விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
'கிரிக்கெட்டை மேம்படுத்த வேண்டும்' வா.கிருஸ்ணா கிழக்கு மாகாணத்தில் விளையாட்டு மைதானங்களைப் புனரமைத்து கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக, இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்தார். மட்டக்களப்பு சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25வது ஆண்டு நிறைவினையொட்டிய நிகழ்வு, கடந்த வெள்ளிக்கிழமை (20) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சனத் ஜெயசூரியவுக்கு, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 824 views
-
-
தர்சினி சிவலிங்கத்தினால்... ஆசிய கிண்ணத்தை வென்ற, சிங்களம்... அவரை புறக்கணித்தது. சிங்களவன் இப்படத்தை முகநூல்களில் பகிர்கிறான் என்றால் எங்கட தமிழருக்கு எங்கே போய்விட்டது அறிவு ? தர்சினி சிவலிங்கம் இல்லாவிடில் இந்த சிறீலங்கா அணியினால் காலிறுதி போட்டிக்கேனும் சென்றிருக்கமுடியாது . கடந்த தடவையும் ஆசிய கிண்ணத்தை வென்றது தர்சினி சிவலிங்கத்தினாலேயே . இம்முறையும் அவரில்லாமல் கிண்ணத்தை வென்றே இருக்கமுடியாது . நூற்றுக்கு 98 வீதமான கோல்களை அவரே போட்டிருந்தார் . தர்சினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று அவுஸ்ரேலியாவிலுள்ள பிரபல கழகமொன்றுக்கு விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் சிறீலங்கா அணி அனைத்துப்போட்டிகளிலும் படுதோல்வியடைந்துகொண்டிருந்தது .இ…
-
- 1 reply
- 554 views
- 1 follower
-
-
``எனது முடிவைப் புரிந்துகொள்ளுங்கள்!” ரசிகர்களுக்கு ரொனால்டோ உருக்கமான கடிதம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து உலகில் தவிர்க்க முடியாத பெயர். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவரின் கால்பந்தாட்ட திறமைக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த உலகக்கோப்பையிலும் அவரின் விளையாட்டை நாடுகள் கடந்து ரசித்தனர். உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையில் மிக முக்கிய முடிவு ஒன்றை அறிவித்தார். அதாவது கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ, இனி யுவெண்டஸ் கிளப் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது ரியல் மாட்ரிட் ரசிகர்களுக்கு பெரு…
-
- 1 reply
- 733 views
-
-
``ஏன் தடுமாறினேன்னு எனக்கே தெரியலை..!'' - பங்களாதேஷ் போட்டி பரபரப்பு சொல்லும் விஜய் ஷங்கர் #VikatanExclusive அந்தக் கடைசி பாலில் தினேஷ் கார்த்திக் மட்டும் சிக்ஸர் அடிக்கவில்லையென்றால், இந்திய ரசிகர்களிடம் சிக்கி படாதபாடுபட்டிருப்பார் தமிழத்தின் விஜய் ஷங்கர். கடைசி ஓவரில் ஒரு பெளண்டரி அடித்திருந்தாலும், 18-வது ஓவரில் தொடந்து நான்கு பந்துகளில் ரன் அடிக்காமல்விட்டதுதான் விஜய் ஷங்கர் மீது வைக்கப்படும் விமர்சனம். `பங்களாதேஷ் மேட்ச்சில் நடந்தது என்ன?' - விஜய் ஷங்கரிடம் பேசினேன். ``இந்தியாவுக்காக ஆடும் முதல் சீரிஸ். இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக பேட்டிங் ஆடும் முதல் வாய்ப்பு. மிகவும் பதற்றமாக இருந்ததா?'' ``நிச்சயமா இல்லை. நான் மைதானத…
-
- 0 replies
- 717 views
-
-
``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ) ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 போட்டியின்போது நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சிக்ஸருக்கு விளாசிய பந்தை ஒற்றைக் கையில் பிடித்த பல்கலைக்கழக மாணவருக்கு 50,000 நியூசிலாந்து டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3 நாடுகள் டி20 தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் முக்கியமான லீக் சுற்றுப் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி மார்டின் கப்திலின் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்…
-
- 0 replies
- 446 views
-
-
`எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த மொழி பேசினாலும் தமிழர் என்ற உணர்வுதான் தமிழர்களுக்கான தனி அடையாளமாக இருக்கும்' என்பதை தனது ட்விட்டர் பதிவு மூலம் நிரூபித்துள்ளார் இந்திய அணியின் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி என்றதுமே நினைவுக்கு வரும் முதன்மையான முகங்களில் மிதாலி ராஜும் ஒருவர். 20 ஆண்டுகளாக கிரிக்கெட் அணியில் இருந்த ஒரே பெண். 200 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். சில தினங்களுக்கு முன் நடைபெற்ற, மகளிர் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. இதற்காக…
-
- 2 replies
- 796 views
-
-
கால்பந்து ரசிகர்களுக்கு இதைவிட பெரிய சந்தோஷம் தேவையில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ தனி ஆளாக ஆட்சிபுரியும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பெரிய ஆனந்தம் என்ன இருந்துவிடப் போகிறது? உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே, அதுவும் ஸ்பெயினுக்கு எதிராக, தான் யார் என்பதை நிரூபித்துள்ளார் ரொனால்டோ! இந்த ஆட்டத்தை போர்ச்சுகல் vs ஸ்பெயின் என்று ஃபிஃபாவின் ரெக்கார்டுகள் சொல்லும். ஆனால், இதை ரொனால்டோ vs ஸ்பெயின் என்றுதான் வரலாறு சொல்லும். உலகக் கோப்பை அட்டவணை அறிவ…
-
- 0 replies
- 736 views
-
-
`18 ஆண்டுகள் ஆகிவிட்டன'- 2019 க்குப் பிறகு ஓய்வை அறிவிக்கிறார் யுவராஜ் சிங் ``2019 உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவேன்'' என இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 2011ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார் யுவராஜ் சிங். 2011 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருது பெற்று அசத்திய இவர் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இதனால் இந்திய அணியில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுஇருக்கிறது. தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் அவரது ஹோம்டவுன் பஞ்சாப் அணிக்காக ஆடிவருகிறார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அடுத்து இந்திய…
-
- 0 replies
- 422 views
-
-
`2019 உலகக்கோப்பைக்குப் பின் ஓய்வு?' - என்ன சொல்கிறார் டேல் ஸ்டெயின் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்குப் பின் தான் ஓய்வு பெறப்போவதாக தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார். தனது வேகப்பந்துவீச்சால் பல்வேறு அணிகளைத் திணறடித்தவர் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின். 2004-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், தொடர்ந்து தனது திறமையை நிரூபிந்ததால் ஒருநாள், டி20 போட்டிகளிலும் இடம்பெற்றார். வேகத்துடன் கூடிய ஸ்விங் பந்துவீச்சால் எதிரணி வீரர்களைப் பலமுறை இவர் கலங்கடித்தார். ஒருகட்டத்தில் இவரும், மோர்னே மார்கலும் தென்னாப்பிரிக்காவை நம்பர் ஒன் அந்தஸ்துக்கு …
-
- 0 replies
- 355 views
-
-
பாகிஸ்தான் 308 ரன்கள் எடுத்து வங்கதேசத்தை 1 ரன் கூட எடுக்கவிடாமல் ஆல்- அவுட் செய்ய வேண்டும். 350 ரன்கள் எடுத்தால் 311 ரன்களிலும் 400 ரன்கள் எடுத்தால் 316 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற வேண்டும்.... உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்று விட்டன. நான்காவது அணிக்கான போட்டியில் நியூசிலாந்து அணி முன்னணியில் உள்ளது. 9 ஆட்டங்களில் 11 புள்ளிகளை நியூசிலாந்து அணி பெற்றுள்ளது. இந்த அணியின் நெட் ரன் ரேட் +0.175 ஆக உள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் 8 ஆட்டங்களில் விளையாடி 9 புள்ளிகளை ஈட்டியுள்ளது. நெட் ரன் ரேட் -0.792 என உள்ளது. இதனால், பாகிஸ்தான் அணியின் அரையிறுதிக் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது…
-
- 0 replies
- 697 views
-
-
