கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
குளிர்சாதனப் பெட்டி அட்சரம் (இதழ் - 4) டிசம்பர் 2002-பிப்ரவரி 2003 ஆசிரியர் - எஸ். ராமகிருஷ்ணன் தமிழ் புனைவியலின் வரைபடம் என்ற முழக்கத்தை முகப்பில் தாங்கிவரும் `அட்சரம்' என்ற சிற்றிதழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் முயற்சியில் வெளிவருகிறது. புனைக்கதைகளுள் புதிய வடிவங்களை புகுத்தும் பல கதைகளை இச்சிற்றிதழ் இந்த இதழில் வழங்கியுள்ளது. பின் நவீனத்தில் அல்லது கற்பனாதீத தொர்த்த வகையைச் சேர்ந்த எழுத்துக்கள் லத்தீன் அமெரிக்காவிற்கு வெளியே எப்படி வளர்ந்து வருகிறது என்பதை இந்த இதழின் "சிறப்புப்பகுதி" என்ற மொழிபெயர்ப்பு கதைகள் உணர்த்தும். இந்தப் பகுதியிலிருந்து இசபல் ஸாஜ்ஃபெர் எழுதிய "குளிர்சாதனப் பெட்டி" என்ற பிரஞ்சுக் கதையை வாசகர்களுக்குத் தருகிறோம்) குளி…
-
- 3 replies
- 1.9k views
-
-
அகல்யை புதுமைப்பித்தன் வேதகாலம் சிந்து நதி தீரத்திலே... இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவில் விளங்கும் - அதில் அரசன் இருப்பான் - அதனால் அது தலைநகர். இவ்வளவும் தாண்டி ஜன சஞ்சாரமே இல்லாத பாகம். சிந்து நதி ஹிமயத்தின் மடியைவிட்டுச் சமவெளிக்கு வர ஆரம்பிக்கும் இடம். மரமும் கொடியும் மனிதனின் வெற்றியைக் காணாதவை. சிந்துவின் கன்னிப் பருவம் - நதி களங்கமற்ற உள்ளத்தைப்போல் பாறைகளைத் தழுவிச் சுழித்துச் சிரித்துச் சென்றது. அங்கே கௌதமருடைய வாசஸ்தலம் சற்று காட்டின் உள்ளே தள்ளி. சிந்துவின் கரைக்கும் கு…
-
- 1 reply
- 1.8k views
-
-
Thursday August 2, 2007 கௌசல்யா மட்டுவில் ஞானக்குமாரன் அவள் ...! இவளைப் போல பெண் மணிகளை ஊர் உலகிலே கண்டிருப்பீர்களா ? இவளைப் பற்றி பேசும் போதெல்லாம் இப்படியே எனக்கு எண்ணத் தோன்றும். எனது முதல்ப் பார்வையிலே எந்த விதமான அலைகளையும் என் கவனக் குளத்திலே அவள் ஏற்ப்படுத்தவில்லை ஆனால் பின்னொரு நாளிலே இந்தக் குளத்திலேயே சுனாமியை வரவளைத்தவள். ஆனாலும் இவள் வித்தியாசமானவள். யாராவது அவளுக்காக பரிந்து பேசினால்க் கூட அதைப்பற்றி எள்ளளவும் அக்கறையும் பட மாட்டாள.; அதே போல சினம் வந்து அவள் மீது யாராயினும் சுடு சொல் கொண்டு திட்டினாலும் கூட எக் குறையும் படமாட்டாள். என்னடா இவள் பாலுக்கும் கள்ளுக்கும் பாகுபாடு தெரியாமல் எல்லோரையும் நம்ப…
-
- 4 replies
- 1.6k views
-
-
