விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
மானிப்பாய் இந்து கல்லூரி அணி சம்பியன் வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014 யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் நடைபெற்ற கால்;பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக மானிப்பாய் இந்து கல்லூரி அணி சம்பியனாகியது. யாழ் மாவட்டப் பாடசாலைகள் விளையாட்டு சங்கம், பிரித்தானியா நாட்டின் இலங்கை தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின் ஆதரவுடன் வருடாந்தம் நடத்தும் யாழ் மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையிலாக கால்ப்பந்தாட்ட போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்து கல்லூரி மைதானங்களில் இடம்பெற்றது. முதற்சுற்றுப்போட்டிகள் முடிவடைந்து இறுதிப்போட்டி வியாழக்கிழமை (06) யாழப்பாணம் மத்திய கல்லூரி ம…
-
- 1 reply
- 588 views
-
-
உலக பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவின் ஸ்வீட்டி பூரா, நீத்து கங்காஸ் ஆகியோருக்கு தங்கப் பதக்கம் பட மூலாதாரம்,BFI 25 மார்ச் 2023, 15:41 GMT புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர் உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்வீட்டி பூரா, நீத்து கங்கா ஆகியோருக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 81 கிலோ பிரிவில் தங்கம் வென்ற ஸ்வீட்டி பூராவுக்கு இது இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் பதக்கம். சீனாவின் வாங் லினாவை அவர் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அரையிறுதியில் அவர் ஆஸ்திரேலியாவின் எம்மா கிரீன்ட்ரீயை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தினார். …
-
- 2 replies
- 799 views
- 1 follower
-
-
கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தப்போகின்றேன்- ஹேரத் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இனிங்சில் ஆறு விக்கெட்களை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்த பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள அணியை வெல்வதும் அந்த அணியுடனான தொடரை வெல்வதும் சிறப்பான விடயம் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசினார்கள் என தெரிவித்துள்ள ஹே…
-
- 0 replies
- 244 views
-
-
வறுமையிலும் சாதனை: சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு வடக்கின் 3 வீராங்கனைகள் தெரிவு வறுமையின் பிடியிலும் விளையாட்டுத்துறையில் சாதிக்கும் பலர் எம் சமூகத்தில் இருக்கவே செய்கின்றார்கள். அவ்வாறு சாதித்து, சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு மூன்று வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர். 6 நாடுகள் பங்கேற்கும் 15 வயதிற்குட்பட்டோருக்கான சர்வதேச கால்பந்தாட்டத் தொடர் பூட்டானில் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இலங்கை அணிக்கு வட மாகாணத்திலிருந்து ஜெகநாதன் ஜெதுன்ஷியா, சிவசுதன் தவப்பிரியா, உருத்திரகுமார் யோகிதா ஆகியோர் தெரிவாகியுள்ளனர். அளவெட்டியைச் சேர்ந்த ஜெகநாதன் ஜெதுன்ஷ…
-
- 3 replies
- 629 views
-
-
வவுனியாவில் அதிகரித்திருக்கும் வன்முறைகள் காரணமாகப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தமது அலுவலகத்தை மூடிவிட்டுக் கொழும்புக்குப் புறப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும்இ தமது உறுப்பினர்கள் அலுவலகத்தை மூடிவிட்டு வரவில்லையெனத் தெரிவித்திருக்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொபினர் ஒமர்சன்இ வவுனியாவின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பாதுகாப்புச் சூழ்நிலைகள் குறித்து ஆராய்வதற்காகவே அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டதாகக் கூறினார். உரிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் இன்னமும் ஓரிரு தினங்களில் அவர்கள் வவுனியா அலுவலகத்துக்குத் திரும்பி விடுவார்கள் எனவும் தொபினுர் ஒமர்சன் தெரிவித்துள்ளார். செய்தி: சங்கதி.கொம்
