விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
டெனிஸ் போட்டிகளை மறந்துவிட்டு காதலில் சிக்கித் தவிக்கிறார் ஷரபோவா [13 - February - 2009] டெனிஸை மறந்துவிட்டு ரஜ்ய வீராங்கனை ஷரபோவா காதல் மோகத்தில் தவிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் நம்பர்வன் வீராங்கனையாகத் திகழ்ந்த இவர், சமீபகாலமாக சரியாக விளையாடவில்லை. இதனால், தரவரிசையில் 16 ஆவது இடத்துக்குச் சென்றுவிட்டார். டெனிஸ் வீராங்கனைகளில் ஷரபோவா மிகவும் அழகானவர். கவர்ச்சி ஆடை அணிந்து ஆடும் அவரின் அழகை இரசிப்பதற்கென்றே ஏராளமான இரசிகர்கள் திரள்வதுண்டு. தற்போது ஷரபோவா சரியாக ஆடாதது இரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவர் ஏன் சரியாக ஆடவில்லை என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. ஷரபோவா ஒருவரைக் காதலித்து வருகிறார். அவருடனேயே எப்போதும் …
-
- 0 replies
- 1.4k views
-
-
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் தென்னாபிக்க இந்திய அணிகள் டெஸ்ட் போட்டியில் முன்றாம் நாளான இன்று சேவாக் 300 ஓட்டங்களை கடந்தார் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 540 ஓட்டங்களை பெற்றது. அடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணியும் சளைக்காமல் ஆடித்தாட ஆரம்பித்து 102 ஓவர்களில் 1 விக்கட்டை இழந்து 455 ஓட்டங்களை தற்சமயம் பெற்றுள்ளது. சேவாக் தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கின்றார்.
-
- 3 replies
- 1.4k views
-
-
ராம்நரேஷ் சர்வன் மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிறைன் லாறா கடந்த உலக கிண்ண போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது எல்லோரும் அறிந்த விடயம். தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய தலைவராக சகல துறை ஆட்டக்காரன் ராம்நரேஷ் சர்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
- 2 replies
- 1.4k views
-
-
yorker ல் கலக்கி கொண்டிருக்கும் நடராஜனுடன் அஸ்வின் காணும் செவ்வி
-
- 4 replies
- 1.4k views
-
-
இலங்கையில் மேட்ச் பிக்ஸிங்: ஹசான் திலகரத்ன குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட்டில் 1992-ம் ஆண்டில் இருந்து மேட்ச் பிக்ஸிங் எனப்படும் சூதாட்டம் நடப்பது சாதாரணமானதுதான் என அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ஹசான் திலகரத்ன கூறியுள்ளார். சூதாட்டங்களில் ஈடுபட்டவர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என்று அவர் உறுதிபடக் கூறினார். மேட்ச் பிக்ஸிங் இன்று, நேற்று தொடங்கியதல்ல. எனக்குத் தெரிந்தவரை, 1992-ம் ஆண்டில் இருந்து அது நடைபெறுகிறது. பொறுப்புணர்ச்சியுடன் இதைக் கூறுகிறேன் என திலகரத்ன குறிப்பிட்டார். ஏப்ரல் 2003 மற்றும் மார்ச் 2004-க்கு இடைப்பட்ட காலத்தில் திலகரத்ன இலங்கை அணியின் கேப்டனாக இருந்தார். சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணபலத்தால் இந்த விவகாரத்தை வெற்…
-
- 2 replies
- 1.4k views
-
-
உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அயைிறுதி ஆட்டம் ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கிடையிலும் இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். 224 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்களான ஜோசன் ரோய் - ஜோனி பெயர்ஸ்டோ நல்லதொரு இணைப்பாட…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கை அணியை கௌரவப்படுத்திஇரண்டு முத்திரைகள் வெளியீடு உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இரண்டாமிடம் பெற்ற இலங்கை அணியை கௌரப்படுத்தும் முகமாக இலங்கை தபால் திணைக்களத்தினால் இரண்டு முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முத்திரைகளில் இலங்கை வீரர்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 1996 ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி 11 வருடங்களின் பின்னர் மீண்டும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. இதனை நினைவுகூரும் பொருட்டே மேற்படி முத்திரைகள் இரண்டும் வெளியிடப்பட்டுள்ளன. வீரகேசரி
-
- 2 replies
- 1.4k views
-
-
தடுமாற்றத்துடன் ஆரம்பித்தாலும் ஸ்திரமான நிலையை அடைந்தது இங்கிலாந்து இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 91 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்து ஸ்திரமான நிலையை அடைந்தது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று காலை 10:30 மணிக்கு காலியில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் மத்திய தர வீர்களின் நிதானமான துடுப்பாட்டம் காரணாக முதலாம் நாள் ஆ…
