Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவுக்கு மஞ்சளை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மஞ்சள் அடங்கிய கொள்கலன்களை மீள இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய தீர்மானித்துள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுங்க திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டு, களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 62 மஞ்சள் அடங்கிய கொள்கலன்களை, மீள இந்தியாவுக்கு அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்தியாவிலிமிருந்து அபராதத் தொகையை அறவிட்டு, அதனை இந்தியாவுக்கே மீள் ஏற்றுமதி செய்யவுள்ளோம். மேலும், கைப்பற்றப்பட்டுள்ள கொள்கலன்களில் 1 மில்லியன் கிலோ கிராம் மஞ்சள் காணப்படுகின்றது. அத்துடன் இந்…

  2. 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை ஒன்றை அமைத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என என ராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த அரசா…

  3. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கக்கோரி பிள்ளையானின் தம்பியால் வழங்கப்பட்ட பணம்! வாழைச்சேனை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் என்ற பயத்தின் நிமிர்த்தமே பிரதேச சபையின் தவிசாளரால் நாளை கூட்டப்படவிருந்த வரவு செலவு திட்ட பிரேரணை கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக தவிசாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதேச சபையின் தவிசாளர் நாளை கூட்டப்படவிருந்த வரவு செலவு திட்ட பிரேரனையினை ஒத்தி வைப்பதாக ஊடகவாயிலான அறிக்கை விட்டுள்ளதை கண்டித்து பதினைந்து சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடக சந்திப்பொன்றினை ஓட்டமாவடி நாவலடியில் நடாத்தினர். குறித்த ஊடக சந்திப்பின் போது சபை உ…

  4. யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணத்தை முடக்கவுள்ளதாக சில பத்திரிகைகளில் தவறான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த செய்தியின் ஊடாக பொது மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரிடம் நேரடியாக தொடர்புகளைப் பேணிய 21 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்…

  5. இந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020 இந்திய கடல் வலயம் தொடர்பில் கவனம் செலுத்தி சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பை நோக்காகக் கொண்ட முத்தரப்பு பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று (28.11.20) நடைபெற்றது. இதில் இலங்கை, இந்தியா, மாலைத்தீவு ஆகிய மூன்று நாடுகளினதும் பாதுகாப்புத் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மாரியா தீதி மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் இந்த மாநாட்டில் பங்குபற்றினர். மொரிஷியஸ், சீசெல்சு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்புப…

  6. யாழ். காரைநகரில் கொரோனா தொற்றாளர்: மருத்துவமனை உட்ப பல இடங்கள் முடக்கப்பட்டன! வலி.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கானை மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சைக்கிள் கடை ஒன்றினைச் சேர்ந்த 6 பேரின் குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையும் 3 நாள்கள் மூடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் உட்பட 40 பேர் வரையில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் படி இந்த நடவடிக்கையை பொதுச் சுகாதாரப் …

  7. ட்ட‌க்க‌ள‌ப்பு பல்கலைக்கழகம் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை க‌ற்றுகொடுக்குமிடமல்ல : உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் சஜித் பிரேம‌தாச‌வின் கட்சியை சேர்ந்த‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் காவிந்த‌ ஜ‌ய‌வ‌ர்த‌ன‌வின் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு பல்கலைக்கழகம் ச‌ம்ப‌ந்த‌மான‌ கேள்விக்கு மிக‌வும் அறிவுபூர்வ‌மாக‌வும் ய‌தார்த்த‌பூர்வ‌மாக‌வும் ப‌தில் கொடுத்த‌ உய‌ர் க‌ல்வி அமைச்ச‌ர் பேராசிரிய‌ர் ஜி எல் பீரிஸிற்கு ந‌ன்றி தெரிவிக்கின்றோம் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து. இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து, ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு பல்கலைக்கழகம் என்ப‌து நாட்டில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை ப‌டித்துக்கொடுக்கும் ஷ‌ரீயா வித்தியால‌ய‌ம் என்றும் அதை அர‌சு கைய‌க‌ப்ப‌டுத்துமா என்றும் காவிந்த‌ ஜ…

  8. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் குழு மோதல் – பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபை இன்று கூடவுள்ளது யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்குமிடையில் கடந்த மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கென வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், ஓய்வு நிலைப் பேராசிரியருமான எம். நடராஜசுந்தரம் பேரவையினால் நியமிக்கப்பட்டிருந்தார்.அவர் கடந்த 21 ஆம் திகதி முதல் தனது விசாரணைகளை நடாத்தி, சம்பவம் தொடர்பில் 130 பக்கங்களைக் கொண்ட விரிவான விசாரணை அறிக்கையைச் சமர்பித்திருந்தார்.இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைககளை மேற்கொண்ட தனிநபர் ஆயத்த…

