விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ரெய்னா ‘ரெடி’ அக்டோபர் 19, 2014. டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் சாதிக்க ரெய்னா தயாராக உள்ளார். இந்திய அணியின் ‘மிடில் ஆர்டர்’ வீரர் ரெய்னா, 27. குறைந்த ஓவர் போட்டியில் அசத்தும் இவர், சர்வதேச ‘டுவென்டி–20’, ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் என, மூன்றிலும் சதம் அடித்துள்ளார். ஆனால், டெஸ்டில் மட்டும் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறார். கடைசியாக 2012, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் (ஆக., 31) விளையாடினார். இதன் பின், ரோகித் சர்மாவிடம் தனது இடத்தை பறிகொடுத்தார். திடீர் அதிர்ஷ்டம்: தற்போது சிறப்பான ‘பார்மில்’ உள்ள இவருக்கு, மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், ரோகித் சர்மா காயம் காரணமாகத்தான் விலகியுள்ளார். இ…
-
- 0 replies
- 452 views
-
-
சம்பியன் பட்டங்களை வென்ற புனித பத்திரிசியார் மற்றும் சென் சேவியர் கல்லூரி அணிகள் Tamil சம்பியன் பட்டங்களை வென்ற புனித பத்திரிசியார் மற்றும் சென் சேவியர் கல்லூரி அணிகள் வட மாகாண பாடசாலைகள் விளையாட்டு நிகழ்வின் கால்பந்தாட்ட தொடரில் 18 வயதின் கீழ் பிரிவில் மன்னார் சென் சேவியர் கல்லூரி அணியும், 16 வயதின் கீழ் பிரிவில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன. 16 வயதின் கீழ் பிரிவு சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்பிரிவுக்கான இறுதிப் போட்டியில் ய…
-
- 0 replies
- 452 views
-
-
ஒலிம்பிக்கில் தடம் பதிக்கும் ஏதிலிகள் : ‘ஏதிலிகள் ஒலிம்பிக் அணி‘யும் அதன் வரலாறும் ஜப்பானில் தொடங்கியிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஏதிலிகள் அணி சார்பாக 29 தடகள் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் உலகமெங்கும் இடம்பெயர்ந்துள்ள 82 மில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்டுள்ளனர். போர், பயங்கரவாதம், வறுமை, வன்முறை என பல காரணங்களுக்காக தங்கள் தாய்நாட்டை பிரிந்து வேறு ஒரு நாட்டுக்கு அடைக்கலம் நாடி செல்பவர்களே ஏதிலிகள். எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை சுமூகமாக கடத்தி செல்லும் நோக்கத்திற்காகவே ஏதிலிகள் புகலிடம் தேடி செல்வது உண்டு. இந்த நிலையில் ஏதிலிகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாட செய்யும் நோக்கில் உருவாக்கப…
-
- 0 replies
- 452 views
-
-
அப்போ புறக்கணிச்சாங்க.. இப்போ ஃபீல் பண்றாங்க! ரஹானே, ஷான் மார்ஷ், அஷ்வின், மோரிஸ், பூம்ரா என எண்ணற்ற கிரிக்கெட் நட்சத்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு பெரும் பங்குண்டு. ஒவ்வொரு தொடரிலும் இந்திய வீரர்கள் மட்டுமின்றி மோரிஸ், போலிங்கர் போன்று அதிகம் அறியப்படாத வெளிநாட்டு வீரர்களின் வாழ்க்கையும் ஐ.பி.எல் லிற்குப் பிறகு மாறியுள்ளது. ஆனால் வெளிச்சத்திலிருந்த எத்தனையோ வீரர்கள், ஐ.பி.எல் அணிகளால் புறக்கணிக்கப்பட்ட சோகமும் நிகழ்ந்துள்ளது. தொடக்கத்தில் அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் வீரர்கள், பின்னர் போன ஏலத்தில் இலங்கை வீரர்கள் என இரு நாடுகளே ஏறக்குறையப் புறக்கணிக்கப்பட்டன. தமீம் இக்பால், பிரெண்டன் டெய்லர், கெவின் ஓ பிரையன…
-
- 0 replies
- 452 views
-
-
வட மாகாணத்தில் புதிய சாதனையை நிலை நாட்டிய வவுனியா நேர்மதி வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் செல்வி நேர்மதி கிட்ணசாமி 2015 ம் ஆண்டு வடமாகாண மட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டு போட்டியில் புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளார். 19வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டம், 1500 மீற்றர் ஓட்டம், 5000 மீற்றர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் முதலாம் இடங்களை பெற்றுத் தேசியமட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 800 மீற்றர் தூரத்தினை 2.36.3 நேரத்திலும் 1500மீற்றர் ஓட்டத்தினை 5.25.0 என்ற நேரத்திலும் ஓடிமுடித்து வடமாகாணத்தில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். http://www.newjaffna.com/moreartical.php?newsid=39609&cat=sports&sel=current&subcat=…
