கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
பேரூந்து தரிப்பிடத்தில் நின்றது. சாளரம் வழி தற்செயலாக அவளைக் காண்கிறேன். அழகிய, விரிந்த நீண்ட கருங் கூந்தல் காற்றில் பறக்க அவள் நின்று கொண்டிருந்தாள். காற்றில் பறந்த ஒற்றை முடி அவள் கன்னங்களில் படர்ந்து கதை பேசி கொண்டிருந்தது. காதில் தொங்கிய தூக்கணங்கள்.. ஆடி ஆடி அவள் கன்னங்களை வருடிக் கொண்டிருந்தன. என்ன ஒரு அழகு. நாள் முழுதும் அவள் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. அவளைக் கண்டது முதலாய் ஜொள்ளு வடித்துக் கொண்டே இருந்தேன். என்னை ஒரு தடவை நோக்காளா என்று என் கண்கள் அவள் பார்வைக்காய் ஏங்க.. அவளோ பார்வையால் வேறு எங்கோ குறியாய் இருந்தாள். சா.. அவள்..இந்தப் பேரூந்தில் ஏறி என் அருகில் வந்து அமரமாட்டாளா என்று மனம் ஏங்கிக் கொண்டிருக்க, ஏக்கம் தணிப்பவளாய்…
-
- 46 replies
- 6.3k views
- 1 follower
-
-
அன்று மேலதிகாரி வரவில்லை அதனால் சுரேசும்,புஞ்சி பண்டாவும் அதிகமாகவே தங்களது தேநீர் இடைவேளையை எடுத்து கொண்டனர் இருவரும் ஒரே நாடு ஆனால் வடக்கு தெற்கு என்று இரு துருவங்களிள் இருந்து குடிபெயர்ந்து சிட்னியில் ஒரு வேளை ஸ்தலத்தில் தொடர்ந்து ஜந்து வருடங்களாக பணி புரிகிறார்கள்.முதலில் வேலை ஸ்தலத்தில் சேர்ந்தவன் சுரேஷ் தான் பின்பு இணைந்தவர் புஞ்சிபண்டா. பல இனமக்கள் பணி புரியும் அந்த ஸ்தலத்தில் புஞ்சிக்கு சுரேசை முதலில் கண்டவுன்ட ஏதோ ஒரு வித உணர்வில் தான் சிறிலங்கா என்று சொல்லி தன்னை அறிமுகபடுத்தினான் சுரேசும் பதிலிற்கு தானும் சிறிலங்கா என்று சொல்லி விட்டான் ஆனால் அவன் தமிழா,சிங்களமா என்று அறிய ஆவலா இருந்தான். அதை போல் புஞ்சியும் ஆதங்கபட்டு தான் இருந்திருப்பான் இருவரும் மா…
-
- 8 replies
- 2k views
-
-
-
நாளேட்டின் பக்கத்தில் நனையும் ஓர் பொழுதில்………. அதிகாலைப் பனியில் அரைறாத்தல் பாணுக்காய் ஆலாய் பறந்த அந்த அம்மையாரின் காலம் அது. கூப்பன் அரிசியில் அரைநேரக் கஞ்சியும் மரவள்ளிக் கிழங்கும் மக்கள் உயிர்வாழ ஒத்துழைப்புச் செய்தன. பத்தாம் வகுப்பு சித்தியடைந்தபின் தொடர்ந்து படிக்க வேண்டுமென்ற எனது ஆசை நிறைவேறப்படாமல் வீட்டு நிலமை. காரணம் எங்கள் ஊர் பாடசாலைகளில் உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப் படவில்லை. நகரப் பள்ளிக்குச் சென்றுவருவதும் கடினம். எனக்கோ எப்படியாவது மேலே படித்து ஓர் ஆசிரியையாக வரவேண்டுமென்ற கனவு. ஏப்படியோ முயற்சி செய்து ஓர் நகரப் பாடசாலையில் அனுமதி கிடைத்து விட்டது. ஆனாலும் விடுதியில் தங்கிப் படிக்க வசதியில்லை. எனவே அதிபர் ஆசிரியர்கள் உதவியுடன் என்னைப் போல் எதிர்காலக் க…
-
- 7 replies
- 1.3k views
-
-
