விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக்: வங்கதேச பந்துவீச்சாளர் உலக சாதனை வங்கதேச அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் தனது முதல் ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் எடுத்து உலகசாதனை நிகழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாக்காவில் நடைபெறும் 5-வது ஒருநாள் போட்டியில் அறிமுக வீர்ராகக் களமிறங்கிய தைஜுல் இஸ்லாம் ஹாட்ரிக் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் வீரரானார் தைஜுல் இஸ்லாம். 22 வயதாகும் தைஜுல் இஸ்லாம் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 7 ஓவர்கள் வீசி 2 மைடன்களுடன் 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் ஜிம்பாப்வே அணி 30 ஓவர்களில் 12…
-
- 1 reply
- 445 views
-
-
ஆறு விக்கெட் எடுத்தாலும் டோணியிடம் திட்டு வாங்கிய சஹல்.. ஏன் தெரியுமா? பெங்களூர்: எப்போதுமே கூலாக காணப்படும் முன்னாள் கேப்டன் டோணி, நேற்று பவுலர் சஹலிடம் தனது கோபத்தை வெளிக்காட்டி ஆச்சரியமூட்டினார். பெங்களூரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 202 ரன்களை குவித்தது. 203 ரன்கள் வெற்றி இலக்கு என்ற போதிலும், பேட்டிங்கின் சொர்க்கபுரியான பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் அது எட்டக்கூடிய ஒன்று என்பதால் இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கிலும் அலர்ட்டாகவே இருந்தனர். பவர் பிளே ஓவர் என்றபோதிலும், ஆட்டத்தின் 2வது ஓவரை வீசும் பொறுப்பை இளம் சுழற்பந்து வீச்சாளர் சஹலுக்கு கொடுத்தார் கேப்டன் விராட் கோஹ்லி. ச…
-
- 1 reply
- 445 views
-
-
நடுவரை தள்ளிய விவகாரம்: கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாட தடை பார்சிலோனா அணியுடனான ஆட்டத்தின் போது நடுவரை பிடித்து தள்ளியதால் ரியல் மாட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட்ரிட்: பார்சிலோனா அணியுடனான ஆட்டத்தின் போது நடுவரை பிடித்து தள்ளியதால் ரியல் மாட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் ஸ்பானீஸ் சூப்பர் லீக் தொடரில் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் மோதிய முக்கியமான போட்டி நேற்று நடைபெற்றத…
-
- 3 replies
- 445 views
-
-
டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளைக்கு முன்னர் சதமடித்து டேவிட் வார்னர் சாதனை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் உணவு இடைவேளைக்கு முன்பே சதமடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் படைத்துள்ளார். அதிவேக சதமடித்த டேவிட் வார்னர் இன்று ( செவாய்க்கிழமை) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இடது கை தொடக்க ஆட்டக்காரரான வார்னர் 78 பந்துகளில் சதமடித்து இந்த சாதனையை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று, உணவு இடைவேளைக்கு நான்கு நிமிடங்களுக்கு முன்னர், வார்னர் இந்த மைல்கல்லை எட்டினார். …
-
- 1 reply
- 445 views
-
-
இலங்கை வருகிறார் அதிரடி மன்னன் கிளென் மக்ஸ்வெல் . T20 யிலாவது மீண்டெழுமா ஆஸ்திரேலியா? இலங்கை வருகிறார் அதிரடி மன்னன் கிளென் மக்ஸ்வெல் . T20 யிலாவது மீண்டெழுமா ஆஸ்திரேலியா? இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான தொடரின் T20 போட்டிகளுக்கான குழாமில் ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் என புகழப்படும் மக்ஸ்வெல் இணைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இலங்கைக்கான சுற்றுலாவுக்காக தேர்வு செய்யப்பட்ட அணியிலிருந்து மக்ஸ்வெல் நீக்கப்பட்டிருந்தார். அவர் பங்கெடுத்த இறுதி 10 ஒருநாள் போட்டிகளில் போதிய திறமை வெளிப்பாடுகளை காட்டவில்லை எனும் அடிப்படையில், அவர் நீக்கப்பட்டு அணிக்கு ட்ரெவ்ஸ் ஹெட் சேர்க்கப்பட்டார். சூழல் பந…
