ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142921 topics in this forum
-
பாப்பரசரின் பிரதிநிதி யாழ். விஜயம் யாழ். நிலைமைகளை நேரில் அறிவதற் காக பாப்பரசரின் இலங்கைப் பிரதிநிதியான அதிவண. மரியோ சொனாறி நேற்று யாழ்ப் பாணம் வந்துள்ளார். விமானம் மூலம் நேற்றுப் பிற்பகல் யாழ்.வந்த அவர் யாழ்.ஆயர் அதிவண. தோமஸ்சவுந்தரநாயகம் மற்றும் குருமார்களுடன் கலந்துரையாடினார். யாழ். சிற்றாலயத்தில் இன்று காலை விசேட திருப்பலியை அவர் ஒப்புக்கொடுக்கவுள்ளார் -உதயன்
-
- 1 reply
- 965 views
-
-
அரசு, டக்ளஸ், இந்திய சதி வலையில் யாழ் மீனவர்கள் விழுந்தார்களா? மாட்டினார்களா? வெள்ளிக்கிழமை, 18 பிப்ரவரி 2011 07:06 சிறீலங்கா - இந்திய அரசாங்கங்கள் தமக்கிடையேயான மற்றொரு அரசியல் நகர்வை ஈ.பி.டி.பி துணைப்படைக் குழுவின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் உதவியுடன் மீண்டும் அரங்கேற்றியுள்ளன. சிறீலங்கா அரசாங்கம் ஒட்டுக்குழுவின் உதவியுடன் மேற்கொண்டுள்ள இந்த செயற்பாட்டுக்கு, யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்கள் பலியானார்களா? அல்லது பலியாக்கப்பட்டனரா? என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. தமிழீழக் கடல் எல்லைக்குள் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் எல்லை மீறுவது, உரிய கடற் கலங்களைப் பாவிக்காது மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது என்பது ஈழத்தமிழ் கடற்றொழிலாளர்களை வெகுவாகப் பாதிக்கும் எ…
-
- 2 replies
- 1.1k views
-
-
சற்று முன் பலத்த பாதுகாப்புடன் யாழ். சென்றார் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன் பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். வடக்கின் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டிருந்தது. அத்துடன், வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் நேரில் சென்று காண்காணிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01…
-
- 15 replies
- 1.9k views
-
-
மட்டக்களப்பு- திருமலையில் வன்முறைகள் மோசம்: போர்நிறுத்த கண்காணிப்புக் குழு எச்சரிக்கை. மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் வன்முறைகள் மோசமடைந்து வருவது குறித்து இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் வன்முறைகள் மோசமடைந்து வருவது குறித்து இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கில் கிளர்ந்துள்ள வன்முறை, போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்ததோடு மட்டுமல்லாமல் பெரும் அபாயத்துக்குள் சென்றுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் குறிப்பாக வாகரையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது என்று அதன் அறிக்கை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலி…
-
- 0 replies
- 722 views
-
-
வெள்ளிக்கிழமை, 25, பிப்ரவரி 2011 (21:58 IST) ஆண்டன் பாலசிங்கத்திடம் அண்ணன் பிரபாகரன் சொல்லியிருந்த வார்த்தைகள் தான் உண்மை: சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கடந்த 15ஆம் தேதி புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டு 10 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாமல் இருப்பதை கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. முத்துக்குமார் உயிர்விட்ட இடத்தில் நடைபெறும் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான், தியாகு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகையில், மதுரை …
-
- 2 replies
- 1.8k views
-
-
-வடமலை ராஜ்குமார் தென்னைமரவாடி கிராம மக்களின் காணி விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவரும் தழிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினருமான சி.தண்டதயுதபாணி கிழக்கு மாகாண சபையின் 21ஆம் திகதிய அமர்விலே தனிநபர் பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளார். தென்னைமரவாடி கிராம மக்களின் பூர்வீக வயல் நிலங்களை அத்துமீறி ஆக்கிரமித்த பெரும்பான்மை இன விவசாயிகளுக்கும் அக்காணியை பங்கிட்டு வழங்க முயற்சி செய்துவரும் கிழக்;கு மாகாண காணி ஆணையாளரின் செயற்பாடு குறித்து கிழக்கு மாகாண எதிர் கட்சித் தலைவரும் தழிழத் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, த…
-
- 0 replies
- 259 views
-