-
- 4 replies
- 1.4k views
-
-
120 கோடி மக்களை திருப்திப்படுத்த முடியாது சானியா மிர்ஸா இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களையும் என்னால் திருப்திப்படுத்த முடியாது என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் பேர்த்தில் நடந்த ஹோப்மன் டென்னிஸ் போட்டியின்போது தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் சானியா மிர்ஸா அமர்ந்திருந்ததாக போபால்,திருப்பதி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குட்டை பாவாடை,ஹைதராபாத் மசூதியில் அத்துமீறி நுழைந்ததாக எழுந்த சர்ச்சை போன்ற புகார்களில் இருந்து விடுபட்ட நிலையில் தற்போது தேசிய கொடி அவமதிப்பு வழக்கில் சிக்கியுள்ளார். இந்த பிரச்சினை சானியா மனதை ஆழமாக பாதித்துள்ளது. டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்பது குறித்து கூட அவரை சிந்…
-
- 1 reply
- 1.4k views
-
-
சர்வதேச கராத்தே போட்டியில் 62 வயதான இலங்கையருக்கு தங்கப்பதக்கம்! அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற 22 ஆவது சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் சுற்றுப்போட்டியில் இலங்கையரான செல்லதுரை கணேசலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 62 வயதான கணேசலிங்கம், இப்போட்டியில் தன்னிலும் பாதி வயதுகொண்ட போட்டியாளர்களை தோற்கடித்து இப்பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இச்சுற்றுப்போட்டி நடைபெற்றது. ஓய்வுபெற்ற நிதி ஆலோசகரான கணேசலிங்கம், ‘நான் தங்கப்பதக்கம் வெல்வேன் என நான் ஒருபோதும் எண்ணவில்லை. இந்த வயதில் நான் ஓய்வு பெற்றிருப்பேன் என எண்ணிருந்தேன் என கணேஷ் கூறியுள்ளார். தனக்கு 23 வயதாக இருந்தபோத…
-
- 12 replies
- 1.4k views
-
-
ராஜஸ்தான் அணியுடனான தோல்வியால் சென்னையின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலில் [26 - May - 2008] சென்னையில் நடந்த பரபரப்பான ஐ.பி.எல். லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சுப்ப கிங்ஸ் அணியின் போராட்டம் வீணானது. கடைசி ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிடம் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது. மோர்கலின் அதிரடி ஆட்டம் எடுபடாமல் போனது. ஐ.பி.எல். தொடரில் 49 ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில் சென்னை சுப்ப கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் கப்டன் வோர்ன் முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். சென்னை அணியில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. வித்யூத…
-
- 3 replies
- 1.4k views
-
-
வீரகேசரி இணையம் 7/27/2012 12:03:40 PM -டுவிட்டர்' இணையத்தளத்தில் இனவெறியை தூண்டும் வகையில் செய்தி வெளியிட்ட கிரீஸ் வீராங்கனை, ஒலிம்பிக் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். கிரீஸ் நாட்டின் "டிரிபிள் ஜம்ப்' வீராங்கனை பராஸ்கெவி பபாகிறிஸ்டோ, 23. தற்போது லண்டனில் உள்ள கிரீஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். கிரீசில் தற்போது பரவி வரும் வைரஸ் காயச்சலில் ஒருவர் பலியானார். ஐந்து பேர் வைத்தியசாலையில் உள்ளனர். இதுகுறித்து பராஸ்கெவி வெளியிட்ட "டுவிட்டர்' செய்தி, இனவெறியை தூண்டும் வகையில் இருந்தது. இதனால், ஒலிம்பிக் போட்டிக்கான கிரீஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து கிரீஸ் அணியின் தலைவர் இசிடோரோஸ் கூறுகையில்," ஒலிம்பிக்கின் அடிப்படை விதியைக் கூட மதிக்காமல் நடந்து, தவறு…
-
- 2 replies
- 1.4k views
-
-
முப்பது முறை டக் அவுட்டாகி சனத் புதிய சாதனை படைத்தார் [21 - February - 2008] [Font Size - A - A - A] இலங்கை - இந்திய அணிகளிடையே அடிலெய்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியின் சில முக்கிய அம்சங்கள். நேற்று முன்தினம் தனது 200 ஆவது போட்டியில் விளையாடிய யுவராஜ் அதிரடியாக 76 ஓட்டங்களை எடுத்து, இழந்த போர்மை மீட்டார். ஒருநாள் போட்டிகளில் 35 ஆவது அரைச்சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இவர் இதுவரை 200 போட்டிகளில் பங்கேற்று 8 சதம், 35 அரைச்சதம் உட்பட 5686 ஓட்டங்களை எடுத்துள்ளார். சச்சின் வேதனை: இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த சச்சின் நேற்று முன்தினம் ஒருநாள் போட்டிகளில் 20 ஆவது முறையாக `டக்' அவுட்டானார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அத…
