நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
உருளைக்கிழங்கு பற்றி சொல்லவே வேண்டாம். இதற்கு அத்துனை பிரியர்கள். பெரும்பாலான வீடுகளில் உருளைக்கிழங்கை வைத்து தான் பொரியல், அவியல், வறுவல் போன்றவற்றை செய்வார்கள். ஏனெனில் உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே விரும்பி சாப்பிடக் கூடியது. அத்தகைய உருளைக்கிழங்கை பல சுவைகளில் சமைக்கலாம். அத்தகையவற்றில் ஒன்றான உருளைக்கிழங்கு சீரக வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 5 (வேக வைத்து தோலுரித்து நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் பச்சை/வர மிளகாய் - 3 (நீளமாக கீறியது) கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை…
-
- 4 replies
- 1.1k views
-
-
கணவா மீன் - 500 கிராம் வெங்காயம் - 50 கிராம் பச்சை மிளகாய் - 2 பூண்டு/உள்ளி - பாதி இஞ்சி - அரை அங்குலத்துண்டு கறித்தூள் - 3 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி எலுமிச்சை/தேசிக்காய் - பாதி கறிவேப்பிலை - 2 கொத்து உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 3 மேசைக்கரண்டி தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். கணவா மீனை சுத்தம் செய்ய அதன் தலைப்பகுதியைப் பிடித்து இழுத்தால், அப்படியே பிரிந்து வரும். அதில் கறுப்பு பை போல் உள்ள பகுதியில் மை போல் இருக்கும். அதை உடையாமல் பிரித்தெடுத்தெடுக்கவும். உடைந்தால் எல்லாம் கறுப்பாகிவிடும். அதே போல் கண்பகுதியையும் மெதுவாகப் பிரித்து விடவும். அதிலும் மை இருக்கும். பின்னர் தலைப்பகுதியை வெட்டினால் ஒரு …
-
- 8 replies
- 6.5k views
-
-
அனைவரும் தெரிந்துக்கொள்ளவேண்டிய எளிமையான அத்தியாவசிய கிச்சன் டிப்ஸ் இதோ... *வெங்காயம் நறுக்கிய பிறகும், பூண்டு உரித்த பிறகும் கைகளில் ஏற்படும் வாடையை போக்க கைகளை stainless steel ஸ்பூன்களில் தேயுங்கள். *பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும். *பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும். *சமைத்த பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக சுத்தம் செய்ய அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போடுங்கள். *சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வெந்நீரில் பிசையவும்.சிறிது …
-
- 0 replies
- 732 views
-
-
இலங்கையில் இருக்கும் போது, இதனை வீட்டில் சமைப்போம்... நல்ல சுவையானதாக இருக்கும். இது சிங்கள நாட்டில், விளைவதாக நினைக்கின்றேன். நேற்று... இங்கிலாந்தில் ஒரு தமிழ் கடையில்... கண்டபோது, ஆசையில் வாங்கி விட்டேன். அதனை... எப்படி சமைப்பது என்று, யாருக்காவது தெரிந்தால்... கூறுங்களேன்.
