Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. தேவதையைத் தரிசித்த மனிதன் ஜீ.முருகன், ஓவியங்கள்: செந்தில் “அவரின் இறுதித் திரைப்படமாக ‘ரயில்’ இருந்திருக்கலாம்” என அவன் சொன்னான். இத்தகவல் எனக்கு வியப்பாக இருந்தது. அப்படி ஒரு படத்தைக் குறித்து அவருடைய பேட்டிகளிலோ, அவரோடு பணியாற்றிய திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களின் பேட்டிகளிலோ, கட்டுரைகளிலோ, வேறு வகைகளிலோகூட, படித்ததாகவோ கேள்விப்பட்டதாகவோ ஞாபகம் இல்லை. ஜெர்மன் கலைஞரான இ.டி.எ.ஆஃமேனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு ‘ஆஃப்மேனியானா’ என்ற படத்துக்குத் திரைக்கதை எழுதியும் அவரால் இயக்க முடியாமல் போனது தெரியும். ஆனால் இது? முழு அளவு இஞ்சித் தேநீர் நிரம்பிய கோப்பையை, காலி கோப்பை ஒன்றால் தாங்கிப் பிடித்துச் சுவைத்தபடி, அவன் அந்…

  2. தமிழ்த் துரோகி — பூ அரசு கையை பிளேட்டால் வெட்டி, கூட்டணிக்காரரிற்கு பொட்டு வைத்து விட்டு தமிழீழம் கிடைக்கும் வரை கலியாணம் கட்ட மாட்டேன் என்று அறுவைதாசன் சபதம் எதுவும் செய்யவில்லை. ஆனாலும் அவனுக்கு வயது வட்டுக்குள்ளே போன பிறகும் கலியாணம் நடக்கவில்லை. எந்தப் பெட்டையும் அவனை ஏறெடுத்து பார்த்ததில்லை. "தும்பிக்கையான் துணை" திருமண சேவை நடத்தும் சுந்தரம் சித்தப்பா காட்டும் பெட்டைகளின் படங்களை இவனுக்கு பிடிக்கவில்லை. அவனின்ரை தாய் தான் எங்கடை பரம்பரையின்ரை பேர் உன்னோடை முடியிறதோ எண்டு அழுது குழறி விடாமல் தொடர்ந்து பொம்பிளை பார்த்துக்கொண்டு இருந்தாள். சலரோகம், ரத்தக்கொதிப்பு தான் உங்கடை பரம்பரைச் சொத்து. இதுவெல்லாம் ஒரு பரம்பரை என்று அறுவை தாயிடம் எரிந்து விழுந்தாலும் யா…

  3. ஒருபிடி சோறு!…. இரசிகமணி கனக.செந்திநாதன். சிறப்புச் சிறுகதைகள் (10) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – கனக.செந்திநாதன் எழுதிய ‘ஒருபிடி சோறு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். யாழ்ப்பாண மாதா மலடி என்று பெயர் கேளாமல் சத்திரசிகிச்சையோடு பெற்றெடுத்த நொண்டிக் குழந்தை தொண்டைமான் ஆறு. கடலிலே இருந்து வெட்டப்பட்ட அந்த உப்பங்கழிக்கு ‘ஆறு’ என்று பெயரிட்டதே விசித்திரம். அதனிலும் விசித்திரம் அந்தக் கழிக்கரையில் முருகப்பெருமான் இருக்க எண்ணங் கொண்ட கதை. இந்த விசித்திரமான முருகன் பல திருவிளையாடல்களைப் புரிய, சாதி பேதமில்லாமல் எல்லா நோயாளரும் அவனைத் தஞ்சமடைந்திருந்தனர். இப்…

