விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
ஒன்பது வயதில் உலக சாதனைகள் படைத்த கனேடிய சிறுமி Share கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். மமாதி வினோத் என்ற ஒன்பது வயது சிறுமியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். சாகச வளைய நடனத்தில் இந்தச் சிறுமி மூன்று பிரிவுகளில் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் பிரித்தானியாவில் வைத்து இந்த சிறுமி மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைத்துள்ளார். வெவ்வேறு நிலைகளில் சாகச வளையத்தில் சுழற்றுவதன் மூலம் இந்த சாதனையை குறித்த சிறுமி படைத்துள…
-
- 0 replies
- 430 views
-
-
ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட 75 வயது பாட்டி Published By: DIGITAL DESK 5 07 MAR, 2023 | 09:50 AM யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி விளையாட்டு போட்டியில் பாட்டியொருவர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அண்மையில் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி விளையாட்டு போட்டி நடைபெற்றது. அதன் போது பழைய மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் , பாடசாலை பழைய மாணவியான 75 வயதான புனிதவதி எனும் பாட்டியொருவரும் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். குறித்த ஓட்ட போட்டி காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் பாட்டிக்கு பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றன…
-
- 7 replies
- 691 views
- 1 follower
-
-
3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 132 ஓட்டங்களால் வெற்றி Published By: DIGITAL DESK 5 07 MAR, 2023 | 04:31 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பங்களாதேஷ் அணியுடனான 3 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்திருந்தபோதிலும், 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வசே ஒருநாள் போட்டித் தொடர் கடந்த முதலாம் திகதியன்று பங்களாதேஷின் மிர்பூரில் ஆரம்பமானது. முதலாவது போட்டியில் 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 132 ஓ…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
பெண்களுக்கான ஐந்தம்ச (பென்டத்லன்) போட்டியில் நஃபிசாடோ தியாம் உலக சாதனை Published By: SETHU 06 MAR, 2023 | 11:38 AM பெண்களுக்கான ஐந்தம்ச போட்டியில் (பென்டத்லன்) பெல்ஜியத்தின் நஃபிசாடோ தியாம் புதிய உலக சாதனை படைத்துள்ளார். துருக்கியில் நடைபெறும் ஐரோப்பிய உள்ளக மெய்வன்மை விளையாட்டு விழாவில், நேற்றுமுன்தினம் தியாம் 5,055 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். இது ஐந்தம்ச போட்டிகளில் புதிய உலக சாதனையாகும். 2012 ஆம் ஆண்டு உக்ரேனின் நடாலியா டோபிரின்ஸ்கா 5,013 புள்ளிகளைப் பெற்றிருந்தமையே மகளிர் ஐந்தம்ச போட்டிகளில் முந்தைய உலக சாதனையாக இருந்தது. இவ்வருட ஐரோப்பிய உள்ளக விளையாட்டு …
-
- 0 replies
- 661 views
- 1 follower
-
-
எம்பாப்பே அடித்த சாதனை கோல்: ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரெஞ்சு உள்நாட்டு கால்பந்து தொடரில் கோலியாத்தாக வலம் வரும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி லீக் ஆட்டம் ஒன்றில் எஃப்.சி. நான்ட் அணியை வீழ்த்தியது. அந்த அணியின் வரலாற்றில் நட்சத்திர வீரரான எம்பாப்பே புதிய சாதனை படைத்துள்ளார். பிரான்சின் லீக் 1 கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர்கள் நிரம்பிய, பலம் வாய்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி எஃப்.சி.நான்ட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டம் பாரிசில் உள்ள பார்சி டெஸ் பிரின்ஸஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாரிஸ் செயின்ட் ஜெர…
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி Published By: DIGITAL DESK 5 04 MAR, 2023 | 02:10 PM யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இலங்கை சார்பாக விளையாட தகுதியுடைய வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான தேசிய மட்டப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இப் போட்டியில் வெற்றிகளைப் பெற்ற …
-
- 4 replies
- 337 views
- 1 follower
-
-
மெஸ்ஸியின் குடும்ப பேரங்காடி மீது சூடு: வீரருக்கு அச்சுறுத்தல் செய்தி கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் உறவினருக்கு சொந்தமான ஆர்ஜன்டீனாவில் உள்ள பேரங்காடி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதோடு அங்கு மெஸ்ஸிக்கு எச்சரிக்கை விடுக்கும் அறிவிப்பு ஒன்றையும் தாக்குதல்தாரிகள் விட்டுச் சென்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (02) இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆர்ஜன்டீனாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரான ரொசாரியோவில் இருக்கும் யுனிகோ பேரங்காடி ம…
