நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
[size=4]மஸ்ரூம் லாம்ப் மிகவும் ருசியான ஒரு டிஸ். இதை செய்வது மிகவும் ஈஸி. இதை பிக்னிக் போகும் போது செய்து எடுத்து சென்றால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுவையுடையது. இதை விடுமுறை காலங்களில் வீட்டில் உள்ளோரை அசத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்தால், இதன் அலாதியான சுவையால் நல்ல பாராட்டைப் பெறலாம். சரி, இதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள் : ஆட்டுக்கறி - 8 பீஸ் (எலும்புடன் கூடிய இறைச்சி) பட்டன் காளான் - 1 பாக்கெட் மிளகுத்தூள் - 1½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 1/2 டீஸ்பூன் கார்ன் ப்ளார் - 3 டேபிள் ஸ்பூன் எலும…
-
- 0 replies
- 700 views
-
-
உணவாகும் மென்பொருள் தலைப்பே தவறு, இதோ நாளைய அடுப்படி மன்னர்களே உங்கள் திறமையை மேம்படுத்த ஒரு அரிய சந்தர்ப்பம். இந்த ஆட்களுக்கு யாராவது வேலை கொடுங்கப்பா.
-
- 0 replies
- 700 views
-
-
மசாலா வடை குழம்பு அனைவருக்கும் மசாலா வடை பற்றித் தெரியும். ஆனால் மசாலா வடை குழம்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், மசாலா வடையைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு அருமையான சுவையில் இருக்கும். மேலும் வித்தியாசமான குழம்பு செய்து சாப்பிட நினைப்போருக்கு மசாலா வடை குழம்பு ஏற்ற ஒன்றாக இருக்கும். இங்கு மசாலா வடை குழம்பின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை செய்து சுவைத்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: மசாலா வடை - 10 வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 மல்லிப் பொடி - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை …
-
- 0 replies
- 700 views
-
-
https://www.yamu.lk/recipe/tin-fish-curry An easy way to make a tasty dish. Ingredients 3 tbsp of Oil 1 sprig of Rampe & Karapinchcha 2 Onions 3 Green chillies 2 tsp of Chilli powder 1 tsp of Turmeric Powder 1 1/2 tsp of Chilli Flakes 1 1/2 tsp of Pepper 1 1/2 tsp of Salt 2 Tomatoes 1 can of Fish 1 bunch of Spinach leaves Method Add the oil and temper the rampe and karapincha. …
-
- 1 reply
- 699 views
-
-
மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு தென்னிந்திய உணவுகள் மட்டும் தான் காரசாரமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். வட இந்தியாவின் சில பகுதிகளிலும் அசைவ உணவுகள் நன்கு காரமாக இருக்கும். அதிலும் வட இந்தியாவில் மசாலா பொருட்களைத் தான் அதிகம் பயன்படுத்துவார்கள். இங்கு வட இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெங்காயம் - 1 (நறுக்கியது) தேங்காய் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் - 5 ஜாதிக்காய் - 1 கசகசா - 1/2 டீஸ்பூன் மல்லி - 1/2 டீஸ்பூன் சோம்பு - 1/4 டீஸ்பூன் சீரகம் - 1/…
-
- 1 reply
- 698 views
-
-
மட்டன்....உருளைக்கிழங்கு....சுவையான மட்டன் வின்டாலு! #WeekEndRecipe தேவையானவை: மட்டன் - அரை கிலோ உருளைக்கிழங்கு - 200 கிராம் தக்காளி - 100 கிராம் விழுதாக அரைக்க: பெரிய வெங்காயம் - 50 கிராம் இஞ்சி - 10 கிராம் பூண்டு - 15 கிராம் காய்ந்த மிளகாய் - 8 கிராம் முழுமல்லி(தனியா) - 5 கிராம் சீரகம் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் பட்டை - ஒரு துண்டு வினிகர் - 4 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு தண்ணீர் - சிறிதளவு(தேவைபட்டால்) எண்ணெய் - 30 மிலி உப்பு - தேவையான அளவு …
-
- 0 replies
- 698 views
-
-
