ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
"அஸ்ட்ராஜெனெகா" தடுப்பூசிகளை... வாங்குவதற்கு முயற்சி: இங்கிலாந்தில் இருந்து பச்சைக்கொடி – அரசாங்கம் இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பாதுகாக்க கோரியதற்கு இலங்கைக்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பதிவாகும் அதிகளவிலான நோயாளிகள் மற்றும் இறப்புக் காரணமாக சீரம் நிறுவனத்தால் கோஷீல்ட் தடுப்பூசிகளை வழங்க முடியாத நிலையில் வேறு தரப்பிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள திட்டமிடுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்நிலையில் ஒரு மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்குவதற்காக இங்கிலாந்தில் இருந்து நேர்மறையான பதில் கிடைத்ததாகவும் தற்போது இரு அரசாங்க…
-
- 0 replies
- 341 views
-
-
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல்: இஷ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு இஷ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அனைவரையும் விழிப்புடன் இருக்குமாறும் பெரிய கூட்டங்கள் மற்றும் தேவையற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு டெல் அவிவில் (Tel Aviv) உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான கலவரங்கள் மற்றும் மோதல்களால் அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீவிர அவசரநிலை ஏற்பட்டால் இலங்கை சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிக்கும் பொருட்டு தூதரகம் துரித எண்களையும் அறிமுகப்படுத்தியது. அதன்படி, இலங்கையர்கள் கே.பி. சந்திரதிலகே, 058 6875764 அல்லது இண்டிகா சேனரத்ன, தொழிலாளர் மற்றும் நலன்புரி 055 9284399 ஆகிய எண்களுடன் தொட…
-
- 0 replies
- 172 views
-
-
இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹக்கீம் கண்டனம் பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹக்கீம்,தனது ட்விட்டர் பக்கத்தில் மூன்று தனித்தனிப் பதிவுகளையிட்டுள்ளார்.அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்வதற்கான உரிமை உண்டு” என கிளிப்பிள்ளைப் போன்று அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் “இந்தப் பிரச்சினை விரைவிலோ அல்லது பின்னரோ தீரும்” எனவும் தெளிவில்லாமல் எதையோ உளறியிருக்கின்றார். சுதந்திரமான உலக நாடொன்றின் தலைவர் இவ்வாறு பரிதாபமான தொனியில் முணுமுணுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இனரீதியான ஒதுக்கலைக் கடைப்பிடித்துவரும் இஸ்ரேல் அரசாங்கத்திற…
-
- 4 replies
- 775 views
-
-
கோதாபய ஒரு உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, ஒரு வெற்றுடல்” – அனுரகுமார திசநாயக்கா கடும் சாடல் “கோதாபய ராஜபக்சவின் ஆணவத்தினால்தான் இந்நாட்டு மக்கள் மரணித்துக்கொண்டிருக்கிறார்கள்” என, ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக ஆற்றிய தனது உரையின்போது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுர குமார திசநாயக்கா சாடியிருக்கிறார். “நந்தசேன கோதாபய ராஜபக்ச ஒரு கருணையற்ற, நாட்டு மக்கள் மீது எந்தவித பொறுப்புணர்வும் கொண்டிராத ஒரு வெறும் உலர்ந்துபோன கோது” என ஊடகவியாளர் மத்தியில் திசநாயக்கா தெரிவித்தார். “மருத்துவ அதிகாரிகள் தமது உண்மையான அனுபவங்களையும், கருத்துக்களையும், புத்திமதிகளையும் ஜனாதிபதிக்கு முன்னால் கூறுவதற்கு அஞ்சுகிறார்கள். தமது கருத்…
-
- 1 reply
- 1k views
-
-
இழந்தவர்களை நினைவு கூர்வதற்கே தமிழர்கள் போராட வேண்டி உள்ளது -சுரேஷ் பிரேமச்சந்திரன் 56 Views இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைக்கூட மதிக்காமல் நினைவுத்தூபியையும் அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்ததைக் கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இழந்தவர்களை நினைவு கூர்வதற்கே தமிழர்கள் போராட வேண்டிய துர்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஈழவிடுதலைப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான பொதுமக்களை நாங்கள் இழந்திருக்கிறோம். அதேபோல் இறுதி யுத்…
-
- 0 replies
- 460 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் இனவழிப்பு சம்பவங்களை நினைந்து கறுப்புக்கொடிகளை பறக்கவிடுங்கள் – தமிழ்தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் இனவழிப்புக்கான நீதியை வேண்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில், இனவழிப்பின் சாட்சியங்களாய் எமது ஆத்மாவை தினமும் உலுப்பிக்கொண்டிருக்கும் கொடூரமான இனவழிப்புச் சம்பவங்களை நினைந்து கறுப்புக்கொடிகளை பறக்கவிடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் இன அழிப்பையொத்த இன்னொரு இன அழிப்பு யுத்தத்தை சிறீலங்கா அரசு கொவிட்-19 பெருந்தொற்றின் மூலம் தமிழர் தாயகத்தில்; கட்டவிழ்த்துவிட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. என தமிழ்தேசிய மக…
