விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி உலகக்கோப்பைக்கு தயாராகும் இலங்கை அணி 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தயார் செய்யும் வகையில்இ கிரிக்கெட் வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி அவர்களின் திறன்இ உடல்தகுதிஇ காயம் ஏற்படாமல் தடுத்துல் போன்ற பணிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணியில் வீரர்களுக்காக செய்யப்பட்ட இந்த அதிநவீன முறை இப்போது இலங்கை வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ளது இதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் 75 ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ஜிபிஎஸ் கருவி இலங்கை வீரர்களின் முதுகுப்பகுதியில் பொ…
-
- 2 replies
- 604 views
-
-
ஒன்பது வயதில் உலக சாதனைகள் படைத்த கனேடிய சிறுமி Share கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். மமாதி வினோத் என்ற ஒன்பது வயது சிறுமியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். சாகச வளைய நடனத்தில் இந்தச் சிறுமி மூன்று பிரிவுகளில் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் பிரித்தானியாவில் வைத்து இந்த சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்துள்ளார். வெவ்வேறு நிலைகளில் சாகச வளையத்தில் சுழற்றுவதன் மூலம் இந்த சாதனையை குறித்த சிறுமி படைத்துள…
-
- 0 replies
- 446 views
-
-
முக்கியக் கட்டத்தில் தவறு செய்த ஆனந்த் மீண்டும் கார்ல்சனிடம் தோல்வி ஜெர்மனியில் நடைபெறும் கிரென்கா கிளாசிக் செஸ் போட்டித் தொடர் 4-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வி அடைந்தார். வெள்ளைக்காய்களுடன் ஆடிய ஆனந்த் இந்தத் தோல்வியினால் 6-வது இடத்தில் உள்ளார். இதனால் மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஆனந்த். இந்த முறை கார்ல்சன், ஆனந்தின் உத்திகளை முன்னமேயே கணித்து விட்டது போலவே இருந்தது. ஆனந்தின் காய்கள் உள்ளே நுழையாதவாறு கல்கோட்டைத் தடுப்பணை அமைத்தார். தொடக்கத்தில் ஆனந்துக்கு அனுகூலமான நிலைமைகள் இருந்தது. செஸ் போர்டின் மையப்பகுதி காய்கள் நகர முடியாதவாறு இறுக்கமாக அமைந்தது. ஆன…
-
- 2 replies
- 630 views
-
-
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விடவும் பெரியதாக இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது. இந்திய ரூபாவில் சுமார் 700 கோடி செலவில் கட்டப்படும் இம் மைதானம் குறித்து கூறியுள்ள குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவர் பரிமள் நாத்வானி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் கனவு திட்டம். இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டி கண்டுகளிக்க வசதி இருக்கும். என்று தெரிவித்துள்ளார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட பெரிய இந்த மைதானத்தி…
-
- 0 replies
- 679 views
-
-
பார்சிலோனா அணி சாம்பியன்: ‘லா லிகா’ கால்பந்தில் அசத்தல் மாட்ரிட்: ‘லா லிகா’ கால்பந்து தொடரில் மெஸ்சி, நெய்மர் உள்ளிட்டோர் அடங்கிய பார்சிலோனா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடைசி லீக் போட்டியில் பார்சிலோனா அணி 1–0 என அத்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது. ஸ்பெயினில் உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்ற ‘லா லிகா’ கால்பந்து தொடர் நடந்தது. மாட்ரிட் நகரில் நடந்த கடைசி லீக் போட்டியில் பார்சிலோனா, அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட பார்சிலோனா அணிக்கு 65வது நிமிடத்தில் லியோனல் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய அத்லெடிகோ மாட்ரிட் அணியினரால் ஒரு கோல் க…
-
- 0 replies
- 479 views
-
-
சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி தோல்வி! சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்றுத் தொடங்கின. இதில் இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் முதல் ஆட்டத்திலேயே பரிதாப தோல்வியை சந்தித்துள்ளன. 'பி ' பிரிவில் இடம் பெற்றுள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணி நேற்று பி.எஸ்.வி என்டோவன் அணியை எதிர்கொண்டது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிர்ச்சி தோல்வி கண்டது. மற்றொரு ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் சக்தர் டொனாஸ்க் அணியை வீழ்த்தியது. கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். கரீம் பென்ஜமா தன் பங்குக்கு ஒரு கோல் அடித்தார். இங்கிலாந்தை சேர்ந்த ம…
-
- 0 replies
- 174 views
-
-
மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், தான் தற்கொலை செய்து கொள்ள விரும்பியதாக அதிர்ச்சி அளிக்கும் விதமாக பேசியுள்ளார். உலக கிண்ண கிரிக்கெட் கடந்த 30ம் திகதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கடந்த ஜூன் 16ம் திகதி இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி வீரர்கள் விளையாடிய விதம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. குறிப்பாக போட்டியின் நடுவே பாகிஸ்தான் தலைவர் சர்பிராஸ் அகமது கொட்டாவி விட்டது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களும், முன்னாள் வீரர்களும் கடுமையாக சர்பிராசை வி…
-
- 0 replies
- 587 views
-
-
ஐரோப்பிய கிண்ண காற்பந்தாட்ட தெரிவுகாண் தொடர்-முதல் சுற்று ஐரோப்பிய கிண்ண காற்பந்தாட்ட தொடரின் தெரிவுகாண் போட்டிகளின் முதற்கட்டம் நிறைவடைந்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரின் முதற்கட்டப் போட்டிகள் கடந்த 14 ஆம் திகதி நிறைவுக்கு வந்தன. இதன் இரண்டாம் கட்டப்போட்டிகள் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளன. இறுதித் தொடர் அடுத்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பித்து ஜூலை 10 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. உலகக்கிண்ண தொடருக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய அணிகள் மிகப்பெரிய சர்வதேசத்தொடராக ஐரோப்பிய கிண்ண தொடரையே கருதுகின்றனர். உலகக்கிண்ண தொடருக்கும் இந்த தொடர் நல்லதொரு முன்னோடி தொடராக ஐரோப்பிய அணிகளுக்கு அமைந்துவிடுவதும் வழமை. …
-
- 0 replies
- 291 views
-
-
இலங்கை அணியில் நான்கு தமிழ் வீரர்கள் November 25, 2015 கெவின் பீற்றர்சன் கிரிக்கெட் பவுண்டேசனினால் நடத்தப்படும் துடுப்பாட்டத் தொடரில் பங்குபற்றும் இலங்கை அணியில் நான்கு தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த தொடர் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 3ஆம் திகதி வரை டுபாயில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான அணி நேற்று முன்தினம் டுபாய் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. நடப்பு வருடத்தில் வடமாகாணத்தில் இடம் பெற்ற முரளி கிண்ணத் தொடரில் சிறந்த பெறுபேற்று வெளிப்படுத்திய 12 வீரர்கள் ஒரு அணியாகத் தெரிவுசெய்யப்பட்டனர். இதில் வவுனியா மாவட்ட இணைந்த அணியில் விளையாடிய கிரிதரன், சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியில் விளையாடிய …
-
- 9 replies
- 1.1k views
-
-
மஹேலவின் அபார துடுப்பாட்டத்தால் 'சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ்' வெற்றி நியூஸிலாந்தில் நடைபெற்றுவரும் ஜோர்ஜி ஸ்பை சுப்பர் ஸ்மேஷ் கிரிக்கெட் போட்டியில் நொதர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸுக்கு எதிரான போட்டியில் இலங்கையின் ஓய்வு பெற்ற வீரர் மஹேல ஜயவர்தன குவித்த அதிரடி அரைச் சதம் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ் அணிக்கு 8 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தது. நொதர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து பெற்ற 152 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ் அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட்ளை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. மஹேல ஜயவர்தன 59…
-
- 0 replies
- 769 views
-
-
தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படும் கால்பந்து வீரர்கள்! எல்சல்வாடார் அணிக்காக 83 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ள அல்ஃபிரடோ பாச்சிகோ அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தலைநகர் சான் சல்வாடர் பகுதியில் இருந்து 76 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, சாந்தா அனா என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அல்ஃபிரேடோவுடன் இந்த சம்பவம் நடந்த போது இரு நண்பர்களும் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. எல்சல்வாடார் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் வரை 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாச்சிகோ எல்சல்வாடார் அணிக்காக 83 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த நாட்டு அணிக்க…
-
- 0 replies
- 531 views
-
-
சிஎஸ்கே-வை எப்படி மறக்க முடியும்? - தோனி உணர்ச்சிகரம் ஆர்.பி. சஞ்சய் கோயெங்கா குழும தலைவர் சஞ்ஜீவ் கோயெங்கா, ரைசிங் புனே ஜெயண்ட் கேப்டன் தோனி. புதிய சீருடை அறிமுக விழாவில். | படம்: சந்தீப் சக்சேனா. எப்போதும் அமைதியாகவும், நிதானமாகவும் பேசும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய கேள்வி எழுப்பப்பட்டவுடன் சற்றே உணர்ச்சிவயப்பட்டார். புதுடெல்லியில் புதிதாக தலைமை தாங்கவுள்ள ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஐபிஎல் சீருடை அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி கேட்டவுடன் சற்றே உணர்ச்சிவசப்பட்டார். “நான் (சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து) நகர்ந்து சென்று விட்டேன் என்று நான் கூறினால் அது பொய்யாகவே இரு…
-
- 1 reply
- 664 views
-
-
