விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
செல்சீ ரசிகனின் ரத்தத்தை நீலமாக மாற்றியவன்... மிஸ் யூ ஜான் டெர்ரி! “அவருக்கு 32 வயது ஆகிறது. இது, இளம் வீரர்களுடன் போட்டியிடும் வயது அல்ல. வாரத்துக்கு இரண்டு போட்டிகளில் எல்லாம் அவரால் விளையாட முடியாது. வெளியே உட்கார அவர் பழகிக்கொள்ள வேண்டும்” இது, பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் பிரபல அணியின் கேப்டனைப் பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் சொன்னது. அணியின் கேப்டனை பிளேயிங் லெவனில் எடுக்காததற்கு, பயிற்சியாளர் சொன்ன இந்த கமென்ட் வைரல். பயிற்சியாளர் சொன்னதுபோல் 38 போட்டிகள்கொண்ட பிரீமியர் லீக் தொடரில் 14 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் அந்த வீரர். அவரது கால்பந்து வாழ்க்கை முடிந்தது என்றே நினைத்தனர். அதற்கடுத்த சீஸன்களில் நடந்தது சரி…
-
- 0 replies
- 514 views
-
-
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு? பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதுகின்றன. லண்டன்: இங்கிலாந்தில் நடந்து வரும் 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ‘கிளைமாக்ஸ்’க்கு வந்து விட்டது. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியாவும், முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மிதாலிராஜ் தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி, ஆச்சரியப்படும் வகையில் அசத்தி வருகிறது. லீக் சுற்றில் 5 வெற்றி, 2 த…
-
- 6 replies
- 1k views
-
-
ஆஸ்திரேலியாவுடன் அதிரடி: முதல் இடத்துக்கு முன்னேறினார் ஷாகிப் வங்கதேசம் அணி கிரிக்கெட்டில், அவ்வப்போது பெரிய அணிகளைத் தோற்கடித்து அதிர்ச்சிக் கொடுக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா என்று எந்த அணிகளும் அதிலிருந்து தப்பியதில்லை. குறிப்பாக, சொந்த மண்ணில் புலி பாய்ச்சலுடன் அந்த அணி விளையாடி வருகிறது. இதனிடையே, ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முதலே, அந்த அணி ஆஸ்திரேலியாவுக்குக் கடும் சவால் அளித்து வந்தது. அந்த ஆதிக்கத்தை கடைசி வரை செலுத்திய வங்கதேச அணி, போட்டியில் வெற்றியும் பெற்றுவிட்டது. இதன்மூலம், டெஸ…
-
- 0 replies
- 419 views
-
-
2018 உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறுமா ஆர்ஜன்டீனா? பேருவுடனான போட்டியை கோலின்றி சமநிலையில் முடித்த ஆர்ஜன்டீனா 1970 ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறாமல் வெளியேறும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. 2018 இல் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு தென் அமெரிக்காவில் இருந்து நான்கு அணிகளே நேரடி தகுதி பெற முடியும் என்ற நிலையில், ஆர்ஜன்டீன அணிக்கு மேலும் ஒரு போட்டியே எஞ்சியுள்ள நிலையில் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இரண்டு முறை உலக சம்பியனான ஆர்ஜன்டீனா தனது உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்து…
-
- 2 replies
- 724 views
-
-
டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியதையடுத்து, டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில், இரண்டு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியது இலங்கை அணி. இதையடுத்து, ஏழாம் இடத்தில் இருந்த இலங்கை அணி, நான்கு புள்ளிகள் அதிகமாகப் பெற்று 94 புள்ளிகளுடன் ஆறாம் இடத்துக்கு முன்னேறியது. மாறாக, 93 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, இந்தத் தொடர் தோல்வியையடுத்து 5 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு, முழ…
-
- 0 replies
- 339 views
-
-
