கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
நாக்குகள் “சாந்தி, நேத்து தான் தங்க மலர் சினிமாவுக்குப் போயிருந்தேண்டி.” “அப்படியா? நல்லாருக்குதா?” “ஓ.. ஒரு பணக்காரன் பொண்ணு தன் அந்தஸ்துக்கு கீழே இருக்கற ஒரு வேலைக்காரனை லவ் பண்றாடி. ஆனா பாவம், வழக்கம் போல அவளோட அப்பாவும், அம்மாவும் கலயானத்துக்கு ஒத்துக்கலை. ஆனா கடைசியிலே எப்படியோ ரெண்டு பேரும் ஏதோ ட்ரிக் பண்ணிப் பெரியவங்களைச் சம்மதிக்க வச்சுடறாங்க. அதுதான் கதையிலே சஸ்பென்ஸ்...” “என்ன ட்ரிக்டி பண்றாங்க?” “அதைச் சொல்லிட்டா அப்புறம் நாலைக்கு நீ படம் பார்க்கிறப்ப என்ன சுவாரஸ்யம்டீ இருக்கும்? நான் சொல்ல மாட்டேன். நான் என்ன டமில் சினிமா விமர்சனம் எழுதறவன்னு பார்த்தியா? கொஞ்சூண்டு இருக்கற சஸ்பெ…
-
- 0 replies
- 813 views
-
-
ஷூட் தி பப்பி - அருண் சரண்யா தவிப்போடு காத்திருந்தோம். தனக்கு வந்திருந்த அவசரத் தொலைபேசி அழைப்பில் பேசிக்கொண்டிருந் தார் கோபி. எங்கள் நிறுவனத்தின் முக்கிய செயலதிகாரி. நிர்வாகத்தின் முகம். ‘‘போயிட்டு வா அனு. என்னாலே வர முடியாதும்மா. சாரி. ஆல் தி பெஸ்ட்...’’ மறுமுனையில் பேசுவது அவர் மனைவி என்பது புரிந்தது. மொபைலை ஆஃப் செய்தார். அடுத்த கணம் எங்கள் இருவரையும் உற்றுப் பார்த்தார். நீளமாக ஏதோ உரையாற்றுவார் என நினைத்தோம். ஊஹூம். ‘‘ஷூட் தி பப்பி’’ என்ற ஒற்றை வாக்கியத்தைக் கூறிவிட்டு மாநாட்டு அறையிலிருந்து கிளம்பத் தயாரானார் கோபி. போகும்போது ஒரு பட்டியலை நீட்டிவிட்டுச் சென்றார். அந்தப் பட்டியலை மேம்போக்காகப் பார்த்தேன். ஒவ்வொரு பெயரும் வலியைக் கிளப்பியது. கடைச…
-
- 0 replies
- 749 views
-
-
ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை! ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை! எஸ்.ராமகிருஷ்ணன் ஜி. சிந்தாமணிக்கு இன்று காலையில்தான் நாற்பது வயது துவங்கியது. அவள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பொதுவாகவே அவள் பள்ளி வயதைத் தாண்டிய பிறகு தனது பிறந்தநாள் வருவது பற்றி அதிகம் உற்சாகம் அடைந்ததில்லை. அதை நினைவு வைத்துக்கொள்வது கூட குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது போலவே உணர்ந்தாள். எப்படியாவது தனது பிறந்த நாளை மறந்…
-
- 0 replies
- 788 views
-
-
அப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே தனியாக ஊருக்கு சென்று வந்து விடுவேன். தேர்வு சமயத்தில் என் தாத்தா இறந்து விட்டார் என்று செய்தி வந்தது. அம்மாவும் அப்பாவும் உடனே ஊருக்கு கிளம்பி விட்டார்கள். நானும் என் தம்பியும் தேர்வு எழுத வேண்டுமென்பதால் மதியத்திற்கு மேல் ஆள் விட்டு அழைத்து கொள்வதாக முடிவு. ஆனால் நாங்கள் முன்னரே தேர்வு எழுதி முடித்து விட்டு ஊருக்கு தனியாக கிளம்பி சென்று விட்டோம். அன்று முதல் நான் தனியாக ஊருக்கு செல்ல அனுமதி கிடைத்தது. அப்படி தான் ஒரு நாள் நான் ஊருக்கு புறப்பட்டேன். பேருந்திலிருந்து இறங்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும…
-
- 0 replies
- 1.7k views
-
-
சென்ற ஞாயிற்றுக்கிழமை நண்பர் ஒருவரை சந்திக்க சென்று கொண்டிருந்தேன். Clichy sous Bois கடந்து (இந்த இடம் எல்லோக்கும் தெரிந்ததே) ஒரு 3 கிலோமீற்றர் தான் போயிருப்பேன். காடுகளும் சோலைகளுமாக அதிசயமாக இருந்தது. பிரதான நகரிலிருந்து சில கிலோமீற்றர்கள் தூரத்தில் இவ்வளவு தூய்மையாகவும் இயற்கையை பாதுகாத்தும் பராமரித்தும் வைத்திருக்கிறார்களே என. அதிசயத்தபடி கொஞ்சம் காரை நிறுத்தி காற்று வாங்குவோமா என முயன்றபோது இப்படியொரு கார் எரிந்தநிலை தெரிந்தது. அரசு நல்லது தான் மக்கள் தான்.......????