  4. நன்றி நிவேதாவுக்கு வெறுத்துப் போயிற்று. சமையலில் அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச் செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள். அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை கூட்டுவாள். அவள் புத்தக கலெக்‌ஷன் முழுவதுமே சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும். ஆனாலும் என்ன? ஒரு சின்ன பாராட்டுகூட கிடைக்காது! இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த அரிதான ரெஸிபி... சாப்பிட்ட யாருமே ‘‘நல்லா இருக்கு’’ என வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. கணவன் சாப்பிட்டு கை கழுவிய வேகத்தில் ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டான். குழந்தைகள் இருவரும் வேகவேகமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடிவிட்டனர். மாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை அடிக்க பக்கத்த…

  5. மாற்றமா ? தடுமாற்றமா? அ. முத்துலிங்கம் பூப்போல கீழே வந்து இறங்கியது விமானம். பதினைந்து வருடத்திற்குப் பிறகு கொழும்புக்கு வருகிறேன். மனைவி சொல்லியிருந்தாள். “நீங்கள் நம்பமாட்டீர்கள், அவ்வளவு சேஞ்ச்” என்று. நான் பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன்; பல இடங்களில் வேலை பார்த்துமிருக்கிறேன். ‘என்ன தான் என்று பார்ப்போமோ?’ என்று வந்திருந்தேன். குடிவரவுக்கு (Immigration) வரும் போதே இது விஷயம் வேறு என்று உடனே தெரிந்து விடுகிறது. அதிகாரிகள் முகத்தை உம்மென்று தான் வைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு மனிதப் பிராணி அவர்கள் முன்பு நிற்பது அவர்களுக்குத் தெரியும்: ஆனால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்கள். என் முறை வந்தது. பாஸ்போட்டை நீட்டினேன். குனிந்த படி ஏதோ எழுதி விட்டு பா…

  6. நீயெல்லாம் எதுக்கு படிக்க வர்ற? பரிமளா டீச்சரின் மனது "திக்திக்' கென அடித்துக் கொண்டது. இன்று பள்ளிக்கூடத்தில் ரிசல்ட். தன்னிடம் ஒன்பதாவது படிக்கும் முத்துப்பிரியா பாஸ் பண்ணியிருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டே இருந்தாள். கடந்த ஒரு மாதமாக நடந்த சம்பவங்கள் பரிமளாவிற்கு ஞாபகம் வந்து திகிலூட்டின. கடந்த மாதம் நடந்த ரிசல்ட் கமிட்டி கூட்டத்திலேயே முத்துப்பிரியாவை பத்தாம் வகுப்பிற்கு பாஸ் போடக் கூடாது என்று தலைமையாசிரியரிடம் சொல்லி இருந்தாள் பரிமளா. ""சார் முத்துப்பிரியாவுக்கு எழுதப் படிக்கக் கூட வரல சார், உருப்படியா ஒரு பாரா படிக்கத் தெரியாது சார். இவளை பத்தாம் வகுப்புக்கு பாஸ் போடறது நமக்குத் தா…

  7. எகேலுவின் கதை - சிறுகதை ஜேர்மன்காரர் இரண்டு மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் சம்பவம் நடந்தது. சிறையில், வளர்ந்த தாடியை மழிக்கக் கூடாது என்பது அதிகாரிகள் தரும் கூடுதல் தண்டனை. ஆகவே, அவர் தாடியுடன் காணப்பட்டார். பெயர் ஃபிரெடரிக். ஏழை மக்களுக்கு மலிவு வீடுகள் கட்டித் தரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்தார். ஜேர்மன்காரர்களுக்கு வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள். ஒன்று, அன்றாடம் செலவுக்கணக்கு எழுதி வைப்பது. இரண்டு, பீர் குடிப்பது. இரண்டாவது குறிக்கோள்தான் அவருடைய சிறைவாசத்துக்குக் காரணம். ஃபிரெடரிக் வேலைசெய்தது சோமாலிலாண்ட் எனும் நாட்டில். இது சோமாலியாவில் இருந்து தனியாகப் பிரிந்து, உலகத்தில் வேறு எந்த ந…

