ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
அம்பாறை – மாளிகைக்காடு கிழக்கு பகுதிக்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/Maligaikadu-1-720x450.jpg அம்பாறை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதி மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மறுஅறிவித்தல் வரை பாதைகள் மூடப்பட்டுள்ளன. காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, காரைதீவுப் பிரதேசத்துக்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்குப் பிரதேசம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் முற்றாக முடக்கப்பட்டது. இன்று கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் நடமாடிய பகுதிகளை உள்ளடக்கியே…
-
- 0 replies
- 323 views
-
-
யாழ்.ஆயர், பாகிஸ்தானில்.. காலமானார். பாகிஸ்தானின் குவேற்றா மறை மாவட்டத்தின் ஆயராக பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆயர் காலமாகியுள்ளார். யாழ்ப்பாணம்- பாஷையூரைச் சேர்ந்த அமலமரித் தியாகிகள் சபையைச் சேர்ந்த பேரருட் கலாநிதி விக்ரர் ஞானப்பிரகாசம் அமதி ஆண்டகையே நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலமாகியுள்ளார். இவர் 1940ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 21 ஆம் திகதி, யாழ்ப்பாணம் பாஷையூரில் பிறந்தார்.தனது பாடசாலைக் கல்வியை யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் நிறைவு செய்துள்ளார். இறை அழைத்தலுக்குப் பணிந்து குருமடம் நுழைந்து களுத்துறையில் 1959ல் தனது முதலாவது நித்திய வாக்குறுதியை அளித்தார். அதனைத் தொடர்ந்து, கண்டி- அன்னை தேசிய குருத்துவக் கல்லூரியில் தனது மெய்யியல்,…
-
- 2 replies
- 592 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று(வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது.தொழிநுட்ப கோளாறு காரணமாக கை உயர்த்தும் அடிப்படையில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.இதற்கமைய ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 97 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை என…
-
- 2 replies
- 439 views
-
-
மட்டு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அராஜகமான வேலைகளில் ஈடுபடுகின்றார் -இரா.சாணக்கியன் 28 Views மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர், பிரதேச சபைகளுக்குள் அத்துமீறி நுழைவதும் கதவை உடைப்பதும் என அராஜகமான வேலைகளில் ஈடுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மோசமான நிலைமையை உருவாக்கி வருகின்றார் என்று குற்றம் சுமத்தியுள்ளார் இரா.சாணக்கியன். மேலும் 2009ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியிலேயே இன்னும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவிக்கையில், “மயிலத்தமடு,மாதவனை பகுதகளில் இருக்கின்ற சூழலை பார்க்கின்றபோது ம…
-
- 0 replies
- 458 views
-
-
வாகனங்களையெல்லாம் மறித்து ஒரு கலவரம் கூட உருவாகுவதற்கு வாய்ப்பிருக்கின்றது: இரா. சாணக்கியன் December 14, 20201:26 am மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பிரதேச சபைகளுக்குள் அத்துமீறி நுழைவதும், கதவை உடைப்பதும் என அராஜகமான வேலைகளில் ஈடுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மோசமான நிலைமையை உருவாக்கி வருகின்றார். அவர் 2009ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் இன்னும் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன…
-
- 0 replies
- 327 views
-
-
மைக் கிடைத்தால் வீராப்பு; திமைறைவில் பதவியாசையில் அலைச்சல்: சிறிதரனின் சின்னத்தனங்கள் அம்பலம்! December 14, 20206:28 தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொறடா பதவிக்காக சிறிதரன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுக்கினருமான த.சித்தார்த்தன். கொறடா பதவியை சிறிதரன் நேர்மையாக கையாளவில்லையென கூட்டமைப்பின் உறுப்பினர்களின் கருத்தையும், ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். மின்னல் நிகழ்ச்சியில் நேற்று (13) கலந்து கொண்டிருந்த போது இந்த தகவல்களை அம்பலப்படுத்தியிருந்தார். கடந்த 6ஆம் திகதி மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொ…
-
- 0 replies