-
- 0 replies
- 1.6k views
-
-
காக்கா! பெரியவர் அண்ணாமலையின், 60ம் கல்யாணத்தை, மிகவும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர், அவரது குடும்பத்தினர். அதற்கு காரணமில்லாமல் இல்லை. ஊரின் பெரும்புள்ளி, அண்ணாமலை; அவரது மகள் அமெரிக்காவிலும், மகன் கனடாவிலும் இருந்தனர். பிள்ளைகள் பக்கத்தில் இல்லாதது, உள்ளூர அவருக்கு கவலை தான். ஆனாலும், அதை வெளிக்காட்டி, தன் கம்பீரத்தை குறைத்துக் கொள்ள மாட்டார். ஆனால், அவர் மனைவியோ, மனதில் பட்டதை சொல்லி, 'அந்த நாள்ல, எங்கய்யா, ஆயிரம், ரெண்டாயிரம் ஏக்கர்ன்னு சொத்தை சேர்த்து வச்சாரு... ஆனா, என்னைய படிக்க வைக்கல. அது, என் மனசுக்குள்ள பெரிய கொறையா மண்டிக் கிடந்ததால, புள்ளைங்கள பெரிய படிப்பா படிக்க வச்சேன்; என்ன பிரயோஜனம்...' என, …
-
- 0 replies
- 681 views
-
-
ஒரு நிமிடக் கதை: நாணயம் காலை நேர நெரிசலில் குமார் பஸ்ஸில் ஏறினான். தினமும் பைக்கில் அலு வலகம் சென்று வருபவன், அன்று வண்டியை சர்வீஸுக்கு விட்டதால் வேறு வழி இல்லாமல் பேருந்து பயணம். அன்று நல்ல முகூர்த்த நாள் வேறு. பேருந்தில் உட்காரக் கூட இடம் இல்லாமல் நின்று கொண்டே வந்தான். ‘டிக்கெட், டிக்கெட்’ என்றபடி நடத்துநர் வந்தார். குமார் பத்து ரூபாய் தாளை கொடுத்து “முனிசிபல் ஆபீஸ் ஸ்டாப் கொடுங்க” என்றான் . நடத்துநர் டிக்கெட்டையும் , மீதி சில்லறை யும் கொடுத்தவாறு கூட்டத்தில் முன்னே நகர்ந்து விட்டார். குமார் சில்லறையை எண்ணி பார்த்த போது, ஒரு பத்து ரூபாய் தாளும், இரண்டு ரூபாய் நாணயமும் இருந்தது…
-
- 0 replies
- 782 views
-
-
மனக்கோலம் தமிழ்நதி விலங்கொன்று ஊளையிடுவது போலவேயிருந்தது அந்த ஓசை. கனவு காண்கிறோம் என்று உள்ளுணர்வுக்குத் தெரிந்து கண்டுகொண்டிருக்கும் கனவொன்றிலிருந்து அவ்வோசை மிதந்து வருவதாக முதலில் சாந்தன் எண்ணினான். மது அவனை மெதுவாகத் தொட்டு ‘என்னாலை நித்திரை கொள்ள முடியேல்லை’என்றதும்தான், அந்த ஓசை அக்காவின் அறையிலிருந்து வருகிறது என்பதை உணர்ந்தான். மது எழுந்து அமர்ந்து, “என்னாலை முடியேல்லை”என்று முனகியபடி மேடிட்டிருந்த வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தாள். வயிற்றினுள்ளிருந்து பதட்டப்படும் குழந்தையை ஆசுவாசப்படுத்துமாப் போலிருந்தது அந்தத் தடவல். உயிரின் மூலத்தைத் தேடி உருக்கும் விசித்திரமான ஓசையை சற்றைக்கு நிறுத்திய ராசாத்தி இப்போது அனுங்கத் தொடங்கியிருந்தாள். தாங்கொணாத வேத…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெந்து தணிந்தது காலம்...- சிறுகதை வெந்துதணிந்ததுகாலம்...- மு.சிவலிங்கம் அந்த மாமரம்¸ ஆல மரத்தைப் போல அடர்ந்து¸ படர்ந்து விரிந்திருந்தது. கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து ஓய்ந்திருக்கும் காலம். இப்போது வெய்யிற் காலமாகியும் புழுதி பறக்காமல் ஈர நிலம் எங்கும் வியாபித்திருந்தது. மரத்தில் புதிய தளிர்கள் துளிர்த்து¸ பச்சைப் பசேலெனச் செழித்திருந்தன. காற்றில் சலசலக்கும் இலைகளும்¸ கிளைகளும் குளிர்ந்தக் காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தன. அந்த மரமே அங்கு தவித்திருக்கும் அகதிக் குடும்பங்களுக்கு கூரையாக¸ வீடாக¸ ஊராக¸ பாதுகாப்பாகக் குஞ்சுகளை இறக்கைக்குள் அணைத்து வைத்திருக்கும் பேடாக ஆதரவளித்துக் கொண்டிருக்கிறது. நெருப்பாய் எரிக்கும் வெய்யிற் காலங்களில் சுகமான நிழலைக் கொடுக்கின்றது.…