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் -புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபைக்கு கடிதம் By RAJEEBAN 26 JAN, 2023 | 12:11 PM அமெரிக்கா இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என அமெரிக்காவை சேர்ந்த ஆறு புலம்பெயர் தமிழர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளன. அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆறு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.தமிழர்கள் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவருகி…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
விடுதலைபுலிகள் என சந்தேகிக்கப்படும் 15 பேர் கிழக்கில் கைது. நிஷாந்தி வாகரையில் இருந்து இடம்பெயரும் மக்களுடன் அகதிகளாக ஊடுருவி செல்ல முயன்ற விடுதலை புலிகள் என சந்தேகிக்கப்படும் 15 பேரை கைது செய்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. . கிழக்கில் தொடரும் மோதல்களால் வாகரையிலிருந்து பாதுக்கப்பு கரிதி மக்கள் இடம்பெய்ருகின்றனர்.இன்னும் 10,000 இலிருந்து 15,000 வரையான மக்கள் வாகரையிலிருந்து இடம்பெயர விரும்புகின்றனர் என இராணுவ தரப்பு மேலும் தெரிவித்தது. http://www.virakesari.lk
-
- 1 reply
- 1.1k views
-
-
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் கடந்த சில தினங்களாக கடல் மீன்பிடி அமோகமாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக கரைவலை, மாயவலை, தோணி வலை கடல் மீன்பிடியாளர்களுக்கு மீன்பிடி அமோகமாக இடம்பெற்றுவருவதால் கடற்றொழிலாளர்கள் புதிய ஆர்வத்துடன் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் கீரி இன மீன் அதிகம் பிடிபடுவதால், கடுவாடு போடப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை நிந்தவூர் பிரதேசத்தில் கரைவலை மீன்பிடியாளர்களுக்கு பல லட்சம் ரூபா பெறுமதியான கீரிமீன்கள் பிடிபட்டன. இந்த மீன்கள் உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன் கருவாடாகவும் பதப்படுத்தப்பட்டன - http://malarum.com/article/tam/2014/10/28/6527…
-
- 13 replies
- 2.1k views
-
-
சிறீலங்காவில் புதிய பொருளாதார நிபுணர்கள் சபை சிறீலங்கா ஐனாதிபதியால் சிறீலங்காவின் பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கான சிறப்பு நிபுணர்கள் சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சபையில் பேராசிரியர் லக்ஸ்மன், பேராசிரியர் புத்திக்க ஹெட்டவிதாரன, டொக்ரர் சமன் கெலிகம, லொயிட் பெர்ணாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் அஐpத் நிவாட் கப்ரால், உதவி ஆளுநர் ராணி nஐயமகா தேசிய திட்டமிடல் பொது அதிகாரி அபேகுணவர்த்தன நெடுஞ்சாலைகள் செயலாளர் அமரசேகர மற்றும் யுடைய கம்பொல போன்றோர் அங்கம் வகிக்கிறார்கள். இச் சங்கம் நேரயாக சிறீலங்கா ஐனாதிபதியின் கீழ் செயற்படும் எனவும் மாதத்திற்கு இருதடவைகள் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் கூட்டம் ஒன்றில் சிறீலங்கா ஜனாதிபதி உரைய…
-
- 0 replies
- 681 views
-
-
ஆண்ட பரம்பரை மீண்டும் தன்மானத்துடன் வாழ, நாதியற்று வாழும் எம்மக்களுக்கு நீதி கிடைக்க ஓவ்வொரு தமிழனும் தனது பங்கைத் தவறாமல் செலுத்தி இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை மீள் அமைப்போம் என சூளுரைத்துத் தொடங்கிய நாடுகடந்த தமிழீழ அரசை, ஈழத்தமிழர்களின் கனவை, உலகத் தமிழரின் விருப்பை ஊதாசீனம் செய்து பிரிந்து செய்வது சரியா, பிழையா, முறையா, நேர்மையானதா என ஒரு கணம் சிந்தியுங்கள். தமிழரின் ஒற்றுமையை, அதன் தேவையை எடுத்துக்காட்டும் விதத்தில் நடக்கவேண்டிய நாமே பிரிவினைக்குக் காரணமாகலாமா? பிரிவினை என்ற சொல்லை தமிழ் அகராதியில் இருந்து அகற்றவேண்டிய நாமே பிரிவிணைக்கு வழிவகுக்கலாமா? தேசியம் பேசிய நாம் இன்று பிரிந்து நின்று எம்மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையைச் சிதைக்கலாமா? …
-
- 0 replies
- 829 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- பதுளை ஹல்துமுல்ல கொஸ்லாந்தை மீரியாபெத்தை மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. உயிர் பிழைத்த மக்களை அரசாங்கம் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மர்மம் புரியவில்லை என ஊடக வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. சம்பவம் இடம்பெற்று சில தினங்கள் கடந்துள்ள நிலையிலும், மண் சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை புள்ளி விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. சம்பவம் இடம்பெற்ற தினத்தில் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் 192 பேரைக் காணவில்லை எனவும், ஏனைய ஊடகங்கள் 400 பேரைக் காணவில்லை எனவும் தெரிவித்திருந்தன. எனினும், தற்போது இந்த…
-
- 0 replies
- 393 views
-
-
