விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஊர்காவற்றுறையில் பாரம்பரிய படகுப் போட்டி September 05, 2015 ஊர்காவற்றுறை, தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையத்தின் 66ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காந்திஜி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் பாரம்பரியப் போட்டியான பாய்மரம் விரித்து படகோட்டும் போட்டி இடம்பெற்றது. இப்போட்டியினை வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பல போட்டியாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதன்போது பார்வையாளர்கள் பலர் பிற படகுகளில் ஏறி கடலுக்குள் சென்று போட்டியினை நேரில் கண்டுகளித்திருந்தனர். குறித்த பாரம்பரிய படகோட்டும் போட்டிக்கு கடற்தொழிலாளர் சங்கத்தினர் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=676
-
- 3 replies
- 395 views
-
-
யாழ் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் யாழ்பாண இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இன்றைய தினம் வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. கல்லூரி அதிபர் வீ.கணேசராசா தலைமையில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.சிவகுமாரன் மதியாபரணன், கெளரவ விருந்தினர்களாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் வைத்திய கலாநிதி சிவபாத மூர்த்தியும் கலந்து கொண்டனர். இப்பாடசாலை காசிப்பிள்ளை, நாகலிங்கம் , பசுபதி, சபாபதி, செல்லத்துரை அகிய இல்லங்களைக் கொண்டுள்ளது. இவ் விளையாட்டு நிகழ்வின் ஆரம்ப்ப நிகழ்வாக பிரதம விருந்தினர்கள் கல்லூரியின் பிரதான மண்டபத்திற்…
-
- 3 replies
- 634 views
-
-
இலங்கை – இந்தியா ரி-20 பெப்ரவரியில் January 21, 2016 இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ரி-20 தொடர் தொடர்பான அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிட்டுள்ளது. முதலாவது ஆட்டம் புனேயில் பெப்ரவரி 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது ரி-20 ஆட்டம் டெல்லியில் பெப்ரவரி 12ஆம் திகதியும், மூன்றாவது மற்றும் கடைசி ரி-20 ஆட்டம் விசாகப்பட்டினத்தில் பெப்ரவரி 14ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. http://www.onlineuthayan.com/sports/?p=8186
-
- 0 replies
- 380 views
-
-
தெற்காசிய போட்டிகளில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர் February 6, 2016 04:12 pm இந்தியாவில் நடைபெற்று வரும் 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலாவது தங்கப் பதக்கத்தை இலங்கை வென்றுள்ளது. ஆண்களுக்கான 200 மீற்றர் தூர நீச்சல் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற மெத்தியுவ் அபேசிங்க இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். குறித்த தூரத்தை அவர் 1 நிமிடமும் 59.28 செக்கன்களில் கடந்துள்ளார். இதன் மூலம் மூலம் தெற்காசிய போட்டியில் இலங்கை வீரர் மெத்தியுவ் அபேசிங்க புதிய சாதனை படைத்துள்ளார். 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிக நேற்று இந்தியாவின் குவாஹாட்டியில் இந்திரா காந்தி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 8 நாடுகளை சேர்ந்த 2500…
-
- 0 replies
- 441 views
-
-
இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளின் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 105 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷேவாக், முதலில் ராஜஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்தார். ஸ்மித்தும், அஸ்னோட்கரும் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி அதிரடி ஆட்டம் ஆடினர். அஸ்னோட்கர் 23 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை, பவுண்டரி லைனில் நின்ற மகரூப் நழுவ விட்டதால் அவர் மேற்கொண்டு 16 ரன்கள் தங்கள் அணிக்கு சேர்த்து விட்டார். முதல் விக்கெட்டுக்கு 6…
-
- 5 replies
- 1.7k views
-
-
2020 ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இலங்கையராக மெட்டில்டா கார்ல்சன் By Mohammed Rishad - ஜப்பானின் டோக்கியோவில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து பங்குபற்றும் முதல் வீரர் என்ற பெருமையை குதிரைச்சவாரி வீராங்கனை மெட்டில்டா கார்ல்சன் பெற்றுக்கொண்டுள்ளார். சொப்பின் வீஏ (Chopin VA) என்ற பெயரைக்கொண்ட 10 வயதுடைய குதிரையில் சவாரி செய்தே அவர் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும். டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்க 50 நாடுகளைச் சேர்ந்த 200 குதிரைச்சவாரி வீரர்களுக்கு சர்வதேச குதிரைச்சவாரி சம்மேளனம்…