-
- 36 replies
- 15.3k views
-
-
கேசரி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். பொதுவாக கேசரியை ஏதேனும் பண்டிகை என்றால் தான் செய்வார்கள். ஆனால் இந்த கேசரியை பண்டிகையின் போது மட்டுமின்றி, மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். அதிலும் இதில் முந்திரி, உலர் திராட்சை மற்றும் பிஸ்தா போன்றவற்றால் அலங்கரித்து கொடுத்தால், கேசரி பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். இப்போது அந்த தித்திக்கும் ரவா கேசரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: ரவை - 1 கப் சர்க்கரை - 1 கப் உலர் திராட்சை - 7-8 முந்திரி - 10 பிஸ்தா - 3-4 ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை தண்ணீர் - 1 கப் நெய் - 1/2 கப் செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ரவையை பொன்னிறமாக வறுத்…
-
- 1 reply
- 1k views
-
-
ப்ரோக்கோலி திக் சூப் ப்ரோக்கோலி பலவகையான சத்துக்களை கொண்ட ஒரு காய் வகை. பார்பதற்கு பச்சை நிற காளிப்பிலவரை போல தோன்றும் இந்த ப்ரோக்கோலியை வைத்து சூப் செய்வது எப்படி என பார்ப்போம் தேவையானவை ப்ரோக்கோலி - 1 பெரிய பூ கேரட் - 1 உருளை கிழங்கு - 1 சிக்கென் குயூப் - 1 சிறியது உப்பு - தேவைகேற்ப பால் - 1 கப் செய்முறை குறிப்பிடப்பட்டுள்ள காய்கறிகளை பொடியாக நறுக்கிகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், நீர்,சிக்கன் குயூப் மற்றும் வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து வேகவைக்கவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் ப்ளென்டரில் போட்டு மை போல அரைக்கவும். அரைத்ததை மறுபடியும் பாத்திரத்தில் ஊற்றி ஒரு கொதி வந்தததும் இறக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து பரிமாறவும் http://tamil.web…
-
- 18 replies
- 3.6k views
-
-
இது காரமும் இனிப்பும் கலந்த சிற்றுண்டி. பனங்கிழங்கு கிடைக்கும் காலங்களில் வீட்டில் செய்வார்கள். தேவையான பொருட்கள். 1. அவித்த பனங்கிழங்கு -- 4 2. செத்தல் மிளகாய் - 2 (நடுத்தரம்) 3. மிளகு - 8-10 4. தேங்காய் பூ - 1/2 கப் (125 மி. லி. அளவு கரண்டி) 5. உப்பு - சுவைக்கு ஏற்ப 6. சீனி/சர்க்கரை - 2 மேசை கரண்டி/ சுவைக்கு ஏற்ப. 7. உள்ளி - ஒரு பல்லு, (நடுத்தரம்) செய்முறை 1. அவித்த பனங்கிழங்கை குந்து எடுத்து/ வார்ந்து , சிறிய துண்டுகளாக முறித்து/ வெட்டி கொள்ளவும். சிறிய உரலில் இடிப்பதாயின் 2. செத்தல் மிளகாய், உப்பு, மிளகு என்பவற்றை உரலில் போட்டு நன்கு பொடியாக்கவும். 3. உள்ளியை சேர்த்து இடிக்கவும். 4. முறித்து வைத்த கிழங்கை பகுத…
-
- 23 replies
- 5.1k views
-
-
எப்போது பார்த்தாலும் சிக்கனை ஒரே மாதிரி சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் அந்த சிக்கனை மஹாராஸ்டிரா மற்றும் கோவா போன்ற பகுதிகளில் செய்யப்படும் குழம்பு போன்று, வீட்டில் சமைத்து பார்க்கலாம். இதற்கு மல்வானி சிக்கன் குழம்பு என்று பெயர். இந்த மல்வானி சிக்கன் குழம்பு மிகவும் காரசாரமான அசைவ குழம்புகளில் ஒன்று. இப்போது அந்த மல்வானி சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது) வெங்காயம் - 4 (நறுக்கியது) தேங்காய் - 1 கப் (துருவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பட்டை - 1 இன்ச் மிளகு - 5 ஏலக்காய் - 2 அன்னாசி பூ - 1 பிரியாணி இல…