தலை விதி பாகம்-1 விடிகாலைக் கருக்கல் கலைந்த வண்ணம் இருந்தது. கண்மணி தன் பிள்ளைகளுடன் படுத்திருந்தாள். நிலவன் அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கி வெளிச் சிந்தியது. உறக்கத்திலிருந்த கண்மணி திடுக்குற்றுக் கண்விழித்தாள். "என்னப்பா அடுப்பில் பால் பொங்கி ஊத்துதே..." "ஓமப்பா அடுப்பிலலை பால் வைச்சனான், மறந்துபோயிட்டன்." கண்மணி அடுப்படிக்கு விரைந்து சென்றாள். அடுப்படியில் பால் வழிந்து கிடந்து. கண்மணி கண்களைக் கசக்கிய வண்ணம் "ஏனப்பா உங்களுக்கு இந்த வேலை? என்னை எழுப்பியிருக்கலாமல்லோ?" என்று கத்தியவாறு கற்கண்டை அந்த மீதிப் பாலுக்குள் கலந்து ஊற்றிக்கொண்டு வந்து கணவனிடம் கொடுத்தாள். நிலவன் பாலைக் குடித்த வண்ணம் "அதில்லையடியப்பா, உனக்கு ஏன் தொல்லை தருவான் எண்டுதான் நானே போட்டேன்…
-
- 10 replies
- 2k views
-
-
மார்கழியில் ஒரு காலை.... -------------------------------------------------------------------------------- மார்கழியின் காலை பொழுதை ரசித்தவரா நீங்கள். இப்போது அதை பார்க்காமல் ஏங்குபவரா நீங்கள்.......... கட்டாயம் படியுங்கள். நன்றாக கம்பளியை போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் போது அப்பா எழுப்பி “போய் பால் வாங்கிட்டு வா” என்று மார்கழியில் ஒரு காலையில் எழுப்ப மார்கழியின் காலை எத்தனை ரம்மியமானது என்று உணர ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எழுந்திரிக்க மனம் இல்லாமல் குளிருக்கு இதமாக போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கத் தோன்றும். இத்தனை ரம்மியமான அழகான உணர்ச்சிப் பூர்வமான மார்கழியை இத்தனை ஆண்டுகாலமாக ரசிக்காமல் விட்டுவிட்ட இந்த சோம்…
-
- 4 replies
- 2.6k views
-
-
பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த என்னைப் பார்த்து அவள் தயக்கமாய், "ஹலோ" சொன்னாள். என் முகத்தில் அரும்பிய புன்னகையைத் தொடர்ந்து பேசத் துவங்கினாள். "என் பேர் உமா. ஆபிஸ்ல உங்களைப் பார்த்திருக்கேன். நீங்களும் எஸ்பிசி-லதானே வேலை செய்யறிங்க ?" "நானும் உங்களைப் பார்த்தேன். இன்னிக்குக் காலைலதானே ஜாயின் பண்ணினிங்க?" தலையாட்டினாள். "ஆமா. ஆனா எல்லாரும் என்னை பரம விரோதி மாதிரி பார்க்கறாங்க. ஏன்னு புரியலை." "நீங்க அமெரிக்காவுக்குப் புதுசு. அதுவும் L1 விசாவில் வந்திருக்கிங்க இல்லையா அதான்." " அதனால? " " பொதுவா இங்க ஒரு இந்தியனை இன்னொரு இந்தியன் விரோதி மாதிரிப் பார்ப்பான். அதிலும் L1 விசாவில் வந்திருக்கும் அவுட் ஸோர்சிங் ஆள்ன்னு தெரிஞ்சா பரம விரோதி மாதிரிப் பார்ப்பான்.…
-
- 4 replies
- 1.8k views
-
-