-
- 8 replies
- 452 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி நேற்றைய முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் புற்றுநோயிலிருந்து மீண்டு சில மாதங்களுக்கு முன்பு அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங் சகலதுறை வீராக அசத்தினார். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்திய அணியின் யுவராஜ் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை யுவராஜ் சிங், இந்திய தலைநகர் புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மாணவிக்கு அர்ப்பணித்தார். இது குறித்து மனிதநேயமிக்க யுவராஜ் கூறுகையில், டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட செய்தியை படித்த போது மனதிற்கு வேதனையாக இருந்தது. ஆட்ட நாயகன் விருதை அவருக்கும், அவரது பெ…
-
- 0 replies
- 451 views
-
-
தொடர்ந்து ஏமாற்றம்: வருத்தத்துடன் ஓய்வு பெற்றார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜொனாதன் டிராட் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜொனாதன் டிராட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 பூஜ்ஜியங்களுடன் 72 ரன்களை மட்டுமே டிராட் எடுத்தார். இதனால் அவர் கடும் ஏமாற்றமடைந்தார். பொதுவாக 3-ம் நிலையில் களமிறங்கி இங்கிலாந்துக்கு மிகப்பெரிய டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடிக் கொடுத்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வீரரான ஜொனாதன் டிராட், ஆஷஸ் தொடரின் போது டேவிட் வார்னரின் முதிர்ச்சியற்ற மோசமான விமர்சனத்தினால் மனமுடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதன் பிறகு தற்போது மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் அவர…
-
- 1 reply
- 451 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க ரஷ்ய ஹேக்கர்கள் முயற்சி: அமெரிக்கா- பிரித்தானியா குற்றச்சாட்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்ய ஹேக்கர்கள் செயற்பட்டுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக ரஷ்யாவின் ஜி.ஆர்.யு இராணுவ உளவுத்துறை, இணைய உளவு நடத்தியதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஒலிம்பிக், எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னர் இந்த தாக்குதல்கள் நடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சைபர் தாக்குதல்களின் தன்மை அல்லது அளவை அதிகாரிகள் விரிவாக குறிப்பிடவில்லை. அதே நேரத்தில், அமெரிக்க நீதித்துற…
-
- 0 replies
- 451 views
-
-
ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி ராஜினாமா ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது நபி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக கேப்டனாக செயல்பட்ட அவர், தனது மோசமான பார்ம், அணிக்கு பெரிய அளவில் வெற்றி தேடித்தர முடியாதது ஆகிய காரணங்களால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு முகமது நபி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியிருக்கிறேன். அணியின் வெற்றிக்காக என்னால் முடிந்த அளவுக்கு பாடுபட்டிருக்கிறேன். அணியின் சமீபத்திய செயல்பாடு, எனது மோசமான பார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு எனது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வீரரா…
-
- 0 replies
- 451 views
-
-
இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கேப் டெளனில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா இங்கிலாந்து: 258/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோ டென்லி 87 (103), கிறிஸ் வோக்ஸ் 40 (42), ஜேஸன் றோய் 32 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: தப்ரையாஸ் ஷம்சி 3/38 [10], ஜோன் ஜோன் ஸ்மட்ஸ் 1/43 [10], லூதோ சிபம்லா 1/40 [7], பெயுரன் ஹென்ட்றிக்ஸ் 1/46 [8], அன்டிலி பெக்லுவாயோ 1/47 [8]) தென்னாபிரிக்கா: 259/3 (47.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 107 (113), தெம்பா பவுமா 98 (103), றஸி வான் டர் டுஸன் ஆ.இ 38 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 1/36 [9], ஜோ றூட் 1…