பேசுபொருளாக மாறியிருக்கும் குசல் பெரேராவின் நீக்கம் By Mohamed Azarudeen - Photo - Getty Images இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்தாக ஜிம்பாப்வேயிற்குச் சென்று அந்நாட்டு அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கின்றது. இந்த டெஸ்ட் தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் குழாம் இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) நேற்று (14) அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த குழாத்திற்குள் குசல் ஜனித் பெரேரா உள்ளடக்கப்படாமல் போனது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கின்றது. கடந்த ஆண்டு (2019) இலங்கை கிரிக்கெட் அணி வெற்றிக்காக தடுமாறிக…
-
- 0 replies
- 504 views
-
-
கையிலிருந்து நழுவியது கோப்பை தோல்வி அதிர்ச்சியில் இந்திய அணி வீரர்கள். லெண்டில் சிம்மன்ஸ் இந்தியா வுக்கு வந்து இறங்கி இரண்டு நாட்கள்தான் ஆகின்றன. பெரிய அளவில் பயிற்சியோ முன்தயாரிப்போ இல்லாமல் அவர் களம் இறங்கி னார். அவர் இறங்கிய களம் ஒரு விதத்தில் அவரது ‘சொந்த’ஊர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் அவருக்கு மும்பையின் ஆடுகளம் மிகவும் பரிச்சயமானது. அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்லும் மார்லன் சாமுவேல்ஸும் விரைவிலேயே ஆட்டமிழந்த பிறகு அணியின் நம்பிக்கையை ஜான்சன் சார்லஸுடன் இணைந்து புதுப்பித்தார் சிம்மன்ஸ். தான் ஆடிய முதல் ஆட்டத்திலேயே அணியை வெற்றிபெறச்செய்து இறுதி ஆட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அஜிங்க…
-
- 1 reply
- 650 views
-
-
நான்காமிடத்துக்கு முன்னேறினார் செளதி சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு நியூசிலாந்தின் டிம் செளதி முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே, இன்று வெளியிடப்பட்ட தரப்படுத்தலில் ஆறாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தை டிம் செளதி அடைந்துள்ளார். இதேவேளை, குறித்த டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா, 11ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை …
-
- 0 replies
- 394 views
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் செனுரன் முத்துசாமி கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 11 ஆகஸ்ட் 2025 இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் பல்வேறு வெளிநாட்டு அணிகளுக்காக கடந்த காலங்களில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர், தற்போதும் சிலர் விளையாடி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தை வேராகக் கொண்டு வெளிநாட்டு அணிகளுக்காக கிரிக்கெட் விளையாடியது மிகச் சிலர்தான். கடந்த காலங்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக ஆல்வின் ஐசக் காளிச்சரண், மகிந்திரா நாகமுத்து, சிவ்நரேன் சந்தர்பால் உள்ளிட்ட சில வீரர்கள் விளையாடியுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியில் தமிழர் தென் ஆப்ரிக்க அணியில் இதற்கு முன் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஹசிம் ஆம்லா, க…
-
- 1 reply
- 245 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 05 Sep, 2025 | 02:33 PM (நெவில் அன்தனி) மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷ் தொடர்ச்சியாக பந்துவீச்சில் பிரகாசிக்க, மேற்கிந்தியத் தீவுகளுடனான 3ஆவது போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 7 போட்டிகளைக் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது. இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஆகாஷ், இந்தப் போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய சாமிக்க சமுதித…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Duif du Toit/Gallo Images/Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் மணி நேரங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் இன்று அரைசதம் அடித்திருக்கிறார். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து ஏரியாக்களிலும் ஜொலித்த அவருக்கு இன்றோடு ஐம்பது வயது ஆகிறது. சுமார் 19 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் விளையாடிய அவரது பயணத்தை எண்களின் வாயிலாக அலசுவோம். ஏனெனில், "நம்பர்களை வைத்துப் பார்த்தால் ஒரு முழுமையான கிரிக்கெட்டர் என்பதற்கு மிக அருகில் வருவது காலிஸ்தான்" என்று டிராவிட்டே கூறியிருக்கிறார்! பட மூலாதாரம், Cameron Spencer/Getty Images டெஸ்ட் கிரிக்கெட்டில் காலிஸ் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் காலிஸ், 55…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
