Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. தொலைபேசி தொல்லைபேசியான கதை டெலிபோன் மணி இடைவிடாமல் அடிச்சுக்கொண்டே இருக்கின்றது. நல்ல நித்திரையிலிருந்த என்னை எழுப்பி விட்டது. டெலிபோனை எடுப்போமா எண்டு யோசிச்சிககொண்டு நேரத்தை பார்க்கிறேன். நேரம் காலை 3.00 மணி. ஒருவேளை அம்மாதான் கொழும்பிலிருந்து அடிக்கிறாவா எண்டு நினைச்சுக் கொண்டு ஓடிப்போய் போனை எடுக்கிறேன். அம்மாதான் போனில். அம்மாவின் குரல் கேட்டதும் காலையில் பறவையினங்கள் ஒலி கேட்டால் எப்படி சந்தோசப்படுமோ அது மாதிரிதான் அம்மாவின் குரலைக்கேட்டதும் எனக்கும் சந்தோசம். கதைச்சு முடிந்தபின் மனசில ஒரு கவலை. அம்மாவின் மடியில் படுத்து ஒருமுறை பிரிஞ்சிருக்கிற துக்கத்தை நினைச்சு ஒருக்கா கண்ணீர் விட்டு அழனும் போலிருந்தது. அந்த நினைப்போடு அப்படியே தூங்கி …

    • 24 replies
    • 6.2k views
  2. கனவுகளின் கைப்பொம்மை ஸ்கூல் பஸ் மெதுவாக ஓடி தெருவின் வளைவில் இருந்த அவளது வீட்டின் முன் நின்றது. கதவுகள் வாய் திறக்க குழந்தைகள் சில குதூகலமாக ஒவ்வொருவராக வெளிப்பட்டனர். தம் குழந்தைகளின் வரவுக்காகக் இரண்டு மூன்று பெற்றவர்கள் காத்து நின்றனர். தம் அன்னையரின் கைகளை அணைத்து மகிழும் பிள்ளைகளை ஏக்கத்துடன் பார்த்தபடி பஸ் யன்னலில் சாய்ந்து அமர்ந்திருந்த மது இறுதியாக இறங்க மனமற்றவள் போல் மெதுவாக இறங்கினாள். அவளுக்கு ஏனோ மனம் வெறுமையாக இருந்தது. பூட்டியிருந்த வீட்டைத் திறந்தாள். அவளை வரவேற்க யாரும் இருக்க மாட்டார்களென்று அவளுக்குத் தெரியும். புத்தகச் சுமையை மெதுவாக மேசையில் இறக்கி வைத்தாள். உடைமாற்ற மனமற்றவளாய் சோபாவில் விழுந்தவள் ரீவியின் றிமோட்டை எடு…

  3. Started by Kavallur Kanmani,

    அப்பாச்சி கை விளக்கு நெருப்புப் பெட்டி சுங்கான் புகையிலைப்பெட்டி தனக்கே உரியதான தடித்த தலையணை தலையணையின் கீழ் வைக்க வாங்குப்பலகை தண்ணீர்ச் செம்பு முதுகுக்கு விரிக்கும் பழைய சேலை வியர்வை துடைக்க துவாய் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை நோட்டமிட்டவர் ஏதோ ஒரு பொருள் குறைவது கண்ணில்பட அவசரமாக முற்றத்துக்குச் சென்று வேலியோர மறைவில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த எச்சில் படிக்கத்தை எடுத்து மண் அரைவாசிவரை நிறைத்துக் கொண்டுவந்து தலைமாட்டின் பக்கத்தில் வைத்தபின் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அரச கொலுமண்டபத்துக்கு விஜயம் செய்யும் மன்னனின் கம்பீரத்துடன் கால்களை நீட்டிப் போட்டபடி அமர்ந்த அப்பாச்சி புகையிலைத் துண்டங்களை அளவாகப் பிய்த்து சுங்கானில் அடைக்கத் தொடங்கினார். …