  8. பதினோராவது பொருத்தம் இப்படி ஒரு தேசிய விருது உங்களுக்குக் கிடைக்கும்னு நினைச்சீங்களா?” தன்னைச் சூழ்ந்து நின்ற பத்திரிகை நிருபர்களில் இந்தக் கேள்வியைக் கேட்ட அந்த இளம் நிருபரை ஒரு பளிச்சிடும் புன்னகையோடு பார்த்தாள் வர்ஷா. 23 வயதான சித்தன்னவாசல் ஓவியம். ” ‘மகிள ரத்னா’ என்கிற பெயரில் ஒரு விருது இருப்பதும், அது சமூக சேவையில் ஈடுபட்டு இருக்கும் சிறப்பான பெண்களைத் தேர்ந்தெடுத் துக் கொடுக்கப்படுகிறது என்கிற விஷயமும் இன்னிக்குக் காலையில்தான் எனக்குத் தெரியும். பொதுவாக, எனக்கு விருதுகளில் விருப்பம் இல்லை. இது எல்லாம் ஒரு நாள் சந்தோஷம்!” மூத்த நிருபர் ஒருவர் கேட்டார்… ”இந்தச் சின்ன வயதிலேயே சமூக சேவையில் இறங்கிட்டீங்க. அதுல சிறப்பா சேவை செஞ்ச த…

  9. சித்திரத்தையல் பிரிவு - சிறுகதை எஸ்.எஸ்.முருகராசு, ஓவியங்கள்: ஸ்யாம் பகல் ஷிஃப்ட் தொடங்கியது. இன்று எப்படியாவது சுபாவிடம் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்போடுதான் கம்பெனிக்குள் நுழைந்தேன். எனது ஷிஃப்ட் ஆட்கள் யாரும் வரவில்லை. கண்ணாடி ஃபிரேம்களால் சூழப்பட்ட மெஷின் அறையை நோக்கி நடந்தேன். ஹாலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரவு ஷிஃப்ட் ஃபிரேமர், ஹெல்ப்பர்கள் காலை வணக்கம் வைத்தனர். சிரித்தபடி கை அசைத்துவிட்டு, கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு மெஷின் அறைக்குள் புகுந்தேன். ஜில்லென்று இருந்தது ஏசி. ''வாங்க பாஸு'' என்றான் தினகரன். நட்போடு தலை அசைத்துவிட்டு, என்ன டிசைன் ஓடுகிறது என்று பார்த்தேன். மஞ்சள் நிற ப…

  10. கௌரியின் சிநேகிதன் உடல் முழுவதும் வியர்வையில் ஊறித் திளைக்க, தன்னை கடந்துச் செல்லும் பேருந்துகளை எதையும் கவனியாதவனாய் பதற்றத்துடன் நின்றிருந்தான் நாராயணன். அவனது கால்கள் ஓரிடமென்றில்லாமல் குறுக்கும் நெடுக்குமாக அலையோடியபடியே இருந்தன. கண்கள் தொலைவில் பேருந்து நிலையத்தின் மைய வாயிலில் நிலை கொண்டிருந்தது. தனது செல்பேசியை எடுத்து நேரத்தை ஒருமுறை சரி பார்த்துக்கொண்டான். கௌரி வருவதாக சொல்லியிருந்த நேரத்திற்கு இன்னும் கால்மணி நேரம் மீதமிருந்தது. நாராயணன் வகுப்பில் பயின்றவள்தான் கௌரி. வயதில் நாராயணனுக்கு இரண்டு ஆண்டுகள் மூத்தவள் என்றாலும் சிறுவயதில் தாமதமாக பள்ளியில் சேர்க்கப்பட்டவள் என்பதால் அவளும் நாராயணனின் வகுப்பில் ப…

