விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கிறிஸ் கெயில் பறக்கவிட்ட ‘சிக்ஸர்களுக்கு பலன்’ - ஷாகித் அப்ரிடியின் சாதனை சமன் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் - படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் சாதனையை மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் சமன் செய்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக டி20 தொடர் விளையாட இருப்பதால், அதில் அடிக்கும் சிக்ஸர்கள் மூலம் உலகிலேயே அதிகமான சிக்ஸர்கள் அடிக்கும் வீரராக கெயில் வலம் வரப்போகிறார். வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கடைசி மற்றும் 3-வது போட்டி செயின்ட் கிட்ஸ் நகரில் சனிக்கிழமை நடந்தது. இதில் அதிரடியாக ஆடிய…
-
- 0 replies
- 593 views
-
-
கிறிஸ் கெயில் விளாசல் சதம்: ஜமைக்கா அபார வெற்றி கரீபியன் பிரிமியர் லீகில் தொடர்ந்து அதிரடியாக ஆடிவரும் கிறிஸ் கெயில். | கோப்புப் படம்: ஏ.பி. கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில் கிறிஸ் கெயில் ஆடும் ஜமைக்கா தாலவா அணி அவரது அதிரடி இன்னிங்ஸினால் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஜமைக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதில் கிறிஸ் கெயில், 57 பந்துகளில் 6 பவுண்டரி 9 சிக்சர்களுடன் 105 ரன்கள் விளாசினார். எதிரணியான டிரினிடாட் & டொபாகோ அணி 130 ரன்களையே எடுக்க முடிந்தது. டிரினிடாட் கேப்டன் டிவைன் பிராவோ டக் அவுட் ஆனார். இந்த அணியில் ஜாக் காலிஸ் மட்டும் தொடக்க வீரராக களமிறங்கி 36 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.…
-
- 0 replies
- 344 views
-
-
கிறிஸ் கெய்லுக்கு தீபிகா படுகோனேவுடன் இப்படியும் ஒரு ஆசை ; அதிர்ச்சியில் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புவதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரரான கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடும் கெய்லின் அதிரடி ஆட்டமே பலரையும் ரசிகர்களாக்கி வைத்திருக்கிறது. இந்தியாவில் தமிழகத்தில் தற்போது இடம்பெற்றுவருகின்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் பிராவோ, கெய்ல் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சென்னை வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கெய்ல் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் அவரிடம் சில கேள்விகளைக் கே…
-
- 6 replies
- 657 views
-
-
கிறிஸ் கெய்லை கண்டு பயந்த லாரா..! மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல், ‘சிக்ஸ் மெசின்: நான் கிரிக்கெட்டை விரும்புவதில்லை... அதை நேசிக்கிறேன்’ என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சுவாரஸ்மான ஒரு நிகழ்வில், "சில வீரர்கள் தங்களது சாதனைகள் முறியடிக்கப்பட்டு விடுமோ என்று பயப்படுவார்கள். அதற்கு பிரையன் லாராவும் உதாரணம். 2005ம் ஆண்டு ஆன்டிகுவாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லாரா 4 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பிறகு வீரர்களின் ஓய்வறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த லாரா, அடிக்கடி பால்கனிக்கு வந்து ஸ்கோர் போர்டை மட்டும் பார்த்தபடி உள்ளே சென்றார். அச்சமயம் களத்…
-
- 2 replies
- 1k views
-
-
கிறிஸ் கெய்லை மீண்டும் அணியில் இணைத்துக்கொள்வதில் சிக்கல் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை மீண்டும் அணியில் இணைத்துக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ் கெய்ல் இந்தியன் பிறிமியர் லீக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவருகின்றபோதிலும், தேசிய அணியில் அவர் இணைத்துக்கொள்ளப்படவில்லை. கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையுடன் ஏற்பட்ட முரன்பாடுகளை அடுத்து கிறிஸ் கெய்ல் மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த…