  4. சத்தியவானுக்கு ஒரு சாவித்திரி இந்த சத்திய பாமாவிற்கோ தினம் சாவே ராத்திரி விரைவில் யாழ் இணையத்திற்காய் .. . . . ஈழத்துக் கருவாச்சி நேற்று கருவறையில் நாளை கல்லறையில் இன்றைய வாழ்க்கையை இனிதே வாழ்ந்திடு என்ற வாசகத்தை பொய்யாக்கி கருவறை தொடக்கம் கல்லறை வரை கந்தையாய் கசங்கியவளின் உண்மைக்கதை. . . விரைவில் . . . . அன்று காதலுடன் எங்கிருந்தாய் மண்ணில் பிறக்கையிலே என்று வந்தேன்.. . . இன்று ஈழத்துக் கருவாச்சியுடன் வருகின்றேன். . . . கரவையில் தோன்றி நீர்வேலியில் மறைந்த கருவாச்சிதான் இவள். . .ஆம் ஈழத்துக் கருவாச்சி. . . இழப்புகளையே எருவாக்கி விருட்சமாக எழ நினைத்தவள். . . வேரறுந்த போது விசமருந்தி மாண்டு விட்டாள்.. . .

  5. Started by putthan,

    சிவாவின் அலுவலகம் அன்றும் வழமை போல பிசியாகவே இருந்தது தங்களிற்குரிய பணியை எல்லோரு ம்செய்து கொண்டிருந்தார்கள் மதிய உணவு இடைவேளை வரும்வரை எல்லோரும் மந்திரிக்கபட்ட மனிதர்கள் போல் கணணி,தொலைபேசி என்று ஒன்று தாவி இன்னொன்றிற்கு பணி புரிந்து கொண்டு இருந்தார்கள்.மதிய உணவு வந்தது கூட சிவாவிற்கு தெரியவில்லை.கம் சிவா வீ வில் கோ வோ லஞ் என்று ஸ்டெல்லா அழைத்ததும் அவனிற்கு மதிய உனவு ஞாபகமே வந்தது உடனே அவன் தனது உணவை மைகோரேவில் வைப்பதிற்கு எடுத்து செல்லும் போது அவனது மணம் நேற்று வைத்த இறால் குழம்பு,இறால் பொறியல் எல்லாம் இருக்கும் ஒரு சின்ன வெட்டு வெட்டலாமென்று நினைத்து கொண்டு மைகோரேவேவில் வைத்த சூடான உணவை திறந்து பார்த்த போது ஒரே ஏமாற்றம் தான் காத்திருந்தது அதில் இருந்ததோ மரகறி சைவ உணவுகள…

  6. மாவீரர் தின பதிவு - தலைவர்க்கு துணையாக வேண்டும், தமிழீழம் மலர்ந்தாக வேண்டும் [கீழிருக்கும் பாடலை கேட்டுக்கொண்டே படியுங்கள்] வழமையான வேலை, படிப்பு ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு மாவீரர் நாளான இன்றைய பொழுதிற்கான வேலைகளில் மூழ்கியபடியே இருக்கும் போது நடந்தவை பல மனதிலே தோன்றி , கண் வழியே இறங்கிகொண்டிருக்கின்றது. தனியே இருந்து அழவும், போராடவும் நாம் ஒன்றும் யாருமற்றவர்கள் இல்லையே. எங்களுக்கு தோள் தர உறவுகள் நீங்கள் இருக்கின்றீர்களே. இன்றைய நாள் "கார்த்திகை 27" உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் ஏதோ ஒரு வகையில் நிறுத்தி வைக்கும் என்றே சொல்லலாம். என்னைக்கேட்டால் மாற்றுக்கருத்துக்காரர்களை கூட என்பேன்.எத்தனை ஆயிரம் உயிர்கள் எமக்காய் விதைத்தாயிற்று. தமிழன் ஒரு போதும…

    • 8 replies
    • 3.1k views
  7. வார்த்தை தவறிவிட்டாய்.... அவரை யோகண்ணை என்றே அழைப்பேன். ஆனால் கற்பூர பக்ரரி யோகண்ணை என்ற பெயரில்தான் அவர் ஊரில் எல்லோராலும் அறியப் பட்டிருந்தார். ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் அவர் செய்த செயல் ஒன்று ஊரில் பலரை வியக்க வைத்திருந்தது. யோகண்ணை இளமையான காலத்தில் நண்பர்களுடன் கூத்தடித்திருக்கிறார். கும்மாளம் போட்டிருக்கிறார். சுருக்கமாகச் சொல்வதானால்இ சாதாரண இளைஞனுக்கு உள்ள அத்தனை சுபாவமும் கொண்டிருந்தார். யோகண்ணையின் நெருங்கிய நண்பனான பாலா சிங்களப் பகுதி ஒன்றில் அரச உத்தயோகத்தில் இருந்தார். ஒருநாள் ஒரு சிங்களப் பெண்ணை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தார். அவளை திருமணம் செய்வதாகச் சொல்லியே பாலா ஊருக்கு அழைத்து வந்திருந்தார். ஆனால் நடந்ததோ வேறு. அவளை நண்பர்களுக்கு விருந்த…