-
- 0 replies
- 445 views
-
-
ரஷ்யாவில் இடம்பெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு இஸ்லாமிய போராளிக் குழு எதிர்ப்பு! [Wednesday, 2014-02-12 12:37:47] ரஷ்யா நாட்டின் சோச்சி நகரில் கடந்த 7ஆம் தேதி ஆரம்பித்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் இந்தப் போட்டிகளைத் தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் செல்வாக்கினை உயர்த்த உதவும் நிகழ்ச்சியாகக் கருதுகின்றார். எனவே இதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து வடக்கு காகசஸ் மலைப்பகுதியில் உள்ள இஸ்லாமியப் போராளிக் கழகங்கள் இப்போட்டிகளைத் தீவிரமாக எதிர்த்து வந்த போதிலும் பலத்த பாதுகாப்புடன் அவர் இப்போட்டிகளை நடத்தி வருகின்றார். இவற்றில் சில போட்டிகள் 19ஆம் நூற்றாண்டில் வெளியேற்றப்பட்ட சிர்ச…
-
- 0 replies
- 445 views
-
-
முதல்தரப் போட்டிகளில் புதிய சாதனை படைத்த சங்கக்கார Image Courtesy - Sports24hour கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் ஜமெய்க்கா தலாவாஸ் அணிக்காக விளையாடி வரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார முதல்தரப் போட்டி, முதல்தர ஒருநாள் போட்டி (List A) மற்றும் டி20 போட்டிகளில் ஆசியாவிலேயே அதிக ஓட்டங்களைக் குவித்த கிரிக்கெட் வீரர்களில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார். போர்ட் ஒப் ஸ்பெய்னில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக்கின் 7ஆவது லீக் போட்டியில், ட்ரின்பாகோ நைட் றைடர்ஸ் அணியை நான்கு விக்கெட்டுகளால் வீழ்த்தி ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் 47 ஓட்டங்களைக் க…
-
- 0 replies
- 445 views
-
-
முன்னாள் வீரர்கள் அணிக்கு எதிராக விமர்சனங்களை வைப்பது வருத்தமளிக்கிறது: விராட் கோலி முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் வெற்றி குறித்து கூறிய கருத்துகளைக் கண்டித்த விராட் கோலி. | கோப்புப் படம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முழு ஆதிக்கம் செலுத்தி 3-0 என்று தொடரைக் கைப்பற்றியிருந்தாலும் முன்னாள் வீரர்கள் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது காயப்படுத்துகிறது என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். எந்த ஒரு முன்னாள் வீரரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் அவர் பிசிசிஐ.டிவி-க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: "கிரிக்கெட் ஆட்டத்தில் சர்வதேச அளவில் விளையாடியவர்களே கடும் விமர்சனங்களை வைப்பத…
-
- 0 replies
- 445 views
-
-
தோனி, டிராவிட், கோலி போன்ற நல்ல குணமுள்ளவர்கள்ள் கிரிக்கெட்டுக்குத் தேவை: ஐசிசி புகழாரம் ஐசிசி நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்ஸன் : கோப்புப்படம் வாழ்க்கையில் நல்ல குணமும், நல்ல ஒழுக்கமான நடவடிக்கையும் கொண்ட வீரர்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் அவசியம். அதிலும் தோனி, டிராவிட், கோலி போன்ற வீரர்கள் கிரிக்கெட்டுக்கு அவசியம் என்று ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்சன் புகழாரம் சூட்டியுள்ளார் லண்டன் லாட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்சன் பங்கேற்றார். அவர் பேசியதாவது: இன்றைய…
-
- 0 replies
- 445 views
-
-
சாம்பியன்ஸ் லீக் நாக்அவுட் சுற்று: பார்சிலோனாவிடம் மீண்டும் சிக்கியது ஆர்சனல்! ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரின் நாக்அவுட் சுற்றுகள் கடந்த வாரம் முடிவுற்ற நிலையில்,காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான நாக்அவுட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பிடித்த 16 அணிகள் இந்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் இங்கிலாந்தை சேர்ந்த அணிகளான செல்சி மற்றும் அர்சனல் ஆகியவை கடினமான போட்டியை எதிர்நோக்கியுள்ளன. இரண்டு லெக் ஆட்டங்களாக நடைபெறும் இந்த சுற்றில், சொந்த மைதானத்தில் ஒரு ஆட்டத்திலும் ,எதிரணியின் மைதானத்தில் ஒரு போட்டியிலும் விளையாட வேண்டும். இரண்டு போட்டிகளின் முடிவில் ஒட்டு மொத்த கோல்கள் அடிப்படையில், காலிறுதி…
