Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. மரியா மதலேனா - இலங்கையர்கோன் அவள் ஒழுக்கம் தவறியவள். மோக்ஷ வீட்டை நோக்கிச் செல்லும் மனித வர்க்கத்தின் ஞானப் பாதையில் குறுக்கே படம் விரித்தாடும் கொடிய விஷசர்ப்பம். ஒன்றுமறியாத ஆண்மகனைத் தன் மாயா சக்தியால் வலிந்து இழுத்து மீட்சியில்லாத காமப் படுகுழியில் வீழ்த்தும் காந்தச் சுழல். அருவருத்து ஒதுக்கப்பட வேண்டிய வாழ்க்கை ரசத்தின் அடிமண்டி ….சீ! ஆமாம்! அவள் நிலை தவறியவள் தான். ஆனால் ஏன்? அவளுடைய நடத்தையைக் கண்டனம் செய்த சுத்தப் பிரமுகர்களால் இந்தக் கேள்விக்கு மட்டும் விடை கண்டு பிடிக்க முடியவில்லை. தங்களுடைய இருதயத்தின் மேல் கையை வைத்துத் தங்களுடைய மனச் சாட்சிகளைப் பரிசீலனை செய்யவும் அவர்களுக்குத் தைரியமில்லை. மற்றவர்களைக் கண்டனம் செய்யும் பொழுது மட்டும் தாங…

  2. Started by nunavilan,

    பெருமாள் உச்சியிலிருந்து அடித்துச் சப்பளித்ததுபோல் அடர்ந்து சடைத்து கட்டையாக நின்றிருந்த அந்த முதிர் பூவரசு இன்னும் நின்றிருந்தது கண்டபோது, அந்த வீட்டில் ஒருகாலத்தில் குடியிருந்த பெருமாளதும் அவரது குடும்பத்தினதும் ஞாபகம் துரைசிங்கத்தினது மனத்தில் சாரலடித்தது. மிகவும் அண்டி வராமல் விலகியிருந்த சக மனிதர்கள் இவ்வாறான எதிர்பாராத் தருணங்களில்தான் மனத்தில் உயிர்கொண்டெழுகிறார்கள். முப்பது முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அந்த ஊருக்கு குடும்பமாய் வந்து மலேசியா பென்சன்காரர் பொன்னம்பலத்தின் வெறுவீட்டில் அவர் புதிதாகக் குடியேறியபோது, அயல் சிறுவர்களிடத்திலெல்லாம் பெரும் குதூகலிப்பு ஏற்பட்டுப்போனது. அது பெரும்பாலும் நீண்டநாட்கள் நீடிக்கவில்லையென்றே சொல்லமுடிகிறது…

    • 1 reply
    • 728 views
  3. ஓவியாவின் கனவுகள் மண்ணுக்காய் மரணத்தை சுமந்தவன் மலரவன். அவன் உயிர் எறிந்து சென்று பத்து வருடம் ஆகிவிட்டது. பாவம் இவன் குடும்பம் இப்போ படும் பாடு போதும். ஒன்றாகவே விடுதலைக்கு போன ஓவியாவை திருமணம் செய்தவன். நாம் தமிழர் விடுதலைக்காய் நாளும் பொழுதும் உழைத்த குடும்பம். இரவு பகலாய் எதிரி எம் மண்ணில் நுழையாமல் எல்லையில் நின்று கண் முழித்து காவல் நின்றவள் ஓவியா. இறுதி யுத்தத்தில் இவன் போன பின் எல்லாமே இழந்த பின் மலரவனின் மனைவி ஓவியாவுக்கும் இவள் நான்கு குழந்தைகளுக்கும் எதுக்கும் இப்போ வழி இல்லை. நான்கு பிள்ளைகள் நாளாந்தம் குடும்பம் ஓட்டுவதே கடினம். ஓவியா இப்போ கூலி வேலை செய்து குடும்பத்தை ஓட்டுகிறாள். அவள் படும் பாடு இப்போ பெரும் பாடு அவள் சுமக்கின்ற வலியோ தீராது. ஒரு க…

