விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7843 topics in this forum
-
யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் புதிதாக மூன்று கழகங்கள் இணைப்பு யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் மூன்று புதிய கழகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சங்கத்தின் விதிகளுக்கு அமைவாக குறிப்பிட்ட மூன்று கழகங்களும் யாழ். மாவட்ட கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பாசையூர் விம்ஸ் விளையாட்டுக் கழகம், கந்தர்மடம் ரெயின்போ விளையாட்டுக்கழகம் மற்றும் சாவகச்சேரி றிபேக் விளையாட்டுக்கழகம் என்பனவே யாழ். மாவட்ட கழகப் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ள புதிய மூன்று கழகங்கள் ஆகும். இந்த மூன்று கழகங்களை புதிதாக சேர்த்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று யாழ். …
-
- 5 replies
- 515 views
-
-
அலுப்பை ஏற்படுத்திய லீக் ஆட்டங்கள்: போட்டி நடத்தும் முறையில் மாற்றம் வருமா? உலகக்கோப்பைப் போட்டி தற்போது பர பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கிரிக் கெட் ஆட்டத்தை மேம்போக்காக அறிந்தவர் களைக்கூட, போட்டி தொடங்குவதற்கு முன் பாகக் கேட்டிருந்தால், காலிறுதிக்குத் தகுதி பெறப்போகும் அணிகள் எவை என்பதை 95 சதவீதம் சரியாகச் சொல்லியிருப்பார்கள். எதிர்பார்த்தபடியே டெஸ்ட் அந்தஸ்து பெறாத 5 அணிகள் வெளியேறிவிட்டன. தகுதிச் சுற்றில் எதிர்பாராத ஒரு திருப்பம் என்னவெனில் இங்கிலாந்து வெளியேறியதுதான். இந்த ஒரு மாற்றத்தைத் தவிர்த்துப் பார்த்தால், காலிறுதிக்குத் தகுதி பெற்ற மற்ற அணிகளின் பட்டியல் கணிக்கப்பட்டதுதான். இதனால், உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்கியவுடன் காட்டிய ஆர்வத்தை, லீக் சுற்றி…
-
- 0 replies
- 706 views
-
-
வெற்றியிலும் சில பாடங்கள் வெற்றியைவிடவும் தோல்வியைச் சிறந்த ஆசான் என்பார்கள். காரணம், வெற்றி தரும் பரவசம் குறைகள் தெரியாத அளவுக்குக் கண்ணைமறைத்துவிடும். தோல்வி நமது குறைகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துக் காட்டிவிடும்.வெற்றி மீது வெற்றி பெறும் நேரத்திலும் கவனமாகச் சுயபரிசோதனை செய்துகொண்டு குறைகளைக் கண்டறிவது மேலும் வெற்றிகளைக் குவிக்க உதவும். தவிர, வெற்றி என்பது மட்டும் சிறப்புக்கான சான்றிதழாகிவிடாது என்பதால் இந்த வெற்றியை விமர்சனபூர்வமாக அணுக வேண்டியுள்ளது. பெரும் பதற்றத்துடன் தொடங்கிய இந்தியாவின் உலகக் கோப்பைப் பயணம் தொடர் வெற்றிகளால் இன்று தெம்புடன் இருக்கிறது. இதுவரை எந்த உலகக் கோப்பையிலும் முதல் சுற்றில் இந்தியா இவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. ஆஸ்திரேலியா, நி…
-
- 1 reply
- 572 views
-
-
Swiss Jura தேசிய மாநில Ice Hockey கழகத்தில் mini top பிரிவில் பந்து காப்பாளராக 13 வயதான அஸ்வின் சிவசுப்பிரமணியம் விளையாடி வருகிறார். இவர் 9-17. Feb. Canada Bantiam Granby யில் நடைபெற்ற சர்வதேச Ice Hockey U 14 பிரிவு போட்டியில் Team Swiss அணி பந்து காப்பாளராக விளையாடியுள்ளார். இதில் Swiss team champions கிண்ணத்தையும் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் அஸ்வின் இரண்டாவது சிறந்த பந்து காப்பாளர் பட்டத்தையும் பெற்று அனைவரினது பாராட்டையும் பெற்றுள்ளார். அஸ்வின் team Swiss அணிக்காக விளையாடுவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு அஸ்வின் Swiss இல் முன்னணி கழகங்களின் ஒன்றான EHC Bienne (LNA) mini top வழி பிரிவில் பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார். …
-
- 6 replies
