ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
வடக்கில் மாவீரர்நாள்; தெற்கில் பிக்குகளுக்கு விசாரணை – கொதிக்கிறது சிங்கள ராவய! நாட்டை அழித்த புலிகளின் மாவீரர் தினத்தை வடக்கில் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், ஒரு அறிக்கைக்காக பௌத்த பிக்குவிடம் 24 மணித்தியாலத்தில் குற்றப்புலனாய்வுப்பிரிவு அறிக்கை பெறுகிறது. இந்த நாட்டில் ஒரே சட்டமா நடைமுறையில் உள்ளது என கேட்க விரும்புகிறோம். இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது சிங்கள ராவய அமைப்பு. அந்த அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரதன தேரர் தெஹிவளையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, ” நாட்டை வழிநடத்தும் தவறான விடயங்களைச் சுட்டிக் காட்டுவது பிக்குகளின் கடமை. அதைப் பொறுத்துக் கொள்ளாமல் அவர்களை அடக்கப் பார்க்கிறார்கள். ஒரே நாடு, ஒரே சட்டம் என்கிறார்கள். ஆனா…
-
- 1 reply
- 422 views
-
-
மாவீரர்களுக்காய் வீடுகளில் 06.05கு தீபச்சுடரேற்றுவோம் – தமிழ் தேசிய கட்சிகள் கோரிக்கை! எத்தனை தடைகளை அரசு விதித்தாலும் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்க முடியாது. கொரோனா நிலைமை கருதி 27ம் திகதி மாலை 6.5 மணிக்கு வீடுகளில் இருந்து அஞ்சலி செலுத்துங்கள் என்று ணதமிழ் தேசிய கட்சிகள் கூட்டடாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. மாவீரர் நாள் நினைவஞ்சலி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக 8 தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றையதினம் (25) வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் ஒன்று கூடியிருந்தனர். குறித்த கலந்துரையாடலிலேயே மேற்கண்ட கோரிக்கை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.…
-
- 0 replies
- 486 views
-
-
“பிட்டு, வடை, சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களை பீட்சா உண்ணும் நிலைமைக்கு கொண்டு வந்தோம்” என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ சில நாட்களுக்கு முன் யாழ் நீதிமன்றில் மன்றுரைத்திருந்தார். இவரின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு, மீம்ஸ்கள் மற்றும் ரைட்டப்கள் மூலமாக இலங்கை மற்றும் பிற உலக நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வைரலானது. அதுமட்டுமன்றி, நாடாளுமன்றத்தில் கூட பிரசாத் பெர்னாண்டோக்கு எதிரான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால், இன்று இடம்பெற்ற மாவீரர் நாள் வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையன அரச சட்டவாதி, “இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில் யாழ் பொலிஸ் …
-
- 1 reply
- 943 views
-
-
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (25.11.2020) மட்டக்களப்பிற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். ஏறாவூர் புன்னக்குடா தளவாய் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் பேட்டைக்கான இடத்தினை பார்வையிட்டதுடன் வாழைச்சேனை காகிதாலைக்கும் சென்று பிரதேச மக்களுக்கு வழங்கப்படவுள்ள குடி நீர் விநியோக திட்டம் தொடர்பாகவம் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். மேற்படி அமைச்சினால் பாரிய புடவை நூல் உற்பத்தி கைத்தொழில் பேட்டை ஒன்றினை 600 மில்லியன் யூ.எஸ் டொலர் செலவில் நிர்மாணித்து அதற்கு தேவையான சகல உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின்கீழ் (3050) மூவாயிரந்து ஐம்பது மில்லியன் ரூபா செலவில் செங்கலடி எல…
-
- 1 reply
- 447 views
-
-
எனது தாய் மொழியான தமிழில் சாட்சியளிக்க சந்தர்ப்பம் தாருங்கள் - ரிஷாத் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோரிக்கை ( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக நேற்று சாட்சியமளிக்க ஆரம்பித்தார். இதன்போது, தனது தாய் மொழியான தமிழ் மொழியில் சாட்சியம் அளிக்கும் வண்ணம் தனக்கு மொழி பெயர்ப்பு வசதிகளை செய்து தருமாறு ரிஷாத் பதியுதீன் ஆணைக் குழுவில் விஷேட கோரிக்கையினை தனது சட்டத்தரணி ஊடாகவும், தனிப்பட்ட ரீதியிலும் முன்வைத்தார். தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் நேற்று ஆணைக் குழுவில் சேவையில் இருக்காத நிலையில், அவருக்கு சிங்கள மொழியில் சாட்சியமளிக்க பரிந்து…
-
- 23 replies
- 2.4k views
- 1 follower
-
-
மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம் http://athavannews.com/wp-content/uploads/2020/11/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-696x387-1.jpg மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இந்த கட்டள…
