ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் பாவனை குறித்த அறிவிப்பு வெளியானது கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி பெப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அரசாங்கம் தொடங்கும் என கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார். இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து தடுப்பூசிகளைப் பெறுவதற்கான இருதரப்பு கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பு 20 சதவீத மக்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை இலவசமாக நன்கொடையாக அளிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்புக்கு இது தொடர்பான தேசிய திட்டத்தை சுகாதார அமைச்சகம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட…
-
- 0 replies
- 281 views
-
-
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எப்போது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும்? அரசாங்கத்தின் கொரோனோ வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையின் மூன்றாம் கட்டத்திலேயே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தடுப்பு மருந்தினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மோர்னிங் தெரிவித்துள்ளது. முன்னிலை சுகாதார பணியாளர்களிற்கு மிகுந்த முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ள அரசாங்கம் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினருக்கும் முன்னுரிமை அளிக்கதிட்டமிட்டுள்ளது. 60வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு மூன்றாம் கட்டத்திலேயே கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்…
-
- 2 replies
- 615 views
-
-
முள்ளிவாய்க்கால் விவகாரம் – அவசரமாக மஹிந்தவைச் சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதுவர் 3 Views யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கரிசனை வெளியிட்டார் அதன் பின்னரே நிலைமையை சமூகமாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றன என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது; நினைவுத்தூபி அழிக்கப்பட்டது குறித்த தகவல் கிடைத்ததுமஇலங்கைக்கான இந்திய தூதுவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தொடர்புகொள்வதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டார். அவ்வேளை பிரதமர் குருநாகலில் உள்ள தனது தொகுதியில் மக்களை சந்திப்பதில…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
23 தொழிற்சங்க பிரதிநிதிகளிடமும் அமைச்சரவை உபகுழு திட்டவட்டமாக அறிவிப்பு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை 51வீத உரிமம் இலங்கைக்கும், 49 வீத உரிமம் இந்திய அதானி நிறுவனத்திற்கும் நிருவாக ரீதியில் வழங்கும் உடன்படிக்கையை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அதனை தடுக்க துறைமுக தொழிற்சங்கங்கள், அரச பிரதிநிதிகளுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந் நிலையில் அடுத்த பேச்சுவார்த்தையில், 51-49 வீதம் என்ற உரிமத்தின் அடிப்படையிலான உடன்படிக்கைக்குள்ளே பேச்சுவார்த்தை நடத்துவதென்றால் அரசாங்கம் தயார் எனவும் இலங்கைக்கு 100 வீத உரிமத்தை வழங்கவே முடியாது எனவும் அமைச்சரவை உபகுழு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மு…
-
- 0 replies
- 422 views
-
-
மார்ச்மாதம் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கும் என அரசாங்கம் தெரிவிப்பது பொய்- ரணில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை கொள்வனவு செய்வதற்கான உரிய தந்திரோபாயம் எதுவும் இலங்கை அரசாங்கத்திடமில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையி;ல் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மார்ச்மாதம் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருப்பது முற்றிலும் பொய் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் ஒருவரிடம் பத்துமில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளமை குறித்த தகவல் எனக்கு கிடைத்துள…
-
- 0 replies
- 277 views
-
-
வர்த்தக ஏற்றுமதி ஊடாக 10.15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலக்கு – EDB 2 நாட்டின் முக்கிய அந்நிய செலாவணியின் ஆதாரமான ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை (EDB ), இந்தாண்டு ஏற்றுமதி வருமானத்தில் 10.15 பில்லியன் அமெரிக்க டொலர்களை பொருட்கள் ஏற்றுமதியினுடாகவும் சேவைத்துறை ஏற்றுமதி மூலம் 4.58 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதனை இலக்காகக் கொண்டுள்ளது. முக்கிய சந்தைகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட ஏற்றுமதிகள் மூலம் ஏற்றுமதி வருமானத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ‘செயல் திட்டம் 2021’ தற்போதைய உலகளாவிய நிலைமையைக் கருத்திற்க் கொண்டு EDB வகுத்த புதிய திருத்தப்பட்ட மூலோபாயத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 225 views
-
-
ஜனவரி இறுதியில் அல்லது பெப்ரவரி ஆரம்பத்தில் இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் கிடைக்கலாம் – சுகாதார துறை அதிகாரி இலங்கைக்கு முதல்தொகுதி கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் ஜனவரி இறுதியில் அல்லது பெப்ரவரி ஆரம்பத்தில் வந்து சேர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பைசர் நிறுவனம் தயாரித்த மருந்துகளையே இலங்கை பெறவுள்ளது 200,000 டோஸ் மருந்துகள் இலங்கைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக இந்த மருந்துகள் இலங்கையை வந்தடையும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் 20 வீதமான சனத்தொகைக்கான 4.2 மில்லியன் …
-
- 0 replies
- 237 views
-
-
மாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்! by News Deskabout 5 hours ago379Views சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகர திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று (13) நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது. நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. எனினும் யாழ்ப்பாணம் நகரில் மூடப்பட்ட குறித்த திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை மாஸ்டர் திரைப்படத்தை பார்வையிட அனுமதித்து ரிக்கெட்டுக்களை விற்பனை செய்திருந்தமை சுகாதாரத் த…
-
- 20 replies
- 2.4k views
- 1 follower
-
-
தமிழ் தேசியமே எமது மூச்சு! யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மீண்டும் ஒருமுறை சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் மக்கள் பேரெழுச்சியாக திரண்ட பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பாக்கியநாதன் உஜாந்தன் தலைமையில் இந்த நினைவு நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் இரண்டு நிமிட …
-
- 3 replies
- 631 views
-
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என எச்சரிக்கை by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/PHI-UNION-1.jpg இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக பரவிக்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் நாட்டினை திறக்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்லவெனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் நிலைமைகள் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கைய…
-
- 0 replies
- 377 views
-
-
சாணக்கியனுக்கு கொரோனா தொற்று இல்லை! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீமிற்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உள்ளிட்ட 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சாணக்கியனுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இரா.சாணக்கியன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், “எனக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் முடிவுகளை அறிவித்திருந்தார்கள். …
-
- 0 replies
- 481 views
-
-
புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை மறுப்பு! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இதனால், இலங்கை குறித்த தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய ஐந்து நாடுகளான கனடா, ஜேர்மனி, வட மசெடோனியா, மொன்டினீக்ரோ, பிரிட்டன் ஆகிய நாடுகள் புதிய தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் சமரச போக்கை வெளிப்படுத்துபவையாக அமையலாம் என சிவில் சமூக பிரதிநிதிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே, “ஐக்கிய நாடுகள் மனித உரிமை ப…
-
- 0 replies
- 317 views
-
-
தென்னை பனம்பொருள் அபிவிருத்திக் கூட்டுறவு சங்கத்திற்காக உயிரை பணயம் வைத்துப் போராடும் தொழிலாளிகளைக் காப்பாற்றுங்கள்- சுரேஷ் பிறேமச்சந்திரன் கோரிக்கை Digital News Team 2021-01-17T12:51:30 கிளிநொச்சியில் கடந்த ஒருவாரகாலமாக சங்கத்தின் ஜனநாயக பண்புகளைக் காப்பாற்றுமாறு கோரி தென்னை பனம்பொருள் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் சாகும்வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டக் களத்தில் அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கருத்துத் தெரிவிக்கும்போதே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிறேமச்…
-
- 0 replies
- 245 views
-
-
10 நாட்களாக உண்ணாவிரதம் ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசன் சிறைச்சாலை அத்தியட்சகரின் உறுதிமொழியை அடுத்து போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளார். உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசன் சிறைச்சாலை அத்தியட்சகரின் உறுதிமொழியை அடுத்து இன்று முதல் 3 வாரங்களுக்கு தனது போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளார். மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டும் துரித விசாரணைக்கு உட்படுத்தப்படாதுவிடின் பிணை அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். மேன்முறையீட்டு வழக்குகளில் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதியான இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் …
-
- 0 replies
- 237 views
-
-
கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் January 17, 2021 இலங்கையில் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஸெனெக்கா கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சரும் விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியை அடுத்த மாதம் நடுப்பகுதி முதல் நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தொிவித்துள்ள அவா் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஸெனெக்கா கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாகவும் தொிவித்துள்ளாா். இதனை தவிர கொவெக்ஸ் சலுகை ஊடாக, கொரோனா எதிர்ப்பு சக்திக்கான தடுப்பூசியும் இலவசமாக கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவ…
-
- 0 replies
- 459 views
-
-
திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் இரண்டு முறை தோல்விகண்டதை அடுத்து இன்று நடந்த தவிசாளர் தேர்வில் 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த அந்தச் சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கைமாறியது. மாகாண சபைத் தேர்தல் வரலாற்றின் ஆரம்பம் தொட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையை ஸ்ரீலலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியதை அடுத்து பிரதேச சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைப் பிரதிநிதித்துவம் செய்துவரும் ஆர்.ஏ.ரி. எஸ்.டீ. ரத்நாயக்க தெரிவானார். இன்று காலையே அவர்கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன.அதி…
-
- 2 replies
- 770 views
-
-