`64 பவுண்டரிகள்; 7 சிக்ஸர்கள்!’ - ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 490 ரன்கள் குவித்த நியூசிலாந்து அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. Photo Credit: Twitter/ICC அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸை கேப்டன் சூஸே பேட்ஸ் மற்றும் ஜெஸ் வாட்கின் ஆகியோர் தொடங்கினர். அயர்லாந்து பந்துவீச்சாளர்களை ஆரம்பம் முதலே பதம்பார்த்த இந்த இணை, முதல் விக்கெட்டுக்கு 18.5 ஓவர்களில் 172 ரன்கள் சேர்த்தது. வாட்கின் 59 பந்துகளில…
-
- 0 replies
- 514 views
-
-
`7 ஓவரில் 154 ரன்கள்’’ - 20 பந்துகளில் சதமடித்து மிரட்டிய சாஹா! மேற்குவங்க உள்ளூர் டி20 தொடரில் மோஹுன் பாகன் அணிக்காக விளையாடிய ரித்திமான் சாஹா, 20 பந்துகளில் சதமடித்து அசத்தினார். Photo Credit: Twitter/Mohun_Bagan ஜே.சி. முகர்ஜி கோப்பைக்கான உள்ளூர் டி20 தொடர் மேற்குவங்க மாநிலத்தில் நடந்து வருகிறது. அந்தத் தொடரின் லீக் போட்டி ஒன்றில் மோஹூன் பாகன் அணியும், பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ் அணியும் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் இலக்கை நோக்கிக் களமிறங்கிய மோஹூன் பாகன் …
-
- 0 replies
- 565 views
-
-
`எப்படி இருக்கீங்க?!’ - கொஞ்சும் தமிழில் மகள் கேட்ட கேள்விக்கு தோனி பதில் தோனி, தனது மகளுடன் தமிழில் உரையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள தோனி, தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். அவ்வப்போது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் சத்தீஸ்கரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்த நினைவலைகளைப் பகிர்ந்திருந்தார். யுவராஜுக்கு முன்னதாகத் தாம் களமிறங்கியது ஏன் என்பது குறித்தும் அவர் பேசியிருந்தார். ஓய்வு நாள்களில் தனது மகள் ஸிவாவுடன் இருப்பது போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட…
-
- 0 replies
- 878 views
-
-
`ஒரு மணி நேரத்தில் 2 ஹாட்ரிக்!’ - நியூஸிலாந்து உள்ளூர் தொடரில் சாதனை நியூஸிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில், ஒரு மணி நேரத்தில் 2 ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை நிகழ்த்தப்பட்டது. Photo Credit: Black Caps நியூஸிலாந்தில் ப்ளங்கிட் ஷீல்டு கோப்பைக்கான உள்ளூர் தொடர் நடந்துவருகிறது. இதில், வெலிங்டன் ஃபையர் பேர்டு மற்றும் கேன்டர்பெர்ரி அணிகள் மோதிய போட்டி, ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில், வெலிங்டன் அணியின் லோகன் வான் பீக், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உள்ளூர் தொடரில், அவரின் முதல் ஹாட்ரிக் விக்கெட் இதுவாகும். அவர், 5 விக்கெட்டுகளை வீழ்த்த, கேன்டர்பெர்ரி அணி 53 ரன்களில் ஆட்டமிழந்தது…
-
- 0 replies
- 369 views
-
-
`கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து' - ரஷித் கானுக்கு பாராட்டு தெரிவித்த ஆப்கன் அதிபர்! கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து ரஷீத் கான் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபையர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக இருந்தவர் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான். ஸ்பின்னர் என்ற பார்வையில் ஐபிஎல்லில் நுழைந்த ரஷீத் கான் தான் ஒரு ஆல் ரவுண்டர் என்பதனை உலகுக்குக் காட்ட பல போட்டிகளில் முயற்சி செய்தார். ஆனால், அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து போரடிய அவருக்கு, நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டி கைகொடுத்தது. ந…
-
- 3 replies
- 906 views
-
-