பசுமை எழில் கொஞ்சும் வயல் வெளிகளையும்,ஆறுகளையும் தன்னகத்தே கொண்டு,ஆலய மணியின் இனிய ஒலி செவியில் இன்னிசையாக காதில் தேன் போல பாய,கால்நடைகளின் சத்தங்கள் ஒரு வித புத்துணர்ச்சியை ஊட்ட,ஒரு புறம் குமரி பெண்களின் சிரிப்பு சலங்கை ஒலி போல சலசலக்க வார்த்தைகளாள் வர்ணிக்கமுடியாதய் இருந்தது அந்த பசுமை நிரம்பபெற்ற கிரமாம்................. அந்த கிராமத்தில் வைத்தியர் கனகவேலை தெரியாதவர்கள் யாருமில்லை என்றே சொல்லலாம் அந்தளவிற்கு அந்த கிராமத்தில் அவரை விட்டால் வேறோரு வைத்தியர் இல்லை என்றே சொல்லலாம்....அவரும் எல்லோரிடத்திலும் அன்பாகம் பணிவாகமும் இருப்பது தான் அவரை எல்லாருகும் பிடித்து போய் இருந்தது.கனகர் வீட்டை தான் கார் இருக்குது என்று அந்த ஊரே பேசி கொள…
-
- 28 replies
- 4.4k views
-
-
சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்த ஓணான். சரேலெனத் திரும்பினார் சந்திரோதயத்தார். கண்களைக் கசக்கி மறுபடியும் பார்த்தார்இ சந்தேகமே இல்லை... வழவழப்பான தோற்றம்இ ஒவ்வொரு வளைவிலும் வெயில் பட்டுத் தெறிக்கும் மெர்க்குரி வெளிச்சம்.... அழகு ஜெகத்ஜோதியாக மின்னியது. ஜில் ! ஜில் ! ஜிக்குமாலா ! இ எல்லோருக்கும் புரியும்படியாக நல்ல தமிழில் பேசிக் கொண்டார். அழகில் மயங்கி எவ்வளவு நேரம் நின்றாரோ தெரியவில்லை... இப்படி மயங்கினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்... வேலிக்கட்டை ஓணான் போல சரக் சரக்கென தலையை ஆட்டினார். சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்த குற்றத்திற்காக அவர் ஊரில் எத்தனையோ ஓணான்களைக் கொன்றிருக்கிறார். ஓணான்கள் போலவே தலையை சொடக் சொடக்கென ஆட்டியபடி க…
-
- 10 replies
- 4.2k views
-
-
ஆறுமுகநாவலர் அருளிய குட்டிக் கதை சம்பத்து உடையவனாகிய ஒரு வர்த்தகன் இருந்தான். அவன் தன் பல்லக்குச் சுமக்கிற ஆட்களை அழைத்து, "பசுமாட்டுக்கு நாள்தோறும் புல்லுவெட்டிக் கொண்டுவந்து போடுங்கள்" என்றான். அதற்கு அவர்கள் "நாங்கள் பல்லக்கு மாத்திரம் சுமப்போம். வேறு வேலை செய்யமாட்டோம்" என்றார்கள். இப்படி இருக்கும்பொழுது ஒருநாள் பசுவின் கன்று வெளியில் ஓடிப்போயிற்று. அப்பொழுது வர்த்தகன் அந்தச் சிவிகையாட்களைப் பார்த்து, "கன்றைத் தேடிப்பிடித்துக்கொண்டு வாருங்கள்" என்று சொல்ல, அவர்கள் "நாங்கள் பல்லக்குச் சுமக்கிறவர்களோ, மாடு மேய்க்கிறவர்களோ" என்றார்கள். அப்பொழுது வர்த்தகன் அவர்களுக்குப் புத்தி வரும்படி செய்யவேண்டுமென்று யோசித்து, மத்தியான வேளையிலே பல்லக்குக் கொண்டு வரச் சொல்லி…
-
- 5 replies
- 1.6k views
-
-
அந்த மைதானத்துக்கு போராளிகள் கரப்பந்தாட்டம் விளையாட வருவது வளமை... அண்றும் வந்திருந்தார்கள்... ஐந்து பேர் கொண்ட அணியாக சிங்கிள் சொட் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்... பந்தின் வேகம் கட்டுக்கடங்காமல் அங்கும் இங்குமாய் அலைகிறது... அவர்கள் சாள்ஸ் அன்ரனி படையணி போராளிகள்.. மாவட்டரீதியாக பாரபட்சம் இல்லாமல் எல்லா