமான முறையில் சர்வதேச சட்டத்தர…
-
- 0 replies
- 464 views
-
-
தொல்லியல் பிரச்சினை என்பது எம்மிடையே இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை.தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனபாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷரப் முதுநபின் தெரிவித்துள்ளார். நாடறிந்த கல்விமானும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்களது கல்விஇ சமூகஇ சமயஇ அரசியல் மற்றும் கலாசார பணிகளை புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானா வாழ்வும் பணியும் (1920-2013)’ நூல் சனிக்கிழமை(10) மாலை(இரவு) மருதமுனைஇ பொது…
-
- 9 replies
- 866 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) மாகாண சபை தேர்தலுக்கான உத்தேச சட்டமூல யோசனைகள் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கில் ஆளும் கூட்டணிக்குள் உள்ள அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பானது வெள்ளிக்கிழமை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன் அதற்கு முன்னர் பெசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பொன்றுக்கு செல்லவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்தார். தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு முறைமையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் தொகுதியொன்றில் ஒரே கட்சியிலிருந்து 3 வேட்பாளர்களை நிறுத்துவதற்கு உத்தேச புத…
-
- 1 reply
- 297 views
-
-
தொல்பொருள் திணைக்களத்தை மதப்படுத்த வேண்டாம் -சுரேன் ராகவன் கோரிக்கை 36 Views இலங்கையில் கண்டுபிடிக்கப்படும் தொல்பொருட்கள் ஒரு இனத்துக்கோ அல்லது ஒரு மதத்துக்கோ சொந்தமானதாக இருக்க முடியாதென்று தெரிவித்துள்ள,நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடமும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளிடமும் தொல்பொருள் திணைக்களத்தை மதப்படுத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சுமூகமான தீர்வொன்றினை எட்டும் முகமாக தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள், கிராமிய மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ விதுர…
-
- 1 reply
- 384 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை, ஆயுத வர்த்தகம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான ‘கனேமுல்ல சஞ்சீவ’ அல்லது ' மாலிங்கமுவே சஞ்ச்ஜீவ ' எனப்படும் சஞ்சீவ சமரரத்ன உள்ளிட்ட 11 சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (12) விடுதலை செய்யப்பட்டனர். குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த 11 பேரையும் விடுதலை செய்வதாக நீதிவான் அறிவித்தார். தமிழீழ விடுதலை ப…
-
- 1 reply
- 628 views
-
-
உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைப்பது குறித்து ஆராய்வு 66 Views கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கவுள்ளமை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் தமிழரின் பூர்வீக நிலங்களை அபகரிக்க சிறீலங்கா அரசு மிகவும் திட்டமிட்டு, தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்திலும் சில ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தன. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்ப…
-
- 6 replies
- 889 views
- 1 follower
-
-
இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல. தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல. அவர்கள் இன்று நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை. இலங்கையைத் துண்டாட வேண்டும் என்ற எண்ணமும் வல்லரசுகளிற்கு இல்லை. இதை கோட்டாபய இராஜபக்ச என்ற இளைப்பாறிய முன்னைய இராணுவ அதிகாரி புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே பௌத்த பிக்குகள் சிலர் கூறும் தப்பான சரித்திரத்தை முன்வைத்து தப்பான முடிவுகளுக்கு அவர் வரக் கூடாது என உறைக்கும்படி சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன். அவர் வெளியிட்டுள்ள வாராந்த கேள்வி பதிலில் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், கேள்வி: இந்து சமுத்திர வல்லரசுகளின் போட்டியில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிகார…
-
- 0 replies
- 553 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கருவேலன்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரம் அற்ற காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிராம அலுவலர் ஒருவரால் பாரிய அளவில் கிரவல் அகழ்ந்து குவிக்கப்பட்டுள்ள போதும் இதற்கு எதிராக திணைக்களங்கள் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படடிருந்தது. இந்நிலையில் களத்தில் குதித்த ஒட்டுசுட்டான் பொலிஸார் அங்கு சட்டவிரோதமாக அகழ்ந்து குவிக்கப்பட்டிருந்த சுமார் 750 டிப்பர் லோட் கிரவலை தமது ஆளுகையின் கீழ் கொண்டுவந்ததுடன் குறித்த காணிக்கு உரிமை கோரிய கிராம அலுவலரின் மனைவியையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவ…