  4. Started by nunavilan,

    புதிர் புலம்பெயர் தேசத்திலிருந்து வந்து நாட்டில் கால் பதித்த வேளைமுதல் ஒரு கால் நூற்றாண்டுக் காலத்தின் மாற்றங்கள், அவன் பார்வையெங்கும் நிறைந்திருந்தன. தொலைக்காட்சிச் செய்திகள் வழி மனதில் விரிந்திருந்த கட்டமைப்புகள் காட்சி நிஜங்களுடன் மிக ஒத்துப்போனதில் அவன் பெரிய ஆச்சரியமெதனையும் அடைந்துவிடவில்லை. ஆனால் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடிய தன்னூர் வந்தபோது…? பௌதீகத்தில் எந்த மாற்றமும் அற்றதாய் இன்னும் அது பழைமையின் பிடியில் இருந்துகொண்டிருந்தது. அவனுக்கு அதிசயம் வந்தது. இறுதி யுத்தத்தில் விழுந்த ஆழமான வடுக்கள் முற்றாகத் தீர்ந்ததாகவன்றி, யுத்தமே அந்த இடத்தைத் தாண்டிச் செல்லவில்லைப்போல, காலமே தன் தடம் பதிக்க அஞ்சி விலகிச் சென்றதான தோற்றங்கொண்டு இருந்தது. …

    • 0 replies
    • 993 views
  5. ஹெச். எச். ஆண்டர்சன் (1837) பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அரசன் இருந்தான், அவர் அணிகலன்கள் மற்றும் புதிய ஆடைகளை உணர்ச்சியுடன் விரும்பி, தனது பணத்தை அதற்கே செலவழித்தார். அவர் தனது வீரர்களிடம் வெளியே சென்று, ஒரு புதிய உடையில் காட்டுவதற்காக மட்டுமே தியேட்டருக்கு அல்லது காட்டுக்குள் ஒரு நடைக்குச் சென்றார். நாளின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவர் ஒரு சிறப்பு கேமிசோலை வைத்திருந்தார், மேலும் ராஜாக்களைப் பற்றி அவர்கள் சொல்வது போல்: "ராஜா கவுன்சிலில் இருக்கிறார்", எனவே அவர்கள் எப்போதும் அவரைப் பற்றி சொன்னார்கள்: "ராஜா டிரஸ்ஸிங் அறையில் இருக்கிறார்." ராஜா வாழ்ந்த நகரம் பெரியதாகவும், கலகலப்பாகவும் இருந்தது, அதனால் ஒவ்வொரு நாளும் வெளிநாட்டு விருந்தினர்கள் வருகிறார்கள், ஒ…

    • 2 replies
    • 1k views
  6. பொறுப்புத் துறப்பு: கதையைப் படித்து மனவுளைச்சல் ஏற்பட்டால் இணைத்தவர் பொறுப்பில்லை. சடம் - ஜெயமோகன் olaichuvadiJanuary 1, 2022 “சிஜ்ஜடம்” என்றார் சாமியார். நல்ல கறுப்பு நிறம். தாடியும் தலைமயிரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து சிக்கலான சடைக்கொத்தாக இருந்தது. வாய்க்குள் பற்கள் மண்நிறத்தில் இருந்தன. அசையாமல் நிலைகுத்திய கண்கள். சுடலைப்பிள்ளை பக்கத்தில் இருந்த தரகு நாராயணனைப் பார்த்தார். “தாயளி, என்னல அவன் சொல்லுகான்?” “அவரு மஹான்” என்றார் தரகு நாராயாணன். “சாமி தத்துவம் சொல்லுது” “மயிரு தத்துவம்… அள்ளையிலே ஒரு சவுட்டு சவுட்டினா அண்டி உருண்டு அண்ணாக்கிலே கேறி இருக்கும்… அப்ப பேச்ச நிப்பாட்டுவான்… ஏல நாம கேக்குத கேள்விக்கு அவனுக்கு பதில் தெரியுமாண…