- 591 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து உலகக் கிண்ண போட்டித்தொடரின் இறுதி 8 அணிகளுக்குள் இலங்கை அணி தெரிவுசெய்யப்பட்டமையையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்கைப் மூலம் இலங்கை அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் உட்பட இலங்கை அணியினர் மற்றும் பயிற்சியாளர்களுடன் நேற்றைய தினம் ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்ட ஜனாதிபதி, 2015 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு தனது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இதேவேளை, உலகக் கிண்ண போட்டித் தொடரில் பல உலக சாதனைகள் படைத்து இலங்கைக்கு பெருமை தேடித்தந்த நட்சத்திரவீரர் குமார் சங்கக்காரவுக்கு ஜனாதிபதி தனது நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://ww…
-
- 0 replies
- 372 views
-
-
ஜேர்மனி பயிற்றுவிப்பாளரின் பதவிக்காலம் 2018வரை நீடிப்பு உலக சம்பியன் ஜேர்மனி கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் ஜோக்கிம் லூயி, 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண தொடர் வரை பயிற்றுவிப்பாளராக நீடிக்கப்பட்டுள்ளார். 55 வயதான இவர், 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ணம் வரையே பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனாலும் அவரின் பயிற்றுவிப்பின் கீழ் மகுடம் சூடியுள்ளோம். மீண்டும் ஒரு தடவை அதை ருசி பார்க்க வேண்டும். எனவே, நல்ல முறையில் அணியை வழி நடத்தி செல்லும் லூயி மூலம் அதை நடத்த முடியும் என நம்புவதாக ஜேர்மனி கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 2004ஆம் ஆண்டு ஜேர்மனி அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக இணைந்த ஜோக்கிம் லூயி, 2006ஆம் ஜேர்மனி உல…
-
- 3 replies
- 506 views
-
-
சிறந்த ஒருநாள் வீரராக சேர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த வீரராக வாக்களிப்பின் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் வீரர் சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிரிக்இன்போ இணையத்தளத்தின் “த கிரிக்கெட் மந்லி” மாத வெளியீடு நடாத்திய வாக்களிப்பிலேயே இந்த முடிவு கிடைத்துள்ளது. 50 முன்னாள் வீரர்களும், ஊடகவியாளர்களும் அடங்கிய குழுவே இந்த வாக்களிப்பை செய்துள்ளது. 2,200 வீரர்கள் இந்த வாக்களிப்புக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த வாக்களிப்பில் முதற் தெரிவை செய்தால் அந்த வீரருக்கு 5 புள்ளிகளும், இரண்டாம் தெரிவை செய்தால் 3 புள்ளிகளும், மூன்றாம் தெரிவை செய்தால் 1 புள்ளியும் என்ற அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 530 views
-
-
சாதனைகளின் புதிய பெயர் சங்கா நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம், 'சங்கா கிண்ணம்' என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம். கிறிஸ் கெயில் பெற்ற இரட்டைச்சதம், டீ வில்லியர்சின் அபார சதம் என்று ஆரம்பத்தில் கலக்கியவர்களைத் தொடர்ந்து, கடந்த வாரம் சங்கக்காரவின் கலக்கல் என்று முன்னைய கட்டுரையில் எழுதியிருந்தேன். இந்தவாரம் இன்னொரு புதியவரா என்று கேட்ட வினாவுக்கு சங்கக்காரவின் பதிலாக தொடர்ந்து அவர் குவித்துவரும் சதங்களும் சாதனைகளும் அமைந்திருக்கின்றன. 4ஆவது தொடர்ச்சியான சதத்தை நேற்று ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக பெற்ற குமார் சங்கக்கார, உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டுமன்றி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலேயே யாரும் நிகழ்த்தாத ஒரு …
-
- 3 replies