-
- 0 replies
- 445 views
-
-
விடைபெற்ற சங்கக்காரா.. கதறி அழுத தென்ஆப்பிரிக்கா: 2015ம் ஆண்டின் மறக்க முடியாத 10 கிரிக்கெட் புகைப்படங்கள் கிரிக்கெட்டின் முக்கிய ஆண்டான இந்த 2015ம் ஆண்டு இன்னும் 2 நாட்களுடன் முடிவடைகிறது. இந்த வருடம் கிரிக்கெட்டில் உலகக்கிண்ணம், ஆஷஸ் தொடர், தென் ஆப்பிரிக்காவின் நீண்ட நாள் (72 நாட்கள்) இந்திய சுற்றுப்பயணம், இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணம், பகல்- இரவு டெஸ்ட் என பல நிகழ்வுகள் அரங்கேறின. இவற்றில் சில புகைப்படங்கள் மறக்க முடியாதவையாக இருக்கும். அவற்றை பற்றி பார்க்கலாம். 2015ம் ஆண்டின் மறக்க முடியாத 10 புகைப்படங்கள்:- 1) மைக்கேல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ணத்தை வென்றது. …
-
- 0 replies
- 445 views
-
-
சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அத்லெட்டிகோ மட்ரிட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் லீக் தொடரின், ஜெர்மனியின் கால்பந்தாட்டக் கழகமான பெயார்ண் முனிச்சின் மைதானத்தில் ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட், பெயார்ண் முனிச் ஆகிய அணிகளுக்கிடையிலான இரண்டாம் சுற்று அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் பெயார்ண் முனிச் அணி வெற்றி பெற்று 2-2 என்ற ரீதியில் கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியபோதும் பெயார்ண் முனிச் மைதானத்தில் அத்லெட்டிகோ மட்ரிட் அணி பெற்ற கோலின் காரணமாக அவ்வணி இறுதிப் போட்டிக்குள் நுழையவுள்ளது. இப்போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ஸ்கெபி அலோன்ஸோ பெற்ற கோலின் மூலம் அத்லெட்டிகோ ம…
-
- 0 replies
- 445 views
-
-
எம்பாப்பே அடித்த சாதனை கோல்: ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரெஞ்சு உள்நாட்டு கால்பந்து தொடரில் கோலியாத்தாக வலம் வரும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி லீக் ஆட்டம் ஒன்றில் எஃப்.சி. நான்ட் அணியை வீழ்த்தியது. அந்த அணியின் வரலாற்றில் நட்சத்திர வீரரான எம்பாப்பே புதிய சாதனை படைத்துள்ளார். பிரான்சின் லீக் 1 கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர்கள் நிரம்பிய, பலம் வாய்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி எஃப்.சி.நான்ட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டம் பாரிசில் உள்ள பார்சி டெஸ் பிரின்ஸஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாரிஸ் செயின்ட் ஜெர…
-
- 0 replies
- 445 views
- 1 follower
-
-
தோனியின் மனதில் உள்ளதை அறிய முடியாது: கோலிக்கு கபில் அறிவுரை வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் தலைமையேற்று வழி நடத்தும் விராட் கோலி, தோனியிடமிருந்து கேப்டன்சி பண்புகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். மைதானத்தில் உணர்ச்சிகளை வெளிப்படையாக காண்பிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் கோலி இன்னும் முதிர்ச்சியடைய வேண்டும் என்கிறார் கபில் தேவ். "கோலி கிரிக்கெட் மைதானத்தில் ஆக்ரோஷமாக செயல்படுகிறார், அவரது உணர்ச்சிகள் வெளிப்படையாகத் திரையில் தெரிகிறது. மாறாக தோனியின் மனதில் என்ன உள்ளது என்பது ஒருவருக்கும் தெரியாது. உணர்ச்சிகளை வெளிப்படையாக தோனி காண்பிக்க மாட்டார். முதிர்ச்சி என்பது கிரிக்கெட்டில் மிக மிக முக்கியமான விஷயம். தோனி நிறைய …