    • 4 replies
    • 1.1k views
  7. டார்வினின் வால் கிறிஸ்டி அவன் அருகே வந்து “ஒரு பெயர் வைக்கலாமா?” என்றபோது அவன் ஏதும் பேசாமல் அவள் கண்களையே பார்த்தான். அக்கண்களிலிருக்கும் குழந்தைமை அவனுக்கு எப்போதும் ஆசுவாசமளிக்கும். “சொல்லுங்க அங்கிள் என்ன பெயர்” என்றாள் மறுபடியும் அழுத்தமாக. பிறகு அவளே ஒருகணம் யோசிப்பது போல பாவனைக் காட்டி “டார்வின்” என்றாள். அவன் ஆச்சர்யமாக நிமிர்ந்தான். எதற்காக அப்பெயரை தேர்ந்தெடுத்தாளெனக் கேட்கத் தோன்றவில்லை. ஏதோவொரு வகையில் ஒரு அடையாளத்திற்கு அப்போதைக்கு அப்பெயர் தேவையாகத்தான் பட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அக்கணத்திலிருந்து இருவருடைய பிரக்ஞையிலும் டார்வின் என்ற சொல் உச்சரிக்கத் துவங்கியது. இந்த பெயர் அவளின் வளர்ப்பு பூனைக்கோ நாய்க்கோ அல்ல அவா்கள் பிடிக்கப் போக…

  8. இல்லாள்: ஜேகே சாவு வீடுகளில் பிரேதம் எடுக்கும்போது எழுகின்ற ஒப்பாரி ஒலியைப்போல மழை வீரிட்டுக் கொட்டிக்கொண்டிருந்தது. கிளிநொச்சி நிலையத்திலிருந்து ரயில் மறுபடியும் புறப்பட்டது. மிருதுளா தன் செல்பேசியிலிருந்த பயண வழிகாட்டியைத் திரும்பவும் எடுத்துப் பார்த்தாள். கொடிகாமம் கழிந்தால் அடுத்தது யாழ்ப்பாணம் ரயில் நிலையம் வந்து சேர்ந்துவிடும். அவள் தன் கைப்பையினுள் கடவுச்சீட்டு, கடனட்டை, இலங்கை ரூபாய்கள் எல்லாமே பத்திரமாக இருக்கிறதா என்று மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திக்கொண்டாள். யாழ்ப்பாணத்தில் ரயில் எத்தனை நிமிடங்கள் தரித்து நிற்கும் என்பதை ஊகிக்கமுடியவில்லை. முதலில் அந்த நிலையத்தை அவள் தவறவிடாமலிருப்பது முக்கியம். இந்த மழையில் அதன் பெயர்ப்பலகை மறைந்துபோகலாம். ரயிலினுள்ளே…

    • 7 replies
    • 898 views
  9. நிலையழிதல் இராதா கிருஷ்ணன் “இரண்டு வழி இருக்கு, ஒன்னு நரகம், இன்னொன்று சொர்க்கம், நம் நோக்கமும் செய்லபாடும்தான் நம் வழியை தீர்மானிக்குது, இறைவனை உதறினால் நரகம், அவனை நம்பினால், அவன் சொல்படி நடந்தால் சொர்க்கம்…. “ நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருந்ததால் உடல் அசவுகர்யம் கொள்ள ஆரம்பித்திருந்தது, கால்களை மாற்றியபடி அசவுகர்யத்தை வெளிக்காட்டாதபடி அமர்ந்திருந்தேன், என்னை சுற்றி 300 பேருக்கு மேல் அமர்ந்திருக்கிறோம், மேடையில் எம் மதவழிகாட்டி பேசி கொண்டிருக்கிறார், நினைவு தெரிந்த நாள் முதல் இந்த பிரசங்கங்களை கேட்டு கொண்டிருக்கிறேன், அம்மா, அப்பா, அப்பாவின் நண்பர்கள், சுற்றி இருக்கும் பெரியவர்கள் எல்லோருமே இந்த பிரசங்கங்களைதான் தங்கள் அறிவுரைகளாக …