-
- 0 replies
- 917 views
-
-
வணக்கம் எல்லோருக்கும் ! பலருக்கு இது முகத்தைச் சுளிக்க வைக்கலாம், சிலருக்கு மகிழ்வாக இருக்கலாம், ஆனால் எனக்குப் பிடித்ததை எழுதும் உரிமை எனக்கிருக்கிறதென்று நான் நம்புவதால் இதை எழுதுகிறேன். இன்றைய கிரிக்கெட் உலகில் பல வீரர்களைப் பார்க்கிறோம். எதிரணிப் பந்துவீச்சைத் துவசம் செய்து தனது அணியை வெற்றியை நோக்கிக் கொண்டுபோகும் தனிமனித செயல்களை அவ்வப்போது காண்கிறோம். அந்த துடுப்பாட்டக்காரர் மைதானத்திற்குள் நுழைந்தாலே ரசிகர்கள் கூச்சலிடுவதும், வர்ணனையாளர்கள் உசாராகிவிடுவதும், களத்தடுப்பாளர்களும், பந்து வீச்சாளர்களும் கலக்கமடைவதும் நடக்கிறது. இப்படியான ஒப்பற்ற வீரர்கள் ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவுஸ்த்திரேலியாவின் டேவிட் வோர…
-
- 8 replies
- 852 views
-
-
ஊக்க மருந்து பயன்படுத்தும் வீரர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட வேண்டும் கப்டன் வோகன் கூறுகிறார் ஊக்க மருந்து பயன்படுத்தி சிக்கும் வீரர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து அணிக் கப்டன் மைக்கேல் வோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் சோயிப் அக்தர், முகமது ஆசிப் ஆகியோர் கடைசி நேரத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். சாம்பியன் கிண்ணப் போட்டிக்கு முன் ஊக்க மருந்துச் சோதனையில் சிக்கி முறையே 2 மற்றும் ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்ட இருவருக்கும் மேன்முறையீட்டின் மூலம் தடை நீக்கப்பட்டது. ஆனால், இருவரும் உலகக் கிண்ணப் போட்டியில் ஊக்க மருந்து சோதன…
-
- 0 replies
- 773 views
-
-
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு 'பாலக்காட்டு மாதவன்'.... கிருஷ்ண சந்திரனின் பிளாஷ்பேக்! சென்னை: தமிழக தலைநகர் சிங்கார சென்னையில் பள்ளி கல்வி பயின்ற மலையாளத்து கிருஷ்ண சந்திரன், இன்று ஐக்கிய அரபு எமிரேட்டின் நம்பிக்கை நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான பெர்த் போட்டியில் கிருஷ்ண சந்திரன் விளையாடும்போது அவரது சொந்த மாநிலமான கேரளாவில் இவருக்காகவும் கைத்தட்டல் ஒலிக்கப்போகிறது. ஐக்கிய அரபு எமிரேட் இந்த உலக கோப்பையில் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், அந்த அணியின் ஒரு வீரரின் பெயரை பார்த்ததும் இந்தியர்களுக்கு.. அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு இயல்பாகவே ஒரு சந்தேகம். இது.. நம்மூர்காரர் பெயர் மாதிரி உள்ளதே என்பதுதான் அந்த சந்தேகம். அந்த பெயருக்கு சொந…
-
- 0 replies
- 658 views
-
-
உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இரண்டாவது தடவையாக தர்மசேன அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் நடுவராக கடமையாற்ற இலங்கையின் நடுவர் குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி, இறுதிப் போட்டி ஒன்றில் நடுவராக கடமையாற்றும் முதலாமவர் குமார் தர்மசேன என்பது குறிப்பிடத்தக்கது. 1996ஆம் ஆண்டு இலங்கை அணி உலக சம்பியன் ஆகிய வேளை, இலங்கை அணியில் குமார் தர்மசேன விளையாடி இருந்தார். 43 வயதான குமார் தர்மசேன, 19 வருடங்களின் பின்னர் மீண்டும் இறுதிப் போட்டி ஒன்றில் மைதானத்துக்குள் களமிறங்கவுள்ளார். 2011ஆம் ஆண்டு சிறந்த நடுவர் விருதைப் பெற்ற இவர், கடந்த இ…
-
- 2 replies
- 553 views
-
-
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி – தென்னாபிரிக்கா அணி தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. சென்சூரியனில் பொக்ஸிங்டே அன்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பாபர் அசாம் 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் டூன்ஹேன் ஒலிவியர் 6…
-
- 0 replies