  11. சரித்திரங்கள் திரும்புகின்றன! - சிறுகதை ஆனந்த விகடன் 9.10.1988 இங்கிலாந்து. 1795-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் -ஆம்; அந்த மாதம் முழுவதுமே வேல்ஸ் இளவரசனின் மாளிகை விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது. பல வண்ணக் கண்ணாடி விளக்குகளின் தகத்தகாய ஒளியில், தங்க இழை நிறைந்த பட்டுத் திரைகள் பளபளத்துக்கொண்டிருந்தன. தாழ்வாரங்கள், கைப்பிடிச் சுவர்கள் அனைத்திலும் நிறத்துக்கொன்றாக. மலர்க்கொத்துகள் அழகுகாட்டிக் கொண்டிருந்தன. வெண்பட்டு ஆடைகள் அணிந்த சேடியர், கரங்களில் ஏதாவது ஒரு பொன்னாலான பொருளைத் தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் பரபரத்துக்கொண்டிருந்தனர். ஆயுதமேந்திய காவலர்களின் முரட்டுக் காலணிகளின் ஒலி, ஒருவிதத் தாள ஓசைபோல ஓரத்துத் தாழ்வாரங்களில் கே…

  12. படிக்கப்படாத கடிதம் அலுவலக நேரம் முடிந்து விட்டதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமில்லை. ஆளுக்கு ஒரு சீட்டில் அமர்ந்திருக்க எனக்குக் காலியான இருக்கை ஒன்று கிடைத்தது. ""ரெண்டு ரூபாய் சில்லறையாகக் கொடுங்க'' என்றபடி கண்டக்டர் எச்சில் தொட்டு டிக்கெட்டுகளைக் கிழித்துக் கொடுத்தபடி வந்தார். முப்பது செகண்டு முன்னால் பஸ்ûஸக் கிளப்பி விட்டால் முதலாளியின் சொத்து திவால் ஆகிவிடும் என்ற ரேஞ்சில் சண்டையிட்டுக் கொள்ளும் தனியார் நிறுவன பஸ் கம்பெனி டிரைவர்களின் கூச்சலைக் கடந்து பேருந்து மெதுவாக நிலையத்தை விட்டு வெளியேறியது. கூட்ட நெரிசலை விலக்கி ஹென்றி வுல்சி சிக்னலை அடைவதற்குப் பத்து நிமிடம் ஆனத…

  13. மறுபடியும் ஒருதடவை! ராஜேஷ்குமார் ஏர்போர்ட்டில் இறங்கி டாக்ஸி பிடித்த பளபளப்பான பிளாஸ்டிக் ரோட்டில் பயணம் செய்து பாங்காக்கின் சிறந்த ஹோட்டல்களில் ஒன்றான ஹனி ட்யூனில் இறங்கியபோது என் மனதுக்குள் கலர் ஃபவுண்டன்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் பீறிட்டன. ஹோட்டலின் வரவேற்பறையில் காத்திருந்த அந்த நபர், “பொக்கே’யோடு மெல்லிய குரலில் கேட்டார். “மிஸ்டர் சிவசீலன்’ “எஸ்’ என்றேன். “ஐயாம் ஜெர்ரி ஹாப்ஸ். தொழில்துறை மாநாட்டின் அமைப்பாளர்களில் நானும் ஒருவன். வெல்கம் டூ பாங்காக் மிஸ்டர் சிவசீலன்’ நான் பொக்கேயை வாங்கிக் கொண்டு “தேங்க்யூ’ சொல்லி புன்னகையொன்றை உதிர்த்தேன். தன் கையில் வைத்திருந்த வெள்ளை நிற சாவியொன்றை நீட்டினார். “உங்களுடைய…

  14. ஒரு கிராமம் ஒரு தெய்வம் ................................................................................................................................................................................................ என் பெயர் வாணி.. சென்னையில் தூசியும் டிராஃபிக்குமாக நாளைக் கழித்துக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பணி. எனக்கு அலுவலக ரீதியாக கொடைக்கானலில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. என் நெருங்கிய நண்பன் சீனிவாசன் போன மாதம்தான் கல்யாணம் முடித்து பெரியகுளத்தை அடுத்த அவன் சொந்தக் கிராமமான மேல்மங்கலத்தில் விடுமுறையில் இருந்தான். பக்கா கிராமம் அது. ஒரு நாளுக்கு இரண்டு முறை பெரியகுளத்திலிருந்து பேருந்து போகும். ஊரில் பாதி வீடுகளுக்கு …