டேஸ்டியான மில்க் கேக் பக்லவா !! ஈஸியா ரெசிபி! நீங்களும் ட்ரை பண்ணுங்க!! மில்க் பக்லவா கேக் ஒரு எளிதான ரெசிபி ஆகும். மில்க் கேக்கை பயன்படுத்தி ஈஸியாக கேக் செய்யும் ரெசிபி தான் இது. இது பார்ப்பதற்கு மென்மையாக, இனிப்பா டேஸ்டியாக இருக்கும். பக்லவா என்பது சிரப் தன்மையில் கிரீக் டிசர்ட் மாதிரி இருக்கும். இங்கே மில்க் கேக்கை எப்படி பக்லவா மாதிரி சுவையுடன் செய்யலாம் என்பதை பார்க்க போறோம். ரெம்ப ருசியான இந்த கேக்கில் நீங்கள் ஏலக்காய் மற்றும் ஆரஞ்சு பழ நறுமணத்தையும் சுவையையும் கூட சேர்த்து கொள்ளலாம். உங்கள் தேநீர் வேளைக்கு இது சரியான ஸ்நாக்ஸ் ஆக அமையும். இனிப்பாக இருந்தாலும் அதிக கலோரிகள் கிடையாது. இந்த மில்க் கேக் பக்லவா செஃ…
-
- 0 replies
- 698 views
-
-
தேவையானவை: போன்லெஸ் சிக்கன் - 200 கிராம் எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பூண்டு - ஒன்றரை டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன் (இடித்தும் சேர்க்கலாம்) நீளமாக நறுக்கிய வெங்காயம் - 50 கிராம் கேரட் - 1 (ம…
-
- 0 replies
- 697 views
-
-
பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி குழந்தைகளுக்கு விருப்பமான பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிரெட் - 10 கேரட் - ஒன்று உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 2 கறிவேப்பிலை - ஒரு கொத்து பச்சை மிளகாய் - 1 கடுகு - அரை தேக்கரண்டி மிளகு தூள் - கால் தேக்கரண்டி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி துருவிய சீஸ் - தேவைக்கு செய்முறை : * வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * குக்கரில் தண்ணீர் ஊற்றி கேரட், உருளைக்கிழங்கை போட்டு வேக விடவும். வெந்ததும் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும். * ஒரு கடாயில் …
-
- 0 replies
- 697 views
-
-
முருங்கைப்பூ முட்டை சாதம் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: முருங்கைப்பூ – ஒரு கைபிடி கொழுந்து முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி வெங்காயம் – 1 பூண்டு – 3 முட்டை – 1 முழு சீரகம் – 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி வேகவைத்த சாதம் – பாதி கோப்பை உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கு. செய்முறை : • வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சிறிது காய்ந்தவுடன் சீரகம் போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். மிதமான தீயில் நன்கு வதக்கவும். அத்துடன் சுத்தம் செய்து கழுவிய முருங்கைப்பூ, கொழுந்து முருங்கைக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும். •…
-
- 0 replies
- 696 views
-
-
விலங்குகளை கொல்லாமல் செயற்கை இறைச்சி: உணவுத்தேவையை பூர்த்தி செய்ய ஐஸ்லாந்தில் புதிய முயற்சி 24 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES ஐஸ்லாந்தில் உள்ள வித்தியாசமான நிலப்பரப்புகளின் மத்தியில் ஒரு விநோதமான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் மனிதர்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய பல புதிய உணவு வகைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள பசுமைக் குடில்களில் பார்லி செடிகள் வளர்க்கப்படுகின்றன. செடிகள் வளர்த்தபிறகு, விதைகள் அறுவடை செய்யப்படுகின்றன. விதைகள் அரைத்து சுத்தம் செய்யப்பட்டு, அதிலிருக்கும் வளர்ச்சிப் புரதம் தனியாக எடுக்கப்படுகிறது. பின்னர் இந்த புரத்தின் மூலம், விலங்குகளே இல்லாமல் ஆய்வகத…
-
- 3 replies
- 696 views
- 1 follower
-
-
