விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
பெண்களுக்கான 10.000 மீற்றர் போட்டியில் எத்தியோப்பிய வீராங்கனை கிடே உலக சாதனை எதியோப்பியாவைச் சேர்ந்த 23 வயதுடைய வீராங்கனை லெட்டிசென்பெட் கிடே பெண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் உலக சாதனையை முறியடித்தார். நெதர்லாந்தின் ஹெஞ்சிலோ விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற எதியோப்பிய வீரர்களுக்கான ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் பங்குகொண்ட அவர், 29 நிமிடங்கள் 01.03 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவுசெய்து இந்த சாதனையை நிலைநாட்டினார். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றுமொரு தகுதிகாண் போட்டியில் பெண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் உலக சாதனையை நெதர்லாந்…
-
- 1 reply
- 480 views
-
-
ஸ்மித், கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? யார் சிறந்த கேப்டன்? நம்பர்கள் சொல்லும் ரகசியம் #DepthReport #3MinRead இரு ஜாம்பவான்கள். இரண்டு கோபக்கார இளைஞர்கள், இரண்டு நம்பர்1 பேட்ஸ்மேன்கள், இரண்டு கேப்டன்கள் - இனி கிரிக்கெட் உலகை ஆளப்போகும் அந்த இருவர் விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இதுவரையிலான எந்தவொரு ஜாம்பவான்களின் சாயலும் இல்லாமல் தனித்துத் தெரியும் ஜென் Z கிரிக்கெட் ஜாம்பவான்கள் இவர்கள். சச்சின் மாதிரி பேட்டிங் செய்யவும் தெரியும், கங்குலி போல கேப்டன்சியும் தெரியும். பிராட்மேன் போல வெளுக்கவும் முடியும், ஸ்டீவ்வாக் பாணியில் அணியை வழிநடத்தவும் முடியும். இப்படி காக்டெயிலாக வளர்ந்து நிற்கும் …
-
- 0 replies
- 469 views
-
-
இந்த தசாப்தத்தின் சீறந்த வீரர் யார் என்றதுமே பலரது நினைவில் வருபவர் சச்சின் தெந்துல்கார் தான். அதற்குக் காரணம் இன்றைக்கு கிறிக்கெற் உலகில் தனது பணபலத்தாலும் ஊடக பலத்தாலும் கட்டுக்குள் வைத்திருக்கின்ற இந்திய கிறிக்கெற் அதிகார மையம் தான் என்பது இந்தப் பதிவை முழுமையாகப் படிக்கின்ற போது உங்களுக்குப் புரியும். சச்சின் தெந்துல்கர் தன்னுடைய துடுப்பாட்டத்தால் இந்திய துடுப்பாட்டத்தை கிட்டத்தட்ட இருபத்தைந்தாண்டுகளாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஓரளவில் ஏற்றுக் கொண்டாலும் அவரே உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை. புள்ளிவிபரங்களின் துணைகொண்டு இது குறித்து ஆராய்வதற்கு முன்பதாக பொதுவான சில விடயங்கள் குறித்தும் கருத்தில் எடுக்க வேண்டிய…
-
- 10 replies
- 1k views
-
-
சச்சின் அணியின் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு தூதர் ஆனார் கமல் சென்னை: புரோ கபடி லீக்கில் சச்சின் அணியான தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக நடிகர் கமல் அறிவிக்கப்பட்டுள்ளார். கோட்டை தாண்டி புகழை சூடுங்கள்: புரோ கபடி தொடரில் பங்கேற்கும் சச்சின் அணியான ‛தமிழ் தலைவாஸ்' அணியின் விளம்பர தூதராக நடிகர் கமலஹாசன் அறிவிக்கப்பட்டார். '' முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்'' எனத் தெரிவித்துள்ள நடிகர் கமல், கோட்டை தாண்டி புகழை சூடுங்கள் என வீரர்களுக்கு வ…
-
- 16 replies
- 4.3k views
-
-
விக்கெட்டில் பட்ட பந்து ; 4 ஓட்டங்கள் அணிக்கு கிடைத்தது ; என்ன நடந்தது தெரியுமா..? (வீடியோ இணைப்பு) கரிபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது நடந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல கிரிக்கெட் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டிரின்பெகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஏழாவது ஓவரில் சென்.லூசியா ஸ்டார்ஸ் அணி துடுப்பெடுத்தாடி கொண்டிருக்கும் வேளையில் டிரின்பெகோ அணியின் பந்து வீச்சாளர் வீசிய பந்து விக்கெட்டில் பட்டு பெய்ல்ஸ் விழாமல் 4 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது. குறித்த பந்து துடுப்பாட்ட வீரரின் மட்டையில் படாமல் நேராக விக்கெட்டில் பட்டும் பெய்ல்ஸ் விழாதமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. htt…