    • 1 reply
    • 1.5k views
  8. Started by nunavilan,

    மாடும் மனிதனும் விந்தன் மயிலைக் காளைகள் இரண்டுக்கும் கோமா என்று கேள்விப் பட்டதிலிருந்து மன்னார்குடி மாணிக்கம் பிள்ளையின் மனம் சரியாகவே இல்லை. பொழுது விடிந்ததும் மாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து, அவற்றுக்கு வேண்டிய சிகிச்சையை அளிக்குமாறு பணித்துவிட்டு வெளியே வந்தார். பத்துப் பன்னிரண்டு பேர் அவருடைய வரவை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டு இருந்தனர். "என்னடா பயல்களா, என்ன சேதி?'' "பத்து நாளாப் பட்டினிங்க; பண்ணையிலே ஏதாச்சும்...!'' "வேலைதானே? அதற்குத்தான் இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கேடா!'' "முனியனுக்கு மூணு நாளாக் காய்ச்சல்னு கேள்விப்பட்டோம்...!'' "ஆமாம், அதற்கென்ன இப்போது?'' "அவனுக்குப் பதிலா எங்களில் யாரையாச்சும்...!'' …

    • 0 replies
    • 1.3k views
  9. Started by putthan,

    பாடசாலை விடுமுறை என்றபடியால் சிவகுமார் தனது குடும்பதாருடன் விடுமுறையை செலவிட பிரபல சுற்றுலா மையதிற்கு சென்றிருந்தான் சிறுவர் அதிகம் விரும்பும் சிறுவர் விளையாட்டிற்கு டிக்கட் எடுத்து அவனும் மனைவியும் வெளியில் இருந்து அவர்களை கவனித்து கொண்டு இருந்தார்கள். " காய் யூ ஆர் மிஸ்டர் சிவகுமார் வுரோம் ஜவ்னா "என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க திடுகிட்டவனாய் யேஸ் என்றான் சிறிது நேரம் முழித்து கொண்டு இருந்த சிவாவை பார்த்து நான் தான் சந்திரவதனி உங்களுடன் படித்தனான் நினைவில்லையா என்று கேட்டா பிறகு தான் அவளை அடையாளம் காணமுடிந்தது சிவாவிற்கு.சிவா தனது கீதாவிற்கு சந்திரவதனியை அறிமுகபடுத்திவிட்டு மூவரும் கதைத்து கொண்டிருந்தார்கள் "சிவா நீங்கள் அப்படியே பாடசாலையில் படிக்கும் போது இருந்த …

  10. Started by sathiri,

    தீவாளி ஒரு பேப்பரிற்காக தீபாவளியை தீவாளி என்றுதான் பேச்சு வழக்கில் ஊரில் சொல்லுவோம்.வருசா வருசம் தீபாவளி வரும்போதெல்லாம் இப்பொழுது தீபாவளி தமிழருடையதா??தீபாவளியை கொண்டாடலாமா? கூடாதா??என்று சர்ச்சைகளும் கட்டுரைகளும் வெளிவர ஆரம்பிக்கும். தீபாவளி ஏன் கொண்டாட வேணும் எண்டு எப்பவோ யாரோ சொல்லிவிட்டு போன நரகாசுரன் கதையிலை கொலைசெய்யப்பட்ட நரகாசுரனுக்கு வாழ்த்து சொல்லுற அளவுக்கு இப்ப நிலைமை வந்திட்டிது. ஏன் எதுக்கு எண்டு சரியான விபரம் தெரியாமலேயோ தமிழர் கொண்டாடுற பல பெருநாளிலை இதுவும் ஒண்டு. அதையெல்லாம் ஒரு கரையிலை வைச்சிட்டு ஊரிலை சின்னிலை கொண்டாடின என்ரை சில தீபாவளி நினைவுகளை உங்களோடை பகிர்ந்து கொள்ளுறன். தீபாவளியை பலபேர் பல மாதிரி கெ…