மாவட்டத்தவரும் கலந்தே இருக்கிறார்கள்... பந்தின் வேகம் அதிகரித்து கிழே விழும் போதெல்லாம் தோல்வி உற்ற அணி வெளியேறி புது அணி உள்ளே நுளையும்... எனக்கும் கர பந்தாட்டம் எண்டால் உயிர்... என்னையும் ஒரு குழு அணியில் சேர்த்து இருந்தார்கள்.. வெளியேறும் அணிக்காகவும் எமது சந்தர்பத்துக்காகவும் காத்து இருக்கிறேன்... இது நடந்தது தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஏற்கனவே விளையாடி …
-
- 13 replies
- 2.7k views
-
-
வலைபதிவர் தமிழ்நதி சென்னை தமிழில் கதை எழுதி இருக்கார். அப்பலேர்ந்து அந்தக் கயவாணிப் பயபுள்ள ஒரு மாதிரியா என்னய உத்து உத்துப் பாக்குறான். மூஞ்சி முச்சூடும் தழும்ப வைச்சுக்கிட்டு சண்டைக்கோழி ராஜ்கிரண் ஸ்டைலுல ஒரு லுக்கு. எதோ அவம் பொண்டாட்டி தாலிய நான் அறுத்தா மாரி ரவுசு காட்றான். எங் காலக்கொடுமை அவனயும் என்னயும் ஒரே றூம்புக்குள்ளாறதான் போட்டு அடைச்சிருக்கு. நா ரீஜண்டான ஆளுதான். இந்த ஈ.சீ.ஆர். றோட்டாண்ட ஒரு பில்டிங் கட்றாங்க இல்ல… அங்ஙன காட்டுவெயாரோ சாப்டுவெயாரோ என்னா கசுமாலமோ… அங்ஙனதா நமக்கு வேல. வேலன்னா இன்னா சும்மாவா… ஒரு நாளிக்கு எத்னை கல்லு தூக்கணும் தெர்யுமா… கல்லுத் தூக்கித் தூக்கியே ஒடம்பு கல்லு மாரி ஆய்ப் போய்ச்சு. எம் பொண்டாட்டி தேவியும் அங்ஙனதாம் வே…
-
- 2 replies
- 1.1k views
-
-
துவக்குப்பிடியால் வாங்கிய அடி இராமேஸ்வரக் கோவிலின் கோபுரம், அதிகாலை மங்கல் ஒளியில் கருஞ்சிறு மலைபோல் எழுந்து நின்றது. சுதந்திரா அந்த மணல் வெளியில் அமர்ந்தவாறு, எதிரே கிடந்த கடலை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளோடு கூட வந்த பிள்ளைகள், உறவினர்கள், இன்னும் உதவ வந்த பணியாட்கள் என்று ஒவ்வொரு தரப்பினரும் தாம் வந்த வேலை முடிந்த நிலையில் , அன்னதானம் முடிந்ததும் அங்கிருந்து போவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதில் மும்மரமாயிருந்தனர். சுதந்திராவின் கணவன் பாரத் இறந்து 14வது ஆண்டு நிறைவு தினம் இம்முறை இராமேஸ்வரத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. காலைக்கதிர் கடலுக்கு மேலால் தலைகாட்டும் நேரம். அதற்கு முன்னரே எல்லாச் சடங்குகளையும் முடித்துவிட்டு, அங்கு குழுமும் சனங்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/02/blog-post_5401.html லொக் லொக் என்று சதா இருமியபடி கொண்டிருந்தது உந்த அப்பம்மா. சாடையாய் வந்த தூக்கத்தை கெடுத்து போட்டுது என்று மனதிலை பொருமி என்று படுக்க . அதைவிட வெளியே வேலிக்கு போட்ட சொத்தி பூவரசு மரத்திலிருந்து அண்ட காகம் ஒன்று தலையை குத்தி குத்தி கரைந்து கொண்டிருந்தது. வராத ஆக்கள் தூரத்திலிருந்து வர போயினோமோ .அல்லாட்டி மண்டையை போட்டினமோ.காகத்தின் பாசையை தெரிந்த மாதிரி மொழி பெயர்த்து கிழவி தன் பாட்டில் புறு புறுத்து கொண்டிருந்தது. வாசலில் சைக்கிள் மணி அடிக்க தந்தியோடாய் மோனை திடுக்கிட்டு பட படக்க. இல்லை இவன் மூர்த்தியணை என்று கொண்டு படலைக்கு போக அவன் பட படத்துக்கொண்டு பேய் அறைஞ்சவன் மாதிரி நின்று