-
- 0 replies
- 579 views
-
-
இந்த பிட்டு பற்றிய சமையல் குறிப்பை முன்னர் யாழில் இணைத்தெனா தெரியவில்லை?? இந்த செய்முறை 2 பேருக்கு போதுமானது. 250 கிராம் Couscous ஐ எடுத்து எடுத்து உங்கள் சுவைக்கேற்ப உப்பை கலந்து பின் மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் பரவிவிடுங்கள். நன்கு கொதித்த சுடு நீரை பாத்திரத்தில் Couscous இனை மூடி, ஒரு சென்ரி மீற்றர் உயரத்திற்கு சேருங்கள். பாத்திரத்தை இறுக்கமாக மூடி 5 - 6 நிமிடங்கள் வையுங்கள். இப்போது Couscous சுடு நீரில் வெந்து நீங்கள் இட்டதை போல் 3 மடங்கிற்கு வந்திருக்கும். அவிந்த Couscous இற்கு துருவிய தேங்காய்/ உலர்ந்த தேங்காய் துருவலை கலந்து அப்படியே கறி/ கூட்டு/ பொரியல் போன்றவற்றுடன் உண்ணலாம். அல்லது புட்டு அவிக்கும் க…
-
- 4 replies
- 4.2k views
-
-
தேவையானபொருட்கள் 400 கிராம் றவ்வை 350 கிராம் சீனி 250 கிராம் மாஜரீன் 400 கிராம் பேரீச்சம்பழம் ( விதை நீக்கியது) 250 கிராம் முந்திரிகை வற்றல் 1/2 ரின் அன்னாசி 1/2 ரின் ரின்பால் 5 முட்டை 50 கிராம் இஞ்சி 1 கிளாஸ் தேயிலைச்சாயம் (4 பைக்கற் தேயிலையை ஊற வைத்து எடுக்கவும்) 1 மேசைக் கரண்டி பேக்கிங் பவுடர் 1 மேசைக்கரண்டி வனிலா 50 கிராம் கஜூ செய்முறை முதலில் இஞ்சியை சுத்தமாக்கி விழுதுபோல் அரைத்து எடுக்கவும். அதனோடு பேரீச்சம்பழம், தேயிலைச்சாயம் சேர்த்து 6-10 மணித்தியாலங்கள் ஊற வைக்க வேண்டும். வேறொரு பாத்திரத்தில் சீனியையும் மாஜரீனையும் சேர்த்து நன்கு அடிக்க வேண்டும். சீனி கரைந்ததும் அதனுள் முட்டையையும் ரின்பாலையும் சேர்த்து அடிக்கவும். பின்னர் ஊறவைத்த சேர்வை…
-
- 5 replies
- 1.7k views
-
-
அசைவ உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்டைல் என்றால் அது செட்டிநாடு ஸ்டைல் தான். ஏனெனில் இந்த ஸ்டைலில் சமைக்கும் அசைவ உணவுகள் அனைத்துமே மிகவும் ருசியுடனும், நல்ல காரசாரமாகவும் இருக்கும். பொதுவாக சிக்கனை சமையல் எண்ணெயில் தான் சமைப்போம். ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக இருப்பதற்கு நெய்யாலேயே சிக்கனை சமைக்கலாம். மேலும் சிக்கன் குழம்பில் நெய்யைப் பயன்படுத்தி சமைப்பதால், அது நெய் சிக்கன் சிக்கன் குழம்பாகும். இது சற்று ராயலான சிக்கன் குழம்பு. இப்போது அந்த நெய் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 700 கிராம் நெய் - 1 கப் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூ…
-
- 0 replies
- 777 views
-
-
கோதுமை அரிசிப் புட்டு அல்லது ஓட்ஸ் புட்டு . என்ன தேவை : கோதுமை அரிசி அல்லது ஓட்ஸ் 2 கப் . ரவை வறுத்தது 1 / 2 கப் . தேங்காய் பூ 1 / 2 கப். உப்பு ( தேவையான அளவு ). கூட்டல்: ஒரு சட்டியிலை கோதுமை அரிசி அல்லது ஓட்ஸ் உடன் உப்பு கலந்து சுடு தண்ணியை கோதுமை அரிசி அல்லது ஓட்ஸ் மட்டத்துக்கு விடுங்கோ. பின்பு ரவையை சுடுதண்ணிக்கு மேலை தூவி ஒரு மணித்தியாலம் ஊறவிடுங்கோ. பின்பு பூட்புரோசஸசரில் போட்டு அடியுங்கோ. பின்பு ஸ் ரீமரிலை வேகவைத்து திருவிய தேங்காய் பூவை கலவுங்கோ. மாற்றர் ஓவர். பி கு : கோதுமை அரிசி அரை அவியலில் புழுக்கியது (grains de blé précuit or wheat grain parboiled) எல்லா கடைகளிலும் விக்கின்றது .கண்டுபிடிப்பது சுலபமானது . எனக்கு தெரிஞ்ச பு…
-