-
- 0 replies
- 550 views
-
-
-
- 0 replies
- 512 views
-
-
புதிய கட்டமைப்புடன் 2022ஐ நோக்கி பயணிக்குமா இலங்கை U19 அணி? By A.Pradhap - ஐசிசி இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கியிருந்த இலங்கை இளையோர் அணி நியூசிலாந்து இளையோர் அணியிடம் அதிர்ச்சித் தோல்வியை அடைந்து காலிறுதிக்கான வாய்ப்பை இழந்தது. இலங்கை இளையோர் அணி, தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணத்துக்காக அசான் திலகரட்னவின் பயிற்றுவிப்பின் கீழ் கடந்த இரண்டு வருடங்களான சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தது. இப்போது, அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ள இலங்கை இளையோர் அணி Plate கிண்ணத்திற்காக போட்டிகளில் விளைாயடவுள்ளதுட…
-
- 0 replies
- 598 views
-
-
கடினமான சில சூழ்நிலைகளில் சச்சினை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மென்: இம்ரான் ஒப்பீடு சச்சின், விராட் கோலி. | கோப்புப் படம். விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் சதங்களை விளாசியது முதல் இவரையும் சச்சினையும் ஒப்பிட்டு பலரும் பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இதில் சமீபமாக பாகிஸ்தான் ‘கிரேட்’ இம்ரான் கான், விராட் கோலி பேட்டிங் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இது பற்றி கூறியதாவது: “கிரிக்கெட் ஆட்டம் பல காலக்கட்டங்களைக் கொண்டது. 80’களில் விவ் ரிச்சர்ட்ஸ், அதன் பிறகு சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, இவர்கள் இருவரும் அனைவரையுமே பின்னுக்குத்…
-
- 0 replies
- 290 views
-
-
உலகின் அதிவேக வீரர் உசைன் போல்ட் 3 ஆவது முறையாக தங்கம் வென்றார் உலகின் அதி வேக மனிதர் ஜமைக்காவின் உசைன் போல்ட் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கின் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் 9.81 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட் மூன்றாவது தடவையாகவும் தங்க பதக்கத்தை சுவீகரித்தார். http://www.virakesari.lk/article/10205
-
- 2 replies
- 407 views
-
-
ஒரே ஆண்டில் 6 சதம் அடித்து வார்னர் சாதனை ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். * ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த ஆண்டில் 22 ஆட்டங்களில் விளையாடி 6 சதம், 4 அரைசதம் உள்பட 1,232 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் (இரண்டு முறை 2003, 2007-ம் ஆண்டு), மேத்யூ ஹ…
-
- 0 replies
- 513 views
-
-
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் மாற்றம் இல்லை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என்று அந்த அணியின் தேர்வு குழு உறுப்பினர் காவின் லார்சென் தெரிவித்துள்ளார். வெலிங்டன் : தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே டுனெடினில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்…
-
- 0 replies
- 226 views
-
-
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் லூக் ரோஞ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு நியூசிலாந்து அணியின் 36 வயதான விக்கெட் கீப்பர் லூக் ரோஞ்சி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக நான்கு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடிய லூக் ரோஞ்சி, பின்னர் நியூசிலாந்தில் குடியேறி அந்த அணியில் இடம்பிடித்தார். தற்போது வரை நான்கு டெஸ்ட், 85 ஒருநாள் மற்றும் 32 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஞ்சி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 43 பந்தில் 65 ர…
-
- 0 replies
- 261 views
-
-
கிரஹாம் போர்ட் மற்றும் சங்கக்கார எவ்வாறு இலங்கை கிரிக்கெட் சபையினால் இழிவுபடுத்தப்பட்டனர்? ஒரு கிரிக்கெட் வீரராக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி பின்னர் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களாக மாறிய விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே கிரிக்கெட் உலகில் காணப்படுகின்றனர். அந்த வகையில் பயிற்றுவிப்பாளர்களாக உருவெடுத்த இரு கிரிக்கெட் வீரர்களில் டேரன் லீமன் மற்றும் ஜெஃப் மார்ஷ் காணப்படுகின்றனர். அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய ஜெஃப் மார்ஷை எவ்விதமான பாரபட்சமின்றி 2012ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் சபையானது பணிநீக்கம் செய்திருந்தது. 2011ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப்ப…