  10. யுகக்குருதி: சித்தாந்தன் “நீ எங்கே இருந்து வருகின்றாய்” “நான் இன்மையிலிருந்து வருகின்றேன்” “இன்மையிலிருந்தா” “ஆம் இன்மையிலிருந்துதான்” அவர்களின் உரையாடல் எனக்கு விசித்திரமாகப்பட்டது. அந்த மண்டபத்துள் அவர்கள் மட்டுந்தான் அமர்ந்திருந்தனர். அவர்களை எனக்கு யார் என்றே தெரியாது. ஊருக்குப் புதியவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் வார்த்தைகள் ஒன்றிலிருந்து ஒன்று இழை பிரிந்த, முற்றிலிலும் புதியதான சங்கீதம் போல அந்த மண்டபம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இன்னும் நாகரீகம் தீண்டாத இடங்களிலிருந்து வந்தவர்கள் போல இருக்க வேண்டும். ஆதிமனிதச் சாயலோடு இருந்தார்கள். ஒருவரை ஒருவர் வியப்பு மேலிடப் பார்க்கும் ஒவ்வொரு கணத்தையும் நான் பார்த்துக் கொண்டி…

    • 2 replies
    • 822 views
  11. முள்ளிவாய்க்கால் -இளங்கோ 1. நான் கொழும்பில் போய் இறங்கியபோது வெயில் எரித்துக்கொண்டிருந்தது. பகல் பொழுதில் வெளியில் போகவும் எரிச்சலாக இருந்தது. இந்தப் பயணத்தின்போது அவளை எப்படியாகினும் தவறாது சந்தித்துவேண்டுமென நினைத்திருந்தேன். அவள் முள்ளிவாய்க்காலுக்குள் கடைசிவரை இருந்து தப்பி வந்தவள். கொழும்பிலும், தனது ஊரிலுமாக மாறிமாறி இப்போது வாழ்ந்துகொண்டிருந்தாள். அவளை அவளின் ஊரில் சென்று சந்தித்தல் அவ்வளவு எளிதில்லை என்பதால், எப்படியேனும் கொழும்பில் சந்தித்தால் நல்லது என்று தோன்றியது. நான் எழுதுவதைக் கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களாக வாசித்துக் கொண்டிருக்கின்றவள். ஆனால் அண்மையில்தான் சோஷல் மீடியா மூலம் தொடர்புகொண்டு இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாயிருந்தோம். …

  12. பிலோமி டீச்சர் கலவியின்போது ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒரு முறையேனும் இயங்கினேனா? இல்லவே இல்லை போலத்தான் இருக்கிறது. ஒரு கட்டத்திற்கும் மேல் ஆணை நசுக்கவோ, தன்னுள் புதைத்துக் கொள்ளவோ முடியாமலே போகிறது. அதற்கும் மேலே போகலாம் என்றாலும் சூன்யம் தாக்குகிறது. மரணபயம் வந்து விடுகிறது. அந்த சமயத்தில் அந்த இடத்தில் எல்லையை வைத்தது யார்? எல்லோருக்குமே இப்படித்தானா? இல்லை, என்னை மட்டும்தான் அந்த உச்சநிலைக்கு மேல் மரணம் கவ்விக் கொள்ள முயற்சிக்கிறதா? இருட்டு சூழ்ந்து வரும் சமயம் கண்கள் சுழன்று களைத்துப்போய் விடுபட்டு மூச்சு வாங்கிக் கொள்வதுதான் தொடர்ந்து நடக்கிறது! பின் இதற்கா? இதற்குத்தானா? இந்த அசிங்கத்துக்குத்தானா? என்று கலவியின் மீது வெறுப்புப் போர்வை உடனே போர்த்திக் கொள்கிறது. …