- 758 views
-
-
சென்றல்- சென்.ஜோன்ஸ் ஒருநாள் ஆட்டம் நாளை யாழ்.பரியோவான் கல்லூரிக்கும், யாழ்.மத்திய கல்லூரிக்கும் இடையிலான 13ஆவது தடவையாக இடம்பெறும் 50 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டி நாளை காலை 9 மணிக்கு யாழ்.பரியோவான் கல்லூரி மைத்தானத்தில் இடம்பெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் யாழ்.பரியோவான் கல்லூரி அணி 6 தடவைகளும், மத்திய கல்லாரி 5 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. இம்முறை இடம்பெற்ற 109ஆவது வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டத்தில் யாழ்.பரியோவான் கல்லூரி அணி வெற்றி பெற்றது. எனவே நாளை இடம்பெறவுள்ள போட்டியில் மீண்டும் யாழ்.பரியோவான் கல்லூரி வெற்றியை தனதாக்குமா? அல்லது மத்திய கல்லூரி வெற்றி பெறுமா? என்பது நாளை தெரியும். http://yarlsports.com/?p=…
-
- 3 replies
- 516 views
-
-
கீப்பர் முதல் மேய்ப்பர் வரை... மகேந்திர சிங் டோணி என்னும் ஒரு சாதனை நாயகன் ! டெல்லி: எந்த ஒரு கிரிக்கெட் வீரரின் பெயரை கேட்டதும், உலகின் பிற அணி வீரர்களுக்கு, வயிற்றில் கலக்கமும், கைகளில் நடுக்கமும், கண்களில் பதற்றமும் தோன்றுமோ அந்த கிரிக்கெட் வீரர் பெயர்தான் மகேந்திர சிங் டோணி. இவரது ஹெலிகாப்டர் ஷாட்டை பார்த்தோ, நெருக்கடியான நேரத்தில் அவர் அடித்தும், படுத்தும், அணியை வெற்றிபெற வைப்பதை பார்த்தோ கூட எதிரணிகள், நடுங்கியது கிடையாது. ஆனால், வாழ்நாள் லட்சியமே, இந்த வேலைதான் என்பதைப் போல அவர் செய்யும் கேப்டன்ஷிப்புக்காகத்தான் இத்தனை பயமும். பெரிய அணியோ, சிறிய அணியோ, அனைத்து அணிகளையும் ஒரே தராசில் வைத்து, வியூகங்களை வகுத்து அவர் செயல்படுத்தும் திறமை கண்டு வாய் பிளந்து நி…
-
- 0 replies
- 656 views
-
-
தோனி முறியடித்த கபில் சாதனை: எண்கள் கூறும் சிறப்புகள் ஹாமில்டன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தைத் தோற்கடித்தது இந்தியா. இதன்மூலம் 5-வது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா 10 புள்ளிகளுடன் பி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. இதுமட்டுமின்றி உலகக் கோப்பை யில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியா இதுபோன்று வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக கங்குலி தலைமையிலான அணி 2003 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமை இன்றளவும் ஆஸ்திரேலியா வசமேயுள்ளது. அந்த அணி…
-
- 0 replies
- 501 views
-
-
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, தொடர்ந்து 4 சதங்கள் அடித்து சங்ககாரா உலக சாதனை! ஹோபர்ட்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக, தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சதம் அடித்து, புது உலக சாதனை படைத்துள்ளார், இலங்கையின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா. உலக கோப்பையில், இன்று இலங்கையும், ஸ்காட்லாந்தும் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை, அபார ரன் குவிப்பில் ஈடுபட்டது. இலங்கையின் குமார் சங்ககாரா இந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார். நாலாவது சதம் உலக கோப்பை தொடரில் அவர், பதிவு செய்யும் தொடர்ச்சியான 4வது சதம் இதுவாகும். முன்னதாக, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக, சங்ககாரா சதம் அடித்திருந்தார். முதல் வீரர் இன்…
-
- 8 replies
- 1.6k views
-
-