-
- 1 reply
- 1.4k views
-
-
பாக்.எதிரான ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா திணறல் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 78 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. பிரிஸ்பென்: ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்னிலும், கேப்டன் சுமித் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். அதன்பின் கிறிஸ்லீன் (16), ஹேட் (39), மிஷ்சேல் மார்ஷ் (4) ஆகியோர் அ…
-
- 4 replies
- 1.4k views
-
-
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு – கிளென் மக்ஸ்வெல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு – கிளென் மக்ஸ்வெல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலியா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதை தொடர்ந்து நடைபெறவுள்ள 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடருக்கான ஆஸி அணியின் விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், இம்முறை அவுஸ்திரேலியாவின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட, ஆஸியின் ஒருநாள் அணிக்கு முதல் தெரிவாக தெரிவுசெய்யப்படும் கிளென் மக்ஸ்வெல்க்கு இடம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேர்வுக்குழ…
-
- 19 replies
- 1.4k views
-
-
இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான (ராஜ்ய சபா) நியமன உறுப்பினராக இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த வேளையில் நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை பிரதமர் வழங்கியதாகவும், அதை சச்சின் டெண்டுல்கர் ஏற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 250 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் மாநிலங்களவையில் 12 உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர். இது கலை, இலக்கியம், விஞ்ஞானம், சமூக சேவை போன்றவற்றில் மிகச்சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படுவது ஆகும். இந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் முதலாவது விளையாட்டு வீரர் ஆவதற்கான வாய்ப்பு சச்சின் டெண்டுல்கருக்கு கிட…
-
- 4 replies
- 1.4k views
-
-
மஹேலவை கட்டுப்படுத்த வேண்டும்: மிஸ்பா ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014 இலங்கை கிரிக்கெட் அணியின் மஹேல ஜெயவர்தெனவின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்தினாலேயே இலங்கை அணியை வெற்றி பெற முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த வேளையில் பாகிஸ்தான் கராச்சியில் வைத்து இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் இலங்கையில் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் அவர்களின் துடுப்பாட்ட வீரர்களை முழுமையாக கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும். அதில் முக்கியமானவர் மஹேல ஜெயவர்தென. அவர் மீது எனக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர் கிரிக்கெட்டில் நல்ல சாதனைகளை செய்துள்ள ஒருவர். ஆனால் நாங்கள் அங்கே வெல்வதற்…
-
- 25 replies
- 1.4k views
-
-
லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் `சர்ரே' அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 496 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்துள்ளது. உள்நாட்டு அணியான கிளெசெஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்ரே அணி இந்தச் சாதனையைப் படைத்தது. இப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அலி பிரௌன் 97 பந்துகளில் 176 ஓட்டங்களைக் குவித்தார். இவர் ஜேம்ஸ் பென்னிங்குடன் (152 ஓட்டங்கள்) ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 296 ஓட்டங்களைக் குவித்தார். ரிக்கி கிளார்க் 28 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களை விளாசித் தள்ளினார். ஆட்டத்தின் முடிவில் கிளெசெஸ்டர்ஷயர் அணியை 239 ஓட்டங்களில் சுருட்டி 257 ஓட்டங்கள் வித்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
இந்தியாவுக்கு அபராதம் தென் ஆப்பிரிக்காவுடனான 3 வது டெஸ்ட் போட்டி நடைப்பெற்ற நாக்பூர் மைதானம் உரிய தரத்தில் பேணப்படாததால் இந்தியாவுக்கு £ 9950 பவுன் அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விளக்கம் அளிக்க விரும்பினால் 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கலாம் என அந்த சபை இந்தியாவிற்கு தெரிவித்துள்ளது. http://www.hirunews.lk/tamil/sports/121219/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