-
- 0 replies
- 451 views
-
-
ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் 2014-10-03 13:28:14 ஆசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான இருபது20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 68 ஓட்டங்களால் இலங்கை அணி வென்றது. தென் கொரியாவின் இன்ச்சொன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 131 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அணித்தலைவர் லஹிரு திரிமான்ன 37 பந்துகளில் 57 ஓட்டங்களைக் குவித்தார். தினேஷ் சந்திமால் 27 பந்துகளில 33 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 65 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் சகல விக்கெட்களையும…
-
- 0 replies
- 451 views
-
-
தோனி போல் கீப்பிங், பேட்டிங் செய்ய விரும்புகிறேன்: சர்பராஸ் அகமட் சர்பராஸ் அகமட். | படம்: ஏ.பி. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மெனான சர்பராஸ் அகமட், தோனி போல் கீப்பிங், பேட்டிங் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: நான் தோனியை பலவழிகளில் பின்பற்றி வருகிறேன். விக்கெட் கீப்பராக அவர் காட்டும் வித்தியாசம், பேட்டிங்கில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பது என்ற விதத்தில் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். அவர் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர், நான் அவரை எனது லட்சிய ஆளுமையாகவே வடிவமைத்துக் கொண்டுள்ளேன். உலகக்கோப்பைக்காக இந்தியாவில் விளையாடுவது உற்சாகமளிக்கிறது. என்னுட…
-
- 0 replies
- 451 views
-
-
2ஆவது தடவையாகவும் சம்பியனாகிய மகாஜன பெண்கள் கால்பந்தாட்ட அணி வடமாகாண கல்வி, விளையாட்டு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலைகளின் அணிகள் மற்றும் வீர, வீராங்கனைகளுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டியின், 19 வயதுப்பிரிவு பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி சம்பியனாகியது. பெண்கள் கால்பந்தாட்டப் போட்டிகள் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில், வவுனியா சிறுவர் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் மாதகல் சென்.ஜோசப் றோமன் கத்தோலிக்க வித்தியாலயமும் மகாஜனக் கல்லூரியும் மோதின. முதற் பாதியாட்டத்தில் மகாஜனக் கல்லூரி வீராங்கனை என்.சானு தனது அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார். இரண்டாவ…
-
- 2 replies
- 451 views
-
-
அறிமுக போட்டியிலேயே அசத்தல்: ஆஷஸ் தொடரை வென்றது அவுஸ்ரேலியா! ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில், அவுஸ்ரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள அவுஸ்ரேலியா அணி, தொடரையும் வென்றுள்ளது. மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி, 185 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 50 ஓட்டங்களையும் …
-
- 5 replies
- 451 views
- 1 follower
-
-
டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான்! காலே: பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்கள் அடித்து ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ளார். காலேவில் இலங்கை& பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 278 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் 215 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை 313 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அகமது ஷேஷாத் டக் அவுட் ஆனார். அசார் அலி 5 ரன்களில் வெளியேறினார். அடுத்து யூனிஸ் கான், மற்றொரு தொடக்க வீரரான ஷான் மசூத்துடன் இணைந்து அணியை மீட்டெடுத்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 255 ரன்கள் க…
