விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
டில்ஸ்கூப் அடித்து அசத்திய சங்கக்காரா February 22, 2016 மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் வித்தியாசமான ஷாட் ரசிகர்களை வியக்க வைத்தது. சமீபத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் நடைபெற்றது. இதில் ஜெமினி அரபியன்ஸ் அணிக்காக விளையாடிய சங்கக்காரா ஒரு போட்டியில் “டில்ஸ்கூப்” ஷாட் மூலம் சிக்சர் விளாசி ரசிர்களை உற்சாகப்படுத்தினார். இந்த ஷாட்டுக்கு பெயர் போனவர் சக இலங்கை வீரரான டில்ஷான் தான், தவிர, தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், நியூசிலாந்தின் மெக்கல்லம் ஆகியோரும் அதிகம் இது போன்ற ஷாட்டுகளை அதிகம் ஆடுவர். இந்த தொடரில் ஷேவாக் தலைமையிலான ஜெம…
-
- 0 replies
- 562 views
-
-
சர்ரே அணிக்காக 1000 ஓட்டங்கள் கடந்தார் சங்கக்கார. சர்ரே அணிக்காக 1000 ஓட்டங்கள் கடந்தார் சங்கக்கார. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆடடக்காரரான குமார் சங்ககாரா, சர்ரே அணிக்காக கழக மட்டப் போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றார். 2015 இல் இடம்பெற்ற உலக கிண்ணப் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த சங்கா, இப்போது சர்ரே அணியிலும் சாதித்து வருகின்றார். இந்த பருவகாலத்தில் சர்ரே அணிக்காக 1000 ஓட்டங்கள் கடந்துள்ளார்.டேர்ஹாம் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் 30 ஓட்டங்கள் பெற்றபோதே சங்கா இந்த சாதனையைப் படைத்துள்ளார் http://vilaiyattu.com/சர்ரே-அணிக்காக-1000-ஓட்டங்கள/
-
- 0 replies
- 562 views
-
-
என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது உண்மையான பெயர் சண்முகநாதன் சாருஜன். ஆனால் எல்லோரும் அவரை " Little Sanga" என்றுதான் அழைக்கிறார்கள். காரணத்தை நீங்களும் பாருங்கள் !
-
- 6 replies
- 562 views
-
-
UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கு தெரிவாகியுள்ள வீரர்கள் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஓன்றியமான UEFA யின் 2017/18 ஆம் பருவகாலத்திற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதிற்கான இறுதிப் பெயர் பட்டியல் திங்கட்கிமை (20) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் லுகா மொட்ரீச், முஹமட் சலாஹ் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கான இறுதி மூவரைக் கொண்ட பெயர் பட்டியலானது பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மூலம் வழங்கப்படும் மொத்த வாக்குகளின் அடிப்படையிலே தெரிவு செய்யப்படுகின்றது. அதனடிப்படையில் 80 பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் 55 ஊடகவியலாளர்களால் லுகா மொட்ரீச், முஹமட் சலாஹ் மற்ற…
-
- 0 replies
- 562 views
-
-
ஒருநாள் கிரிக்கெட்டில் மே.இ.தீவுகள் புதிய சாதனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியானது புதிய சாதனையொன்றை படைத்துள்ளது. அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையே முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய தினம் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோன் கேம்பெல் மற்றும் ஷெய் ஹோப் களமிறங்கினர். இந்த ஜோடி அயர்லாந்து பந்துவீச்சை அனைத…
-
- 0 replies
- 562 views
-
-