நினைவுப் பொருட்களை ஏலமிடுகிறார் பீலே பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவனான பீலே, தனது விளையாட்டுக் காலத்தில் கிடைக்கப்பெற்ற நினைவுப் பொருட்களை ஏலத்தில் விடுவதற்கு முடிவுசெய்துள்ளார். இந்த ஏலம், இலண்டனில் இம்மாதம் இடம்பெறவுள்ளதோடு, மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது. 15 வயதில் சான்டோஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டதிலிருந்து, தற்போது வரை அவருக்குக் கிடைத்த பொருட்களையே அவர் ஏலமிடவுள்ளார். இதன்படி, 6 தசாப்தங்களாக அவரிடம் சேர்ந்த பொருட்களே, ஏலமிடப்படவுள்ளன. மூன்று தடவைகள் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்ற ஒரேயொரு வீரரான பீலே, தனக்குக் கிடைத்தவற்றைப் பேணிப் பாதுகாப்பது கடினமானது எனவும், அதை விட அவற்றை உலகத்துடன் பகிர்வதுடன், தன…
-
- 1 reply
- 434 views
-
-
நான் பார்க்காத கஷ்டங்களா..? கண்டிப்பாக றி-20 உலக கோப்பை அணியில் இடம்பிடிப்பேன்.. சீனியர் வீரர் நம்பிக்கை. 2004ம் ஆண்டே இந்திய அணியில் அறிமுகமாகிவிட்ட தினேஷ் கார்த்திக்கால், தோனி விக்கெட் கீப்பராக உருவெடுத்ததால் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடிக்க முடியவில்லை. அணியில் எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாகவே இருந்தார் தினேஷ் கார்த்திக். இந்திய கிரிக்கெட்டில் அவரும் ஒரு வீரராக இருந்தாரே தவிர, அவரால் இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், நிதாஹஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் கடைசி 2 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. அந்த போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு த்ர…
-
- 1 reply
- 819 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார் அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 59 ஆகும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சியின் கிரிக்கெட் வர்ணனைக் குழுவில் ஒருவராக பணியாற்றும் ஜோன்ஸ் உயிரிழந்த தருணம் மும்பையில் உள்ள ஏழு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். டீன் ஜோன்ஸ் ஒரு தீவிர கிரிக்கெட் ஆய்வாளராகவும் வார்ணனையாளராகவும் இருந்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடம்பெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2020 போட்டித் தொடரின் வர்ணனைக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். ஜோன்ஸ் இந்திய ஊடகங்களில் பிரபலமான நபராக அறியப்பட்டுள்ள நிலை…
-
- 2 replies
- 869 views
-
-
இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமனம் தென்னாபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் உபாதை காரணமாக நாடு திரும்பியதை அடுத்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை எதிர்கொள்ளவுள்ளது. தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளதுடன், அதற்கு முன்னதாக நாளைய தினம் கடைசி சர்வதேச இருபதுக்கு 20 போட்டி கேப்டவுனில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது சர்வதே…
-
- 16 replies
- 1.2k views
-
-
ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளாட்டினம் விருது வழங்கல் விழா: வட மாகாண செயற்றிட்டம் ஆரம்பம் ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளாட்டினம் விருது வழங்கல் விழாவிற்கான ஊக்குவிப்பு செயற்றிட்டத்தின் வட மாகாணத்திற்கான செயற்றிட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. சிறந்த வீர, வீராங்கனைகளின் ஆற்றல்களை கௌரவிப்பதற்காக இலத்திரனியல் ஊடகமொன்று ஏற்பாடு செய்த முதலாவது விருது வழங்கல் விழாவாக ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளாட்டினம் விருது வழங்கல் விழா காணப்படுகின்றது. இதன்படி, இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த விருது வழங்கல் விழா யாழ்ப்பாணம் – வேம்படி மத்திய மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த செயற்திட்டத்தில் வட மாகாணத்தின் நட்சத்திர வீராங்கனையாக அனிதா ஜெகதீஸ்வரன் தெரிவு ச…
-
- 0 replies
- 291 views
-
-
அவுஸ்திரேலியாவிற்குப் பயணமாகின்றார் இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி Tharjini Sivalingam (Seylan Bank) - Best Shooter(Mercantile Netball League 2016) இலங்கையின் வலைபந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி அவுஸ்திரேலியாவின் முன்னனி கழக அணியான சிற்றி வெஸ்ட் ஃபெல்கொன் அணிக்கு விளையாடுவதற்காக ஆறு மாதகால ஒப்பந்த அடிப்படையில் நாளை (17.04.2017) அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகின்றார். யாழ்ப்பாணம் ஈவினையைப் பிறப்பிடமாகக் கொண்ட தர்ஜினி, தனது பள்ளிக்கல்வியை வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்ட இவர் அதனை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நுழைந்தார். அங்கு வலைப்பந்தாட்ட…
-
- 4 replies
- 1.3k views
-
-
இங்கே உள்ள கழகத்தின் பெயர்களை தெரிந்தவர்கள் அறியத்தருவீர்களா? சரியாக இடப்படாத பட இணைப்புக்கள் சரி செய்யப்பட்டுள்ளது.- யாழ்பாடி
-
- 0 replies
- 2.7k views
-