-
- 2 replies
- 451 views
-
-
கேட்ச் பிடிப்பதில் நாசர் ஹூசைன் கின்னஸ் சாதனை ( வீடியோ ) கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக உயரத்தில் இருந்து வந்த பந்தை கேட்ச் பிடித்தவர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசேன் . ........ லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ட்ரோனில் இருந்து 160 அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை நாசன் ஹூசேன் கேட்ச் பிடித்து அசத்தினார். இது ஒரு புதிய கின்னஸ் சாதனையாம். ஆனால் 400 அடியில் இருந்து வீசப்பட்ட பந்தை பிடிக்க ஹூசேனால் முடியவில்லை. நாசர் ஹூசேன் சென்னையில் பிறந்தவர் .இங்கிலாந்து அணிக்காக 88 ஒருநாள் போட்டிகள் மற்றும் 96 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். http://www.vikatan.com/new…
-
- 0 replies
- 451 views
-
-
ஹாக்கி: பெல்ஜியத்திடம் காலிறுதியில் இந்தியா தோல்வி: பதக்க வாய்ப்பை இழந்தது பெல்ஜியத்துடனான ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய சோகத்தில் இந்திய வீரர்கள் | படம்: ஏ.பி. ஹாக்கியில் வெண்கலமாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் போனது, காலிறுதியில் பெல்ஜியத்திடம் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது. முதலில் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார், ஆனால் பெல்ஜித்தின் செபாஸ்டியன் டாக்கியர் 2 கோல்களை அடிக்க பெல்ஜியம் 2-1 என்று முன்னிலை பெற்றது. இந்நிலையில் இந்திய அணி சமன் செய்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைய, கடைசி கவுன்ட்டர் அட்டாக்கில் பெல்ஜியம் வீரர் டாம் பூன் 3-வது கோலை அடித்து இந்திய வாய்ப்புக்கு ‘சீல்’ வைத்தார். …
-
- 0 replies
- 451 views
-
-
இலங்கைக்கு எதிரான கடந்த 5 போட்டிகளிலும் வோர்னர் அசத்தல் : அவுஸ்திரேலியா 10 விக்கெட்களால் இலகு வெற்றி (கெத்தராம அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (07) இரவு நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 10 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றி பெற்றது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 134 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன…
-
- 0 replies
- 451 views
-
-
அவுஸ்திரேலிய அணியில் இருந்து விலகும் கிளென் மெக்ஸ்வெல் By Mohamed Azarudeen - 31/10/2019 Share on Facebook Tweet on Twitter அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரமான கிளென் மெக்ஸ்வெல் தனது உள ஆரோக்கியம் சரியாக இல்லாத காரணத்தினால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காலவரையறை இன்றிய ஓய்வு ஒன்றினை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு எடுக்கவுள்ள செய்தியினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உளநல நிபுணரான Dr. மைக்கல் லோய்ட் உறுதி செய்திருக்கின்றார். கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு பெற்றுள்ளதால் அவர் இலங்கை அணிக்கு எத…
-
- 0 replies
- 451 views
-
-
திமுத் கருணாரத்ன கைது இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொரல்லை கிங்ஸி ஹோர்டன் ஒழுங்கையில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் ஒன்றின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 5.15 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொரல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள திமுத் கருணாரத்னவை இன்று பொலிஸில் தடுத்து வைத்திருந்து நாளை (01) திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இவர் செலுத்திய மோட்டார் கார் முச்சக்கரவண்டியொன்றுடன் மோதியதனால் முச்சக்கர வண்டியின் சாரதி சிறுகாயங்களுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…
-
- 0 replies
- 451 views
-
-