- 648 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்தார் சச்சின் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை புரிந்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடக்கும் முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கள் தனது 28 ஆவது ரன்னை எடுத்தபோது அவர் இந்த மைல்கல்லை எட்டினார். அதிக எண்ணிக்கையிலான ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள சச்சின் டெண்டுல்கள் பங்கேற்கும் 182 ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும். ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் அதிக அளவு ரன்களையும், அதிக அளவு சதங்களையும் அடித்த வீரர் என்ற சாதனையை ஏற்கனவே அவர் புரிந்துள்ளார். இது…
-
- 0 replies
- 677 views
-
-
நியூட்டன் அணியைத் தோற்கடித்து கரவெட்டி பிரதேச சம்பியனாகியது நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம். யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிக்கிடையிலான கால்ப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இவ்விறுதியாட்டத்தில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகமும் சமரபாகு நியூட்டன் விளையாட்டுக் கழகமும் மோதின. https://newuthayan.com/story/16/நவிண்டில்-கலைமதி-சாதனை.html
-
- 0 replies
- 705 views
-
-
37 வருடங்களின் பின்னர் டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு பிரித்தானியா தகுதி க்ளாஸ்கோ, எமிரேட்ஸ் எரினா டென்னிஸ் அரங்கில் வார இறுதியில் நடைபெற்ற டேவிஸ் கிண்ண அரை இறுதிப் போட்டியில் இரண்டு ஒற்றையர் ஆட்டங்களிலும் ஓர் இரட்டையர் ஆட்டத்திலும் அண்டி மறே வெற்றிபெற்றதன் மூலம் அவுஸ்திரேலியாவை 3 – 2 என்ற ஆட்டக் கணக்கில் பெரிய பிரித்தானியா வெற்றிகொண்டது. இந்த வெற்றியின்மூலம் டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு 37 வருடங்களின் பின்னர் பெரிய பிரித்தானியா தகுதிபெற்றுக் கொண்டது. ஞாயிறன்று நடைபெற்ற முதலாவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் 7– 5, 6– 3, 6– 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில் அவுஸ்திரேலியாவின் பேர்னார்ட…
-
- 0 replies
- 240 views
-
-
மும்பை : 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றியாளர் பவுண்டரி எண்ணிக்கையை வைத்து தேர்வு செய்யப்பட்டது தவறு என பலரும் கூறி வரும் நிலையில், சச்சின் தன் கருத்தை கூறி இருக்கிறார். இரண்டு முறை டை ஆன, அந்த நேரத்தில் என்ன செய்திருக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் ஐசிசி விதிக்கு மாற்றாக தன் யோசனையை முன் வைத்துள்ளார். மேலும், விளையாட்டில் கூடுதல் நேரம் கொடுப்பதை விட வேறு எதுவுமே முக்கியமல்ல என சுட்டிக் காட்டி ஐசிசிக்கு குட்டு வைத்துள்ளார். இதுவரை எந்த கிரிக்கெட் உலகக்கோப்பையிலும் நடக்காத அதிசயங்கள் 2019 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நடந்தது. உலகக்கோப்பை இறுதிப் போட்டி இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இரு …
-
- 0 replies
- 682 views
-
-
அடுத்த உலகக் கோப்பை வரை தோனி கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும்: சேவாக் விருப்பம் தோனி நல்ல இதயம் படைத்தவர். மூத்த வீரர்களான நாங்கள் அவரை மதித்தோம் என்கிறார் சேவாக். | படம்: ஏ.பி. அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் வரை கேப்டன் பொறுப்பில் தோனியே நீடிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அதிரடி வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார். தோனி பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த சேவாக் கூறியதாவது: "தோனி அடுத்த உலகக் கோப்பை வரை கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்தால் நல்ல உலகக்கோப்பை அணியை அவர் ஏற்படுத்துவார். அவர் ஓய்வு பெற்றால் 5,6 அல்லத் 7-வது நிலையில் யாரைக் களமிறக்குவது என்பது சிந்திக்கப் பட வேண்டிய ஒன்றாகிவிடும், தோனி இருக்கும் போதே அந்த நிலைகளுக்கு யாரை இறக்குவத…
-
- 0 replies
- 295 views
-
-