-
- 1 reply
- 648 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உரிமை இல்லை. புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ள நாடகமாடும் இவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்க முடியாது என சபையில் ஆவேசமாக தெரிவித்தார் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர. மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் ஒன்று தலைதூக்கினால் தமிழ் மக்கள் மத்தியில் விரோதத்தை ஊக்குவிக்கும் இவர்கள் அனைவருமே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில், சட்டத்தை மதிக்கும், சட்டத…
-
- 3 replies
- 761 views
-
-
நினைவு கூருவதற்கான தமிழரின் உரிமை மதிக்கப்பட வேண்டும் -PEARL அமைப்பு வலியுறுத்தல் 42 Views வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பல மாவட்டங்களில், தமிழ்த் தேசிய நினைவு நாளான மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலையளிப்பதாயுள்ளது என PEARL (PEOPLE FOR EQUALITY AND RELIEF IN LANKA) அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “தமிழர் நினைவுகூரல் மீதான தொடரும் அரச அடக்குமுறையின் நீட்சியே இத்தடைகளாகும். நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், இலங்கை அதிகாரிகளாற் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதைப் பேர்ள் வன்மையாகக் கண்டிக்கிறது. …
-
- 1 reply
- 412 views
-
-
தாயகத்தில் கார்த்திகைப் பூவுக்கும் தடையா..?-கோ.ரூபகாந் 38 Views யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையில்கூட கார்த்திகை மாதம் வந்து விட்டால் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை, இராணுவத்தின் நெருக்குவாரங்கள் நிறைந்த மாதமாக அமைந்து விடுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களை நினைவுகூரும் மாவீரர்நாள் என்பன கார்த்திகை மாதத்தில் வருவதே அதற்கு காரணம். இது தவிர, கார்த்திகை மாதத்தில் மலரும் செங்காந்தள் மலரை வைத்திருப்பதற்குகூட அஞ்சும் நிலையும் இன்று வரை தொடர்கிறது. ஏன் கார்த்திகைப் பூவுக்கும் தடையா? ஜிம்பாவே நாட்டின் தே…
-
- 0 replies
- 597 views
-
-
கிளிநொச்சியில் வயோதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு குடிதண்ணீர் போத்தல்கள் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் காரணமா? கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த “கிளிநொச்சி 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடையில் பணியாற்றும் முதியவர் ஒருவர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.அவருக்கு கோரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் கடந்த திங்கட்கிழமை மாலை உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட வயோதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு குடிதண்ணீர் போத்தல்கள் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் காரணமாக இருக்கலாம் என…
-
- 0 replies
- 309 views
-
-
உள்நாட்டு விசாரணைக்கு இணங்கி இருக்காவிட்டால் சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கும் – லக்ஷ்மன் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய உள்நாட்டு விசாரணைக்கு இணங்கி இருக்காவிட்டால் சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கும் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்று நிரைவேற்றப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுவரும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாததில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிலிருந்து அமெரிக…
-
- 0 replies
- 428 views
-
-
மாவீரர்தின நிகழ்வை முன்னின்று நடத்துமாறு வியாழேந்திரனுக்கு சுமந்திரன் பகிரங்க அழைப்பு.! மாவீரர்தின நிகழ்வை முன்னின்று நடத்துமாறு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். மாவீரர் தினம் நடாத்துவதற்க அரசாங்கம் தடை விதிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் சுமந்திரனிடம் கேட்டபோது, "வியாழேந்திரன் முன்நின்று மாவீரர் தின நிகழ்வினை பொது அரங்கில் நடாத்துமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்" என்று பதிலளித்திருந்தார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவீரர் தின நிகழ்வு நடாத்துவதற்கு ஏற்பாடுசெய்ததாக வழங்கப்பட்டுள்ள தடையுத்தரவு தொ…
-
- 0 replies
- 277 views
-
-
