Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தரம் ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது.! கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் ஆறு கற்பதற்காக முன்னணிப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றிருந்தது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு 331,741 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிருந்த நிலையில், 326,264 பேர் அதற்காக தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தரம் ஆறு மாணவர்களை பிரபல பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு…

  2. கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் சாந்தபுரம் கிராமத்தில் காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து வருகை தந்த அதிகாரிகளை பதிவுகளை மேற்கொள்ள விடாது எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். கடந்த வாரம் ஓட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகளால் சாந்தபுரம் கிராமத்தின் பல பகுதிகள் படம் பிடிக்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து இன்று (15.01.2021) காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள் சாந்தபுரம் கிராமத்தின் பொது நோக்கு மண்டபத்திற்கு வருகை தந்து மக்களையும் அழைத்திருந்தனர். இதன் போது மக்கள் தங்களது கடும் எதிர்ப்பினை தெ…

  3. யாழ்.பல்கலையில் தூபி அமைக்கும் பணிகள் ஆரம்பம்: January 15, 2021 யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட நிலையில் அதனை மீள அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த வெள்ளிக்கிழமை (08) இரவு துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய இடித்தழிக்கபட்டது. அதனை அடுத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மீள புதிதாக தூபி அமைக்க துணைவேந்தர் இணக்கம் தெரிவித்ததை அடுத்து கடந்த திங்கட்கிழமை (11) காலை ஏழு மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதனை அடுத்து புதிய தூபி அமைப்பதற்காக கடந்த புதன்கிழமை (13) மாணவர்களின் மேற்பார்வையோடு பொறியியலாளர், பல்கலைக்கழக …

  4. நினைவிடங்களை அழிக்கலாம், நினைவுகளை அல்ல… January 14, 2021 இலங்கை அரசு , மக்களின் அடிப்படை உரிமைகளையும் நல்லிணக்க செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக அழித்தொழித்து வருவதற்கெதிரான கூட்டு கண்டன அறிக்கை! 2009 போரின் முடிவின்போது , முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் மக்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துள், பாதிக்கப்பட்ட மாணவர்களால் நிறுவப்பட்டிருந்த நினைவிடம் இரவோடிரவாகத் தகர்க்கப்பட்டதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். வெறுமனே மீள அடிக்கல் நடுவதோ ,மாணவர்களின் போராட்டத்தினை இதன் மூலம் முடித்து வைப்பதோ தீர்வாகாது! அழிக்கப்பட்ட நினைவிடம் மீள உடன் கட்டியெழுப்பப்படல் வேண்டுமென்றும் அதன்போது முன்னைய நினைவிடத்தின் தகர்க்கப்பட்…

  5. மனித உரிமை நிலை மிக மோசமடைந்துள்ளது – இலங்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் 4 Views ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மிக மோசமடைந்துள்ளன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று வெளியிட்ட 2021 ஆண்டுக்கான சர்வதேச அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமைகள் ஆர்வலர்கள், கடந்த காலத்தில் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் அவர்கள் மீதான கண்காணிப்புக்களை அரச படைகள் அதிகரித்துள்ளன. சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்கள், பாகுபாடுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்துள்ளனர். நீதித்துறையின் சு…

  6. இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் 19 Views எந்தவொரு புதிய தீர்மானங்களும், பொறுப்பு கூரலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது. அத்தீர்மானமானது இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் அல்லது விசேடமாக நிறுவப்பட்ட சர்வதேச தீர்ப்பாயத்தின் முன் கொண்டு சென்று நிறுத்த உதவ வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பில் ஐ நா உயர்ஸ்தானிகர் மற்றும் இணை தலைமை நாடுகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் இக்கோரிக்கையை விட…

  7. இலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளதாக கவலை! இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சிறுபான்மை சமூகத்தினர் பாகுபாட்டையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்குவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகத்தினரே கொரோனாவை திட்டமிட்டு பரப்பி வருவதாக சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் குறித்த அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கங்கள் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல…

  8. பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம் இன்றைய தினம் (13.01.2021)சிறப்பாக இடம்பெற்றது. இன்றுகாலை முதல் சிறப்பு பூஜைகள் இடம்பெற்று அபிஷேகம் இடம்பெற்றது. இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, பல பொலிஸார், அரச புலனாய்வாளர்கள் ஆலய சூழலில் நிறுத்தப்பட்டிருந்தனர். அளவுக்கதிகமான பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்பை தவிர எந்தவிதமான இடையூறுகளும் இன்றி பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இந்தப் பொங்கல் நிகழ்வில் செம்மலை கிராம மக்கள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என பலர்…