-
- 0 replies
- 445 views
-
-
வெற்றியில் மிளிர்ந்த வில்லியம்ஸ் றக்பி உலகக் கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதைப் போன்று, நியூசிலாந்து அணியின் சொனி பில் வில்லியம்ஸின் உயர்ந்த நடத்தையும், இறுதிப் போட்டியில் அதிகம் கவனிக்கப்படும், பாராட்டப்படும் ஒன்றாக மாறிப் போனது. நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, நியூசிலாந்து வீரர்கள், மைதானத்தைச் சுற்றிவர முயன்ற போது, 14 வயதான நியூசிலாந்து இரசிகனான சார்லி லைன்ஸ், தனது கதாநாயகனான பில் வில்லிம்ஸை நோக்கிச் செல்ல முயன்றான். எனினும், பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதன் காரணமாக அவனைப் பின்தொடர்ந்த பாதுகாப்பு அதிகாரி, அவனைத் தடக்கிக் கீழே வீழ்த்தினார். இதனைக் கண்ட பில் வில்லியம்ஸ், அந்தப் பாதுகாப்பு அதிகாரியிடமிருந்து லைன்ஸைப் பிரித்து, அவன் பார்வை…
-
- 1 reply
- 445 views
-
-
-
- 2 replies
- 444 views
-
-
அந்த இந்திய பேட்ஸ்மேன் தான் எனக்கு கடும் சவால் அளித்தார் - நிஜம் பேசும் மலிங்கா காயம் காரணமாக இலங்கை அணியில் இருந்து விலகியிருந்தார் லசித் மலிங்கா. தற்போது பரிபூரண குணம் பெற்று வருகிறார். பொதுவாக எதிரணி கிரிக்கெட் வீரரகள், அணிக்குள் நிலவும் அரசியல், ஸ்லெட்ஜிங் என எதைப்பற்றியும் கமெண்ட் அடிக்க மாட்டார் மலிங்கா. இந்நிலையில் சிலோன் டுடே நாளிதழுக்கு மனம் திறந்த பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்திருந்தார். அதில் சில துளிகள் ... காயம் ? "இப்போதைக்கு வேகமாக ஆறிவருகிறது. நெட்டில் பவுலிங் செய்ய ஆரம்பித்து விட்டேன். விரைவில் அணிக்குள் வருவேன் என நினைக்கிறேன். என்னுடைய உடல் தகுதியை வைத்து பார்க்கும்போது இன்னும் 2-3 ஆண்டுகள் நன்றாக விளையாட முடியும…
-
- 0 replies
- 444 views
-
-
ஓய்வுபெற்றார் சர்வான் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் அணித்தலைவர் ராம்நரேஷ் சர்வான், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். 36 வயதான சர்வான், மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக 87 டெஸ்ட் போட்டிகளில் 15 சதங்கள் உள்ளடங்கலாக 40.01 என்ற சராசரியில் 5,842 ஓட்டங்களையும் 181 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 5 சதங்கள் உள்ளடங்கலாக 42.67 என்ற சராசரியில் 5,804 ஓட்டங்களையும் பெற்றதோடு, 18 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 2 அரைச்சதங்களையும் பெற்றார். இவற்றுக்கு மேலதிகமாக, 4 டெஸ்ட் போட்டிகள் உட்பட, 11 சர்வதேசப் போட்டிகளுக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தலைமை தாங்கியிருந்தார். இறுதியாக, 2013ஆம் ஆண்டிலேயே சர்…
-
- 0 replies
- 444 views
-
-
ஜாதவ் விக்கெட் எடுத்ததால் வர்ணனை அறையிலிருந்து வெளியேறிய ஸ்காட் ஸ்டைரிஸ்: மொஹாலியில் ருசிகரம் விக்கெட் வீழ்த்திய கேதர் ஜாதவ்வை பாராட்டும் இந்திய வீரர்கள். | படம்: அகிலேஷ் குமார். மொஹாலி ஒருநாள் போட்டியில் கேதர் ஜாதவ் பவுலிங் பற்றி எதிர்மறையாகக் குறிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ் தனது பந்தயத்தில் தோற்றார். ஜாதவ் பந்து வீச அழைக்கப்பட்ட போது சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோருடன் நியூஸிலாந்து வர்ணனையாளர் ஸ்காட் ஸ்டைரிஸ் வர்ணனை அறையில் அமர்ந்திருந்தார். ஜாதவ்வின் பந்து வீச்சு குறித்து எதிர்மறையாக கருத்து தெரிவித்த ஸ்காட் ஸ்டைரிஸ், “ஜாதவ் இன்று விக்கெட் எடுத்தால் இந்த வர்ணனை அறையிலிருந்து வெளியேறுகிறேன், முதல் விமானத்தை பிடித்து நியூஸில…
-
- 0 replies
- 444 views
-
-
