விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கால்பந்தாட்ட சூதாட்டங்கள் ஐரோப்பிய காவல்துறையான யூரோபோல் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன. ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் கால்பந்தாட்டப் போட்டிகளில் ஆட்ட நிர்ணய சூதாட்டங்கள் பெருமளவில் நடந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல்துறை கண்டறிந்துள்ளது. ஐரோப்பாவில் மட்டும் கிட்டத்தட்ட 400 போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாக சந்தேகம் இருப்பதாக யூரோபோல் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது. அதே அளவான எண்ணிக்கைகொண்ட மேட்ச்-ஃபிக்சிங் சூதாட்டங்கள் ஆபிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நடந்துள்ளதாக பல நாடுகளையும் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய யூரோபோல் தெரிவித்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டித் தொடர், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடருக்கான …
-
- 3 replies
- 490 views
-
-
சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியாவுடனான போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ரசிகர்கள் மற்றும் மீடியாக்களை நோக்கி ஆபாசமாக கத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது. 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 2–வது அரை இறுதிப்போட்டியில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தனர். இருப்பினும், இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3–4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது. இதனையடுத்து வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள் மகிழ்ச்சியில் நடனம் ஆடின…
-
- 1 reply
- 490 views
-
-
0 ரன்னில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இங்கிலாந்து உள்ளூர் அணி பிரதி இங்கிலாந்தில் 6 ஓவர் கொண்ட இண்டோர் சாம்பியன்ஸ்ஷிப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கிறிஸ்ட் சர்ச் யுனிவர்சிட்டி- பாப்சைல்டு கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் பாப்சைல்டு கிரிக்கெட் கிளப் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையான ஒருவர் பின் ஒருவராக அவுட் ஆனார்கள். குறைந்த ஓவர் போட்டி என்பதால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட நினைத்தார்கள். ஆனால், ஒரு சிங்கில் ரன் கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. இதனால் ரன்ஏதும் எடுக்காமல் 2…
-
- 2 replies
- 490 views
-
-
ஒற்றை கையால் கேட்ச் செய்து வியக்க வைத்த கிறிஸ் கெயில் கனடாவில் நடந்த டி 20 தொடரில் கிறிஸ் கெயில் ஒரு கையில் அட்டகாசமாக கேட்ச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் மற்றும் டி20 கிரிக்கெட்டின் யூனிவர்ஸல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெயில் கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி 20 தொடரில் தற்போது விளையாடி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் வான்கூவர் நைட்ஸ் - மேற்கிந்தியத் தீவுகள் பி அணிகள் மோதின. இதில் கிறிஸ் கெயில் வான்கூவர் நைட்ஸ் அணிக்காக களமிறங்கினார். முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 17.4 ஓவர்களில் 145 ரன்களுக்…
-
- 1 reply
- 490 views
-
-
தோனி உள்ளே, யுவராஜ், ரெய்னா வெளியே..! டி.என்.ஏ, YoYo டெஸ்ட் விளைவு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் வேண்டுமா? இனிமேல் ரஞ்சிக் கோப்பை சதமோ, ஐ.பி.எல் பர்ப்பிள் கேப்போ இருந்தால் மட்டும் போதாது. எதிர் அணி ஜிம்பாப்வேவாக இருந்தாலும் அந்தத் தொடரில் எளிதில் இடம் கிடைத்துவிடாது. உலகக்கோப்பையின் தொடர் நாயகனாக இருந்தாலும் சரி, உள்ளூர் வீரனாக இருந்தாலும் சரி, ‘ஃபிட்டா இருந்தால் மட்டும்தான் உங்களுக்கு சீட்’ என்பதில் தெளிவாக இருக்கிறது அணி நிர்வாகம். ஏற்கெனவே `yoyo' டெஸ்ட் மூலம் ஃபிட்னெஸின் தேவையை வலியுறுத்திய இந்திய கிரிக்கெட் அணி, இப்போது இன்னொரு படி மேலே போய், வீரர்களுக்கு DNA டெஸ்ட் நடத்தியுள்ளது. இந்தத் தேர்வுகள் எதற்காக? நாம் கொண்டாடும் இந்த விளையாட்டின் …
-
- 0 replies
- 490 views
-
-
மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டிகள், டி20, மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளுக்கான அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும், டெஸ்ட் தொடரில் அஷ்வினுக்கும் இடம் கிடைத்துள்ளது. தோனிக்கு இந்த போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விரலில் ஏற்பட்ட காயத்தினால் உலகக் கோப்பை அணியில் இருந்து பாதியில் விலகிய ஷிகார் தவான் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆகஸ்டு 3ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தத் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், மூன்று ஒருநாள் போட்டிகளும், மூன்று டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன. டி20க்கான அணி விராட் கோலி (கேப்டன்),…
-
- 0 replies
- 490 views
-
-
கைவிடப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடாத்த வாய்ப்பு.! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்ட ஆசிய கிண்ணம்-2020 கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடாத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண போட்டிகள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்த நிலையில் அதனை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்துள்ளது. ஆசிய கிண்ணம்-2020 கிரிக்கெட் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் அனுமதி பெற்றிருந்த நிலையில் இந்திய-பாகிஸ்தான் இடையேயான விரிசல் நிலை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் உலகளாவிய…
-
- 0 replies
- 490 views
-
-
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூஸி. அணியில் ஜேம்ஸ் நீஷம் நியூஸிலாந்து ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம். | படம்: ராய்ட்டர்ஸ். இந்தியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க பயணிக்கும் நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 22-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது, இதனையடுத்து கொல்கத்தா, இந்தூர் ஆகிய நகரங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பன் மைதானத்தில் கடைசியாக டெஸ்டில் ஆடிய ஜேம்ஸ் நீஷம் மீண்டும் தன்னை நிரூபிக்க வாய்ப்பு பெற்றுள்ளார். நியூஸிலாந்து டெஸ்ட் அணி: கேன் வில்ல…
-
- 0 replies
- 489 views
-
-
பட மூலாதாரம்,VIJAYAKANTH VIYASKANTH படக்குறிப்பு,விஜயகாந்த் வியாஸ்காந்த் 10 மே 2024, 07:38 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் மேலதிக வீரர்களில் (மாற்று வீரர்கள் பட்டியல்) ஒருவராக தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்காக நேற்றைய தினம் முதல் தடவையாக விளையாடிய விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளார். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணியை இதற்கு முன்னர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த போதிலும், யாழ்ப்பாணத்தில் பிறந்து…
-
- 0 replies
- 489 views
- 1 follower
-
-
தொடரை வென்றது இங்கிலாந்து நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 84 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஒயின் மோர்கன், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என தெரிவித்தார். இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படதா போதும், பாகிஸ்தான் அணியில், காயத்திலிருந்து மீண்ட யசீர் ஷா, ஸபார் க…
-
- 0 replies
- 489 views
-
-
பார்சிலோனாவில் இணைந்தார் விடல் @AFP சிலி கால்பந்து அணியின் மத்தியகள வீரர் ஆர்டுரோ விடல் மருத்துவ சோதனைகளுக்குப் பின்னர் பயேர்ன் முனிச் கழக அணியில் இருந்து ஸ்பெயினின் பலம்மிக்க பார்சிலோனா கழகத்தில் திங்கட்கிழமை (06) உத்தியோகபூர்வமாக இணைந்தார். விடல், லா லிகா சம்பியனான பார்சிலோனாவுடன் கடந்த வெள்ளிக்கிழமை (03) மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். எனினும், அவரது ஒப்பந்தத் தொகை வெளியிடப்படவில்லை. அது 20 தொடக்கம் 30 மில்லியன் யூரோ என செய்திகள் வெளியாகியுள்ளன. தற்பொழுது 31 வயதுடைய விடல் இன்டர் மிலான் கழகத்துடன் இணைவதற்கு நெருங்கிய போதே கடைசி நேரத்தில் அவரை பார்சிலோனா தனதாக்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 489 views
-
-
சரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது. நேற்றைய தினம் நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டு இன்றைய தினம் தொடரப்பட்டது. இன்றைய தினம் 211 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி இறுதியாக 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 240…
-
- 0 replies
- 489 views
-
-