யுஎஸ்.- சனிக்கிழமை ஒகையோவில் இடம்பெற்ற ஆர்னொல்ட் விளையாட்டு விழாவில் மனிதனுக்கும் சிறுவர்க்குமான சதுரங்க ஆட்டத்தில் இந்த நிகழ்வு நடந்தது. தலையில் ஒரு ஊதா பூவை அணிந்து கொண்டு எம்மா செங் முன்னாள் body builder-ம் கலிபோர்னியா ஆளுநருக்கும் எதிராக போட்டியில் கலந்து கொண்டாள். ஆர்னொல்ட்டும் ஒரு சதுரங்க ஆர்வலர். செங் யுஎஸ்சில் ஒன்பது வயதிற்குட்பட்ட சதுரங்க விளையாட்டாளர்களில் நான்காவதாக கணிக்கப்பட்டவள். ஆத்துடன் ஒகையோவிலுள்ள சகல மாணவர் களிடையேயும் மூன்றாவது தரத்திலும் உள்ளவள் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இருவருக்கும் இடையில் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நிகழ்வு ஸ்வார்ஸ்னேக்கர் விளையாட்டை கைவிட்டு விட்டு வேறொரு பிள்ளையுடன் இரண்டாவது விளையாட்டை விளையாட சென்றதால் குறுகிய தாக்க…
-
- 0 replies
- 438 views
-
-
ஓய்வு தினத்தை அறிவித்த சங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார, தான் இந்த வருடம் ஓகஸ்ட் மாத இறுதிப்பகுதியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றிற்கு இந்த தகவலை அவர் கூறியுள்ளார். நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள குமார் சங்ககார - ஜூலை, ஓகஸ்ட் காலப்பகுதியில் நடைபெறவுள்ள இரண்டு அல்லது ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடிய பின்னர் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரே குமார் சங்ககாரவின் இறுதி டெஸ்ட் தொடராக அமையவுள்ளது. உலகக் கிண்ண தொடரில் இன்று அடித்த சத்தத்துடன் மூன்று சதங்களை தொ…
-
- 2 replies
- 1.9k views
-
-
இன்று சிட்னியில் அவுஸ்த்திரேலியாவுக்கும் இலங்கைக்குமான குழு நிலைப் போட்டி நடைபெற்றது. கடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றிகளை ஈட்டிக் கொண்டு இந்தப் போட்டிக்கு வந்திருந்த இலங்கை அணியிடம் நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்திருக்கும். அதேபோல ஆப்கானிஸ்த்தானுடனான போட்டியில் 417 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்திருந்த அவுஸ் அணியும் அதீத நம்பிக்கையுடன் களமிறங்கியது. ஆட்டம் நடைபெறும் மைதானம் சிட்னி என்பதனால் இலங்கையணிக்ககான ஆதரவுக்குக் குறறைச்சல் இருக்கவில்லை. சுமார் 36,000 ரசிகர்கள் அரங்கில் கூடியிருக்க ஆட்டம் ஆரம்பமாகியது. இந்த ரசிகர்களில் குறைந்தது 50% ஆனவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றால் அது மிகையாகாது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. …
-
- 34 replies
- 2.5k views
-
-
இம்முறை உலகக் கிண்ணத்தைத் தூக்குவார்கள் என்று பலராலும் கருதப்பட்ட அணி. உலகின் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளரைக் கொண்ட அணி. தலை சிறந்த துடுப்பாட்டக் காரர்களையும், களத் தடுப்பாளர்களையும் கொண்ட அணி. இப்படிப் பலவிதமான பலரையும் கொண்ட அணி. பலமுறை கிண்ணத்தைத் தூக்குவார்கள் என்று எதிர்வுகூறப்பட்டு எல்லாமுறைகளிலும் மிகவும் கேலித்தனமான முறைகளில் கிண்ணத்தைக் கோட்டைவிட்ட அணி. அதிலும் குறிப்பிடத்தக்க விடயம், வெல்லக் கூடிய வாய்ப்பிருந்தும்கூட, அணித்தலைவரின் பிழையான கணக்கினால் (டக் வேர்த் லுயிஸைத்தான் சொல்கிறேன்) அடுத்த கட்டத்திற்குப் போகக் கிடைத்த சந்தர்ப்பத்தை வேண்டாம் என்று தூக்கியெறிந்த அணி. இன்னொருமுறை இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் எடுத்தால் போதுமென்றிருக்க, லான்ஸ் குளூஸ்னர் இறுத…
-
- 7 replies
- 869 views
-
-
சங்காவின் மறுமுகம் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதுடன் சிறந்த வயலின் கலைஞர் என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்தியிருந்தார். குமார் சங்கக்கார வயலின் வாசிக்கும் தனது திறமையை அண்மையில் இந்திய தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://youtu.be/jKp4frmbYhs http://www.virakesari.lk/articles/2015/03/06/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