-
- 0 replies
- 590 views
-
-
நான்காவது இடத்தை பெற்றார் லூசியன் புஷ்பராஜ் அமெரிக்க – ஒஹியோவின் கொலம்பஸ் நகரில் நடைபெற்ற அர்னால்ட் கிளாசிக் 2023 உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கையின் லூசியன் புஷ்பராஜ் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். ஓஹியோவில் நடந்த சம்பியன்ஷிப் போட்டியில் லூசியன் புஷ்பராஜ் சூப்பர் ஹெவிவெயிட் பிரிவில் பங்கேற்றார். அர்னால்ட் கிளாசிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இலங்கை வீரர் லூசியன் புஷ்பராஜ் என்பதோடு, கடந்த 2022 உடற்கட்டமைப்பு போட்டியிலும் லூசியன் புஷ்பராஜ் நான்காவது இடத்தைப் பெற்றார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதலாது தடவையாக மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டத்தை வென்ற லூசியன் புஷ்பராஜ் ஆசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். ஒரு இலட்சத்…
-
- 1 reply
- 764 views
- 1 follower
-
-
கத்தார் உலககோப்பை போட்டி : பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிய தடை; மீறினால் சிறை By DIGITAL DESK 2 16 NOV, 2022 | 04:56 PM கத்தாரில் பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிவதற்கும், உடல் உறுப்புகளைக் வெளிகாட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் தடையை மீறினால் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தி சன் செய்தி வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாக கத்தார் திகழ்கிறது. 2022 பிபா உலகக் கோப்பை போட்டிகளில் 32 நாடுகள் பங்கேற்கின்றன, எனவே தோஹாவில் இறங்கும் ரசிகர்களின் எண்ணிக்கை திகைக்க வைக்கும் அளவில் இருக்கும். ரசிகர்களுக்கு, குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா…
-
- 54 replies
- 3.7k views
- 1 follower
-
-
சறுக்கல்களை கடந்து ‘உலகின் சிறந்த கோல்கீப்பராக’ வளர்ந்த இளைஞன் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செப்டம்பர் 2020-இல் எமி மார்டினெஸ் ஆர்செனல் கிளப்பில் இருந்து ஆஸ்டன் வில்லாவில் சேர்ந்தபோது, அவர் தனது லாக்கரில் தனது இலக்குகளைக் கொண்ட பட்டியல் ஒன்றை லேமினேட் செய்து வைத்தார். உலகின் சிறந்த கோல் கீப்பராக மாற வேண்டும் என்பது அந்த இலக்குகளில் ஒன்று. அந்த நேரத்தில், அவரது கிளப்பில் கூட நம்பர் ஒன் கீப்பராக இருந்திருக்காத ஒருவருக்கு அதுவொரு வியக்கத்தக்க, மிக உயர்ந்த, கிட்டத்தட்ட சாத்தியமற்ற இலக்காக இருந்திருக்கலாம். வில்லாவின் பாடிமூர் ஹீத் பயிற்சி மைதானத்தில் உள்ள அதே லாக்…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
ஸ்டெபி கிராபின் சாதனையை முறியடித்த ஜோகோவிச் Published By: DIGITAL DESK 5 01 MAR, 2023 | 12:18 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 378 தடவைகள் முதலாவது இடத்தை கைப்பற்றிய சேர்பிய டென்னிஸ் நட்சத்திரமான நொவாக் ஜோகோவிச், அதிக தடவைகள் முதலாவது இடத்தை பிடித்தவர் என்ற ஜேர்மனியின் ஸ்டெபி கிராபின் சாதனையை முறியடித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் சங்கம் வீர, வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை கடந்த 28 ஆம் திகதியன்று வெளியிட்டது. இதில் சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக் 3980 புள்ளிகளுடன் முதலாவது இடத்தைப் பிடித்து தொடர்ந்தும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். இதன்படி, 378 தடவைகள் சர்வத…
-
- 4 replies
- 663 views
- 1 follower
-
-
அதிசிறந்த கோலுக்கான FIFA புஸ்காஸ் விருதை வென்ற மாற்றுத்திறனாளியான ஒலெக்ஸி Published By: VISHNU 28 FEB, 2023 | 05:20 PM (நெவில் அன்தனி) அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட விருதுகள் விழாவில் முதல் தடவையாக மாற்றுத்திறனாளியான மாசின் ஒலெக்சி அதிசிறந்த கோலுக்கான FIFA புஸ்காஸ் விருதை வென்று வரலாறு படைத்துள்ளார். பிரான்ஸில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற 'அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட விருதுகள் 2022' விழாவில் உலகத் தரம்வாய்ந்த கால்பந்தாட்ட நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒற்றைக் கால் வீரரான மாசின் ஒலெக்சி இந்த விருதை வென்று முழு உலகினதும் பாராட்டைப் பெற்றுக்கொண்டார். கால்பந்தாட்ட விற்பன்னர்களான லியனல் மெ…
-
- 0 replies
- 583 views
- 1 follower
-
-