ஓய்வு குறித்த சிந்தனையே இல்லாமல் ஆடி வரும் 1990 காலகட்ட கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு குறித்த சிந்தனையே இல்லாமல் 1990 காலகட்டத்தில் அறிமுகமான 4 வீரர்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜென்டில்மேன் ஆட்டம் எனப்படும் கிரிக்கெட் உலகம் முழுவதும் சொற்ப நாடுகளில் மட்டுமே ஆடப்பட்டு வருகிறது. டெஸ்ட், 50 ஓவர் ஒரு நாள் ஆட்டம் போன்றவை மட்டுமே ஆடப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட டி 20 ஆட்டங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக பெரிய அணிகள் மோதும் டெஸ்ட் ஆட்டங்களைத் தவிர ஏனைய ஆட்டங்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில்…
-
- 0 replies
- 489 views
-
-
மலிங்கவிற்கு ஓய்வு இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு ஓய்வு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அந்த வகையில் மலிங்கவுக்கு 3 மாதகால ஓய்வு வழங்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/5676
-
- 0 replies
- 489 views
-
-
மூன்று போட்டிகளையும் முழுமையாக கைப்பற்றிய இலங்கை ; வெறுங் கையுடன் வீடு திரும்பும் பங்களாதேஷ் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 122 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்ற நிலையில் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியிலும் வெற்றியை தவறவிட்டது பங்களாதேஷ். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 ஓருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.இந்த தொடரின் மூன்றாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, வீரர்களின் சிறப்…
-
- 0 replies
- 489 views
-
-
டேரன் சமி: ‘என்னை காலு என அழைத்தவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்’ - சிக்கலில் இஷாந்த் சர்மா? இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணைய பக்கங்களில் வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்துள்ளோம். டைம்ஸ் ஆப் இந்தியா: 'என்னை காலு என அழைத்தவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்' - விஸ்வரூபம் எடுக்கும் நிறவெறி புகார் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியபோது தன்னையும், இலங்கை வீரர் திசரே பெரேராவையும் சிலர் 'காலு' என்று அழைத்ததாக சமூகவலைத்தளத்தில் கடந்த வார இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணிகளின் முன்னாள் கேப்டனும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்அணியின் வீரருமான டேரன் சமி தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது என 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேடு தெரிவி…
-
- 0 replies
- 489 views
-
-
மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் : தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நாளை ஆரம்பம் 11 ஆவது மகளிர் ஒரு நாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள அணிகளை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நாளை 7ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளன. 2017 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டிகளில் விளையாடவுள்ள அணிகளை தெரிவு செய்வதற்கான தகுதி காண் சுற்றுப் போட்டிகளே இலங்கையில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இம் முறை மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 8 நாடுகளின் அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன. இதில் பங்கேற்கவுள்ள ம…
-
- 1 reply
- 489 views
-
-
Hall of Fame விருதிற்குப் பாத்திரமானார் முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உயரிய விருதான Hall of Fame விருதுக்கு இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று மாலை விடுத்த அறிக்கையில் உறுதிப்படுத்தியது. கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். இதன் மூலம் Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்க…
-
- 2 replies
- 489 views
-
-
'தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்' உலக இருபதுக்கு-20 தொடரில் இலங்கை அணிக்குப் பெறப்பட்ட தோல்விகளுக்கும் அத்தொடருக்காக இலங்கைக் குழாமில் லஹிரு திரிமான்ன சேர்க்கப்பட்டமைக்குமான பொறுப்பை ஏற்பதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளரும் இலங்கையின் முன்னாள் அணித்தலைவரான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். உலக இருபதுக்கு-20 தொடரில், நடப்புச் சம்பியன்களாகக் களமிறங்கிய இலங்கை அணி, சுப்பர் 10 சுற்றோடு வெளியேற்றப்பட்டது. அதில், 4 போட்டிகளில் பங்குபற்றி, ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் மாத்திரமே அவ்வணி வெற்றிபெற்றிருந்தது. இந்தத் தொடருக்கான குழாமைத் தெரிவுசெய்வதற்கான பொறுப்பு, இத்தொடருக்காக இலங…
