விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பாகிஸ்தான் செல்ல இருக்கும் தமிழ் மாணவன். ஆர்.கே.கெவின் (வயது 11) என்ற மாணவன் வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 6-ல் கல்வி கற்றுவருகின்றார் இவர் தேசிய ‘கிக் பாக்சிங்’ அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமாரின் பயிற்சியின் மூலம் தேசிய ரீதியில் பல பதக்கங்களை பெற்று சாதனை படைத்த மாணவன் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கெடுத்துவரும் குறித்த மாணவன் 2019 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தை பெற்று வவுனியாவிற்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். …
-
- 1 reply
- 603 views
-
-
சமநிலையில் முடிந்தது முதல் போட்டி இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வயின்றி முடிவுக்கு வந்துள்ளது. இவ் விரு அணிகளுக்கிடையேயான போட்டி கடந்த சனிக்கிழமை வெலிங்டகனில் ஆரம்பமானது. இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 282 ஓட்டங்களையும், நியூஸிலாந்து அணி 578 ஓட்டங்களையும் பெற்றது. இதன் பின்னர் 296 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடிய குசால் மெண்டிஸ் 116 ஓட்டத்துடனும், மெத்தியூஸ் 117 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது இலங்கை அணிக்கு வலு சேர்த்தனர். …
-
- 0 replies
- 603 views
-
-
கின்னஸ் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் December 27, 2015 இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வீரரான விராக் மேர் தொடர்ந்து 50 மணி நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா லத்துரை சேர்ந்த விராக் மேர், கர்வே நகரில் உள்ள மகாலட்சுமி மைதானத்தில் கடந்த 22ம் திகதி காலை 9.30 மணிக்கு தனது பயிற்சியை ஆரம்பித்தார். இடைவிடாமல் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட அவர் டிசம்பர் 24ம் திகதி காலை 9.30 மணி வரை துடுப்பெடுத்தாடினார். 48 மணி நேரம் பயிற்சி செய்த அவர் கூடுதலாக 2 மணி நேரம் பயிற்சி செய்து பயிற்சிக்காலத்தை 50 மணி நேரமாக நீட்டித்துள்ளார். ஐந்து மணி நேரம் இடைவிடா பயிற்சிக்கிடையில் 25 நிமிடங்கள் ஓய்வு எடுத்துள்ளார். மொத்தாக அவர் 50 மணி நேரம், …
-
- 0 replies
- 602 views
-
-
(ஹம்சப்பிரியா) யாழ்ப்பாணம் பிரிமியர் லீக் இருபது20 கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. யாழ். மாவட்டத்தின் கிரிக்கெட் கழகங்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் இந்தப் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குழு ஏ இல் கொக்குவில் சி.சி.சி. விளையாட்டுக் கழகம், மானிப்பாய் பரிஸ் விளையாட்டுக் கழகம், அரியாலை ஸ்ரான்லி விளையாட்டுக் கழகம், சுன்னாகம் ஸ்கந்தா விளையாட்டுக் கழகம், வண்ணார்பண்னை ஸ்ரீ காமாட்சியம்பாள் விளையாட்டுக் கழகம் ஆகியன இடம் பெற்றுள்ளன. குழு பி இல் யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழகம், தெல்லிப்பழை கிறாஸ் கொப்பேர்ஸ் விளை…
-
- 3 replies
- 602 views
-
-
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வென்றது பாகிஸ்தான் 2014-08-23 19:01:13 இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில்முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 65 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பெண்டரிகள் உட்பட 89ஓட்டங்களைம் மஹேல ஜயவர்தன 66 பந்துகளில் 63 ஓட்டங்களையும் பெற்றனர். அஷான் பிரியஞ்சன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 40 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர். …
-
- 6 replies
- 602 views
-
-