-
- 0 replies
- 1.2k views
-
-
புறவழிச்சாலைப் புண்ணியங்கள் காலை மணி ஒன்பதரை. காசி விஸ்வநாதனுக்கு அன்றைய காலைக் கடமைகள் முடிந்தன. ஐந்தரை மணிக்கு எழுதல். பயோரியா பற்பொடியில் பல் துலக்குதல். மனைவி கற்பகம் கையால் தரப்படும் காபியை ருசித்துக் குடித்தல். அரை கிலோ மீட்டர் தொலைவு வியர்வை அரும்ப நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி முடித்து வந்து குளிர்ந்த நீரில் குளித்தல். அடுத்து தமது குடும்பத்திற்குச் சொந்தமான விநாயகர் கோயில் பூஜை. பூஜை முடிந்து கற்பகத்துடன் சேர்ந்து காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டு விட்டு கடிகாரம் பார்த்தால்... அது மணி ஒன்பதரையைக் காட்டும். அதன் பிறகு அன்றையச் செய்தித் தாளை வரி விடாமல் வாசிக்கத் தொடங்குவார் காசி விஸ்வநாதன். வேலையில்…
-
- 0 replies
- 706 views
-
-
"ஓடம்" "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன் காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள் பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!" "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத் தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!" "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல் திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற நீர…
-
- 0 replies
- 913 views
-
-
என்னையே நானறியேன் பாட்டுடைத் தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், பாட்டுடைத் தலைவன் தெய்வீகத் திருமகனாய் திகழ்வது மட்டுமே திறமன்று. ‚ '' எரிமருள் வேங்கை கடவுள் காக்கும் குறுகார் களனியின் உடலத்தங்கன் ஏதிலாளன் கவலை கவற்ற ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி'' என்னும் நற்றுணைச் செய்யுள் ஒன்றில் துன்பம் மீதுறப் பெற்ற பெண்ணொருத்தித் தன் முலை அறுத்த…
-
- 0 replies
- 1.9k views
-
-
அவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை ஓவியங்கள் : ரமணன் வில்சன் - மேரி, ஓய்வுபெற்ற ஆசிரியத் தம்பதி. மேரி இன்று இறந்துவிட்டிருந்தார். பணி நாளினிடையே ஒரு மரணக் குறிப்பானது கார்ட்டூன் தோற்றம் பெற்றுவிடுகிறது. ஹவுசிங்போர்டு முட்டுச்சந்தில் அவர்களின் வீடு இருந்தது. நீராதாரம் இழந்துவிட்டு வீடுகளைக் கைவிட்டுச் சென்றுவிட்டவர்களால் அந்தத் தெரு சூன்யமடைந்திருந்தது. இயல்பாகவே முட்டுச்சந்து வீடுகள் காலத்தில் அதிர்ச்சியடைந்து அமைதியானவை. அநாதைக் கூழாங்கற்களில், மரங்களில், ஜன்னல்களில் பிணங்களைப்போல இறுகிவிட்ட ஈரத்திற்காகக் காயவைக்கப்பட்ட கொடித்துணிகளில் முட்டுச்சந்துகள் தங்களின் துக்கத்தை வளர்க்கின்றன. அதேவேளையில், பருவகால நோயொன்றிலிருந்து ம…
-
- 0 replies
- 649 views
-
-
நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த நண்பர்கள் எத்தனையோ மனிதர்களை நட்புக்கு எடுத்துக்காட்டாய் நாம் சுட்டுகிறோம். படித்து அதிசயிக்கிறோம். ஆனால் எத்தனை சோதனைகள் வந்தாலும் உண்மையிலேயே நட்புக்கு எடுத்துக்காட்டாய் பார்த்த கணத்திலிருந்து இறந்து வீழ்ந்த கணம் வரை வாழ்ந்தவர்கள் என்றால் கர்ணனையும் துரியோதனனையுமே சுட்டலாம். அவர்களின் சிறப்பான பக்கங்களைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே. அஸ்தினாபுர அரண்மனையில் மன்னர்களுக்கிடையே ஒரு வில்வித்தைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருபோட்டியில் விஜயன் வென்றுவிட அங்கே தேரோட்டியின் மகனான கர்ணன் பங்கெடுக்க விரும்புகிறான். ஆனால் துரோணரோ அது க்ஷத்திரிய மன்னர்களுக்கான போட்டி என நிராகரிக்கிறார். உடனே துரியோதனன் கர்ணனைத் தன் நண்ப…
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 11) எங்களின் தூக்குக்கு எதிராக மொத்தத் தமிழகமும் கைகோத்தபோது, காங்கிரஸ் காரர்கள் மட்டும் கோபத்தோடு எதிர்த் தார்கள். 'மறக்க முடியுமா... மன்னிக்க முடியுமா?’ என உரக்கக் குரல் எழுப்பினர். ராஜீவ் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் திரட்டி வந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உண்மையாகவே ராஜீவ் காந்தியின் மீது நேசமும் பாசமும் பூண்டிருக்கும் காங்கிரஸ்காரர்களே... மாண்பையும் மனிதநேயத்தையும் மறவாதிருக்கும் நியாயவாதிகளே... உங்களிடம் எனது நீதிக்கான - உண்மைக்கான சில கேள்விகளை சமர்ப்பிக்கிறேன். உங்களை நீதிபதிகளாக மாறும்படி நான் வேண்ட வில்லை. குறைந்தபட்சம் நீங்கள் உண்மை என்று த…
-
- 0 replies
- 1k views
-
-
மாபெரும் தாய் –அகரமுதல்வன் 01 வானிலை அற்புதமாக இருந்தது. குளிரில் குழையும் காற்று புன்முறுவல் பொங்கி வீசியது. அந்தியின் வாசனை உறக்கத்திலிருக்கும் ஆச்சியின் கனிந்த உடல் மீது எறும்புகளாய் ஊரத்தொடங்கியது. ஒதிய மரத்தின் பழுத்த இலைகள் உதிர்ந்து ஆச்சியைத் தீண்டின. உறக்கம் அந்தரங்கத்தின் பெருமழை. மின்னல் ஒளியும் பேய் இடியும் பிறந்து கொண்டேயிருக்கும் இந்த உறக்கம் ஆச்சியின் உடலை அத்துணை துல்லியமாக வந்தடைந்திருந்தது. புராதனக் கலத்தைப்போல அசைவின்றியிருந்த ஆச்சி கீர்த்திமிக்க வரலாற்றைப் போல சாந்தம் வழிய புரண்டு படுத்தாள். கிளித்தட்டு விளையாடி முடித்து வீடுகளுக்குத் திரும்பும் இக்கிராமத்தின் இளந்தாரிகள் ஒதியமரத்தைக் கடந்து போகையில் “ஆச்சி எழும்பன,உன்ர மந்திரக்கத்தியை எடுத்த…
-
- 0 replies
- 561 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் ட்ரீட்மெண்ட் ``கண் வலின்னு பையன் அழுறான்...'' என்றவரிடம், ``காலைல 50MB, மதியம் 50MB, நைட்டு 50MB மட்டும் மொபைல பார்க்கச் சொல்லுங்க... சரியாயிடும்'' என்றார், டாக்டர். - சி.சாமிநாதன் லாஸ்ட் ஸீன் ``கடைசியா எப்ப பார்த்தீங்க?'' என விசாரித்த போலீஸ்காரரிடம் வாட்ஸ்அப் லாஸ்ட் ஸீனைக் காட்டினார் பக்கத்து வீட்டுக்காரர். - கிருஷ்ணகுமார் காதல் ``நம்ம பொண்ணு லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னு எப்படி சொல்ற!'' ``நேத்து சேலை கட்டிப் பார்த்தாள்!'' - கி.ரவிக்குமார் கதை ``சும்மாச் சும்மா கதை கேட்டு நச்சரிக்கக் கூடாது. பாட்டியை சீரியல் பார்க்கவிடு...'' என்றாள் அம்மா! - பெ.பாண்டியன் என் ஆளு அவள் என் ஆளு என்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