கே .குமணன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23 “9″ஆக உயர்ந்தது. இந்நிலையில், இன்று சனிக்கிழமை குளத்தின் நான்கு வான்கதவுகளும் தலா 3 இஞ்சி உயரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதிகளவான இராணுவத்தினரின் பிரசன்னத்தோடு இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர், மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர், முல்லைத்தீவு மாவட்ட இராணுவத்தளபதி, முல்லைத்தீவு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர், ஒட்டுசுட்டான் பிரதேச உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள தகவலின் படி தமது …
-
- 1 reply
- 553 views
-
-
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கு மட்டுமல்லாமல், இதுவரை உயிரிழந்த அனைவருக்குமான நினைவுத்தூபியையே யாழ் மாநகரசபை அமைக்க வேண்டுமென ஈ.பி.டி.பி வலியுறுத்தியுள்ளது. யாழ் மாநகரசபை அமர்வில் இன்று, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முடிவினை முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவிக்கையில், இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உரிமைக்காக போராடிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு. அந்தவகையில் யாழ் பல்கலைக்களக மாணவன் விஜிதரன் படுகொலை மற்றும் அவருக்கு நீீதி கேட்டு போராட…
-
- 19 replies
- 2.4k views
-
-
தமிழ் மக்கள் சார்பாக ஒரு தரப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் கட்சிகளின் சார்பாக தயாரிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜரே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/143271/gd.jpg குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 15 ஜனவரி 2021 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு: மாண்புமிகு தூதர்களே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு கோரல், இலங்கையின் நிலைமை குறித்து ஆராயப்படவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத…
-
- 0 replies
- 478 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக 10 ஆயிரத்து 561 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக பெய்த அடைமழை காரணமாக மாவட்டத்தின் 9 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 3,576 குடும்பங்களைச் சேர்ந்த 12,304 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1,965 குடும்பங்களைச் சேர்ந்த 5,841 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 1,698 குடும்பங்களைச் சேர்ந்த 5,283 நபர்களும், பட்டிப்பள…
-
- 0 replies
- 295 views
-
-
மீள ஆரம்பமாகவுள்ள யாழ்ப்பாண புகையிரத சேவைகள்: நாளை முதல் முன்பதிவுகளை மேற்கொள்ளலாம்..! எதிர்வரும் 18 ஆம் திகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதால் நாளை முதல் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ளலாம் என யாழ்ப்பாண பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். புகையிரத சேவைகள் ஆரம்பமாகவுள்ளமை குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரி.பிரதீபன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் புறப்பட இரு…
-
- 0 replies
- 621 views
-
-
கருணா குழுவின் காட்டுமிராண்டித்தனமான வாள் வெட்டு தாக்குதல் ! தலையில் 26 தையல் ! சம்பவம் தொடர்பில் பார்த்தீபன் கருத்து கடந்த பாராளமன்ற தேர்தலில் கருணாவிற்கு ஆதரவாக பொத்துவில் பிரதேசத்தில் செயற்பட்ட சுரேஷ்குமார் , பொலிஸ் உத்தியோகத்தரான ருக்சன் , ராஜேந்திரன் என்பவர்களே என் மீது காட்டுமிராண்டித்தனமாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ஊறணியில் உள்ள எனது விடுதியில் தங்கியிருந்த நேரம் தொலைபேசி அழைப்பொன்றில் கதைத்து கொண்டிருந்தேன் அந்த நேரம் மதில் மேலால் பாய்ந்து வந்தவர்கள் என் பின்னால் வந்து தலையில் வாளினால் தா…
-
- 0 replies
- 530 views
-
-
கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் கைமாற்றப்பட்டன… January 16, 2021 கிழக்கு மாகாணத்தில் தலைவர்களின் அதிகாரங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கடமைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரங்கள், அந்தந்த சபைகளின் உப தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, பதியத்தலாவை பிரதேசசபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக அதன் தலைவர் ஹேரத், பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். புதிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை, பதியத்தலாவை பிரதேச சபையின் உபதலைவர் கோணபுரவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இறக்காமம…
-
- 0 replies
- 425 views
-
-
குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள் – தமிழ்த் தரப்பு கூட்டாக கோரிக்கை 13 Views இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு ஏதாவது பொருத்தமான பயனுள்ள சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கோ பாரப்படுத்துவதற்கான நடவடிக்கையை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகள் எடுக்கவேண்டும் என தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம்வகிக்கும் 42 நாடுகளின் தூதரகங்களின் தலைவர்களிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில் தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில் சமூகபிரதிநிதிகளும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். தமிழ்த…
-
- 0 replies
- 310 views
-
-
தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன் எச்சரிக்கை! இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘புதிய அரசமைப்பு உருவாகி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும். புதிய அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் நாட்டில் அமைதி, சமாதானம், சுபீட்சம் எதுவும் ஏற்படாது. ஆனபடியால் ஆட்சி…
-
- 6 replies
- 734 views
-