-
- 13 replies
- 1.3k views
-
-
கனடா- ரொறொன்ரோவில் இடம்பெற இருக்கும் Pan Am மற்றும் Parapan American விளையாட்டுகளிற்கான பதக்கங்கள் இன்று வெளிப்படுத்தப்பட்டன. எதிர்வரும் கோடைகாலத்தில் நடக்கும் இந்த விளையாட்டுகளில் 4,000ற்கும் மேற்பட்ட பதக்கங்கள் கையளிக்கப்படும். விளையாட்டு வீரர்கள் தாங்கள் என்னத்திற்காக போட்டியிடுகின்றார்கள் என்ற சிறந்த சிந்தனையை பெறக்கூடியதாக இருக்கும். அதிகார பூர்வமான மெட்டல் விநியோகஸ்தர்கள் பறிக் கோல்ட் நிறுவனத்தினர் ஆவர். கனடிய அரச கூட்டுத்தாபனமான றோயல் கனடியன் மின்ட் பதக்கங்களை வடிமைக்கும். Pan Am விளையாட்டுக்கள் எதிர்வரும் யூலை மாதம் 10-26 வரை நடைபெறும். Parapan American ஆகஸ்ட் மாதம் 7-14 வரை இடம்பெற உள்ளது. 41-நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 6,600 விளையாட்டு வீரர்கள் போட்டிகளி…
-
- 0 replies
- 407 views
-
-
இவரைப் போய் அடுத்த டெண்டுல்கர்னு சொல்லிட்டாரே ரமீஸ் ராஜா! பெங்களூரு: ரசிகர்களைப் பொறுத்தவரை, நீங்கதான் அடுத்த சச்சின் டெண்டுல்கர்... இது பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா விராத் கோஹ்லியைப் பார்த்துக் கூறிய வார்த்தை... நடப்பு உலகக் கோப்பைப் போட்டி ஒன்றின் இறுதியில், கோஹ்லியிடம் இப்படிக் கூறியிருந்தார் ரமீஸ். ஆனால் இவரைப் போய் அடுத்த சச்சின் என்று சொல்லி விட்டாரே என்று முகம் சுளிப்பது போலத்தான் நடந்து வருகிறார் கோஹ்லி. எதுக்கெடுத்தாலும் கோபம், முரட்டுத்தனம், சண்டையில் இறங்குவது என்று கோஹ்லியைப் பற்றி புகார் வராத நாளே இல்லை என்பது போல அடாவடியாக நடந்து வருவது கோஹ்லியின் குணாதிசயமாக மாறியுள்ளது. உண்மையில் கோஹ்லி இன்னும் பக்குவப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வரு…
-
- 5 replies
- 831 views
-
-
உலகக் கோப்பை முதல் கட்டம்: ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், சாதனைகள்! ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தைவிடவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த வாக்கியத்தை யாராவது சொல்லியிருந்தால், அவரது மனநலன்குறித்துச் சந்தேகம் வந்திருக்கும். ஆனால், இன்று அதுதான் யதார்த்தம். 11-வது உலகக் கோப்பைப் போட்டிகளின் முதல் கட்டப் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது பிரிவில் நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானுக்கும் கீழே ஆறாவது இடத்தில் இருக்கிறது. ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் இத்தோடு முடிந்து விடவில்லை. ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து ஆடுகளங்களில் இந்தியா எக்கச்சக்கமாக அடிவாங்கித் த…
-
- 0 replies
- 454 views
-
-
லண்டன்: 15 வயது சிறுமியுடன் உறவு கொண்டதாக வந்த புகாரின் பேரில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான ஆடம் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீரருக்கு வயது 27 ஆகும். இங்கிலாந்து அணிக்காக 12 போட்டிகளில் ஆடியுள்ளார் ஜான்சன். இதுகுறித்து துர்ஹாம் போலீஸார் கூறுகையில், 16 வயதுக்குட்பட்டவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். தற்போது ஆடம் ஜான்சன் மீது 15 வயது சிறுமியுடன் உறவு கொண்டதாக புகாரும், சந்தேகமும் வந்துள்ளது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுளளார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றனர். இந்த நிலையில் விசாரணை முடியும் வரை ஆடம் ஜான்சன் கால்பந்துப் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சுன…