-
- 1 reply
- 634 views
-
-
கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல்.....! உச்சிக் குடுமி உள்ள பஞ்சாப் அணியில் அழகுக் கூந்தலுடன் குடிபுகுந்தான் கரிய நிறமும் பெரிய உருவமும் உனது பார்த்ததும் பருகிடும் பாவையர் மனது....! வர்ண வர்ணக் கையுறைகள் கலகலக்க மட்டையிலோ அச்சடித்த "த பாஸ்" மினுமினுக்க சிங்காரச் சிரிப்பழகும் சிதறிவர சிங்கத்தின் நடையழகுடன் நீ நடந்து வர .....! இரண்டு ஓவர்கள் நின்று ஆடினாலே பெஸ்ட்டு மூன்று தாண்டினால் சதமடித்து வரும் "பாட்" டு பந்துகள் எகிறிடும் பல மீட்டர் கடந்து பவுலர்க்கெல்லாம் ஏறிடும் ஹார்ட் பீட்டு......! அங்கும் இங்கும் ஆலாய் பறந்து பந்து பிடி…
-
-
- 80 replies
- 9.5k views
- 1 follower
-
-
கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை காண்பித்ததால் குழந்தை போன்று கதறி அழுதேன் – மேற்கிந்திய அணியின் முன்னாள் மசாஜ் ஊழியர் நீதிமன்றில் சாட்சியம் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை தன்னிடம் காண்பித்தபோது தான் குழந்தை போன்று கதறி அழுததாக அவ்வணியின் பெண் மசாஜ் ஊழியராக பணியாற்றிய யுவதி ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார். லியனே ரஸல் எனும் இந்த யுவதி, அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்றில் நடைபெறும் வழக்கு விசாரணையில் சாட்சிமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஒருநாள் சர்வதேச உலக கிண்ணப் போட்டிகள் நடை பெற்றபோது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினருக்கான மசாஜ் ஊழியராக பணி யாற்றியவர் லியன…
-
- 4 replies
- 561 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராக தற்சமயம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மாறியுள்ளார். 2021 செப்டம்பர் முதலாம் திகதி போர்ச்சுகல், அல்கர்கேவ் மைதானத்தில் நடந்த போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டியின்போது அதிக கோல்கள் அடித்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக போர்ச்சுகல் அணித் தலைவர் ரொனால்டோ தனது 110 ஆவது மற்றும் 111 ஆவது கோல்களை அடித்தார். இதன் மூலம் ஆண்கள் சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்த வீரராக காணப்பட்ட ஈரானிய அலி டாய்யின் (109 கோல்) முறியடிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக சர்வதேச போட…
-
- 0 replies
- 249 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோ 4 ஆவது தடைவையாகவும் பெலென்டோ விருதினை சுவீகரி்த்துக் கொண்டார் போர்த்துக்கல் மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இவ்வாண்டுக்கான பெலென்டோ விருதுக்கு பாத்திரமானார். இவர் இந்த விருதினை வென்றுள்ள நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த பெலென்டோ விருது வழங்கும் விழா ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நேற்று (12) நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் பலரது எதிர்பாரப்புகளுக்கு மத்தியில் வருடத்தின் திறமையான கால்பந்தாட்ட வீரருக்கான விருதினை போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்று…
-
- 1 reply
- 598 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட மெஸ்ஸிக்கு யாரும் இணையாக முடியாது: பார்சிலோனா பயிற்சியாளர், வீரர்கள் புகழாரம் அட்லெடிகோஸ் மாட்ரிட் அணிக்கு எதிரான போட்டியின்போது, எதிரணி வீரர்களை அநாசயமாக வீழ்த்தி கோலடிக்கும் பார்சிலோனாவின் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு யாரும் இணையாக மாட்டார்கள் என பார்சிலோனா பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக், தடுப்பாட்டக்காரர் ஜோர்டி அல்பா ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர். சாம்பியன்ஸ் லீக் போட்டியை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது பார்சிலோனா. கடந்த 1990-ம் ஆண்டு ஏசி மிலன் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை வென்றது. அதன்பிறகு எந்த அணியும் வெற்றிக்கோப்பையைத் தக்கவைத்ததில்லை. கடந்த மே மாதம் நடந்த இறுதிப்போ…