`கூல்’ கேப்டன் தோனி கோபப்பட்ட`ஆங்ரி பேர்ட்' தருணங்கள்! ஆக்ரோஷ ஆக்ஷன்கள் எல்லாம் தன் அகராதியிலேயே இல்லை என்பதுதான் தோனியின் கேரக்டர். கடந்த 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், மகேந்திர சிங் தோனியின் அணுகுமுறை என்பது புத்திக்கூர்மைகொண்ட ஒரு புல்லட் புரூஃப் ஜாக்கெட் போன்று தக்க பாதுகாப்பானதாக இருக்கும். ஆம், எதிரணிகளின் ஸ்லெட்ஜிங் பிரெஷர் பூச்சாண்டி எல்லாவற்றையும் பில்டப் இல்லாமல் ஹேண்டில் பண்ணுவதுதான் தோனியின் சிறப்பம்சம்! அதேசமயம், அவ்வப்போது சிங்கத்தைச் சீண்டிப்பார்க்கும் சில வீரர்களை தண்டிக்கவும் தவறியதில்லை. `தோனியின் `கோபம்'ங்கிறது வேலூர் வெயில்ல குளிர்க்காய்ச்சல் வருவது மாதிரி ஒவ்வொருத்தரையும் வித்தியாசமா டீல் செய்யும்.' 2016-…
-
- 0 replies
- 608 views
-
-
`தொடர்ச்சியாக சாதிப்பது எப்படி?' - ரகசியம் பகிர்கிறார் புவ்னேஷ்வர் குமார் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் குமார் பெற்றார். போட்டி முடிந்த பின்னர் தன் வெற்றிக்கான ரகசியம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான காரணத்தைப் பற்றி புவ்னேஷ்வர் குமார், `அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருப்பது என் இயல்பு. அதை நான் எப்போதும் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. நான் பயிற்சி ச…
-
- 0 replies
- 784 views
-
-
`பார்சிலோனா`அணியிலிருந்து விலக மெஸ்ஸி முடிவு! August 26, 2020 பிரபல காற்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) தனது ஆஸ்தான அணியான பார்சிலோனாவிலிருந்து (Barcelona) விலக விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய காற்பந்தாட்தத் தொடரில் மெஸ்ஸி தலைமையில் களமிறங்கிய பார்சிலோனா அணி காலிறுதிப் போட்டியில் பேயர்ன் முனிச்சிடம் 8க்கு 2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்நிலையில், இவ் வார இறுதியில் நடைபெறவுள்ள கொரோனா பரிசோதனைக்கு தான் வரப்போவதில்லை எனவும், அணியிலிருந்து உடனடியாக விலக விரும்புவதாகவும் பார்சிலோனா அணியின் நிர்வாகத்திடம், மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆலோசித்து முடிவ…
-
- 1 reply
- 833 views
-
-
`மழையால் ஆட்டம் பாதிப்பு!’ - ஸ்காட்லாந்தை வீழ்த்தி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் #WIvSCO உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் சூப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை, 5 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. Photo Credit: Twitter/cricketworldcup உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டி ஒன்றில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதின. ஹராரே மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. போட்டியின் முதல் பந்திலேயே கிறிஸ் கெயில் ஆ…
-
- 0 replies
- 259 views
-
-
`முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை!’ - பி.சி.சி.ஐ விளக்கம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை எனப் பி.சி.சி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விளக்கமளித்துள்ளது. முகமது ஷமிமீது மேட்ச் பிக்ஸிங் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரின் மனைவி ஹாசின் ஜஹான் முன்வைத்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்மணி மூலமாக முகமது பாய் என்பவரிடமிருந்து ஷமி பணம் பெற்றதாகவும் ஜஹான் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாகக் கொல்கத்தா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து வீரர்களுக்கான வருடாந்தர ஒப்பந்தப் பட்டியலில் ஷமியின் பெயரை பி.சி.சி.ஐ…
-
- 0 replies
- 369 views
-
-
`மைதானத்துக்கு வெளியிலும் டிகாக்கிடம் வம்பிழுக்கும் வார்னர்!’ - வைரல் வீடியோ தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்டின் 4-ம் நாளில் டேவிட் வார்னர் மற்றும் குயிண்டன் டிகாக் இடையிலான வார்த்தைப் போர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. Photo Credit: AP டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் நடந்துவரும் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 351 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களும் எடுத்தன. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 227 ரன்களில் ஆட்டமிழந்தது. 417 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக…