  13. Started by nunavilan,

    சுணைக்கிது -நிரூபா (சிறுகதை) கறுப்பு. அதில வெள்ளப் புள்ளி. சிவப்பும் நீலமும் கலந்தது. கறுப்பில மஞ்சள் ஊத்திவிட்டமாதிரி. எத்தின வித விதமா. வண்ணாத்திப்பூச்சி! பஞ்சு போல செட்டயள். அடிச்சு அடிச்சு பறக்க எவ்வளவு வடிவாக் கிடக்கு. 'வண்ணத்திப் பூச்சி வண்ணத்திப் பூச்சி பறக்கிது பார். பறக்கிது பார். அழகான செட்டை அடிக்கிது பார். அடிக்கிது பார்" ரீச்சற சுத்திச் சுத்தி ஓடுறது. ரண்டு கையும் செட்ட. நேசறி ரீச்சர் சொல்லித் தந்த பாட்டுகளில இப்பவும் பிடிச்சது இதுதான். சில நேரங்களில கும்பலா வரும். எதப் பாக்கிறது எண்டுதெரியாமல் இருக்குமென்ன? வண்ணாத்தி எண்டால் நல்ல விருப்பம். அதப் பிடிச்சு கிட்டவைச்சுப்பாக்கவேணும். பின் வளவில் ஒரு நாள் …

  14. சாயம் by தாட்சாயணி “இவ்வளவு கடை ஏறி இறங்கியாச்சு, இதுகள் ஒண்டிலையும் இல்லாததையோ இனிப் போற கடையில பாக்கப் போறம்…?” உமாராணி அலுத்துப் போய்ச் சொன்னாள். “அது அப்பிடித்தான். வாழ்க்கையில ஒரே ஒருக்கா எனக்கு நடக்கப்போற கொன்வேகேஷனுக்கு என்ரை அம்மாவுக்கு நான் அப்பிடித்தான் உடுப்பு எடுத்துத் தருவன்” “அப்ப, இதோட உம்மட படிப்பு முடிஞ்சுதாமோ…? வேறை படிப்பும் கொன்வேகேஷனும் இல்லையாமோ…?” “அதெல்லாம் வரேக்க இதை விட ‘கிராண்டா’ பாப்பம்” அடுக்கடுக்கான கட்டடங்களோடு மாநகரம் கொஞ்சம் திமிராக நின்றிருந்தது. அந்தத் திமிருக்கு ஈடு கொடுத்தபடி லக்ஷிதாவும் நடந்து கொண்டாற் போலிருந்தது. அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு லக்ஷிதா பாதசாரிக் கடவையால்…

  15. மொஹிதீன் ஹோட்டல்: உமாஜி ”சும்மா சாப்பிடுங்க” பக்கத்து மேசையில் யாரோ யாருக்கோ சொன்னார்கள். நண்பன் சற்றே துணுக்குற்றதுபோல திரும்பிப் பார்த்தான். இரவு நேர பேரூந்துப் பயணிகளால் நிறைந்து, அவசர கதியில் இயங்கிக்கொண்டிருந்த சாப்பாட்டுக் கடை. பின் மெதுவாக, ”மொஹிதீன் ஹோட்டல் நானா ஞாபகம் வந்திட்டுது. போற எல்லா முஸ்லீம் ஹோட்டலிலும் நான் தேடுவேன். மொஹிதீன் ஹோட்டல் என்ற பெயர் இன்னும் கண்ணில் படவில்லை. மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். மீண்டும் பேரூந்தில் ஏறிக்கொண்டதும் நண்பன் சொல்லத் தொடங்கினான். வீட்டில் நானும் அப்பாவும்தான். தினமும் காலையில் அப்பா ஐம்பது ரூபாய் கொடுப்பார். காலையும் மதியமும் சாப்பாட்டுக்காக என்று பேச்சு. ஆனால் காலைச்சாப்பாட்டை…