வாண்டுகளுக்குப் பிடித்த வீகன் டயட் என்றால் அது காலிஃப்ளவர் பாப் கார்ன்! பல சமயங்களில் பள்ளிக்குக் கிளம்பியாக வேண்டிய காலை நேரங்களில் சில குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள். முழுமையான காலை உணவை எடுத்துக் கொள்ளாமல், எத்தனை சுவையான டிஃபனையும் கூட அரைகுறையாக உண்டு நிராகரிப்பார்கள். இதனால் அவர்களது எனர்ஜி லெவல் ஒரே சீராக இருப்பதில்லை. காலையில் பள்ளிப்பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்று இறங்கி 2 மணி நேரம் கழிவதற்குள் அவர்களை சோர்வு ஆட்கொண்டு விடும், அப்புறம் தூங்கி வழியத் தொடங்கி விடுவார்கள். மாலையில் அவர்களை பிக் அப் செய்து கொள்ளச் செல்லும் போது ஆசிரியைகளிடமிருந்து பிறகு பெற்றோருக்குத்தான் வகையாக டோஸ் கிட…
-
- 0 replies
- 696 views
-
-
வயல் அறுப்புகள் முடிந்து விட்டது நண்பர்களுடன் சிறிய வாய்க்காலில் குளிக்க சென்ற வேளை வாய்க்கால் ஓரம் சில கெழுத்தி மீன்கள் விளையாடி எங்களை அழைத்து கொண்டது ஆகா அருகில் சென்று பார்த்தால் நல்ல களி கெழுத்தி என்பார்கள் கிழக்கில் மீன் களை பார்த்ததும் குளிப்பதை நிறுத்தி விட்டு கைகளால் அனைத்தையும் பிடித்து கொண்டோம் நல்ல நெல்லு தின்ற கெழுத்திகள் கொழுத்து இருந்தது இதை என்ன சமையல் செய்யலாம் என்று யோசித்து இருக்க நண்பன் ஒருத்தன் சொன்னான் அவித்து கடைவோம் என்று பிறகென்ன அவித்து கடைந்து உருவிவிட்டோம் தேவையான பொருட் கள் மீன் ஆத்து மீன் ( கெழுத்தி, பனையான் , ஆற்று சிறு மீன் கள் ) மாங்காய் நல்ல புளி மாங்காய் உப்பு கொச்சி சீரக் கொச்சி…
-
- 0 replies
- 696 views
-
-
வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான தந்தூரி சிக்கன் தந்தூரி சிக்கனை ஹோட்டல் சென்று தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த தந்தூரி சிக்கனை வீட்டிலேயே எளிய முறையில் செய்து சாப்பிடுலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ தயிர் - 1 கப் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் பூண்டு, இஞ்சி விழுது - 1 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் தனியா தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - அரை ஸ்பூன் …
-
- 0 replies
- 695 views
-
-
புடலங்காயை பிடிக்காதவர்களுக்கு இவ்வாறு ஸ்டஃப்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிஞ்சு புடலங்காய் - அரை கிலோ முட்டை கோஸ் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 200 கிராம் கரம்மசாலா தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் கடலை மாவு - 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : * பிஞ்சு புடலங்காயை 2 இஞ்ச் அளவில் வட்ட வடிவத்தில் வெட்டு உள்ளே இருக்கும் விதைகளை எடுத்து விடவும். * முட்டைகோஸை துருவிக்கொள்ளவும். * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கட…
-
- 0 replies
- 694 views
-
-
தேவையான பொருட்கள் சிக்கன் – 1 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1ஃ2 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு தேங்காய் துருவல் – 6 மேசை கரண்டி பச்சை மிளகாய் – 2 புதினா – 1 கப் கொத்தமல்லி – 2 கப் சீரகம் – 1/2 டீஸ்பூன் மிளகு – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் வெங்காயம் – 2 சீனி – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் பட்டை – 1 ஏலக்காய் – 5 வரமிளகாய் – 2 தண்ணீ…
-
- 1 reply
- 693 views
-
-