- 314 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்ட அணுகுமுறை மாற்றமே ஈழத்தமிழர் உரிமைகளுக்குப் பாதுகாப்பை அளிக்கும் 33 Views சிறீலங்கா இம்முறை வரவுசெலவுத் திட்டத்திலும், நாட்டின் நாளாந்தத் தேவைகளுக்கே நிதிப்பற்றாக்குறை வருமென்ற பெரும் அச்சமுள்ள சூழலிலும் மக்களின் நலவாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காது பெருந்தொகையான பணத்தை நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் படையினருக்கு ஒதுக்கியுள்ளது. இதனை சமத்துவமுள்ள குடிகளாக அல்லாது தோற்கடிக்கப்பட்ட மக்களாக ஈழத்தமிழர்களை தாம் நடாத்தும் இன்றைய சூழலில் அதனை சனநாயக வழிகளில் எதிர்க்கும் ஈழத்தமிழரை சிறீலங்காவின் இறைமை பிரதேச ஒருமைப்பாடு என்பவற்றைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அழித்து ஒழித்து ஈழத்தமிழின அழிப்பை செய்வதற…
-
- 0 replies
- 321 views
-
-
20 ஆவது திருத்தத்தை ஆதரித்தோர் மீது நடவடிக்கை? முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம் ஆராய்வு 24 Views தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடம் முழுமையாக ஒன்றுகூடுவது சாத்தியமில்லையென்பதால், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய, பதவிவழி உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதற்கான முக்கிய நோக்கம் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தித்திற்கு ஆதரவாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் வாக்களித்ததன் தொடர்பிலும், அதன் பின்னரான அவர்களின் நடவடிக்கை தொடர்பிலும் விளக்கம் கோருவதற்காகும். தலைவர் இதற்கான அவசியத்தை வலியுறுத்தியதன் பின்னர் …
-
- 2 replies
- 467 views
-
-
கிழக்கில் புதிய மதவாதக் குழுவில் ஆயிரக்கணக்கானோர் இணைவு – புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் 21 Views “சுப்பர் முஸ்லிம்” என்ற பெயரில் கல்முனையை மையமாக கொண்டு இஸ்லாமிய மதவாதக் குழுவொன்று உருவாகி வருகின்றமை தொடர்பில் இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது என்று பிரபல சிங்கள நாளிதழ் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக கலன்தர் லெப்பை மொஹமட் என்ற நபர் செயல்பட்டு வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அந்த அமைப்பின் தலைவர் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என்றும் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுடன் இணைந்து 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்திற்காக சேர்க…
-
- 0 replies
- 352 views
-
-
மாகாணசபை முறைமையை ஒழித்து அதிகாரம் மத்தியிடம் வரவேண்டும் – சரத் வீரசேகர 16 Views மாகாணசபை முறைமையை முற்றாக இல்லாதொழித்து, அந்த அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- “அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாகவே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது என்பதாலேயே நான் ஆரம்பத்திலிருந்து அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றேன். 13 ஆவது திருத்தம் எம் மீது வலுகட்டாயமாகத் திணிக்கப்பட்டதொன்றாகும். ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து, பொதுமக்களைத் தாக்கி, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தனியாக வரவழைத…
-
- 0 replies
- 319 views
-
-
30 வயது. மும்மொழிப்புலமை. பாராளுமன்றத்தில் மிளிரும் இளைஞர்
-
- 0 replies
- 424 views
-
-
ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகாலமாக இழுத்தடிப்புகளே காணப்பட்டு வருகின்றது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் இருந்தே வெளியாகிவிட்டது. அதனால் தான் இந்த நாட்டில் இடம்பெற்ற மோசமான குற்றங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் குற்றங்கள் பல நடந்துள்ள காரணத்தினால் சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கொண்ட சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அரசாங்கங்கள் உருவாகும், வீழும் ஆனால் நீதிமன்ற சுயாதீனம் பலமானதாக இருக்க வேண்டும். இந்த நாட்டில்…
-
- 46 replies
- 4.8k views
-
-
எதிர்வரும் 26ம் திகதி முதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன December 13, 2020 இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் சர்வதேச விமான பயணங்களுக்காக விமான நிலையங்களை மீண்டும் திறக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளாா். முதலில் வணிக மற்றும் விசேட விமான சேவைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதெனத் தொிவித்துள்ள அவா் கட்டுநாயக்க, மத்தல, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளாா். இதன் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் சுகாதார வழிமுறைகள் வௌியிடப்படவுள்ளதாக தொிவித்துள்ள அவா் சர்வதேச விமான பயணங்களுக்காக இலங்கையை மீண்டும் திறப்பத…