-
- 2 replies
- 1.4k views
-
-
ரியோ ரியல் ஹீரோஸ்! எப்போதும் போலவே இந்த முறையும் அமெரிக்காவும் சீனாவும் தங்க வேட்டை யாட, ரியோ ஒலிம்பிக்-2016 இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. எண்ணற்ற மகிழ்ச்சிகள், அதிர்ச்சிகள், பிரிவுகள், உறவுகள், வேதனைகள், சாதனைகள் என கலந்துகட்டிய உணர்வுத் திருவிழாவில் இருந்து விறுவிறு ஹைலைட்ஸ் இங்கே! கோல்டு ஃபிஷ் பசிகொண்ட திமிங்கலம் போல பாய்கிறார் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். அள்ளிக்கோ அசத்திக்கோ என ஆடித் தள்ளுபடி ஆஃபர் போல தங்கப்பதக்கங்களை வரிசையாகக் கபளீகரம் பண்ணுகிறார் பெல்ப்ஸ். போட்டி தொடங்கிய இரண்டே நாட்களில் நான்கு தங்கங்களை வீட்டுக்கு கூரியர் பண்ணிவிட்டார். ஒரு போட்டிக்கு முன்னர், முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அந்…
-
- 0 replies
- 1.4k views
-
-
இங்கிலாந்து தொடரில் கலக்கிய வேகப் புயல் சோயப் அக்தர், அடுத்து இந்தியாவுக்கு எதிராக சாதிக்க காத்திருக்கிறார். இந்தியா என்ற பெயரை கேட்டாலே தன்னம்பிக்கை தானாக பிறந்து விடும் என்கிறார். தனது பவுலிங் மாற்றத்துக்கு என்ன காரணம்? இந்திய தொடரில் தனது இலக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் அக்தர் அளித்த ருசிகர பேட்டி: * வணக்கம் அக்தர். இங்கிலாந்து தொடரில் பிரமாதம் பண்ணி விட்டீர்கள்! அடுத்து இந்தியாவை பழி வாங்க காத்திருக்கிறீர்களா? பழி வாங்க ஒன்றுமில்லை. விட்டதை பிடிக்க காத்திருக்கிறேன். கடந்த முறை எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. இதை ஈடு செய்யும் வகையில் இம்முறை சிறப்பாக பந்துவீச திட்டமிட்டுள்ளேன். * யாருக்கு அதிக வாய்ப்பு காணப…
-
- 0 replies
- 1.4k views
-
-
சென்னை மட்டன் பிரியாணி.. இசையின் மீதான காதல்: மனம் திறந்த பிராவோ சென்னையில் திவோ என்ற நிறுவனம் சார்பில் ‘சலோ சலோ‘ பாடல் வெளியீட்டு விழா நேற்று இரவு நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் பிராவோ இந்த பாடலை பாடியுள்ளார். இந்த விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி தனது மனைவி சாக்ஷி, குழந்தையுடன் பங்கேற்றார். தவிர, கிறிஸ் கெய்ல், ஜடேஜா, சுமித், ஆசிஷ் நெஹ்ரா, மைக் ஹஸ்சி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாடலுடன் நடனம் ஆடிய பிராவோ கூறுகையில், நான் உலா என்ற தமிழ் படத்தில் ஏற்கனவே நடித்து இருக்கிறேன். இந்தி நடிகர்களில் ஷாருக்கானையும், தீபிகா படுகோனையும் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் படங்…
-
- 3 replies
- 1.4k views
-
-
புதுடில்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் அஷ்வினுக்கு, திலீப் சர்தேசாய் விருது வழங்கப்படுகிறது. சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில், முதன் முதலாக வாய்ப்பு பெற்றவர் அஷ்வின், 25. இதில் 22 விக்கெட் கைப்பற்றிய இவர், பேட்டிங்கில் ஒரு சதம் உட்பட 121 ரன்கள் எடுத்து, தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில்,"" வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய அஷ்வினுக்கு, 2011-12ம் ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சம் மற்றும் கோப்பை அடங்கிய இந்த விருது, வரும் டிசம்பர் 10ம் தேதி சென்னையில் நடக்கும், பி.சி.சி.ஐ., விருது வழங்கும் விழ…
-
- 3 replies
- 1.4k views
-
-
கிரிக்கெட்: இங்கிலாந்தின் இந்திய பயணம் தகவல் அட்டவணை.
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி எங்கு கிடைத்தது தெரியுமா?? #500testsofIndia வரும் 22 ஆம் தேதி கான்பூரில் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டி விளையாடுகிறது இந்திய அணி. இது இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டி. 1932 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க ஆரம்பித்தது இந்தியா. 84 வருட டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன? படங்கள், தகவலுடன் ஒரு பிளாஷ்பேக் இங்கே ... 1. முதல் டெஸ்ட் :- 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆடியது இந்திய அணி. முதல் டெஸ்ட் நடந்தது இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில். ஆம். அங்கிருந்து தான் இந்திய அணி தனது பயணத்தை துவக்கியது. இந…
-
- 3 replies
- 1.4k views
-