Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ( எம்.நியூட்டன் ) திருச்சி மத்திய சிறையில் தமது விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் உறவுகளால் இன்று (16.06.2021) யாழ்ப்பாணம் நவாலியில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 78 பேர், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவிவரும் சூழலில், தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று புதன்ககிழமை எட்டாவது நாளாகியும் எந்தவித பதிலும் கிடைக்காத நிலையில் ஈழத்தில் உள்ள இவர்களது உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போ…

    • 1 reply
    • 406 views
  2. “சுபீட்சத்தின் நோக்கு“கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரித்து, தேசிய மின் கட்டமைப்புக்கு மீள்பிறப்பாக்கச் சக்திவளப் பங்களிப்பை அதிகரிக்கும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் வீடுகளுக்கான பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரச நிறுவனங்களில் மின்சாரத்துக்காக செலவாகும் அதிக தொகையைக் குறைப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. முதற்கட்டமாக, பாராளுமன்றத்துக்குத் தேவையான மின்சாரம், தியவன்னா ஓயாவை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்துக்காக, இந்திய அரசாங்கமானது இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் ஊடாக, 100 மில…

  3. மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாகவே அதிகாரங்களைப் பறித்துவிட வேண்டும் என்பதில் அரசாங்கம் தீவிரம் 17 Views இலங்கையின் மாகாண சுகாதாரத் திணைக்களங்களின் கீழ் இயங்கி வந்த ஒன்பது பொது மருத்துவமனைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ்க்கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதில் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் நான்கு பொது மருத்துவமனைகளும் அடங்கும். அரசியலமைப்பு மாற்றம், கொரோனாப் பேரிடர் போன்றவற்றைக் காரணங்காட்டி மாகாணசபைத் தேர்தல்களை நடாத்தாது பிற்போட்டுவரும் அரசாங்கம் தேர்தலுக்கு முன்பாகவே அதற்குரிய அதிகாரங்களைப…

  4. அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்து கொண்டிருக்கின்றது – அம்பாறையில் சிறீதரன் எம் பி எரிபொருள் விலையேற்றத்தினூடாக மக்களின் உணவிலும் வாழ்க்கையிலும் பாரிய அளிவில் இந்த அரசாங்கம் கை வைத்திருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இந்த நாட்டு மக்களைப் படுகுழியில் தள்ளுகின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது. தங்களுடைய தெரிவும் இனவாத அடிப்படையில் அவர்கள் அளித்த வாக்கும் எவ்வளவு கேவலமான முடிவு என சிங்கள மக்கள் எண்ணத் தொடங்கியுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் கனடாவில் வசிக்கும் செந்தில்குமரன் நிவாரணம் அமைப்பின் ஊடாக கனடா வாழ் மக்களின் நிதி உதவியின் மூலம் அம்பாறை மாவட்டம் ப…

  5. நம்பிக்கை பொறுப்பின் ஊடாக கொரோனா நிவாரணப் பணி: முடிந்தளவு நிதி உதவி செய்யுமாறு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை தொடரும் பயணத் தடை மற்றும் முடக்கம் காரணமாக பசியில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முடிந்தளவு நிதி உதவியினை செய்யுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். “நம்பிக்கைப் பொறுப்பு” என்ற நன்கொடை அமைப்பின் வங்கிக் கணக்குக்கு விரும்பியவர்கள் முடிந்தளவு நிதியை அனுப்புமாறும் கிடைக்கும் நிதி மற்றும் செலவழிக்கும் பணம் ஆகியவற்றுக்கான கணக்கு அறிக்கை ஊடகங்களில் வெளியிடப்படும் என்…

    • 2 replies
    • 305 views
  6. ஜனாதிபதி கோட்டாவை சந்திக்கிறது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு (ஆர்.ராம்) ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் கட்சிகளின் தலைவர்களான மாவை.சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். இதன்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமாக மட்டும் கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இதேவேளை, கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் முதலாவது சந்திப்ப…