  9. யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு நல்லூரான் செம்மணி வளைவு எதிர்வரும் 14 ஆம் திகதி பொங்கல் தினத்தன்று நண்பகல் 12 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது. நல்லூர் கந்தனின் அடியவர்களின் வேண்டுகளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் இந்நத வளைவு செம்மணி வீதியில் புதிதாக, பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. யாழ். மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களின் புனித வாழ்க்கை நெறியான கந்தபுராண கலாசாரத்தின் அடையாளங்கள் பல இந்த வளைவில் வனப்புற பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வளைவு அமைக்க முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், நிதியொதுக்கீடுகளை பெற்றுக்கொடுத்ததோடு, தனது சொந்த நிதி உ…

  10. யாழ்.பல்கலைக்கழ வளாகத்தில்.. முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கும் ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பம்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது. மாணவர்களின் மேற்பார்வையோடு பொறியியலாளர், பல்கலைக்கழக கட்டட பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை பிரிவினரால் நில அளவுத்திட்ட பிரமாணங்கள் போன்றன கணிக்கப்பட்டன. இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபியை அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. http://athavannews.com…

    • 2 replies
    • 1.4k views
  11. புதியவைரசினை கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லை- பாதிக்கப்பட்ட வேறுநபர்கள் ஏற்கனவே இலங்கை வந்திருக்கலாம்-ரவிகுமுதேஸ் Digital News Team 2021-01-14T09:15:30 புதியவீரியமிக்க கொரோனா வைரசினை அடையாளம் காணும் விடயத்தில் சுகாதார அமைச்சு பொறுப்புணர்வற்ற விதத்தில் செயற்பட்டுள்ளது என அரசாங்க மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் குற்றம்சாட்டியுள்ளார். புதிய வீரியமிக்க வைரஸ் உலகின் பல நாடுகளிற்கும் பரவியுள்ளதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரும் மரபணுபகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட…

    • 1 reply
    • 346 views
  12. யாழ். பல்கலை கிளிநொச்சி வாளாகத்தில் புத்த விகாரை சேதமாக்கப்பட்டதாகத் தெரிவிப்பு by : Litharsan யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வளாகத்தில் இந்து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்க தேவாலயம் என்பன காணப்படுகின்ற நிலையில் புத்த விகாரையும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/wp-content/uploads/2021/01/Jaffna-University-Kilinochchi-Campus-2.jpg யாழ். பல்கலை கிளிநொச்சி வாளாக…

    • 5 replies
    • 988 views
  13. தமிழர் திருநாளாம் தை திருநாள் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தெற்று அச்சம் காரனமாக சுகாதார நடை முறைகளை பின்பற்றி பொங்கல் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. https://newuthayan.com/யாழில்-வெகு-விமர்சையாக-ப/

  14. கிளிநொச்சி மாவட்டத்தில் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பல ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 2020 கால போகம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சுமார் 20 வீதமான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன என கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அறுடைக்குத் தயாராக இருந்த பருவத்தில் ஏற்பபட்ட வெள்ளம் காரணமாக இந்த அழிவுகள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எவ்வளவு ஏக்கர் அழிவடைந்துள்ளது என்பதனை வெள்ளம் வடிந்தோடிய பின்னரே மதிப்பீடு செய்யமுடியும் எனவும் கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.…

  15. (லியோ நிரோஷ தர்ஷன்) யாழ். பல்கலைக்கழகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக பலவந்தமாக அகற்றப்பட்டது. பின்னர் மீண்டும் அதனை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் உலகளாவிய ரீதியில் அந்த உடைப்பு சம்பவம் ஏற்படுத்திய தாக்கமும் பின்னடைவும் இலங்கைக்கு எதிரான வலுவான நடவடிக்கைக்கான தீர்மானமொன்றின் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/143183/si.jpg எனவே எதிர்வரும் மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக வலுவானதொரு தீர்மானத்தை பிரித்தானிய அரசு கொண்டு வர வேண்டும் என்று பிரித்தானிய தொழிற்கட்சியின் பாராள…