-
- 0 replies
- 455 views
-
-
`ருவென்ரி - 20' உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் தென் ஆபிரிக்காவில் இனத்துவேஷ பிரசாரம் [04 - October - 2007] [Font Size - A - A - A] *புதிய சர்ச்சை கிளம்புகிறது `ருவென்ரி-20' தொடரில் சாம்பியன் கிண்ணம் வென்ற இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்த இந்திய வம்சாவளியினர் குறித்து தென் ஆபிரிக்க பத்திரிகையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இவர்களது நாட்டுப் பற்று குறித்து கேள்வி எழுப்பியுள்ளதால், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. சமீபத்தில் தென் ஆபிரிக்காவில் முதலாவது `ருவென்ரி-20' உலகக் கிண்ணத் தொடர் நடந்தது. இதில் அபாரமாக ஆடிய இந்திய வீரர்கள், முன்னணி அணிகளான தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை வென்றனர். `ருவென்ரி - 20' கிண்ணத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
`வாழ்நாளின் மிகப்பெரிய தவறை இழைத்து விட்டேன்!’ - செய்தியாளர் சந்திப்பில் ஸ்மித் உருக்கம் ஓராண்டுத் தடை, இனி ஆஸ்திரேலிய அணிக்குக் கேப்டன் கிடையாது, ஐ.பி.எல் அணிகளுக்கும் கேப்டன் ஆக முடியாது எனப் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் இருவரும் வறுபட்டுக்கொண்டிருக்கின்றனர். Photo: Twitter/ICC தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் மஞ்சள் நிற அட்டையை வைத்து பந்தைச் சேதப்படுத்தினார் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் பான் கிராஃப்ட். இந்தச் சூழ்ச்சி வெளியே தெரிய ஆரம்பித்தது. இதில், பான் கிராஃப்ட்டுடன் வார்னர், ஸ்மித் இருவரும் கூட்டுச்சதி செய்தது தெரிய வரவே, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஒட்டு…
-
- 2 replies
- 810 views
-
-
`விடைபெறுகிறது தென்னாப்பிரிக்க வேகம்' - மோர்னே மார்கல் அதிர்ச்சி! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாகத் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மார்கல் அறிவித்துள்ளார். தனது வேகப்பந்துவீச்சால் பல்வேறு அணிகளைத் திணறடித்தவர் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மார்கல். 2006-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், பிற்காலத்தில் ஸ்டெய்னுடன் கூட்டணி அமைத்து எதிரணிகளைத் திணறடித்தார். கடந்த 12 வருடங்களாக வெற்றிகரமான பௌலராக இருந்த இவர், இதுவரை 83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 294 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மூன்றுவிதமான போட்டிகளிலும் சேர்த்து 529 வீழ்த்தியுள்ள இவர் தற்போது தனது ஓய்…
-
- 0 replies
- 409 views
-
-
`விராட் கோலி வேற லெவல்’ - சங்ககரா சொல்லும் ரகசியம்! இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் குறித்து இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்ககரா மனம் திறந்துள்ளார். டெல்லி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 287 பந்துகளைச் சந்தித்த விராட் கோலி, 243 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், நடப்பு 2017-ம் ஆண்டில் அனைத்துவிதமான ஃபார்மட்டுகளிலும் சேர்த்து விராட் கோலி சேர்த்த ரன்கள் 2,818 ஆனது. இந்த வகையில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் சங்ககாரா 2,868 ரன்கள் (2014) மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2,833 (2005) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றனர். டெஸ்ட் தொடருக்குப் பிந்தைய ஒருநாள் மற்று…
-
- 0 replies
- 474 views
-