ஷார்ஜாவில் நடப்பதாக இருந்த தமிழ் தெலுங்கு நடிகர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது ஆரோக்கியா கோப்பை என பெயரிடப்பட்ட அந்த போட்டி 30 ஓவர்கள் கொண்டதாக நடைபெற்றது 21ஓட்டங்களால் தமிழ் நடிகர் அணி கோப்பையை வென்றது தமிழ் நடிகர்கள் அணிக்கு நடிகர் அப்பாஸ் கப்டனாகவும் தெலுங்கு நடிகர் அணிக்கு நடிகர் தருண் கப்டனாகவும் இருந்தார்கள். நாணயச் சுழற்சியில் தமிழ் நடிகர்கள் அணி வென்று துடுப்பாட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக நடிகர்கள் ஷாமும் ரமணாவும் களம் இறங்கினார்கள். 2 ஓவருக்கு 8 ஓட்டங்கள் என்ற நிலையில் ஷாம் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய ரமணா 108 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்ராந்த் 56 ஓட்டங்களுடனும் ஜீவா 25 ஓட்டங்க…
-
- 3 replies
- 2.3k views
-
-
ஐ.பி.எல்: இதுவும் ஒரு விளையாட்டுதான் - ராஜ்ப்ரியன் ஐ.பி.எல் என்ற மூன்று எழுத்து, பாரத தேசத்தின் பாராளுமன்றம் முதல் பட்டி தொட்டி வரை பேசும் விஷயமாகிவிட்டது. ஐ.பி.எல் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஒரு அமைச்சரின் பதவியையும் காவுவாங்கியுள்ளது. காரணம் இதன் பின்னால் நடந்த திரை மறைவு விவகாரங்கள் வெளியே வந்தததால்தான். 2008ல் தான் முதன் முதலில் ஐ.பி.எல் 20-20 மேட்ச் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பெங்களுர் ராயல் சேலஜ்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி என 8 அணிகள் உருவாக்கப்பட்டது. இந்த அணிகள் சந்தையில் ஆடு, மாடுகள் ஏலம் விடப்படுவதை போல …
-
- 1 reply
- 580 views
-
-
அவுஸ்ரேலியா இங்கிலாந்து அணிகளுக்கான முதலாவது ஓடி நாளை ஆரம்பம் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள முதலாவது ஓடி போட்டி நாளை அவுஸ்ரேலியா மெல்பேர்ன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. இவ் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற்றுள்ளதுடன் 1 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெறக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் சமநிலையில் முடிவடைந்துள்ளது. அதனால் டெஸ்ட் தொடரை அவுஸ்ரேலியா அணி கைப்பற்றியுள்ளது. இதனைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஓடி தொடரில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணி மோதவுள்…
-
- 8 replies
- 693 views
-
-
டெஸ்ட் தரவரிசையில் 4 ஆம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பெற்றுக் கொண்ட வெற்றியையடுத்து இலங்கையணி டெஸ்ட் தரவரிசையில் 04 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து 04 ஆம் இடத்திலிருந்த பாகிஸ்தான் அணியின் 6 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலிலேயே இத் தகவல் வெளியிட்டுள்ளது. தென்னாபிரிக்க அணி முதலாம் இடத்திலும், அவுஸ்ரேலியா 2 ஆம் இடத்திலும், இங்கிலாந்து அணி 03 ஆம் இடத்திலும் இந்திய அணி 05 ஆம் இடத்திலும் உள்ளன. இதேவேளை, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் இலங்கையணியின் அஞ்சலோ மெத்தியூஸ் 5 ஆம் இடத்திலிருந்து 03 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்…
-
- 2 replies
- 560 views
-
-
கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ‘ஸ்விட்ச் ஹிட்’ புகழ் கெவின் பீட்டர்சன் கெவின் பீட்டர்சன் : கோப்புப்படம் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்(வயது37) தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று முறைப்படி அறிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியிலும் விளையாடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் லீக் டி20 போட்டியில் குயிட்டா அணி பிரதானச் சுற்றுக்கு தகுதிபெற பீட்டர்சன் முக்கியக் காரணமாக இருந்தார். இப்போது, பிரதானச் சுற்று போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்…
-
- 1 reply
- 315 views
-
-
உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது ஆஃப்கானிஸ்தான் அணி..! அயர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றது. உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப்போட்டிகள் ஜிம்பாவேயில் நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொடரின் சூப்பர் சிக்ஸ் போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தான் அணியும் அயர்லாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அயர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பு 209 ரன்கள் எடுத்தது. Photo Credit: Twitter/cricketworldcup அந்த அணி சார்பில் பவுல் ஸ்டிர்லிங் 55 ரன்களும் கெவின் ஓ பிரெயின் 41 ரன்களும் எடுத்தனர். ஆஃ…
-
- 1 reply
- 378 views
-
-
இந்தியா - நியூ ஸிலாந்து முதல் இருபது20 போட்டி கைவிடப்பட்டது By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 02:22 PM இந்தியா மற்றும் நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையிலான, சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. நியூ ஸிலாந்தின் வெலிங்டன் நகரில் இன்று வெள்ளிக்கிழமை இப்போட்டி நடைபெறவிருந்தது. எனினும், மழை காரணமாக ஒரு பந்துதானும் வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது. இந்தியா, நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட இருபது20 சர்வதேச போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தொடரின் 2 ஆவது போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மவுன்ட் மவுன்கானுய் நகரில் நடைபெறவுள்ள…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
காமன்வெல்த் 2018: 26 தங்கம் உட்பட 66 பதக்கத்துடன் இந்தியாவுக்கு 3-வது இடம் கோல்ட் கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமல்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம் உட்பட 66 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 256 வீரர்,வீராங்கனைகள் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். கடந்த 11 நாட்களாக நடந்த விளையாட்டுப்போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன. நேற்று சனிக்கிழம…
-
- 0 replies
- 511 views
-
-
இலங்கை அணியின் அடுத்த சுழல்பந்து பயிற்சியாளர் யார்? இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பயிற்சியாளர்கள் குழாம், இலங்கை அணிக்கு தகுதியான சுழற்பந்து பயிற்சியாளர் ஒருவரினை தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திரக் கிண்ண T20 தொடரினை அடுத்து இலங்கை அணியுடனான தனது முதல் பயிற்சி அவத்தையினை முடித்துக்கொண்டு தற்போது விடுமுறைக்காக அவுஸ்திரேலியா சென்றிருக்கும், இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க கொழும்பு வந்தடைந்த பின்னர் இலங்கை அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது. விடயங்கள் இவ்வாறு இருக்க ThePapare.com ஆனது, இலங்கை அணிக்கு அட…
-
- 0 replies
- 559 views
-
-
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒலிபரப்பு உரிமையை பெற்றது பிபிசி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை ஒலிபரப்பும் உரிமையை பெற்றது பிசிசி நிறுவனம். #ICCWorldCup பிபிசி நிறுவனம் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளை ரேடியோவில் நேரடி ஒலிபரப்பு செய்து வருகிறது இதற்கு இங்கிலாந்தில் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக பிசிசி நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை மாதம் 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ந…
-
- 0 replies
- 466 views
-
-