  16. Started by கிருபன்,

    மறுமுறை சொல் உடையார் குமார் கிளம்பிச் சென்றதும் வாசல் கதவைத் தாளிட்டாள். எல்லாவற்றின் மீதும் எரிச்சல் படர்ந்தது. காலில் சிக்கிய தலையணையை வெறிகொண்டு எத்தித் தள்ளினாள். சில்வர் செம்பொன்று நாற்காலியில் இருந்து தரையில் விழுந்து உருண்டது. விளக்கினைப்போட்டு கண்ணாடி முன்நின்று பார்த்தாள். தன்முகம் ஏன் இவ்வளவு கிழடு தட்டி விட்டது. முப்பத்தைந்து வயதிற்குள் எல்லாம் முடிந்து போனதனாலா? உதடுகளைக் குவித்து பரிசோதித்தாள். ஐந்து வருட இடைவெளிக்குள் தனக்குப் பத்து வயது கூடிவிட்டது போல் உணர்ந்தாள். தொப்புளைச்சுற்றிய பிள்ளைப் பேற்றுத் தழும்புகளை வலது கை விரல்கள் அன்னிச்சையாகத் தடவிக்கொண்டிருந்தன. ஒவ்வொருமுறையும் குமார் அறைக்குள் வந்து கதவைச்சாத்திய உடன் அவள் அ…

    • 2 replies
    • 790 views
  17. உதறல்-சப்னாஸ் ஹாசிம் ஓவியம் : எஸ்.நளீம் நீண்ட நாட்களுக்குப் பிறகு அச்சமற்ற மனித நடமாட்டத்தை சந்தைக்கூச்சலை வாகன நெரிசலை, பாடசாலை சிறுவர்களை அவர்கள் கண்டிருந்தனர். அநுராதபுரத்தில் ஆங்காங்கே இருந்த புத்தர் சிலைகளைச் சுற்றியிருந்த வெண் அலரிப்பூக்கள் பகலிலும் மணத்துக்கிடந்தன. சில இடங்களில் பாதை தடுப்புகள் போடப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. நீண்ட நாள் பசி, வயிறு ஒட்டி அடியிலிருந்து பிழம்பாய் எரிவது மூக்கு நாசிவரை சுட்டது. வேறு வழியின்றி ஒரு முஸ்லிம் ஹோட்டலை பார்த்து உள்ளே முதலாளியிடம் ஒரு சிலர் நிலைமையைப் புரியவைக்க அவர்களில் ஒருவனுக்கு அவசரமாய் அடைத்துக்கொண்டு வந்திருந்ததில் ஒதுங்கப் போனான். கழிவறையில் மஞ்சள் சுவர் பூச்சு போலக் கசந்து ஒழுகியதும் அந…

    • 1 reply
    • 960 views
  18. மார்ட்டினா -ப. தெய்வீகன் (1) கறுத்த எறும்புகள் மார்ட்டினாவின் கைகளில் ஏறுவதும் விழுவதுமாக சிநேகித்தபடியிருந்தன. மார்ட்டினா பூரித்திருந்தாள். கால்களை விரித்து தரையில் அமர்ந்தபடி, உள்ளங்கைககளில் கூட்டி அள்ளிய மண்ணை மெதுவாக வருடினாள். ஆதி நிலத்தின் அழியாத அழகை தினமும் பருகுவதில் அவளுக்குள் அப்படியொரு இன்பம். கதிர் வற்றிய வானத்திலிருந்து விழுந்த அந்தியின் வெளிச்சம், மரக்கிளைகளின் வழியாக தரையில் சிறு நிழல்களை வரைந்தது. குளிரோடு தலைகோதும் காற்றின் வாசனையை உணரும்போதெல்லாம் மார்ட்டினா வானத்தை அண்ணாந்து பார்த்து சிரித்தாள். தோழமையான அவளது புன்னகையில் இயற்கையின் மொழி அடர்ந்திருந்தது. அருவமான அவள் எழில் கலந்திருந்தது. முதியோர் இல்லத்தின் நான்காவது …