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஹிஸ்புல்லாவின் BoC கணக்குகளில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி! உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் மூன்று ஆண்டுகளுக்குள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா சொந்தமான இரு இலங்கை வங்கி கணக்கில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் குறித்த விடயம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று சாட்சியம் வழங்கியுள்ள இலங்கை வங்கியின் கொள்ளுபிட்டி கிளையின் முன்னாள் முகாமையாளர் ஐ.சி.கே. கண்ணங்கரா, குறித்த வாங்கி கிளையில் ஹிஸ்புல்லா 5 கணக்குகளை வைத்திருந்ததாக கூறியுள்ளார். ஹிஸ்புல்லாவால் இயக்கப்படும் ஐந்து வங்…
-
- 1 reply
- 684 views
-
-
ரிஷாத்தை கொலைசெய்ய கருணாவுக்கு 15 கோடி : நாமல்குமாரவின் காணொளி குறித்து விசாரிக்க வேண்டும் - நளின் பண்டார (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) ரிஷாத் பதியுதீனை கொலை செய்வதற்கு 15 கோடி ரூபா கருணா அம்மானிடம் வழங்கப்பட்டிருந்தாக நாமல் குமார காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் இருக்கும் நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்த…
-
- 2 replies
- 942 views
-
-
தமிழர்கள் மாவீரர்களை நினைவு கூற வேண்டுமெனில் வெளிநாடு செல்லலாம் - தினேஷ் குணவர்தன தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வை இலங்கையில் நடத்த நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். தடைகளை மீறித் தமிழ் மக்கள் மாவீரர்களை இங்கு நினைவுகூர முடியாது. அவர்கள் விரும்பினால் வெளிநாடுகளுக்குச் சென்று மாவீரர்களைச் சுதந்திரமாக நினைவேந்தலாம். அங்கு அவர்களுக்குத் தடைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவேந்தத் தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கின்றது. அது அவர்களின் சொந்த உரிமை. அதில் அவர்கள் ஏதோவொரு வழியில் சாதித்துக் காட்டுவார்கள். அதை ஜனாதிபதியோ அல்லது அரசோ அல்லது வேறு ஆட்களோ தடுத்து நிறுத்த முடியாது என…
-
- 8 replies
- 1.1k views
-
-
மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன் வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார். 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பாண்டியை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி, நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்…
-
- 47 replies
- 6.2k views
- 1 follower
-
-
மாவீரர் நாள் நினைவேந்தல் தடை தொடர்பான வழக்கின் கட்டளை ஒத்திவைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பொலிஸ் நிலையங்களினால் கடந்த 20.11.2020 (வெள்ளிக்கிழமை) அன்று, இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தல் மேற்கொள்வதற்கு 46 பேருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றில் தடை உத்தரவினைப் பெற்றிருந்தனர். இந்த நிலையில் நீதிமன்றத்தினால் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவுக்கு எதிராக 23.11.2020 நேற்றைய தினம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்திருந்தனர். அதில் குறிப்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீ…
-
- 1 reply
- 467 views
-
-
பின்தங்கிய கிராமங்களுக்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் முன்னெடுப்பு 51 Views கஞ்சிகுடியாறு குளத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டதன் ஊடாக பின்தங்கிய கிராமங்களுக்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் ஒன்று ஆரப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், அன்புநெறி (USA) நிதி உதவியுடனும் Assist RR(SL) அனுசரனையுடனும் IMHO USA and Pladge to Restore என்ற அமைப்பின் ஒருங்கிணைப்புடனும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் பிரதேச செயலாளர், கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் கிராமங்களின் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு மாகாண மற்றும் தேசிய உத்தியோகத்தர்கள், தாண்டியடி மக்கள் சே…
-
- 0 replies
- 319 views
-
-
யாழ். மக்கள் சட்டங்கள், சுகாதாரக் கட்டுப்பாடுகளை மதித்து நடந்து கொள்வதில் சிறந்தவர்கள் என்பதை நான் நேரில் கண்டுகொள்கின்றேன். கொவிட் -19 நோய் தொற்று கட்டுப்பாட்டுகளை யாழ். மக்களே சரியாகக் கடைப்பிடிக்கிறார்கள்” என யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/133182/20200831_101742.jpg நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் -19 நோய்த் தொற்று நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது; யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக நான் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகின்றன. நான் தென்பகுதியிலும் …