ஏ.பி.டிவில்லியர்ஸ் வைத்திருக்கும் ஓர் அரிய, தனித்துவ டெஸ்ட் சாதனை விக்கெட் கீப்பராக டிவில்லியர்ஸின் அரிய சாதனை. - படம். | வீடியோவிலிருந்து பிடித்தது. ஏ.பி.டிவில்லியர்ஸ் வைத்திருக்கும் ஓர் அரிய டெஸ்ட் சாதனை சாதனைகள் ஒருவரின் திறமையை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்று கூறப்படுவதுண்டு, ஏ.பி.டிவில்லியர்ஸ் போன்றவர்கள் டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர் போன்று சாதனைகளை நிகழ்த்தாவிட்டாலும் அவரது பன்முகத்திறமைக்கு இன்று நிகரான வீரர்கள் ஒருவரும் இல்லை என்றே கூற வேண்டும். ஓய்வு பெறும் வரையும் கூட திகைக்க வைக்கும் கேட்ச்கள், பீல்டிங்குகளைச் செய்துள்ளார், தன் அணிக்காக விக்கெட் கீப்பிங்கில் …
-
- 0 replies
- 449 views
-
-
காத்திருக்கும் சாதனைகள்: விராட் கோலிக்கு 17 ரன்; தோனிக்கு 33 இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எம்எஸ் தோனி :கோப்புப்படம் இங்கிலாந்துத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எம்எஸ் தோனி, ரோகித் சர்மா, ஆகியோர் பல்வேறு சாதனைகளைச் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அயர்லாந்து அணியுடன் டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு இந்தப் போட்டி 100-வது டி20 போட்டியாகும். பல்வேறு மைல்கல்லை இந்த 100 போட்டிகளில் இந்திய அணி தோனி தலைமையிலும், கோலி தலைமையிலும் கடந்து வந்துள்ளது. இதில் டி20 உலகக்கோப்பையை தோனி தலைமையில் வென்றது இந்திய அணி என்பது முத்தாய்ப்பாகும். இங்கிலாந்து சென…
-
- 0 replies
- 585 views
-
-
‘பல்டி’ அடிக்க தடையா நவம்பர் 30, 2014. மும்பை: கால்பந்து போட்டிகள் கோல் அடித்தால் வீரர்கள் தலைகீழாக ‘பல்டி’ அடித்து கொண்டாடும் ‘சோமர்சால்ட்’ முறைக்கு, தடை விதிப்பது குறித்து ‘பிபா’ யோசித்து வருகிறது. உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களில் முதலிடத்தில் (16) இருப்பவர் ஜெர்மனி வீரர் குளோஸ், 36. இவர் கோல் அடித்தவுடன் அப்படியே தலை கீழாக ‘பல்டி’ அடித்து கொண்டாடுவார். இதை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. தற்போது நடக்கும் ஐ.எஸ்.எல்., தொடரின் முதல் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் மோதின. இதில், தொடரின் முதல் கோல் அடித்தார் கோல்கட்டா வீரர் பிக்ரு. இதை விட, பிக்ரு ‘சோமர்சால்ட்’ முறையில், ‘டைவ்’ அடித்தது தான் மைதானத்தில் இருந்த ஒட்டு மொத்த …
-
- 0 replies
- 953 views
-
-
Published By: VISHNU 14 MAY, 2023 | 04:06 PM (நெவில் அன்தனி) இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் (2nd World Mix Boxing Championship 2023) போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய 7 வீர, வீராங்கனைககளும் பதக்கங்கள் சுவீகரித்து வரலாறு படைத்தனர். காஷ்மீர், ஸ்ரீநகர் எஸ்.கே. உள்ளக விளையாட்டரங்கில் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றெடுத்தனர். உலக கலவை குத்துச்சண்டை சம்மேளனத்தின் அனுமதியுடன் இந்திய கலவை குத்துச்சண்டை சம்மேளனம் நடத்த…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
மேற்கிந்திய தீவுகள் அணிகெதிரான டெஸ்ட் : இந்தியா 308 ஓட்டங்கள் குவிப்பு! இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 95 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்களை சேர்த்திருந்தது. ரோஸ்டன் சேஸ் 98, பிஷூ 2 களத்தில் இருந்தனர். உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரோஸ்டன் சேஸ் சதம் அடித்தார். உமேஷ் யா…
-
- 2 replies
- 429 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சந்திரசேகர் லூத்ரா பதவி, மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ரோகித் சர்மாவின் தலைமையில் ஆடிய இந்திய அணியின் ஒருநாள் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. ஆஸ்திரேலியாவிடம் தோற்றபிறகு, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை விசாகப்பட்டினத்தில் இன்று (வியாழக்கிழமை, நவம்பர் 23) நடைபெறும் போட்டியுடன் தொடங்குகிறது. உலகக் கோப்பையில் பங்கேற்ற அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா ஆகிய 3 வீரர்கள் மட்டுமே இந்தத் தொடரில் பங்கேற்கின்றனர். ஹர்திக் பாண்டியா இல்லாததால், அணியின் தலைமை பொறுப்பு சூர்ய குமா…