    • 0 replies
    • 1.6k views
  15. திசை மாறிய பறவை! அம்மா ஹாலுக்குள் நுழைந்ததும், 'அம்மா... நாங்க கேள்விப்பட்டது நிஜமா?' 'வீட்டை வித்துட்டீங்களா?' 'எங்களுக்கு சொல்ல வேணாமா... நாங்கள்லாம் செத்தா போயிட்டோம்...' பிள்ளைகள் ஆளாளுக்கு எகிறினர். தேனம்மைக்கு ஆயாசமாக இருந்தது. நான்கு பேரில் ஒருவர் கூட, 'ஏம்மா முதியோர் இல்லத்திற்கு வந்திருக்கிறே... என் வீட்டுக்கு வாம்மா... உயிருக்கு போராடிக்கிட்டிருந்த அப்பா, இப்போ எப்படி இருக்கிறார்'ன்னு ஒரு வார்த்தை கேட்கலை. பாசத்தைக் கொட்டி, சுயநல பேய்களை வளர்த்து இருக்கிறோமே என்று எண்ணி, அவர்களையே வெறித்து பார்த்தாள், தேனம்மை. குங்குமமும், திருநீறும் துலங்கும் முகம்; மூக்குத்தி பளிச்சி…

  16. தன் நகரம் தன் நகரம் இரா.முருகன் ‘‘இ ன்னிக்கு மதியம், கட்டையான மீசை வெச்சுக்கிட்டு ஒருத்தன் வந்தான்..!’’ சாரா வீட்டில் நுழைந்தபோது, அம்மா சொன்னாள். அவள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். படுக்கையை அசுத்தம் செய்திருந்தாள். இருட்டில் சூழ்ந்து நின்ற ஈரமும், சிறுநீருமாக வாடை மூக்கைக் குத்தியது. நாள் முழுக்கத் துர்வாடைக்கு நடுவே …

  17. கடவுள் எழுதிய கவிதை! கடவுள் எழுதிய கவிதை! ஜி.ஆர்.சுரேந்தர்நாத் அ வள் தன் செம்பொன் நிறப் பாதங்களை லேசாக உயர்த்தியபடி, நெற்றியில் விழுந்த தலைமுடியை இடக் கையால் ஒதுக்கிக்கொண்டு, உதடுகளைச்சுழித்து, கண்களைச் சுருக்கியபடி... தன் சிவந்த விரல்களால் வண்ணத்துப் பூச்சியை மெள்ள மெள்ளப் பிடிக்க முயன்றபோது, எனக்குத் தெரிந்துவிட்டது... அவ…

  18. காற்றில் கரையாத நினைவுகள்: பண்பாட்டின் கடைசிக் காட்சிகள்! நாம் வசிக்கும் உலகம் விடிந்துவிட்டதை என் அறையின் சாளரம் வழியே விரல்களை நீட்டிக்கொண்டு வந்த வெளிச்சக் கதிர்கள் உணர்த்தின. வெளியே எட்டிப் பார்த்தபோது எப்போதும் கேட் கும் பறவைகளின் இசை காணாமல் போயிருந்தது. அவற்றைத் தாங்கி நிற்கும் மழைமரம் வீழ்த்தப்பட்டிருந்தது. வாழ்விடம் பறிக்கப்பட்டதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவை காலி செய்திருந்தன. வெற்றிடங்கள் எல்லாம் கட்டிடங்களாக உருவாகிக் கொண்டிருக்கும் மூச்சுத் திணறும் சூழலில், எனக்குள் அதிகரித்துக்கொண்டிருக்கும் வெறுமை உறுத்திக் கொண்டே இருக்கிறது. நினைவு த…