பிளெட்சர் பற்றிய தோனியின் கருத்திற்கு பிசிசிஐ கடும் அதிருப்தி ரவிசாஸ்திரி அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்றாலும் பிளெட்சர்தான் எங்கள் பாஸ், அவர் 2015 உலகக் கோப்பையிலும் எங்களை வழிநடத்திச் செல்வார் என்று தோனி கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் கூறியுள்ளார். இது குறித்து தனியார் சானலுக்கு அவர் கூறும்போது, “நான் தோனியிடம் இதுபற்றிப் பேசவில்லை, பிசிசிஐ அவரது கருத்துக்கு வினையாற்றாது. தோனி பிளெட்சர் பற்றிக் கூறியது அவரது சொந்தக் கருத்தே” என்று கூறிய அவர், கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகளை அவரது கருத்துக் கட்டுப்படுத்தாது என்று தெளிவுபடுத்தினார். இது குறித்து பிசிசிஐயின் முக்கிய அதிகாரி ஒருவர் பெயரைக் குறிப்பிடாமல் செய்தி நிறுவனம…
-
- 1 reply
- 561 views
-
-
தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திசர பெரேரா இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித் தலைவராக செயற்பட்டு வந்த சகலதுறை வீரர் திசர பெரேரா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உப தலைவரும் சர்வதேச கிரிக்கெட்டிற்கான பொறுப்பாளருமான K. மதிவனன், இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஏஷ்லி டி சில்வா, தெரிவுக் குழுவின் தலைவர் கிரேம் லப்ரோய், இலங்கை …
-
- 1 reply
- 561 views
-
-
IPL லில் பங்கேற்பதற்கு 714 வீரர்கள் விண்ணப்பம் January 24, 2016 இந்தியன் பிரீமியர் லீக் 2016 ஆம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பதற்கு 714 வீரர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாவது ஐபிஎல் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறவுள்ளது. இத் தொடருக்கான வீரர்களை தெரிவு செய்யும் வீரர்கள் ஏலம் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் நாளை வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 714 வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 300 வீரர்கள் மாத்திரமே ஏலத்தில் தெரிவு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பித்துள்ள வீரர்களில் பாகிஸ்தான் மற்றும் இ…
-
- 0 replies
- 561 views
-
-
இலங்கை அணியின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்க வேண்டும் – ரசல் ஆர்னல்ட் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணியால், ஏன் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளை வீழ்த்த முடியவில்லை. அதுமாத்திரமின்றி T20I உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இலங்கை அணி என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் மொழியில் விளக்கும் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட் http://www.thepapare.com/video-russel-arnold-on-sri-lanka-performance-in-india-2020-tamil/
-
- 0 replies
- 561 views
-
-
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை அறிவுரையாளர் பொறுப்பிலிருந்து கும்ளே விலகல் ஜனவரி 2013-லிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பொறுப்பு வகித்தார் கும்ளே. | படம்: பிடிஐ. மும்பை இந்தியன்ஸ் ஐபிஅல் அணியின் தலைமை அறிவுரையாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ளே விலகியுள்ளார். கிரிக்கெட்டில் மற்ற வாய்ப்புகளை எதிர்நோக்கி கும்ளே இந்த முடிவை எடுத்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. "டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிக விக்கெட்டுகள் சாதனைக்குரியவரான அனில் கும்ளேவுக்கு மும்பை இந்தியன்ஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவர் அறிவுரையாளராக பொறுப்பேற்ற பிறகு மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், சாம்பியன…
-
- 0 replies
- 561 views
-
-