-
- 0 replies
- 333 views
-
-
அத்துமீறி எல்லைதாண்டி சட்டவிரோத தொழில் முறைகளை பயன்படுத்துகின்ற இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக பல்வேறு வழிமுறைகள் பரசீலிக்கப்பட்டு வருன்கிறதே தவிர தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த யோசனையை சிலர் மிகைப்படுத்தி தவறாகச் சித்தரித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி அரசியல் நிகழ்வொன்றில் குறித்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கடல் வளத்தையும் எமது கடற்றொழிலாளர்களையும் பாதிக்கும் இந்திய மீனவர்களது எல்லைதாண்டும் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை…
-
- 0 replies
- 441 views
-
-
நீர்கொழும்பை விஞ்சியது பீகார் தகனமேடை சம்பவம் பீகாரின் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 48 வயதான சுன்னு குமார், ஏப்ரல் 3ஆம் திகதியன்று அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்புகளால் அவர் உயிரிழந்து விட்டாரென அவரது உறவினர்களிடம் நேற்று முன்தினம் (11) தெரிவிக்கப்பட்டது. அதன்பின் தகனமேடைக்கு உடலை எடுத்துச் சென்ற உறவினர்கள் இறுதியாக அவரது முகத்தை பார்த்துள்ளனர். அதில், வேறொருவரின் முகம் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல், வேறொருவருடையது என அதன் பின்னர்தான் தெரிய வந்தது. தேடிபார்த்து விசாரித்த போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுன்னு குமார், அங்கேயே இருந்துள்ளா…
-
- 3 replies
- 508 views
-
-
சீனாவுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்து 33 Views சீனாவுடன் 500 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் இன்று கையெழுத்திட்டுள்ளது. சீன அபிவிருத்தி வங்கியுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள இந்தக் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன கையெழுத்திட்டார். கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து விரைவான பொருளாதார மீட்சி பெற இந்த நிதி உதவும் என இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன தெரிவித்தார். இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் இலங்கை மீதான முதலீட்டாளர்களின்…
-
- 1 reply
- 527 views
-
-
உச்சத்தை தொட்ட அமெரிக்க டொலரின் விற்பனை விலை !! மத்திய வங்கி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 203.73 ரூபாயாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி 203.59 ரூபாயாக பதிவாகியிருந்தது. ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை வரலாற்றில் முதன் முறையாக 200 ரூபாயை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1209419
-
- 0 replies
- 384 views
-
-
ரஞ்சன் ராமநாயக்கவிற்காக நாடாளுமன்ற பதவியை துறக்கின்றார் ஹரின்!!! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக மே மாத முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று இடமபெற்ற பேரணியில் பேசிய அவர், “நான் ரஞ்சன் ராமநாயக்க சார்பாக ஒரு அரசியல் முடிவை எடுத்து வருகிறேன். மே முதல் வாரத்தில், நான் அரசாங்கத்திற்கு ஒரு சவாலை முன்வைப்பேன்.” என கூறியுள்ளார். குறித்த அறிவிப்பு மூலம் தனது நாடாளுமன்ற ஆசனத்தை ஹரின் பெர்னாண்டோ தியாகம் செய்வார் என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பார். …
-
- 0 replies
- 253 views
-
-
“கூலிக்கு மாரடித்த சஹ்ரான் குழு, முஸ்லீம் சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானது ” - ரவூப் ஹக்கீம் April 12, 2021 “கூலிக்கு அமர்த்தபட்ட சஹ்ரான் குழு எமது சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்களது கல்வி சமூக சமய அரசியல் மற்றும் கலாசார பணிகளை புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சட்டத்தரணி றுடானி ஸாஹிரினால் தொகுக்கப்பட்ட ´அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானா வாழ்வும் பணியும் (1920-2013)´ நூல் நேற்று (1…
-
- 0 replies
- 498 views
-
-
யாழில் கொள்ளை கும்பல் அட்டகாசம்: வயோதிப தம்பதிக்கு கொடுத்த சித்திரவதையில் வயோதிபர் உயிரிழப்பு யாழ்ப்பாணம்- தென்மராட்சி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல், வயோதிப தம்பதிகளை கட்டி வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். இதில் வயோதிபர் சிவராசா (வயது72) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு, குறித்த வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல், அங்கிருந்த வயோதிபர் தம்பதிகளை கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளனர். இதன்போது நகை மற்றும் பணம் ஆகியவற்றினை எங்கு வைத்துள்ளீர்கள் என கேட்டு, வயோதிபரின் கழுத்தை அவர்கள் நெரித்ததில் அவர் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து நகைகள் மற்றும் ஒன்றரை இலட்சம் பணத்தை கொள்ளையிட்டுக…