முரளீதரன் மீது முட்டை வீச்சு: ஆஸி. ரசிகர்கள் அட்டூழியம் ஹோபர்ட்: முத்தரப்பு போட்டியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் மீது ஆஸ்திரேலியா ரசிகர்கள் முட்டையை வீசியுள்ளனர்.ஆஸ்திரேலியாவில
-
- 18 replies
- 5.3k views
-
-
மீட்ஷல் ஜோன்சன் தனக்கு ஓய்வு பெற வேண்டிய காலம் வந்துவிட்டது என்று ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்று கொண்டிருக்கும் இறுதி நாள் ஆட்டத்தோடு மீட்ஷல் ஜோன்சன் சர்வதேச கிரிக்கட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகின்றார். நியூசிலாந்திற்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையில் பேர்த் மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் மீட்ஷல் ஜோன்சன் வீசிய 28 ஓவர்களில் 157 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கட்டை மாத்திரமே பெற்றார். பேர்த் மைதானத்தில் அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர் கொடுத்த அதிக ஓட்டப்பிரதி இதுவே. மேலும், இவர் இடது கை வேகப்பந்துவீச்சாளர். 73 டெஸ்ட் போட்டியில் 311 விக்கட்டுக்களையும், 153 ஒரு நாள் போட்டிகளில் 239 விக்கட்டுக்களையும், 30 இருபதுக்கு இருபது போட்டிக…
-
- 3 replies
- 218 views
-
-
இன்று ஐஎஸ்எல் கால்பந்து இறுதி போட்டியில் சென்னை, கோவா அணி பலப்பரீட்சை ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா, சென்னை அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் ஃபடோர்டா மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக விருந்து படைத்த ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2-வது சீசனின் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது ரசிகர்களுக்கு கண்கவர் நிகழ்ச்சியாக அமைந்தது. 8 அணிகள் பங்கேற்று, இந்தியாவின் 8 நகரங்களில் களைகட்டிய இந்த தொடர் கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. இதில் கோவா, சென்னை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. முன்னதாக, அரையிறுதி ஆட்டங்களில் டெல…
-
- 0 replies
- 579 views
-
-
மேட்ச் பிக்சிங் : ரூ. 100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு தோனி வழக்கு! மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட சன் ஸ்டார் ஹிந்தி பத்திரிகை மீது ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக , இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஹிந்தி பத்திரிகையான 'சன் ஸ்டார்' அண்மையில், இந்திய அணியின் முன்னாள் மேலாளரும் டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளருமான சுனில் தேவ் , கடந்த 2014-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் தோனி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தெரிவித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து தோனி அந்த பத்திரிகைக்கு விளக்கம் கேட்டு 9 பக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், '' இந்த செய்தியில் துளியளவும்…
-
- 0 replies
- 404 views
-
-
அங்குரார்ப்பண ஜனாதிபதி விளையாட்டுத்துறை விருது விழா: அதி சிறந்த வீரர் சங்கக்கார, அதி சிறந்த வீராங்கனை நிமாலி 2016-05-20 10:23:42 அங்குரார்ப்பண ஜனாதிபதி விளையாட்டுத்துறை விருது (2015) விழா வில் வருடத்தின் அதி சிறந்த விளையாட்டு வீரர் விருதை இலங்கையின் முன்னாள் கிரிக்ெகட் வீரர் குமார் சங்கக்காரவும் அதி சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை மெய்வல்லுநர் நிமாலி லியனஆராச்சியும் வென்றெடுத்தனர். இவ் விருதுவிழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது. வருடத்தின் விளையாட்டுத்துறையில் அதி சிறந்த ஆளுமை மிக்கவருக்கான விருது சர…
-
- 0 replies
- 280 views
-
-
