விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
10 விக்கெட்களால் இலங்கையை இலகுவாக வென்றது அவுஸ்திரேலியா (நெவில் அன்தனி) இலங்கையின் 2ஆவது இன்னிங்ஸை 22.5 ஓவர்களில் 113 ஓட்டங்களுக்கு சுருட்டிய அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர்கள் தமது அணிக்கு மிக இலகுவான 10 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். காலி சர்வதேச விளையாட்டரங்கில் இரண்டரை தினங்களுக்குள் நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பகுதிநேர சுழல்பந்துவீச்சாளரைக்கூட இலங்கை துடுப்பாட்ட வீரர்களால் எதிர்கொள்ள முடியாமல் பொனது. பொதுவாக உப கண்ட ஆடுகளங்களில் சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு அவுஸ்திரேலியா சிரமப்படும் என கூறப்படுகிறது. ஆனால், அதற்கு எதிர்மாறாக அவுஸ்திரேலியாவின் சுழல்பந்துவீச்சில் இலங்கை திணறிப்போனது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர…
-
- 0 replies
- 461 views
-
-
இன்று பும்ரா தலைமையில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்! மின்னம்பலம்2022-07-01 கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 1 - இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின்போ…
-
- 0 replies
- 382 views
-
-
மகாபலிபுரத்தில் மோதும் ரஷ்யா - யுக்ரேன் - ஆனால், இது வேற மாதிரி சூசன் நைனன் விளையாட்டுத்துறை எழுத்தாளர் 25 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தமிழ்நாட்டின் ஒரு சிறிய பகுதியான மாமல்லபுரம் (மகாபலிபுரம்), ஒரு வேறுபட்ட ரஷ்யா-யுக்ரேன் இடையிலான போட்டியைப் பார்க்கப் போகிறது. இந்தியா நடத்தவிருக்கும் செஸ் ஒலிம்பியாடின் பின்னணியில், சதுரங்க விளையாட்டின் உச்ச அமைப்பான சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) தலைவரை தேர்வு செய்ய 180க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ளனர். போட்டியில் முன்னணியில் இருப்பவர் ரஷ்யாவின் முன்னாள் …
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
கிரிக்கெட் வரலாற்றில் பார்த்திடாத முறையில் அவுட்..! சொந்த அணி வீரரால் ஆட்டமிழந்த வீரர் வைரலாகும் வீடியோ இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில் லீட்சில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 78 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ஹென்ரி நிகோல்ஸ் ஆட்டமிழந்த வீடியோ தற்போது இணையத…
-
- 4 replies
- 427 views
-
-
பிரித்தானியா செல்லும் கிளிநொச்சி வீரர்! பிரித்தானியா - பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள 2022ம் ஆண்டுக்கான கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்குபெற்றும் குத்துச்சண்டை அணியில் கிளிநொச்சியைச் சேர்ந்த வீரர் ஒருவர் தெரிவாகியுள்ளார். கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்குகொள்ள பயணமாகவுள்ளார். இவர் தேசியப் போட்டிகளில் வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வடமாகாணத்திற்காக பெற்றுக்கொடுத்துள்ளதுடன், இராணுவ அணிக்காக விளையாடி தேசிய அணியில் இடம்பிடித்திருந்தார். …
-
- 0 replies
- 355 views
-
-
SL Vs Aus ODI: 30 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வெற்றி கண்ட இலங்கை அணி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் 30 வருடங்களுக்கு பின்னர், இலங்கை அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 1992ம் ஆண்டிற்கு பின்னர், இலங்கையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. 1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மூன்று போட்டிகளை கொண்ட தொடரை, இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இலங்கை அணி அப்போது, வெற்றியை தன்வசப்படுத்தியது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இ…
-
- 2 replies
- 478 views
- 1 follower
-
-
புதிய சாதனையை படைத்த வீரர்! டெஸ்ட் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டியபோது அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இங்கிலாந்தின் பேர்ஸ்டோ. நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. லோர்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. 2 வது டெஸ்ட் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசி. தலைவர் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை. நியூசிலாந்து அ…
-
- 0 replies
- 678 views
-
-
ICC மே மாதத்திற்கான சிறந்த வீரராக-மெத்தியூஸ்-தெரிவு! வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மே மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை அறிவித்துள்ளது. அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் ஏஞ்சலோ மெத்தியூஸின் துடுப்பாட்டம் இந்தப் பெயரிடலுக்குக் காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 1 reply
- 406 views
-
-
ஆஸி – இலங்கை அணிகள் மோதும் ...முதலாவது, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று! இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இரவு பகல் ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்த போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய அணி முன்னதாக இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் ஐந்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன. https://athavannews.com/2022/1286877