-
- 0 replies
- 434 views
-
-
டோனியின் அனுபவம் குறித்து ரவி சாஸ்திரி அசத்தல் டுவிட் அனுபவத்தை வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது என டோனி தனது அனுபவத்தை நிரூபித்துள்ளார் என ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. 36 வயதாகும் டோனி தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக மற்றும் பணியாற்றி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டோனியின் பேட்டிங் குறித்து விமர்சனம் எழும்பி வருகிறது. டோனியின் பினிஷிங் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது என்ற விமர்சனம் இருந்து வருகிறது. பல்வேறு விமர்சனங்க…
-
- 0 replies
- 353 views
-
-
13ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்த யாழ் பல்கலைக்கழகம் University of Jaffna - Champions Inter University Football Championship 2017 (Photo Courtesy – MoraSpirit) பதுளை, வின்சன்ட் டயஸ் அரங்கில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் பேராதனை பல்கலைக்கழகத்தை வீழ்த்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யாழ் பல்கலைக்கழகம், 19 தடவைகள் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 13 ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். யாழ் பல…
-
- 0 replies
- 428 views
-
-
தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்: பும்ரா உள்பட 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியா களம் இறங்குகிறது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா உடன் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கைக்கு எதிராக மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடி இருக்கிறது. டெஸ்ட் தொடர் முடிந்த உடன் ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 10-ந்தேதி 17-ந்தேதி வரையும், டி20 கிரிக்கெட் தொடர் 20-ந்தேதி உடன் 24-ந்தேதி வரையும் நடக்கிறது. அதன்பின் இந்திய அணி 28-ந்தேதி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. 30-ந்தேதி ம…
-
- 73 replies
- 8.2k views
-
-
மன்செஸ்டர் சிட்டிக்கு வெற்றிக் கிண்ணம் திங்கட்கிழமை, 12 மே 2014 14:57 இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டதொடரில் மன்செஸ்டர் சிட்டி அணி சம்பியன் ஆகியுள்ளது. நேற்று வெஸ்ட் ஹாம் ஜுனைட்டட் அணியுடனான போட்டியில் 2 இற்கு 0 என்ற ரீதியில் வெற்றி பெற்று இந்த வருடத்திற்க்கான முதலிடத்தை உறுதி செய்தது. மன்செஸ்டர் சிட்டி அணி விளையாடிய 38 போட்டிகளில் 27இல் வெற்றி பெற்று 6 போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்த அதேவேளை, 5 போட்டிகளில் தோல்வியை சந்த்திதுள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்குள் மன்செஸ்டர் சிட்டி அணி இரண்டாவது தடவையாக சம்பியன் ஆகியுள்ளது. இங்கிலாந்து பிரீமியர் லீக் வரலாற்றில் நான்காவது தடவையாக மன்செஸ்டர் சிட்டி அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இரண்டாமிடத்தைப் லிவர்ப்…
-
- 0 replies
- 513 views
-
-
51 பந்துகளில் 126 ரன்கள், 14 சிக்ஸ், 6 பவுண்டரி: கிறிஸ் கெய்ல் மேஜிக் கிறிஸ் கெய்ல். - படம். | கெட்டி இமேஜஸ். வங்கதேச பிரீமியர் லீக், டாக்காவில் நடைபெற்ற டி20 போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக ஆடிவரும் கிறிஸ் கெய்ல், குல்னா டைட்டன்ஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்து அதிரடி சதம் கண்டார். இதனால் ரங்பூர் ரைடர்ஸ் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 15.2 ஓவர்களில் இலக்கை ஊதித்தள்ளியது. முதலில் பேட் செய்த குல்னா 6 விக், இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ரங்பூர் அணியில் மலிங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மஷ்ரபே மோர்டசா 4 ஓவர்களில் 23 ரன்களையே விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினார். இந்தச் சதம் பங்களாதேஷ் பிரீமியர் லீ…