ஊக்கமருந்து சோதனைகளை தவறவிட்ட ஆன்ட்ரே ரஸல்ஸ் March 03, 2016 மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்ட வீரர் ஆன்ட்ரே ரஸல்ஸ் பன்னிரண்டு மாத காலப் பகுதியினுள் மூன்று ஊக்கமருந்து சோதனைகளை தவறவிட்டதாக ஜமைக்கா ஊக்கமருந்து எதிர்ப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஊக்கமருந்து சட்ட விதிமுறைகளின் பிரகாரம் மூன்று ஊக்கமருந்து சோதனைளை தவறவிடுவது குறித்த வீரர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டமைக்கு நிகரானது என்பதால் ரஸல்ஸ் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என தெரியவருகின்றது. கடந்த மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமபாத் அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய ரஸல்ஸ் தொடரின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார். இந்த நிலையில் எதிர்வரும்…
-
- 0 replies
- 444 views
-
-
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு? இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுடெல்லி: லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த தவறியதால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து செல்வாக்குமிக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ஏற்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த பணிக்கு தகுதியான நபரை…
-
- 1 reply
- 444 views
-
-
பந்து தலையில் தாக்கி மயங்கிய பிரக்யான் ஓஜா : வைத்தியசாலையில் அனுமதிப்பு (காணொளி இணைப்பு) உள்ளூர் போட்டியொன்றில் விளையாடி வரும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவின் தலையில் பந்து பட்டமையால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போதே பந்து தலையில் தாக்கியுள்ளது. பந்து தாக்கிய பின்னர் மயக்கமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்தார். இதனையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பிரக்யான் ஓஜா நலமாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/11097
-
- 0 replies
- 444 views
-
-
பொதுநலவாய விளையாட்டுத் தொடர்: 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம்! பர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டுத் தொடரின், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். அலெக்ஸாண்டர் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், போட்டியை 10.14 செக்கன்களில் நிறைவு செய்து யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 92 வருட பொதுநலவாய விளையாட்டுத் தொடர் வரலாற்றில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்று கொட…
-
- 0 replies
- 444 views
- 1 follower
-
-
பாகிஸ்தானின் முதல் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இம்தியாஸ் அஹமது மரணம் பாகிஸ்தானின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருந்த மூத்த வீரரான இம்தியாஸ் அஹமது தனது 88-வது வயதில் மரணம் அடைந்தார். 1952-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி முதன் முதலாக டெஸ்ட் அரங்கில் கால்பதித்தது. அந்த அணியில் இம்தியாஸ் அஹமதும் ஒருவர். இவர் பாகிஸ்தான் அணிக்காக 41 போட்டிகளில் விளையாடியுள்ளார். 88 வயதாகும் இவர் லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அவரத…
-
- 1 reply
- 444 views
-
-
தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் வென்றிருந்த தென்னாபிரிக்கா, புளூம்பொன்டெய்னில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா: 271/10 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டார்சி ஷோர்ட் 69 (83), ஆரோன் பின்ஞ் 69 (87), மிற்செல் மார்ஷ் 36 (45), டேவிட் வோணர் 35 (23), அலெக்ஸ் காரி 21 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 6/58 [10], அன்றிச் நொர்ட்ஜே 2/59 [10],…
-
- 1 reply
- 444 views
-