-
- 1 reply
- 562 views
-
-
அரசாங்கம் அறவிடவிருக்கும் புதிய வரி, “மாதவிடாய் வரி” எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ரோஹினி கவிரத்ன, பெண்களை துன்ப படுத்தவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். வரவு-செலவுத் திட்டம் மீதான இன்றைய (24) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “பிரித்தானியர்கள் உடலுக்கு வரி அறிவிட்டனர். தற்போது, மாதவிடாய்க்கு 15 சதவீதம் வரி அறிவிடப்படுகின்றது. அதனூடாக பெண்களின் மாத சுழற்சியில் வருமானத்தை திரட்டுவதற்கு முயலுகின்றனர்” என்றார். “பிரித்தானியாவின் டொரின்டன் ஆளுநர், உடலுக்கு வரி, நாய் வரி உள்ளிட்ட மிகமோசமான ஏழு வரிகளை 1848 ஆம் ஆண்டு விதித்தார். இந்த அரசாங்கம், பெண்களின் மாத சுழற்சிக்கு வரி அறவிட்டது என வரலாற்றில் பதிவாகு…
-
- 0 replies
- 426 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந்த வெள்ளிக்கிழமை (20) அன்று, மாவீரர் தினம் மேற்கொள்வதற்கு 46 பேருக்கு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது. இவ்வாறு நீநிமன்றினால் வழங்கப்பட்ட தடைக்கட்டளையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி , தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பதின்நான்கு பேர் கொண்ட குழுவினரால் (23.11.2020) நேற்றைய நாள் நகர்த்தல் பத்திரம் (மோசன்)தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றது . முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் மாவீரர் நாளுக்கான தடையுத்தரவ…
-
- 0 replies
- 683 views
-
-
( எம்.எப்.எம்.பஸீர்) அரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோரை கடந்த 2011 ஆம் ஆண்டு கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய விவகாரம் தொடர்பில், யாழ். நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் ஆட்கொணர்வு மனு விசாரணைகளில் சாட்சி வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த அறிவித்தலை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளித்தது. மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இந்த தீர்ப்பை வழங்கியது. பாதுகாப்பு காரணங்களால் காரணமாக தன்னால் யாழ்ப்பாணத்துக்கு செல்ல முடியாது எனவும், அழைப…
-
- 0 replies
- 514 views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பக்கூடும் என்பதால் முள்ளிவாய்க்காலில் சிக்குண்ட மக்களை கப்பல் மூலம் வெளியேற்றுவதை மகிந்த விரும்பவில்லை –மகிநத சமரசிங்க Rajeevan Arasaratnam விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பக்கூடும் என்பதால் இறுதியுத்தத்தில் விடுதலைப்புலிகளின் பகுதியில் சிக்குண்ட மக்களை கப்பல் மூலம் வெளியேற்றும் முக்கிய நாடொன்றின் வேண்டுகோள்களை அவ்வேளை ஜனாதிபதியாக பதவிவகித்த மகிந்த ராஜபக்ச நிராகரித்தார் என நாடாளுமன்றத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மனித உரிமைகள் விவகாரத்திற்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். உலகின் பலம்வாய்ந்த நாடொன்றின் தூதுவர் தலைமையிலான வெளிநாட்டு தூதுவர்கள் குழு ஜனாதிபதி ம…
-
- 3 replies
- 668 views
-
-
பிரசாத் பெர்னாண்டோவை பிட்டாக அவித்தெடுக்கும் நெட்டிசன்கள்! போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என நேற்று(20) நீதிமன்றில் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மன்றுரைத்திருந்தார். இவருடைய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், ரைட் அப்கள், மீம்ஸ்கள் மூலமாக பிட்டு மற்றும் பீட்சாவை சம்மந்தப்படுத்தி நெட்டிசன்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் பெர்னாண்டோ மீதான தங்களுடைய விசனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு, https://newuthayan.com/பிரசாத்-பெர்னாண்டோவை-பிட/
-
- 15 replies
- 1.7k views
-
-
போர்க் குற்றம் நடக்கவில்லை என்றால் விசாரணைக்கு ஏன் அச்சம்? கஜேந்திரகுமார் கேள்வி 29 Views “இராணுவம் தவறாக எதனையும் செய்யவில்லை என்பதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் சர்வதேச விசாரணை ஒன்றை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? எதற்காக நீங்கள் அஞ்சுகின்றீர்கள்? அப்படி அதுவும் இடம்பெறவில்லை என்பதை நிரூபியுங்கள்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவிடம் எழுப்பிய கேள்வியையடுத்து இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான சொற்போர் இடம்பெற்றது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, “பரணகம ஆணைக்குழுவில் உலகப் பிரசித்தி பெற்ற ஆ…
-
- 2 replies
- 618 views
-