-
- 1 reply
- 1.5k views
-
-
அந்தி நேரம் இது தான் என்று சொல்ற மாதிரி மரங்கள் நிறைந்த பகுதியினூடாக சிறிது வந்த வெளிச்சம் கூட மங்கி கொண்டு செல்கிறது . பண்ணை கடலில் சூரியன் சங்கமாகி கொண்டிருக்கிறது. மைதானத்தில் சில மாணவர்கள் பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறார்கள் .அதை கவனிக்கிற மாதிரி கொஞ்சமும் அரட்டை பாதி கொஞ்சமுமாக குழுமியிருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கம் மெல்ல மெல்ல விலகி கொண்டிருந்தார்கள் சுப்பிரமணியம் பூங்காவில் உள்ள லவுட்ஸீபிக்கரிலிருந்து இலங்கை வானொலியில் இருந்து வரும் இன்றைய நேயர் நிகழ்ச்சிக்கு போடும் இசை. நேரம் ஐந்து என http://sinnakuddy.blogspot.com/2007/06/blog-post.html
-
- 1 reply
- 1.3k views
-
-
ஓர் ஊரில் ஒரு கிழவி.. அவளது ஒரு பேத்திக்கு லண்டனில் அவளால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத பெயரைக் கொண்ட ஒரு ஊரின் மண்டபத்தில் கலியாணம் நடந்த 6ம் நாள். இன்னொரு பேத்தி சாமத்தியப்படுவதற்கு சரியாக 25 நாட்கள் முன்பாக அம்மம்மா செத்துப்போனா. அவ சாவுக்கு நான் தான் காரணம் என்றாகிப்போனேன். என்னை கொலைகாரனாக்கி விட்டு அம்மம்மா செத்துப்போனா. சாகிற வயசுதான் சுமார் 60தைக் கடந்து விட்டிருந்தா. தீராத நோயாளியைப்போல மாத்திரைகளும் கையுமாய் வாழ்ந்து கொண்டிருந்தவள் தான் அவ. ஆனாலும் அவ அதிஸ்டக்காரி. மறுபடியும் தான் வாழ்ந்த ஊரிலேயே செத்துப்போகிற வாய்ப்பு அவ வயுசுக்காரிகளிலேயே அவவுக்குத்தான் கிடைத்திருக்கிறது. அந்த ஊர் அவவுக்கு மிக நெருக்கமானது. கணவன் பக்கத்து வீட்டுக்காரியோடு ஓடிப்போ…
-
- 1 reply
- 1.3k views
-
-
சோமசுந்தரம் தன் வீட்டீற்கு விருந்துண்ண வந்த தன் தோழன் நாகலிங்கத்துடன் உரையாடுகின்றார் சோ: வேற என்ன புதினம்?? நா: நீ கேள்விப்பட்டனியா, இங்கு வளர்ந்த ஒரு தமிழ் இளைஞ்யன் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறானாம். 