    • 20 replies
    • 4.6k views
  11. இந்த சின்னக்குட்டி நித்திரை கொள்ளுறாரோ வாட்டர் பம்மாலை தண்ணி இறைக்கிறோரோ என்ற மாதிரி கிடக்கு விடுற சத்தம்..இவற்றை குறட்டை சத்தம் மெதுவாக கேட்க தொடங்கி தீடிரென்று சுருதி கூடி பிறகு அந்த சத்தங்களே ஒன்றுக்கொண்டு அவைக்குளை சண்டை படுறமாதிரி ஒலி எழுப்பும் .சில வேளை ஏழு ஸ்வரங்களை வைச்சு வித்தியாசமான மெட்டு அமைத்து விடுற மாதிரி இருந்தாலும் அநேகமாக கேட்கிற ஆக்களுக்கு அரியண்டமாய் தான் http://sinnakuddy.blogspot.com/2007/11/blog-post_16.html

    • 11 replies
    • 2.7k views
  12. Started by cawthaman,

    தவறிய முத்தங்கள் இலக்குத் தவறிய முத்தத்தால் அவள் கண்ணத்தில் உதித்த புன்சிரிப்பு இலக்கு தவறா முத்தம் தறும் இன்பபத்தை இலுத்து வைது கேள்வி கேட்ட்கிறது ************* இமைய மலை உச்சி கொண்டு சென்றது, நீ அருகில் இருந்தபோது. சிறு தோழ்விகளும் ஆழ்கடலின் இருளை காட்டியது நீ இல்லாதபோது. சேரும்போது கண்ட மகிழ்ச்சியும் பிரியும்போது கண்ட உணர்ச்சியும் வாழும்போது சாவின் காட்சி

    • 2 replies
    • 1.5k views
  13. எப்போதாவது வந்துபோகும் ஞாபகம் தான் ஆனால் கார்த்திகை மாதமானால் எப்படியாவது மறக்காமல் வந்துவிடும்.மறந்துபோக வேண்டுமே என்று எங்கோ என்னுள் புதைத்து வைத்த அந்த புதைக்கப் பட்ட ஞாபகம் இன்றும் என்மனதில் வந்து என்னை கிளறி விட்டுப் போனது... குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளை இந்திய அமைதிப்படை கைதுசெய்து அவர்களை சிங்கள அரசிடம் ஒப்படைக்க முற்பட்ட சமயம் தமது கொள்கையின் படி சயனைற் அருந்தி உயிர்துறந்தனர். அதற்குப் பின்னர்தான் இந்திய அமைதிப் படைக்கு எதிரான யுத்தம் வெடித்தது. இறுதியாக கோப்பாய் எனும் இடத்தில்தான் நேருக்கு நேர் யுத்தம் நடந்ததென்று நினைக்கின்றேன் பின்னர் புலிகள் தமது தாக்குதல்களின் வியூகத்தை மாற்றி அமைத்துக் கொண்டனர். இருந்தாலும் குண்டுகளின் சத்தங்கள் தொடர்ந…

  14. கண்ணோடு காண்பதெல்லாம் ..... வினாயகம் வேகமாக வீதியோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்தார். குளிர்கால ஆரம்பத்தின் அறிகுறியாய் மெல்லிய குளிர்காற்று சில் என்று முகத்தில் மோதியது. பாடசாலை ஆரம்பித்து விட்டதால் வீதியின் இருமருங்கும் பாடசாலை மாணவரின் அவசர ஓட்டமும், தம்மைக் காப்பகத்தில் விடுவதற்காக அழைத்துச் செல்லும் பெற்றவரின் கையை இறுகப் பற்றியபடி விழிகளில் வழியும் ஏக்கப் பார்வையுடன் செல்லும் மழலைகள் மறுபுறமும், எதையும் பார்க்கவோ ரசிக்கவோ நேரமின்றி கையில் கோப்பிக் கோப்கைகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் வேலைக்குச் செல்வோரின் அவசரமும், வீதியில் வரிவரியாகச் செல்லும் வாகன வரிசைகளும் ரொறன்ரோவின் காலைநேரக் காட்சிகளாக கண்முன் விரிந்திருந்தன. வினாயகம் ஒருவினாடி தன…