  7. கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை- TNA மற்றும் JVPஇன் ஆதரவைக் கோரும் சஜித் தரப்பு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவையும் கோரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சரே பொறுப்பு என குற்றம் சாட்டி எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த பிரேர…

  8. ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில், கரையொதுங்கியது திமிங்கலம் ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 32 அடி நீளமான கரையொதுங்கிய குறித்த திமிங்கலத்தை காலை 8.30 மணியளவில் மீனவர்கள் கண்டுள்ளனர். தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த திணைக்கள அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர். குறிப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் திமிங்கலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு கடற்றொழில் திணைக்களம் உத்தியோகர்கள், பொது சுகாதார பரிசோதகர் வருகை தந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. https://athavannews.com/2021/1222833

  9. தீ விபத்துக்குள்ளான கப்பல் – கடல் மாசுபாட்டை நிவர்த்தி செய்ய நோர்வே உதவி தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் காரணமாக ஏற்படும் கடல் மாசுபாட்டினை நிவர்த்தி செய்ய நோர்வே கடலோர நிர்வாகம் தொலைதூர உதவிகளை வழங்கியுள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள நோர்வே தூதுவர் ட்ரைன் ஜெரான்லி எஸ்கெடல் (Trine Jøranli Eskedal), நோர்வே நிபுணர்கள் இலங்கை அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாகக் கூறினார். நோர்வே கடலோர நிர்வாகத்தின் வல்லுநர்கள் தொலைதூர உதவிகளை வழங்கியுள்ளனர் என்றும் சாத்தியமான உதவியின் ஏனைய வழிகளையும் நோர்வே ஆராய்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் …

  10. (எம்.மனோசித்ரா) எரிபொருள் விலை அதிகரிப்பு உட்பட மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான பல தீர்மானங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இதே நிலைமை தொடருமாயின் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், உலக சந்தையில் எரிபொருள் தாங்கியொன்றின் விலை 20 டொலர் வரை குறைவடைந்த போதிலும், அதன் மூலம் பயன்பெறக் கூடிய சலுகையை இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கவில்லை. மாறாக இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தின் ஊடாக நிதியமொன்றை ஸ்தாபித்து மக்களுக்…

    • 2 replies
    • 363 views
  11. முஸ்லீம் மக்களுக்கு விரோதமாக நடந்தவர்கள் தமிழ் இனவாதிகள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் கூறியிருப்பதை பாராட்டுவதாக என உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி காரியாலயத்தில் இன்று(14) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் முஸ்லீம் தமிழ் கட்சிகளின் பொதுவான போக்கு தேர்தலுக்கு பின்னர் ஒரு பேச்சு.அதற்கு முன்னர் ஒரு பேச்சு.தேர்தலுக்கு முன்னர் முஸ்லீம் காங்கிரஸ் தரப்பில் தமிழரா என எதிர்ப்பது மற்றும் தமிழர் தரப்பில் முஸ்லீமா என எதிர்ப்பதே தொடர்கதையாகிறது.இதன் பின்ன…

    • 3 replies
    • 650 views
  12. (எம்.மனோசித்ரா) ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையுடன் தொடர்புடைய விடயங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறது. மாறாக இலங்கையின் இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்தி அரசியலமைப்பில் காணப்படும் நிபந்தனைகளில் மாற்றம் செய்யுமாறு அழுத்தம் பிரயோகிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தார்மீக உரிமை கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , ஜி.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை ஆடை தொழிற்துறை மற்றும் இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றும…

    • 5 replies
    • 616 views
  13. (இராஜதுரை ஹஷான்) எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து அது சார்ந்த ஏனை பல உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. இன்று செவ்வாய்கிழமை முதல் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரித்துள்ளதோடு , எதிர்வரும் தினங்களில் போக்குவரத்து கட்டண அதிகரிப்பிற்கான கோரிக்கைளும் முன்வைக்கப்பட்டுள்ளன. பேக்கரி உற்பத்திகள் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பனிஸ் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திகளும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. கொள்கலன் போக்குவரத்து சேவை சங்கம் எரிபொருள் விலையேற்றத்திற்கு அமைய அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து கொ…