கோலூன்றிப் பாய்தலில் டுப்லான்டிஸ் 6.22 மீற்றர் உயரம் தாவி புதிய உலக சாதனை Published By: DIGITAL DESK 5 28 FEB, 2023 | 02:21 PM (நெவில் அன்தனி) பிரான்ஸில் க்ளேர்மொன்ட் ஃபெராண்ட் உள்ளக அரங்கில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற All Star Perche, World Athletics Indoor Tour Silver போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 6.22 மீற்றர் உயரம் தாவிய சுவீடன் வீரர் மொண்டோ டுப்லான்டிஸ் தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார். ஒலிம்பிக் சம்பியனும் உலக சம்பியனுமான 23 வயதான டுப்லான்டிஸ், பெப்ரவரி மாத முற்பகுதியில் உப்சலாவில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் உலக சாதனையைப் புதுப்பிக்க முயற்சி செய்தார். நடப்பு …
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
ஒரு ஓட்டத்தால் இங்கிலாந்தை டெஸ்ட்போட்டியில்தோற்கடித்தது நியுசிலாந்து Published By: RAJEEBAN 28 FEB, 2023 | 11:07 AM இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்;ட்போட்டியில் ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்று நியுசிலாந்து அணி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. வெலிங்டனில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட்போட்டியில் நியுசிலாந்து அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்டில் பலோஒன்முறையின்மூலம் பின்தங்கியிருந்த நிலையிலேயே நியுசிலாந்து அணி இந்த வெற்றியை பெற்றுள்ளது. இதன் காரணமாக பலோ ஒன்னில் பின்னிலையிலிருந்து டெஸ்ட்டில் வெற்றிபெற்ற நான்காவது அணியாகவும் ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்ற இரண்டாவது அணியாகவும் நியுசிலா…
-
- 3 replies
- 567 views
- 1 follower
-
-
எம்பாப்பேவை வீழ்த்தி சிறந்த ஃபிஃபா வீரரான மெஸ்ஸி பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருதை சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா அறிவித்துள்ளது. ஆண்கள் பிரிவில் சிறந்த கால்பந்து வீரர், சிறந்த கோல் கீப்பர், சிறந்த பயிற்சியாளர் விருதுகளை கால்பந்து உலககோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்கள் வென்றுள்ளனர். சிறந்த வீரரான மெஸ்ஸி 2022-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுக்கு அர்ஜெண்டினா மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் முன்கள வீரரான லியோனெல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த வீரருக்கா…
-
- 2 replies
- 668 views
- 1 follower
-
-
டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் முதல் போட்டியே பாகிஸ்தானுடன் - எகிறும் எதிர்பார்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 28 ஜனவரி 2023, 04:56 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது. மகளிர் உலகக் கோப்பையின் 8வது பதிப்பான இத்தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகிறது. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்ற நிலையில், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. 2012ஆம் ஆண்டுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், 2014இல்…
-
- 51 replies
- 2.5k views
- 1 follower
-
-
உலக இரும்பு மனிதன் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற குமரி ஸ்ட்ராங் மேன் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலக இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொண்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ட்ராங் மேன் கண்ணன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் ஸ்ட்ராங் மேன் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்கும் வீரர்கள் சாதாரணமாக இல்லாமல், தங்கள் உடல் எடையை விட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை தூக்கி சாதனை படைத்து வருகின்றனர். …
-
- 0 replies
- 650 views
- 1 follower
-
-
கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் 'புதிய ஆயுதங்கள்' கட்டுரை தகவல் எழுதியவர்,விதான்ஷு குமார் பதவி,விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்தி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI இந்தூரில் நடந்த போட்டியில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து, தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. கூடவே ஐ.சி.சி. ஒருநாள் தர வரிசையில் முதலிடத்தையும் இந்திய அணி பிடித்தது. ஐசிசி தர வரிசையில் இந்தியா 114 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நி…
-
- 5 replies
- 727 views
- 1 follower
-
-
உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஜாம்பவான் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு! PSG வெளியிட்ட பதிவு!! ஸ்பெயின் அணியின் ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செர்ஜியோ ராமோஸ் ஸ்பெயின் அணியின் 36 வயது ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ். தனது அணிக்காக 180 போட்டிகளில் விளையாடியுள்ள ராமோஸ் 23 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன் ஸ்பெயினுக்கு உலகக்கோப்பை மற்றும் இரண்டு ஐரோப்பிய கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்கு 469 போட்டிகளில் 72 கோல்கள் அடித்த ராமோஸ், 2021ஆம் ஆண்டு பாரிஸ் செயிண்ட் ஜேர்…
-
- 0 replies
- 475 views
-
-
சானியா மிர்ஸாவின் 20 வருட விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்தது! கட்டுரை தகவல் எழுதியவர்,சாரதா உக்ரா பதவி,மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தமது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி போட்டியின் முதல் சுற்றில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. துபாய் ட்யூடி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்- சானியா இணை, குதர்மெடோவா, சாம்சோனோவா ஜோடியிடம் 4-6, 0-6 என்ற செட்களில் தோல்வியடைந்தது. இந்த தோ…
-
- 0 replies
- 655 views
- 1 follower
-
-
சந்தர்போலின் மகனை வீழ்த்திய மக்காயா நிட்னியின் மகன் Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 11:02 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சிவ்நரைன் சந்தர்போலின் மகனை தென் ஆபிரிக்காவின் முன்னாள் புயல்வேக பந்துவீச்சாளரான மக்காயா நிட்னியின் மகன் வீழ்த்தியிருந்தமை கிரிக்கெட் அரங்கில் சுவாரஷ்யமிக்க சம்பவமாக பதிவானது. தென் ஆபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் அணி, தென் ஆபிரிக்க அணியுடன் 2 டெஸ்ட், 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 3 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்கு முன்னோடியாக தென் ஆபிரிக்காவின் …
-
- 1 reply
- 380 views
- 1 follower
-
-
சேத்தன் ஷர்மா ஸ்டிங் ஆபேரேஷன்: இந்தியக் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அவரை விரட்டிய ஃபுல்டாஸ் ஆதேஷ்குமார் குப்தா விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ஒரு தனியார் சேனலின் ஸ்டிங் நடவடிக்கையில் சேத்தன் ஷர்மா, விராட் கோலி மற்றும் செளரவ் கங்குலி இடையேயான உறவு மற்றும் வேறு பல விஷயங்களைப் பற்றி பேசுவதைக் காண முடிந்தது. கடைசியில் எதிர்பார்த்தது நடந்தது. இந்திய கிரிக்கெட் …
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
"அணியும் ஆடைகளே உறவுகளை அந்நியமாக்கிவிட்டன" - சமூக சங்கிலிகளை உடைத்த பெண் பாடி பில்டர் கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழ் 12 பிப்ரவரி 2023 "உடல் எடையை குறைக்கத்தான் ஜிம்முக்கு போனேன். ஆனால், நட்புகள், உறவுகளின் புறக்கணிப்பு தந்த வெறுமையும், குழந்தைகள் தந்த ஊக்கமும் என்னை ஜிம்மே கதியென கிடக்கச் செய்தது. அதுவே, என்னை இன்று சர்வதேச அரங்கில் கால் பதிக்கச் செய்துள்ளது" என்கிறார் மதுரையைச் சேர்ந்த வெரோனிகா அன்னமேரி. மதுரையைச் சேர்ந்த வெரோனிகா அன்னமேரி, பெண்கள் நுழையவே தயங்கும் பாடி பில்டிங் துறையில் பல்வேறு மருத்துவ பிரச்னைகளுக்கு…
-
- 0 replies
- 870 views
- 1 follower
-
-
உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி: சி குழுவில் இலங்கை By DIGITAL DESK 5 08 FEB, 2023 | 09:09 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் மத்திய பகுதியில் நடைபெறவுள்ள 16ஆவது வலைபந்தாட்ட உலகக் கிண்ண சுற்றுப் போட்டியில் சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது. 16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் ஜூலை 28ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. சிங்கப்பூரில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்று உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில்…
-
- 3 replies
- 627 views
- 1 follower
-
-
கூடைப்பந்தாட்ட வரலாற்றில் லெப்ரொன் ஜேம்ஸ் சாதனை By DIGITAL DESK 5 09 FEB, 2023 | 03:37 PM (என்.வீ.ஏ.) ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்றுவரும் தேசிய கூடைப்பந்தாட்ட சங்க (NBA) போட்டி வரலாற்றில் அதிக புள்ளிகளைப் புகுத்தியவர் என்ற கரீம் அப்துல்-ஜபாரின் 38 வருட சாதனையை லேப்ரொன் ஜேம்ஸ் முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார். ஓக்லஹோமா சிட்டி தண்டர் அணியிடம் லொஸ் ஏஞ்சலிஸ் லேக்கர்ஸ் அணி 130 - 133 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. லொஸ் ஏஞ்சலிஸ் லேக்கர்ஸ் கூடைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான ஜேம்ஸ் (38 வயது), தோல்விக்கு மத்தியிலும் 38 புள்ளிகளைப் பெற் று கரீம் அப்துல்-ஜபாரின் …
-
- 0 replies
- 514 views
- 1 follower
-