  16. (நா.தனுஜா) யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புச் சம்பவம் பெரிதும் கவலையளிப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இவ்வாறானதொரு பின்னணியில் நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கான நியாயாதிக்கம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/143185/EU.jpg இது குறித்து இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய அலுவலக்கத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவித்தூபி இடித்து அகற்றப்பட்டமை க…

  17. அமைச்சர் டக்ளஸின் பொங்கல் தின வாழ்த்து செய்தி எமது மக்களின் வாழ்விடங்களிலும், ஒவ்வொரு இல்லங்களிலும் புது மகிழ்ச்சி பொங்கிடும் என்ற பெரு நம்பிக்கையோடு பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை அகம் மகிழ்ந்து வரவேற்போம் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வாழ்த்து செய்தியில்.. உழவர் திருநாள் என்றும் தமிழர் பெருநாள் என்றும் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடி வரும் எமது மக்கள், இயற்கையை வணங்கிய எமது முன்னோர்கள் வழிநின்று தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவும் காலந்தோறும் பாதுகாத்து வருகின்றனர். வாழ்வெங்கும் வலி சுமந்த எமது மக்கள் தை ப…

    • 0 replies
    • 573 views
  18. நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது! by : Litharsan யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியிலும், நிதி ஒதுக்கீட்டிலும் இந்த அலங்கார வளைவு சம்பிரதாய, பண்பாட்டுச் சின்னங்களைத் தாங்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கார வளைவின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்றிரவு விசேட யாக பூசைகள் இடம்பெற்றன. இந்நிலையில், தைத்திருநாளான…

    • 0 replies
    • 819 views
  19. வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளை கிளிநொச்சி அரச அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர் January 13, 2021 வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் இன்று பார்வையிட்டனர். இன்று முற்பகல் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முரசுமோட்டை ஐயன் கோவிலடி பகுதி மற்றும் கண்டாவளை கிராம அலுவலர் பிரிவுகளில் ஏற்பட்ட வெள்ள நிலை தொடர்பான கள ஆய்வினை மேற்கொண்டனர். கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ர…

  20. தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன் எச்சரிக்கை! பொங்கல் வாழ்த்துச் செய்தி By Batticaloa இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘புதிய அரசமைப்பு உருவாகி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும்.புதிய அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் நாட்டில் அமைதி, சமாதானம், ச…

  21. புதிய அரசமைப்பானது நிரந்தரத் தீர்வைக்காண வழிகாட்ட வேண்டும்.! - சம்பந்தன் சுட்டிக்காட்டு "தமிழர்களும் இலங்கைத் திருநாட்டின் பிள்ளைகள். எம்மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாமல் - எம்மக்களைப் புறந்தள்ளிவைத்துவிட்டு எந்தக் கருமத்தையும் ஆட்சியாளர்கள் முன்னெடுக்க முடியாது. தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள புதிய அரசமைப்பானது நிரந்தரத் தீர்வைக்காண வழிகாட்ட வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "புதிய அரசமைப்பு உருவாகி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் அது நாட்டுக்கும…

  22. சூரியன் எமக்குச் செய்த நன்மை அனைத்துக்கும் நன்றி கூறுவோமாக’ -க.வி.விக்னேஸ்வரன் 12 Views கொரோனாவின் நிழலில் இம்முறை பொங்கல் பண்டிகை வருகின்றது. வீட்டில் இருந்து கொண்டே சூரியனை நோக்கி இதுவரை சூரியன் எமக்குச் செய்த நன்மை அனைத்துக்கும் நன்றி கூறுவோமாக என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், “விவசாயிகளின் வாழ்க்கையில் வரும் முக்கிய பண்டிகை தைப்பொங்கல். தமிழர் பிரதேசங்களில் தை மாதமே அறுவடை செய்யும் மாதம். நெல் வயலில் பட்டபாட்டுக்கு விவசாயிகள் பயன்பெறும் காலம் இது. தமிழர்களும் இதுவரை காலம் பட்ட பாட்டிற்கு இம்முறைப் பங்குனி மாதப் …

  23. யாழ். மாநகர சபை எல்லைக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்க தீர்மானம்

    • 0 replies
    • 367 views
  24. சிறுமி வீடொன்றில் இருந்து சடலமாக மீட்பு – விசாரணை கோரி மக்கள் போராட்டம் 37 Views மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் 11வயது சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை நடாத்தக்கோரியும் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியும் பெரியகல்லாறு பிரதான வீதி மற்றும் கல்முனை வீதிகளை மறித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 11வயது சிறுமி ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.