(1) பெண். அவளுக்குள்தான் எத்தனை சொரூபங்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அனுபவமாய், பாடமாய், படிப்பினையாய், பாவமாய், கதையாய், காவியமாய்.. பெண்னை நம்பாதே.. அவள் சிரித்துச் சிரித்தே கழுத்தாறுப்பாள் என்பவர் ஒருபுறம். பெண் இல்லாமல் ஒரு மனித வாழ்வா? வாழ்வின் பாதியே அவள்தானே என்பவர் மறுபுறம். ஆனால் அவன் அவளை அன்பின் அவதரிப்பாய் நினைத்தான். வாழ்வின் ஆதாரமாய் ஆராதித்தான். ஆனால் இன்று அவனது நினைவுகள் கனவுகளாய் கசங்கிவிட்டன. ஆராதனைகள் வெறும் அலட்டல்களாய் அருகிவிட்டன. ஆயிரமாயிரமாய் ஊற்றெடுத்த எண்ணக் கற்பனைகள் யாவும், அந்தரத்திலே அவலட்ணமாய் அவன் முகத்தில் சேறாய் வந்தொட்டி நாறியபோது, அதைத் தாங்க முடியாது ஆற்றாமையால் துடித்தான். உணர்வுகளின் சரிவைத் தாங்க …
-
- 15 replies
- 2k views
-
-
இப்படியும் மனிதர்கள் ................ வழக்கம் போல புலம் பெயர்ந்த ஒரு பெண்ணின் கதை இது . அழகான கிராமிய மனம் கொண்ட ஒரு சிறு ஊர் ,அதில் இன்பமாக வாழ்ந்த ஒரு குடும்பத்தில் மூன்று ஆண்களிடையே ஒரு பெண் பருவ வயது அடைந்ததும் திரு மணம் எனும் பொன் விலங்கு பூட்டி வாழ்க்கை எனும் காலடி வைத்த போது ,கொண்டவனின் கோலம் ,கண்டு உறவுகள் மனங்கள் கலங்கின . ...வருடங்களும் ஓட ,இரு ஆண் பிள்ளை களின் தந்தை ஆனான் . அரபூ நாட்டில் வேலை பார்த்தவன் ,பல தில்லு முல்லுகளால் ,இடை நிறுத்த பட்டு சொந்த ஊர் வந்தான் ... குடிஉம்... குடித்தனமுமாக ..வாழும் காலத்தில் ,வேலை இன்றி இருந்தான் ..அவளது l சக உறவுகள் புலத்தில் இருந்து உதவி செய்து ..போக்கு வரத்து செய்யும் வாகனம் எடுத்து …
-
- 0 replies
- 1.1k views
-
-
1995.. பல தமிழ் குடும்பங்களுக்கு ஒரு சபிக்கப்பட்ட வருடம்.... எங்கள் குடும்பமும் அதில் ஒன்று.. அன்றாடம் வேலிச்சண்டைகளையும்.. பங்குக்கிணற்றுச் சண்டைகளையுமே கண்டு வளர்ந்த பல வீர வீராங்கனைகளின் முற்றத்தில் குண்டு மழை... எனக்கு 14 வயது இருக்கும் என் நினைக்கிறேன்... எனது ஊர் சண்டிலிப்பாயில் ஒரு சனிக்கிழமை நாள் அதிகாலை 5 30 மணி..தூரத்தில் உலங்கு வானூர்தி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது...இடைய
-
- 10 replies
- 2.5k views
-
-
அன்றொரு நாள்... சண்டிலிப்பாயில் இருந்த காலம்... கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில படிச்சனான் ..ஆறு தலை முறை வீடு..வீட்டில இருந்து பள்ளிக்கூடம் 2 கிலோமீட்டர் தூரம் இருக்கும்...இடையில வயல் வெளி.. வீட்டில இருந்து பள்ளிக்கூடம் வெளிக்கிட்டம் என்றால்... அப்பிடியே பின்னால பையைக் கொழுவிக்கொன்டு சைக்கிள்ளை கந்தரோடை வயல் வெளியைத் தாண்டி காற்று தள்ள தள்ள ஓடுறது ஒரு சுகம்தான்...வீட்டில இருந்து வரேக்கை.... வலப்புறவயலில கண்ணகை அம்மன் கோவில்.. இடப்புற வயலில அளவெட்டி மாரி அம்மன் கோவில், நடுவில தவறனை ஒண்டு வேறை... கார்த்திகை, மார்கழியில.. வழுக்கை ஆற்றின் படுக்கயில இரண்டு பக்கமும் வயல் பச்சைப்பசேல் எண்டு இருக்கும்.. மார்கழி,தை மாதம் எண்டா அதால நடந்து வரும் எங்கடை மட்டங்களுக்க…