  14. “புதிய அரசியலமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் உள்நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தல்” (ஆர்.ராம்) இலங்கைத்தீவில் சரித்திர ரீதியாக வடகிழக்கு பிரதேசத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரித்தைக் கொண்டவர்களாக உள்ள நிலையில் ஒருமித்த நாட்டினுள் அவர்களுக்கான உள்ளக சுயநிர்ணத்தை மறுத்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சின…

  15. மட்டக்களப்பு: மண் அகழ்வால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு 6 Views மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் பயணத்தடை காலத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட விரோத மண் அகழ்வுகள் காரணமாக பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கித்துள் பகுதியில் வடிச்சல் ஆற்றை ஊடறுத்து உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகணங்கள் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தமது மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து கித்துள் வடிச்சல் ஆற்றுப்பகுதியில் இன்று மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு நடிவடிக்கையில் ஈடுபட்டனர். …

  16. கரை ஒதுங்கிய 31 கடலாமைகள்- இரு கடலாமைகளுக்கு தீவிர சிகிச்சை 16 Views இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரையில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் சடலங்கள் கரை ஒதுங்கி வரும் நிலையில், நேற்று வரை இவ்வாறு கரை ஒதுங்கிய 31 கடலாமைகள், 5 டொல்பின் மீன்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள தகவல்கள் தெரிவித்தன. இதில் குறிப்பாக இலங்கைக்கே உரித்தான கடலாமைகளும் உள்ளடங்குவதாக அத்திணைக்கள தகவல்கள் சுட்டிக்காட்டின. அத்துடன் மிக கவலைக்கிடமான நிலையில் உள்ள இரு ஆமைகளுக்கு தற்போதும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின. இதனைவிட சந்தேகத்துக்கு இடமான முறையில்…

  17. தென்னிலங்கை மீன்களை வாங்க மறுக்கும் மக்கள் 18 Views இலங்கையின் மேற்கு கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் கடல் மாசு அடைந்துள்ளதால் தென்னிலங்கை மக்கள் மேற்கு கடல்பகுதியில் பிடிக்கும் மீன்களை வாங்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொடவில் உள்ள மொத்த மீன் விற்பனை சந்தையில் மீன்கள் வாங்குவாரற்று தேங்கிகிடப்பதாக மீன் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எம்மிடம் அதிக மீன்கள் உள்ளது ஆனால் வாங்குவதற்கு தான் ஆட்கள் இல்லை. எனவே அதனை விநியோகிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த அனர்த்ததத்தினால் பெருமளவான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேசமயம்,…

  18. உயர் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்றங்களின் புதிய நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். மேலும் இதன்போது, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவும் மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சஷி மஹேந்திர, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். https://athavannews.com/2021/1222500

  19. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பாதிப்புக்கள் 20 வருடங்களுக்கு நீடிக்கும்! June 15, 2021 கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள், இன்னும் 20 வருடங்கள் வரையில் காணப்படுமென தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர, இதன் பாதிப்புக்களை டொலர்களில் மதிப்பிட முடியாதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்து, கடலில் கலந்த பாரியளவான பிளாஸ்டிக் பொருள்கள் தற்போது 40 கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடலில் இன்னும் எவ்வளவு பிளாஸ்டிக் பொருள்கள் இருக்குமென ஆராய முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஆயிரத்து 486 கொள்க…

    • 1 reply
    • 204 views
  20. முல்லைத்தீவில், மக்களின் விவரங்களை திரட்டும் காவற்துறை! June 15, 2021 முல்லைத்தீவு மாவட்டத்தில், குடியிருப்பாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில், காவற்துறையினர், நேற்று (14.06.21) ஈடுபட்டனரென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர், பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட குடியிருப்பாளர்கள், தங்கியிருப்பவர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான படிவம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றைப் பூரணப்படுத்தி, ஒரு மணிநேரத்தில் வழங்குமாறும், காவற்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.1865ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க காவற்துறை கட்டளைச் சட்டத்தின் 76ஆவது பிரிவுக்கு அமைவாகச் செய்யப்படும் ஆணை என, அந்த படிவத்தில் குறிப்பிடப…