-
- 0 replies
- 293 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறந்த உதைபந்தாட்ட வீரர் 2014 உலகின் சிறந்த உதைபந்தாட்ட வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பான பிபா சார்பில் நடந்த விழாவில் உலகின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ(37,66%) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 2008 ஆம் ஆண்டிற்குப்பின்னர் சென்ற ஆண்டும் இந்த விருதைப்பெற்றுக்கொண்ட ரொனால்டோ 2014 ஆம் ஆண்டுக்கான விருதை மீண்டும் தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ஆர்ஜென்ரீனாவின் விளையாட்டு வீரர் லயனல் மெஸ்சி(15,76%) மற்றும் ஜேர்மன் நாட்டின் மானுவெல் நோயர்(15,72%) ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்த விருதை அடைந்துள்ளார். உலகின் சிறந்த உதைபந்தாட்டப் பயிற்சியாளராக …
-
- 2 replies
- 832 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மிகப்பெரிய கால்பந்து வீரர்களில் ஒருவர். ரொனால்டோ ஒரு பல்துறை திறன் கொண்ட தாக்குதல் வீரர், அவரது அதி வேகம், அத்துடன் பலமாக பந்தை உதைக்கும் ஆற்றல் மற்றும் ஆழமான அடிச்சுவடுகள் ஆகியவற்றிற்காக மற்றைய வீரர்களில் இருந்து தனித்து நிற்கிறார். ரொனால்டோ பல நாடுகளில் லீக் பட்டங்களை வென்றுள்ளார். ரொனால்டோ பங்குபற்றிய 292 விளையாட்டுகளில் 311 கோல்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=135112
-
- 1 reply
- 676 views
-
-
கிறிஸ்ரியானோ றொனால்டோவின் அதிசிறந்த 10 கோல்கள் (2016)
-
- 0 replies
- 396 views
-
-
கிலியன் எம்பாப்பே பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராகப் பேசியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 9 ஜனவரி 2023, 04:27 GMT பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் நோயல் லு கிரேட், தேசிய அணிக்குப் பயிற்சியளிப்பது குறித்து விவாதிக்க அழைத்தால், அழைப்பை எடுக்க மாட்டார் என்று முன்னாள் மிட்ஃபீல்டர் ஜினுடீன் ஜுடான் குறித்துப் பேசினார். அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜினுடீன் ஜிடானுக்கு ஆதரவாக பிரெஞ்சு அணியின் முன்கள ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே குரல் கொடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு கடந்த சனிக்கிழமையன்று தலைமை பயிற்சியாளர் டி…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
கில்கிறிஸ்ட்டை வளைக்க கடும் போட்டி Tuesday, 19 February, 2008 12:12 PM . மெல்பர்ன், பிப்.19: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் கில்கிறிஸ்ட்டை அதிக விலை கொடுத்து தங்கள் அணிக்கு கொண்டு வர இந்திய பிரிமியர் லீக்கின் கொல்கத்தா மற்றும் மொகாலி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. . இதனால் கில்கிறிஸ்ட்டுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய பிரிமியர் லீக்கின் 8 அணிகளுக்கு வீரர்களை சேர்ப்பதற்கான போட்டி நாளை மும்பையில் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கு கில்கிறிஸ்ட்டுக்கு 10 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணிக்கு தலை…
-
- 0 replies
- 1k views
-
-
கில்லர் மில்லர், ஹாட்ரிக் சதம் அடித்த பாக் பேட்ஸ்மேன்! நறுக் 4 பிட்ஸ் தென்னாப்பிரிக்க மண்ணில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. முதல் இரண்டு ஒருதின போட்டிகளில் தோல்வியைத் தழுவிய நிலையில், இந்த போட்டியை ஜெயித்தே ஆக வேண்டும் என நேற்று நடந்த களமிறங்கியது ஆஸ்திரேலியா. டர்பனில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்தில் இருந்தே அடித்து நொறுக்கி இன்னிங்ஸை ஆரம்பித்தனர் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள். பவுண்டரிக்கும் சிக்ஸருக்கமாக பந்துகள் பறந்து கொண்டே இருக்க ஸ்டெயின், ரபாடா திணறிப்போயினர். ஆரோன் பின்ச் 33 பந்தில் 54 ரன் எடுத்து அவுட்டானாலும், அதன் பிறகு களத்தில் இறங்கிய ஸ்டீவன் ஸ்மித், வார்னருடன் இணைந்து தென்னாபிரிக்க பவுலர்களை…