15ந்து வயதிலேயே யேர்மனிக்கு வந்தவனாம். தாயகத்தில,; பின்பு வெளிநாட்டில் தான் பெற்ற அனுபவங்களை பற்றித்தன் யேர்மன் மொழியில் எழுதியிருக்கிறானாம். இது உன்மையிலே ஒரு பாராட்ட வேண்டீய விடயம் தானே, அல்லவா?? சோ: ஓம்மடா, இப்படீப்பட்ட பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். இந்த வெளிநாட்டீலே நம் தமிழ் இளைஞ்யர்கள் செய்யும் தவறுகளைப்பற்ரிதான் கூடுதலாக மற்றவர்களுக்கும் சொல்லி கதைக்கின்;றோம்;. நீ சொன்னமாதிரி நல்ல வளியில் செல்லும்; பிள்ளைகளை, நாம் எம்மால் ஏன்றவரை ழுன்னேற உதவவே…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு பயணப்பொழுது - ஆதிலட்சுமி சிவகுமார் பனைவெளியூடாக நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். மணற்தரையில் வாகனச் சில்லுகள் நகர்வதற்கு அடம்பிடித்தன. ‘யோகன் ரைக்கரர் பாதையைவிட்டு விலகாம ஓடு...” ஓட்டுநருக்கு எங்களோடு வந்தவர் சொன்னார். “ஏன் அப்பிடிச் சொல்லுறியள்...” “;அப்பாவித்தனமாகக் கேட்ட என்னைப் பார்த்து அவர் புன்னகைத்தார்.”இந்தப்பக்கம் எல்லாம் ஆமி இருந்தவன்... ஏராளமான புதைவெடிகளட இருக்கும்... பாரத்துக்கு ஏற்றமாதிரி வெடிக்கிறதுக்கு வைச்சிருப்பான்” கண்ணாடியூடாக வெளியே பார்த்தான். எங்கும் பனைமரங்கள் காயப்பட்டவை. கருகியவை, கழுத்துமுறிந்தவை.. போரின் வடுக்களை அவையும் சுமந்திருந்தன. வீடுகள் அதிகமாய் இல்லை.... இருந்தவைகளும் கற்குவியல்களால் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து இந்தப்ப…
-
- 1 reply
- 830 views
-
-
சன் என்று மனைவி விஜி அழைக்க திடுகிட்டு தன் சிரிப்பை நிறுத்தினான,ஏன் இப்ப உங்கள்பாட்டில் சிரித்து கொண்டு இருந்தனீங்கள் யாராவது பார்த்தால் விசர் என்று நினைக்க போறார்கள் என்றவல் அது சரி இப்ப ஏன் சிரித்தனீங்கள்.அதுவோ சும்மா என்ன நினைத்தேன் சிரித்தேன்,அப்படி என்ன பெரிசாக கிழித்து போட்டீங்கள் இப்ப உங்களை நினைத்து சிரிக்க என்றவளை பார்த்த சன்,அதற்கு காரணமே நீர் தான் விஜி என்றான். 25 வருடங்களிற்கு முன் நீர் எப்படி என்னை கூப்பிடுறனீர் என்பதை யோசித்தேன் அது தான் சிரித்தேன்.ஏன் எப்படி கூப்பிட்டனான் என்று சொல்லுங்கோ எனக்கு இப்ப எல்லாம் மறந்து போய் விட்டது.அது சரி இப்ப உமக்கு ஒன்றும் நினைவு இருக்காது ஏன் என்றா நீர் இருகிற இடம் அப்படி."இஞ்சாருங்கோ"."இங்கேயப்ப…
-
- 11 replies
- 2.6k views
-
-
படம் காட்டுறம் வாங்கோ கடந்த ஒரு பேப்பரில் எனக்கு ASIA வேணும் என்கிற எனது அனுபவ கதை பலரும்விரும்பி படித்ததால் இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதிய இன்னொரு அனுபவக்கதை இதுவும் 80களின்ரை ஆரம்ப காலகட்ட கதைதான் இந்த காலகட்டம்தான் தொலைகாட்சி பெட்டியும் இலங்கையிலை பரவலா அறிமுகமாக தொடங்கின கால கட்டம். அந்த கால கட்டத்திலை கோயில் திருவிழா. கலியாணவீடு .சாமத்தியவீடு எண்டு எல்லா மங்கல விழாவிலையும் ரிவியிலை விடிய விடிய அஞ்சு . ஆறு படம் ஓடுறகாலம்.ஆரம்பத்தில் இந்த ரிவி டெக் ஆகியவற்றை சில வீடியொ கடையளும் வாடைகைக்கு விடுவினம் அவையளிட்டை போய் சொன்னா சரி. ரிவி டெக் ஆகியவற்றை ஒரு வானில் கொண்டு வந்து இறக்கி படத்தை போட்டு செற்பண்ணி விட்டிட்டு படங்களை மாத்துறதுக்காகவே ஒருத…