-
- 0 replies
- 254 views
-
-
காமன்வெல்த் 2022: எங்கு எப்போது நடைபெறுகிறது? இந்திய வீரர்கள் யார்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுகள் இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இடம்பெறுகிறது. காமன்வெல்த் போட்டிகள் என்றால் என்ன? காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அதனை சார்ந்த பிராந்தியங்களுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியே 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி' என அழைக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் 72 நாடுகள் கலந்து கொள்கின்றன. …
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி தமிழ் மாணவி கலையரசி: யார் இவர்? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KALAIYARASI படக்குறிப்பு, இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி தமிழ் மாணவி கலையரசி இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியிலிருந்து கலையரசி எனும் தமிழ் மாணவியொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இந்த மாணவி மேற்படி அணிக…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
இந்தியாவின் சவாலை முறியடித்து 7 விக்கெட்களால் தென்னாபிரிக்கா வெற்றி (என்.வீ.ஏ.) டெல்லி, அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) இரவு கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சவாலை முறியடித்து 7 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபிரிக்கா முன்னிலை அடைந்துள்ளது. இந்தியாவின் அதிரடி வீரர் இஷான் கிஷான் குவித்த அதிரடி அரைச் சதம், ரசி வென் டேர் டுசென், டேவிட் மில்லர் ஆகியோரின் அதிரடி அரைச் சதங்களால் வீண் போனது. இந்திய அணியில் வழமையான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, விராத் க…
-
- 1 reply
- 219 views
-
-
2 ஆவது ரி20 போட்டி ஆரம்பம்... அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ளது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் அழைப்பு விடுத்துள்ளார். இந்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா பாரிய வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் …
-
- 1 reply
- 320 views
-
-
மித்தாலி ராஜ் ஓய்வு: இந்திய பெண்கள் கிரிக்கெட் ராணியின் சாதனைகள் என்னென்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மித்தாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 23 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத இடத்தில இருந்த மித்தாலி குறித்த சில முக்கிய தகவல்கள் இங்கே. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 1. 39 வயதாகும் மித்தாலி ராஜ், 232 ஒருநாள் போட்டிகளிலும், 89 டி20 போட்டிகளிலும், 12 டெஸ்ட் போட்டிக…
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
இலங்கைக்கு எதிரான கடந்த 5 போட்டிகளிலும் வோர்னர் அசத்தல் : அவுஸ்திரேலியா 10 விக்கெட்களால் இலகு வெற்றி (கெத்தராம அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (07) இரவு நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 10 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றி பெற்றது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 134 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன…
-
- 0 replies
- 438 views
-
-
2022 கட்டார் உதைப்பந்தாட்ட குழுக்கள் Group A: Qatar (hosts), Netherlands, Senegal, Ecuador. Group B: England, United States, Iran, Wales/Scotland/Ukraine. Group 😄 Argentina, Mexico, Poland, Saudi Arabia. Group 😧 ... Group E: Spain, Germany, Japan, Costa Rica/New Zealand. Group F: Belgium, Croatia, Morocco, Canada.
-
- 7 replies
- 1.2k views
-
-
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (என்.வீ.ஏ.) பாரிஸ், ரோலண்ட் கெரொஸ் அரங்கில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோக்கோவை 2 நேர் செட்களில் இலகுவாக வெற்றிகொண்ட போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். இந்த வெற்றியுடன் 21ஆம் நூற்றாண்டில் மகளிர் டென்னிஸ் சங்க தொடரில் வீனஸ் வில்லியம்ஸ் ஈட்டிய தொடர்ச்சியான 35 வெற்றிகளை இகா ஸ்வியாடெக் சமப்படுத்தியுள்ளார். மேலும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் இகா ஸ்வியாடெக் வென்றெடுத்த 2ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸில் …
-
- 0 replies
- 163 views
-
-
இனவெறித்தாக்குதலால் கோமா நிலைக்கு சென்ற பிரபல வீரர்! பிரித்தானியாவில் தாக்குதலுக்கு உள்ளானதால் கோமா நிலைக்கு சென்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தற்போது குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை இரவு பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் மர்ம நபர் ஒருவரால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமலோ (Mendeley Kumalo) திடீர் தாக்குதலுக்கு உள்ளானார். தாக்குதலில் பலத்த காயமடைந்த குமலோ (Mendeley Kumalo) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வீரர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் என்பதால் அவர் …