  9. தடை செய்யப்பட்ட இயக்கங்களை நினைவுகூர முடியாது: அங்கஜன் இராமநாதன் https://www.facebook.com/NewsfirstTamilSL/videos/774715566411775

  10. மக்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்த அரசு தடையாக இருக்கிறது . கலையரசன் November 25, 202011:23 a ஏரூர் தில்லை விடுதலைக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூரும் இந்த மாதத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதை தடுக்கும் வகையில் அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். இன்று பிற்பகல் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார். மேலும் தெரிவிக்கையில்… அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபி மற்றும…

  11. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்நாள் அறிக்கை -2020 தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2020 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். உலகில் மிகவும் தொன்மையான எமது இனத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையையும் சொந்த மண்ணையும் மீட்டெடுத்து, எமது மக்கள் தன்மானத்தோடு கௌரவமாக வாழவேண்டுமென்ற தார்மீகக் குறிக்கோளுக்காக மடிந்த மானமறவர்களை, எமது அகமனதில் தரிசித்து வணக்கம் செலுத்தும் தேசிய நாள். தமிழீழ மக்களின் சுதந்திரப்போராட்டத்தை, இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான போராட்டமாக முன்னிறுத்திய உத்தமர்களைப் போற்றிவழிபடும் புனிதநாள். மனித சுயத்தின் ஆசைகளைத் துறந்து, மானுடத்தின் உரிமைகளுக்கான பொதுந…

  12. அரியநேத்திரன் மட்டக்களப்பில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார் கார்த்திகை 27 இன்று 27/11/2020 மாலை 06.07 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் மண்முனைதென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம் உள்ளிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளை பேணி விளக்கேற்றி மௌன அஞ்சலி வணக்கம் செலுத்தப்பட்டது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் தமது வீடுகளில் சம நேரத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். https://www.meenagam.com/அரியநேத்திரன்-மட்டக்களப/

  13. மாங்குளத்தில் வெடித்தது உள்ளூர் தயாரிப்பு குண்டு! மேலும் ஒரு குண்டு மீட்பு! November 28, 2020 முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்று முன்தினம் (26.11.20) காலை கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது. குறித்த கைக்குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக நேற்றைய தினம் (27) தடயவியல் காவற்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதோடு குறித்த பகுதியில் வேறு வெடி பொருட்கள் இருக்கின்றதா என்பது தொடர்பில் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒரு கைகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதோடு குறித்த குண்டு உள்ளூர் பகுதியில் தயாரி…

  14. விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டுபவர்கள் - அவர்களது சகாக்களுக்கு எதிராக இன்டர்போல்! இலங்கையில் எச்சரிக்கை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதிசேகரிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நேற்றைய தினம் நியமனம் பெற்ற அவர் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைக் கூறியுள்ளார். இதன்போது பேசிய அவர், வெளிநாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரிப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக இன்டர்போல், சிஐடி மற்றும் புலனாய்வு பிரிவினரின் உதவிகளை பெறவுள்ளோம். வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளிற்கு பலர் நிதி சேகரிக்கின்றனர்…

  15. ஜனாதிபதியின், பொது மன்னிப்பின் கீழ்... சிறைக்கைதிகள் விடுதலை சிறைகளில் கொரோனா தொற்று பரவுவதைக் கருத்திற் கொண்டு கைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 600 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/ஜனாதிபதியின்-பொது-மன்னி-5/

  16. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளார். இதன்போது அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசின் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக இலங்கை வரும் அஜித் டோவல், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக தமிழர் தரப்பு அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/139387/hhhh.jpg இதேவேளை கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாகவும் பேச்சுக்கள் நடைபெறும் என்றும் எதிர்…

    • 14 replies
    • 1.8k views
  17. இலங்கையில் மாவீரர் தினம்: தடையை மீறி கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள் படக்குறிப்பு, மாவீரர தினத்தையொட்டி தமது வீட்டு வாயிலில் கொடியேற்றி தீபமேற்றும் இலங்கை தமிழர் இலங்கையில் 36 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை அவர்களின் பற்றாளர்களும் இலங்கை தமிழர்கள் பலரும் நினைவுகூரும் மாவீரர் தினம் புதன்கிழமை (நவம்பர் 27) இலங்கையிலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழர் தொடர்புடைய கட்சியினராலும் அனுசரிக்கப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர் துறந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் உள்ளிட்ட போராளிகளுக்காக …