-
- 1 reply
- 306 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - பொலிஸாரின் விண்ணப்பம் நிராகரிப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நிராகரித்தார். சம்பவம் இடம்பெறப் போவதைத் தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டால் பி அறிக்கையில் தாக்கல் செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை கோப்பாய் பொலிஸ் பிரிவில் தடை செய்யக் கோரி பொலிஸாரால் இன்று ஏ அறிக்கையில் விண்ணப்பம் செய்யப்பட்டது. இலங்கை குற்றவியல் சட்டம் 106 ஆம் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் இ…
-
- 0 replies
- 424 views
-
-
மரணித்த உறவுகளை நினைவு கூர்வதற்கே போராட வேண்டிய நிலையில் தமிழர்கள் – சுரேஷ் இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைக்கூட மதிக்காமல் நினைவுத்தூபியையும் அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்ததைக் கண்டித்தும் நினைவேந்தல் நிகழ்விற்கு தடையுத்தரவு பெறப்பட்டிருப்பதையும் கண்டித்து அறிக்கையோ ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இழந்தவர்களை நினைவு கூர்வதற்கே தமிழர்கள் போராட வேண்டிய துர்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் “நடந்து முடிந்த ஈழவிடுதலைப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான பொ…
-
- 0 replies
- 375 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவை... வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு இதுவரை அடைந்த அவலங்கள், துயரங்களை நெஞ்சிற் கொண்டு இலட்சிய தாகத்தை இதயத்தில் நிறைத்து முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவு கூறுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். வாழும் இடங்களிலும் குடியிருக்கும் குடில்களிலுங் கூட நினைவு கூர்ந்து மாலை 6.00 மணிக்கு மணி ஒலியெழுப்பிச் சுடரேற்றி விளக்கேற்றி திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவலைகளை பாரெல்லாம் பரப்புவோம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இராணுவம் சூழ்ந்திருக்க முள்ளிவாய்க்கால் நினைவிக்கல் அகற்றப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசு பொறுப…
-
- 1 reply
- 454 views
-
-
தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரங்கள் அனைத்தும் முழுமையாக முடங்கியுள்ளன. இந்நிலையில் குறித்த கள நிலைமைகளை அறிக்கையிட சென்ற ஊடகவியலாளருக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றினை அடுத்து அரசாங்கம் நேற்று இரவு 11 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை முழுமையான பயணத்தடையினை அறிவித்திருந்தது. தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் சுகாதார பிரிவினருக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு சுகாதார பிரிவும், பாதுகாப்பு தரப்…
-
- 3 replies
- 692 views
-
-
நிவாரணப் பொதிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம் ! கொரோனா தடுப்பிற்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான 20 அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கலாக இந்நிவாரண பொதி வழங்கப்படவுள்ளதுன. இந்நிவாரணப் பொதி நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் மக்களுக்கு வழங்கப்படவுள்ள அதேவேளை அவற்றினை மூன்று தினங்களுக்குள் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையினை அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத…
-
- 0 replies
- 282 views
-
-
இரவோடு இரவாக உடைத்தெறியப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ! பெரும் பதற்றம் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆறு மணியளவில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கபட்டிருந்தது. இந்த நிலையில் பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் இணைந்து நினைவுக்கல் நடுகை செய்யமுடியாது என தடை ஏற்படுத்தியிருந்தனர். இதனை தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிர…
-
- 36 replies
- 3.4k views
-
-
அதிகரிக்கும் கொரோனா – முற்றாக முடங்கியது மட்டக்களப்பு 15 Views மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடைகளை மீறிச்செயற்படுவோரை கண்டறியும் வகையில் சிறப்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடளாவிய ரீதியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று இரவு முதல் நாடளாவிய ரீதியில் பயணத்தடை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளதுடன் மக்கள் நடமாட்டம் இல்லாததை காணமுடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான எந்த போக்குவரத்துகளும் நடைபெறாத நிலையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையினை காணமுடிகின்றது. …