  19. ஒரு நீதிக்கதை August 30, 2021 முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட இரண்டு மடங்கு அழகாகத் தெரிவதாகவும் சொன்னார். அவர் வீட்டில் வளர்ந்துவந்த பூனை இந்த ஓவியத்தின் சிறப்பு குறித்துத் தன் நண்பர்களான காட்டு விலங்குகளிடம் சொன்னது. காட்டு விலங்குகள் வீட்டுப் பூனை மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தன. ஏனென்றால், பூனை நல்ல கல்வியறிவும், கலாச்சார அறிவும் பெற்றிருந்தது. மேலும், அது காட்டு விலங்குகளுக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்களைப் பற்றி அவ்வப்போது பேசும், அவர்கள…

    • 7 replies
    • 998 views
  20. சின்னப்பன்றி: அகரன் அதிசயமாக அன்று காலை இயல் என்னை எழுப்பினாள். நாம் எழும்புவதற்கு கால் மணி நேரம் இருந்தது. கண்கள் அதிசயிக்கும்படி தானாகவே குளித்து, தன்னை அழகு படுத்தி, தனக்கு பிடித்த ‘அனா’ சட்டையை அணிந்திருந்தாள். காதுகள் அதிரும்படி பிரெஞ்சு மொழியில் ‘’Petit cochon réveille-toi’’என்றாள். (சிறிய பன்றி கண்விழி) எனது வாழ்வில் என்னை ‘சின்ன பன்றி’ என்று அழைத்தது, நான்கு வயதை நிறைத்துக் கொண்டிருந்த என் இயல். நான் பதறிப் போனேன். அவள் ‘பெரிய பன்றி’ என்றிருந்தால் பதட்டத்தின் அளவு குறைந்திருக்கும். பொதுவாக தமிழில் பன்றி, எருமை, குரங்கு, நாய் என்று ஊரில் திட்டு வேண்டியதால் அவை ‘கெட்ட’ வார்த்தைகள் என்று என்னிடம் படர்ந்திருந்தது. ஒரு இருட்டு மேகம் போல முகத்தை மாற்றி ‘’ இதை ய…

  21. நட்சத்திரங்களின் வாக்குமூலம் by பிரசன்ன கிருஷ்ணன் இதழிலும், இடது கன்னத்திலும் மிருதுவான முத்தங்களை வழங்கி கழுத்துக்குச் சென்று வியர்வை வாடையைப் பொருட்படுத்தாது கீழிறங்கினான். முத்தமிட்டப்படியே அவள் மார்பகங்களுக்குச் சென்றடைந்தான். அவ்வப்போது தலையைத் தூக்கி செயலிலிருந்து விடுபட்டு அவள் முகம் காணவும் தவறவில்லை. கண்கள் சொக்கி மோனத்தில் இருந்தாள். அவளின் மேலாடையைக் களைய முற்படும் போதே அவனுள் எழுந்த படபடப்பு அவனைத் தொந்தரவுக்குள்ளாக்கியது. எவ்வகையிலாவது இம்முறை மன வேலியை கடந்து சென்று விட வேண்டும் என்றெண்ணி முனைப்புடன் கூடலில் ஈடுபடலானான். மேலுள்ளாடையையும் அவிழ்த்து அவள் மார்பகங்களைத் தற்போது, அரிதாக நடைபெறும் ஒரு நிகழ்வை கண்டதைப் போல் வெறித்துக் கொண்டிருந்தான். …

  22. காதலில் விழுவது. [நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஸ்டீன்பெக் எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அவரது மகன் தோம் உறைவிட பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தனது புதிய காதலைப் பற்றி தனது தந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறான். அந்தக் கடிதத்திற்கு ஜான் ஸ்டீன்பெக் எழுதியுள்ள பதில் கடிதம் காதலின் அழகை, மேன்மைகளை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. உலகப்புகழ் பெற்ற அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பு இது.] நியூயார்க் நவம்பர் 10,1958 அன்புள்ள தோம்: உன் கடிதம் இன்று எங்கள் கைவசம் கிடைத்தது. நான் என் பார்வையிலிருந்து பதிலளிக்கிறேன் நிச்சயம் எலைன் அவள் பார்வையிலிருந்து எழுதுவாள். John steinback with his son முதலில் நீ காதலிக்கிறாய் என…