-
- 26 replies
- 4.9k views
-
-
நான் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில படிச்சனான். பல்கலைக்கழ விதியின் படி முதல்,இறுதி வருட மாணவர்களுக்குத்தான் விடுதி தருவினம்.ஏனைய மாணவர்கள் வெளியில் உள்ள தனியார் விடுதிகளில தான் தங்குறவை. சமாதான காலத்தில 2003 என நினைக்கிறேன், தமிழ் மாணவர்கள் ஒரு 15 பேர் சேர்ந்து சிரேஷ்ட கனிஷ்ட மாணவர்களாக ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தனாங்கள்..அந்த வீட்டிற்கு ''mini hostel'' என்று ஒரு செல்லப்பேரும் வைத்தனாங்கள்.... தமிழ் மாணவர்கள் என்றால் தெரியும் தானே.. தமிழ் பெற்றோர்..பெடியன் படிக்கிறான் என்றால்,தாங்கள் சாப்பிடுகினமோ இல்லையோ பிள்ளையள் படிப்புக்கு தேவையெண்டு கேட்டா தலயை அடமானம் வைத்தாவது வாங்கி குடுப்பினம்... இப்பிடி எங்கட வீட்டில 8 கணணிகள் இருந்தது எண்டு நினைக்கிறன்..இப்பிடி கடும் வசதியள…
-
- 23 replies
- 6.6k views
-
-
டிக் டிக் டிக் ஓயாமால் கேட்டபடி என்ன அது அதனருகே நான்,எத்தனையோ சத்தங்களை முன்பு கேட்டு கொண்டிருந்த பொழுதும் இப்பொழுது இந்த சத்தம் உறுத்தி கொண்டிருந்தது அது ஒரு சுவர் மணிக்கூடு அதனருகே நான் ,,ஏன்... இருக்க வேண்டும்...இருந்தே தீரவேண்டும்..அது ஒரு ஆஸ்பத்திரி வார்ட் ..நேற்று வரை நல்லாத்தான் இருந்தேன்..யார் சொன்னார்கள்...நான் தான் சொல்லுகிறேன்...மற்றவர்களுக்க
-
- 6 replies
- 1.6k views
-
-
சிட்டுகுருவி. .....முத்தம் கொடுத்து ...... மாலை வெயில் இரவை நோக்கி சென்று கொண்டு இறந்தது ...என் வீட்டு முற்றத்தில் அழகான இரு குருவிகள் அருகில் அமர்ந்து .ஒன்றை ஒன்று பார்த்து கொண்டு இருந்தன .மரக்கிளை காட்டில் ஆட அவையும் ஆடிய படியே .....சற்று செல்ல ... ஒன்றையொன்று உதடுகளால் உரசிகொன்டனே ...ஒன்று சற்று பெரிதாக இருந்தது . கழுத்லே கருமையாக ...,மத்தது ..சிறிதாக சிறு புள்ளிகளுடன் ....சிறிது நேரம் செல்ல ..ஒன்று சிறு குச்சிகளை ஒவொன்றாக கொண்டு வந்து சேர்த்து ..மற்றயது அருகிலிருந்த காய்ந்த இல்லை சருகுகளை கொண்டு வந்தது .நானும் ஜன்னலோரம் பார்த்து கொண்டு இருந்தேன் ........... மாலை பசுக்கள் வந்து மாட்டு கொட்டில் அடைவதற்காக அழும் சத்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
பிரிவு எப்போதும் பிளவு அல்ல .................. கண் நிறைந்த கண் அவனுக்கு (கணவனுக்கு ).......நீ சில நாட்களாக தொடர்பு கொள்ளாத் போதும், எனது தொலைவில் நின்று பேசாத போதும் உன்னை நான் மறக்கவில்லை. மறக்க கூடிய உறவா அது ...பள்ளி பருவத்திலே விழியில் விழுந்து ... இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவல்லவா? ...காலம் உருண்டு ஓடினாலும் கரையாத உறவல்லவா? எத்தனையோ எதிர்ப்பு வந்த போதும் , எதிர் நீச்சல் போட்டு ..உயிரோடு கலந்த உறவல்லவா? வேலை பளுவா? கடன் சுமையா? உடல் நலமின்மையா?...... கண்ணா ஓர் வார்த்தை பேசு ... கண்மணிகள் போல இரு செல்வங்கள் ..கண் அயரும் பொது அப்பா எங்கே என்று ... மனைவீ மக்களுடன் வாழ்ந்து விடுவாள் ... ஆனால் கணவனால் அது முடியாது. இதை உணர்ந்து இருப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