  19. Started by நவீனன்,

    புகழேந்தி! விஞ்ஞான ஆராய்ச்சியிலே அவனுக்கு நிகர் யாருமில்லை. இந்தியாவின் ஐன்ஸ்டின் என்று உபகண்டம் பாராட்டு படித்தது. சரித்திர ஆராய்ச்சியின் கரையைக் கண்டவன் அவன். சார்லஸ் ஆண்டபோது நடந்ததைக் கூற வேண்டுமா? ஷாஜகானின் குணாதிசயங்களை ஒன்று விடாமல் சொல்ல வேண்டுமா? நாசர் காலமா? சீசர் வீரமா? எல்லாமே அவனுக்கு மனப்பாடம். சுருங்கச் சொன்னால் அவனே ஒரு சரித்திரப் புத்தகம். இலக்கியத்திலே எது பற்றி அவனிடம் விவாதிக்க வேண்டும்? எதற்கும் தயார். கவிதைத் துறையிலே கம்பனா? ஷெல்லியா? காளிதாசனா? டென்னிசனா? பைரனா? பாரதியா ? யாரைப் பற்றியும் கருத்துரைகள் வழங்குவதிலே அவனுக்கு நிகர் யாருமில்லை என்பது மட்டுமல்ல, அந்தக் கவிதா…

  20. காளிமுத்துவின் பிரஜாஉரிமை அ-செ-முருகானந்தன் இலங்கையின் சமூக பொதுவாழ்வில் காளிமுத்து பிரமாத சேவைகள் புரிந்துவிட்டதாக அப்படி ஒன்றும் பிரமாதப்படுத்தவில்லை. அதனால் இலங்கையின் கௌரவப் பிரஜையாக அரசாங்கம் அவனை ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஒரு சாதாரண தோட்டத் தொழிலாளியாகத்தான் இலங்கை மண்ணில் அவன் வாழ்ந்தான். காளிமுத்துவின் குடும்பம் ஒரு தலைமுறையல்ல, பல தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்து மலைநாட்டை வாழவைத்தது. அந்த மூதாதைகளின் வியர்வையில் செழித்து வளர்ந்துதான் இன்று ராஜகிரித் தோட்டம் கம்பீரத்தோற்றங்கொண்டு குளு குளுவென்று நிற்கிறது. ஏன், உண்மையைச் சொன்னாலென்ன, மலைநாடு இன்றைக்கெல்லாம் மலைபோல நிமிர்ந்து நிற்பது இந்தியப்பாட்டாளிகளின் உழைப்பின்மீதுதான். பிரிட்டிஷ்காரன் இலங்கையில் …

  21. Started by நவீனன்,

    கடை - சிறுகதை ம.காமுத்துரை, ஓவியங்கள்: ஸ்யாம் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... பையன் கடையைத் திறந்து வைத்திருந்தான். வாசலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சேரை எடுத்துப்போட்டு, அன்றைய தினசரியை விரித்துப் படிக்கத் தொடங்கினார் கடைக்காரர். செய்திகள், மனதில் பதியவில்லை; வட்டெழுத்துக்கள் போலவும் பிராமி எழுத்துக்கள் போலவும் கண்களில் பூச்சி காட்டின. பையன் சாமி படத்துக்குப் பத்தி பொருத்துவதற்காக வத்திப்பெட்டியுடன் தயாரானான். கடைக்காரர் எப்போது கடைக்கு வந்தாலும் பத்தி பொருத்தி, சாமி படத்துக்குக் காட்டிவிட்டுத்தான் உட்காருவார். இன்று ஏனோ மனநிலை கெட்டிருந்தது. நான்கு நாட்களில் தீபாவளி. கடைக்கு வரும் சமைய…