-
- 2 replies
- 810 views
-
-
தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்… அரசியலில் தமக்கு நாட்டமில்லை எனவும், அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏதேனும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், தமது பெயர் அதற்காக பயன்படுத்துவது வழமையாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே மக்களுக்கு சேவையாயற்ற முடியும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு தாம் சேவ…
-
- 4 replies
- 1.6k views
-
-
இந்திய பேட்ஸ்மென்கள் எனது பந்தை சுலபமாக அடிக்கலாம் என்று மனக்கோட்டை கட்டினர்: மொயீன் அலி இந்தியாவுக்கு எதிராக நடப்பு டெஸ்ட் தொடரில் கலக்கி வரும் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொயீன் அலி, இந்திய பேட்ஸ்மென்கள் தனது பந்தை எளிதில் அடித்து விடலாம் என்று நினைத்ததாகக் கூறியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக மொயீன் அலி இதுவரை 19 விக்கெட்டுகளை 22.94 என்ற சராசரி விகிதத்தில் கைப்பற்றியுள்ளார். "இந்திய பேட்ஸ்மென்கள் என்னை எளிதான இலக்காக எண்ணினர். எனது பந்து வீச்சில் சுலப ரன்களை எடுத்து விடலாம் என்று நினைத்தனர். அவர்களது இந்த எண்ணம் எனக்கு உதவிகரமாக அமைந்தது. இப்போது அவர்கள் என்னை அடித்து ஆடினால் எனக்கு இன்னும் விக்கெட்டுகளை எடுக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்திய வ…
-
- 0 replies
- 471 views
-
-
ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரராக ரொனால்டோ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014 08:44 0 COMMENTS ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரராக போர்த்துக்கல் அணித்தலைவரும், ரியல் மாட்ரிட் கழக வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான போட்டியில் நெதர்லாந்து வீரர் ஆர்ஜன் ரொபன், ஜேர்மனி வீரர் மனுஎல் நெயுர் ஆகியோருடன் போட்டியிட்டு ரொனால்டோ இந்த விருதை தனதாக்கியுள்ளார். இந்த விருதை பெறும் நான்காவது வீரர் இவர். இதற்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் பிரான்க் ரிபேரி, ஸ்பெயின் வீரர் அன்றேஸ் இனியஸ்டா, ஆர்ஜன்டீன வீரர் லியனொல் மெஸ்ஸி ஆகியோர் வென்றுள்ளனர். மெஸ்ஸி அவரின் பார்சில்னோ கழகத்திற்காக விருதைப் பெற்றுக் கொண்டார். ஊடகவியலாளர்களினால் வாக்களித்து தெரி…
-
- 1 reply
- 518 views
-
-
தோனியை விமர்சித்த பிரிட்டன் ஊடகங்கள்: இந்திய ரசிகர்கள் கூச்சல் எதிரொலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக கூச்சலிட்ட இந்திய ரசிகர்களை கண்டிக்க மறுத்த தோனியை பிரிட்டன் ஊடகங்கள் விமர்சித்துள்ளன. 20 ஓவர் போட்டியின்போது இங்கிலாந்து அணியைவிட இந்திய அணி ரசிகர்கள்தான் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அதிகம் வந்திருந்தனர். இந்திய வீரர்கள் விக்கெட் எடுத்தபோதும், பவுண்டரிக்கு பந்தை விரட்டியபோதும் பெரும் கரவொலி எழுந்தது. இந்திய வீரர்களுக்கு ஆதரவாக குறிப்பாக தோனியைப் புகழும் வாசக அட்டைகள் பலவற்றையும் இந்திய ரசிகர்கள் மைதானத்தில் கொண்டு வந்திருந்தனர். போட்டியில் இங்கிலாந்தில் நடைபெறுகிறதா அல்லது இந்தியாவில் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு இங்கில…
-
- 0 replies
- 622 views
-
-
மெஸ்சி 250: பார்சிலோனா வெற்றி அக்டோபர் 19, 2014. பார்சிலோனா: எல்பார் அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 5–0 என வெற்றி பெற்றது. பார்சிலோனா வீரர் மெஸ்சி லா லிகா தொடரில் 250வது கோல் அடித்து அசத்தினார். ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. பார்சிலோனாவில் நடந்த இதன் லீக் போட்டியில் எல்பார், பார்சிலோனா அணிகள் மோதின. முதல் பாதியில் கோல் எதுடும் அடிக்கப்படவில்லை. விறுவிறுப்பான இரண்டாவது பாதியில் சேவி(60வது நிமிடம்), நெய்மர் (72), மெஸ்சி (74) தலா ஒரு கோல் அடிக்க, பார்சிலோனா அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சாதனையை நோக்கி: இந்தப்போட்டியில் ஒரு கோல் அடித்ததன் மூலம், லா லிகா வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர்கள…