- 19 replies
- 4.2k views
-
-
அசைவ உணவு பிரியர்களுக்கு மட்டன் என்றால் எப்போதும் ஒரே மாதிரியான பிரியாணி, சாப்ஸ் போன்ற உணவு வகைகள் தான் நினைவுக்கு வரும். இப்படி ஒரே மாதிரியான வகைகளை செய்வதற்கு பதிலாக மட்டனை வைத்து சமோசா போன்ற உணவுகளை செய்து சுவைத்து மகிழலாம். தேவையானவை : மைதா - 350 கிராம் பேக்கிங் பௌடர் - 1/2 தேக்கரண்டி கொத்துக்கறி - 250 கிராம் பெரிய வெங்காயம் - 1 மல்லித்தழை - 1/2 கப் புதினா இலை - 1/4 கப் இஞ்சி - 1 அங்குலம் பச்சை மிளகாய் - 4 உப்புத் தூள் - தேவையான அளவு நெய் - 2 தேக்கரண்டி தயிர் - 1 தேக்கரண்டி தக்காளி - 1 பெரியது கரம் மசாலா - 1 தேக்கரண்டி செய்முறை: மைதா மாவில் பேக்கிங் பௌடரைக் கலந்து கொள்ளவும். கொத்துக்கறியை வாணலியில் போட்டு, தண்ணீர் இல்லாமல் வதக்கிக் …
-
- 4 replies
- 666 views
-
-
வட இந்தியாவில் பிரபலமான ஒரு அசைவ உணவு தான் தஹி கோஸ்ட். இதில் தஹி என்றால் தயிர், கோஸ்ட் என்றால் மட்டன். எனவே தயிரையும் மட்டனையும் முக்கியப் பொருளாக கொண்டு, தயாரிக்கப்பட்ட ஒரு கிரேவி தான் தஹி கோஸ்ட். இது மிகவும் சுவையுடன் இருக்கும். இந்த கிரேவியை சாதம் அல்லது ரொட்டியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும். இதனை செய்துவது மிகவும் எளிது. சரி, இப்போது அந்த தஹி கோஸ்ட்டின் செய்முறைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: எலும்பில்லாத ஆட்டுக்கறி - 500 கிராம் தயிர் - 500 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 3 டேபிள் ஸ்பூன் கரம் ம…
-
- 15 replies
- 1.2k views
-
-
தேவையான பொருட்கள்.... வெள்ளைப்பூசணி - பாதி கேரட் - 2 வெங்காயம் -1 பச்சை மிளகாய் -2 எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - அரை ஸ்பூன் கொத்தமல்லி தழை - சிறிதளவு செய்முறை.... * வெள்ளைப்பூசணியை தோல்சீவி துருவி கொள்ளவும் * கேரட்டை தோல் சீவி துருவி கொள்ளவும் * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் * பச்சை மிளகாயை விதை நீக்கி பொடியாக நறுக்கவும் * ஒரு பாத்திரத்தில் துருவிய பூசணி, கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சோர்த்து கலக்கவும் * கடைசியாக மிளகு தூள், எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும். குறிப்பு: வெள்ளைப்பூசணிக்கா…
-
- 4 replies
- 5.6k views
-
-
பிறிங்ஜோல் பாய் ( brinjal palya or Egg plant palya ) என்னவேணும்: சின்னக் கத்தரிக்காய் கால் கிலோ. பெரிய வெங்காயம் சிவப்பு ( பம்பாய் ) 1 அல்லது சின்ன வெங்காயம் 4 . உள்ளி 3 பல்லு . வினிகர் 2 மேசைக்கரண்டி. சீனி அரைத் தேக்கரண்டி . தனி மிளகாய்த் தூள் அல்லது அரைநொருவல் மிளகாய்த் தூள் 2 மேசைக் கறண்டி. எண்ணை ( தேவையான அளவு ). உப்பு ( தேவையான அளவு ). மஞ்சள் தூள் ( சிறிதளவு ) . பச்சை மிளகாய் 4 கூட்டல்: கத்தரிக்காயை தண்ணியிலை கழுவி அரைவாசியாய் வெட்டி நீளப்பாட்டுக்கு வெட்டுங்கோ . தாச்சி சட்டியிலை பொரிச்சு அள்ளுங்கோ . வெங்காயம் ,பச்சை மிளகாய் , உள்ளி எல்லாவற்றையும் நீளப்பாப்பாட்டுக்கு வெட்டுங்கோ . பொரிச்ச கத்தரிக்காயினுள் வெட்டியதையும் உப்பு , தூள் , மஞ…
-
- 8 replies
- 1.5k views
-
-