-
- 0 replies
- 389 views
-
-
எங்கள் அணியை எங்கள் மண்ணில் வீழ்த்த முடியாது: ஆஸி.க்கு ஷாகிப் அல் ஹசன் சவால் இலங்கைக்கு எதிராக சதம் கண்ட ஷாகிப். - படம். | ஏ.பி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் வருகை தரும் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடுத்துள்ளார். அதாவது தங்கள் நாட்டில் தங்கள் அணி ஏறக்குறைய வீழ்ட்த முடியாத அணியே என்று ஷாகிப் அல் ஹசன் ஆஸ்திரேலியாவைச் சீண்டியுள்ளார். தி கார்டியன் இதழில் அவர் கூறியிருப்பதாவது: இந்தப் பயணம் மிக நீண்ட பயணம், நம்ப முடியாத பயணம். வங்கதேசத்தில் கூட நாங்கள் இந்த அளவுக்கு முன்னேறுவோம் என்று யாரும் நம்பவில்லை. எங…
-
- 25 replies
- 1.8k views
-
-
பின்ச் சதம்: ஆஸி., வெற்றி ஜனவரி 12, 2014. மெல்போர்ன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், பின்ச் சதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மெல்போர்னில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். குக் சொதப்பல்: இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக் (4) சொதப்பல் துவக்கம் அளித்தார். தொடர்ந்துவந்த ஜோ ரூட் (3) ஏமாற்றினார். பெல் (41) ஓரளவு கைகொடுத்தார். மார்கன் (50) அரைசதம் கடந்து வெளியேறினார். பின் வந்த போபாரா கைகொடுக்க, பேலன்ஸ், ஒருநாள் அரங்கில் தனது முதல் அரைச…
-
- 28 replies
- 1.9k views
-
-
டோர்ட்மன்ட் அரங்கில் ரியல் மெட்ரிட் சாதனை டோர்ட்மன்ட் அரங்கில் ரியல் மெட்ரிட் சாதனை UEFA சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்திய ரியல் மெட்ரிட் அணி, ரொனால்டோ மூலம் பெறப்பட்ட இரு கோல்களினால் டோர்ட்மன்ட் (Dortmund) அணிக்கு எதிராக 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் டோர்ட்மன்ட் கழகத்தின் மைதானத்தில் இறுதியாக விளையாடிய 7 போட்டிகளின் பின்னரான தனது முதல் வெற்றியை ரியல் மெட்ரிட் அணி பதிவு செய்துள்ளது. UEFA சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப் போட்டியின் இரண்டாவது கட்ட…
-
- 0 replies
- 768 views
-
-
எனது நீண்ட நாள் கனவு நனவாகியது – திசர பெரேரா தேசிய அணிக்கு தலைவராவது தனது நீண்ட நாள் கனவு எனவும், இலங்கை டி T20 அணியின் தலைவராக தான் நியமிக்கப்பட்டது தொடர்பில் பெருமையடைவதாக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா தெரிவித்துள்ளார். அனைத்து வீரர்களுக்கும் தலைமைப் பதவி என்பது ஒரு கனவாகும். அதே போன்று இதுவும் எனது நீண்ட நாள் கனவு என இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26ஆம் திக…
-
- 0 replies
- 408 views
-
-
வங்கதேசத்தில் நடந்த இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை வென்றுள்ளது. மீர்புரில் நடந்த இறுதியாட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை இலங்கை எளிதில் வீழ்த்தியது இந்த ஆட்டத்தோடு சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகின்ற குமார சங்ககா,ர தனது கடைசி ஆட்டத்தில் அரைசதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இருபது ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை உலகக் கோப்பையை வெல்வதென்பது இதுவே முதல் முறை. ஓய்வுபெறுகின்ற மற்றொரு மூத்த ஆட்டக்காரரான மஹேல ஜெயவர்த்தனவும் 24 ரன்களை எடுத்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றிருந்தார். இந்திய அணி நிர்ணயித்த 131 ரன்கள் இலக்கை இலங்கை மட்டைவீச்சாளர்கள் இரண்டு ஓவர்கள் மீதமிருக்க எட…
-
- 1 reply
- 648 views
-
-
இந்தியா சென்று சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுவரும் அனுபவம் குறைந்த இங்கிலாந்து அணி அனுபவம் நிறைந்த (நினைப்பு) இந்திய அணியை அவர்களின் மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரை சமன் செய்தது, முதலாவது ரெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றிமுடிவடைந்தது, இரண்டாவது ரெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற்றது, 3வது இறுதியுமான ரெஸ்ட் போட்டியில் இந்திய அணி 213 என்ற மிகப்பெரும் ஓட்டங்களால் தோல்வி அடைந்தது, இந்த தோல்விக்கு அணிபயிற்சியாளர் சப்பலின் தவறான கண்ணோட்டமும், இந்திய துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டமும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் துள்ளியமான பந்துவீச்சுமே காரணம், ஆட்ட நிலவரம்.. 1வது இன்னிங்க்ஸ் இங்கிலாந்து 400 இந்தியா 279 2வது இன்னிங்க்ஸ். இங்கிலாந்த் 191 இந்தியா 100. …