சச்சினின் 100 வது சதத்தைத் தடுத்ததால் கொலை மிரட்டல் வந்தது 100 வது சதத்தைத் தடுத்து, சச்சினை ஆட்டமிழக்கச் செய்ததால் எனக்கும் நடுவருக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன என இங்கிலாந்து முன்னாள் வீரர் டிம் பிரெஸ்னன் கூறியுள்ளார். 2011 இல் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 91 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார் சச்சின் டெண்டுல்கர். பிரெஸ்னன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் சச்சின் ஆட்டமிழந்ததாக கள நடுவர் ராட் டக்கர் அறிவித்தார். ஆனால் பந்து, லெக் ஸ்டம்பை உரசிச் செல்வதைத் தொலைக்காட்சிகளில் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். அந்த ஆட்டத்தில் சதம் அடித்திருந்தால் அது சச்சினின் 100 வது சதமாக இருந்திருக்கும். எனினும் 2012 மார்ச் மாதத்தில் பங்களாதேஷூக்கு…
-
- 0 replies
- 602 views
-
-
நெய்மரின் இடத்தை நிரப்பி, மெஸ்ஸியுடன் கைகோக்கும் அந்த வீரர் யார்? ஓர் அலசல்! பிரேசில் டாப் ஸ்டார் நெய்மர் பார்சிலோனா அணியிலிருந்து பி.எஸ்.ஜி (P.S.G) அணிக்குச் சென்றது வரலாறாகி விட்டது. டாப் ரேட்டட் பிளேயர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவது விவாதிக்க வேண்டிய விஷயமே என்றாலும், கால்பந்து உலகின் டிரான்ஸ்ஃபர் வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வீரர் அதிக தொகைக்கு வாங்கப்படுவது வாடிக்கைதான் எனும்போது, நெய்மர் 1,677 கோடி ரூபாய்க்கு (அதாவது 222 மில்லியன் யூரோக்கள்) பி.எஸ்.ஜி அணிக்கு மாறியது சரியா, தவறா என விவாதிப்பது வீண் வேலை. நெய்மரின் இடத்தை நிரப்புவதற்காக, அடுத்த வீரரைத் தேடும் பணியில் இறங்கிவிட்டது பார்சிலோனோ. நெய்மரின் இடத்தை நிரப்பப்போவது யார் எ…
-
- 0 replies
- 602 views
-
-
ஆசிய மெய்வல்லுனருக்கான தெரிவுப்போட்டிகள்: வடக்கின் நட்சத்திரம் புதிய இலங்கை சாதனை 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் கடற்படையின் கயந்திகா அபேரத்ன இலங்கை சாதனையைப் படைத்தார். இந்த சாதனைக்காக அவர் 02 நிமிடங்கள் மற்றும் 2.55 விநாடிகளை எடுத்துக்கொண்டார். வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 03.45 மீற்றருக்குத் தாவி புதிய இலங்கை சாதனையைப் புதுப்பித்தார். மகளிருக்கான முப்பாய்ச்சலில் விதுஷா லக்ஷானி மற்றுமொரு இலங்கை சாதனையை நிலைநாட்டினார். 13.67 மீற்றருக்கு தாவிய அவர் இந்த சாதனையைத் தன்வசப்படுத்தினார். இந்த சாதனைகளுடன் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கான தெரிவுப்போட்டிகள்…
-
- 1 reply
- 601 views
-
-
நடுவர் ஸ்டீவ் டேவிஸ் ஓய்வு அவுஸ்திரேலியா நடுவரான ஸ்டீவ் டேவிஸ் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 63 வயதான டேவிஸ் 25 வருடங்களாக நடுவராக கடமையாற்றியுள்ளார். நடைபெறவுள்ள, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 1992ஆம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இவர் நடுவராக அறிமுகமானார். 1997ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார். இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளிலும், 135 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 26 டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் ஸ்டீவ் டேவிஸ் கடமையாற்றியுள்ளா…
-
- 0 replies
- 601 views
-
-
36 வயதினிலே... : 26 வயது வீரர்களை விஞ்சும் திறன்; தோனிக்கு ரவி சாஸ்திரி புகழாரம்! ரவிசாஸ்திரி, தோனி. - படம். | விவேக் பெந்த்ரே. தன்னை விட 10 வயது இளம் வீரர்களைக் காட்டிலும் உடல் தகுதியிலும் சுறுசுறுப்பிலும் முன்னிலை வகிக்கிறார் தோனி என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டுமொரு முறை தோனிக்காக வாதாடியுள்ளார். எனவே தோனியை விமர்சிப்பவர்கள் அவர்கள் 36 வயதில் என்ன சாதித்தார்கள் என்பதைப் பார்க்கட்டும் என்கிறார் ரவிசாஸ்திரி. ரவிசாஸ்திரி இது குறித்து கூறியதாவது: நாங்கள் ஒன்றும் முட்டாள் அல்ல. கடந்த 30-40 ஆண்டுகளாக இந்த கிரிக்கெட்ட…