  22. காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன் புதிய தொடர் -யுவகிருஷ்ணா அடியென்றால் அடி. சரியான அடி. தன்னை ஏன் அந்த போலீஸ்காரன் அப்படி அறைந்தான் என்று அடிவாங்கியவனுக்குத் தெரியவில்லை. ‘என்ன சார், திடீர்னு தெரு முழுக்க போலீஸ்?’ என்று சாதாரணமாகத்தான் கேட்டிருந்தான். அதற்கு இப்படியா அடிப்பது? வாசலில் நின்று தேமேவென்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன், கண்கள் இருள கன்னத்தை தடவிக்கொண்டு, அவசரமாக வீட்டுக்குள் போய் கதவைத் தாழிட்டான். மெதிலின் நகருடைய முக்கியமான சாலை அது. தனித்தனி பங்களாக்களாக பெரிய வீடுகள். கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரம். நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த நகரம் என்பதால் மரபும், நவீனமும் கலந்த கவர்ச்சியை தன்னகத்தே கொண்டிருந்தது மெதிலின். சுற்றிலும் ஒன்பது…

  23. புறவழிச்சாலைப் புண்ணியங்கள் காலை மணி ஒன்பதரை. காசி விஸ்வநாதனுக்கு அன்றைய காலைக் கடமைகள் முடிந்தன. ஐந்தரை மணிக்கு எழுதல். பயோரியா பற்பொடியில் பல் துலக்குதல். மனைவி கற்பகம் கையால் தரப்படும் காபியை ருசித்துக் குடித்தல். அரை கிலோ மீட்டர் தொலைவு வியர்வை அரும்ப நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி முடித்து வந்து குளிர்ந்த நீரில் குளித்தல். அடுத்து தமது குடும்பத்திற்குச் சொந்தமான விநாயகர் கோயில் பூஜை. பூஜை முடிந்து கற்பகத்துடன் சேர்ந்து காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டு விட்டு கடிகாரம் பார்த்தால்... அது மணி ஒன்பதரையைக் காட்டும். அதன் பிறகு அன்றையச் செய்தித் தாளை வரி விடாமல் வாசிக்கத் தொடங்குவார் காசி விஸ்வநாதன். வேலையில்…

  24. சிவப்பு மச்சம் - சிறுகதை “என்னைய இப்படி ஆறு மாசமா இழுத்தடிக்கிறீங்களே... உங்களுக்கே அநியாயமா தெரியலையா? நீங்க நல்லாயிருக்க மாட்டீங்க. உங்க புள்ளகுட்டி விளங்காமப்போயிரும். என் புருஷன் செத்த இடம் புல் முளைச்சுப்போயிருச்சு. இன்னும் என்னைய அலையவிடுறீங்களே... வயிறெரிஞ்சு சொல்றேன், என் சாபம் உங்களைச் சும்மா விடாது’’ என ராக்கி கத்திக்கொண்டிருந்தாள். வருவாய்த் துறை அலுவலகத்துக்குள் யாரோ அதைக் கேட்டுச் சிரித்தார்கள். ``சாபமெல்லாம் வெளியே போய்க் குடு. இங்க நின்னு கத்தக் கூடாது” என ஒருவர் அவளை வெளியேற்றினார். ராக்கி, படிகளில் உரத்து சத்தமிட்டபடியேதான் இறங்கிப் போனாள். விவசாயம் பொய்த்துப்போய் கடன் தொல்லையால் தற்கொலை செய்து…

  25. தேர்!…. எஸ்.பொ. சிறப்புச் சிறுகதைகள் (8) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – எஸ்.பொன்னுத்துரை எழுதிய ‘தேர்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும் . முகத்தார் என்றழைக்கப்படும் ஆறுமுகம் துயிலெழுவது ஒரு திருக்காட்சி. தலையணையையும் போர்வையையும் உட்திணித்துப் பாயைப் பக்குவமாகச் சுருட்டி வைப்பது ஒரு கலை. கொட்டாவியை மறைபொருளெதுவுமின்றி ஊளையிட்டு, கைகளை நீட்டி மடக்கி, உடலை உலுப்பிச் சோம்பலை முறித்தால், துயிலெழு படலத்தின் ஓரம்சம் நிறைவுறும். தலைமாட்டில் நெருப்புப் பெட்டியும், தாவடிப் புகையிலைச் ‘சுத்து’ம் எப்பொழுதும் தயாராக இருக்கும். ‘சுத்தை’ நேர்த்தியாகப் பற்றவைத்தால், கால்கள் தம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.