-
- 6 replies
- 661 views
- 1 follower
-
-
காசாவிற்கு ஆதரவான செய்தி - ஐசிசியின் உத்தரவிற்கு எதிராக போராடுவேன் - உஸ்மான் கவாஜா காசாவிற்கு ஆதரவான செய்திகளை வெளிப்படுத்தக்கூடாதுஎன்ற சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் உத்தரவிற்கு எதிராக போராடப்போவதாக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் உஸ்மன் கவாஜாதெரிவித்துள்ளார். குரலற்றவர்களிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவதை தடுக்கும் ஐசிசியின் உத்தரவிற்கு எதிராக போராடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். சமூகஊடகத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இதனை தெரிவித்துள்ள உஸ்மான் கவாஜா தனது செய்தி அரசியல் செய்தியல்ல என குறிப்பிட்டுள்ளதுடன் தன்னை ஏசுவதற்காக தன்னுடன் தொடர்புகொள்பவர்களே பெரும் பிரச்சினையாக உள்ளனர் எனவும் தெரிவித்…
-
- 0 replies
- 551 views
-
-
கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த செல்வி தினகராசா சோபிகா, செல்வி நடராசா வினுசா என்பவர்கள் தேசிய றோல் போல் அணியில் தெரிவாகி 21.02.2019 தொடக்கம் 24.02.2019 வரை இந்தியாவில் இடம்பெற்ற ஆசிய கிண்ணபோட்டியில் விளையாடி கிளிநொச்சிக்கு மட்டுமல்ல இலங்கைக்கே பெருமையை தேடித்தந்திருக்கிறார்கள். இலங்கை அணி மூன்றாம் இடத்தையும்,நடராசா வினுசா என்பவர் சிறந்த பந்து காப்பாளர் என்ற விருதையும் பெற்றுக்கொண்டனர். இவர்களையும் இவர்களை பயிற்றுவித்த கிளிநொச்சியை சேர்ந்த திரு. விக்ரர் சுவாம்பிள்ளை அவர்களையும் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் பாராட்டுகளை தெரிவித்தார். http://www.virakesari.lk/article/51418
-
- 0 replies
- 373 views
-
-
Published By: VISHNU 18 JUN, 2024 | 02:02 PM (நெவில் அன்தனி) ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்த சி குழுவுக்கான கடைசிக்கு முந்தைய ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பப்புவா நியூ கினியை 7 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றி கொண்டது. ஏற்கனவே சுப்பர் 8 சுற்று தகுதியை இழந்திருந்த நியூஸிலாந்துக்கு இந்த வெற்றியில் கிடைத்த ஆறுதலுடன் நாடு திரும்பவுள்ளது. நியூஸிலாந்தின் இந்த வெற்றியில் பந்துவீச்சாளர்கள் பெரும் பங்காற்றி இருந்தனர். பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் லொக்கி பேர்குசன் 4 ஓவர்கள் வீசி ஒரு ஓட்டமும் கொடுக்காம…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து வெளியேறிய ஓப்போ நிறுவனம்..: இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் விரைவில் வருகிறது மாற்றம்! மும்பை: ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து ஓப்போ நிறுவனம் வெளியேறியுள்ளதால், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் விரைவில் புதிய மாற்றம் வரவுள்ளது. கடந்த மார்ச் 2017ம் ஆண்டு, விவோ மொபைலை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிக்கான ஸ்பான்ஸர் உரிமைகளை ஓப்போ பெற்றது. அப்போது, மற்றவர்களை விட சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு அதிக தொகை கொடுத்து, ரூ.1079 கோடிக்கு ஒப்பந்தம் கோரியதால் தான் ஓப்போ வென்றது. 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்துக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் படி, இரண்டு நாடுகள் மோதும் தொடரின் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.4.61 க…
-
- 0 replies
- 835 views
-