-
- 1 reply
- 601 views
-
-
செய்தித் துளிகள் பிரிமியர் பாட்மிண்டன் லீக்கில் சென்னை ஸ்மாஷர்ஸ், டெல்லி ஏஸர்ஸ் அணியை 4-3 என்ற கணக்கில் தோற்கடித்து 2வது வெற்றியை பதிவு செய்தது. ----------------------------------------------------- டி 20 உலககோப்பைக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெறக்கூடும் என தகவல்கள் பரவி வரும் நிலையில், ஓய்வு முடிவை சரியான நேரத்தில் எடுப்பேன். ஆஸி. தொடரில் 6 அல்லது 7வது இடத்தில் புதுமுக வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தோனி தெரிவித்துள்ளார். ----------------------------------------------------- பாதுகாப்பு காரணம் கருதி வரும் 27ம் தேதி வங்கதேசத்தில் நடைபெறும் 19 வயதுக்குட்டோருக்கான உலககோப்பையை ஆஸி. அணி புறக்கணித்துள்ளது. …
-
- 0 replies
- 601 views
-
-
மோசமாக நடந்து கொண்ட ரசிகரை ஓய்வறைக்கு அழைத்து அறைந்த யூசுப் பத்தான் ரஞ்சி டிராபி போட்டியின் போது மைதானத்தில் வீரர்கள் மீது கடும் வசை வார்த்தைகளை பிரயோகித்த ரசிகரை கிரிக்கெட் வீர்ர் யூசுப் பத்தான் 2 அறைவிட்டார். பரோடா, ஜம்மு-காஷ்மீர் அணிகளுக்கு இடையே நடைபெறும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் போது மோசமாக நடந்து கொண்ட ரசிகரை யூசுப் பத்தான் ஓய்வறைக்கு அழைத்து 2 முறை அடித்தது பரபரப்பாகியுள்ளது. வதோதராவில் நடைபெறும் இந்த போட்டியின் போத் யூசுப் பத்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் கடுமையான கெட்ட வார்த்தைகளால் ஏசியுள்ளார். பத்தான் மட்டுமல்ல அனைத்து வீரர்கள் பேட்டிங் செய்யும் போதும் அதே ரசிகர் தனது கெட்ட வசைகளை கடுமையாக ஏவியுள்ளார். இது குறித்து …
-
- 5 replies
- 601 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்த வாஸின் இடத்துக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சம்பக ராமநாயக்கவை நியமிக்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் சிரேஷ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை அணி பந்து வீச்சு துறையில் தடுமாற்றத்தை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் இந்த அதிரடி மாற்றத்தை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், சம்பக ராமநாயக்கவை உடனடியாக புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகுமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக ராமநாயக்க அணியில் சேர்ந்தவுடன் சமிந்த வாஸ் நாடு திரும்புவார் எனவும் குறிப்பிட்டார். இதேவேளை இலங்கை அணியின் நிலைமையை ஆராய தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய…
-
- 0 replies
- 601 views
-
-
ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம் இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவதும், இறுதியுமான கட்டம் நேற்று (12) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த ஏ. புவிதரன், ஆண்களுக்கான தட்டெறிதலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம். ஆஷிக் மற்றும் ஆண்களுக்கான 10, 000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் ஆகியோர் வெற்றிகளைப் பதிவு செய்தனர். இதில், ஆண்களுக்கான கோல…
-
- 0 replies
- 601 views
-
-
மீண்டும் சிக்கலில் பிளட்டினி சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் (பீபா) 8 வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள மைக்கல் பிளட்டினி, மேலும் சிக்கல்களுக்கு உள்ளாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத் தலைவரான பிளட்டினி, அனைத்து வகையான கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்தும், டிசெம்பர் 21ஆம் திகதியிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தார். ஆனால், டுபாய் விளையாட்டுச் சபையினால் டுபாயினால் ஏற்பாடு செய்யப்பட்ட பூகோள கால்பந்தாட்ட விருதுகளில், கடந்த 27ஆம் திகதி, பிளட்டினி கலந்துகொண்டுள்ளார். இந்நிகழ்வில், லியனொல் மெஸ்ஸி, அன்ட்ரியா பிர்லோ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கு வைத்து, தனது தடை தொடர்பாகவும் …