-
- 0 replies
- 395 views
-
-
Published By: SETHU 15 MAY, 2023 | 12:06 PM 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஜேர்மனியின் பேர்லின் நடத்துவது குறித்து கற்பனை செய்ய முடியும் என அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் தெரிவித்துள்ளார். '1936 பேர்லின்' ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று 100 வருடங்கள் பூர்த்தியாகும் வேளையில் மீண்டும் அங்கு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து ஆராயப்படுகிறது. 1936 ஆம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா பேர்லின் நகரில் நடைபெற்றது. அவ்வருட குளிர்கால ஒலிம்பிக் விழாவும் ஜேர்மனியின்; ஜேர்மிஷ் பார்டேன்கேர்சென் நகரில் நடைபெற்றன. சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் தல…
-
- 1 reply
- 290 views
- 1 follower
-
-
யாழ்.மத்திய கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட இரண்டு நாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஆட்டமொன்றில் யாழ். மத்திய கல்லூரி வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை எதிர்த்து கொட்டஹேன ஆனந்தா மகா வித்தியாலயம் மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய ஆனந்தா மகா வித்தியாலயம் 48.4 ஓவர்களின் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பஷன் ஜெயகலன 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் யாழ். மத்திய கல்லூரி சார்பா…
-
- 4 replies
- 535 views
-
-
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது பாகிஸ்தான் – தென்னாபிரிக்காவிற்கு 41 ஓட்டங்கள் வெற்றி இலக்கு! பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவிற்கு 41 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நிர்ணயித்துள்ளது. தென்னாபிரிக்கா – பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் 3 ஆம் திகதி ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட தென்னாபிரிக்கா அணி முடிவு செய்தது. அதன் பிரகாரம் முதலில் களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி 177 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அவ்வணி சார்பில் அணித்தலைவர் சர்ஃப்ராஸ் அகமட் 56, ஷான் மசூத் 44 ஓட்டங்களை பெற பந்துவீச்சில் டுவானோ ஒலிவியே 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங…
-
- 0 replies
- 488 views
-
-
நான் சிறுவயது முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன் - மனம் திறந்தார் அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் Published By: RAJEEBAN 14 DEC, 2023 | 05:01 PM அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கமரூன் கிறீன் தான் சிறுவயது முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது தாய் கர்ப்பமாகயிருந்த காலத்திலேயே தான் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர் என அவர் தெரிவித்துள்ளார். தனது மகன் 12 வயதிற்கு மேல் உயிர்பிழைப்பானா என்ற சந்தேகம் ஒரு காலத்தில் நிலவியது என கமரூன் கிறீனின் தந்தை ஹரி தெரிவித்துள்ளார். 2022 இல் டி 20 போட்டிகளில் விளையாட ஆரம்பித்த கிறீன் அவுஸ…
-
- 1 reply
- 231 views
- 1 follower
-
-