-
- 11 replies
- 3.9k views
-
-
நேற்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் காலை 08:00 மணிக்கு ஆரம்பமான தமிழீழ அணிக்கு இடையிலான நடந்த உதை பந்தாட்ட போட்டியின் விபரங்கள். 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 3 – Husum - 0 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 2 – Holstebro – 1 போட்டிகளில் வாகை சூடிய 16, வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 4 –Vardeneset BK 0 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 0 – LKB /Gistrup– 0 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 0 - Stenløse BK – 0 எப்படி இருப்பினும் சோர்வடையாது முயன்ற எமது வீரர்கள் எதிர் அணியினருக்கு தக்க சவாலாக விளையாடினார்கள். http://www.sankathi24.com/news/44892/6…
-
- 3 replies
- 637 views
-
-
அறியாத கங்குலி, தெரியப்படுத்திய சேவாக்; கிரெக் சாப்பல் செய்தது என்ன? பிப்.16, 2007, இலங்கைக்கு எதிராக விசாகப்பட்டிணத்தில் 4வது ஒருநாள் போட்டியை முன்னிட்டு பயிற்சியாளர் கிரெக் சாப்பல், அருகில் தோனி, கங்குலி, தினேஷ் கார்த்திக், சேவாக். - படம். | கே.ஆர்.தீபக். இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் கிரெக் சாப்பலின் பயிற்சிக் காலக்கட்டத்தை இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலம் என்று பலரும் வர்ணித்தது நினைவிருக்கலாம். கங்குலி கிரெக் சாப்பலை விரும்பி பயிற்சியாளராக ஏற்றுக் கொண்டார், ஆனால் கிரெக் சாப்பல் கங்குலியின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்து அவரை தலைமைப…
-
- 0 replies
- 527 views
-
-
ஆண்டர்சன் இருக்கும் ஃபார்மிற்கு விராட் கோலி கஷ்டம்தான்: கிளென் மெக்ரா 2014 தொடரில் விராட் கோலியை வீழ்த்திய ஆண்டர்சன். - படம். | ஏ.எஃப்.பி. 2014-ல் இங்கிலாந்தில் ஆடிய கோலி இப்போது இல்லை என்றாலும் பார்மில் உள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நிச்சயம் விராட் கோலிக்குக் குடைச்சலைக் கொடுப்பார் என்று ஆஸி. கிரேட் கிளென் மெக்ரா அபிப்ராயப்படுகிறார். இது தொடர்பாக கிளென் மெக்ரா கூறும்போது, “கோலி தற்போது கொஞ்சம் அனுபவமிக்க வீரர். தரமான வீரர், இதைப்பற்றி எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் இங்கிலாந்து சூழ்நிலைகள் எப்போதும் கடினம். அதுவும் ஜிம்மி ஆண்டர்சன் இருக்கும்போது, நன்றாக வீசும்போது நிச்சயம் இது கடினமான …
-
- 0 replies
- 384 views
-
-
ஓய்வு பெற்றார் இந்திய அணியின் பறக்கும் வீரர் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொத்த 37 வயதாகும் முகம்மது கைப், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 13 டெஸ்ட்கள் மற்றும் 125 ஒரு நாள் போட்டிகள், முதல் தரப் போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்தவர் முகம்மது கைப். 2000 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைவராக இருந்தவர். 2002 ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பையை வெல்வதற்கு மிகப் பெரிய பலமாக இருந்தவர் கைப். அந்தப் போட்டியில் 87 ஓட்டங்களை எடுத்து இந்தியாவுக்கு கோப்பையை வென்றுத் தந்தார். நாட்வ…
-
- 0 replies
- 645 views
-
-
முப்பரிமாண மின் பொம்மலாட்ட கிரிக்கெட் வலைதளஒளிபரப்பு www.cricinfo.com வலைதளத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பின் வர்ணனையாளரின் வர்ணனையினை உடனடியாக அதற்கேற்ற அசைவுகளுடன் முப்பரிமாண மின் பொம்மலாட்டமாக மாற்றி படியடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் ( simulated Players) நேரடியாக ஒளிபரப்பில் பார்ப்பது போல் மின்பொம்மலாட்ட கிரிக்கெட்டியினை 30-4-0 வினாடிகள் காலதாமதத்தில் வலைதள பொம்மலாட்ட ஒளிபரப்பில் காட்ட ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டு சமீபத்தில் நடைபெற்ற இந்திய –இலங்கை கிரிக்கெட் போட்டி வலைதள பொம்மலாட்டமாக வலைதள ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் விளையாட்டு அரங்கின் எந்த பக்கத்திலிருந்து நாம் பார்க்க விரும்புகிறோமோ அந்…
-
- 1 reply
- 1.2k views
-