-
- 24 replies
- 4.6k views
-
-
எல்லாரும் கதை எழுதீனம் (ஜம்மு கூட எழுதுற மாதிரி தெறியுது) சில பேர் கொப்பி பேஸ்ட் பண்ணிணம்..............நானும் என்ட பங்கிற்கு ஒன்றை எழுதி பார்தேன்,தொடர்கதை ஒன்றும் இல்லை ஒருநிமிச கதை,இந்த கதையையும் ஒருக்கா வாசித்து பாருங்கோ..நல்லம் என்று சொன்னீங்கள் என்றா தொடர்ந்து அறுப்பன்(எழுதுவன்). கவிதாவுக்கு நம்ப முடியவில்லை பாஸ்கரன் இப்படி செய்வான் என்று.பாஸ்கரன் கவிதாவின் அண்ணணுடன் ஒன்றாக படித்தவன்,ஒரு நாள் பாஸ்கரனும் சுதனும் உரையாடி கொண்டிருந்தது கவிதாவின் காதில் விழுந்தது.போராட்டங்கள், ஆயுதங்கள் மற்று இயக்கங்களை வளர்ப்பது எப்படி மற்றும் சோசலிசம், கம்னியூசம் என்று எல்லாம் கதைப்பதை கேட்ட கவிதா மெல்லமாக சென்று தந்தையிடம் சொல்லிவிட்டாள். தந்தையும் சுதனிடம் விசாரித்த போது சுதனு…
-
- 20 replies
- 3.6k views
-
-
இந்த வாரம் ஒரு பேப்பரில் யாழ் பிரிய சகி எழுதிய கதைஇது ஒரு தேர் நாள் இரவு 8 மணி போல மாமா டெலிபோன் அடிச்சார். " என்ன மாதிரி நாளைக்கு கோயில் வாற பிளான் ஏதும்?" எண்டு கேட்க நானும் உடனே " ஓமோம்..வாறம் வாறம்" எண்டு துள்ளினன். எங்க, எத்தினை மணிக்கு சந்திக்கிறதெண்டு கதைச்சு வைச்சதும் தான் எனக்கு கவலை வந்திச்சு. " இப்ப எந்த உடுப்பு போடுறது?" முதலே தெரிஞ்சிருந்தா 4,5 நாளுக்கு முதலே ரெடியா எடுத்து வைச்சிருக்கலாம் இப்ப என்னத்த போட எண்டு இரவிரவா ஒரே யோசனையில நித்திரையும் சரியா வரேல்ல. காலேல தான் அம்மா சொன்னதை எடுத்துப்போட்டுக்கொண்டு அண்ணரோட கிளம்பிட்டன். ஹை வே ஆல இறங்கினதுமே ட்ரஃபிக்! இந்த ட்ரஃபிக்கில விசேசம் என்னவெண்டால் எல்லாம் நம்ம தமிழ் ஆக்களோட வாகனங்கள் …
-
- 7 replies
- 2.2k views
-
-
இரவு பத்தரை இருக்கும் இங்கு வீ்ட்டின் பின் பக்கம் அவல குரலுடன் கீச்சிடும் சத்தம் கேட்டு தேய்ந்து .ஓய்ந்தது இந்த குரலை எங்கையோ கேட்டிருக்கிறன். ஆ..அது ஒரு பறவையின் குரல் இந்த வினோதமான குரலை நீண்ட காலத்துக்கு பிறகு கேட்டிருக்கிறன்.ஆ..இதை சுடலை குருவி என்று சொல்லுவினம்..நாடு கடல் மைல்கள் காலங்கள் தாண்டி ஒலித்த இந்த குரல் திரும்ப திரும்ப ஒலித்து பேயறைந்தவன் போல் என்னை ஆக்கி கொண்டிருந்தது. நீண்ட பரந்த செவ்வக வடிவமுள்ள வயல் பரப்பு பகுதியின் வடகிழக்கு மூலையில் அந்த ஊர் சுடலையும் அடர்ந்த பனங்காணியும், வட மேற் மூலையில் வேப்பமரத்துடனூன வைரவர் கோயிலும் இருக்கு தென் மேற்கு மூலையில் தனித்து விடப்பட்ட மாமரத்து உடனனா பழங்கால வீடும் அதன் பின் சில இடை வெளி விட்டு தான் நெருங்கிய ஊர்…