-
- 0 replies
- 291 views
-
-
டிவில்லியர்ஸின் சொந்த ஊரு எந்த "கிரகம்"னே தெரியலையே... ! சென்னை: நிச்சயம் ஆப்ரகாம் டிவில்லியர்ஸின் சொந்த ஊர் இந்த பூமி கிடையாது. வேறு ஏதோ கிரகத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் இந்த மனிதர் என்று செல்லமாக அலுத்துக் கொள்கிறார்கள் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸின் சாதனை முகத்தைப் புகழ்ந்து பேசுகிறவர்கள். காரணம் டிவில்லியர்ஸின் பன்முக திறமைகள்தான். கிரிக்கெட்டில் மட்டுமே அவர் சாதனையாளராக இருக்கவில்லை... தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக என்று அடிக்கடி ஜெயா டிவியில் வரும் பாட்டு போல, இவர் தொட்ட இடமெல்லாம் தூள் கிளப்பியுள்ளார். இவரது திறமைகள், சாதனைகள், வெற்றிகளைப் பார்க்கும் யாருக்குமே மனுஷனாய்யா நீ என்று ஆச்சரியம்தான் வரும். அப்படித்தான் இருக்கிறது ட…
-
- 3 replies
- 754 views
-
-
136ஆவது ரோயல் - தோமியன் 'பிக் மெட்ச்' போட்டி ஆரம்பம் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கி ஸ்சை புனித தோமையார் கல்லூரிக்கும் இடையிலான நீலங்களின் சமர் என அழைக்கப்படும் 136 ஆவது கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் நடைபெறவுள்ளது. நீண்டகால வரலாற்றைக் கொண்ட 'ரோயல் – தோமியன்' கிரிக்கெட் போட்டி 1879ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் உலக கிரிக் கெட் வரலாற்றில் நீண்டகாலமாக இடை விடாது நடத்தப்பட்டுவரும் பாரம்பரியமிக்க கிரிக்கெட் போட்டியாகும். இவ்விரு கல்லூரிகளினதும் உத்தியோகபூர்வ வர்ணம் நீல நிறமாகக் காணப்படுவ தால் நீலங்களுக்கிடையிலான சமர் என அழைக்கப்படுகின்ற…
-
- 0 replies
- 368 views
-
-
தோனியிடம் சிக்கித் திணறிய மூத்த புகைப்பட பத்திரிகையாளர் பெர்த்தில் நேற்று தோனியிடம் பேச்சு கொடுத்த மூத்த புகைப்படப் பத்திரிகையாளர் ஒருவர் சரியாக அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். பேடு கட்டிக் கொண்டு வலை வேலி அருகே இந்திய கேப்டன் தோனி நின்று கொண்டிருந்த போது மூத்த புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர், தோனியிடம் பேச்சுக் கொடுத்த போது, “மாஹி (தோனி) நீங்கள் 2004-05-ல் இருந்தது போல் இல்லை. அப்போதெல்லாம் அட்டகாசமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பீர்கள்.” என்றார். அதற்கு தோனி, “பொய் சொல்லாதீர்கள். 2004ஆம் ஆண்டு உங்களுக்கு என்னை தெரியவே தெரியாது, நீங்கள் என்னவென்றால் புகைப்படத்துக்கு நான் போஸ் கொடுப்பது பற்றி கூறுகிறீர்கள்.” என்றார். உடனே அந்த புகைப்பட பத்திரிகையாளர் தன…
-
- 0 replies
- 518 views
-
-
அசோசியேட் அணிகளுக்கு தோனி முழு ஆதரவு நடப்பு உலகக்கோப்பையில் அசோசியேட் அணிகளின் ஆட்டம் குறித்து தோனி புகழ்ந்து பேசியதோடு அந்த அணிகளை மேம்படுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கிரிக்கெட் ஆட்டம் உலகளாவிய தன்மையை எட்ட வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வணிக நோக்கத்தை விடவும் முக்கியமானது கிரிக்கெட் ஆட்டம் எங்கு வளர்கிறது என்பதை அறுதியிடுவது. அங்கெல்லாம் கிரிக்கெட் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த நாடுகளில் கிரிக்கெட் ஆடுவதற்கான வாய்ப்புகள் கூடிவருகிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். எங்கேனும் சிறு தீப்பொறி இருந்தால் கூட அதனை பெருந்தீயாக மாற்ற வேண்டும், அதாவது அதன் தீவிரத்தை. ஆப்கானிஸ்தான் அல்லது வேறு சில அணிகளை …
-
- 0 replies
- 542 views
-