-
- 0 replies
- 267 views
-
-
ஐ.பி.எல். 2022 ஏலம் ஆரம்பம் ! கோடிகளில் வாங்கப்படும் வீரர்கள் யார் ? 15 ஆவது ஐ.பி.எல். 2022 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்றும், நாளையும் இடம்பெறுகின்றது. அந்தவகையில் குறித்த ஏலம் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 11 மணி முதல் ஆரம்பமாகி நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஏலப்பட்டியலில் மொத்தம் 600 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். வீரர்களின் அடிப்படை விலை ரூபா 2 கோடி, ரூபா 1½ கோடி, ரூபா ஒரு கோடி, 75 இலட்சம், 50 இலட்சம், 40 இலட்சம், 30 இலட்சம், 20 இலட்சம் என…
-
- 155 replies
- 10.8k views
- 2 followers
-
-
முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு சிறைத்தண்டனை (எம்.எம்.எஸ்.) வரி ஏய்ப்பு காரணமாக 20 பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்படி, முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் கடனாக வாங்கிய போரிஸ் பெக்கர் அதை திருப்பிச் செலுத்தாது 2017 ஆம் ஆண்டில் தன்னை திவாலானவராக அறிவித்தார். தற்போது 54 வயதாகும் முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கர், 6 தடவைகள் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவராவார். தற்போது லண்டனில் வசித்து வரும் போரிஸ் பெக்கர் கடந்த 2002 ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியிருந்தார். இதன்போது இவருக்கு விதித்த 2 ஆண்டுகால …
-
- 7 replies
- 1.2k views
-
-
தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் தேர்வு: "கடின உழைப்பு தொடர்கிறது" என ட்வீட் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@DINESHKARTHIK தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்த அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 36 வயதான தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி மற்றும் 32 டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டில் நியூசிலா…
-
- 2 replies
- 334 views
- 1 follower
-
-
நிகத் ஜரீன்: உலக பாக்சிங் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த தெலங்கானா வீராங்கனை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை தெலங்கானா வீராங்கனை நிகத் ஜரீன் வென்றார். சீனியர் பிரிவில் உலக சாம்பியனான அவர், இந்த சாதனையை நிகழ்த்திய முதல் தெலுங்கு பெண் என்ற சாதனையை படைத்தார். துருக்கியில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (IBA) உலக சீனியர் பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். வியாழக்கிழமை நடைபெற்ற 52 கிலோ பிரிவு (பிளை வெயிட்) இறுதிப் போட்டியில் நிகத் 5-0 என்ற கணக்கில் ஜிட்பாங் ஜூடாமஸை (தாய்லாந்து) தோற்கடித்தார்…
-
- 2 replies
- 276 views
- 1 follower
-
-
ரமேஷ்பாபு பிரக்யானந்தா: உலகின் நம்பர் ஒன் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய இவரின் சிறப்பு என்ன? #Praggnanandhaa பிரதீப் குமார் பிபிசி செய்தியாளர் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI எந்தவொரு ஆட்டத்திலும் உலகின் நம்பர் ஒன் வீரருக்கு ஒரு அடி முந்தியிருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும். சில வீரர்கள் தங்களுடைய லட்சியமாக நம்பர் ஒன் வீரரை தோற்கடிப்பதை வாழ்நாள் கனவாகவும் கருதியிருப்பர். ஆனால், யதார்த்தத்தில் எத்தனை வீரர்களும் இந்த விஷயங்களை சாத்தியப்படுத்தியிருப்பார்கள் என்றால் அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இங்கே இந்தியாவில் தமிழ்நாட்ட…
-
- 0 replies
- 320 views
- 1 follower
-
-
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்: ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் உயிரிழப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. சனிக்கிழமை இரவு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தின் டவுன்ஸ்வில்லே பகுதியில் சைமண்ட்ஸ் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. ஐசிசி வெளியிட்ட தகவலின்படி, சைமண்ட்ஸ் காரில் தனியாக பயணித்திருக்கிறார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் , அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து தடயவியல் விபத்து பிரிவ…
-
- 4 replies
- 567 views
- 1 follower
-
-
பரி. யோவான் பொழுதுகள்: 2022 Big Match பரி. யோவானில் படித்துக் கலக்கினவங்களை விட, Big Match இல் வெளுத்து கலக்கினவங்களை தான் Johnians சமூகம் தலையில் வைத்துக் கொண்டாடும். அந்தளவிற்கு இந்த “Big Match is a Big deal at St. John’s” என்று இங்கிலீஷில் சொன்னால் தான் Big Match இன் சிறப்பை, பெருமையை உங்களுக்கு விளங்க வைக்கலாம். 2020 மார்ச் மாதத்தில் யாருமே எதிர்பாராத வகையில், பொடிப் பயலுகளான, Baby Brigade என்று வர்ணிக்கப்பட்ட, பரி யோவானின் அணி, பலம் வாய்ந்த பிஸ்தாக்களான யாழ் மத்திய கல்லூரி அணியை Big Match இல் வென்ற கையோடு, கொரனா பெருந்தொற்று முழு உலகையே பூட்டிப் போட்டது. 2020 Big Match உண்மையிலேயே கோலியாத்தை வென்ற தாவீது கதையின் மீளுருவாக்கம் தான். 2021 Big Match ஐயு…
-
- 0 replies
- 457 views
-