-
- 9 replies
- 2.4k views
-
-
" ஹலோ, ஆர் யூ ரமிழ்?" பின்னால இருந்து வந்த குரலை கேட்டு திரும்பி பார்த்தன். அதே தமிழ் ஆண்டி பொட்டு வைச்சு, நம்ம ஊரில் தலை பின்னுவது போல பின்னிக்கட்டி, கையில 2 உடுப்போட நிண்டா. " நே" எண்டு அவா இங்கிலீசில கேட்ட கேள்விக்கு டச்சில "இல்லை" எண்டு பொருத்தமில்லாம பதிலை சொல்லிட்டு சட்டெண்டு முன்னுக்கு திரும்பிட்டன். பொய் சொல்லேக்கையும் பொருத்தமா சொல்லணும் எண்டுவாங்க. அது பேசி வைச்ச பொய் அதைதான் பொருத்தமா சொல்லணும். இது திடீரெண்டு நினைச்சு வைக்காம சொன்ன பொய். சரி பொய் பொய் தானே இதில பிறகென்ன நியாயப்படுத்த வேண்டி இருக்கு எண்டு நெச்சன். திரும்பியே பாக்காமல் எனது நேரம் வர காசை குடுத்து உடுப்பையும் எடுத்துக்கொண்டு நண்பிகளோட அந்த ஆண்டி பக்கமே பாக்காம ஓடி வந்தன். என்னவோ மனசுக்க நெர…
-
- 37 replies
- 6.3k views
-
-
நட்பும் காதலும் அது ஓர் அழகிய காலைப்பொழுது. படுக்கையை விட்டெழுந்த நிஷா நேரத்தைப் பார்த்து திடுக்கிட்டாள். "8 மணி ஆகிவிட்டதே 9 மணிக்கு வகுப்பு ஆரம்பம். அதுவும் புதிய விரிவுரையாளர் வருவதாக சொன்னார்களே" என முணுமுணுத்தபடி குளியலறை நோக்கி விரைகின்றாள். இதமான குளியலை முடித்து தன்னை தயார்ப்படுத்தி தெருமுனைக்கு வந்தபோது 8 40 ஆகிவிட்டது. வீதியில் ஒரு முச்சக்கரவண்டியும் இல்லாதிருப்பதைக் கண்ட நிஷாவோ சினம்கொண்ட முகத்தோடு விரைந்து நடந்தே சென்றாள். எவ்வளவோ வேகமாக நடந்தும் அவளால் 9 10 க்கு தான் கல்லூரியை அடைய முடிந்தது.. பெருமூச்சு விட்டு அழகிய பிறைபோன்ற நெற்றியில் துளிர்த்த வியர்வைத்துளிகளை அற்புதமான திருக்கரங்களால் ஒற்றி துடைத்துவிட்டு விரிவுரையாளர்கள்; தங்கும் அற…
-
- 27 replies
- 6k views
-
-
அன்று சாய்சுரேசுக்கு தூக்கமே வரவில்லை காரணம் தாத்தாவினதும் அம்மாவினதும் ஊருக்கு போற சந்தோசத்தில்.தாத்தாவும் அம்மாவும் அவர்களின் ஊரை பற்றி அதிகமாகவேசொல்லி இருந்தார்கள்.தாத்தா சொன்னவைகளை சாய் நினைத்து பார்கிறான்,தாத்தாவின் ஊர் கிணற்று தண்ணியை குடித்தால் இனிக்கும் அதில் குளித்தால் அரைவாசி வருத்தம் போய் விடும் என்று கூறியவை,கருத்தக் கொழும்பான் மாம்பழமும் புட்டும் சாப்பிட வேண்டும்,இங்கத்தய அப்பிள் அதுக்கு பிச்சை வாங்க வேண்டும்,வீட்டில் அடி வளவில் இருக்கிற பிலாபழம் பழுத்தால் வீட்டுகுள்ளேயே வாசம் வரும் என்று கூறியவை,கொழும்பு யாழ் ரயில் பயணத்தை பற்றி கூறியவை தாத்தாவின் வாகனத்தை கூறியவைகள் எல்லாம் அவனுக்கு தாத்தாவின் ஊரை பற்றி அதிக கற்பனைகளை உருவாக்கி விட்டது. …
-
- 18 replies
- 3.9k views
-