தேவையானவை: பச்சைப் பட்டாணி – ஒரு கப், துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவர் – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவரை தனித்தனியாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உப்பு சேர்க்கவும். எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஊறுகாயில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஊறுகாய் என்றால், அது மாங்காய் மற்றும் எலுமிச்சை ஊறுகாய் தான். ஆனால் சிலருக்கு பூண்டு வாசனை மிகவும் பிடிக்கும். அத்தகையவர்கள், பூண்டை வைத்து கூட ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மேலும் ஊறுகாயை சப்பாத்திக்கு கூட தொட்டு சாப்பிடலாம். சரி, இப்போது அந்த பூண்டு ஊறுகாயை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உள்ளி (பூண்டு) - 1 கப் (தோலுரித்தது) எலுமிச்சை சாறு - 1/2 கப் சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) மல்லி - 2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீ…
-
- 9 replies
- 5.4k views
-
-
மாலை நேரங்களில் டீ அல்லது காபி குடிக்கும் போது பக்கோடா சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதிலும் மாலை நேரமானது வெயில் இல்லாமல், குளிர்ச்சியுடன் இருப்பதால், அப்போது சூடாகவும், சுவையுடனும் பக்கோடாவை செய்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இல்லை. குறிப்பாக உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நட்ஸில் ஒன்றான முந்திரியை வைத்தும் பக்கோடா செய்யலாம். இப்போது அந்த முந்திரி பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முந்திரி (கஜு)- 1 கப் கடலை மாவு - 3/4 கப் அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் வெங்காயம் - 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் புத…
-
- 0 replies
- 1k views
-
-
உள்ளிக் குழம்பு என்னவேணும் ??? உள்ளி 6 பிடி உரிச்ச சின்னவெங்காயம் 5 பச்சைமிளகாய் 3 கறிவேப்பமிலை ( தேவையான அளவு ) தனி மிளகாய் தூள் 2 தே கறண்டி பழப்புளி ( தேவையான அளவு ) மிளகு தூள் அரை தேக்கறண்டி முதல் தேங்காய் பால் 1 அரைக் கப் நல்லெண்ணை தேவையான அளவு உப்பு தேவையான அளவு கூட்டல் : உள்ளியை உடைச்சு முழுசாய் ஒரு பாத்திரத்திலை சேருங்கோ . வெங்காயம் பச்சை மிளகாயை வெட்டி வையுங்கோ . ஒரு மண்சட்டியிலை நல்லெண்ணை விட்டு எண்ணை கொதித்த உடனை வெட்டின சின்னவெங்காயத்தை போடுங்கோ . வெங்காயம் பொன்னிறமாய் வர பச்சைமிளகாய் கறிவேப்பிலையை போடுங்கோ . கொஞ்ச நேரத்தாலை தனிமிளகாய்த் தூள் மிளகு தூள் எல்லாவற்றையும் போடுங்கோ . கரைச்ச பழப்புளியைவிட்டு கொஞ்ச தண்ணி சேருங்கோ . தூள…
-
- 13 replies
- 1.8k views
-
-
தென்னிந்திய உணவுகளில் பிரியாணி மிகவும் பிரபலமானது. அத்தகைய பிரியாணி பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அசைவ பிரியாணியை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவர். ஆனால் சைவ பிரியாணி என்றால் அது வெஜிடேபிள் பிரியாணி மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். அதிலும் பல வகைகள் உள்ளன. அதில் ஒரு வகை தான் கார்ன் பிரியாணி. இத்தகைய பிரியாணியை காலை மற்றும் மதிய வேளையில் கூட எளிதில் செய்யலாம். இப்போது அந்த கார்ன் பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 2 கப் கார்ன் - 1 1/2 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது) தேங்காய் பால் - 1 கப் மிளகாய் த…