-
- 0 replies
- 489 views
-
-
ஊக்க மருந்து பயன்படுத்திய சக வீரர் மீது கோபம் கிடையாது – போல்ட் ஊக்க மருந்து பயன்படுத்தியமை நிரூபணமான சக வீரர் மீது கோபம் கிடையாது என நட்சத்திர ஓட்ட வீரர் ஹூசெய்ன் போல்ட் தெரிவித்துள்ளார். சக வீரரின் ஊக்க மருந்து பயன்பாட்டு குற்றச்சாட்டு காரணமாக போல்ட் ஒர் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை இழக்க நேரி;ட்டுள்ளது. அஞ்சல்ப் போட்டியில் ஜமெய்க்காவின் சார்பில் பங்கேற்ற வீரர் ஒருவர் ஊக்க மருந்து பயன்படுத்தியமை அம்பலமாகியுள்ளதனால் இவ்வாறு பதக்கம் ஒன்றை இழக்க நேரிட்டமை வருத்தமளிக்கின்றது என்ற போதிலும் சக வீரர் மீது குரோத உணர்வு ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றிருந்த ஹூசெய்ன் போல்ட்இதில் ஒரு பதக்கத்தை தற்…
-
- 0 replies
- 489 views
-
-
மிட்செல் ஜான்சன் வேகத்தில் நிலைகுலைந்த ஸ்டீவ் ஸ்மித், அடிபட்ட ஷான் மார்ஷ் மிட்செல் ஜான்சன். | கோப்புப் படம். ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடருக்காக முழு மூச்சில் பயிற்சி பெற்று வருகிறது. இந்நிலையில் வலைப்பயிற்சியின் போது ஜான்சனின் ஆக்ரோஷத்துக்கு ஸ்டீவ் ஸ்மித் நிலைகுலைய, ஷான் மார்ஷ் விரலைப் பெயர்த்தது மற்றொரு பந்து. எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், ஜான்சன் ஆகியோர் விளையாடவில்லை. இந்நிலையில் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடுபிட்சில் மார்ஷ், ஸ்மித், ஜான்சன் பயிற்சியில் ஈடுபட்டனர். இங்கிலாந்து அணி தன்னிடமிருந்து ஆஷஸ் தொடரில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை காட்டும் விதமாக ஜான்சன் கடும் வேகமும் ஆக்ரோஷமும் காட்டினார். அதில்தான் உலகின…
-
- 0 replies
- 488 views
-
-
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணி வெற்றி நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று ரி-20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்த சுற்றுப் பயணத்தில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று பாகிஸ்தான் அணி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், நடைபெற்று வருகின்றது. இதன் முதல் ஒரு…
-
- 0 replies
- 488 views
-
-
ராகுல் அவுட், கம்பீர் இன்... ஒருநாள் அணியில் யுவராஜ்?... #SportsBytes கே.எல்.ராகுல் அவுட், கம்பீர் இன்... கான்பூர் டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் கே.எல்.ராகுல் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். அவருக்குப் பதிலாக ஷிகர் தவன் ஃபீல்டிங் செய்தார். அநேகமாக ராகுல் கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவருக்குப் பதிலாக கவுதம் கம்பீர் அணியில் சேர்க்கப்படலாம் என்றும், அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று ஃபிட்னஸ் தேர்வில் தேறி விட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் ராகுல் விலகல் குறித்தும், கம்பீர் வருகை குறித்தும் பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை…
-
- 0 replies
- 488 views
-
-
அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் ரவிந்து, ஷெலிண்டா சிறந்த வீரர்களாக முடிசூடல் By Mohammed Rishad - எதிர்கால நட்சத்திர வீரர்களை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் இவ்வருடமும் நடைபெற்ற 35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான தேசிய ரீதியிலான மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக சிலாபம், லுனுவிலை வேகட மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரவிந்து டில்ஷான் பண்டார தெரிவானார். இம்முறை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 47.53 செக்கன்க…
-
- 0 replies
- 488 views
-
-
தேசியமட்ட பளுத் தூக்கும் போட்டியில் முல்லைத்தீவு மாணவி சாதனை Oct 15, 20190 முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. செ.ரிசபா பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்ற தேசியமட்ட பளுத் தூக்கும் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.குறித்த மாணவி 17 வயதுப்பிரிவில் 59Kg நிறையுடைய பளுத்தூக்கல் போட்டியில் 79kg தூக்கி தேசிய ரீதியில் வரலாற்று சாதனை படைத்ததுடன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் தண்டுவான் அ.த.க.பாடசாலைக்கும் தண்டுவான் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் http://www.samakalam.com/செய்திகள்/தேசியமட்ட-பளுத்-தூக்கும்/
-
- 1 reply
- 488 views
-