-
- 0 replies
- 600 views
-
-
ஜோ ரூட், பட்லர் சதம் * இங்கிலாந்து 408 ரன் குவிப்பு பர்மிங்ஹாம்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜோ ரூட், பட்லர் சதம் அடித்து அசத்தினர். இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பர்மிங்காஹாமில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். ரூட் சதம்: இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ராய் முதல் பந்திலேயே ‘டக்’ அவுட்டானார். ஹேல்ஸ் (20) நீடிக்கவில்லை. பின் இணைந்த ஜோ ரூட், கேப்டன் மார்கன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் கடந்த ம…
-
- 11 replies
- 600 views
-
-
'மூவேந்தர்களின்' இறுதிப் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள தொடரின் 7ஆவது போட்டியானது இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் திலகரட்ண டில்ஷான் ஆகியோர் இலங்கை மண்ணில் விளையாடப் போகும் கடைசி ஒருநாள் போட்டியாகும். இப்போட்டி இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியப் போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. உலகக் கிண்ணத் தொடர் அடுத்தவருடம் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளன. இதனால் உலகக் கிண்ணத் தொடருடன் மஹேல, சங்கா, டில்ஷான் ஆகிய மூவரும் ஒருநாள் தொடரிலிருந்து விடைபெறவுள்ளனர். இதற்கு முன்னர் நியூஸிலாந்து…
-
- 2 replies
- 600 views
-
-
யாழில் முதல் முறையாக மின்னொளியில் இருபதுக்கு இருபது போட்டி March 29, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விஜயரட்ணம் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது (T20) கடின பந்து (லெத போல்) துடுப்பாட்ட போட்டி யாழில் முதல் முறையாக மின்னொளியில் நடத்தப்படவுள்ளது. யாழில்.உள்ள கழகங்களில் அழைக்கப்பட்ட எட்டு கழகங்களுக்கு இடையில் குறித்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன. போட்டிக்கான அணிகளின் அறிமுகம், சீருடை (ஜெசி) வெளியிடு என்பன நேற்றைய தினம் யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது. அதன் போது போட்டியினை நடாத்தும் விஜயரட்ணம் பிரபன் கருத்து தெரிவிக்கையில், எனது தந்தையாரின் ஞாபகார்த்தமாகவே குறித்…
-
- 0 replies
- 600 views
-
-
சானியாவுக்கு இது பொன்னான வருடம் தனது டென்னிஸ் வாழ்க்கையில் இந்த வருடம் ஒரு பொன்னான வருடமாக அமைந்ததாக இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார். பெண்களுக்கான இரட்டையர் தரவரிசையில் முதல் நிலை வீராங்கனையான சானியா மீர்ஸா, இந்த வருடம் பல வெற்றிகளை ஈட்டியுள்ளதுடன் இந்த வெற்றிகள் மனநிறைவை தருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்தை விட சிறந்த வருடம் மிண்டும் அமைவது மிகவும் கடினம் என அவர் கூறினார். அடுத்த ஆண்டு இந்த ஆண்டை விட சிறப்பாக அமையும் என எதிர்பார்ப்பதுடன் இந்த ஆண்டுக்கு நிகரான வெற்றிகளை குவிக்க முடியும் என்ற…
-
- 0 replies
- 600 views
-
-
உலகை உதையாலும் வெல்லலாம்! (வீடியோ) கடந்த 2015 -ம் ஆண்டு ஜுலை மாதம் நடந்த மகளிர் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், அமெரிக்க அணி ஜப்பான் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த அமெரிக்க வீராங்கனை கார்லி லாயிடுக்கு மகளிர் பிரிவுக்கான 'பல்லான் டி ஆர்' விருது வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு எதிராக ஆஃப் லைனில் இருந்து லாயிட் அடிக்கப்பட்ட அற்புதமான கோல் இது.! http://www.vikatan.com/news/sports/57587-carli-llyod-wins-womens-ballon-dor.art