-
- 3 replies
- 734 views
-
-
நெத்தலி மீன் குழம்பு… தேவையான பொருட்கள் நெத்தலி மீன் – 1/4 கிலோ தக்காளி – 2 வெங்காயம் – 2 புளி – தேவைக்கேற்ப மிளகாய்த் தூள் – 4 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி எண்ணெய் – கால் கப் கறிவேப்பிலை – சிறிது செய்முறை : நெத்தலி மீனின் தலை மற்றும் வால் பகுதியை நீக்கி விட்டு சுத்தம் செய்து வைக்கவும். தக்காளி, வெங்காயத்தை வெட்டி வைக்கவும். புளியைக் கரைத்து அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கரையுங்கள். அடுப்பில் குழம்பு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். இதில் வெட்டிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்குங்கள். வதங்கியதும் புளிக் கரைசலை…
-
- 0 replies
- 3.1k views
-
-
நான் சில மணமில்லாத பெரிய மீன்களையும்(அறக்குளா,கும்பிளா,பாரை,விளை போன்றன),நெத்தலி போன்ற சின்னமீன்கலையும்(நெத்தலி மீன்குழம்பென்றால் அன்று ஒரு வெட்டு வெட்டுவேன்..ரொம்ப பிடிக்கும்) ரின் மீனையும்(ரின் மீன் என்றால் அலாதிப்பிரியம்) தவிர பெரிதாக மீன் சாப்பிடுவதில்லை..ஆனால் மீன் பிரியர்களுக்காக இது... __________________________________________________________________________________ மீன் - என்றதும் அம்மச்சியின் நினைவு கிளர்ந்தெழுகிறது. மீன் சுவையை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தது பாட்டி தான். மண் சட்டியில் வேக வைத்த மீன் குழம்பை சட்டியோடு ஒரு கை பார்ப்பது அலாதியான இன்பம். எந்த மீனை எந்த அளவுக்கு வேக வைக்க வேண்டும் என்பது ஒரு கலை ! அந்தக் கலை எப்படியோ பெண்களுக்கு வாய்த…
-
- 11 replies
- 4k views
-
-
கர்நாடகாவில் மிகவும் பிரபலமான மற்றும் சுவையான ஒரு காலை உணவு தான் அக்கி ரொட்டி. இது எப்படி சாதாரணமாக கோதுமை மாவை வைத்து ரொட்டி செய்வோமோ, அதேப் போன்று தான், ஆனால் இது அரிசி மாவை வைத்து செய்யக்கூடியது. 'அக்கி' என்றால் அரிசி. எனவே அரிசி மாவை வைத்து ரொட்டி செய்வதால், இதற்கு அக்கி ரொட்டி என்ற பெயர் வந்தது. பொதுவாக இதை கூர்க் மக்கள் தான் அதிகம் சாப்பிடுவார்கள். தற்போது அந்த அக்கி ரொட்டியை வீட்டிலேயே ஈஸியாக செய்து சாப்பிடலாம். சரி, அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 2 கப் அவரை - 1/2 கப் (வேக வைத்து மசித்தது) தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன் (துருவியது) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிற…
-
- 3 replies
- 894 views
-
-
பெப்பர் சில்லி சிக்கன் சிக்கன் ரெசிபியில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதிலும் சிக்கனை நன்கு காரமாக சமைத்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். பொதுவாக சிக்கனில் சிக்கன் 65 தான் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அந்த மாதிரியான வகையில் தான் சில்லி சிக்கனும் இருக்கும். மேலும் சில்லி சிக்கனில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான பெப்பர் சில்லி சிக்கனை எப்படி செய்வது என்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ முட்டை - 1 கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன் தயிர் - 1/4 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 …
-
- 1 reply
- 1.1k views
-