10 செகண்ட் கதைகள் கெடுதல் ``எப்பப் பாரு டிவி பாத்தா கண்ணு என்னத்துக்குடா ஆகும்..?” எனச் சத்தம் போட்டார், வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டிருந்த அப்பா! - சி.சாமிநாதன் வீடு “தண்ணி வசதி இல்லாட்டியும் பரவாயில்ல.. கொசு இல்லாத வீடா பாருங்க’’ என்றான், தரகரிடம் ராகுல் . - எம். விக்னேஷ் கல்வி ``மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’’ எனக் கேட்ட மகனிடம் இரண்டுமே முக்கியம் இல்லை என்றார் தனியார் பள்ளி நடத்திவந்த அரசியல்வாதி! - கே.சதீஷ் அறிவுரை ``பேரன்டிங் ரொம்ப முக்கியம். குழந்தைகளைத் திட்டாதீங்க. அன்பா இருங்க’’ என்ற பள்ளி ஆசிரியை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த மகனை அடி பின்னியெடுத்தார். - கே.சதீஷ் ரகசியம் பஸ்சில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கதை சொல்லவா? (08)/வெறும் நாய் - கு. அழகிரிசாமி/ திரு தியா காண்டீபன்
-
- 0 replies
- 965 views
-
-
மண்டைக்காய் “என்னட்ட இருக்கிற கெட்டித்தனத்துக்கு நானெல்லாம் அமெரிக்காவுல பிறந்திருந்தா நிலைமையே வேற. போயும் போயும் யாழ்ப்பாணத்தில் போய் பிறந்தனே” என்று அனேகமாக எங்களில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் நினைத்திருக்கலாம். அதையெல்லாம் மீறி அடுத்தகணமே “தமிழனாய் பிறப்பது பெருமை” என்று உட்டலாக்கடி அடித்தாலும், இவ்வளவு காலத்தில் ஒரு கணம் கூட அந்தவகை சிந்தனை தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்கு வராமல் போயிருக்காது. “முக்கி முக்கி தமிழில எழுதிறாய், ஏதாவது ரெஸ்போன்ஸ் இருக்கிறதா?” என்று நேற்று பீட்டர் லஞ்ச் டைமில் கேட்டபோதும் இதே அமெரிக்க ஸ்டேட்மெண்டை விரக்தியாய் விட்டேன். சத்தம் போடாமல் ஜோக்கட்டை வழிச்சு முடிச்சுவிட்டு அவன் சொன்னான், “உனக்கு அமெரிக்காவின் அதிபுத்திசாலி யாரு? அவ…
-
- 0 replies
- 645 views
-
-
லட்டு - ஜி.கார்ல் மார்க்ஸ் ஓவியங்கள் : செந்தில் இந்தக் கதையைப் படிக்கத் தொடங்குவதற்குமுன்பு, நீங்கள் இந்த ‘லட்டு’ எனும் வார்த்தையை எவ்வாறு உச்சரித்தீர்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ‘ட்’ அப்புறம் ‘டு’ என்கிற வார்த்தைகளுக்கு மிகவும் அழுத்தம் கொடுத்து அதை உதிரச்செய்து விடாமல் ‘Latdu’ என மென்மையாக, அதேசமயம் Laddu என்று நீர்த்துப் போனதாகவும் அல்லாமல், வாஞ்சையாக அதை உச்சரிக்க முடிந்தால், இந்தக் கதை உங்களுக்குப் பிடித்துவிடும். “மென்மை, வாஞ்சை போன்ற வார்த்தைகள் ரொம்பவும் க்ளிஷேவானவை ஆயிற்றே... எதற்காக ஒரு கதையை இப்படித் தொடங்குகிறான்...” என்று உள்ளுக்குள் எழுந்துவரும் எரிச்சலை மறைத்துக்கொண்டு, “சரி சரி... மேலே சொல்...” என்று வாசிப்பதைத் தொடர்…
-
- 0 replies
- 1.9k views
-
-