-
- 0 replies
- 599 views
-
-
ஐ.பி.எல். தொடரின் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி, போட்டியின்போது நடுவராக கடமையாற்றிய குமார் தர்மசேனவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து விராட் கோஹ்லி ஓய்வு பெறுவார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள ஐ.பி.எல். தொடரின் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டி மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி டேவிட் வோர்னர், ஹென்றிக்ஸ் ஆகியோரின் அரைசதத்தால் 3 …
-
- 4 replies
- 599 views
-
-
செரீனாவின் ‘பிளாக் பாந்தர்’ ஆடைக்குத் தடை: பிரெஞ்ச் ஓபன் நிர்வாகம் உத்தரவு பிரெஞ்சு ஓபனில் பங்கேற்றபோது செரீனா அணிந்திருந்த பிளாக் பாந்தர் ஆடை - படம்: ராய்டர்ஸ் 2019-ம் ஆண்டு நடக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கவர்ச்சிகரமான பிளாக் பாந்தர் ஆடை அணியக்கூடாது என்று ‘பிரெஞ்சு ஓபன்’ டென்னிஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்றது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியாகும். பாரீஸ் நகரில் களிமண் தரையில் நடக்கும் இந்தப் போட்டியில் விளையாடி பட்டம் வெல்வது மிகக் கடினம்.தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்கள் கூட களிமண் தரையில் விளையாடு…
-
- 1 reply
- 599 views
- 1 follower
-
-
இந்திய அணி வெற்றி பெற்றதும் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டிய விராட் கோலி – காரணம் இதுதான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இத்தொடரை இந்திய அணி 1 க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மேலும் முதல் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சதவீத ரசிகர்கள் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த சிறப்பான வெற்றிக்குப…
-
- 0 replies
- 598 views
-
-
தர்ஜினி சிவலிங்கத்தின் சாதனையுடன் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளிவைத்தது இலங்கை! உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 50 – 88 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இலங்கை வலைபந்தாட்ட அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 15ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் ஜுலை 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை லிவர்பூலில் நடைபெற்று வருகின்றது. இதில் ஏ குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள அவுஸ்ரேலியா மற்றும் வட அயர்லாந்து, சிம்பாப்வே, சிங்கப்பூர் ஆகிய அணிகளுடன் இடம்பெற்ற தமது குழுநிலைப் போட்டிகள் மூன்றிலும் தோல்வியடைந்த காரணத்தினால் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் சந்த…
-
- 0 replies
- 598 views
-
-
ரஃபேல் நடால் 21 டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் வென்று உலக சாதனை - ஆஸ்திரேலிய ஓபனில் வெற்றி 56 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TPN/GETTY IMAGES ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் மற்றும் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோருக்கு இடையே நடந்த 2022ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார் ரஃபேல் நடால். மெல்பர்னில் 5 மணி நேரம் 24 நிமிடம் நடந்த இந்தப் போட்டியில் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற கணக்கில் வென்றார் நடால். இதன்மூலம் 21 ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று உலக சாதனை படைத்துள்ளார் ரஃபேல் நடால். அமெரிக்காவின் டென்னிஸ் …
-
- 7 replies
- 598 views
- 1 follower
-