ஆபத்தானதா பூம்ராவின் பவுலிங் ஸ்டைல்? “இந்தியாவின் டெத் பவுலிங் சரியில்லை. கடைசி கட்டத்தில் ரன்களை வாரி வழங்குவதால்தான் தோற்க நேருகிறது”. ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு தொடரிலும் தோற்ற பிறகு இந்திய அணிக் கேப்டன் தோனி கூறும் டெம்ப்ளேட் ரீசன் இதுவாகத்தான் இருக்கும். தோனி மட்டுமல்ல, முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருமே இதைத்தான் கருதினர். அதுதான் நிதர்சனமான உண்மையும் கூட. புவனேஷ்வர், மோஹித், ஈஷ்வர் பாண்டே, ஸ்ரன் என எத்தனையோ பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பலன்கிடைக்காத நிலையில், இந்திய பவுலிங்கிற்குக் கிடைத்த பிரம்மாஸ்திரம்தான் ஜாஸ்பிரீத் பூம்ரா. 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக இவர் அறிமுகமானபோது, அதுவரை வெறும் 10 ம…
-
- 0 replies
- 451 views
-
-
உலகக் கோப்பை தகுதி சுற்று :இந்திய அணியில் இடம் பிடித்தார் தமிழக வீரர் தனபால் கணேஷ்! ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் பங்கேற்கவுள்ள சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணியை, பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டைன்டைன் அறிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த தனபால் கணேசுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான 2வது கட்ட தகுதி சுற்று ஆட்டங்கள், 11ஆம் தேதி தொடங்கவுள்ளது. 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில், ஓமன் அணியுடன் விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து குவாம் அணியை எதிர்த்து 16ஆம் தேதி களமிறங்குகிறது. இந்த இரு போட்டிகளுக்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அ…
-
- 0 replies
- 451 views
-
-
மிதாலி ராஜ் சதம்; ராஜேஸ்வரி அபார பந்து வீச்சு: நியூஸி.யை நொறுக்கி அரையிறுதியில் இந்தியா பவுலிங் நாயகி ராஜேஸ்வரி கெயக்வாட் விக்கெட்டை கொண்டாடுகிறார். | படம்.| ராய்ட்டர்ஸ். கேப்டன் மிதாலி ராஜ். | படம்.| ராய்ட்டர்ஸ். டெர்பியில் மிதாலி ராஜ் சதம், வேதா கிருஷ்ணமூர்த்தியின் இறுதிக்கட்ட அதிரடி மூலம் 265 ரன்கள் குவித்த இந்திய அணி பிறகு நியூஸிலாந்தை 79 ரன்களுக்குச் சுருட்டி உலகக்கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணி 186 ரன்களில் மிகப்பெரிய வெற்றியுடன் உலகக்கோப்பை அரையிறுதிக்குள் கம்பீரமாக நுழைந்தது. 2010-க்குப் பிற…
-
- 0 replies
- 450 views
-
-
ஐ.சி.சி. தரப்படுத்தல் : இருவகை போட்டிகளிலும் ஆஸி முதலிடம் Thu, 05/01/2014 - 16:37 ஐ.சி.சியின் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. 5 ஆண்டுக்கு பிறகு அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு வந்துள்ளது. அதேபோல் ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. டெஸ்ட் தர வரிசையில் தென்னாபிரிக்கா 2ஆவது இடத்திலும், இங்கிலாந்து 3ஆவது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் அணி 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 3ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி 2 இடங்கள் பின்தள்ளி 5ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 7 ஆவது இடத்திலுள்ளது. ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி 2ஆவது இடத்திலுள…
-
- 0 replies
- 450 views
-
-
பங்காளதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட்: டாக்கா அணி சாம்பியன் பங்காளதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராஜ்ஷாஹி அணியுடனான ஆட்டத்தில் டாக்கா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டாக்கா அணி சாம்பியன் வங்காளதேசம் கிரிக்கெட் வாரியம் சார்பில் பங்காளதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்தது. 7 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் இறுதிப் போட்டிக்கு ஷகிப் - அல்-ஹசன் தலைமையிலான டாக்கா டைனமைட்ஸ் அணியும், டேரன் சமி தலைமையிலான ராஜ்ஷாஹி கிங்ஸ் அணியும் மோதின. முடிவில் பேட்டிங் செய்த டாக்கா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன் எடு…
-
- 1 reply
- 450 views
-