-
- 0 replies
- 634 views
-
-
கிளப் உலகக் கோப்பை பார்சிலோனா சாம்பியன்; பேயர்னில் இருந்து பெப் விலகல் ! கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 3- 0 என்ற கோல் கணக்கில் ரிவர் பிளேட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஜெர்மனி ஜாம்பவான் பேயர்ன் மியூனிச் அணியின் பயிற்சியாளராக இருந்த பெப் கார்டியாலா விலகுகிறார். அவருக்கு பதிலாக ரியல்மாட்ரிட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி, பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் உள்ள யோகஹாமா நகரில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் பார்சிலோனாவுடன் தென்அமெரிக்க சாம்பியன் ரிவர் பிளேட் அணி மோதியது. இந்த போட்டியில் காயம் காரணமாக களம் இறங்கமாட்டார் என்று கூறப்பட்ட, லயனல் மெஸ்சியும் விளையாடினார். முத…
-
- 0 replies
- 597 views
-
-
கிளப் போட்டிகளில் ரொனால்டோ 500 கோல்கள் அடித்து சாதனை கிளப் அணிகளுக்கிடையிலான கால்பந்து போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 500 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் இவர் ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். கிளப் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த 2-வது அரை இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிளப் அமெரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இது அ…
-
- 0 replies
- 317 views
-
-
கிளப் லீக்: பெங்கால் பேட்ஸ்மேன் அவுட்டாகாமல் 413 ரன் அடித்து சாதனை கிளப் லீக் போட்டியில் மேற்கு வங்காள பேட்ஸ்மேன் பங்கஜ் ஷா அவுட்டாகாமல் 413 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் சார்பில் முதல் டிவிஷன் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பரிஷா ஸ்போர்ட்டின் அணி சார்பில் 28 வயதான பங்கஜ் ஷா 44 பவுண்டரிகள், 23 சிக்சர்கள் மூலம் அவுட்டாகாமல் 413 ரன்கள் குவித்துள்ளார். 6-வது விக்கெட்டுக்கு அஜ்மிர் சிங் (47) உடன் இணைந்து 203 ரன்களும், 7-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயன் சக்ரபோர்ட்டி (22) உடன் இணைந்து 191 ரன்களும் குவித்தார். இவரது அபார ஆட்டத…
-
- 0 replies
- 327 views
-
-
கிளாசிகோ... கேடலோனியா... மெஸ்ஸி Vs ரொனால்டோ... இது கால்பந்தையும் தாண்டிய பகை! #ElClasico ‘எல் கிளாசிகோ’ – கால்பந்து உலகின் சென்ஷேசன் வார்த்தை. நார்கோலெப்சி பிரச்னை இருப்பவரையும் நடுநிசி வரை கண் உறங்காமல் வைத்திருக்கும் மந்திர வார்த்தை. சீரான இதயத்தை சி.பி.ஆர் இன்ஜின் போல் அலறவைக்கக்கூடிய வார்த்தை. அப்படி என்ன இந்த கிளாசிகோவில் ஸ்பெஷல்? ரியல் மாட்ரிட், பார்சிலோனா என்னும் மாபெரும் இரு அணிகள் தங்கள் கௌரவத்திற்காகப் போராடும் 90 நிமிட யுத்தமே இந்த எல்-கிளாசிகோ. சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை விட கிளாசிகோ மேட்ச்சுக்கு ரசிகர்கள் அதிகம். இன்று இந்த சீசனின் முதல் கிளாசிகோ மோதல். மொத்தக் கால்பந்து உலகமும் காத்துக்கிடக்கிறது. #ElClasico …
-
- 3 replies
- 407 views
-
-
கிளாடியோ ரனேரி... சொல்லி அடித்த கில்லி! - லெய்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றிக்கதை “நம் அணியின் இன்றைய தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். நமது அணிக்கு அவப்பெயர் பெற்றுத்தரும் வகையில் ஒரு பயிற்சியாளரை நியமித்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என்று சுமார் இரண்டு ஆண்டுகள் முன்னர் கூறினார் கிரீஸ் கால்பந்துக் கழகத் தலைவர் ஜியார்கோஸ் சர்ரிஸ். கால்பந்து தரவரிசையில் மிகவும் பின்தங்கிய ஃபரோ ஐலாண்டு அணியிடம், 2004 ல் ஐரோப்பிய சாம்பியன் கிரீஸ் தோற்ற பிறகு அந்த அறிக்கையை அவர் வெளியிட்டார். மொத்த கால்பந்து உலகமும் அதை ஆமோதித்தது. ஆனால் சரியாக 18 மாதங்கள் கழித்து, அன்று கிரீஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட அதே பயிற்சியாளர்தான் இன்று மொத்த கால்பந்து உலகத்தாலும் ம…