800 கி.மீ தூரம், 26 மணி நேர பயணம்... பாகிஸ்தானிலும் கிரிக்கெட் ஒரு மதம்! #CricketBackToPak மார்ச் 3, 2009. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள். இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பஸ், லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தை நோக்கி பயணிக்கிறது. சுற்றிலும் பாதுகாப்பு. பஸ் லிபர்டி செளக் பகுதியில் சென்றபோது அங்கு ஊடுருவியது, துப்பாக்கி ஏந்திய 12 பேர் கொண்ட கும்பல். பாதுகாப்பு வீரர்கள் சுதாரிப்பதற்குள் நடந்து முடிந்துவிட்டது தாக்குதல். இலங்கை வீரர்கள் ஆறு பேர் காயம். ஆறு போலீஸார், பொதுமக்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலி. அஷன் ரஸா, பாகிஸ்தானைச் சேர்ந்த அம்பயர். லாகூர் டெஸ்ட் போட்டியின் ரிசர்வ…
-
- 0 replies
- 561 views
-
-
டி20 உலகக் கோப்பையில் இந்த 4 சவால்களை இந்தியா முறியடிக்குமா? ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பை ஜூரம் களைகட்ட தொடங்கியிருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பையை பொறுத்தவரையில், அத்தொடரை நடத்தும் நாடு உலகக் கோப்பையை வென்றதில்லை என்ற சென்டிமென்ட்டை உடைத்து, தோனி தலைமையில் 2011-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இருபது ஓவர் போட்டிகளை பொறுத்தவரையிலும், இதுவரை உலகக்கோப்பையை நடத்திய நாடு, சொந்த மண்ணில் சாம்பியன் ஆனது கிடையாது. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இதுவரை தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் ஆகிய ஐந்து நாடுகளில் உலகக் கோப்பை நடந்திருக்கிறது, இதில் இலங்கை தவிர மற்ற அணிகள், சொந்த மண்ணில் அரைய…
-
- 0 replies
- 561 views
-
-
காமன்வெல்த் போட்டியில் இந்தியா - ஒரு பார்வை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவில் இருந்து 215 பேர் பங்கேற்றனர். நெட்பால், ரக்பி செவன்ஸ், டிரையத்லான் ஆகிய பிரிவுகளில் மட்டும் இந்தியா பங்கேற்கவில்லை. தடகள பிரிவில் வட்டு எறிதலில் இந்தியாவின் விகாஸ் கவுடா இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்தார். இதன் மூலம் 52 ஆண்டுகளுக்குப் பின் காமன்வெல்த் தடகளத்தில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. அதேபோல காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காஷ்யப் தங்கம் வென்றார். இதன் மூலம் 32 ஆண்டுகளுக்குப் ஆடவர் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இவை இந்த காமன்வெல்த் போட்டியில் குறிப்பிடத்தக்க ச…
-
- 0 replies
- 561 views
-
-
கடைசி ஓவரில் நான்கு சிக்சர்களை விளாசிய கார்லோஸ் பிராத்வெய்ட் யார்? சாமுவேல்ஸ், பிராத்வெய்ட். | படம்: பிடிஐ. உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் சற்றும் எதிர்பாராத விதமாக 4 மிகப்பெரிய சிக்சர்களை அடித்த அந்த நெடிய, வலுவான வீரர் பிராத்வெய்ட் பார்படாஸைச் சேர்ந்தவர். இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஓவர் வரை இங்கிலாந்தே வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தனர், பிராத்வெய்ட் இப்படியொரு ராட்சத ஹிட்டராக இருப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதல் பந்தே ஸ்டோக்ஸ் லெக்ஸ்டம்பில் ஹாஃப்-வாலி லெந்தில் வீச டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசைக்குப் பறந்தது. ஆனால் அடுத்த பந்து ஃபுல் லெந்த் என்று கூற மு…
-
- 0 replies
- 561 views
-
-
கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை காண்பித்ததால் குழந்தை போன்று கதறி அழுதேன் – மேற்கிந்திய அணியின் முன்னாள் மசாஜ் ஊழியர் நீதிமன்றில் சாட்சியம் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை தன்னிடம் காண்பித்தபோது தான் குழந்தை போன்று கதறி அழுததாக அவ்வணியின் பெண் மசாஜ் ஊழியராக பணியாற்றிய யுவதி ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார். லியனே ரஸல் எனும் இந்த யுவதி, அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்றில் நடைபெறும் வழக்கு விசாரணையில் சாட்சிமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஒருநாள் சர்வதேச உலக கிண்ணப் போட்டிகள் நடை பெற்றபோது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினருக்கான மசாஜ் ஊழியராக பணி யாற்றியவர் லியன…