டப் என்ற சத்தத்தில் கிணற்றிற்குள்ளிருந்து கேட்குமாப்போல் ஒரு சத்தம் அம்மாவிற்கும் அம்மம்மாவிற்கும் கேட்டிருக்கக் கூடும். எந்தவித அதிர்வினையும் பய உணர்ச்சியினையும் தராத அச்சத்தம் குறித்து அவர்கள் ஒரு சில நிமிசத்துளிகள் அசட்டையீனமாக இருந்திருக்கலாம். அல்லது அவ்வாறெதுவும் கேட்காத அளவில் நித்திரையிலும் இருந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்தெழுந்த மிரட்டும் இரைச்சலும் இரைச்சலின் ஆர்முடுகலும் அவர்களை அல்லோலகல்லோலப்படுத்தத் தொடங்கியிருந்தது. ´´நாசமறுவார் ஏதோ புதுசா அடிக்கத்தொடங்கிட்டாங்கள்´´ அம்மம்மா தலைமாட்டிலிருந்த விளக்கைக் கொழுத்திச் சத்தம் போடத்தொடங்கினா. ´´மருமோள் எழும்பு.. பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வெளியில வா.. செல்லுகள் அடிக்கிறான் ..´´ சொல்லிக்கொண்டிருக்…
-
- 8 replies
- 2.2k views
-
-
அமைதிக்கு பெயர் தான் சாந்தா ............ அமைதியும் ,இயற்கை எழிலும் ..கொண்ட அந்த கிராமத்திலே ,மகிழ்ச்சியான இரு குடும்பங்கள் . .செல்லமணி ,தியாகு இருவரும் சகோதரங்கள் .ஆணும் பெணுமாக இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் . .குடும்பமும் குழந்தைகளுமாக iவாழ்ந்து வரும் காலத்தில் ,பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று உயர் பதவிஉம் பெற்று வாழ்ந்து வரும் காலத்தில் செல்லமனியின் மகள் சாந்தா வங்கியில் பணியில் சேர்ந்தாள். தியாகரின் மகன் ராகவன் ,பல்கலை கலகதிலே ,விரிவுரையாளராக பதவி பெற்றான் .. காலம் உருண்டு ஓடியது .சந்தாவின் தம்பி சுரேஷ் கலாசாலைகில் படித்து கொண்டு இருந்தான் .ராகவனின் தங்கை ஆசிரியர் பணியில் சேர்ந்தாள். ராகவனுக்கு பெண் கேட்டு தியாகர் செல்லமனியிடம் …
-
- 21 replies
- 3.1k views
-
-
ராமசாமி .................வாரானா?................. அது ஒரு பள்ளிகூட பருவம் ....வீட்டிலிருந்து ....... ...பாடசாலை செல்ல மூன்று கிலோ மீட்டர் நடக்க வீண்டும் . நானும் எனது நண்பி கலைவாணி உம் சேர்ந்தே போவம் .. போகும் வழியில் ..வீதிகள் ...வீடுகளில் உள்ள மா மரத்தில் கண் போகும் ..ஒரு பணக்கார வீட்டில் ...நிறைய மா மரங்கள் வகைக்கு ஒன்றாக ..நட்டு ..காய்த்து... குலுங்கும் காலம் .. அவர்கள் வீட்டுக்கு ... காவலாக ஒரு வேலைக்காரன் .....ராமசாமி .. .சில சமயம் ..அவனை கண்டு கேட்டால் ..ஆளுக்கு ஒன்று பிடுங்கி தருவான். ..மத்தபடி ..கள்ள மாங்காய் ..தான் . ஒரு நாள் என் நண்பி துணிந்து மதிலால் பாய்ந்து ...நிலம் முட்ட ..இருந்த காய்களில் சிலதை பிடுங்கி கொண்டு இருக்கு…