ரியோ ஒலிம்பிக்: ஒரு நுட்பமான அலசல் அதிக மெடல்களை வென்ற மைக்கேல் பெல்ப்ஸ், உசைன் போல்ட் மற்றும் சிமோன் பைல்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதியன்று, ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் 2016 ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றன. 16 நாட்கள் குறிப்பிடத்தக்க வகையில் நடந்த விளையாட்டுப் போட்டிகள், இதன் மூலம் முடிவுக்கு வந்தன. 207 நாடுகளை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர்கள், 31 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றனர். ரியோ போட்டிகளின் போது மொத்தம் 306 வகை பதக்கங்கள் வழங்கப்பட்டன. பல சாதனைகள் முறியடிக்கப்பட்டது; வரலாறு நிகழ்த்தப்பட்டது; சாதனையாளர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்; புதிய நம்பிக்கை நட்சத்திரங…
-
- 0 replies
- 679 views
-
-
கால்பந்தாட்ட சூதாட்டங்கள் ஐரோப்பிய காவல்துறையான யூரோபோல் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன. ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் கால்பந்தாட்டப் போட்டிகளில் ஆட்ட நிர்ணய சூதாட்டங்கள் பெருமளவில் நடந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல்துறை கண்டறிந்துள்ளது. ஐரோப்பாவில் மட்டும் கிட்டத்தட்ட 400 போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாக சந்தேகம் இருப்பதாக யூரோபோல் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது. அதே அளவான எண்ணிக்கைகொண்ட மேட்ச்-ஃபிக்சிங் சூதாட்டங்கள் ஆபிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நடந்துள்ளதாக பல நாடுகளையும் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய யூரோபோல் தெரிவித்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டித் தொடர், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடருக்கான …
-
- 3 replies
- 490 views
-
-
அப்ரிடியை மிரட்டினாரா தாவூத் இப்ராஹிம் சம்பந்திக்காக தலையிட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் அப்ரிடியை தாவூத் இப்ராஹிம், கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் பாகிஸ்தான் கிரிக்கெட்டையே உலுக்கியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டிற்கு கடந்த உலகக் கிண்ணத்துடன் முழுக்கு போட்ட அப்ரிடி, இ–20 போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார், பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் இருபதுக்கு 20 அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விடை பெற்றார். எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 20 வருடங்களாக விளையாடி வரும் அப்ரிடி ஓய்வு பெறவே விரும்பியுள்ளது. …
-
- 0 replies
- 285 views
-
-
பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் 3 வது டெஸ்ட் -வெற்றியின் விளிம்பில் மேற்கிந்திய தீவுகள். பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் 3 வது டெஸ்ட் -வெற்றியின் விளிம்பில் மேற்கிந்திய தீவுகள். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3 வதும் இறுதியான போட்டி இடம்பெற்று வருகின்றது. இந்தப் போட்டியின் இன்றைய 4 ம் நாள் நிறைவில் மிக திறமையாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியின் விளிம்பில் காத்திருக்கின்றது. தங்களது 2 வது இன்னிங்சில் ஆடிய பாகிஸ்தான், இன்றைய நாளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 281 ஓட்டங்களையும், மே…
-
- 3 replies
- 399 views
-
-
. இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ற் போட்டியின் முதல்நாள் முடிவில் இலங்கை அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. காலியில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய நாள் ஆட்டம் மழை காரணமாக 4.3 ஓவர்கள் முன்னதாகவே நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 361 ஓட்டங்களைக் குவித்திருந்தது. இலங்கை அணி 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவின் முழங்கையில் பந்து பட்டதன் காரணமாக அவர் வெளியேற, டில்ஷானுடன் இணைந்து குமார் சங்கக்கார…
-
- 6 replies
- 694 views
-