  23. மோகனம் : அனோஜன் பாலகிருஷ்ணன் 1 “ஹலோ…மிஸ்டர் சதாஷிவம்?” எதிர் முனையில் இனிய நடுத்தரவயது பெண்ணின் குரல் ஒலித்தது. தொலைக்காட்சியின் ஒலியை தொலையியக்கியால் குறைந்தேன். “எஸ்…” “நாங்கள் வூட்கிரீன் பொலிஸ் பிரிவிலிருந்து தொடர்பு கொள்கிறோம்” வழுக்கிச் செல்லும் தூய பிரித்தானிய உச்சரிப்பில் வார்த்தைகள் ஒலித்தன. பொலிஸ் என்றவுடன் என் உடல் என்னையும் மீறி சிறிதாக விழிப்புக் கொண்டது. “சொல்லுங்கள்,” “உங்கள் மகனது பெயர் செந்தூரன்தானே?” “ ஆமாம்” “உறுதிப்படுத்தியமைக்கு நன்றி. செந்தூரனும், அவரது நண்பர் கெல்வினும் ஸ்டாவூட் பூங்காவில் தாக்கப்பட்டுள்ளார்கள். சிறிய வன்முறைச்சம்பவம்…” “ஹோ…என் மகனுக்கு?” முடிந்தவரை பதட்டத்தை வெளிக்காட்டாமல் என்னை நிதானித்த…

  24. வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை.! பெரிய பரந்தன் கதை இந்த வரலாற்றை ஏற்கனவே நான் எழுதி வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வந்தது. அதனை லண்டனில் இருந்து வெளிவரும் “ஒரு பேப்பர்” பத்திரிகை தொடர்ந்து பிரசுரித்தது. வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் வந்ததை வாசித்து அதனை ரசித்த அப்போதைய “சுடரொளி வாரமலர்” ஆசிரியர் மூன்று கிராமங்களின் கதை என்ற தலையங்கத்தை “அது ஒரு அழகிய நிலாக்காலம்” என்ற பெயரில் மாற்றி தொடராக வெளியிட்டார். எனது தந்தையும் நானும் பிறந்து தவழ்ந்து வளர்ந்த ” பெரிய பரந்தன்” கிராமத்தைத் பற்றி முழுமையாக எழுதவில்லை என்ற மனக்குறை எனக்கு இருந்தது. எனவே பெரிய பரந்தன் வரலாற்றை ஒரு கதை வடிவில் எழுதி மூன்று கிராம…

    • 42 replies
    • 10k views
  25. அந்தரிப்பு கார்த்திக் பாலசுப்ரமணியன் ‘க்ளிங்’ என்ற ஓசையெழ வந்து நின்ற மின்னஞ்சலைத் திறந்து பார்த்த மீராவுக்கு ஒரு நொடி தூக்கிவாரிப் போட்டது. படம் ஓடிக்கொண்டிருக்க கிடைத்த சின்ன இடைவெளியில் மொபைலை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது இது வழக்கமாகிவிட்டது. பத்து நிமிடத்துக்கு ஒருமுறை வாட்ஸப்பிலோ பேஸ்புக்கிலோ ஏதாவது புதிய செய்தியோ பதிவோ வந்திருக்கிறதா என்று பார்ப்பது ஓர் அனிச்சைச் செயலைப் போல் நிகழ்கிறது. சனிக்கிழமை மதியப் பொழுது ஏதாவது படம் பார்க்கலாம் என்று பரத் வம்படியாய் இழுத்து உட்கார வைத்துவிட்டான். அச்சுக்குட்டியும் இம்முறை அவனோடு சேர்ந்துகொண்டாள். கவனம் சிதறாமல் முழுதாக ஒரு படத்தை இரண்டு மணி நேரம் அமர்ந்து பார்ப்பதெல்லாம் இப்போது அத்தனை எளிதாக இருப்பதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.