-
- 1 reply
- 1.1k views
-
-
அனைவருக்கும் இனிய திருட்டு வணக்கங்கள், இண்டைக்கு (நேற்று) நான் பள்ளிக்கூடம் போனால் என்ன நடந்திச்சிது தெரியுமோ? ரெண்டு அதிர்ச்சிகள் எனக்கு காத்து இருந்திச்சிது. ஒண்டு எனக்கு படிப்பிக்கிற வாத்திக்கு மாரடைப்பு. இனி அவர் படிப்பிக்க மாட்டாராம். புது வாத்தி ஒருத்தர பள்ளிக்கூடம் தேடிப்பிடிக்கவேணும். மற்றது, என்னோட படிக்கிற சக மாணவியிண்ட காரை உடைச்சு களவு. இதில ரெண்டாவது கதைய மாத்திரம் சொல்லிறன் சுருக்கமா. நேற்று என்னோட படிக்கிற சக மாணவி ஒருத்தி தன்ர காரை (car - மகிழூர்தி?) பள்ளிக்கூடத்திற்கு அருகில இருக்கிற ஒரு தெருவில விட்டுப்போட்டு அங்கால எங்கையோ போட்டு வாறதுக்கு இடையில யாரோ ரெண்டு திருட்டுப் பசங்கள் கார் கண்ணாடிய கல்லால குத்தி உடைச்சு காருக்க இருந்த பொருட்கள த…
-
- 20 replies
- 4k views
-
-
புலத்தில் முதல் நாள் உணவு.... நான் உள் நாட்டில கொஞ்சமா படிச்சுப் போட்டு... வெளி நாட்டில எல்லாரும் வெட்டி முறிக்கினம் நானும் ஏதும் முறிப்பம் எண்டு தான் வந்து மாணவனா இறங்கினான்... நான் நினைச்சுக் கொண்டுவந்தன் மேல கடுமையாய் படிச்சு பெரிய ஆளா வருவம் எண்டு.. கீத்துறூ விமான நிலையத்தில் வந்திறங்கிய முதல் நாள்... அப்பாவின் ஒண்று விட்ட சகோதரம் என்னை கூப்பிட வந்தவர்.... அவர் நாங்கள் காரில போகேக்க தன்டை வீர பிரதாபங்களை சொல்ல தொடங்கினவர்....ஒரு பத்து வருச கதயை காரிலேயே சொல்லி முடிச்சு போட்டார்..காரில இருந்து இறங்க முதல், நானும் ஊரில நானும் பெரும் நாட்டாமை எண்டு கதையை விட்டுப்போட்டன்... வீட்டை போய் இறங்கினா.. சித்தி குளாய் குளாய் மாதிரி எனக்கொரு சாப்பாடு தந்தவை... ஒ…
-
- 29 replies
- 5.6k views
-
-
பாடி திரிந்த் பறவைகள் ....................... அது ஒரு பாடசாலை பருவம் ...பல்கலை புகு முக வகுப்பின் இறுதி வருடம் . வழக்கமாக இளயோர் ஒன்று கூடல் (கெட் டு கெதர் ))நடைத்வார்கள் .. அருகிலிருக்கும் சகோதர பாடசாலையிலும் இருந்து 5 பேரை எடுப்பார்கள் அதன் படி நானும் போய இருந்தேன் . அதில் பெண்கள் சாரியிலும் ஆண்கள் ஆங்கில கலாசார உடை ( கோட் சூட் )யிலும் இருப்பார்கள் என்பது சொல்லி தெரிவதில் லை . உங்கழுக்கும் விளங்கும் தானே . அதில் ஒரு நிகழ்ச்சியில் பொதி மாருகை (பார்சல் பச்சிங் ) போது அதில் எழுதி இருப்பதை செய்து காட்ட வேண்டும். என் நண்பிக்கு "ஆண் என்றால் பெனுடனும் பெண் என்றால் ஆணுடனும் கை கோர்த்து வலம் வரவும் .............எல்லோரும் ஆச்சரியமாய் பார…
-
- 3 replies
- 1.9k views
-
-
ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ! ஓ! வழமைபோல இரண்டு நாள் வந்தான் பாவி, பிறகு இந்தத் திக்குத் திசையிலேயே ஆளைக் காணமென்று ஆளாளுக்கும் திட்டுகிறது கேட்குது. எனக்குக் கொஞ்ச நாளா மனசு சரியில்லை. அந்தக் கதையையும் கட்டாயம் உங்களுக்குச் சொல்லவேணும் அப்பொழுதுதான் எனக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும். அண்மையில் நண்பரொருவர் இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் சென்றிருந்தேன். அப்பொழுது அண்ணை உங்களுக்குத் தெரியுமே உங்களுக்கு வந்திருக்கிற வருத்தத்தின் தீவிரம்? ஓ ! ஓ! தெரியாமலே சா! கிட்ட வந்திட்டது தெரியும், முடிஞ்சவரை சாகிற காலத்தைக் கொஞ்ச் ஒத்திப்போடலாம் என்று நினைக்கிறன். உங்களிடம் இருக்கிற கெட்ட பழக்கத்தை விட்டியளென்றாலே கனகாலத்துக்கு வ…
-
- 12 replies
- 2.4k views
-
-
அது ஒரு மரண வீடு அதுக்குத்தான் போய் விட்டு வந்தேன் .அதனால் தான் என்னவோ மனசு என்னமோ மாதிரி இருக்கு. இறந்தவன் வேண்ட பட்டவனோ அல்ல.இருக்கும் பொழுது ஒரு நாளும் கண்டதில்லை .அவனை முதல் முதலாக பிணமாக பார்க்க வேண்டிய எனக்கு ஏதோ எழுத்து போலும்,எனக்கு வேண்ட பட்டவருக்காக போயிருந்தேன் , மனசுக்கு என்னமோ மாதிரி இருந்தது இறந்தவனை பார்த்து அல்ல, அந்த மரண வீட்டு சடங்கு நடக்கும் சூழல் போய் விட்டு வந்தாலே ஒரு மாதிரி இருக்குமோ என்னவோ. இறந்தவன் இள வயதுக்காரன் என்ற படியால் அகலா மரணம் என்று நினைக்கலாம் ,அப்படி இல்லை வருத்தம் வந்து தான் இறந்து இருந்தான் . இது பற்றிய விசயங்களை நானே தேடி கேட்க வேண்டியதில்லை . அங்கு வந்தவர்களே பேசி கொண்டார்கள். அவர்களுக்கு தான் பேசிக்கொள்வதற்க்கு உந்…
-
- 6 replies
- 2.1k views
-
-
சொக்கனுக்கு ... வாய்த்த சுந்தரி ..... புலம் பெயர் நாடொன்றில் சொக்கனும் சுந்தரியும் , ஆணும் பெணுமாக இரண்டு பிள்ளைகள் ,காலையில் கணவனை வேலைக்கு .. அனுப்பி விட்டு .... ,ஒரு குட்டி தூக்கம் . பின் ..எட்டு மணியளவில் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையில் விட்டு ..வந்து தொலைகாட்சியில் ஒரு நாடகம் அது முடிய ,சமையல். பின் மதியம் இரண்டு மணிக்கு ஒரு படம் . மாலை பிள்ளைகள் வந்ததும் ..படம் முடியும் வரை எதுவும் நடவாது . அதற்கிடையில் ஐஸ் பெட்டியில் உள்ளது எல்லாம் காலி செய்து விடுவார்கள் ..மாலை ஐந்து மணிக்கு சொக்கன் ஒரு வைன் போத்தலுடன் தொலை காட்சிக்கு முன் .. இடை ..இடை உறுக்கள்... என்ன இங்க இருக்கு ,, ,இது குப்பை.. என்ன செய்த்நியடி .....இரவு சாப்பாடு …
-
- 3 replies
- 1.8k views
-
-
என் வாழ்வில் கிடைத்த தந்தை பற்றி ஒரு சிறு கதை... நீதிராஜா பெற்ற பஞ்ச பாண்டவரிகளில் 5 வது பெண் குட்டி கடைக்குட்டி , அன்புக்கு பஞ்சம் இல்லை .பெரிய பட்டண மத்தில் கந்தோர் வேலை. மூன்று மாதமொருமுறை வருவார் ...இனிப்பு , முறுக்கு பலவகை எல்லாம் ...கொண்டு ..என்னை தூங்கவைக்க பாட்டு பாடும் பப்பா.. நெஞ்கிலே தாலாட்டி நடிப்புடன் கதை சொல்லி .(.மூன்றாம்பிறையில் வந்தது போல் ..முந்தி ..ஒரு..காலத்திலேயே முருகமலை காட்டுiகுள்ளே தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது ...என்ன செய்திச்சு ...வா வா வாழ்ந்து வந்திச்சு..) தொடரும் ...பயணம் போகும் போது அழுவேன் ..பயண காசு ..தருவார் ..இப்படி எல்லாம் வாழ்ந்தேன் . புலப்பெயர்வில் ..காலம் போக ..ஒரு தடவை கேட்டன் ..பப்பா ..அந்த பாட்டு…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