  18. விடுதலை வீரர்கள் என்றும் எம் இதயங்களில் வாழ்வார்கள் – தீபமேத்திய பின் விக்கினேஸ்வரன் November 27, 2020 “தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர்.” தனது வாசஸ்தலத்தில் விடுதலை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார் https://thinakkural.lk/article/93260

  19. கஜேந்திரகுமாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு November 27, 2020 அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த வழக்கை தன் சார்பில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை டிசெம்பர் 18ஆம் திகதி அழைக்கப்படும் எனத் தவணையிட்ட யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், பிரதிவாதிகளை மன்றில் முன்னிலையாக அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை நீக்கியதற்கு தடை …

  20. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகம் இன்றைய தினம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்ட நிலையில் எண்ணெய் விளக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இது பற்றி தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவிக்கையில், இம் முறை இறந்தவர்களை பொது இடங்களில் நினைவில் கொள்வதை என்னையும் பிரதிவாதியாகக் கொள்ளப்பட்டு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாயிலாக நீதிமன்றம் தடைசெய்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பினை நான் மதிக்கின்றேன். அதனை மீறமுடியாது. மீறுவது சட்டப்படியான குற்றமாகவுள்ளது. மேலும் தவிசாளரான எனக்கு எதிராக மாவீரர் தின பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளதாக புலனாய்வு அறிக்கையினைக் கொண்டு மல்லாகம் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. …

    • 1 reply
    • 570 views
  21. முல்லைத்தீவு நகரில் திரும்புமிடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்- அச்சத்தில் உறைந்துள்ள மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லைத்தீவு கடற்கரை வளாகத்தில் 2009க்கு முன்னர் கடற்புலிகளின் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த வளாகத்தில் கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் பிரமாண்டமாக இடம்பெற்றன இம்முறை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை தொடர்ந்து குறித்த இடத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிசார் நீதிமன்ற கட்டளையை மீறி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவிடாது தடுக்கும் முகமாக குறித்த பகுதி வீதியெங்கும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியை விடவும் முல்லைத்தீவு நகருக்குள் திரும்பும் …

    • 6 replies
    • 869 views
  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது இல்லத்தில் இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/139507/IMG-20201127-WA0023.jpg அவரது இல்லத்தில் இடம் பெற்ற நிகழ்வில் நினைவுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனைக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப் கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை ஏற்றினார். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் “தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள்…

  23. கஞ்சிகுடியாறு குளத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும்திட்டம் SAVITHNovember 26, 2020 (காரைதீவு நிருபர் சகா) திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட பாரிய நீர்ப்பாசனக்குளமான கஞ்சிகுடியாறு குளத்தில் ஒரு லட்சத்து50ஆயிரம் திலாப்பியா (செல்வன்) மீன்குஞ்சுகளை விடும் திட்டம் நேற்று(24) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதனூடாக அப்பிரதேசத்திலிருக்கக்கூடிய பின்தங்கிய கிராமங்களின் மீனவர் சமுதாயத்திற்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.ஜக்கிய அமெரிக்காவின் "அன்புநெறி" அமைப்பின் அனுசரணையுடன் IMHO அமைப்பின் பரிந்துரைக்கமைவாக் அசிசிஸ்ற் ஆர்ஆர்(Assist RR) அமைப்பு இவ்வேலைத்திட்டத்தை அமுல்படுத்துகிறது. இதற்கு கிழக்குமாகா…

  24. மாவீரர் நாள் நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்லும் இராசபாதை வீதி இன்று (27) மாலை முதல் இராணுவத்தால், பாரிய பவுசர் ஒன்று வீதியின் குறுக்காக நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது. அத்துடன் இதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வீதியில் பவுசரை நிறுத்த இராசபாதையை முடக்கியது இராணுவம்! | NewUthayan

  25. (நா.தனுஜா) காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அந்த அலுவலகத்தினால் காணாமல்போனோர் பெயர்ப்பட்டியலொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே அதனடிப்படையில் இனியேனும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதியையும் உண்மையையும் இழப்பீட்டையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கிறது. சர்வதேச மன்னிப்புச்சபையால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின்படி காணாமல்போனோரின் குட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.