-
- 1 reply
- 596 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் திட்டமிட்டபடி மே 18 நடைபெறும் – வேலன் சுவாமிகள் 8 Views வடக்கு – கிழக்கு கட்டமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெற இருக்கின்றது என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பு ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் – “ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த நூற்றாண்டிலே இன அழிப்பு இனப்படுகொலை 2009 ஆம் ஆண்டு மே மாதம் உள்ளிட்ட கடைசி மாதங்களில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறி இருக்கின்றன. இன அழிப்புக்கு எதிராகவும் அநீதிக்கு எதிராகவும் நீதி கே…
-
- 0 replies
- 418 views
-
-
(நா.தனுஜா) சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை ஊக்குவித்து, வலுப்படுத்தும் வகையில் பொதுபலசேனா அமைப்பு செயற்பட்டு வருவதாக ஐக்கிய அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தினால் 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மதச்சுதந்திரம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் செயற்பட்டுவரும் சிவில் சமூகக்குழுக்களால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களின்படி, சமூகவலைத்தளங்களில் மதரீதியான சிறுபான்மையினரை இலக்குவைத்து வெறுப்புணர்வுப் பிரசாரங்களும் கருத்துக்களும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: …
-
- 0 replies
- 430 views
-
-
இலக்கினை எட்டும் வரைக்கும் தொடர்ந்து பயணிப்போம்- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு 50 Views இனப்படுகொலை நீதிக்கான ஒரு தசாப்தத்தைக் கடந்திருந்தாலும், இலக்கினை எட்டும் வரைக்கும் தொடர்ந்து பயணிப்போம் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர, விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில்லை என விடுதலைப் போராட்ட வரலாற்றியல் எமக்குக் கற்பித்திருக்கின்றது. முள்ளிவாய்க்காலும் இதற்கு விதிவிலக்கல்ல. முள்ளிவாய்க…
-
- 2 replies
- 861 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவாக மே 18 எழுத்து பொறிக்கப்பட்ட சிரட்டைகள் வழங்கி வைப்பு திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் (Union of Civil Societies - Trincomalee District) ஊடாக, "அகரம் மக்கள் மய்யம்" அமைப்பின் ஒருங்கிணைப்பில், நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட எமது இரத்தச் சொந்தங்களை நினைவு கூரும் முகமாக "முள்ளிவாய்க்கால் நினைவு" வாரத்தின் முதலாம் நாளாகிய நேற்று, திருக்கோணமலை மக்கள் வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செய்துள்ளனர். எதிர்கால சந்ததியினருக்கு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்திறத்தை கடத்தி செல்வதற்காகவும், திருக்கோணமலை இளைஞர்களால் "முள்ளிவாய்க்கால் கஞ்சியினை" நினைவு கூரும் வகையில் அடையாளமாக சிற…
-
- 0 replies
- 436 views
-
-
சர்வதேச ரீதியில் மெய்நிகர் வழியூடாக நடைபெறவுள்ள தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த போராளிகள், பொது மக்களை நினைவுகூர்ந்துசர்வதேச ரீதியில் மெய்நிகர் வழியூடாக நடைபெறவுள்ள தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு வரும் மே 18 அன்று ஐரோப்பிய நேரம் மாலை 18 மணிக்கு நடைபெற உள்ளது. இவ் நிகழ்வில்தமிழர் தாயகத்திலிருந்து மதகுருமார்கள் , அரசியற் தலைவர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் , சாட்சியங்கள் , அனைத்து நாடுகளிலும் வசிக்கும் தமிழ் உறவுகள் , அரசியற் பிரமுகர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் நாமும் இவ் இணைய வழி zoom இல் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளகிறார்கள். எம்மினமே எம்முறவே! சிறிலங்கா அரசு ,எம்மினத்தின் வேரறுத்து, படுகொலை…
-
- 0 replies
- 310 views
-
-
தடையை மீறி இரகசியமாக நடைபெற்ற திருமணம் – கலந்துகொண்ட 21 பேருக்கு கொரோனா 1 Views யாழ்., தையிட்டி பகுதியில் நடைபெற்ற இரகசியத் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாப் பெருந்தொற்று காரணமாக நாட்டில் திருமணம் உள்ளிட்ட பொது மக்கள் ஒன்றுகூடும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட தையிட்டி பிரதேசத்தில் இரகசியமான முறையில் திருமண நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் பின்னர் தகவல் அறிந்த சுகாதாரப் பிரிவினர் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மணமக்கள் குடும்பம் உள்ளிட்ட சிலரை இனங்கண்டு தனிமைப்படுத்தி இருந்தனர…