அமெரிக்கக் குடிமகன் என்ற காரணத்தால் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் எந்தச் சட்ட சிக்கலும் இல்லை. எனக்கு எந்தத் தடையும் இல்லை. அமெரிக்கா அவ்வாறான கருத்துக்களைக் கூறியதாக உறுதியான தகவல்களும் இல்லை. இவ்வாறு முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் அவரைச் சந்தித்த பிரமுகர்களுடனான கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவித்தாவது http://newuthayan.com/story/15/தேர்தலில்-களமிறங்குவதை-தீர்மானிப்பது-மகிந்தவே-அமெரிக்கா-அல்ல-கோத்தபாய.html
-
- 2 replies
- 937 views
-
-
197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைப்பு!! யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேறவுள்ள 197 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் தலா 38,000 ரூபாய் காசோலைகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை பூர்வீக மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பலருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் காசோலைகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது. …
-
- 1 reply
- 455 views
-
-
சிறிலங்காவில் பெற்றோலின் விலை 5 ரூபாயினால் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஒரு லீற்றர் ஓக்ரேன் 90 பெற்றோலின் விலை 97 ரூபாயாகவும் ஒரு லீற்றர் ஓக்ரேன் 95 பெற்றோலின் விலை 100 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணை விலை அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்கான காரணம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெற்றோலின் விலையில் அதிகரிப்பு ஏற்படாவிட்டால் 175 மில்லியன் ரூபாயை இழக்க வேண்டி ஏற்படும் என்று கடந்த வாரம் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது. பெற்றோலியக் கூட்டுத்தாபன முகாமையாளர் அசந்தா டீ மெல் தெரிவிக்கையில், முத்துராஜவெலவில் இருந்து டீசல் கொண்ட…
-
- 0 replies
- 696 views
-
-
கால் கடுக்க வீதியில் விடப்பட்ட பெண்தலைமைக் குடும்பங்கள்- பாலைப்பழங்களை விற்று வாழ்க்கை நடத்தும் கொடுமை!! ஏ- –32 வீதியால் பயணிக்கும் அனைவரும் பார்க்கும் காட்சி வீதியோரத்தில் வைத்து விற்கப்படும் பாலைப் பழங்கள். அவற்றை விற்போர் பெரும்பாலும் குடும்பத்தைத் தலைமைதாங்கும் பெண்களே. வீதியில் வாகனங்கள் வரும்போது பைகளில் உள்ள பாலைப் பழங்களைக் காட்டுகின்றனர். பெரும்பாலான வாகனங்கள் அவர்களைப் பொருட்படுத்தாது சென்று விடுகின்றன. கடந்து செல்லும் வாகனங்களை ஏமாற்றத்துடன் நோக்கியவாறு அவர்கள் அடுத்த வாக…
-
- 0 replies
- 310 views
-
-
வெளிநாட்டு - உள்நாட்டு தன்னார்வ நிறுவனங்கள் புலிகளுக்கு உதவுகின்றன: கெஹெலிய ரம்புக்வெல சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சில வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் நாட்டின் சட்ட விதிகளை மீறி பயங்கரவாதத்திற்கு துணைபுரிவதாக குற்றம்சுமத்தியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை காஞ்சிக்குடிச்சாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ மனையொன்றையும் படையினர் கைப்பற்றப்பட்டதாகவும் அங்கு நெதர்லாந்தை சேர்ந்த சோவா நிறுவனத்தின் உடமைகள் காணப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை சிறீலங்கா பாதுகாப்பு மையம் வெளீயிட்ட செய்திக் குறிப்பில் சேவ் த சில்ரன், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் …
-
- 3 replies
- 1.3k views
-
-
கொழும்பு மாவட்டத்திலுள்ள கொழும்பு மாநகரசபை தெஹிவளை,கல்கிஸை மாநகரசபை,ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டை மாநகரசபை,கொலன்னாவை நகரசபை,கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகள் ஒரே கட்டமைப்பில் கொண்டுவரப்பட்டு மகா கொழும்பு கூட்டுத்தாபனமாக மாற்றப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த முயற்சிகளுக்கு பின்னால் கொழும்பு தெஹிவளை,கல்கிஸை மாநகரசபைகள்,கொலன்னாவை நகரசபை,கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை பகுதிகளிலே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தமிழ்,முஸ்லிம் மக்களை குறிவைத்து பாதிக்கும் இரகசிய நோக்கங்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் அரசாங்கம் பதில் அளிக்கவேண்டும். கொழும்பு மாவட்டத்திலே வாழும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மிக அதிகமான பிரதிநிதிகளைக் கொண்டுள்ள க…
-
- 1 reply
- 930 views
-
-
இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று மாலை நாடு திரும்பியுள்ளார். இதனிடையே நாடு திரும்பிய முதலமைச்சர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் :- இந்தியாவில் அகதிகளாகத் தங்கியுள்ளவர்கள், தாயகம் திரும்ப வேண்டும் என்று மீண்டும் அழைப்பு விடுத்துள்ள போதிலும், தாம் பலவந்தமாக அவர்களை திருப்பி அழைக்கப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். "போர்ச்சூழல் காரணமாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களின் மீள்குடியேற்றத்திற்காக இந்திய, இலங்கை அரசுகளுடன் வடக்கு மாகாணசபையும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, இந்தியாவுடன் வடக்கு மாகாணசபை ஆலோசனை நடத்தி வருகிறது என்றார். தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள மக்களின் நிலங…
-
- 0 replies
- 625 views
-
-
மன்னார் பெரியகடை கிராம மது விற்பனை நிலையத்தினால் மக்கள் பாதிப்பு…. பொறுப்புள்ள அதிகாரிகள் மௌனம்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகடை கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தினால் குறித்த கிராம மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக குறித்த கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது குறித்த மது விற்பனை நிலையத்தினை அப்பகுதியிலேயே நிரந்தர வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டதிலிருந்…
-
- 0 replies
- 225 views
-
-
புற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழில் விசேட வைத்தியசாலை! புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம், பதுளை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மருத்துவ ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வுகூடம் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு சுகா…
-
- 3 replies
- 735 views
- 1 follower
-
-
கிழக்கில் சூழ்ந்துள்ள போர் மேகங்களும் அரசியல் இராணுவ யதார்த்த நிலைகளும்(சிறப்பு அரசியல் பார்வை) எழுதியவர் நமது செய்தியாளர் Thursday, 18 January 2007 இணைந்திருந்த வடகிழக்கு மாகாணத்தை மூன்றாகப் பிரித்து அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்திய கையோடு கிழக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாகாணத்திலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை தனியாகவும் திருகோணமலை மாவட்டத்தை தனியாகவும் பிரித்த போது கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பலைகள் எழாதவாறு மரண அச்சுறுத்தல்களுக்குள் தள்ளி மௌனிகளாக்கி விட்டு கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காக ஸ்ர…
-
- 4 replies
- 2.2k views
-
-
நியூயார்க்: கருணா கும்பலுக்கு சிறுவர்களைப் பிடித்துத் தரும் வேலையில் இலங்கை ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து போன கருணா தலைமையில் ஒரு கும்பல் அங்கு செயல்பட்டு வருகிறது. இலங்கையின் கிழக்குப் பகுதியில் சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் இவர்களுக்கு இலங்கை ராணுவம் முழு ஆதரவும் ஆயுதமும் தருகிறது. இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்தின் கீழ்தான் கருணா கும்பலும் செயல்பட்டு வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றார் கருணா. அவருடன் சிறு அளவிலான வீரர்களும் உடன் சென்றனர். அதன் பின்னர் அவர்களைப் பயன்படுத்தி ராணுவம் புலிகள் மீது தாக்குதல் ந…
-
- 8 replies
- 2.2k views
-
-
19 பேருக்கு விரைவில் தூக்கு – மைத்திரி எடுத்த திடீர் முடிவு!! தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விபரங்களை வழங்குமாறு, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உரிய தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று , அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரச கவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை மீண்டும் நடைமுறைக்குகு் கொண்டு வருவது தொடர்பான அமை…
-
- 2 replies
- 825 views
-
-
யுத்தத்தை விட வீதி விபத்துகள் பயங்கரமானவை - மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி Published By: VISHNU 15 MAR, 2023 | 04:35 PM தற்போதைய காலகட்டமானது, வீதி விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் கால கட்டம் என்பதினால், இளைஞர்கள் வீதி விபத்துக்கள் விடயத்தில் மிகவும் கரிசனையாக செயல்பட வேண்டுமென இலங்கை இராணுவத்தின் 24ம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் 18 வது விஜயபாகு காலாட்படையணி முகாமின் கட்டளை அதிகாரி மேஜர் உதித்த கலுஆராச்சி தலைமையில் (11) நடைபெற்ற இளைஞர் தன்னார்வ அணியின் அங்கத்தவர்களுக்கான தலைமைத்துவ வழிகாட்டல் செயலமர்வில் பிரதம வளவாளராகக் கலந்து கொண்டு உரையா…
-
- 0 replies
- 478 views
- 1 follower
-