  21. மேய்ச்சல் நில ஆக்கிரமிப்பால் மாடுகளை விற்கும் பண்ணையாளர்கள் 163 Views மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனைப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பாளர்கள் செயற்படுவதன் காரணமாக பலர் மாடுகளை விற்பனை செய்துவிட்டு வேறு தொழில்களை நாடிச் சென்றுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் மேய்ச்சல் தரைக் காணிகளை பயிர்ச்செய்கை என்ற அடிப்படையில் கிழக்கு மாகாண ஆளுனரின் ஏற்பாட்டில் வேறு மாவட்டங்களிலிருந்து வருகைதந்த சிங்கள மக்களினால் அபகரிக்கப்பட்டது. இதன்போது பண்ணையாளர்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர் கொண்டு வந்ததுடன் …

  22. எரிபொருள் அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை : நாடு திரும்புகின்றார் பசில் ஆளும் கட்சிக்குள்ளேயே கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஜூன் 23 புதன்கிழமை நாடு திரும்புவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பசில் ராஜபக்ஷ மே 12 ஆம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில் 6 வாரங்களின் பின்னர் நாடு திரும்பவுள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து அமைச்சரை பதவி விலக வேண்டும் என ஆளும் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. இந்த அறிவிப்பு கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தியை…

  23. நயினாதீவு கடலில்... கரையொதுங்கும் மருத்துவக்கழிவுகள் – அச்சத்தில் மக்கள்! நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அவை இந்தியாவில் கடலில் போட்ட நிலையில் இங்கு, வந்தவையா என்ற குழப்ப நிலையே காணப்படுவதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். வெற்று ஊசிகள், மாத்திரை வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளமை நேற்று(திங்கட்கிழமை) கண்டறிப்பட்டது. சம்பவம் தொடர்பில் நயினாதீவு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1222704

  24. மட்டக்களப்பில் புதிதாக 4 பொலிஸ் நிலையம் திறக்க நடவடிக்கை! மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிகமாக 4 பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் உத்தியோகப்பூர்வமாக அவற்றினை திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் 12 பொலிஸ் நிலையங்கள் இயங்கிவரும் நிலையில் மேலும் புதிதாக 4 பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்கு பொலிஸ் மா அதிபர் அனுமதி வழங்கியதையடுத்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புணானை பொலிஸ் சோதனை சாவடியாக இயங்கிவரும் சோதனைச்சாவடி புணானை பொலிஸ் நிலையமாகவும், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள சந்திவெளி கேரக்காவெளிமடு பகுதில் சந்திவெளி பொலிஸ் நிலையமாகவும், மட்டக்களப…

  25. கப்பல் உரிமையாளருக்கு 40 மில்லியன் இழப்பீடுக் கோரிக்கை அனுப்பப்பட்டது – நீதி அமைச்சர் எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட கடல் பேரழிவு தொடர்பான முதல் இடைக்கால இழப்பீட்டு கோரிக்கையானது, மே 23 முதல் ஜூன் 3 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட செலவுகளை உள்ளடக்கியது என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இழப்பீடு பெறுவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடனான சந்திப்பைத் தொடர்ந்து நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய போதே நீதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார். தீயைக் கட்டுப்படுத்த இலங்கை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட செலவு அடங்கலாக 40 மில்லியன் அமெரிக்க டொலர் இடைக்கால உரிமைகோரலைக் கொடுத்துள்ளளாதாக அமைச்சர் கூறினார். இதேவேளை கப்பல் நிறுவனத்திடமிருந்து முக்கிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.