-
- 9 replies
- 667 views
-
-
'இது ஒரு தேவையற்ற கேள்வி' என கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்த சம்பந்தன்! தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பது முக்கியமான கேள்வி அல்ல, தமிழ் தேசிய சுட்டமைப்பு என்ன செய்கிறது? இது எங்கே பயணிக்கின்றது? தமிழ் மக்களை எங்கே அழைத்துச் செல்கின்றது? இவைதான் முக்கியமான கேள்வி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஊடவியலாளர் ஒருவருக்கு தொலைபேசியில் வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப் புலிகளின் தலைவர்தான் உருவாக்கினார் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துவிட்டு தொலைபேசியின் அழைப்பினைத் துண்டித்துவிட்டார். …
-
- 22 replies
- 2.2k views
- 1 follower
-
-
புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள் – 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றவர்களை அம்பலப்படுத்திய அமைச்சர் December 11, 20206:29 am இந்த செய்தியை பகிருங்கள்! இறுதி கட்ட யுத்தம் நடைபெற்றபோது நாடாளுமன்றத்திலிருந்த போலி தமிழ் தேசியவாதிகள் புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்றே விரும்பியிருந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், பேரினவாத தீயிற்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசியவாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர். சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை …
-
- 36 replies
- 2.9k views
- 1 follower
-
-
ஜனாஷாக்களை அடக்க ஓட்டமாவடி - மஜ்மா நகரைத் தெரிவு செய்யுங்கள் - வாகனமும் ஆளணியும் நாம் தருகிறோம் - அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஹாறூன் (ஸஹ்வி) இஸ்லாமியர்களின் இறந்த உடலங்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடத்தைத்தேர்வு செய்யுமாறு கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது உண்மையாக இருக்குமாயின், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மஜ்மா நகர் பிரதேசத்தில் முஸ்லிம் பொது மையவாடிக்காக ஒதுக்கப்பட்ட சுமார் பத்து ஏக்கர் காணி உள்ளது. அதில் அடக்கம் செய்வதில் எமது பிரதேச மக்கள் எவருக்கும் எதுவித ஆட்சேபனையுமில்லை. நிலத்தடி நீர் சுமார் 30 அடி ஆழத்தில் உள்ள, குடியிருப்புக்கள் இல்லாத, கொழும்பு-மட்டக்களப்…
-
- 4 replies
- 586 views
-
-
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியின் ISIS அமைப்பு இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிவந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் ஐஎஸ் அமைப்பின் இலங்கை தலைவர் தற்போது அவுஸ்ரேலியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ருக்மான் ஜமீல் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.. ருக்மான் ஜமீலின் இரு புதல்வர்களும் சிரியாவில் பயிற்சி பெற்று வரும் வழியில் கட்டார் அரசினால் கைது செய்யப்பட்டு தற்போது டோஹா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் தகவல் வெளியிடப்பட்டுள்ளது https://www.madawalaenews.com/2020/12/isis.html
-
- 1 reply
- 478 views
-
-
வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு பிடியாணை! December 13, 2020 வவுனியா வெடுக்குநாரி மலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு, வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி காவற்துறையினரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தனர். அத்துடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கையும் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த ஒக்டோபர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஆலயத்தின் சார்பில் தலைவர் சசிகுமார், செயலாளர் தமிழ்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோர் முன…
-
- 1 reply
- 642 views
-
-