  15. தீபாவளியை முன்னிட்டு டைகர்பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "காதல்காவியம்" ஜம்மு பேபியின் "அழகிய காதல் மகன்" *கதாநாயகன் - "காதல் மன்னன்" சுண்டல் திரைபடத்தில் பிரசாந்தன் *கதாநாயகி - அறிமுக நட்சத்திரம் "அழகிய மகள்" ப்ரியா (ஜரோப்பிய வருகை) *இவர்களுடன் அறிமுகம் சின்ன கலைவாணன் செந்தூரன் (அவுஸ்ரெலிய வருகை) அறிமுகம் சிரிபழகி அனுசா (ஜரோப்பிய வருகை) *கெளரவேடத்தில் அட்டகாசமான குணசித்திர நடிகர் நெடுக்ஸ் தாத்தா (திரைபடத்தில் கனகசுந்தரம்) (தற்போது உங்கள் குடும்ப திரையரங்கான யாழ்நாற்சந்தியில் காண்பிக்கபடுகிறது) சுண்டல் அண்ணாவின் அட்டகாசமான நடிப்பில்!!! கண்களை மட்டும் அகல் விரித்து மூடிய திரைகுள் முகத்தை தேடி என்…

    • 40 replies
    • 14k views
  16. அந்த ஐந்தாம் வகுப்பு வரையும் மட்டுமே உள்ள அந்த கிறிஸ்தவ பாடசாலையின் பிரார்த்தனை மண்டபம் விளையாட்டு திடல் போல் காட்சியளித்து கொண்டிருக்கிறது.பொடி பெட்டையள் கீயோ மாயோ என்ற இரைச்சல் சத்தத்துடன் ஓடி ஆடி ஏதோ விளையாடி கொண்டு இருக்கின்றனர்.அந்த பெரிய நீண்ட பிரார்த்தனை மண்டபம் தான் வகுப்பறைகளாகவும் பிரார்த்தனை செய்யவும் விளையாடவும் உள்ள இடமாகவும் நேரத்துக்கு ஏற்றவாறும் தேவைக்கு ஏற்றவாறும் உருமாறிக்கொள்ளும்.ஆனால் அவன் மட்டும் தனித்தே இருக்கிறான்.விளையாடும் http://sinnakuddy.blogspot.com/2007/11/blog-post.html

    • 7 replies
    • 2.4k views
  17. குகனும்,மதனும் பாலர் பாடாசலை முதல் உயர்தரம் வரை ஒன்றாக படித்தவர்கள் மதன் இடையில் ஒருவருடம் கொழும்பில் படித்தவன்.இருவருக்கும் மருத்துவராக வேண்டும் என்ற நினைப்பு ஆனால் முயற்சி இல்லாமல் உயர்தரம் மூன்று முறை எடுத்தும் முயற்சி வெற்றி அளிக்கவில்லை.தொடர்ந்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது மதனிம் மாமன் கொழும்பு வரும்படியும் அங்கு ஜ.சி.எம்.ஏ செய்ய வரும் படி கடிதம் போட்டிருந்தார் மதனிற்கு அந்த யோசனை நல்லதாகபட்டது உடனே குகனையும் வரும்படி கேட்டான் குகன் மறுத்துவிட்டான் உயிரியல் பாடம் படித்துவிட்டு எனி முதலே இருந்து கணக்காளர் படிப்பு படிக்க என்னால் முடியாது என்று மறுத்துவிட்டான்.மச்சான் நீ வராவிட்டால் உன்னுடைய ரிசல்ட் சீட் கொப்பி ஒன்றும் தரும்படி கேட்டான் குகன் ஒன்ற…

    • 16 replies
    • 4k views
  18. போத்தல் பித்தளை அலுமினியம். இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது. பேத்தில் பித்தளை அலுமினியம். இந்த சத்தத்தை ஊரில் கேட்காதர்களே இருந்திருக்க மாட்டீர்கள். ஒரு சைக்கிளில் பின்னால் இரண்டுபக்கமும் சாக்கு அல்லது உரப்பையை கட்டியபடி போத்தில் பித்தளை அலுமினியம் இருக்கா என்று கத்தியபடியே வருவார்கள்.வீடுகளில் உள்ள பழைய உபோகிக்க முடியாத இரும்பு பித்தளை சாமான்களை நிறுத்து வாங்கி கொண்டு போவார்கள்.சிலர் பண்டமாற்று முறையில் வாங்கிய பொருட்களிற்கு பிளாஸ்ரிக் அல்லது அலுமினிய பாத்திரங்களை தருவார்கள். முன்னர் யாழ்சோனதெருவில் வசித்துவந்த சோனகர்களே பெரும்பாலும் இந்த வியாபாரத்தை செய்தனர்.இப்படி வேறு சில வியாபாரிகளின் கூவல் சத்தங்களையும் ஊரிலை கேட்கலாம் ஆடு இரிக்கா ஆடு.பழையகோட்.இ…