-
- 4 replies
- 561 views
-
-
கிரிக்கெட் இனி... 1843இல் இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடும் ராணுவ தளபதி கிரிக்கெட் ஒரு காலனிய ஆட்டம். நியுசிலாந்து, இந்தியா, வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்தின் வழிகாட்டலின் கீழ் ஆடிய ஒரு பண்பாட்டு பங்கேற்பு நிகழ்ச்சி. ஒரு காமன்வெல்த் நாடு என தன்னை இருத்திக் கொள்வதை தாண்டி இவ்விளையாட்டுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்ததில்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த துவங்கியது. இங்கிலாந்தின் கையில் இருந்து ஆட்சிக்கட்டிலை அது பறித்தது. இதைச் சொல்லும் போது பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்தே இந்த ஆட்டத்தை இங்கிலாந்து தான் ஆடி வளர்த்தெடுத்தது என நினைவில் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவிடம் இருந்து மே…
-
- 1 reply
- 560 views
-
-
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இன்றைய போட்டியில் சதம் விளாசியதன் மூலம் குறைந்த வயதில் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் விரைவாக சதத்தை பூர்த்தி செய்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவிஷ்க பெர்னாண்டோ பெற்றுள்ளார். அத்துடன் இந்த சதம் இவரது கன்னி சதமாகும். சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் குறைந்த வயதில் விரைவாக சதம் பெற்ற வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் அயர்லாந்து அணியின் போல் ஸ்டெர்லிங் முதல் இடத்திலும் (20 வயது, 196 நாள்), ரிக்கி பொண்டிங் இரண்டாவது இடத்திலும் (21 வயது, 76 நாள்), அவிஷ்க பெர்னாண்டோ மூன்றாவது இடத்திலும் (21 வயது, 87 நாள்), விராட் கோலி நான்காவது இடத்திலும், (22 வயது, 106 நாள்), சச்சின் டெண்டுல்கர் ஐந்தாவது இடத்த…
-
- 0 replies
- 560 views
-
-
புனேயின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் December 18, 2015 ஐபிஎல் தொடரில் புனே அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த போட்டியில் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புனே மற்றும் ராஜ்கோட் அணிகள் தெரிவு செய்யப்பட்டன, இதில் புனே அணியில் டோனியுடம், ராஜ்கோட் அணியில் ரெய்னாவும் விளையாடவுள்ளனர். இந்நிலையில் புனே அணியின் பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து…
-
- 0 replies
- 560 views
-
-
இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம் ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இடங்களை பிடித்த அணிகள், பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. 12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது நிறைவடைந்துள்ள நிலையிலேயே மேற்படி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலில் இடத்திலும், துடுப்பாட்டத்தில் 886 புள்ளிகளுடன் விராட் கோலியும், பந்து வீச்சில் 809 புள்ளிகளுடன் பும்ரா முதலாவது இடத்திலும் உள்ளனர். * ஒருநாள் அணிப் பட்டியில் : 1. இங்கிலாந்து - 125 2. இந்தியா - 122 3. நியூஸிலாந்து - 122…
-
- 0 replies
- 560 views
-
-
இந்தியக் கிரிக்கெட் அணியின் அஸ்வின் புதிய சாதனை! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/116992093_gettyimages-1228368442-3-720x450.jpg இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 400வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 400 விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின் உலகளவில் 16ஆவது பந்துவீச்சாளர் என் பெருமையையும் பெற்றார். அத்துடன் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை மிக வேகமாக வீழ்த்திய பந…