-
- 0 replies
- 499 views
-
-
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – இன்று முதல் ஆரம்பம்! தமிழ், சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கே இவ்வாறு கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 7 பிரிவுகளின் கீழ் பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவை பெறும் குடும்பங்கள், விசேட தேவையுடையோரை கொண்ட குடும்பங்கள், சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவை பெறும் நபர்கள் உள்ள குடும…
-
- 0 replies
- 220 views
-
-
யாழில் கலப்பட மதுபானம் விற்பனை- ஒருவர் கைது! யாழ்ப்பாணத்தில் மதுபானம் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மதுபானத்தில், சீனிப் பாணியும் எதனோல் மற்றும் எசன்ஸ் உள்ளிட்டவையும் கலந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் கலையகத்துக்கு அண்மையில் இயங்கிவருகின்ற விடுதி ஒன்றிலேயே இவ்வாறு மதுபானக் கலப்படம் நடைபெற்றுவந்துள்ளது. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் மதுபானத்துடன் கலப்பதற்காகப் பயன்படுத…
-
- 16 replies
- 1.2k views
-
-
மட்டு- ஈரளக்குளம் பகுதியில் பௌத்த பீடம் அமைக்க திட்டம் 167 Views மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் என்னும் பகுதியில் பௌத்தபீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பகுதியானது நூறு வீதம் தமிழர்கள் வாழும் பகுதியாக காணப்படும் நிலையில், சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பௌத்தபீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயற்கை வனப்பும் வயல் நிலங்களும் நிரம்பிய ஈரளக்குளம் பகுதியானது தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவரும் பகுதியாக…
-
- 0 replies
- 415 views
-
-
மக்கள் கவனத்தை திசை திருப்பவே யாழ். மேயர் கைது – அரசை சாடுகின்றார் சஜித் “யாழ்ப்பாண மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டமையானது மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் நோக்கத்துடனான ஒரு செயற்பாடு” என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். “யாழ் மேயரை பயங்கரவாதி என முத்திரை குத்துவதன் மூலமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி குறித்த விசாரணையை அரசாங்கம் நிறுத்திவிட்டது” எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: “நாட்டு மக்களுடைய கவனத்தைத் திசைதிருப்புவதை ந…
-
- 0 replies
- 309 views
-
-
இலங்கையுடன் ‘ஏயர் பபுள்’ விமான சேவை ஒப்பந்தத்தை செய்துள்ள இந்தியா 26 Views இரு நாடுகளுக்கிடையில் சிறப்பு பன்னாட்டு பயணிகள் விமானங்களை இயக்க இலங்கையுடன் இருதரப்பு ‘ஏயர் பபுள்’(air bubble) விமான சேவையை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைசை்சு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ்,சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை தங்களது விமான நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தக்கூடிய நிலைமைகளின் கீழ் இயக்க முடியும். இலங்கை மாத்திரமன்றி ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கனடா,பிரான்ஸ், ஜேர்மனி,ஈராக், ஜப்பான், மாலைதீவு,நைஜீரியா, கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,பிரித்தானியா…
-
- 0 replies
- 562 views
-
-
விடுதலைப் புலிகளை ஆதரித்து முகநூல் பதிவிடுபவர்கள் கைது செய்யப்படுவர் – அஜித் ரோஹண 83 Views தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைப் புகழ்ந்தும், நினைவுகூர்ந்தும் பகிரங்கமாக கருத்துத் தெரிவிப்பவர்கள் தகுதி தராதரம் பாராது கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன் ஊடகங்களிலும், முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் போற்றியும், அவர்களை நினைவுகூர்ந்தும் கருத்துக்களை பதிவிடுபவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் பயங்கரவா…
-
- 10 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சற்றுமுன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று (08) இரவு சுமார் 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன் 6 மணி நேர விசாரணையின் பின்னர் இன்று (09) முன்னிரவ 1.45 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வி.மணிவண்ணன் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்படுகின்றார். யாழ்ப்பாணம் நகரத்தைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக தண்டப் பணத்தை அறவிடும் செயற்பாட்டுக்காக யாழ். நகரக் காவல் படை என்னும் குழு யாழ்ப்பா…
-
- 59 replies
- 4.1k views
-