  19. Started by nunavilan,

    பகிடிவதை விதுஷன் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் மூன்று விசேட சித்தியும், ஒரு திறமைச் சித்தியும் பெற்று சித்தியடைந்த மாணவன். கல்முனையில் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவன். தந்தையை இளமையிலேயே இயற்கைக்குப் பலி கொடுத்தவன். வயதுடைய தாயையும், தனக்குக் கீழ் இரு தங்கைகளையும் கொண்டவன். இவ்வளவு காலமும் தாய் தயிர் காய்ச்சி விற்றும், அரிசி குற்றி விற்றும், விதுவை ஆளாக்கி விட்டாள். அவனும் விடுமுறைகளில் சிறுசிறு வேலைக்குச் சென்று பணம் தேடினான். ஆனால், இனி? அவனது எதிர்காலப் படிப்பு கேள்விக் குறியாகி விட்டது. தாய்க் கிழவி ஓயாத இருமலுடன் மூலைக்குள்ளே முடங்கி விட்டாள். இதுவரை இவர்களை எட்டிப்பார்க்காத சொந்தங்கள் விதுஷன் பல்கலைக்கழகம் செல்லவிருப்பதை…

    • 13 replies
    • 3.7k views
  20. நினைத்தாலும் மறக்க முடியாதவை - அஜீவன் நடந்து வந்த பாதையை பெரும்பாலும் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை நடந்து கொண்டிருப்பவனுக்கு அது தேவையில்லை ஆனால் நடக்க முடியாமல் போனாலோ இல்லை திரும்பி வர நேர்ந்தாலோ மட்டுமே அது குறித்து சிந்திக்கிறோம் புதிய ஒருவரை சந்திக்கும் போது அவருக்கு நம்மை அறிமுகம் செய்ய வேண்டி வருகிறது இல்லை பழைய சினேகிதங்களை சந்திக்கும் போது கடந்த காலத்தில் நடந்தவற்றை நினைத்து சிரிக்கவோ அல்லது அழவோ வேண்டிய நிலை ஏற்படுகிறது நல்ல நிகழ்வுகள் குறைவாகவே மனதில் பதிவாகிறது தாக்கங்களும் வேதனைகளும் மட்டும் மனித மனங்களின் போக்க முடியாத கறையாகி அல்லது வடுவாகி காயமாகி விடுகிறது வயதாகும் போ…

    • 42 replies
    • 11.1k views
  21. Started by sathiri,

    தொ(ல்)லைபேசி ஒரு பேப்பருக்காக விஞ்ஞான கண்டு பிடிப்புக்களில் இந்த தொலைபேசியின் கண்டுபிடிப்பும் ஒரு உன்னதமானதுதான். கைத்தொலைபேசியின் வரவிற்கு பின்னர் அதன் தொழில் நுட்பவளர்ச்சியும் மாற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துதான் செல்கிறது.முன்பெல்லாம் ஊரில் ஒருவர் வீதியில் தன்பாட்டில் சிரித்து கதைச்சபடி நடந்து போனல் சந்தேகமே இல்லை அவருக்கு விசர் என்று எல்லோரும் முடிவு கட்டிடுவினம்.ஆனால் இன்று நிலைமை அப்பிடியில்லை காரணம் கைத்தொலைபேசி புளுதோத் என்கிற சின்ன கருவியை காதுக்குள்ளை வைச்சிட்டு எல்லாருமே தங்கடை பாட்டிலை கதைச்சபடிதான் போகினம். இப்ப யார் கதைக்காமல் தன்ரை பாட்டிலை கம்மெண்டு போகினமோ அவைதான்விசரர் எண்டு நினைக்கிற அளவுக்கு நிலைமை மாறி போச்சுது.அது மட்டுமி…