-
- 0 replies
- 531 views
-
-
முள்ளிவாய்க்காலில் நினைவு நிகழ்வுகள் மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு 68 Views முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த போராளிகள், பொது மக்களை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் பொது வெளியில் அமைக்கப்பட்ட பொது மண்டபத்தில் ஆண்டு தோறும் மக்கள் தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது வழமை. இந்த ஆண்டு கொரோனா நிலைமையினை காரணம் காட்டி இந்நிகழ்வை தடை செய்வதற்கு முல்லைத்தீவு பொலிசார் நீதிமன்றத் தடை உத்தரவை பெற்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைந்த பகுதியில் ஏற்பாட்டுக் குழுவினால் நினைவுக்கல் கொண்டு சென்ற வேளை பொலீசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தடுத்துள்ளதுடன், குறித்த நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ள…
-
- 1 reply
- 266 views
-
-
பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரத்திற்கு கீழ் அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். ஏ -9 , 32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரங்களுக்கு கீழ் புதிதாக பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. குறித்த பிள்ளையார் சிலையானது இதே வீதியில் தற்போது பொலிஸ் காவல் நிலையம் இருக்கும் இடத்திற்கு அருகில் முன்னர் இருந்த பிள்ளையாருக்காக வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையானது தங்களது அனுமதியின்றி, தங்கள் எல்லை பரப்புக்குள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதனை அகற்றப…
-
- 17 replies
- 1.3k views
-
-
80ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நேற்று சினோபார்ம்,ஸ்புட்னிக் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: பேராசிரியர் சன்ன ஜெயசுமன (சி.எல்.சிசில்) கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் சுமார் 80,277 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசி ஆகியன நேற்று இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டன. கம்பஹா, கொழும்பு மற்றும் குருணாகல் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையான தொற்றா ளர்கள் பதிவான நிலையில் இத்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதிகளவு மக்கள் தடுப்பூசி போட வந்ததால் நீண்ட வரிசைகள் காணப்…
-
- 2 replies
- 492 views
-
-
முதியவரின் முகக் கவசத்துக்குள் புகைந்த பீடி பீடியொன்றை பற்றவைத்தவாறு சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த முதியவர் ஒருவர், வீதியில் பொலிஸாரைக் கண்டவுடன், வாயில் வைத்திருந்த பீடியுடன் முகக் கவசத்தை அணிய முற்படுகையில் பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று முன்தினம் (11) கிரிஉல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. முகக் கவசங்களை அணியாதவர்களை கைதுசெய்வதற்கான பணியில், கிரிஉல்ல பொலிஸார் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கொழும்பு- குருநாகல் பிரதான வீதியில், நபரொருவர் சைக்கிளை நிறுத்தி அவசரஅவசரமாக முகக் கவசத்தை அணிவதை பொலிஸார் கண்டுள்ளதுடன்,அந்த முகக் கவசம் தீப்பற்றுவதையும் அவதானித்து கூக்குரலிட்டு முகக் கவசம் அணிவதை தடுத்துள்ளனர். பொலிஸாரைக் கண்ட பதற்றத்தில் வா…
-
- 1 reply
- 917 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் மட்டக்களப்பில் ஆரம்பம்- வீடுகளிலேயே நினைவு கூறுமாறு மக்களுக்கு அறிவிப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வு கட்சி ஆதரவாளர்களின் பங்குபற்றுதல் இன்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஆரம்பத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் வாரம் மே 12 தொடக்கம் மே 18வரை ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படுகின்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்…
-
- 1 reply
- 267 views
-
-
இலங்கை தமிழர்களை அழிக்க நீண்ட கால திட்டத்தில் அரசாங்கம் உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தற்போதைய கொரோனா தொற்றை காரணம் காட்டி தடுக்கும் முகமாக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினை வண்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (13) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் உரிமை போரின் போது யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளி வாய்க்காலில் நினைவு கூர்ந்து உறவினர்கள் நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்வது வழமை. ஆனால் தற்போது உள்ள அரசாங்கம் யு…
-
- 0 replies
- 353 views
-