-
- 0 replies
- 450 views
-
-
எனது குடும்பமே ஒரு விளையாட்டு குடும்பம். அதுக்காக நாங்கள் எல்லாருமே பெரிய விளையாட்டு வீரர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. எந்த விளையாட்டு என்றாலும் இரசிப்போம். ( அந்த விளையாட்டையும் என்று அர்த்தப்படக்கூடாது ) அப்பா மாணவப் பருவத்தில் தனது கல்லூரிக்காக விளையாடியவர். தொலைக்காட்சியில் எந்த விளையாட்டு ஒளிபரப்பினாலும் இரசித்து பார்ப்பார். பொருளாதாரத்தடை மின்சாரம் இல்லாத நேரத்தில் கூட ஏதாவது முயற்சி செய்து துடுப்பாட்ட வர்ணனை கேட்காவிட்டால் அவருக்கு தூக்கம் வராது . அப்படிப்பட்டவருக்கு பிள்ளையாக பிறந்த எங்களுக்கும் அவரது பயித்தியம் தொற்றிக் கொண்டது . (நேரம் வரும் போது தொடர்வேன். அதுவரை கிளார்க் தொடர்பான செய்திகளை படங்களை விரும்பினால் யாரவது இணைக்கலாம் . நன்றி, )
-
- 0 replies
- 320 views
-
-
கிளார்க் தலைமையில் ‘நச்சுக் கலாச்சாரம்’ பரவியது: மிட்செல் ஜான்சன் கடும் தாக்கு மைக்கேல் கிளார்க், மிட்செல் ஜான்சன். | படம்: ஏ.பி. ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், மைக்கேல் கிளார்க் கேப்டன்சி காலக்கட்ட பிரச்சினைகளை அலசி எழுதும் போது “நச்சுக் கலாச்சாரம்’ பரவியது என்று கடுமையாக சாடியுள்ளார். தனது ‘Resilient’ என்ற சுயசரிதை நூலில், பாண்டிங் சென்ற பிறகே கிளார்க் தலைமையில் அணியில் கடும் கோஷ்டிகள் உருவானதால் சில வீரர்கள் விளையாடுவதையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தனர் என்று எழுதி அதிர்ச்சி அலை பரப்பியுள்ளார். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு ஜான்சன் கூறும்போது, “பாண்டிங்கிற்குப் பிறகு நடைமுறைகள் மிகவு…
-
- 0 replies
- 305 views
-
-
கிளார்க் மன்னிப்பு கேட்டிருந்தால் அதனை ஏற்றுக் கொள்கிறேன்: ஏ.பி.டிவிலியர்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் எதிரணியினரை நோக்கி வசைச்சொற்களைப் பயன்படுத்தும் போது பல தருணங்களில் அது விரும்பத் தகாத தனிநபர் தாக்குதலாக அமைகிறது என்று தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி கேப்டன் ஏ.பி.டிவிலியர்ஸ் சாடியுள்ளார். ஜிம்பாவேயில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக வழக்கம் போல் இரு அணிகளும் வார்த்தைப்போரில் ஈடுபட்டன. அப்போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணியை ஆஸ்திரேலியா 2-1 என்று வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய போது ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லை கடந்து வசைச் சொற்களைப் பய…
-
- 0 replies
- 523 views
-
-
கிளித்தட்டு அல்லது தாச்சி இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் பரவலாக விளையாடப்படும் விளையாட்டாகும். இது உடலுக்கு நல்ல பயன் தரும் விளையாட்டாகும். [தொகு] போட்டி விதிமுறைகள் மைதானத்தை முதலில் ஒரு போக்கு பெட்டிகளாக பிரித்து, பின்னர் நடுவே ஒரு கோடு போட்டு கொள்ளப்படும். படத்தை பார்க்கவும். எத்தனை ஒரு போக்கு பெட்டிகள் என்பது விளையாட்டு குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தது. குறைந்தது ஒரு குழுவுக்கு 3 உறுப்பினர்களாவது வேண்டும். கிளிதட்டு மைதான அமைப்பு யார் நாணய சுண்டலில் தோற்கின்றார்களோ அவர்கள் மறிப்பார்கள், மற்ற குழு புகுவார்கள். மறிக்கும் அணியினர் முதலாம் கோட்டையும், கடைசி கோட்டையும் தவிர மற்றக் கோடுகளில் நிற்பார்கள். மிகுதியான மறிக்கும் அணியை ச…
-
- 1 reply
- 2k views
-