ஜோஸ் பட்லரை, தோனி, டிவில்லியர்ஸ், கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிடும் இங்கிலாந்து ஊடகம் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று சமீபத்தில் அசத்தி வரும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மென் ஜோஸ் பட்லரை மற்ற அதிரடி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மென்களான டிவில்லியர்ஸ், கில்கிறிஸ்ட், தோனி ஆகியோருடன் ஒப்பிட்டுள்ளது இங்கிலாந்து ஊடகம். நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் முடிந்த டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் 3 மணி நேரங்களில் 73 ரன்கள் எடுத்தார் ஜோஸ் பட்லர். டி20 போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 35 பந்துகளில் 71 ரன்கள் விளாசித் தள்ளினார். பிறகு அன்று நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 77 பந்துகளில் 129 ரன்களை விளாசி அந்தத் தருணத்தில் சரிவிலிருந்த இங்கிலாந்தை மீட்டு நிய…
-
- 0 replies
- 746 views
-
-
ஜப்பான் கிராண்ட் பிரியில் விபத்தில் சிக்கிய வீரர் 9 மாதங்களுக்கு பிறகு மரணம்! ஜப்பான் கிராண்ட் பிரி பந்தயத்தின் போது விபத்தில் சிக்கிய பார்முலா ஒன் கார்பந்தய வீரர் ஜுல்ஸ் பியான்ச்சி, 9 மாதங்கள் சிகிச்சைக்கு பின்,நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 25. பிரான்சை சேர்ந்த பார்முலா ஒன் கார்பந்தய வீரர் ஜுல்ஸ் பியான்ச்சி, கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பார்முலா ஒன் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஜப்பான் கிராண்ட் பிரி போட்டியின்போது மெர்சியா குழுவுக்காக பங்கேற்ற பியான்ச்சியின் பந்தய கார், விபத்தில் சிக்கியது. பலத்த மழை காரணமாக பியான்ச்சியின் கார் பந்தய பாதையில் இருந்து வழுக்கி சென்று, அருகில் நின்று கொண்டிருந்த ஆபத்துதவி வாகனத்தின் மீது ம…
-
- 3 replies
- 289 views
-
-
2016 ரியோ ஒலிம்பிக்: ஓராண்டு கவுன்டவுன் தொடங்கியது 2016 ஒலிம்பிக் ஓராண்டு கவுன்டவுன் நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) பிரேசில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஹென்ரிக் எட்வர்டோ அல்வெஸ், விளையாட்டுத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஹில்டன், பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் கார்லஸ் நுஸ்மேன், பிரேசில் அதிபர் அதிபர் தில்மா ரூசெஃப், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பச் உள்ளிட்டோர். படம்: ஏஎஃப்பி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இதற்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அதற்கான கவுன்டவுன் அதிகாரப்பூர்வமாக ஒலிம்பிக் பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்டது. உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில்…
-
- 0 replies
- 199 views
-
-
ஊக்கமருந்துப் பரிசோதனையில் சிக்கினார் குசால் இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசால் ஜனித் பெரேரா, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்துச் சோதனையிலேயே, குசால் ஜனித் பெரேராவின் ஊக்கமருந்துப் பாவனை கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான குழாமில், குசால் பெரேரா இடம்பெற்றிருந்த நிலையில், நியூசிலாந்துக்குச் சென்றிருந்தார். ஆனால், தற்போது அவரது ஊக்கமருந்துப் பாவனை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் குழாமிலிருந்து அவர் விலக்கப்…
-
- 4 replies
- 989 views
-
-
-
- 2 replies
- 1.5k views
-
-
தொடரை இழந்தது பாகிஸ்தான் January 22, 2016 வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் நொறுக்கியது நியூஸிலாந்து. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூஸிலாந்து 2-1 என்று கைப்பற்றியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுக்க இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 16.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. மார்டின் கப்தில் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுக்க, வில்லியம்சன் 33 ரன்களை எடுத்தார். ஆனால் கோரி ஆண்டர்சன் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் விளாசி கடைசி வரை நாட் அவ…
-
- 0 replies
- 419 views
-