சம்பிக்க ரணவணக்க தான் ஒரு சிங்கள பௌத்த தலைவர் என்ற அபிப்பிராயத்தை மாற்றும் முயற்சியை ஆரம்பித்துள்ளாரா ? எக்கனமி நெக்ஸ்ட் சம்பிக்க ரணவக்க தான் ஆரம்பித்த ஜாதிஹ ஹெல உறுமயவின் பொதுசெயலாளர் பதவியிலிருந்து விலகி புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றார். தற்போது தான் சிங்கள பௌத்ததலைவர் என காணப்படும் அபிப்பிராயத்தை மாற்றி பரந்துபட்ட மக்கள் மத்தியில் தனது ஆதரவை அதிகரிப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே அவர் ஜாதிஹ ஹெல உறுமயவிலிருந்து விலகியுள்ளார். 55 வயதான சம்பிக்க ரணவக்க மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன அரசாங்கங்களில் அமைச்சராக பதவி வகித்தவர்- இரு தரப்பின் சார்பாகவும் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றவர். தனது பத…
-
- 0 replies
- 395 views
-
-
நான் சோழ பரம்பரை வீரன்; அட்டைக்கத்தி வீரனல்ல – அரசியல் எதிரிகளுக்கு மனோ சாட்டையடி 3 Views என் பாதையில் என்னை போக விடுங்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, தன்னை விமரிப்போருக்கு, அவரது முகநூல் தளத்தில் கடுமையாக பதிலளித்துள்ளார். மனோ கூறியுள்ளதாவது, சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச போன்றோருடன், அவர்களது முகத்துக்கு நேரேயே, பகிரங்கமாக “உண்மையை”, அவர்களது தாய்மொழியிலேயே எடுத்து கூறி, “உங்களை திருத்தி கொள்ளுங்கள்” என துணிச்சலாக அடித்து கூறும் எனக்கு, சில உள்நாட்டு, வெளிநாட்டு அறிவாளிகள் இப்போது அறிவுரை கூற வருகிறார்கள். அதென்ன அறிவுரை? “மனோவும், சரத்தும் ஒரே கூட்டணிகாரர்கள்தானே? தேர்தலுக்…
-
- 7 replies
- 1.3k views
-
-
அடுத்த வருடத்தின் ஏப்ரல் மாத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் – பிரதமர் பழைய முறையிலோ, புதிய முறையிலோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். பிரதமருக்கும், ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய விபரங்கள் ஆராயப்பட்டன. இந்தச் சந்திப்பு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. அடுத்தாண்டு ஏப்ரல் மாத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம் என மாகாண சபை அங்கத்தவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக…
-
- 1 reply
- 782 views
-
-
கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் – சுமந்திரன்.! திருகோணமலை கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம.ஆ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று (11) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரனின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் வன்னி ம…
-
- 1 reply
- 385 views
-
-
'சூப்பர் முஸ்லிம்' என்ற நாமத்தில் ஒரு தீவிரவாத அமைப்பு இலங்கையின் கல்முனை பகுதியில் இயங்கி வருவதாக சிங்கள பத்திரிகையான 'தினமின' செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறிப்பிட்ட அந்த அமைப்பின் தலைவராக செயற்படுபவர் வைத்தியர் கலந்தர் லெப்பே முஹம்மத். இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இந்நிலையில், கடந்த 2004ஆம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தின் போது அரச சார்பற்ற அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் பணம் வசூலித்து அப்பணத்தின் மூலமே இவ்வமைப்பை துவங்கியுள்ளார். அக் காலப்பகுதி தொட்டு இவர் தனது மத ரீதியான தீவிரவாத கொள்கையைப் பரப்பி வருகின்றார். 2019ஆம் ஆண்டளவில் இவரின் பிரச்சாரம…
-
- 2 replies
- 737 views
-
-
உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதி.? இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய இலங்கை அரசு அனுமதி வழங்காத நிலையில், மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இவ்விடயம் தொடர்பாக நீதி அமைச்சர் அலி சப்ரிக்கும் பலத்த அழுத்தங்கள் வழங்கப்படுவதால் அவர் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய முற்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலு…
-
- 2 replies
- 592 views
-
-
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றமைக்கு எதிராக வவுனியாவை சேர்ந்த மௌலவி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று (11.12.2020) காலை 10.30 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மௌலவி கருத்து தெரிவித்த போது, கொரோனா ஒரு கொடிய உயிர் கொல்லி நோயல்ல, பன்றி இறைச்சியில் உள்ள வைரசைவிட கொரோனாவில் கொடிய வைரஸ்கள் கிடையாது காய்ச்சலும், தலையிடியும், சளியும் எப்படி ஒரு மனிதனை கொல்லும். கொரோனாவுக்கு தீர்வு உடல்களை எரிப்பதா. ஏன் இந்த அநியாயத்தை முஸ்லிம்களுக்கு செய்கிறீர்கள். இன்றுவரை இறப்பவர் கொரானாவினால் தான் இறக்கின்றார் என்று எந்த ஒரு வைத்தியரும் நிரூபி…
-
- 10 replies
- 1.2k views
-