  22. முன் குறிப்பு: கீழிருக்கும் பாடலை கேட்டுக்கொண்டு தொடரை படித்துப்பாருங்கள். http://www.ijigg.com/songs/V2AC4A0EP0 சிறு வயது முதல் ஈழத்தை விட்டு பிரிந்திருக்கும் என் தந்தை, தன் பிள்ளைகள் ஈழத்தையும்,தமிழையும் நேசிக்க வேண்டும் என்பதே தன் ஆசை என அடிக்கடி சொல்வார். அதற்காகத்தான் ஒவ்வொரு வருடமும் மாவீரர்தின மாதத்தில் இருந்து தை வரை ஈழத்திற்கு அழைத்து சென்றுவிடுவார். மூன்று அண்ணன்களுடன் இங்கு வசிக்கும் எனக்கு, அங்கு சென்றால் எண்ணிலடங்கா அண்ணன்கள் கிடைப்பார்கள். அப்படியான என் ஈழத்தை நோக்கிய பயணத்தில் அழுகைகளும், சோகங்களும், வீரமரணங்களும், அவலச்சாவுகளும், வெடிகளும், இரத்தமும், இடம்பெயர்வுகளும் சற்றும் குறைவில்லாமலே இருந்தது. ஆனாலும் அத்தனை இழப்புக்களையும் தாங்கும் சக்தி அ…

    • 18 replies
    • 4.3k views
  23. அவளது கண்கள் அழுது அழுது இரத்த சிவப்பாயிட்டுது. இன்னும் கண்ணீர் வடித்து கொண்டே அழுது களைத்து சிணுங்கலாகி சிணுங்கி கொண்டே இருக்கிறாள். சிணுங்கல் தொந்தரவு தாங்க மாட்டாமால் கொடியில் உடுப்பு காய போட்டு கொண்டிருந்த அவளது அம்மா சனியனே உனக்கு இவ்வளவு http://sinnakuddy.blogspot.com/2007/09/blog-post_11.html

  24. சப்பறம் பாக்கலாம் ஒரு பேப்பரிற்காக கடந்த ஞாயிறன்று பாரிஸ் மாணிக்க பிள்ளையார் கோவில் தேரிற்கு சென்றிருந்த வேளை ஊர் நண்பனுடன் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழா ஞாபகங்களை நினைத்து பேசிய பொழுதுதான் வாழ் நாளில் எப்படி எங்கள் சில நகைச்சுவை அனுபவங்களை மறக்க முடியாதோ அது போலவே எங்களால் ஏதோ ஒரு சில காரணங்களிற்காக சில நகைச்சுவையான அல்லது வேடிக்கையான மனிதர்களையும் வாழ் நாளில் மறக்க முடியாது. அப்படியான ஒரு உறுவுக்காரர் எங்கள் ஊரில் இருந்தார்.கதைக்காக அவரிற்கு ராசா பெயர் வைக்கிறேன். ராசா நன்றாக படித்து புகையிரத ஓட்டுனராக வேலையும் செய்தார். ஆனால் அவருக்கு தண்ணியிலை கண்டம். நான் சொல்லுறது கடல் தண்ணி ஆத்து தண்ணியில்லை இது அடிக்கிற தண்ணி. இவர் காங்கேசன்…

    • 13 replies
    • 2.9k views
  25. கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம் பொ.கருணாகரமூர்த்தி பிறருடைய சோகத்தில் சிரிக்கக்கூடாதுதான். ஆனாலும் இதில் சிரிப்புவருவதைத் தடுக்கமுடியவில்லை. எம் மூத்த மகள் ருதுவாகி இருந்தவேளையில்தான் எமக்கு நாலாவது குழந்தையும் பிறந்திருந்தாள். நேரில் போனில் விசாரித்தவர்களின் குரலில் இருந்த சோகத்தைக் கேட்கத்தான் எமக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. " இந்தமுறையாவது ஓப்பிறேசனைச்செய்து விடுங்கோ" " அவளைப்பார்கிறதோ இவளைப் பார்ப்பியளோ நல்லாய்த்தான் கரைச்சல் படப்போறியள்". " அப்படி என்ன பார்வை, என்ன கரைச்சல், சனம் எதுக்கு மூக்கால அழுகுது?' ஒன்றுமாய் புரியவில்லை. எட்டாவது தேறாததுகளே எமக்குக் குடும்பக்கட்டுப்பாடு அட்வைஸ் செய்யலாயினர். அத்தை மாத்திரம் மகளிடம் "அஞ்சு பிள்ளைதான்டி அதிஷ்டம்... இன்ன…

    • 1 reply
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.