மனைவி சூரியன் இன்னும் விழிக்கவில்லை. இன்னும் சிறிது நேரம் தூங்கிவிட்டு எழுந்திருக்கலாம் என நினைத்து மேகப் போர்வைக்குள் நுழைந்தது சூரியன். கட்டிலில் படுத்திருந்த நான் தலைமாட்டில் வைத்திருந்த செல்போனை தட்டி, மணி பார்த்தேன். 5 ஆக 5 நிமிடங்கள் இருந்தன. பக்கத்தில் படுத்திருந்த மனைவி எப்போதோ எழுந்து போயிருந்தாள். தனித்தனி போர்வைக்குள் படுத்திருந்த பிள்ளைகள் இரண்டும் இப்போது ஒரே போர்வைக்குள் படுத்திருந்தனர். அண்ணனின் வயிற்றின் மீது காலைப் போட்டு வசதியாக படுத்திருந்தாள் எனது மகள். இதெல்லாம் காலை நேரத்து ஆச்சரியங்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரைக்கும் சண்டை போட்டுக் கொள்ளும் இரண்டும் இப்போது அமைதியா…
-
- 0 replies
- 1.3k views
-
-
தெளிவு ---------- துடியாய்த் துடிக்கிறார். இந்திய அமைதிப் படையின் ஷசெல்| தாக்குதலால் உடம்பெல்லாம் கிழிந்து போய் ஒரு கிழட்டு உயிர் சாவோடு போராடுகிறது. உரும்பிராயில் எல்லோருடனும் 'நல்ல மனிதராய்' வாழ்ந்துவிட்ட ஒருவர். செல்வா காலம் - சிவகுமாரன் காலம் - பிரபாகரன் காலம் மூன்றையும் தன் நீண்ட நெடிய வாழ்வில் நேரில் கண்டு, வீறு மிக்க விடுதலைப் போரில் தன்னையும் எங்கோ சேர்த்துக் கொண்ட பெருமை. நல்ல விடுதலை உணர்வாளர். அதிகம் பேசாத வாய். இத்தனை காலமும் சாவுக்குத் தப்பிய அந்த நல்லவர் இந்திய வெறிப்படையின் ஷ செல் | அடித்து இரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். கண்களில் நீர் பொங்கப் பக்கத்து வீடுகளின் சிறுவர்கள் - இளம…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜனனம்! “பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்” என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், “கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!” என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார். ‘சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!’ என்று நினைத்தபடி வெளியே வந்தேன். வெளியே நின்றிருந்த ஒருவர், “என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?” என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது. மகிழ்ச்சி பதிவாகும் நேரத்தில் நெருடல் வேண்டாமே என்றுதான் என்னை வெளியே அனுப்பியிருக்கிறார். http://www.eegarai.net
-
- 0 replies
- 636 views
-
-
அனாதை பிணம் பணம் மல்லாந்து கிடந்தான். உடல் மேல் நான்கு வாழைப்பழங்கள் வைக்கப்பட்டு, அதில் நான்கு ஊதுபத்திகள் உயிரிழந்து கொண்டிருந்தன. கழுத்தில் கதம்ப மாலை. இரண்டுபேர் கர்ச்சீப்பிலும், துண்டிலும் சுற்றிக் கூடியிருப்பவர்களிடம் ஏந்திக் கொண்டிருந்தனர். ஏந்திக் கொண்டிருந்தனர். “அனாதைப் பொணமுங்கோ... தர்மம் செய்ங்க. அடக்கம் செய்யணும்...” மக்களிடம் தயாள குணம் இன்னும் இருந்ததால்... கைக்குட்டை காசுக்குட்டையாகிக் கொண்டிருந்தது. மாலை மடிந்தது. பண்பாடு கருதி, செத்துப் போன மாலைக்காக கறுப்புப் போர்வை போர்த்திக்கொண்டு துக்கம் அனுஷ்டித்தது இரவு. ராஜனும் முத்துவும் காசுகளை எண்ணினார்கள். “ஐம்பத்தேழு ரூபா” …
-
- 0 replies
- 562 views
-