அந்த நீண்டு இருக்கும் வயல் வரப்போடு ஒட்டிய குறுகலான பாதை அதோடு ஒட்டி இருக்கும் தாமரைக்குளத்தை தாண்டியவுடன் அந்த பாதை விரிந்து ஊரி றோட்டில் ஏறுகிறது.மழை அடிச்சு வெள்ளம் வந்தால் குளத்துக்கும் வயலுக்கும் வித்தியாசம் தெரியாது. .இந்த மெயின் றோட்டில் இருந்து இந்த பரந்த வயல் வெளியூடாக ஊரி றோட்டில் தொடங்கும் இடத்தில் இருக்கும் ஊர் மனைகளை பார்த்தால் மிகவும் தூரத்தில் இருப்பது மாதிரி தான் தெரியும். வயல் விளைச்சல் இல்லாத காலங்களில் குளமும் வற்ற வயலும் சும்மா கிடக்க ; அதனூடாக குறுக்கலாக நடந்து சிலர் தூரத்தை குறுக்க முனைய, வேறு சிலர் அதை தொடர ,,தொடர அங்கு ...அதனூடாக பாதை ஒன்று புதிதாக மலர்ந்து விடும். அதனூடாக தான் கொஞ்ச நாளாக .... .....கொஞ்ச நாளாக எ…
-
- 8 replies
- 2k views
-
-
வணக்கம், நலமாக இருக்கிறீர்களா? வாழ்க்கை எப்படி போகின்றது? "அட என்னத்த இங்க வந்து கண்டோம்" என அலுத்துக்கொள்கிறீர்கள் போல? இருங்கோ தேத்தண்ணி போட்டு கொண்டு வாறன். சரி இப்ப நாங்கள், என்னை போல, உங்களை போல, நம்மை போல சில மனிதர்களை பார்ப்போமா? இஞ்ச பாருங்கோ இப்பவே சொல்லி போட்டன். இது முற்றிலும் ஒரு கற்பனை கதை என்ன. இடங்களின் பெயர்கள் மட்டும் நிஜ வாழ்வில் உள்ள இடங்கள். சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனை. பிறகு அங்க அவுஸ்திரேலியாவில இருக்கிறவ கோவ பட கூடாது. சரியோ?? சரி இனி உங்களுக்காக புலத்தில் இருந்து ஓர் புலம்பல்... புலத்தில் இருந்து ஓர் புலம்பல் ஈழத்தில் வடமராட்சியில் காலம் காலமாக வாழ்ந்த ஓர் குடும்பம், நாட்டு நிலமையால் அவுஸ…
-
- 244 replies
- 31.3k views
-
-
முன் குறிப்பு: கீழிருக்கும் பாடலை கேட்டுக்கொண்டு தொடரை படித்துப்பாருங்கள். http://www.ijigg.com/songs/V2AC4A0EP0 சிறு வயது முதல் ஈழத்தை விட்டு பிரிந்திருக்கும் என் தந்தை, தன் பிள்ளைகள் ஈழத்தையும்,தமிழையும் நேசிக்க வேண்டும் என்பதே தன் ஆசை என அடிக்கடி சொல்வார். அதற்காகத்தான் ஒவ்வொரு வருடமும் மாவீரர்தின மாதத்தில் இருந்து தை வரை ஈழத்திற்கு அழைத்து சென்றுவிடுவார். மூன்று அண்ணன்களுடன் இங்கு வசிக்கும் எனக்கு, அங்கு சென்றால் எண்ணிலடங்கா அண்ணன்கள் கிடைப்பார்கள். அப்படியான என் ஈழத்தை நோக்கிய பயணத்தில் அழுகைகளும், சோகங்களும், வீரமரணங்களும், அவலச்சாவுகளும், வெடிகளும், இரத்தமும், இடம்பெயர்வுகளும் சற்றும் குறைவில்லாமலே இருந்தது. ஆனாலும் அத்தனை இழப்புக்களையும் தாங்கும் சக்தி அ…
-
- 18 replies
- 4.3k views
-