சிறுதானியக் கஞ்சி (தினம் ஒரு சிறுதானியம்-14) ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட கஞ்சி, கூழ் இன்று அனைவரின் காலை உணவாக மாறிக்கொண்டிருக்கிறது. நோய் வரும் பாதையைத் தடுத்து, ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் சிறுதானிய உணவுகளுக்கு ஈடு இணையே இல்லை. பலன்கள் அரிசி, கோதுமை தராத சமச்சீர் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய, உணவாக அமைவதால் உடல் வலுபெறும். நோய் நெருங்காமல் ஆரோக்கியமாக இருக்க சிறுதானியக் கஞ்சியும், கூழும் உதவி செய்யும். அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து. குடல்புண் மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் புண்ணுக்கு சாமை நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் அள…
-
- 0 replies
- 691 views
-
-
மங்லோரியன் சிக்கன்.......... தேவையான பொருட்கள்: சிக்கன் – 1 கிலோ (சுத்தமாக கழுவியது) வெங்காயம் – 1 (நறுக்கியது) தேங்காய் பால் – 1/2 கப் (கெட்டியானது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ்பூன் பட்டை – 1 கிராம்பு – 3 ஏலக்காய் – 3 வரமிளகாய் – 4 தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் புளி தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். பின்னர் வதக்கி இறக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் துருவிய …
-
- 0 replies
- 691 views
-
-
தேவையான பொருட்கள்: சிக்கன் - 500 கிராம் வெங்காயம் - 2 (நறுக்கியது) சோம்பு - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா/சிக்கன் மசாலா - 1 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு ஊற வைப்பதற்கு... மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.முதலில் சிக்கன் நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்த பின், அதனை தனியாக வைத்துக் கொள்ளவும். பி…
-
- 1 reply
- 691 views
-
-
யாழ்ப்பாணம் எண்டதுமே யாபகத்துக்கு வாற ஒரு உணவு யாழ்பாணத்து ஆட்டிறைச்சி கறி. அவ்வளவு சுவையான ஒரு கறி. வாங்க இண்டைக்கு யாழ்ப்பாணத்தில ஒரு ஆட்டிறச்சி பங்கு வாங்கி, யாழ்ப்பாணத்து பாரம்பரிய முறையில தோட்டத்தில வச்சு கறி சமைச்சு சாப்பிடுவம். நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க
-
- 2 replies
- 691 views
-
-
இறால் பெப்பர் ப்ரை தேவையான பொருட்கள்: இறால் - 400 கிராம் பச்சை மிளகாய் - 5 இஞ்சி - 30 கிராம் பூண்டு - 30 கிராம் வெங்காயம் - 1 கறிவேப்பிலை - சிறிது மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை: * இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்க வேண்டும். * இஞ்சி, பூண்டு அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்…
-
- 2 replies
- 689 views
-
-
இதுவரை எத்தனையோ பஜ்ஜிகளைப் பார்த்திருப்போம். ஆனால் பசலைக் கீரையைக் கொண்டு பஜ்ஜி செய்திருக்கமாட்டோம். பசலைக் கீரை பஜ்ஜியானது மிகவும் எளிமையான மற்றும் வித்தியாசமான சுவையில் இருக்கும் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. இதனை மாலை வேளையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதனுடன் செய்து சாப்பிட்டால், நன்றாக இருக்கும். அதிலும் பசலைக் கீரையில் நிறைய சத்துக்கள் நிறைந்திருப்பதால், இந்த பஜ்ஜியை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பது நல்லது. சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்க்கலாமா!!! தேவையான பொருட்கள்: பசலைக் கீரையின் இலை - 1 கப் கடலை மாவு - 1 கப் சோம்பு பொடி - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை …
-
- 1 reply
- 689 views
-
-
-
தண்டூரி கோழி('Tandoori Chicken ) /
-
- 4 replies
- 689 views
-
-
நான் பிறந்து வளர்ந்த வீட்டிலோ... உறவினர்கள் வீட்டிலோ இப்படி குழிப் பணியாரம் என்ற உணவு சமைக்கவில்லை. அப்படி ஒரு உணவின் பெயரையே... அதுவரை கேள்விப் படவும் இல்லை. திருமணம் முடித்த பின்.... மாமி தான், இதனை செய்து தந்தவர். நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்.
-
- 0 replies
- 689 views
-