-
- 0 replies
- 560 views
-
-
தேசிய கூடைப்பந்து அணியில் யாழ் மாணவி பாபு பாணு தேசிய கூடைப்பந்து அணியில் யாழ் மாணவி பாபு பாணு இம்மாத இறுதியில் சீனாவின் செங்கோ நகரில் இடம்பெறவுள்ள சர்வதேச கூடைப்பந்து சம்மேளனத்தின் (FIBA) 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 3X3 கூடைப்பந்தாட்ட தொடருக்கான இலங்கை அணியினர் தம்மைத் தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த காலங்களில் பாடசாலை மட்டங்களில் வெளிப்படுத்திய திறமைக்கு அமைய, யாழ் தீபகற்பத்தின் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பாபு பாணுவும் குறித்த தேசிய அணிக் குழாமிற்காகத் தெரிவாகியுள்ளார்.…
-
- 0 replies
- 560 views
-
-
விராட் கோலிக்கு பிறந்தநாள் இன்று - 'சேஸிங் கிங்' குறித்த 6 சுவாரஸ்ய தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. டெல்லியில்…
-
- 0 replies
- 560 views
- 1 follower
-
-
உலகக் கிண்ணத்தினால் உலகையே ஈர்த்த நாயகர்கள் ரியெல் மெட்ரிட் வாழ்வை முடித்து ஜுவண்டஸுடன் இணைந்தார் ரொனால்டோஒரு மாத காலம் உற்சாகத்தைத் தந்த உலகக் கிண்ண கால்பந்து திருவிழா முடிவுக்கு வந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும், அனுமானங்களையும் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் நொறுக்கித் தள்ளியது. முன் எப்போதும் இல்லாத அளவில் பல்வேறு திருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் அரங்கேறின. உலக கால்பந்து நட்சத்திரங்களைக் கொண்ட பெரிதும் எதிர்பார்த்த போர்த்துக்கல், ஆர்ஜென்டீனா, பிரேசில், ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் போன்ற அணிகள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்து சீக்கரமே தொடரிலிருந்து வெளியேறின. யாருமே எதிர்ப…
-
- 0 replies
- 560 views
-
-
1979 - இரண்டாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்... 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி.யின் இரண்டாவது உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாகவும் சம்பியன் ஆனது. * இங்கிலாந்தின் 8 மைதானங்களில் 1979 ஜூன் 6 முதல் ஜூன் 23 ஆம் திகதி வரை நடைபெற்றது. * முதலாவது உலக கோப்பை போட்டியை போன்றே இந்த போட்டியிலும் 8 அணிகள் கலந்து கொண்டன. ( குழு 'A' யில் இங்கிலாந்து, பாகிஸ்தான், கனடா மற்றும் அவுஸ்திரேலியாவும் குழு 'B'யில் மேற்கிந்தியத்தீவுகள், நியூஸிலாந்து, இந்தியா மற்றும் இலங்கை) * 15 நாட்கள் இடம்பெற்ற இத் தொடரில் 15 போட்டிகளில் இடம்பெற்றது. * முதலாவது உலகக் கிண்ணத் தொடரைப் போன்று 60 ஓவர்கள் என்ற அடிப்ப…
-
- 0 replies
- 560 views
-
-
டெஸ்ட் தரவரிசையில் 4 ஆம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பெற்றுக் கொண்ட வெற்றியையடுத்து இலங்கையணி டெஸ்ட் தரவரிசையில் 04 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து 04 ஆம் இடத்திலிருந்த பாகிஸ்தான் அணியின் 6 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலிலேயே இத் தகவல் வெளியிட்டுள்ளது. தென்னாபிரிக்க அணி முதலாம் இடத்திலும், அவுஸ்ரேலியா 2 ஆம் இடத்திலும், இங்கிலாந்து அணி 03 ஆம் இடத்திலும் இந்திய அணி 05 ஆம் இடத்திலும் உள்ளன. இதேவேளை, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் இலங்கையணியின் அஞ்சலோ மெத்தியூஸ் 5 ஆம் இடத்திலிருந்து 03 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்…
-
- 2 replies
- 560 views
-